• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா

Recommended Posts

இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா

மதுரை, நவ. 22-

கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் பெருமாள்சாமியின் உயிரணுக்களை எடுத்து, ரத்தினத்துக்கு கருவூட்டப்பட்டது. ஏப்ரல் 5ம் தேதி ரத்தப் பரிசோதனையும், 21ம் தேதி ஸ்கேன் பரிசோதனையும் செய்ததில் கருவுற்றது உறுதிப்படுத்தப்பட்டது. வயது மற்றும் ரத்தக்கொதிப்பு காரணமாக ரத்தினத்துக்கு சிறப்பு மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 16ம் தேதி ரத்தினம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் செந்தாமரைச் செல்வி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றார். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களது உடலில் உயிரணு உற்பத்தி இருக்கும். எனவே, குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

நன்றி தமிழ் கூடல்.......

Share this post


Link to post
Share on other sites

ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான் :lol:

Share this post


Link to post
Share on other sites

ம்!

எண்பத்தோரு வயதில் ஒரு குழந்தை!

இந்தக் குழந்தை, தகப்பனை அப்பா என்று கூப்பிடுமா அல்லது அப்பு என்று கூப்பிடுமா? :wub:

Share this post


Link to post
Share on other sites

ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான் :lol:

கலோ கறுப்பு! அங்கை ஏற்கனவே பரிசோதனைக்குழாயாலைதான் கருக்கட்டினது எண்டு போட்டுருக்கல்லே???

Share this post


Link to post
Share on other sites

சில ஆக்கள்.. உடம்புக்குள்ள உள்ள குழாயில கருக்கட்டினா அதை திறமை என்று ஏற்றுக் கொள்ளுவினம்.. அதை றோட்டில போற வாற எல்லா ஜந்துகளும் செய்யும்.. பரிசோதனைக் குழாயில சுத்தமா வைச்சு கருக்கட்ட வைச்சா அதைக் குறை என்று சொல்லுவினம். இவைக்கு முன்னால அறிவியல் தான் வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவை மாட்டினம்..! :lol::D:icon_idea:

Share this post


Link to post
Share on other sites

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

Share this post


Link to post
Share on other sites

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இல்லாமல் பிறந்தவருக்கு இப்போ வயது பதினேழு.

எல்லா நாட்டிலும் தடை போட்டு வைத்துள்ளார்கள்.

அந்ததடை ஏன்? என்னத்துக்கு? எண்டு உங்களுக்கு விளங்கும்!

Share this post


Link to post
Share on other sites

குழாயிலை வைச்சு கலக்கி எடுத்தாலும்....கருக்கட்ட பொண்டுகள்தான் வேணும் எண்டு நினைக்கிறன். :D

பொண்டுகள் தேவையில்ல கருமுட்டை மட்டும் தான் தேவை. இப்போ.. கோழி முட்டை வாங்கனுன்னா.. கோழியையே வாங்கனுன்னு சொல்ல முடியுமோ..???! அது போலத்தான்.!

இப்ப எல்லாம் பெண்கள் கருப்பையைக் கூட வாடகைக்கு விடுறாங்க. அவங்க எங்கையோ போய்க்கிட்டு இருக்காங்க.. நீங்க சில பேர்.. இன்னும்.. திருந்திறதா இல்ல..!

அதெல்லாம் ஒரு காலம்.. தாய்மையைக் காட்டி பெண்கள் செய்யுற அநியாயங்களை எல்லாம்.. மறைக்கிறது. இப்ப அதெல்லாம் சரிவராது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..! :):lol:

Share this post


Link to post
Share on other sites

இப்போது நமது வெளிநாட்டு தமிழ் சுந்தரிகளும் பாவிக்கிறார்கள். முப்பது வயது மட்டும் குழந்தை பெறாமல் ஸ்டைலா இருந்துவிட்டு பின் ஐயோ ஆத்தேரோ கருத்தரிக்கவில்லை என்று ஒவ்வொரு முயற்சிக்கும் பத்தாயிரம் பவுண்ட்ஸ் விடுகிறார்கள்.

கண்டபாட்டுக்கு கருத்தடை மாத்திரைகள் பாவிப்பதுவும் ஒரு காரணி.

Share this post


Link to post
Share on other sites

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆண்சிங்கங்களும் இப்ப வாடகைக்கு போக வெளிக்கிட்டினமாமெல்லே....காசுக்கு காசுமாச்சுது....இயற்கையின் சீற்றத்தை அமைதிக்கு கொண்டுவந்ததுமாச்சு :lol:

பொண்டுகளுக்கு இரட்டை பிசினஸ்.. கருப்பை வாடகை ஒரு பக்கம்.. முட்டை விக்கிற விலைக்கு.. அதால இன்னொரு வருமானம். அதோட ஒப்பிடேக்க ஆண் சிங்கங்கள்.. பாவங்கள்..! :):icon_idea:

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல  மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்துவம் சிறப்பு மிக்கது. ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய் மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். தமிழீழ அரசானது தமிழ் மொழியில் அழகியதொரு தேசத்தைப் படைத்தது. அரச கட்டமைப்புக்கள் மற்றும் போரியல் கட்டமைப்புக்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் துவக்கம், நடைமுறையில் தூய தமிழ் மொழியிலான வாழ்வொன்றை சாத்தியப்படுத்தினர். மாந்தர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல், பொருட்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டுதல் என விடுதலைப் புலிகளின் மொழித்துறை நிர்வாக கட்டமைப்புக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்றளவும் உலகால் வியப்புடன் நோக்கப்படுகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களும் ஒட்டுமொத்த நிலமும் தமிழ் அமைந்திருந்தது. ஈழத் தமிழினம் மொழி மறுப்பாலும் மொழியழிப்பாலுமே ஆயுதம் ஏந்தியது. உலகின் செழுமையான மொழி தமிழ். அந்த செழுமையுடன் இன்றளவும் வாழ்வையும் பேசும் மொழியையும் கொண்டவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அதனை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றளவும் குறியாக இருக்கிறது சிங்கள அரசு. மொழியையும் இனத்தையும் அழிக்க வரலாறு முழுதும் இனப்படுகொலைகளை செய்த பின்னரும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை செய்த பின்னரும் சிங்கள அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. பொலிஸ் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோளை சொல்கிறார்கள். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே தாய் மொழி, மற்றும் தமிழ் மொழி குறித்தான பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளில் ஏற்படுத்தும் விழிப்புணர்வு எல்லா நாட்களிலும் பயனாக விளைய வேண்டும்.  உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. மொழி அழிந்தால், இனம் அழியும் என்பதையும் அவ்வாறு அழிந்த இனங்களையும் மொழிகளையும் நாம் நினைவில்  கொள்ள வேண்டும். -தீபச்செல்வன். எழுத்தாளர் கவிஞர் மற்றும் ஊடகவியலாளர். http://www.vanakkamlondon.com/theepachelvan-21-02-2020/
  • எங்கட ஊரில இந்தியாக்காரன் விட்டால் தான் வெள்ளைக்காரன் மூச்சே விடலாம். இங்க அப்பக்கடையிலும் இட்டிலிக்கடையிலும் வரிசையில் நிற்கும் தமிழனிடம் கேட்காமல் வெள்ளைக்காரன் எதுவும் செய்வதில்லை. எங்கட ஊர் எங்கை தமிழ்நாட்டிலேயோ எண்டு கேட்டு ஏமாறக்கூடாது. எங்கட ஊர்  உள்ள இடம் கலிபோர்னியா. இங்கே சுந்தர் பிச்சையை தெரியாத நாய் கூட இல்லை. தெருவுக்கு பெயர் வைக்கும் வீண் வேலையில் தமிழனோ இந்தியாக்காரரோ சீனரோ மினக்கடுவதில்லை. இங்கே தெரு கூட்டுபவர் வெள்ளைக்காரர். தெருவிலே விலை கூடின காரில் போறவர் இந்தியாக்காரர்.
  • எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 
  • As Just Security’s Ryan Goodman previously noted: “[N]ot only was [Rajapaska] the self-proclaimed mastermind of the military’s actions and thus criminally liable under well-settled international rules of command responsibility; there is also prima facie evidence in the public record that he ordered the execution of political leaders and their families upon their surrender, that he directed the systematic bombing of civilian hospitals, and that he repeatedly suggested that he could target and deliberately kill innocent civilians in order to win the war against the LTTE. That’s just the public record.”
  • கூடடமைப்பாடாக கருணா போட்டியிட கோரிக்கை।  கருணை அம்மன்தான் கோரிக்கை வைத்திருக்கிறார்।  அவர்கள் எப்படியம் போகட்டும்। ஏன் என்றால் இணையப்போராளிகள் அவர்களை தோற்கடித்துவிடப்படியால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது।  ஆனால் தற்போதைய செய்தியின்படி விக்கி ஐயா பிள்ளையானுக்கு தூது அனுப்பி இருக்கிறாராம் தங்களுடன் சேர்ந்து கேட்க்கும்படி। இது எப்படி இருக்குது? தான் சிறைக்கு சென்று பிள்ளையானை சந்திப்பதட்கும் தயாராக இருக்கிறாராம்। இது எங்க போய்  முடியப்போகுதோ?