யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

உமை

வாழ்த்துக்கள்: தமிழீழ தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை வாழ்த்தி வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் கவிதை

Recommended Posts

தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது

பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

Thalaivar_0.jpg

வல்வையின் வடிவே: தமிழர்

வாசலின் நிமிர்வே ஜயா!

சொல்லிய திசையில் சுடரும்

சூரிய தேவே! தழுவும்

மெல்லிய காற்றே: பாசம்

மேலிடும் ஊற்றே: உன்னை

அள்ளியே அணைக்க ஆசை

ஆவலோடு உள்ளோம் வாராய்!

00

அற்றைத்திங்கள் நீதான்.

அவ்வெண் நிலவும் நீதான்

ஓற்றைக்காற்றும் நீதான்,

ஓண்டமிழ்க் குரலும் நீதான்,

கோற்றவைப் பிள்ளை நீதான்,

கொடியர சாள்வாய் நீதான்,

இற்றைவரைக்கும் நீதான்,

இனியும் இனியும் நீதான்

00

நேற்று நீ இருந்தாய் அழகாய்

நிலவிலும் நீயே வடிவாய்

ஏற்றுமே துதித்தோம்: உன்னில்

எத்தனை கனவை நெய்தோம்

பேற்றிலும் பேறாய் உன்னைப்

பெற்றதே தவமாய் கண்டோம்

போற்றிடும் செல்வப் பேறே

போனநீ வருவாய் எப்போ?

00

நீயிருந்து ஆண்ட வன்னி

நீறுபூத்திருக்கே எண்ணி!

பாய்விரித்து உறங்கா வீரம்

பாய்ந்துமே வருமோர் நேரம்

தாய் முகம் தேடும் கன்றாய்

தாகமாய் உள்ளோம்: இந்தத்

தீயரும் திசை கெட்டோடத்

திரும்பி நீ வருவாய் எப்போ?

00

பின்னிய வலையை வென்றாய்

பீறிடும் தீயில் நின்றாய்

இன்நுயிர் சுமந்து சென்றாய்

இறுதியில் நீயெ வென்றாய்

அன்னியர் கண்ணில் மண்ணை

அண்ணா நீ தூவிச் சென்றாய்

எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்

இருந்து நீ எழுவாய் நெருப்பாய்!

00

சுற்றியே வளைத்தோம்: ஈழச்

சுதந்திரக்காற்றைக் கைகள்

பற்றியே இழுப்போம் : மிதிப்போம்

பகற்கனா கண்ட; பகைவா;

வெற்றியா(ர்) பெற்றார் கோட்டை

விட்டவ ரானார்: அண்ணன்

காற்றினில் ஏறி எல்லை

கடந்துமே சென்றான்: வருவான்!

00

நீ இல்லா வாழ்வும் வாழ்வா

நிலவில்லா வானும் வானா

நீ இல்லை என்றால் தமிழன்

நிழலதும் மிஞ்சாதிங்கே

நீ இல்லாத் தெய்வம்: உன்னால்

நிமிர்ந்ததிவ் வையம்: நாளை

நீ வரும் திசையை நோக்கி

நெடுந் தவம் செய்வோம் வாராய்!

00

மலைத்தோள் அழகா வாழ்க,

மறப்புலி தலைவா வாழ்க!

வளைந்திடா வீரம் வாழ்க

வணங்கிடா ஓர்மம் வாழ்க

கலைந்திடாக் கனவும் வாழ்க

கனவதும் மெய்பட வாழ்க

நிலையென நீயே வாழ்க

நூறென அகவை காண்க!

00

ஒன்றென ஆவோம் : நாமும்

ஒரு கொடி சேர்வோம்: பாரில்

நன்றென நாங்கள் வாழ

நல்லதோர்; தலைவன் உள்ளான்

நின்று வான் முகிலை உரசும்

நிலைமையில் இருந்தோம் நாங்கள்

இன்றிவ் நிலைக்கேன் ஆனோம்

ஒற்றுமை எமக்குள் வேண்டும்

00

ஆளொரு வழியில் போனால்

ஆவது ஒன்றும் இல்லை

நாளொரு முடிவில் நின்றால்

நாறவே ஓடும் உண்மை!

தோளொடு தோளாய் தமிழர்

தோழர்க ளானால் வெற்றி

ஆளுமோர்; காலம் தன்னை

ஆக்குமெம் தலைவன் வாழ்க!

00

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

“சீராளன்”

Share this post


Link to post
Share on other sites

அழகு தமிழால் அண்ணனுக்கு வாழ்த்து. வாழ்க தலைவா. நானும் வாழ்த்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது

பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை

“எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

Thalaivar_0.jpg

அற்றைத்திங்கள் நீதான்.

அவ்வெண் நிலவும் நீதான்

ஓற்றைக்காற்றும் நீதான்,

ஓண்டமிழ்க் குரலும் நீதான்,

கொற்றவைப் பிள்ளை நீதான்,

கொடியர சாள்வாய் நீதான்,

இற்றைவரைக்கும் நீதான்,

இனியும் இனியும் நீதான்

“சீராளன்”

Share this post


Link to post
Share on other sites

ஆளொரு வழியில் போனால்

ஆவது ஒன்றும் இல்லை

நாளொரு முடிவில் நின்றால்

நாறவே ஓடும் உண்மை!

தோளொடு தோளாய் தமிழர்

தோழர்க ளானால் வெற்றி

ஆளுமோர்; காலம் தன்னை

ஆக்குமெம் தலைவன் வாழ்க!

“சீராளன்”

உள்ளத்தை உருக்குகின்றது, கவிதை!

நன்றிகள், உமை!!!

Share this post


Link to post
Share on other sites

எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

Share this post


Link to post
Share on other sites

எமக்கென்றும் நீ வேண்டும்

திரும்ப நீ வரவேண்டும்”

அவர், எங்களுக்கு வாழைப்பழத்தை உரித்து... தந்ததும், காணாது... எண்டு,

தீத்தி விடச் சொன்ன மாதிரி இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

சிறி அண்ணே இது வன்னியில் இருந்து ஒருவர் எழுதியது.இவர் தனது சொந்தப்பேரிலேயே கவிதை எழுத முடியாதவராக உள்ளார். உண்மையில் வன்னியில் உள்ள மக்களுக்கு தலைவர் திரும்ப வரவேண்டும் என்றுதானே மன நிலை இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

சிறி அண்ணே இது வன்னியில் இருந்து ஒருவர் எழுதியது.இவர் தனது சொந்தப்பேரிலேயே கவிதை எழுத முடியாதவராக உள்ளார். உண்மையில் வன்னியில் உள்ள மக்களுக்கு தலைவர் திரும்ப வரவேண்டும் என்றுதானே மன நிலை இருக்கும்.

உமை,

எவர், எங்கிருந்து எழுதினாலும்....

தலைவருக்கு 57 வயசு. நாற்பது வருடம் எமக்காக போராடிவிட்டார்.

தலைவரும் பாவம் தானே......

பென்சன் எடுக்கிற தாத்தா, புத்தி மதி சொன்னால்.... கேட்க மாட்டீங்களா... :)

Share this post


Link to post
Share on other sites

சிறி அண்ண எனது கருத்தும் அதுதான் அவருக்கு தொல்லைகொடுக்க கூடாது என்பதுதான் ஆனால்....இயலாத் தன்மையில் கடவுளிடம் முறையிடுவது போலதான் இதுவும்.

Share this post


Link to post
Share on other sites

சிறி அண்ண எனது கருத்தும் அதுதான் அவருக்கு தொல்லைகொடுக்க கூடாது என்பதுதான் ஆனால்....இயலாத் தன்மையில் கடவுளிடம் முறையிடுவது போலதான் இதுவும்.

சனத்துக்கு.... குறை சொல்லுறதே... வேலையாய் போச்சுது.

அல்லாவுக்கு குறை சொன்னால்... பாசை விளங்காது எண்டு...

சனம் யோசிக்குது போலை.

அதுக்காக... எங்களை, நெடுக இழுத்தால்... ஒட்ட நறுக்கிப் போடுவன்.

Share this post


Link to post
Share on other sites

உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

மலைத்தோள் அழகா வாழ்க,

மறப்புலி தலைவா வாழ்க!

வளைந்திடா வீரம் வாழ்க

வணங்கிடா ஓர்மம் வாழ்க

கலைந்திடாக் கனவும் வாழ்க

கனவதும் மெய்பட வாழ்க

நிலையென நீயே வாழ்க

நூறென அகவை காண்க!

இணைப்பிற்கு நன்றி உமை

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு