Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்


Recommended Posts

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒருசேர போற்றி வணங்கும் மாவீரர் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.

Maveerarnall1600.jpg

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

உங்கள் கல்லறைத்தொட்டில்களே

காலியாகி விட்டன.

ஒத்தி எடுத்தாயிற்று

“ஈழத்துத் திருப்பதிகள்” இருந்ததாய்

ஒற்றைத்தடயமும் இங்கு இல்லை

விளக்கேற்றும் மேடையையுமா?

விழுங்கியது பூதம்

நிலத்தைப்பிளந்து நீறாக்கி

குளத்திலா கொட்டினார்கள்

திருவிடங்களையே

திருடிப் போயிற்றா காற்று

திசைகூடத் தென்படாத வாறு

திரை போட்டுவிட்டதா மேகம்

அனுங்காமல்…சினுங்காமல்

எங்குள்ளீர்கள்

எம் செல்வங்களே

நிரையாக இருப்பீர்களே

நிலாப்போல சிரிப்பீர்களே

என்ன ஆனீர்கள்?

நேற்றிருந்து உம் நினைவுகளை

நெஞ்சுக்குள் பொத்தினோம்

காற்றில் எழும் உம் குரல்களைக்

காதுக்குள் தேக்கினோம்

நினைவின் ஆறுதலுக்காய் இருந்த

நீர் அணிந்த ஒற்றைச் செருப்பும்

இப்போ எம்மிடம் இல்லை

கை தவறி விட்டது கடைசி வழியில்

நினைவுப் படங்களையும்

நிலம் கீறி விதைத்து விட்டோம்.

என் செய்வோம் இனி

பெற்ற பிள்ளைகளுக்குப்

பிதிர்க்கடன் செய்யக்கூட

பலனற்ற பாவியராகினோம்

ஒற்றைத்திரி ஏற்றி

ஒரு நிமிடம் அஞ்சலிக்ககூட

காற்றையும் நம்பமுடியாத காலம்

பேர் சொல்லி அழவும் திராணிஅற்று

பெருமூச்செறிகின்றோம்

யார்க்குத்தெரியும் எம் அவஸ்த்தை

கவிஞர் சீராளனின் வரியில் இருந்து

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீவணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மாவீரர் பற்றிய நினைவுக் குறிப்புகளை, மகத்தான தியாகங்களை எம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரிகின்றமாதிரி, ஏன் இவர்கள் போராட போனார்கள், எவ்வாறான சூழ்நிலையில் எம் ஊரும் அங்குள்ளவர்களும் இன்றும் அன்றும் இருந்தனர்/இருக்கின்றனர், எவ்வாறான தியாகங்களை இவர்கள் புரிந்தார்கள் போன்றனவற்றை அறியக் கொடுக்க வேண்டும். மாவீரர் தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்டிப்பாக பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகுதல் வேண்டும். மாவீரர் பாடல்களை அவர்களுக்கும் கேட்கும் விதமாக போடவேண்டும்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மாவீரர் பற்றிய நினைவுக் குறிப்புகளை, மகத்தான தியாகங்களை எம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரிகின்றமாதிரி, ஏன் இவர்கள் போராட போனார்கள், எவ்வாறான சூழ்நிலையில் எம் ஊரும் அங்குள்ளவர்களும் இன்றும் அன்றும் இருந்தனர்/இருக்கின்றனர், எவ்வாறான தியாகங்களை இவர்கள் புரிந்தார்கள் போன்றனவற்றை அறியக் கொடுக்க வேண்டும். மாவீரர் தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்டிப்பாக பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகுதல் வேண்டும். மாவீரர் பாடல்களை அவர்களுக்கும் கேட்கும் விதமாக போடவேண்டும்

LTTE-heroes-day-09.jpg

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Edited by தமிழ் அரசு
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மனி முன்சன் கிளட்ப்பார்க் நகரில் மரம் நடும் நிகழ்வு 23.11.2011 அன்று Hubertus Str 100, 41239 Mönchengladbach (எலிசபெத் வைத்தியசாலைக்கு முன்பாக) நடைபெறுகின்றது.

முன்சன் கிளட்பாக் நகரைச் சுற்றி வாழ்கின்ற மக்களை தவறாது கலந்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தேசிய மாவீர் நாள் ஏற்ப்பாட்டுக் குழுவினர் வேண்டி நிற்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

பல நுாற்றாண்டு வீர வரலாற்றை புரட்டிப் போட்ட எம் கல்லறைத் தெய்வங்களே உம்மை இத் கார்திகை நாட்களில் நெஞ்சினில் சுமந்து புதுயுகம் படைக்க இறுதி மூச்சுவரை போராடுவோம்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

மாவீரர் நினைவுகளை அந்தந்த நேரங்களில் அறியத் தந்து வீர வணக்கங்கள் செய்ய ஒத்தாசையாக இருக்கும் உறவுகளுக்கு நன்றி.தொடர்நதும் உங்கள் சேவைகளை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

candle_animated-gif.gif

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடல்,பொருள்,ஆவியனைத்தையும் எமக்காகவும்,நாட்டுக்காகவும் துறந்த அனைத்து மாவீரர்களுக்கும்,யுத்தத்தில் இறந்த அனைத்து பொது மக்களுக்கும் வீர வணக்கம்.

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
  • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
  • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
  • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.