Jump to content

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?

Recommended Posts

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!

071004d.jpg இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!

இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!

அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! s_anna10.jpg குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு

மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!

இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!

இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!

கலைகள் :

வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்!

வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்! “ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்! champs_elysees_paris.jpg உலகில் அழகான தெரு

அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்!

வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!

வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே!

வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்!

ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்...., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்! இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய?

தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது!

இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது! ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்!

parisCfou.jpg Paris C Fou என்பது இங்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சி! அதனை அழகாகத் தொகுப்பவர் ஃபிரெஞ்சு - இத்தலியன் கலப்பு பெண்ணான மேரி ! ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது!

1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சார்ல்ஸ் து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்! ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்!

நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்!

இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?

ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,

ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்!

http://www.tamilaath...og-post_19.html

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் இணைப்புக்கு. முற்றிலும் உண்மையான ஆக்கம்.

ஒரு நிழல் அரசை மட்டுமல்ல, மேற்குலகத்திற்கு சமாந்தரமாக பலவேறு வழிகளிலும், சில இடங்களில் அவர்களை விட மேலாகவும் புலிகள் ஆட்சி செய்தனர்.

அந்த ஆட்சிக்கு அவர்கள் சர்வதேச அங்கீகாரம் தேடினர். பல மேலை நாடுகளின் தலைவர்களை சந்தித்து தெளிவாக விளங்கப்படுத்தினார். தார்மீக அங்கீகாரத்தையும் கேட்டனர்.

ஆனால், சர்வதேச நாடுகள் பல புரிந்தாலும் சரியான தெளிவான முடிவுகளை சிங்கள பிரச்சாரத்தை மீறி இல்லை இந்தியாவின் அழுத்தத்தை மீறி எடுக்கத்தவறி விட்டன. இதனால் அந்த அரசுடன் மக்கள் மட்டுமல்லாது தமக்கான ஒரு நட்பு நாட்டை ஆசியாவில் உருவாக்கும் சந்தர்ப்பத்தையும் அன்று இழந்துவிட்டன. ஆனால், காலம் இன்னும் கையை விட்டு செல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும்போது உடம்பு புல்லரித்தது...அந்த வாழ்க்கையை நானும் வாழ்ந்திருக்கிறேன்...என் தேசம் என்று நெஞ்சை நிமிர்த்தி வன்னி வீதிகளில் நடந்திருக்கிறேன்...வாசித்து முடிக்கும்போது இவை இன்று எங்களிடம் இல்லையே என்று கண்களில் கண்ணீர் கோடிடுகிறது...

Link to comment
Share on other sites

நன்றி கோமகன். ஆரம்பத்தில் இதென்ன மா பூசியிருக்கிதே என்று நினைத்தேன். பின்னர்தான் புரிந்தது. மோதகம் என்று. நாங்கள் இன்று இப்படித் தாழ்ந்துவிட்டோம் என்று நினைக்கும்போது விழியில் கண்ணீர் முட்டுகிறது. நன்றி.

Link to comment
Share on other sites

கோமகன் அடிமனதில் இருந்திருக்கும் உங்கள் யாழ் பயணத்தின் பின் புகைவிடத்தொடங்கி தற்போது எரிமலை தாக்கமில்லாது அமைதியாக சீறியிருக்கிறது.எப்படியாயினும் விரைவில் உங்களை சந்திப்பேன்.

Link to comment
Share on other sites

வரிக்கு வரி உங்களது சோகம், தவிப்பு, இயலாமை போன்றவற்றை வெளிப் படுத்தியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நீங்கள் பல்வேறு இணைப்புக்களை இணைத்திருப்பீர்கள் ஆனால் என் மனதை தொட்ட இந்த ஆக்கத்தைபோல் வேறுபார்த்ததில்லை என் மனதில் புகைந்து கொண்டிருக்கும் அந்த ஞாபகங்களை மீண்டும் மீட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள்.

ஒரு சின்ன பகிர்வு

நானும் சமாதானகலத்தில் பல தடவைகள் வன்னி சென்றிருந்தேன் ஒவருமுறையும் கொழும்பு போனதும் உடனே வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வன்னிக்கு புறப்படுவேன் நான் பொதுவாக கொழும்பில் நிற்பதில்லை லண்டனில் இருந்தே வடக்கை வானை ஏற்பாடு செய்திடுவேன் அப்படி ஒழுங்கு செய்த வாகனத்தில் நானும் வான் சாரதியும் சென்று தாண்டிக்குளம் தாண்டி ஓமந்தை வன்னி நோக்கி சென்றுகொண்டிக்கையில் முருகண்டியை அன்மிக்கமுன் தமிழீழ காவல்த்துறையின் வேக கட்டுபாட்டுதுறையின் கமராவில் வான் வேகமாக சென்றதாக பதிவாகியிருந்தது அதற்காக தண்டப்பணம் 1000 ரூபா செலுத்தவேன்டுமாம் என்று கூறிய சாரதி கூடவே மேலும் ஒரு 1000 ரூபா கேட்டார் ஏன் எனக்கேட்டேன் அதக்கு அவர் சொன்னார் இவங்கள் விசாரணை என்று கூப்பிட்டால் பெரும் பிரச்சனை 1000 ரூபாவை லஞ்சமாக கொடுத்துபார்ப்பம் என்றார் நான் சொன்னேன் ஏன் நல்ல இயங்கும் காவல் துறையை பழுதாக்கு கின்றீர்கள் என்றேன் அதற்க்கு அவர் சொன்னார் அண்ணை இங்க இதெல்லாம் சகசம் என்று சொன்னார் இது உங்கட வெளிநாடுகள் இல்லை என சொல்லிக்கொண்டே காவல்துறையினரிடம் சற்று துரம் நடந்து போனவர் அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தவர் திரும்பி வானுக்கு வந்தவர் இவங்களை விட ஆமிக்காரர் பரவாயில்லை என்று சொன்னார் ஏன் என வினாவினேன் அவங்கள் வான் டொக்கிமென்ட் கொண்டுவரும்படி சொல்லுறாங்கள் கொழும்பு போகுமுன் கோட்சுக்கு வரவேண்டுமாம் எனக்கு அவர் ஆமி பருவாயில்லை என்று சொன்னது பிடிக்கவில்லை இருந்தாலும் பெரிசாக அவருடன் விவாதிப்பதில்லை என்னெனில் திரும்பி கொழும்பு வரும்போது ஆமியிடம் போட்டு கொடுத்திடுவான் என்ற அச்சம் சரி என்ன என்று கேட்டேன் இப்பபிச்சனை முத்திபோச்சு லஞ்சம் கொடுத்ததுக்கும் பயினாம் என்றால் சாரதி எனக்கு சரியான மகிழ்ச்சி இவளவு நேர்மையான காவல்துறை எமது தமிழ் ஈழகவல்துறை என்று எண்ணி பெருமைபட்டுகொண்டேன்.

Pplusparade.jpg

eelampolice2.jpg

4.jpg

2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோ

நேரமிருக்கும்போது என்னிடமும் சில படங்களும் தகவல்களுமுண்டு

சேர்த்து விடுகின்றேன்

Link to comment
Share on other sites

எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறிவிட்டோம்.

Link to comment
Share on other sites

எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறிவிட்டோம்.

உண்மை. ஆனால், காலம் இன்னும் முழுமையாக கடந்துவிடவில்லை. அடுத்த தலைமுறை எம்மைப்பார்த்து ' நீங்கள் ஏன் மகிந்த அரசை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னால் நிறுத்தாமல் போனீர்கள்?' இல்லை 'ஏன் போர்குற்ற அழுத்தங்கள் ஊடாக ஒரு தீர்வை பெறவில்லை?' என கேட்க இடம் வைக்காத வரலாற்று கடமை எமக்குண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரோடு முருகனை ஒப்பிடுவது என்பது..............

சிலர் குமுறுவதுபோல் தவறாக கூட இருக்கலாம். ஏனெனில் இவர் முருகனைவிட அதிகமாக செய்துள்ளார். (முருகனின் காலத்தில் அதற்கான தேவைகளும் இருக்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிரபாகரன் முருகனுக்கு மேல்

இதைச்சொல்ல எனக்கு இரட்டிப்பு உரிமையுண்டு

ஏனெனில் எனது ஊரில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன்கோயில் எனது பரம்பரையால் கட்டப்பட்டது. அந்தவகையில் முருகன் எனது பரம்பரைக்கடவுள். அந்தவகையில் அவனை முழுமையாக நான் அறிவேன். முருகனுக்கு நிகராக எவரையும் ஏற்பது என்பது எனது பரம்பரையில்முடியாதது. ஆனால் அதையும் தாண்டி நான் ஏற்றிருக்கின்றேன். காரணம் பிரபாகரன் முருகனுக்கு மேல்.

இன்றைய தமிழர் நிலை தொடருமானால் என்னைப்போல் எல்லோரும் இதையே சொல்வர். சில காலங்களின் பின் தலைவர் ஒரு வீரக்கடவுளாக தமிழர்களை மீட்கவந்த கடவுளாக வணங்கப்படக்கூடிய நிலை தோன்றலாம்.

ஓ அதுதான் கடைசியில் கோவணத்தோடு கைவிட்டிருந்தீங்களா....?? இப்பொழுது புரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அதுதான் கடைசியில் கோவணத்தோடு கைவிட்டிருந்தீங்களா....?? இப்பொழுது புரிகிறது

ஏன் நீங்கள் பிரபாகரனின் முழு பாதுகாப்பையும் விசுகு அவர்களிடம் ஒப்படைத்து இருந்தீர்களா?

உள் ரகசியங்களை நாங்கள் அறிய வாய்ப்பில்லை.

உங்களை போன்றவர்கள் எழுதினால் நாமும் அறியலாம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...

உங்கள் இணைப்பிற்கும் ,நேரத்திற்கும் நன்றி கோமகன்.ஆம் மனித குலத்தின் வரலாறு தொடங்கமுதல் நாம் வரலாற்றுடனும்.சீருடனும்.சிறப்புடனும் வாழ்ந்தோம் என்று வரலாறு சொல்கிறது .உங்களுடைய இணைப்பை அதாவது உண்மையான சம்பவத்தை படிக்கும் போது எம் வரலாறின் உண்மைத்தன்மை பூரனப்படுத்தப்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.நிச்சயம் அந்தக்காலம் மீண்டும் வரும்.......

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று!

071004d.jpg இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்!

இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!

அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! s_anna10.jpg குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு

மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!

இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!

இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!

கலைகள் :

வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்!

வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்! “ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்! champs_elysees_paris.jpg உலகில் அழகான தெரு

அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்!

வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!

வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே!

வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்!

ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்...., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்! இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய?

தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது!

இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது! ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்!

parisCfou.jpg Paris C Fou என்பது இங்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சி! அதனை அழகாகத் தொகுப்பவர் ஃபிரெஞ்சு - இத்தலியன் கலப்பு பெண்ணான மேரி ! ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது!

1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சார்ல்ஸ் து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்! ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்!

நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்!

இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?

ஒன்று சொல்லட்டுமா? புலம்பெயர் மக்களின் மனங்களில் இருந்து எவரேனும் பிரபாகரனை அகற்ற நினைத்தால்,முதலில்,

ஐரோப்பாவைத்தான் அழிக்க வேண்டும்!

http://www.tamilaath...og-post_19.html

What did Prabakaran do in Vanni?

| Translated by L.Annadoure

(January 09, Chennai, Sri Lanka Guardian) I have been debating, with an English speaking Frenchman who is a friend of mine, a couple of months ago, about the good and bad things done by the LTTE. I was not proficient enough in French language then to debate matters relating to politics! My friend posed many questions to me regarding the errors committed by Prabakaran! In the course of our conversation I pointed out to him in the following way. ‘We are ready to forget about Prabakaran and we want to live in Peace and tranquility but your country revives the name of Prabakaran often in our minds. These people are not aliens. They are our brothers! Even if a small dust settles on them we will react and agitate!

When my friend heard me having said so he felt a bit shocked! Do you know Prabakaran had administered a shadow Government? That shadow Government was on par with Governments prevailing in western Countries, for instance a Country like France! This statement of mine evoked in him a surprise and he looked at me in wonder. How and in which way?, he asked me very enthusiastically. I set out what all I have told him!

prbha-file.jpg

There used to be published from Vanni

a computer related magazine under the

name of ‘Kuni Nutpham’. Prabakaran’s son

Charles Anton was its editor ! What was to

say of it ? Truly speaking I had not seen any

such a magazine published from Colombo!

If one touched the frontispiece of the said

magazine one’s fingers would feel tickled.

I must tell you at the outset that Prabakaran was running a shadow Government in Vanni! There were certain rigorous rules in Governance and polity. Administration of the territory was analogous to Governments being carried on in European countries! There was no place for graft and bribery. No body ever knew what corruption was! There was no disparity between rich and poor! Institutions while offering jobs to candidates did not conduct interview for its sake, as an eye wash, they neither did receive bribes for offering jobs nor did they offer jobs on recommendation. The scourge of corruption or bribery was not in existence there.

There were no comic scenes enacted by political parties! There were no such thing as there being a political party and its party workers, Goondas who indulge in arson and loot, no burning of buses and setting ablaze cars and one beating the other and dying in the end as it happens in Colombo! Everything was so peaceful as peace prevails in Europe! It has become history that we have bent too low but we have straightened ourselves up.

One must necessarily make a mention of the Eelam police. The dark blue Jeans and light blue shirt worn police force reminds me either French police or London police. The smartness and dignified appearance which could be attributed to French and London police could as well be found in LTTE police force. Would you ever give bribes to Eelam police ? There was no question of ever paying any bribe to Eelam police. Say for instance you have committed a crime and as a consequence of which the LTTE police takes up the matter for investigation and it comes to enquire you and at that time you are extending a 50 Rupee note to them in order to avert enquiry and in that eventuality the very act yours would certainly land you in a dark cell where you would be blinking and squint your eyes to see. These days, the affluence on the part of Western Countries is characterized by plenteous commodities, greater national power and riches and income derived from taxation! Systematic Taxation on income was in prevalence in Eelam. No one would ever think of preparing a false account so as to evade payment of tax on the receipt of income, hoarding unaccounted income which was black money was not possible there. Law and order was such!

Here in France people speak in perfect French. They do not commingle English words with French and speak altogether a different language! If you say that the French language exists in all purity in France and the same can be said of Tamil language which flourish and it is in its pristine nature there in Eelam. There people search for and find the exact terms in Tamil language for all sorts of scientific, Engineering gadgets, household gadgets and put them in use and they speak in perfect Tamil! One can identify Vanni people with their dialect of speech as to where they hail from! But there are several instances that their mother tongue being derided and spoken derogatory of whenever they come in contact with Government Agencies!

I will say with much conviction that Arts flourished excellently well there. A dearth of books? So many songs and lyrics. A good number of lyricists and song composers! Music composers! All of them were extolled and revered by people! A Kilinochchi song writer would be composing a song and a musician will set tune to the song! Then Balasubramnian would have sung that song! Karthick would have sung it! It would be an exciting experience to hear the song! To narrate the greatness of all Arts which flourished and which were fostered by Prabakaran would fill six or seven articles like this one!

When a fierce battle that was fought at the fringes of Vanni during 2007 some artisans and construction workers were engaged in laying a Road which was full of profound artistic work. That was the Tamil Eelam modern High ways and on seeing it one would feel spell bound. One would feel in himself as though he had actually seen Louvre Museum in Paris. Such a beautiful and artistically laid Road.

Near to that Road there came to be established a Zoo under the name Moon Park. There was a hanging bridge and several species of birds and animals! Name boards in Tamil and description in Tamil! It was highly captivating to see them all there! Above all, to venture description of developments made in Department of Medicine and remarkable feats which they did there would fill many articles as this one.

There used to be published from Vanni a computer related magazine under the name of ‘Kuni Nutpham’. Prabakaran’s son Charles Anton was its editor ! What was to say of it ? Truly speaking I had not seen any such a magazine published from Colombo! If one touched the frontispiece of the said magazine one’s fingers would feel tickled. The Departments of printing and Photography used state of Art technology and it is hard to find an analogy anywhere!

How could I say of the Banks that were operating in Vanni? Did you want to find a job in a Bank in Vanni? Had you to pay some lump sum as a bribe to get the job! Confound you! if you were efficient and competent then you were appointed! Not a single paise was needed! I was able to appreciate the meticulousness of every aspect of the structure and management of Banks in Vanni and the Banks as such could compete with and be on par with the Banks operating in European countries. What were other infrastructure that were in Vanni I am very hopeful that other friends of mine would come forward to narrate.

Are you aware? ‘In a small strip of Vanni land there were 7 runways for aircrafts taking off and landing’ the Army said so. Were we to get the land all by our self…..it is needless to say that Vanni land would have become little Europe! When I see the French people love their land with devotion and a patriotism, it naturally evokes in me a sense of love for my country, a love for my language but we are land less. What can we do?

I have placed all my love and trust on this French Nation as I would repose love and trust in my Tamil Eelam land. World’s beautiful road is in France! While walking through these beautiful French Roads I feel that I am walking through Kilinochchi A9 road. When I go to Louvre Museum where Mona Lisa painting is there I am again reminded of Kilinochchi Museum. When I stand at the Concord Park Place situate in the center of France, the image of Moon park in Kilinochchi would flock to my mind. The way in which the cemeteries are being managed and taken care reminds me of ‘Thuilum Illangal’ the resting places of my Gods there.

When I watch a French woman reading news in perfect French in TV, I may not see her romantically. There, the image of Isai Priya reading the news in pure Tamil would pop up in the recess of my mind and while seeing her some tears trickle at the corner of my eyes! In whatever way I see, everything here in France from pillar to chafe reminds me of my land. So, that is the psychological reason behind as to why the names of the Tigers, Tamil Eelam and the name of Prabakaran cannot be erased from the minds of Diaspora.

Paris C Fou is a popular program and the presenter is a woman by name Mary born of French- Italian parents. When ever I hear of news read in respect a French soldier having fallen in battle my heart would palpitate! I used to pay tribute to such fallen hero whose antecedents I do not know! On such occasion I used to slowly sing in my heart the song , ‘a language that has evolved which has become our very breath and aspiring for the day when Tamil will be crowned with laurels.’ These things would occur in my heart as in a reverie.

When Hitler’s Armies occupied France, French General Charles de Gaulle had dispersed to London and established a Government in exile there. This is what is being done by Tamilians. Therefore it is very natural on the part of every Tamilian living in Europe to come to love Eelam land!

Even if we wanted to forget, after coming over here, it becomes very difficult to forget Prabakaran and Tamil Eelam! If any one raises a tirade of abuse against Diaspora Tamils alleging they are warring terrorists such accusations do not create pain in us! We tolerate the accusation!

Here the atmosphere is such that we could not bring ourselves to forget! So we are raising our voice! There we could not try to think. They denounce us .What can we do? Can a say word? In the event of any one trying to remove the name of Prabakaran from the minds of the Diaspora he has to remove the name of Europe firstYour browser may not support display of this image.

இவ் விடயம் 28. 12. 2011, (சனி),தமிழீழ நேரம் 0:25க்கு பதிவு செய்யப்பட்டது.Nerudal.Com

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இவரோடு முருகனை ஒப்பிடுவது என்பது..............

சிலர் குமுறுவதுபோல் தவறாக கூட இருக்கலாம். ஏனெனில் இவர் முருகனைவிட அதிகமாக செய்துள்ளார். (முருகனின் காலத்தில் அதற்கான தேவைகளும் இருக்கவில்லை)

இவ்வளவும் செய்து விட்டு கடைசியில் தன்னையாவது காப்பாற்றிக் கொள்ள விரும்பாமல் தமிழ் மக்களை அனாதரவாக்கிவிட்டுப் போனது சுத்த கேனைத்தனம். முருகனாவது மண்ணாங்கட்டியாவது. தலைவர் செய்தது தியாகமல்ல, தமிழ் மக்களுக்குத் தியாகமென்ற பெயரில் செய்த பெரிய துரோகம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

நீங்கள் எழுதுவது அதீத மிகைப்படுத்தல் என்றாலும் அடிப்படையில் உண்மையே. ஆனாலும் ஒரு உண்மையை வசதியாக மறைத்து விட்டீர்கள். இந்த நிழல்  ஆட்சியின்போது வரி அறவிட்டார்கள். ஆனால் செலவு செய்தவர்கள் யார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியவர்கள் யார். பென்சன் வழங்கியவர்கள் யார் (பிரபாகரனின் தந்தை உட்பட). பள்ளிகள் வைத்தியசாலைகள் இயங்க நிதி வழக்கியவர்கள் யார். வீதி மற்றும் பொது அடிப்படை வசதிகளுக்கு நிதி வழங்கியவர்கள் யார். வயது முதிர்ந்தோர் அகதிகளுக்கு பஞ்சப்படி வழங்கியவர் யார். வன்னியில் இந்தச் செலவுகளை எல்லாம் எதிரி செய்ய வருமானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அரசை நடத்துவதும் கெட்டித்தனமே

நீங்கள் வேண்டுமென்றே ஒன்றை  மறைத்துவிட்டீர்கள்.

அவர்களுக்கு

முப்படையும் இருந்தது

அலுவலகங்கள்

வங்கிகள்

ஏன் காவல்துறையும் இருந்தது

அதற்கு அவர்கள்  சம்பளம்   கொடுத்தார்கள்

இது அவர்களது வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது தானே.

இன்னொன்று 

சிறீலங்கா அரசு  தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே கொடுப்பனவுகளைச்செய்தது.

அதையும் நிறுத்தத்தான்  விருப்பம்

ஆனால் நாடு தனது இல்லை என்றாகிவிடும்.... :(

Link to comment
Share on other sites

சம்பளம் கொடுத்துத்து தான் முப்படை தொடக்கம் புலிகளின் அனைத்து அமைப்புகளும் இயங்கியது  என்ற இன்றுதான் எனக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பளம் கொடுத்துத்து தான் முப்படை தொடக்கம் புலிகளின் அனைத்து அமைப்புகளும் இயங்கியது  என்ற இன்றுதான் எனக்கு தெரியும் .

இந்த லட்சணத்தில்தான் எனக்குதான் எல்லாம் தெரியும் என்று கடந்த 3 வருடமாக எழுதிவருகிறீர்கள்.
இந்த சின்ன விடயத்தையே இன்றுதான் தெரிந்து இருக்கிறீர்கள்.
Link to comment
Share on other sites

நீங்கள் எழுதுவது அதீத மிகைப்படுத்தல் என்றாலும் அடிப்படையில் உண்மையே. ஆனாலும் ஒரு உண்மையை வசதியாக மறைத்து விட்டீர்கள். இந்த நிழல்  ஆட்சியின்போது வரி அறவிட்டார்கள். ஆனால் செலவு செய்தவர்கள் யார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியவர்கள் யார். பென்சன் வழங்கியவர்கள் யார் (பிரபாகரனின் தந்தை உட்பட). பள்ளிகள் வைத்தியசாலைகள் இயங்க நிதி வழக்கியவர்கள் யார். வீதி மற்றும் பொது அடிப்படை வசதிகளுக்கு நிதி வழங்கியவர்கள் யார். வயது முதிர்ந்தோர் அகதிகளுக்கு பஞ்சப்படி வழங்கியவர் யார். வன்னியில் இந்தச் செலவுகளை எல்லாம் எதிரி செய்ய வருமானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அரசை நடத்துவதும் கெட்டித்தனமே

வன்னியில் இருந்த அதிகாரிகள் யார்... ??   ஆசிரியர்கள் ,  கூட்டுறவு ஊளியர்கள்,  வைத்திய அதிகாரிகளே,  நிர்வாக அதிகாரிகள் மட்டும் லாபநோக்கில்லாது சம்பளம் வாங்கிய அதிகாரிகள்... ! 

மற்றும்படி வங்கி ஊளியர்கள் வன்னிமக்களிடம் சேவை செய்யவில்லை மாறாக அடைகு பிடித்து கொண்டார்கள்...   பணம் ஈட்டினார்கள்... 

ஆனால் வன்னிக்குள் இருந்த லாபநோக்கில்லாத  அதிகாரிகளின் தொகை எவ்வளவு எண்று தெரியுமா...??   அவர்களில் எத்தினை பேருக்கு சம்பளம் பாக்கி இருந்தது எண்று தெரியுமா...??  பல ஆசிரியர்கள் தனியார் கல்விநிறுவன வருமானத்தையே நம்பி இருந்த வரலாறுகள் வன்னியிலை இருக்கிறது.. 

கிளிநொச்சி ,  புதுக்குடியிருப்பு வைத்திய சாலைகளில் போதிய மருத்துவரோ தாதியரோ எண்றும் இருந்ததில்லை...  நெருப்பு காய்ச்சலுக்கு கூட அங்கிருக்கும் ஒருவர்  பனடோல் குடுத்து வீட்டுக்கு அனுப்பும் நிலையே இருந்தது...  

அதோடு வன்னியில் நிலவிய கடுமையான பொருளாதார தடைகள் காரணமாக  பொற்றோல் டீசல் கிடையவே கிடையாது..    எதுக்கும் மண்ணெண்ணையே  ஆனாலும் தேவை நாள் ஒண்றுக்கு 100 பரல்கள் எண்று இருந்த போதும்  தாண்டிக்குளமோ பிறகு ஓமந்தையோ தாண்டி வந்தவை வெறும் 40 பரல்கள்...  இது சிறு உதாரணம்... 

பகலில் தான் மாணவர்கள் கல்வி கற்றார்கள் இரவில் எரிக்க மண்ணெண்ணை விலை 200 ரூபா...   இது 400 ரூபா 500 எண்று போன வரலாறுகள் எல்லாம் உண்டு... சாப்பிட கோதுமை மா கூட மட்டுப்படுத்த பட்டே அனுப்ப பட்டது...  

மருந்து பொருட்களை கண்டவர்களை காண்பது அரிது...  செஞ்சிலுவை சங்கம் இலவசமாக கொண்டு வந்து கொடுக்கும் மருந்துகளோடு தான் வைத்திய சாலைகள் நடந்தது...   

மாணவர்கள் கல்வி கற்க தேவையான புத்தகங்கள் அனுப்ப படமாட்டாது,   சீருடைகளுக்கு துணிகளும் இல்லை...  படிப்பதுக்கு விளக்குகள் இல்லை...   பாடசாலைகளில் கதிரைகளோ வாங்குகளோ இல்லை...  பழுதடைந்தால் திருந்த வில்லை... 

இதை எல்லாத்தையும் தாங்கி தான் சுய பொருளாதாரத்தை மூலமாக கொண்டு தமிழீழ நிர்வாகம் கட்டி அமைக்க பட்டது... 

இதில் எதுவும் தெரியாமல் எழுந்த மானத்துக்கு வியாக்கியானம் செய்யும்  பாமரத்தனம் மட்டுமே இங்கே உங்களை போண்ரவர்களிடம் காண முடிகிறது... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.