Jump to content

வணக்கம்...


Recommended Posts

அணை உடையாது; இந்தியா உடையும்

may17_620.jpg

டிசம்பர் 25. இசுரவேல் தேசிய இனப்பேராளி இயேசு பிறந்த நாளாக கருதப்பட்டு உலகின் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடப்படும் நாள். அந்த நாளில் (25.12.2011) மெரீனா கடற்கரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்தியா உடைந்து தனித்தமிழ்நாடு அடையப்போவது உறுதி என்று சூளுரை எடுத்துக்கொண்டனர். அந்த வகையில் வரும் ஆண்டுகளில் டிசம்பர் 25 தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக தமிழர்கள் அனைவரும் நினைவுகூரவேண்டும். ஏனெனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இளைஞர்கள் எழுச்சி பெற்று ஒரே அணியில் நின்றிருந்தது என்பது தமிழ்கூறும் நல்லுகத்திற்கு உவப்பான செய்தி.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் தலைமையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக விழா நாயகர்களாக பேச்சாளர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கதாநாயகர்களாக இருந்தார்கள். ஏனென்றால் ‘இந்தியா உடையும்’ என்று பங்கேற்பாளர்களின் அடிமனதில் இருந்து எழும்பிய ஆவேசமான முழக்கங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கும்முகமாகவே பேச்சாளர்களின் உரை அமைந்தது.

may17_622.jpg

மலையாளிகள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்ற கோபத்தின் எதிரொலியாக பதிலுக்கு ஆங்காங்கே மலையாளிகளின் கடைகளை தமிழர்கள் உடைத்தார்கள் என்றாலும், அதுவே தீர்வாகாது, வரவேற்கத்தகுந்ததும் ஆகாது. நாய் கடிக்கிறது என்பதற்காக பதிலுக்கு நாம் கடிக்க முடியாது. அதிகார மையத்தில் உள்ள மலையாளிகளும், மலையாளிகள் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கும் இந்திய அரசும்தான் தமிழர்களின் எதிரிகளே தவிர அப்பாவி மலையாளிகள் அல்ல.. இதை உரக்கச் சொல்லும் நிகழ்வாக கடற்கரை ஒன்றுகூடல் அமைந்தது. இந்தியா உடையும் என்று பங்கேற்பாளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் முழக்கம் எழுப்பினார்கள். இந்தியா ஏன் உடைய வேண்டும் என்கிற அரசியலை பேச்சாளர்கள் சிறப்பாக விரித்துரைத்தார்கள்.

may17_450.jpg

இந்திய சிறைக்கூடம் உடைய வேண்டும் என்பது ஏதோ நேற்று ஒரு நொடியில் கிளம்பிய முழக்கமல்ல.. பூமிக்கடியில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பாக தமிழக இளைஞர்களின் அடிமனதில் நீண்டகாலமாக அது இருந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு வெடித்துக் கிளம்புவதற்கான அடித்தளத்தை நேற்று மே 17 இயக்கம் அமைத்துக் கொடுத்தது.

தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வைகோ அவர்களே தமிழகத்தின் வருங்கால முதல்வராக வேண்டும் என்று கவிஞர் தாமரை கூறியபோது, கடற்கரையில் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் வின்ணதிர ஆர்ப்பரித்து ஆமோதித்தது. இந்தியா என்கிற அமைப்பு முழுவதும் மலையாளிகள் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கிறது என்கிற அரசியலை மே 17 திருமுருகன், இயக்குநர் தங்கர்பச்சன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது போன்றோர்கள் பார்வையாளர்களுக்கு வகுப்பு எடுத்தனர் என்றே சொல்லலாம்.

பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் என அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களின் வழியில் தமிழ்த் தேசியம் வடிவமைக்கப்படவேண்டும் என்கிற கருத்தினை கவிஞர் அறிவுமதி, வேல்முருகன் போன்றோர் வலியுறுத்தினர். மேலும், ‘திருமாவளவன், வைகோ போன்றோர்கள் இணைந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்கிற ஆவலை கவிஞர் அறிவுமதி வெளிப்படுத்தினர். ‘அன்றாட வாழ்க்கைக்காக தேநீர்க் கடை நடத்தி, குடும்பத்தை ஓட்டிவரும் மலையாளிகள் நமக்கு எதிரிகள் அல்ல… அவர்களை விட்டுவிடுவோம்… கேரளாவுக்கு பொருளாதாரத் தடை ஏற்படுத்தினால் தானாக கேரள அரசியல்வாதிகளும், மலையாளிகளும் வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்று வைகோ பேசியது பக்குவப்பட்ட பேச்சாக இருந்தது.

இந்நிகழ்வு தமிழ்த்தேசியம் என்கிற பேரில் திராவிடத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் கூட்டம் அல்ல என்கிற உண்மையை பார்வையாளர்களின் சட்டையில் இருந்த பெரியார் நமக்கு உணர்த்தினார். கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ‘இனிமேல் தமிழர்களிடம் சாதி இல்லை. தமிழ்ச்சாதியாய் ஒன்றுபட்டு நிற்கிறோம்’ என்றார்கள். அக்கருத்தை உண்மை என்று நிறுவும் வகையில் பல இளைஞர்கள் அம்பேத்கர் படம் பொறித்த சட்டையை அணிந்திருந்தனர்.

may17_621.jpg

பேரணியின் தொடக்கத்தில் ‘அணையை உடைத்தால் இந்தியா உடையும்’ என்பது முழக்கமாக இருந்தது. ஒன்றுகூடல் முடியும்போது, ‘அணை உடையாது; இந்தியா உடையும்’ என்பது முழக்கமாக இருந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இருந்தபோது, ‘இந்தியா உடையும்’ என்ற ஆவேச முழக்கத்தை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகவே பார்க்க முடிகிறது.

ஏழு வருடங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் சுனாமி வந்திருக்கிறது. இந்த சுனாமி இந்திய தேசிய அரசியலை அடித்து தரைமட்டமாக்கப்போகிறது என்பது வரலாறு எழுதப்போகிற உண்மை.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17900:2011-12-26-09-09-25&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

அட போங்கப்பா ஐயாம் சிலீப்பிங்கு ஆள் இல்லாத நேரத்தில் ஆரவாரம் செய்பவர்களை நாளை கவனித்து கொள்ளுவன்..

டிஸ்கி:

சங்கீத வித்துவான் .. சங்கீத பயில்வான்.. தோழர் இசை கலிஞ்சன் அவர்களுக்கா இந்த சாங்குஸ் டேடிகேட்டட்.. ரைட்டு...

http://www.youtube.com/watch?v=BpWCVqgDykE

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_idea:

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

நெய்யாறு அணை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா

img1111227042_1_1.jpg

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறி, அணையின் நீர் தேக்க அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்து தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் கேரள அரசு, புதிய அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை அளிப்போம் என்று பேசி வருகிறது.

ஆனால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் நீர் உரிமையை மறுப்பதுபோல், மற்றொரு அணையிலும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பங்கை அளிக்காமல் துரோகம் இழைத்து வருகிறது கேரள அரசு. அந்த அணையின் பெயர் நெய்யாறு அணை. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளிக்காடு என்ற இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் நதியின் மீது நெய்யாறு அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை 1952ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 58ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இந்த அணை கட்டுமானத்தில் இருந்தபோது மொழி வழியாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் பிரிக்கப்பட, நெய்யாட்டின்கரை தாலுக்கா கேரளத்துடனும், அணையின் தென் பகுதியில் இருந்த விளவங்கோடு தமிழ்நாட்டுடனும் இணைந்தன.

நெய்யாறு அணையில் இருந்து வலப்புறமாக ஒரு கால்வாய் நெய்யாட்டிங்கரை தாலுக்காவிற்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அணையின் இடப்புறமாக உள்ள கால்வாய் விளவங்கோடு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. இரண்டு கால்வாய்களிலும் நெய்யாறு அணையில் இருந்துதான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆனால், நெய்யாடின்கரைக்குச் செல்லும் வலதுபுற கால்வாயில் மட்டும் எப்போதும் தண்ணீரைத் திறந்துவிடும் கேரள அரசு, தமிழ்நாட்டின் விளவங்கோட்டிலுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடுவதில்லை. இந்த ஓரவஞ்சனை குறித்து பல முறை தமிழ்நாடு அரசுத் தலைவர்கள் (நமது நாட்டின் முதல்வர்கள்!) கேரள அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எந்த மரியாதையையும் கேரளா கொடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.

நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் வழக்குரைஞர் விஜயதரணி, இதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசியுள்ளார். நாகர்கோவில் மக்களவையில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மக்களவையில் விதி எண் 377இன் கீழ் நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் விடப்படாத நிலையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எப்போதும் பேனாவும், பேப்பருமாக ஆட்சி செய்த மு.கருணாநிதியும் ஏராளமான கடிதங்களை கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் எழுதித் தள்ளினார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. விளவங்கோடு வறட்சியில்தான் இருக்கிறது.

இதுதான் கேரள அரசின் ‘சகோர மனப்பான்மை’. இப்படிப்பட்ட அரசுதான் புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருமாம். இதை நம்பி தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தமிழ்நாட்டில் ஒரு முதுமொழி உண்டு. கேப்பைக் கூழில் நெய் வடிகிறது என்றால் கேட்டவன் புத்தி எங்கே போனது என்று. கேரள அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தப் பழமொழியை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள்தான் விளக்கிக் கூறி புத்தி புகட்ட வேண்டும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1112/27/1111227042_1.htm

செண்பகவல்லி அணை - கேரள தண்ணீர் மோசடிக்கு மற்றுமோர் உதாரணம்!

08-dam200.jpg

வாசுதேவநல்லூர்: மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி நீர்தேக்கத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தான் இரு மாநில பகுதிகள் வளம் பெற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வலுவான நீர்த்தேக்கங்கள் மன்னராட்சி காலங்களிலும், மக்களாட்சி காலங்களிலும் கட்டப்பட்டன.

இந்த நீர்தேக்கங்களினால் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ஆட்சி மாறி மாறி வரும்போது அடிக்கடி குழப்பங்கள் ஏற்படுவதும், போராட்டங்கள் வலுப்பெறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தரணியெங்கும் போர் பரணி பாடிய தமிழன் அனாதைகளாய், ஆதரவற்றவர்களாய் அண்டை மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும், மிதி பட்டாலும் கேள்வி கேட்க நாதியில்லை. ஏன் தமிழகத்திலேயே தமிழன் ஆட்சி நடக்கும்போது தமிழன் உரிமையை கேட்க உயிர் விடும் சம்பவங்களும் நமக்கு உண்மைகளை உணர்த்ததான் செய்கின்றன.

ஒருபுறம் இப்படி என்றால் மறுபுறம் அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மறந்து இன்று தண்ணீர் அரசியல் நடத்தும் மாநிலங்கள் ஏராளம்.

அதில் முழுக்க முழுக்க தமிழகத்தில் வளரும் ஆடு, மாடுகள், கோழிகள், அரிசிகள் கடலை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள், காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமிண்ட் என அனைத்தையும் நம்பியே வாழ்நாளை கழிக்கும் கேரள மாநிலம் வீணாய் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரை தமிழகத்துக்கு தராமல் சண்டைக் கோழியாய் இருந்து வருகிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரம் நாடறிந்த விஷயம். அதேபோல் தென்மாவட்டத்தில் செண்பகவல்லி அணை நீர்தேக்கம் உடைப்பு சரி செய்யப்படாமல் சுமார் 30 ஆண்டுகளாய், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகி போய் கிடக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் வானம் பார்த்த பூமியாய் வறண்டு போய் கிடக்கிறது.

1706ம் ஆண்டு காலவாக்கி்ல் மதுரை விஜயரெங்க சொக்க நாயக்கர் ஆட்சி காலத்தில் முடிவெடுக்கப்பட்ட திட்டம். காலசக்கரங்கள் சுழற்சியால் 1731-39 கால கட்டத்தில் மீனாட்சி திருமலை நாயக்கர் ஆட்சி மதுரையில் ஏற்பட்டது.

சாந்தா சாகிப் என்ற மன்னனின் பார்வை மதுரை நாயக்கர் ஆட்சியின் மீது பாய்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் தென்பகுதியி்ல் உருவானது. மதுரையில் மீனாட்சி திருமலை நாயக்கர் கைது செய்யப்பட்டார். கொடுமைகள் அரங்கேற தொடங்கியது.

அந்த காலகட்டத்தில்தான் சிவகிரியை தலைமையாக கொண்டு ஆட்சி நடத்திய ஜமீன்தார்-திருவிதாங்கூர் (கேரளா) மன்னரின் உதவியை நாடி இன்றைய நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் செழிப்படையும் வண்ணம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாசுதேவநல்லூர் தலையணை பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி நீர்த்தேக்கம் கட்டிட முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்பின் 1915ம் ஆண்டு வரைப்படம் தயாரிக்கப்பட்டு 1917ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டும் பணி தொடங்கி அன்றைய காலகட்டத்தில் சுமார் 4500 அடிநீளம் அணை கட்டப்பட்டது.

இந்த நீர்தேக்கம் 40 சதுர கிமீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்கு தண்ணீரை தாரை வார்த்தது.

இந்த நீர்த்தேக்கம் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து 15 கண்மாய்கள் மூலம் 12 ஆயிரம் ஆயக்காட்டு பயன் பெற்று வந்த நிலையில் 1965ம் ஆண்டு வாக்கில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டது.

அப்போது நம் பகுதி விவசாயிகள் அதனை கவனிக்காததால் அடுத்தடுத்து வனப்பகுதிகளில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் 1974-80 ஆண்டுகளில் சுமார் 250 அடி பள்ளம் ஏற்பட்டு தமிழகம் நோக்கி வரவேண்டிய தண்ணீர் தீ்ர்த்தபாறை மணல்மேடு வழியாக முல்லை பெரியாறு நோக்கி திசை மாறி பாயத்தொடங்கியது.

தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மாவட்ட விவசாயிகள் அணையின் உடைப்பு மோசமான நிலை ஏற்படுத்தியது கண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணனிடம் முறையிடவே அவர் 1977ல் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் முன்பு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து முதல்வர் எம்ஜிஆர் அப்போதைய பொதுப்பணி துறை அமைச்சர் ராஜாமுகமதுவை அழைத்து நீ்ர்தேக்க உடைப்புப் பகுதிகளை சீரமைக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்காக தமிழக பொதுப்பணித் துறையிடம் இருந்து பணத்தைப் பெற்ற கேரள அரசு, அதன்பின் செண்பகவல்லி நீர்தேக்கம் பழுது பார்க்கும் பணியினை செய்யாமல் கிடப்பி்ல் போட்டது.

இதுகுறித்து 2000ம் ஆண்டில் முன்னாள் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் குழுவினர் திருவனந்தபுரம் சென்று அப்போதைய முதல்வர் நயனார், பொதுப்பணிதுறை அதிகாரிகள் சுப்பிரமணியம், நளினி ஆகியோரை சந்தித்து நினைவூட்டு வந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர்.

அதே போன்று அணை உடைப்பு வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களை எடுத்து கொண்டும் இக்குழுவினர் அப்போதைய தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் துரை முருகனிடம் கொடுத்து கேரள அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப கோரியுள்ளனர்.

அவரும் அப்போதைக்கு சரி என்று கூறிவிட்டு மறந்து விட்டு விட்டார் என்று இப்பகுதி விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்னையை மட்டும் வைத்து காய் நகர்த்தும் தமிழக அரசு இப்பிரச்சனையை அம்போவென விட்டு விட்டது. காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் இத்தொகுதியில் திமுக கூட்டணியினர் வெற்றி பெறவில்லை என்று இப்பகுதியில் கூறப்படுகிறது.

அதேபோன்று தான் இந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் நிகழ்ந்துள்ளதால் தமிழக அரசு முற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

உடைந்த அணையை சீர்செய்ய வேண்டி 33 ஆண்டுகாலமாய் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது கிணற்றில் போட்ட பாறங்கல்லாய் தான் இருக்கிறது.

மேலும் இப்பகுதி விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் நெல்லையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாளில் புகார் செய்தனர்.

ஆனால் கலெக்டரோ தமிழக அரசின் நமக்கு நாமே திட்டதின் மூலம் உடைப்பை சரி செய்து விடலாம், 73 மீட்டர் தான் உடைப்பு உள்ளது. திட்ட மதிப்பீடுகள் பொதுப்பணித்துறை மூலம் தயார் செய்யப்படும் என்றும் கேரள அரசிடம் நம் அரசு மூலம் பேச்சு வார்த்தை நடத்த கோரிக்கை வைப்போம். அதற்கு கேரள அரசு சம்மதம் தெரிவிக்காவிடில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுவோம் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது,

செண்பகவல்லி நீர்தேக்கம் பழுதுபார்க்கப்பட்டால் ஆண்டுக்கு 2500 கனஅடி தண்ணீர் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பகுதிகளிலுள்ள சுமார் 24 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வளம்பெற முடியும்.

ஆனால் அவர்களோ தமிழன் ரத்தத்தை உறிஞ்சி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகின்றனர். கேரளாவின் ஆற்று நீரும், ஏரிநீரும் கடைசியாக கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் தமிழனுக்கு... தமிழகத்துக்கு மட்டும் தண்ணீர் திரும்ப கேரள சம்மதிக்க மறுக்கிறது.

http://tamil.oneindia.in/news/2010/04/08/tamilnadu-kerala-senbagavalli-dam-water-mullai.html

Link to comment
Share on other sites

நாயைப் பிடிக்காதவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்றது? - த்ரிஷா

07-trisha300-6.jpg

திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வரும்... அடுத்த நாளே த்ரிஷா தெலுங்குப் படத்தில் ஒப்பந்தம் என்றொரு செய்தி.

இன்னொரு நாள் த்ரிஷாவுக்கு அமெரிக்க தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் என்ற செய்தி... இன்னும் இரு தினங்களில், தமிழில் விஷாலுடன் புதுப்படத்தில் ஒப்பந்தம் என்ற அறிவிப்பு...

என்னதான் நடக்கிறது? புதிய வாய்ப்புகளைப் பிடிக்க த்ரிஷா கையாளும் உத்தியா... 'கால்ஷீட் வேணும்னா இப்பவே வாங்க... இல்லன்னா கல்யாணம்தான்,' என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா?

த்ரிஷாவிடம் கேட்டால், "ம்ஹூம்... நான் அப்படியெல்லாம் கிடையாது" என்கிறார்.

"இன்னமும் ஓடிப்போய் சான்ஸ் கேட்கும் நிலையிலா நான் இருக்கேன்.... எனக்கான ரோல்களை நான் மட்டும்தான் பண்ணமுடியும். அதனால்தான் என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. கல்யாணம் பண்றது பத்தி இன்னும் முடிவு பண்ணல. என்னைப் புரிந்தவர்தான் எனக்கு கணவனாக முடியும்.

காரணம், எனக்கு நாய்கள்னா ரொம்பப் பிரியம். நிறைய நாய்கள் வளர்க்கிறேன். ஆனால் நாயே புடிக்காத ஒருத்தரைக் கட்டிக்கிட்டு நான் என்ன செய்வேன்... என் லைஃபை அப்புறம் யோசிக்கவே முடியாதே. அதனால சகல விதத்திலும் என்னைப் புரிஞ்சவர்தான் கணவராக இருக்கணும். அப்படியொருத்தரை நான் இன்னும் பார்க்கவே இல்லையே," என்கிறார் த்ரிஷா.

அம்மா...டி!

http://tamil.oneindia.in/movies/interview/2011/12/07-trisha-s-expectation-from-her-man-aid0136.html

என் நாயை நன்றாக கவனித்துக்கொள்பவர்தான்

எனக்கு கணவராக வர முடியும் : நடிகை ஷெரின்

sherin-3.jpg

துள்ளுவதோ இளமை படத்தின் நாயகி ஷெரீன் அபாயம் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வர இருக்கிறார். "டேன்ஜர்" எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் அபாயமாக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

ஷெரீன் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தார். அப்போது, உங்களது காதல் என்னாயிற்று? என நிருபர்கள் கேட்டதற்கு,

எனக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள்? என கேட்டதோடு, என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி பெண் நாய் குட்டி வெண்ணிலா தான் என்றார்.

அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும். மற்றபடி நான் அவரிடம் எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஷெரீன்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67967

எப்பா சாமி நாய் தொல்லை பெருந்தொல்லையாக இருக்கும் போல கிடக்கு.. இதற்கு பேசாம நாய பார்த்துக்க ஆள் வேணும் என விளம்பரம் செய்யலாம்..

டிஸ்கி:

நாயினின்ட ஆயுள் என்னவோ 20 வருடம் தான்...

மத்ததெல்லாம் ஏனு செப்பலேனு.. கிளிப்பு சூஸ்கண்டி.. உசார இருங்கண்டி..

http://www.youtube.com/watch?v=xyMQMD7KCOA

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஈபிடிபியின் ஏற்பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக யாழ் வருகிறார்!

raguman-150x150.jpg

யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா

யாழில் இந்திய கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ்.மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=45702

சும்மா இங்கிட்டு உட்கார்ந்து

கும்தலக்கா

கும்தலக்கா

என இருக்காது..

மேற்கண்ட முகவரிகளுக்கு மெயில் அனுப்புங்கள்..

சில தறுதலைகள் ...இதிலும் வில்லங்கமாக மெயில் அனுப்பிட்டு .. அதையும் இங்கிட்டு எடுத்து போடுங்கள்.. அதுகளை திருத்த இயலாது .. அது ஆரம்பத்திலே கண்டாகிவிட்டது..

உலக பொருளாதார நிபுணர்.. தமிழீழ நிதியமைச்சர் தோழர் அகூதா உதவி.. செய்வார் ..

அதன்படி ஈமெயில் கன்டன்டு பில் செய்து அனுப்புங்கள்..

G – 9, C – Wing, Morya House,

Veera Industrial Zone, Off. New Link,

Andheri (West), Mumbai 400 053, India.

Tel: +91 22 26733056 / +91 22 26733091

Telfax: +91 22 6692 1669

Email: info@arrahmanlive.com / rapport@airtelmail.in

Link to comment
Share on other sites

Contact

For general information, contact:

management@arrahman.com

For legal, publishing or samples, contact:

simonlong@collinslong.com

+44 (0) 207 401 9800

For all other queries, contact:

info@arrahman.com

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=LZqXVEhKp4Q

இது அழகான பாடல்க்ளை ரசிக்கும் தோழர் கறுப்பிக்காண்டி..

அட போங்கப்பா யாருமே இல்லை..

ஐயாம் சிலீப்பிங்கு...

:) :)

Link to comment
Share on other sites

கவிதை எனும் பெயரில்....

நண்பர்களே,

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி

கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;

கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத

கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்

பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி

கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி

கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்

முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட

கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல?

கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

ஆனாலும் முகநூலில் எழுதுகின்றார்;

அவர்பின்னே அறிவிலிகள் ஓடுகின்றார்;

நானாக அவர்கருத்தைச் தேடிச் சென்று

நட்பாகப் பேசுகின்ற வழக்கமில்லை!

அறிந்திடுவீர்; என் குணத்தை எனக்கு என்று

இறுமாப்பு மிகவுண்டு;தமிழை இங்கு

குறைப்படுத்தி எவரேனும்எழுதி என்முன்

குலவுகின்ற மூடமையைத் தவிர்ப்பீராக!

குறிப்பாகக், கவிதை என்று எனது பக்கம்

கூறுதற்கு முனையாதீர்;முனைவீர் என்றால்

செறிவான எழுத்தோடு என்முன் வாரீர்

செழுந்தமிழைச் சேவித்து நட்புக் கொள்வோம்!

இவண்-

கிருஷ்ணன்பாலா

27.12.2011

தோழர் நெல்லையன் அவர்களுக்கு பச்சை குத்தலாம் என்று பார்த்தால் 144 தடை உத்தரவு தடுக்கிறது..

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=32MqDUsBe0Q

எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல பரிசு தொகையில் கழித்துவிட்டு கொடுத்துவிடலாமே..!

:icon_mrgreen: :icon_mrgreen: :lol: :lol:

Link to comment
Share on other sites

இதென்ன தனித் திரி?

ராஜீவ் காந்தி கொலையாளிகள் என்று சொல்லி சிறைத் தண்டனை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை கொடுத்த மாதிரியா?

Link to comment
Share on other sites

தோழர் தப்பிலி

தங்களை தமிழீழ விவசாய துறை கம் உணவு துறை அமைச்சராக நியமனம் செய்கிறேன்..

டிஸ்கி:

தங்களுக்கான மெலோடி சாங்கு..

Link to comment
Share on other sites

நன்றி உரையாடிய தமிழீழ சொந்தங்களுக்கு நாளை இதே பகுதியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் நாளை சந்தப்பம் ..

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

டிஸ்கி:

சூப்பர் பாட்டு கேட்டு தூங்க இணைக்கபடுகிறது...

http://www.youtube.com/watch?v=Gawnd0rN-OY

http://www.youtube.com/watch?v=4yTuJAgxYOI

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தடைகள் போக வரும் புத்தாண்டில் புதுப் புரட்சியாய் புது மனிதனாய் யாழ் வர வாழ்த்துக்கள் தோழா.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... புலியும், சிறுத்தையும்... வேறு ஆட்களா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட சிறுத்தை அரிச் சுவடியிலேயே அசத்துது. :D

வாழ்த்துகள்! :D

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=thWEFvUeTPg

அனைவருக்கும் இணிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நன்றி தோழர் தமிழ்சிறி .. மற்றும் தோழர் சுவி... தங்களுக்கான மெலோடி பாடல்

http://www.youtube.com/watch?v=TsbOUAi8zAE

http://www.youtube.com/watch?v=OKxPTy-qT_E

:icon_mrgreen: :icon_mrgreen:

:) :)

http://www.youtube.com/watch?v=s84u74LTlyc

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை நான் பார்ப்பதில்லை, கருத்துக்களை எழுதுங்கள். சிறுத்தை.

Link to comment
Share on other sites

பாடல்களை நான் பார்ப்பதில்லை, கருத்துக்களை எழுதுங்கள். சிறுத்தை.

கருப்பு கொடி காட்ட வேணும் என்ற தங்களது கோரிக்கை ரொம்ப டச்சிங்கு தோழர் தமிழ்சிறி... :D

http://www.youtube.com/watch?v=vrf9_fmY8fQ

http://www.youtube.com/watch?v=xBgJQMxnY8w

http://www.youtube.com/watch?v=qjd5CN3Dxm4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு கொடி காட்ட வேணும் என்ற தங்களது கோரிக்கை ரொம்ப டச்சிங்கு தோழர் தமிழ்சி

நாம் விடும் கோரிக்கையை மீறி.... யாழ் பல்கலைக் கழகத்துக்கு, முன்னாள் இந்திய ஜனாதிபதி வந்தால்.....

மிகுந்த அவமானத்தை சந்திப்பார். ஏற்கெனவே, முன்னாள் தி.மு.க. ஆட்சியில் கப்பல் துறை அமைச்சர் பாலுவும், கருணாநிதியின் மகள் கனிமொழியும் யாழ் நூலகத்தில் சந்தித்து, சனியன் பட்டம் வாங்கியவர்கள். அப்துல் வந்தால்.... நல்ல பட்டம் காத்திருக்குது. :D:rolleyes:

Link to comment
Share on other sites

நாம் விடும் கோரிக்கையை மீறி.... யாழ் பல்கலைக் கழகத்துக்கு, முன்னாள் இந்திய ஜனாதிபதி வந்தால்.....

மிகுந்த அவமானத்தை சந்திப்பார். ஏற்கெனவே, முன்னாள் தி.மு.க. ஆட்சியில் கப்பல் துறை அமைச்சர் பாலுவும், கருணாநிதியின் மகள் கனிமொழியும் யாழ் நூலகத்தில் சந்தித்து, சனியன் பட்டம் வாங்கியவர்கள். அப்துல் வந்தால்.... நல்ல பட்டம் காத்திருக்குது. :D:rolleyes:

ரோபோ வையை எல்லாம் கணக்கில் எடுத்து பெரிய ஆள் ஆக்கிட வேணாம் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், ஒரு தினிசானவர்கள்.

எந்த, அடக்கு முறைக்கு மத்தியிலும்... தம், குரலை வெளிப்படுத்துபவர்கள்.

வயது போன காலத்தில், அப்துல் கலாம் இதனையும்..... சந்திக்க வேண்டியிருந்தால்... நல்லதுக்கே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.