Jump to content

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது


Recommended Posts

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற “போஸ்ட் மேன்” குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர்.

இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேஷ காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது316527_204392762959980_204392572959999_502660_1627623085_n.jpg

316582_225340907531832_204392572959999_569684_925288455_n.jpg

309012_226648344067755_204392572959999_573003_1100148466_n.jpg

294260_205037306228859_204392572959999_504897_868141412_n.jpg

297299_205037186228871_204392572959999_504894_629406587_n.jpg

387265_229583183774271_204392572959999_580437_1573786174_n.jpg

பாலை’ திரைப்படம் பார்த்தேன்.இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையை பேசுகிறது இப்படம். ஓப்பனிங்க் சீனிலே எந்த அலட்டலும் இல்லாமல் பெருமூச்சோடு தொடங்கும் குரல் ஒன்று கதை சொல்ல ஆரம்பிக்கிறது.. அது அப்படியே காயாம்பூ என்ற கதாப்பாத்திரத்தின் வழியாக காட்சியாக விரிந்து நம்மையும் அவர்களோடு பயணிக்க வைக்கிறது.

வழக்கமாக போர்கள் பற்றிய படம் எ...ன்றால் பேரரசர்களின் பெருமை பேசுவதாகவே இருக்கும். ஆனால் இது எளிய மனிதர்களின் போர். அதை சுவராஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தமிழன்.

ஓப்பனிங்க் சீனில் கதை சொல்ல ஆரம்பிக்கும் குரல், முதுவன் பாத்திரத்தில் நடித்த பெரியவர், காயாம்பூவாக நடித்த ஷம்மு, ஒளிப்பதிவு, இசை, பாடல், வசனங்கள், சங்க கால தமிழர்களிடையே இருந்த ஆண் பெண் பாகுபாடற்ற சுதந்திரத்தை சொல்லும் காட்சிகள் என படத்தில் பல விசயங்கள் என்னை கவர்ந்தது.

நம்பவே முடியாத க்ராஃபிக்ஸ் சாகச கதாநாயக காமெடிகளை பார்த்து காசை கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலை படத்தைப் பாருங்கள்.. நல்ல அனுபவமாக இருக்கும்.

குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கும் செந்தமிழன் டீமுக்கு வாழ்த்துகள்.

Cartoonist Bala முக நூலில் இருந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இப்படம் தமிழகத்தில் வெளியாகிறது என முன்பு விளம்பரங்களில் வந்தாலும் தற்பொழுது விளம்பரங்களில் இப்படம் பற்றிய செய்திகளைக் காணவில்லை. செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் என்ற படம் இதே நாளில் வெளியாவதினால் பாலை படம் வெளியாகுவதை பிற்போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழனின் வரலாறு பற்றிய திரைப்படங்கள் வெளிவருவது மகிழ்வான செய்தி.

ஈழ தமிழனை இந்தியா, சீனா, ஈரான், பாகிஸ்தான் உட்பட பலநாடுகள் சிங்கள அரசிற்கு உதவி அழித்த வரலாறு பல படங்களாக வர வேண்டும்.. தமிழனை தான் அழித்தார்கள், அவர்கள் போராடி வீழ்ந்தார்கள் என்ற வரலாறுகள் திரைப்படமாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரின் பதிவினைப் போல இன்று தான் இப்படம் வெளியாகிறது. இன்று தினதந்தி பத்திரிகையில் வந்த விளம்பரம்

mdsg453434m.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புமா படங்கள் என்றால்... இப்போ எத்தனை ரசிகர்கள் பால்காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு மாலை போட்டு அமர்களப் படுத்தியிருப்பார்கள்.

தமிழனின் வரலாற்றை சொல்லும் படம் என்ற படியால்... தமிழ் ஊடகங்களும், தமிழ் ரசிகர்களும் அக்கறை செலுத்தவில்லைப் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்

பாலை திரைப்பட இயக்குநர்ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை;இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

பிழைப்போமா அழிவோமா தெரியாது ஆனால் உரிமைக்காக போராடினோம் ( 1958 2009)பதிவு செய்வோம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதி தர்மன்... பாலை.... அடுத்து கரிகால சோழன்

இது வரலாற்று சீசன் போல கிடக்கு :) :)

Link to comment
Share on other sites

-------------------------------------------------------------------------------------------------------------------------

பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!

-------------------------------------------------------------------------------------------------------------------------

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர்25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

‘இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்’

இயக்குநர் வெ.சேகர்

‘இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்’

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

‘வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய,ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு,நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்’

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

‘ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட’

ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம், ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை‘பாலை’ படத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்’

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

“எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒருஉயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்”

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

“சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்”

ஊடகங்கள்

புதிய தலைமுறை

வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சன் தொலைக்காட்சி

சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்

பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu

Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலை – சங்க காலத்திற்கு ஒரு பயணம்

சொன்னவர்: நல்லவன்

November 26, 2011

palai.jpg

இதுவரை நாம் நமது வரலாறு என்று அறிந்து வைத்திருப்பது என்ன? சேர, சோழ, பாண்டியர்கள், உறையூர் ஒற்றர்கள், பொன்னியின் செல்வன், போர், வெற்றிவேல் வீரவேல், மன்னர்களின் அரண்மனை, சைவ-வைணவ சண்டைகள். இதுதான் நமது வரலாறு என்று எண்ணினால் நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ‘பாலை’. மன்னர்கள் வரலாறுக்கு முன்னால், ஆரியர்-திராவிடர் தோற்றத்திற்கு முன்னால், நமக்குள் எந்த பிரிவினை எண்ணமும் தோன்றாமல் இயற்கையை ஒட்டி வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தை சிறிதளவில் நம் கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் முயற்சிதான் ‘பாலை’.

படம் காயாம்பூ என்ற பெண்ணின் பார்வையில் தொடங்குகிறது. ஆயக்குடி என்ற இடத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வூர் மக்கள். வடக்கிலிருந்து வரும் வந்தேறிகள் அந்த மக்களை தாக்கிவிட்டு அவர்கள் இடத்தை அபகரித்துக்கொள்ள, ஆயக்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். வந்தேறிகளின் மொழியும் புரியாமல் அவர்களின் தாக்குதலால் அனைத்தையும் இழந்து வேறு வாழ்விடம் தேடி செல்கிறார்கள். அப்படி அவர்கள் சென்று அடையும் இடம்தான் பாலை. எப்போதாவது மழையை பார்க்கும் பூமி. அந்த இடத்திற்கு முல்லைக்கொடி என்று பெயரிட்டு அங்கேயே வசிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆயக்குடியை மீட்கும் வேட்கை அனைவரிடமும் இருக்கிறது.

palai_movie_stills_95.jpg

இப்படி 2000 வருடங்களுக்கு முன் நமது வாழ்வுமுறை எப்படி இருந்தது, அந்த மக்கள் தங்கள் நிலத்தை மீட்டர்களா என்று அறிந்துக்கொள்ள வெண்திரையில் காணுங்கள்.

கண்டிப்பாக இந்தப்படத்துக்கு நிறை குறைகளைக் கூறி இதையும் மற்ற மசாலாக்களோடு சேர்க்க விரும்பவில்லை. காரணம் இது நாம் இதுவரை அறிந்திராத நமது முன்னோர்களின் வாழ்வியல் பற்றிய பதிவு. இப்படித்தான் இருந்தார்களா என்று நம் யாருக்கும் தெரியாது. ஆனால் இதுபோன்ற முயற்சிகள் மிகுந்த ஆராய்ச்சிக்குபின்தான் முழுதாக செயல்வடிவம் கொடுக்க முடியும்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நமது பழங்காலப் பதிவுகள் என்பது நமது சங்கப் பாடல்கள்தான். அதிலும் பெரும்பாலும் மன்னர்களைப் போற்றும் பாடல்களாகத்தான் இருக்கும். அதில் நமது வாழ்வியல் அடையாளங்களைத் தேடி, வேறு பல சான்றுகளையும் கண்டு அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு காட்சி வடிவம் கொடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஏற்று அதை முடிந்தவரை வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுத்திருக்கும் இயக்குனர் செந்தமிழனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

palai_movie_stills_48.jpg

படத்தில் மிகப்பெரிய ஆறுதலான விஷயம் ‘தமிழ்’. முழுக்க முழுக்க தமிழில் வேறு மொழி கலப்பில்லாமல் அனைத்து வசனங்களையும் கேட்கும்போது ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’. இன்றைக்கெல்லாம் நாம் கேட்டறியாத வார்த்தைகள், ஆமைகளை வைத்து காலத்தை கணிப்பது, மழை வரும் நேரத்தை துல்லியமாகக் கணிப்பது, ஆனந்த நடனம், திருமண முறை, அடிமைகள் முறை என்று நாம் அறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

அப்போ படத்துல குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற அறிய முயற்சிக்கு குறைகளைப் பாராமல் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது எண்ணம்.

புதிதாக நம்மைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துக்கொள்ள, நமக்கே தெரியாத நமது வரலாறை அறிந்துகொள்ள ‘பாலை’ திரைப்படம் ஓடும் அரங்கிற்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

அரங்கம் பக்கம்:

சென்னை சாய் சாந்தியில் இப்படத்தைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த அரங்கம் சிறியது. அதிலும் கால்வாசி அளவே அரங்கம் நிரம்பியிருந்தது. படம் பார்க்கும்போது இரண்டு அரைவேக்காடுகளின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. படம் தொடங்கி 45 நிமிடங்கள் கழித்துதான் அவர்கள் வந்தார்கள். வந்ததிலிருந்து சத்தமாகப் பேசியபடி அனைவரையும் இம்சைப்படுத்தினார்கள். சிறிது நேரம் கழித்து, “டேய்! இது காட்டுவாசிப் படமாடா?” என்று அவர்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். “அடத் தறுதலைகளா!!!! என்னப் படம்னே தெரியாம உள்ள வந்து இம்சை செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது?? " என்று அந்த நேரத்தில் நொந்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இவர்களையும் மீறி இந்தப் படம் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்.

http://www.yaavarumnalam.com/2011/11/blog-post_26.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலை – தமிழனின் (ஒரிஜினல்) பெருமை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒவ்வொரு முறை மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது வலியச்சென்று ஆப்பில் அமர்ந்துக்கொண்டு அய்யய்யோ குத்துதே... குடையுதே... என்று புலம்புவதாலும், அதே சமயம் சில நல்ல படங்களை (தென்மேற்கு பருவக்காற்று, வெங்காயம்) தவற விடுவதாலும் என் மேலேயே எனக்கு ஒரு கோபம் உண்டு. நேற்று வரை இந்த படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்கேயோ ஒரு விளம்பரத்தில் “சங்ககாலத்திற்கு ஒரு பயணம்” என்று வாசித்ததின் விளைவாக திடுமென படம் பார்க்க முடிவு செய்து கிளம்பினேன். தண்டையார்பேட்டை எம்.எம்.திரையரங்கம், சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்று. மழை வேறு பெய்துக்கொண்டிருந்ததால் சொற்ப நபர்களே வந்திருந்தார்கள். இருப்பினும் வந்திருந்தவர்கள் அனைவருமே எங்கேயோ எப்படியோ படத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் பேசியபோது தெரிந்துக்கொண்டேன்.

Paalai+Poster.jpg

மனித இனம் வீடு கட்ட, சமைக்க, ஆடை நெய்ய கற்றுக்கொள்ளாத காலத்தில் அத்தனை பெருமையோடு வீடு கட்டி, ஆடை உடுத்தி, சமைத்து நாகரிகமாக ஆயர்குடி எனும் பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள் தமிழ் பேசும் ஒரு குழு மக்கள். அவர்கள் ஒரு சமயத்தில் வடக்கில் இருந்து (தமிழ் அல்லாத பிறமொழி பேசும்) வந்தேறிகளால் முல்லைக்குடி என்ற பகுதிக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். முல்லைக்குடி பகுதியில் கிடைத்த வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு பாலை எனும் கொடிய வாழ்வாதார சூழல் வந்து அதிர்ச்சியை கொடுக்கிறது. இப்போது ஒன்று கொள்ளையடித்து பிழைக்க வேண்டும், அல்லது இழந்த ஆயர்குடியை மீட்க வேண்டும். இறுதியில் ஆயர்குடியை மீட்பது என்று முடிவாகி போரில் இறங்கும் தமிழர்கள் வென்றார்களா...? என்பதே மீதிக்கதை.

இந்தக்கதையை படித்ததுமே உங்களுக்கு ஒரு இனத்தின் வரலாறு நினைவிற்கு வரக்கூடும். அதை உறுதிப்படுத்தும் விதமாக “அவங்க சிங்கம்... நாம புலி...” என்ற வசனம் வந்ததும் தான் கதை புரிய ஆரம்பித்து சீட்டில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதன் பிறகு வந்த காட்சியமைப்புகளை, வசனங்களை, போர் தந்திரங்களை அப்படியே வரிவரியாக எழுத வேண்டுமென்று அத்தனை ஆசையாக இருக்கிறது. இருந்தாலும் அதை திரையில் பார்க்கும்போது இன்னும் இன்னும் பரவசப்படுவீர்கள். எனவே தயவு செய்து இந்த படத்தை (தூக்குவதற்கு முன்பு) திரையரங்கிற்கு சென்று பார்க்கவும். திரையரங்குகள் லிஸ்ட்.

பயங்கர ஷார்ப்பான வசனங்கள். “பிழைப்போமா... அழிவோமா... என்று தெரியாது. வாழ்ந்தோம் என்று பதிவு செய்ய விரும்புகிறோம்...” என்ற வசனத்தில் ஆரம்பித்து, “போரில் வெல்ல வீரம் மட்டும் போதுமானதல்ல... சூழ்ச்சியும் அவசியம்...” என்று தொடர்ந்து, “நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள்...” என்று முடிவது வரை நிறைய பளிச் டைப் வசனங்கள்.

இது மட்டுமில்லாமல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள், சமூகநிலை, அவர்களின் காதல், காமம், திருமணம் செய்யும் முறை போன்றவற்றை போகிறபோக்கில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது பாலை.

காஞ்சிவரம் படத்தில் நடித்த ஷம்மு – காயாம்பூ என்ற பெண் போராளி பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் கூட நடித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதேபோல நாயகனாக நடித்திருக்கும் சுனிலும் தன் பங்கிற்கு சிலம்பம் கற்று, ஈட்டி எரியப் பயின்று படத்தில் நடித்திருக்கிறார்.

இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல. அந்த வகையில் இயக்குனர் செந்தமிழன் வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்ப சொல்லுங்க, ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீங்க....?

என்றும் அன்புடன்,

N.R.PRABHAKARAN

http://philosophyprabhakaran.blogspot.com/2011/11/blog-post_27.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலை - சினிமா விமர்சனம்..!

27-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம் அனைவரின் ஒரு தலைமுறையைத் தாண்டி பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை பேர் நமக்குத் தெரிவார்கள்..? நம்மில் எத்தனை பேரின் மூதாதையர்களின் பெயர்களின் நமக்கும், நமது வாரிசுகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்..?

இப்படி ஒவ்வொருத்தரையும் கணக்கில் கொண்டு யோசிக்கும்போது நமது தமிழ் மொழியையும், வாரிசுகளையும் முதன்முதலில் உய்வித்தது யாராக இருக்கும் என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா..? இன்றைக்கு இருக்கின்ற வசதிகளை வைத்து எத்தனையோவிதமான வாழ்க்கையை அனுபவிக்கும் நாம், நமது முன்னோர்கள் எப்படிப்பட்ட காலக்கட்டத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்போமோ..? இதைத்தான் தோழர் செந்தமிழன் தனது பாலை படத்தில் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

இப்படியொரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாகை தி.இரவி அவர்களுக்கு எனது முதற்கண் நன்றி..!

கற்றது தமிழ் திரைப்படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர், சின்னத்திரை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களுடன் அறியப்பட்ட செந்தமிழனின் முதல் படமான பாலை, தமிழ் வரலாறு சொல்லும் முதல் திரைப்படமாக உருவாகி அவருக்கும், தமிழ்ச் சினிமாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

paalai-Small.jpg

ஒரு கூட்டமாக மூத்தோர் ஒருவரின் வழி காட்டுதலில், தலைவன் ஒருவனின் அரவணைப்பில் வாழும் தமிழர்கள். ஆயர்குடி என்னும் பகுதியில் வாழ்ந்த இவர்கள், அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் வந்தேறிகளால் விரட்டப்பட்டு முல்லைக்கொடிக்கு இடம் மாறுகிறார்கள். முல்லைக்கொடி இருக்கும் நிலமோ பாலை. பாலைவனத்தில் பண்பட்டா வாழ முடியும்..!? அங்கே வாழ்பவர்கள் ஒன்று கொள்ளையடித்து வாழ வேண்டும். இல்லையேல் இடம்விட்டுத் தாவ வேண்டும்..! இந்த இரண்டில் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் தமிழ் மக்களுக்கு..! மோதி விடுவது என்றே முடிவு செய்கிறார்கள். ஆனால் கிடைத்த முடிவு என்ன என்பதைத்தான் 2 மணி நேர படமாக உருவாக்கியிருக்கிறார்..!

காயாம்பூ என்ற இளம் பெண், எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடியில் தன்னைப் பற்றியும், தனது கூட்டத்தினரைப் பற்றியும் எழுதுவதில்தான் கதை துவங்குகிறது.. இன்றிலிருந்து 2000 வருடக் காலக் கட்டத்தின் பின்னோக்கிய வரலாற்றை நமது தமிழின் பழம் பெரும் பாடல்களின் மூலம்தான் அறிய முடிந்துள்ளது.

5 ஆண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து தகவல்களைச் சேகரித்து அதன் பின்பே இந்த பாலை வரலாற்றை செல்லூலாய்டில் பதிவு செய்யத் துவங்கியிருக்கிறார் இயக்குநர்.

பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், உணவு முறைகள், வந்தேறிகள் என்று சொல்லப்படும் அந்நிய மொழியாளர்களின் வாழ்க்கை என்று நாம் இதுவரையில் காணாத காட்சியமைப்புகளே திரையில் ஓடுகின்றன.

என்னை அதிகம் கவர்ந்தது இயக்கம்தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்து அவற்றை யாரும் மீறாமல் இருக்கும்படியாக வசனங்களை வைத்திருக்கும் பாங்கு, அவற்றை அவர்கள் உச்சரித்திருக்கும் விதம்.. அனைத்துமே அசர வைக்கிறது.. உதாரணமாக தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அவரது கீழ்ப்படியும்தன்மை, காயாம்பூவின் கணவன் கடத்தப்பட்டபோதும் மறுபேச்சில்லாமல் அடங்கிப் போவதை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். தலைவர் என்று உணர்ச்சியுடன் உச்சரிக்கும் அந்த வார்த்தைகளில் இருக்கும் தயக்கம், பயம் இரண்டையும் உணர முடிகிறது..!

இளையோருக்குள் இருக்கும் காதல்.. அதை அவர்கள் வெளிப்படுத்தும்விதம், பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை.. கீழேயும் இல்லை.. மேலேயும் இல்லை என்பதை காட்டும்விதமாக பெண்கள் ஆண்களை தாக்குவதைப் போன்ற காட்சிகள், காயாம்பூ தனது காதலனை கன்னத்தில் அறைவது.. கள் என்ற போதையை பெண்களும் அருந்துவது என்ற அக்கால வாழ்க்கையை சமரசமில்லாமல் பகிர்ந்துள்ளார் இயக்குநர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவைகள் நமது பெண்குலத்தின் தலையில் விழுந்தது எப்படி என்ற கேள்விக்குறியையும் இப்படம் எழுப்புகிறது..!

ஆயர்குடியை மீட்டால் ஒழிய நாம் வழிப்பறியை கைவிட முடியாது என்ற முதுவனின் நடவடிக்கையும், அதன் பின்னான சண்டையில் தனது இனம் தாக்கப்பட்டதையும் கண்டு அவர் படும் அவலத்தை குடித்தே தீர்க்க முயல்வதையும் தெளிவாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்காலத்திலேயே இப்படித்தான் என்பது தமிழச் சமூகத்திற்கு இழுக்காக இல்லை.. மனித குல குணத்திற்கு இதுவே பொதுவான பண்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்னத்திரையில் ஷார்ப்பான வசனங்களுக்காகவே பேசப்பட்ட செந்தமிழினின் படைப்பில் வசனங்களுக்கு சொல்லியா தர வேண்டும்..? அழகுத் தமிழில் அத்தனையும் நிறுத்தி, நிதானமாக செவிகளில் மிக எளிதாக நுழையும்வகையில் எழுதியிருக்கிறார்.

ஆமைகளின் அணிவகுப்பை பார்த்துவிட்டு முதுவனின் பாலை வரப் போகுதுடா என்ற புலம்பல் துவங்குகிறது.. இதன் பின்புதான் அத்தனை ரணகளமும் தொடர்கிறது. வந்தேறிகளின் பிடியில் சிக்கினால் இறுதிவரையில் அடிமைகளாகவே வாழ வேண்டியிருக்கும் என்பதுதான் சிக்கியவனை மீட்டெடுக்க நினைக்கும் தமிழ்ச சமூகத்தின் முன் நிற்கும் ஒரே காரணம்.. எக்காரணம் கொண்டும் நம் இனம் அடிமையாகக் கூடாது என்றே அப்போதும் நினைக்கிறார்கள். அதே சமயம் நாம் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்பதோடு, நாமும் யாரையும் அடிமைப்படுத்தவும் கூடாது என்பதையும் தமிழனின் மரபாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அவசரப்படக் கூடாது.. வீரம் மட்டுமே போதாது.. சூழ்ச்சியும் வேணும் என்ற முதுவனின் கூற்று இப்போதைய தமிழர்களின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம். அந்த சூழ்ச்சி வலையை உணரத் தெரியாமல்தான் தற்போது அழிந்தோம் என்பதை அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார் இயக்குநர். புலி, சிங்கம் என்று பிரித்தெடுத்து அவர் குறிப்பிடும்போது யாரை அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதையும், பூர்வகுடி மக்கள் யார், வந்தேறிகள் யார் என்பதும் புரிகிறது.

படத்தில் 3 முக்கிய நபர்களின் பங்களிப்பும் அசத்துகிறது. முதல் நபர் எடிட்டர் ரிச்சர்ட். இது போன்ற கதை சொல்லும் படங்களில் ஏற்படும் ஆயாசம் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. தங்குத் தடையில்லாமல் தெளிந்த நீரோட்டம் போன்று செல்கிறது திரைப்படம். பெரிதும் உதவியிருக்கிறார் எடிட்டர். அடுத்து இசையமைப்பாளர் வேத்சங்கர். பாடல் காட்சிகளில் அத்தனை வரிகளிலும் தமிழ் விளையாடியிருக்கிறது. கொல்லாரே கொல்லாரே பாடல் கொண்டாட்டத்தைக் கொடுக்கிறது எனில், யாதே யாதே பாடல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது..! 3 பாடல்களையும் செந்தமிழனே எழுதியிருக்கிறார். அத்தனையும் அட்சரப் பிசகாத தமிழ் வார்த்தைகள்..! புதுமையான இசையாக பாலையின் தீம் மியூஸிக்கே கவர்ந்திழுக்கிறது..! படத்தின் இசையமைப்பாளர் வேத்சங்கர் மிக இளம் வயதுடையவர். இவர் மட்டுமல்ல படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேருமே 35 வயதுக்குட்பட்ட இளையோர் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம். மூன்றாவதாக ஒளிப்பதிவாளர் அபிநந்தனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரும் பலம்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பொட்டல்வெளி, சிறிய காடு, மணல்வெளிகள், வயற்காடுகள், ஏரிகள், கரைகள் என்று கேமிரா எங்கு சென்றாலும் அதுவொரு தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது..! சண்டைகளின்போது தமிழர்கள் பயன்படுத்திய கவண்கல், ஈட்டி, சிறிய கத்தி, அவற்றை பெண்களும் பயன்படுத்தியதான உண்மை வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குத்தான் பெண்கள் என்றில்லாமல் ஆண்களுக்கு சளைக்காமல் அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..!

காயாம்பூவாக நடித்திருக்கும் ஷம்முதான் இப்படத்தில் நடித்திருப்பவர்களில் சினிமா வட்டாரத்தில் தெரிந்த முகம்., சுனில், முதுவன், தலைவனாக நடித்திருக்கும் நடிகர் என்று அனைவருமே தத்தமது வேலைகளைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்கார்ர்கள், லோக்கல் கிராமத்து மக்கள் என்று சினிமா முகங்கள் 2 பேரைத் தவிர மீதி அத்தனை பேருமே அந்நியம்தான். ஆனால் அனைவரையுமே தனது முத்தான இயக்கத்தால் முத்திரை பதிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒண்ணே கால் கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் ஆவணப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கும். ஆனாலும் அந்தக் கவசக் குண்டலத்தில் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே சில சமரசங்களுடன், நமது அரசியல்வியாதிகளின் கைப்பாவையாக இருக்கும் சென்சார் அதிகாரிகளுக்காக தமிழர்களின் உடை விஷயத்தில் விட்டுக் கொடுத்தும் வெளிவந்திருக்கிறது இப்படம்.

வணிக ரீதியான திரைப்படங்களும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மசாலா படங்களுமே சூழ்ந்திருக்கும் இன்றைய சினிமாவில் இது போன்ற சிறந்த, தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் வரலாறுக்கும் தேவையான திரைப்படங்களை ஆதரிப்பதும், வரவேற்பு கொடுப்பதும் நமது கடமை..! நல்ல சினிமாக்கள் வரவில்லையே என்று புலம்புவதைவிட, வந்ததை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடுவதே சிறந்தது..!

“நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும், நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது...” என்று படத்தின் முடிவில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த இரண்டு வரி வசனமே ஒரு வரலாறாகியிருக்கிறது இப்படத்தில்..!

இப்படத்திற்கு இந்த நேரத்தில் நமது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு படம் பார்த்து பரப்புரை செய்து உதவுங்கள் மக்களே..!

http://truetamilans.blogspot.com/2011/11/blog-post_27.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

paalai3.jpg

2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பெருமைகளை உணர்த்தும் படமாக வெளிவந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ”பாலை” தமிழ் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை தமிழ்சினிமா இணையதளம் (www.tamilcinema.com) வசம் உள்ளது.

திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வேண்டுமெனில் தமிழ்சினிமா இணையதளத்தை அனுகவும்

தொடர்பு :

தமிழ்தாசன்.

செல்பேசி - 9944334624

மின்னஞ்சல் : anto@softview.in

பாலை

paalai01.jpg

தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை..

தமிழர்கள் காட்டுமிராண்டியாய் வாழ்ந்தார்கள், அவர்களுக்கு உண்ண, தூங்க மட்டுமே தெரியும் என்று தான் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் இங்கு சில மக்கள் வாழ்ந்தார்கள் அவர்களுக்கு உடுத்துவதற்கு உடை செய்ய தெரியும், குடிசை வீடு கட்டி வாழ்ந்தார்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை தெரியும் எனும் விளக்கத்துடன் படம் ஆரம்பமாகிறது.

”பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்” என காயம்பு எனும் பாலை நிலத்து பெண் ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லபடுகிறது.

செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் மக்கள் ஒரு வறண்ட பகுதியில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அமைதியாய் போய் கொண்டிருந்த அவர்களது வாழ்வில் மீண்டும் புயலாய் பிரச்சனை கிளம்புகிறது. பலமானவர்கள் பலகீனகாரர்களை அடித்தால் அமைதியாக தான் போவார்கள், பலகீனமானவர்கள் பலம் பெற்றால் பலமானவர்களுடன் சண்டை போடுவார்கள் அதைபோல சொந்த மண்ணிலிருந்து விரட்டியவர்களின் மாட்டு வண்டி பாலை நிலத்தை கடக்கும் போது அங்கிருக்கும் இளைஞர்கள் அதை மடக்குகிறார்கள், அதில் ஒருவன் பலி ஆகிறான்.

இந்த பிரச்சனை பெரிதாக கூடாது என்று பாலை நிலத் தலைவன் சமாதானம் பேச போகும் இடத்தில் வளன் எனும் இளைஞன் அடிமையாக்கப்பட்டு மற்றொரு இளைஞன் கொல்லப்படுகிறான். சமாதானம் சண்டையில் முடிந்து பிரச்சனை பெரிதாகிறது. பாலை நிலத்து மக்கள் வளனை காப்பாற்றினார்களா என்பது தான் மீதி கதை.

2300 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கை சூழல் என்பதால் படப்பிடிப்பு இடங்கள் அனைத்தும் வெட்டவெளியிலும் காடுகளிலும் செம்மண் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. உணவுக்காக மீன் பிடிப்பதும், மாட்டை கொன்று அதன் கறியை பயன்படுத்துவதும் அப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் தமிழர்கள்.உடன்போக்கு, வந்தேறிகள் என்றெல்லாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிற தமிழர்கள் மறந்து போன தமிழ் வார்த்தைகளை நினைவூட்டுகிறது.

பழங்கால படங்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவில் சிரத்தை காட்டவேண்டி வரும், அதை செய்து இருக்கிறார் அபிநந்தன் இராமனுஜம்.. ஏ கொல்லரே, மாயமா பாடல்கள் இசை அமைப்பாளர் வேத் ஷங்கரை பாராட்ட வைக்கிறது. (ஏ.ஆர்.ரகுமானிடம் இசை பயின்றவராமே...!!!)

காயம்புவாக வரும் ஷம்முவை தவிர மற்ற அனைவருமே புது முகங்கள் தான். குறிப்பாக வளனாக வரும் சுனிலின் நடிப்பு பாராட்டுக்குரியது.

பத்து அடி தூரத்தில் வருவது யார் என்று தெரியாமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் எத்தனை பேர் வருகிறார்கள் என்று தரையில் காது வைத்து காலடி சத்தத்தால் கண்டு பிடிப்பது , நேரத்தை கணக்கிட செம்மண்ணால் ஆன தொட்டியில் தண்ணீர் ஊற்றி பார்ப்பது, போருக்கு தீயை பயன்படுத்துவது, அனைவரும் கூட்டமாக உட்கார்ந்து பானம் குடிப்பது , தொலைதொடர்பு இல்லாத காலத்தில் புகையின் மூலம் பேசிக்கொள்வது என ஒவ்வொரு விசயத்தையும் தேடி தேடி செய்து இருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். பெயருக்கு ஏற்றார் போல் தமிழ் உணர்வை பதிவு செய்துள்ளார்.

-தாஸ்...

-தமிழ்சினிமா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.