Jump to content

காதல் சினிமாப்பாடல்கள் எழுதுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி.

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள்.

ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள்.

ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம்.

சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன்.

குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். முழுவதையும் படியுங்கள்.

படம்:- காதலிக்க நேரமில்லை

பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன்

பாடியவர்:-சீர்காழி கோவிந்தராஜன்

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை

பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை

வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை

பஞ்சுபோல நரைவிழுந்து பார்வையும் குழிவிழுந்து

இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி

காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை

நோயில்லா உடலிருந்தால் நு}றுவரை காதல் வரும்

மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த

சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை

(மாறுவேடம் கலைந்தபின்பு)

அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்

பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்

இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன்

சந்திரனைக் கண்டுவந்தேன் சரசம் நடத்த வந்தேன்

காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!

வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

மாஸ்டர் அப்பிடி போட்டு தாக்குங்கள் இந்தா என்ரை பாட்டு

படம் : கல்யாண ராமன்

காதல் வந்திடிச்சு ஆசையில் ஓடி வந்தேன்

பாலும் பழமும் தேவையில்லை தூக்கம் இல்லை

பால் வடியும் பு முகத்தை பாக்க வந்தன்

கிழக்கே போகும் ரெயிலிலை . .என்

இளமை ஊஞ்சல் ஆடுதே...

அன்னகிளியே . .பத்திரகாளி....

அடுத்தது என்ன மறந்து போச்சே...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் கடிதம் தீட்டவே

குரல்: உன்னி மேனன், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

ம்ம்...ம்ம்ம்...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ

பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்

விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்

செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

(காதல்)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா

மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்

உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா

மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா

ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ஓ...

Link to comment
Share on other sites

காதலா காதலா

காதலால் தவிக்கிறேன்

ஆதலால் வா வா

அன்பே அழைக்கிறேன்

காதலி காதலி

காதலில் தவிக்கிறேன்

ஆதலால் வா வா

அன்பே அழைக்கிறேன்

ஒயாமல் வீசும் பூங்காற்றைக் கேளு

என் வேதனை சொல்லும்

நீங்காத எந்தன் நெஞ்சோடு நின்று

உன் ஞாபகம் கொள்ளும்

தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி

தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி

அந்த இன்பம் என்று வருமோ...

(காதலி)

ஒயாத தாபம் உண்டாகும் நேரம்

நோயானதே நெஞ்சம்

ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்

தீயானதே மஞ்சம்

நடந்தவை எல்லாம் கனவுகள் என்று

மணிவிழி மானே மறந்திடு இன்று

ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா...

(காதலா)

:cry: :wink: :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் அவர்களே வணக்கம்.

உங்கள் காதல் பாடலுக்கும் பாராட்டுக்கள்.

நான் யாரையும் தாக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை. சந்தோசம், சிரிப்புத்தான் ஒரு மனிதனுக்கு சிறந்த மருந்து என்று படித்தேன். அதனால்தான் எல்லோரையும் சந்தோசப்படுத்துவதற்காக இப்படி ஒரு சிறு போட்டியை ஆரம்பித்தேன்.

நீங்கள் உங்கள் அடுத்த காதல் பாடலை வைக்கலாம்தானே!

ஒரே தடவையில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களை வைக்ககூடாது ஆனால் இன்னொருவர் வைத்தபின் முன்னர் வந்தவர்களும் வைக்கலாம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா. எனக்குப் பிடித்த இன்னுமோர் பாடல் இதோ.

பாடல்: காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்

வரிகள்: வைரமுத்து

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

(காதல்)

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்

தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

(காதல்)

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ

பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தேய்ந்து போ

பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ

பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை

ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

(காதல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே மற்றையவர்களைக் காணவில்லை.

ஒருவேளை காதல் பாடல்கள் நினைவில்லையோ!

இதுவரை நேரமும் யாழ் களத்தை திறக்கவே முடியவில்லை. அதுதான் காரணமோ?

Link to comment
Share on other sites

எங்கே மற்றையவர்களைக் காணவில்லை.

ஒருவேளை காதல் பாடல்கள் நினைவில்லையோ!

இதுவரை நேரமும் யாழ் களத்தை திறக்கவே முடியவில்லை. அதுதான் காரணமோ?

காதலிக்கும் வரை பாடல்கள் நினைவில் இருந்தது திருமனம் செய்த பின் எல்லாம் மறந்து போச்சு

விரும்பிணா சோக பாடல் எழுதவா? :cry: :cry:

:P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்"

என்று எழுதப்போகின்றீர்களா? அல்லது "காதல் என்றால் என்ன?" என்றா? அல்லது வேறு ஏதாவதா?

ம்! எழுதுங்கள் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

படம்:- இயற்கை

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிறோடு இருந்தால் வருகிறேன்.

மன்னிக்கவும் மிகுதி தெரியவில்லை :roll:

நன்றி :lol:

Link to comment
Share on other sites

அண்ணா.. நீங்க காதலிச்சு திருமணமுடிச்சீங்களா? இப்ப எதுவுமே ஞாபகத்தில இல்லையா?

ம்.. நல்ல காதல் நல்ல திருமணம்..

:?:

காதலிக்கும் வரை பாடல்கள் நினைவில் இருந்தது திருமனம் செய்த பின் எல்லாம் மறந்து போச்சு

விரும்பிணா சோக பாடல் எழுதவா? :cry: :cry:

:P :P

Link to comment
Share on other sites

அண்ணா.. நீங்க காதலிச்சு திருமணமுடிச்சீங்களா? இப்ப எதுவுமே ஞாபகத்தில இல்லையா?

ம்.. நல்ல காதல் நல்ல திருமணம்..

:?:

ஆம நாம் நகைசுவையாய் ஏதும் பேசின வந்து நீட்டுங்கள்

அட உங்களுக்கு இந்த பகுதியிலும் கருந்து எழுத தொனுதா

நான் வேற் மாதிரி நினைச்சேன் :wink: :wink:

Link to comment
Share on other sites

காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா

மனம்தான் லவ் லவ்னு அடிக்கும் லபோன்னுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும்

(காதல் கசக்குதையா...)

யாராரோ காதலிச்சு உருப்படலை, ஒண்ணும் சரிப்படலை

வாழ்க்கையிலே என்றும் சுகப்படலை

காதல் படம் எடுத்தா ஓடுமுங்க

தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி

கதைய கேளு முடிவ பாரு

கடைசியில் சேராம வாழாம செத்தாங்க... எனக்கிந்த

(காதல் கசக்குதையா...)

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு

எத்தனை டூயட் எத்தனை ரியூன கேட்டாச்சு

இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு

சக்தியும் கெட்டு புத்தியும் கெட்டு நின்னாச்சு

கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே

பி.யு.சின்னப்பா வந்த காலத்துல காதல் கனிரசமே

மன்மதலீலை எம்.கே.ரீ. காலத்துல

நடையா இது நடையா... நம்ம நடிகர் திலகம் பாணியிலே

ஹலோ ஹலோ சுகமா, ஆட ஆமாம் நீங்க நலமா

எங்கேயும்தான் கேட்டோம், அண்ணன் எம்.ஜி.ஆர். பாட்டுக்கள

இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு

இளையராஜா எந்தன் பாட்டிருக்கு...

வீட்டில அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க

நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும் :roll:

நீயாக பெண் தேட கூடாது :P எனக்கிந்த

(காதல் கசக்குதையா...)

Link to comment
Share on other sites

படம்:- ஜோடி பாடல்:- காதல் கடிதம் தீட்டவே

குரல்:-உன்னிமேனன், எஸ்.ஜானகி

இயற்றியவர்:- வைரமுத்து

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்போழுதும் அஞ்சல் உன்னைச் சேந்திடும்

நன்றி

Link to comment
Share on other sites

என்ன தாரணி அம்மா.........கிருபன்ஸ் தந்த பாடலையே போட்டிருக்கிறீயள் காதல் பாடலுக்கு வலு தட்டுப்பாடு போல கிடக்குது........

Link to comment
Share on other sites

காதல் செய்தது பாவம் என்னை வாட்டுதடி

கன்னி இட்டது சாபம் என்னை வாட்டுதடி

துன்ப தீயினிலே என் நெஞ்சம் வேகுதே

கொஞ்சம் கொஞ்சமாக என் ஐீவன் போகுதே

போகட்டும் போடி போ

(படம் பாடகர் ஒன்றுமே தெரியாது. யாரிடம் இருந்தால் இணையுங்களேன்)

Link to comment
Share on other sites

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

உன் எண்ணம் என்ற ஏட்டில்

என் எண்ணைப் பார்த்த போது

நானே என்னை நம்ப வில்லை

எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை

அன்பே உன்மேல் உண்மை

உன் வசம் எந்தன் பெண்மை

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

ஆஆஆ...

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா

இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா

இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது

மெம்மேலும் கைகளை வளை என்று ஏங்காதோ

இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா

இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக

நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்

இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்

மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்

ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை

கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை

இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்

பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

:lol::lol: :cry:

Link to comment
Share on other sites

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவி(வன்) நான்

எப்ப சுட்டி றிசல்ஸ் வரும்....... எங்களுக்கும் அறிவியுங்கோ.........என்ன....

Link to comment
Share on other sites

காலமெல்லாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி கனவுகள் அதன் சன்னிதி

கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்மையே போதிக்கும் காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை

காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

ஜாதி மாதி பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்

ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை

ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்

நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

கால்மெல்லாம் காதல் வாழ்க

Link to comment
Share on other sites

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்

மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசதன்னில்

துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம் (2)

தொட்டவுடன் மேனியெல்லாம் துவண்டு விடும் சொடியைப்போலே(2)

நாளெல்லாம் திருநாளாம் நடையெல்லாம் நாட்டியமாகும்(2)

தென்றலெனும் தேரின் மேலே சென்றிடும் ஆசையாலே(2)

Link to comment
Share on other sites

காதல் காதல் என்று பேசக் கண்ணான் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தம் எந்தன் மனம்

நீராட நீ செல்லும் யமுனா நதி

மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய

மஞ்சள் நதியோ முங்கும நதியோ

காணாத உறவொன்று நேர் வந்தது

கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது

வாழாத பெண்மைக்கு வழி தந்தது

வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட

மன்னா வருக மாலை தருக

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.