Jump to content

"வருவார்"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
304001_237212393012263_100001705117711_674663_444374619_n.jpg
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வரவேண்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்க்கு நிகர் தலைவன்

நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார்.

இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு… என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். “ஒமண்ணை” என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள்.

தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார்.

சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்து தரவேண்டும்? என்று சொன்னார். போராளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து துப்பரவு செய்ய ஆரம்பித்தனர். தலைவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தார்.

நேரம் பி.ப 2 மணி. தலைவர் சந்திப்புக்களை முடித்து விட்டு ஆயுதங்கள் துப்பரவாக்கும் பகுதிக்கு வந்தார். “பெடியள் சாப்பிட்டியளா?” என்று கேட்டார். “இல்லை அண்ணை வேலை முடியுது ஒரேயடியா முடிச்சுப்போட்டுச் சாப்பிடுவம்” என்று போராளிகள் ஒரு மித்துச் சொன்னார்கள்.

சரி, என மௌனமொழி பேசியவாறே தனது வீட்டுக்குச் சென்றார். சிறிய பெட்டியிற் பேரீச்சம்பழம் எடுத்து வந்தார், போராளிகளின் கைகள் அழுக்கடைந்த நிலையில் இருந்ததை அவதானித்துவிட்டுத் தானே போராளி ஒவ்வொருவருக்கும் பேரீச்சம்பழத்தை ஊட்டிவிட்டார். பின் மாறி மாறி எல்லோருடைய வாய்களையும் பார்த்தபடி சாப்பிட்டு முடிந்தவர்களுக்கு ஊட்டி விட்டார்.

இவ்விடத்திலிருந்த போராளி யொருவர் இப்படிச் சொன்னான்.

“என் தாய்க்கு நிகர் இல்லை என்றிருந்தேன்.

அண்ணன் வாயில் வைத்த பேரீச்சம்பழம், என் நினைப்பைப் பொய்யாக்கிப் போனது!

தமிழுக்காக என் உயிரைக் கொடுத்தாலும், இக்கடனை, அன்புக்கடனை, என்னால் அடைக்க முடியாது”

என ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

விசாலகன்

காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை பொறுப்பாளர். போராளி,

தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழம்.

{முகநூல் வழியாக }

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔  
    • தமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்!🤦‍♂️
    • குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? (இராஜதுரை ஹஷான்)       தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன ? | Virakesari.lk
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை   2008 "பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ  வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.
    • கோளிகை   கோளி  (ஆல்/அத்தி/பூவாது காய்க்கும் மரம் )  கை 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.