Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

காதலில் விழாமல் தப்பியது எப்படி?


Recommended Posts

காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.

பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும். தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.

காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ, எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர், கிழிஞ்சு போன பஸ் டிக்கெட், லேசா செம்பட்டையான ஒரு முடி, குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள், காது போன குட்டிக் கரடி பொம்மை, ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற பீலிங் கிடைக்கும்.

இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.

* 23சி பஸ்ஸýக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்போம். 25 வயசுள்ள ஒரு பொண்ணு பஸ் வரலையேன்னு 26 வது தடவையா நகத்தைக் கடிப்பா. 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவ பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவ கைக்குப் போகும். அப்புறம் அவ டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவளுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!

*தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸôரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க. அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி அவ சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.

*நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒரு ஜந்து உங்க பின்னாலேயே வரும். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லும். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு! திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?ன்னு கேக்கும் அந்த ஜந்து. இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை.

*"எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டெüட். அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா ஆரம்பிப்பாங்க. "எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்úஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க. கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும். அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை.!

*"ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெúஸஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும். முகம் பார்க்காம பண்ணுற இந்த லவ்வுல , என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு வெலாவாரியா சொல்லாமலே தெரியுமே உங்களுக்கு!

*"மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெüட்டானது காட்று!'

- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும். "நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது.

*"டேய் மச்சான் இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்னு' பந்தாவா ஒருத்தன் முள்ளைத் தூவிட்டுப் போவான். "இந்த சுடி அவன் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா. "அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறான். நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும். "அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை.

*அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசா வேணாம். டப்பாசு வெடிச்சாத்தான் தீவாளி, கேக்குத் தின்னாத்தான் கிறித்துமஸ், பிரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான், அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே. சிவசேனா கட்சியினர் எந்த விதத்திலும் என்னைத் தூண்டவில்லை. ஹிஹி..)

கற்பனை: முகில்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

இது கரெக்ட்..லவ் பண்ணினால் தான் காதலர் தினம் கொண்டாடலாமா? இல்லண்ணாலும் கொண்டாடலாம்.. :P

ஆகா..என்னமா விவரிக்கிறங்க..ம்ம்..எல்லாம் சுண்டலோட சீ முகிலோட அனுபவம் போல.. :P

நன்றி சுண்டல்.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் வரும் ஆங்கிலச்சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், அல்லது அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களை எழுதியிருந்தால் இன்னும் நன்றாகச் சுவைக்கும் என்று எண்ணுகிறேன். ஆங்கிலச்சொற்களை தமிழில் எழுதினால் பலருக்குத் தலைவலியைத்தான் ஏற்படுத்தும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை வாசித்தால் அரைவாசிகூட விளங்காமல் போகுமல்லவா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்

இவ்ளோ கேவலமா ஆக்குமா..இந்த காதல்?????? :evil:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்ளோ கேவலமா ஆக்குமா..இந்த காதல்?????? :evil:

எப்பிடி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்க உங்களால் முடியுது.............எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காதலில் விழாமல் தப்பியது எப்படி என்று தலையங்கத்தை போட்டு விட்டு காதலில் எப்படி விழுவது என்று யோசனை கொடுப்பது போல் எல்லோ இருக்கு.

இணைப்புக்கு நன்றி சுண்டல்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பை பாத்தா சுண்டல் சுட்டு போட்ட மாதிரி தெரியேல்லை சொந்த அனுபவத்தை எழுதின மாதிரியல்லோ இருக்கு அப்படியா சுண்டல் :wink: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காதல்.... காதல்...... காதல்..... இல்லையேல்....

சாதல்.... சாதல்...... சாதல்.....

Link to post
Share on other sites

இணைப்பை பாத்தா சுண்டல் சுட்டு போட்ட மாதிரி தெரியேல்லை சொந்த அனுபவத்தை எழுதின மாதிரியல்லோ இருக்கு அப்படியா சுண்டல் :wink: :P

ஆமா..ஆமா....இங்க இப்பிட்pலாம் பன்னா செருப்பால தான் விழும்ப்பா...நீங்க வேற..... :evil: :twisted: :twisted:

Link to post
Share on other sites

ஆமா..ஆமா....இங்க இப்பிட்pலாம் பன்னா செருப்பால தான் விழும்ப்பா...நீங்க வேற..... :evil: :twisted: :twisted:

எனன்னெண்டா சுண்டல்டை அனுபவம் மாதிரித்தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி சுண்டல்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

(பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே. சிவசேனா கட்சியினர் எந்த விதத்திலும் என்னைத் தூண்டவில்லை. ஹிஹி..)

இது செம கடி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்க உங்களால் முடியுது.............எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்.

எல்லாம் ஆன்டி சொல்லி தந்தவா.. அப்போ நீங்களும்..ஆன்டிகிட்டயே போய் கேளுங்கோ...நிறைய அடி சீ ஐடியா தருவாங்க.. :P :wink:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் ஈழம் கிடைத்து விட்டது அதற்கான உலக நாடுகளின்    அங்கீகாரம் தான் தேவை என்ற நிலையில் இருந்த நாங்கள் இன்று.... நாம் தமிழர் கட்சி தான்    எங்களுக்கு எல்லாமே என்ற நிலையில் நிற்பது வேதனைக்குரியது பணத்தை வீசினால்   விடுதலை கிடைக்கும் என நான் நம்பவில்லை முடிவில் பூஜ்ஜியம் தான்
  • நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁
  • மேலைத்தேயவர்கள் அரசியல் இனம் மதம் பொருளாதாரம் என்பவற்றை ஒரே கோட்பாட்டில் வைத்து திறம்பட கையாண்டு வெற்றி பெறுகின்றார்கள். இந்தியா இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அந்த திறமை அறவே இல்லை. வெள்ளையனே வெளியேறு என்று விட்டு கேடுகெட்ட அரசியல் சாக்கடையில் நீந்துகின்றார்கள் ஆங்கிலேயர் மீண்டும்  படையெடுத்தால் சில அற்புதங்கள் நிகழலாம்.  🤣
  • நான் கட்டுமரத்தையும் நம்ப சொல்லவில்லை. ஆமைக்குஞ்சையும்  நம்ப சொல்லவில்லை. மகிந்தவை பதவிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவியதும்,  இணைத்தலைமை நாடுகளின் அழுத்தங்களை தொடர்சசியாக புறக்கணித்தது உலக வெறுப்புக்கு உள்ளானதும்,  ஐரோப்பிய யூனியன் பிரதிநிதியின் கிளிநொச்சி விஜயத்தின் போது அவரது  நேரடி வேண்டுகோளைக் கூட புறக்கணிதததும், அதன் மூலம்  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றதும் மாவிலறை மூடி ஶ்ரீலங்கா அரசுக்கு உலக அனுதாபம் வரசெய்ததும், இராணுவத்தளபதி மீது தாக்குதல் நடத்தி மறைமுக யுத்த பிரகடனம் செய்ததும்,   கருணாநிதி என்ற சாதாரண  தமிழ் நாட்டு அரசியல்வாதியின் வார்ததை ஜாலத்தை நம்பி என்று புலம் பெயரிகள் சிலர் மக்கள் காதில் பூ சுற்றலாம். ஆனால்  அதை நம்ப மக்கள் அறிவிலிகள் அல்ல. 
  • குவாண்டம் உணர்தல் பானுமதி ந. [வளர்ந்து வரும் தலை சிறந்த தொழில் நுட்பங்கள்- பாகம் 9]   குவாண்டம் கணிணிகள், மேல் நிலையில் உள்ள மனிதர்கள்; குவாண்டம் உணரிகளுக்கு அதற்குச் சமமான அந்தஸ்து கிடைப்பதில்லை. இத்தனைக்கும் இவைகள், தானியங்கி வாகனங்களை ஓரப்பார்வை பார்க்க வைக்கும் இசைக் குயில்கள்; கூர்ந்து பார்த்து நீரடிப் பயணத்தை மேம்படுத்தும் கழுகுகள்; மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழிப்பதைப் போன்ற எரிமலைகளும், அகழ்வாரைத் தாங்கும் நிலம், தாளாது, கம்ப நடுக்கம் கொண்டு வெடிக்கப் போவதையும் முன் உணர்த்தும் சாகுருவிகள்; உடல் உறுப்புகளைப் போல உடன் தொத்தும் ஊடு கதிர் கருவியினையும் எளிதாக எடுத்துச் சென்று மூளையின் தினசரி செயல்பாடுகளை அறிய உதவும் செல்லப் பிராணிகள். இவை எப்படி அமைக்கப்படுகின்றன? பொருட்களின் குவாண்ட இயல்பு தான் அடிப்படை. மாறுபட்ட சக்தி நிலைகளில், மின்னணுக்களின் செயல்திறன்களின் வேறுபாட்டினை அலகாகக் கொண்டு உருவாக்கப்பட்டு பின்னர் அதி நுட்பமாக மேம்படுத்தப் படுகின்றன. இக்கொள்கையினை  அணுக்கடிகாரங்கள் விளக்குகின்றன. உலக தரநிலை நேரமானது, ஒரு விநாடியில், சீசியம் 133 அணுக்களில் உள்ள மின்னணுக்கள், 9,192,631,770 என்ற அளவில் இடம் பெயர்கின்றன என்ற அறிவியல் ஆதாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றக் கடிகாரங்கள் இந்த ஊசலாட்டத்தைப் பின்பற்றி அமைகின்றன. மின்சார, காந்த, புவியீர்ப்புப் புலங்களில் ஏற்படும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளையும், அசைவுகளில் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றங்களையும் அறிவதற்கு, மற்றைய குவாண்டம் உணரிகள், அணு ஓட்டங்களைப் பயன் படுத்துகின்றன.   இவைகளை வேறு முறைகளிலும் உருவாக்க முடியும். உட் பிரதேசம் சார்ந்த புவியீர்ப்பில் நிகழும் சிறிய மாறுதல்களை அளப்பதற்காக, மிகக் குளிரூட்டப்பட்ட, தடையற்று ஈர்க்கப்படும், அணுக்களை உருவாக்குவதற்கு யூ. கே.யிலுள்ள பர்மிங்ஹாம் பல்கலையில் முயன்று வருகின்றனர். இவ்வகையிலான குவாண்டம் ஈர்ப்புமானி, புதைந்துள்ள குழாய்களை, கம்பிவடங்களை, மற்றும் பலப் பொருட்களை பூமியைத் தோண்டாமலே நம்பகமாகக் காட்டிக் கொடுத்து விடும்; ஆனால் இன்று நாம் தோண்டித்தான் அறிகிறோம். கடலில் பயணிக்கும் கப்பல்கள், நீரடிப் பொருட்களை இந்த நுட்பத்தின் மூலம் அறிய முடியும்- என்ன ஒன்று, மற்றொரு டைடானிக் காணக் கிட்டாது! பெரும்பான்மையான குவாண்ட உணரிகள் செலவு பிடிப்பவை, நிறை மிகுந்தவை, சிக்கலானவை; ஆனால், புதிய தலைமுறை உணரிகள் அளவில் சிறியதாய், ஆற்றல் மிக்கதாய், செலவு குறைவானவைகளாய் அமைந்தால் பலப் புதியத் துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். 2019-ல், மாஸச்சூசெட்ஸ் தொழில் நுட்பக் கழக ஆய்வாளர்கள், வழமையான முறைகளில், வைரத்தை அடிப்படையெனக் கொண்ட குவாண்டம் உணரியை, சிலிகான் சிப்பில் பதித்தார்கள். 1 அதன் மூலம், ஒரு மில்லி மீட்டரில், பத்தில் (கிட்டத்தட்ட) ஒரு பங்கு அளவு அகலத்தில், ஒரு சதுரத்திற்குள், பலவகைப்பட்ட நிறை மிகுந்த உட் பொருட்களை கட்டுக்கோப்பாய் அமைக்க முடிந்தது. குறைந்த செலவு, அதிக உருவாக்கம், அறையின் தட்ப வெப்பச் சூழலில் பயன் படும் திறன், ஆகிய அனைத்தும் கொண்ட, இந்த முன் மாதிரியைச் சார்ந்த குவாண்டம் உணரிகள், சக்தி குறைந்த காந்தப் புலங்கள், மற்றும் செம்மையான முறையில் எடுக்கப்பட வேண்டிய அளவுகள் பயன்படும் எந்த ஒரு செயல்பாட்டிலும் உபயோகப்படும் என்பது நற்செய்தி. குவாண்டம் அமைப்புகள் மிக எளிதாகப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதால், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவைகளைப் பயன் படுத்த நேரிடுகிறது. ஆனாலும், அரசுகளும் முதலீட்டாளர்களும் இதை ஒரு கை பார்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள். யூ.கே தனது இரண்டாம்பகுதி  ‘நேஷனல் குவாண்டம் கம்ப்யூடிங் திட்டத்திற்காக’ (2019-2024) 315 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. மருத்துவ மற்றும் இராணுவத் துறைகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி, வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் குவாண்டம் உணரிகள் சந்தைக்கு வரும் என தொழிற்துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். அணுவகத்துகள்களின் விந்தைகள், மிகத் துல்லியமான அளவியல் துறையினை விரைவில் ஏற்படுத்தும். மிகச் சமீபத்தில் அமெரிக்காவின் ஃபெர்மிலேப் ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளது.  ‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது. (The Hindu Dt 11/04/2021 Science & Technology) 2020 நிதி நிலை அறிக்கையில் ரூ.8000 கோடியை குவாண்டம் நுட்பத் தொழிலிற்காகவும், அதைப் பயன் படுத்தும் செயல் முறைகளுக்காகவும் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பிடத் தகுந்த எட்டு தொழில் தொடங்கு நிறுவனங்கள்  குவாண்ட  கணிணி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் ஒன்றான QpiAITeck  குறைகடத்தி செயல் முறையைப் பயன்படுத்தி, அதிகக் குளிர் நிலையில்  செயல்படும் கலவையான சிப்களை வடிவமைக்கிறது. ஒரு மில்லியன் க்யூபிட்ஸ்ஸை ஒரு சிப்பிற்குள் அடக்கும் தொழில் நுட்பத்தில் இது ஈடுபட்டு வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளுக்கு உதவிகரமாக விளங்கும். (https://analyticsindiamag.com/8-top-quantum-technology-startups-in-india/) பெங்களூருவில் உள்ள நிறுவனம் இது. ஒரு க்யூபிட்டின் செயல் திறன் குவாண்டம் நிலைகளின் பகுப்பாய்வைச் சார்ந்திருக்கிறது; அது பின்னலைப் பொருளைச் (Entanglement) சார்ந்திருக்கிறது. இந்தப் பின்னலைப் பொருள் குவாண்டம் நிலைகளை உணர்வதற்கு பயன்படும் ஒன்று. இதன் மூலம் குவாண்டம் உணரிகளை மேம்படுத்தலாம். விஞ்ஞான தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னதிகாரமுள்ள இராமன் ஆய்வுக் கழகம் இம்முயற்சியைச் செய்திருக்கிறது. (https://dst.gov.in/pressrelease/new-test-quantum-coins-computers-quantum-sensing) 1(மிகச் சமீபத்தில் ஒரு கம்பெனி வைர பேட்டரிகள் எனப் பெயரிட்டு 28000 ஆண்டுகள் வரை அவை வேலை செய்யும் எனவும், இவை  அணுக் கழிவுப் பொருட்களில் கதிர் வீச்சினை நீக்கிப் பின்னர் பயன்படுத்தப்படுவதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.) மந்திரம் கோடி இயக்குவோன் நான்;                               இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;                                 தந்திரம் கோடி சமைத்துளோன் நான்;                               சாத்திர வேதங்கள் சாற்றினேன் நான்;                           அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்;                                    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;                                     கண்ட நற் சக்தி கணமெலாம் நான்;                             காரணமாகிக் கதித்துளோன் நான்;                                        நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;                                ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான். – பாரதி _____________ பார்க்க: WEF Top 10 Emerging Technologies Quantum Sensing Author: Carlo Ratti   https://solvanam.com/2021/05/09/குவாண்டம்-உணர்தல்/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.