Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

முள்ளிவாய்க்கால் முடிவு.

shanthy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முடிவு.

அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை.

அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன்.

அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில் நின்றபடி கவிதைகள் எழுதியவள்.

ஊனமுற்ற பின் களத்தைவிட்டு அரசியல்துறையில் இணைக்கப்பட்டாள். அரசியலில் இருந்தவளின் எழுத்தாற்றலை இனங்கண்டு அவளது எழுத்துக்களை ஊக்குவித்தார்கள். அவள் எழுத்துகள் வானொலி பத்திரிகை வரை வியாபிக்கத் தொடங்கியது. போராளிகள் ஒயாத இயங்கு சக்திகள் என்பதற்கு இலக்கணமாய் அவள் இயக்கம் ஒரு பிரிமிப்புத்தான் வெளியாட்களுக்கு.

அது சமாதானக்கதவுகள் திறபட்டதாய் நம்பப்பட்ட யுத்த நிறுத்தகாலம். சிறைகளில் உள்ளவர்களும் தொலைபேசும் வசதிகள் முதல் விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை வசதிகளையும் வன்னிமண் பெற்றிருந்த காலம்.

சிறையில் இருந்தவர்களுடன் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கம்பிகளின் பின் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு மனிதர்களோடு பேசக்கிடைத்த தருணங்களை அவர்கள் வரமாகவே எண்ணினர். அத்தகைய ஒரு அழைப்பில் தான் அவனுடன் பேசக்கிடைத்தது அவளுக்கு. ஆரம்பம் அவன் எழுதிய எழுத்துக்களை அவள் தட்டச்சுச்செய்து வெளியீடுகளுக்கு அனுப்பினாள். தனது நிகழ்ச்சிகளில் சேர்த்தாள். அவன் அக்கா என்றும் இவள் தம்பியென்றும் உருவானது உறவு.

நாட்கள் போகப்போக அக்கா தம்பியுறவு அன்னியமாகியது. ஒருநாள் கதையோடு கதையாக அவன் அவளைக் காதலிப்பதாகத் தனது காதலை தொலைபேசியில் வெளிப்படுத்தினான். அதுவரை காதல் கல்யாணம் எவ்வித சிந்தனையும் அற்றிருந்தவள் திடுக்குற்றுப் போனாள்.

அடுத்த நாள் பொறுப்பாளர் அக்காவிடம் தனியே கதைக்க வேண்டியிருப்பதாய் சந்திப்பு நேரம் கேட்டாள். ஏதோ கொடுக்கப்பட்ட பணிபற்றிக் கதைக்கப் போகிறாள் என்றுதான் பொறுப்பாளரும் நினைத்தார்.

அக்கா…..,அவன் என்னைக் காதலிக்கிறானாம்…..!

பொறுப்பாளருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

என்னடியாத்தை விளையாட்டுக்கும் அளவில்லையோ ?

அக்கா சிரிக்காதையுங்கோ….

உண்மையாத்தான் சொல்றன்……

என்னட்டை முடிவு கேட்டிருக்கிறார்….

உங்கடை சம்மதம் வேணுமெனக்கு….

சரி அவனுக்கு உன்னில காதல்…உனக்கு…? நானும் காதலிக்கிறேன்…..

எடுத்த எடுப்பிலேயே அவள் சொன்னாள்.

இதப்பாரம்மா….,அவன் சிறையில….

நீ வெளியில….

மற்றது உனக்கும் அவனைத் தெரியாது…அவனுக்கும் உன்னைத் தெரியாது…..இது சினிமாமாதிரியில்லையா…?

இது சாத்தியமாகுமோண்டு யோசிச்சீங்களோ ?

நேரை பாத்து விரும்பிச் செய்த கலியாணங்களே எத்தினை தமிழீழ நீதிமன்றத்துக்கு வந்த கதையள் உங்களுக்குத் தெரியுமெல்லோ….?

அவள் பொறுப்பாளரின் விளக்கம் விபரம் எதையும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நின்றாள். தங்கள் காதல் புனிதம் , தூய்மை , தெய்வீகம் , காவியம் என்றெல்லாம் கனக்க விளக்கம் சொன்னாள்.

அந்த முறுகலுக்குப் பின்னர் அந்தப்பிரிவை விட்டு அவள் வேறு பிரிவுக்கு மாறிப்போனாள். காரணம் முகம் தெரியாத குரல்கள் மட்டும் அறிமுகமான காதலைப் பிரிக்க நின்ற பாவம் பொறுப்பாளர் மேல் விழுந்தது. ஆனால் அவளது இலட்சியக்காதலுக்கு பலரது ஆதரவு கிடைத்து அவளும் சிறையில் இருந்த அவனும் காதலர்கள் ஆனார்கள்.

சமாதானப்பறவை இரத்தத்தில் சிதைய யுத்தம் ஆரம்பமாகி பல்லாயிரம் உயிர்கள் இழப்பு காணமற்போனவை கடைசியில் சிதைக்கப்பட்டவையென விடுதலைப்போராட்டத்தின் முடிவு மர்மமாகியது.

2009மேமாதம் அவளும் ஆயிரமாயிரம் பேருடன் சரணடைந்தாள். ஆயிரமாயிரம் துயரங்கள் சுமந்து அவளுக்கும் புனர்வாழ்வு கிடைத்துச் சிறையிருந்து 2010 விடுதலையாகி வெளியில் வந்தாள்.

இலட்சியக்காதலனின் தொடர்பைத் தேடிப்பெற்றுக் கொண்டு அவனுடன் தொடர்பு கொண்டாள். காவியக்காதல்கள் பற்றி புராண இதிகாசங்கள் தோற்றுப் போயிருக்குமென்றுதான் அவளது காதலுக்குத் துணைநின்ற பலர் நினைத்தார்கள்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதல் என்றென்றும் வாழும் சாகாதென்ற சத்தியத்தோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. அவன் வரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் சபதமெடுத்தாள். அவனும் அப்படித்தான் அவளுக்குச் சொன்னான்.

2011வருட ஆரம்பம். புதுப்பிக்கப்பட்ட உறவு மெல்ல மெல்லக் கருகுவது போலிருந்தது அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடியோடு நின்ற நண்பர்களுக்கு.

ஒருநாள் ஒரு வெளிநாட்டுத் தோழி அவளுடன் பேசிய பொழுது அவர்களது காதல்பற்றிக் கேட்டாள் தோழி. அதைப்பற்றி அவள் அக்கறையெடுக்கவில்லை…..

என்னை வெளிநாடு எடுக்க முடியுமெண்டா உதவி செய்தால் நல்லம்….உதவ முடியுமா ? எனக்கேட்டாள்.

தோழிக்குப் பெரிய குழப்பமாகிவிட்டது. இலட்சியக்காதல் இதிகாசக்காதலென்ற தத்துவங்களையெல்லாம் நம்பியிருந்தவள். பச்சைக் கொடி மட்டுமில்லை அவர்களது திருமணத்திற்கு கட்டாயம் எங்கிருந்தாலும் போக வேண்டுமென்றிருந்தவளுக்கு ஆச்சரியம். அவள் சொன்ன காரணங்களுக்கான தனது தரப்புப்பதில்களைத் தோழி சொன்னாள். எதுவும் எடுபடவில்லை.

தகவல் பலமட்டங்களுக்குப் பரிமாறப்பட்டு இலட்சியக்காதலை வெல்ல வைக்கும் பிரயத்தனம் பல பக்கத்தால் நிகழ்ந்தது. எல்லாம் தோற்று கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையை சிறையில் இருந்த அவளது காதலனுடன் ஒருவர் நிகழ்த்தினார். முடிவு சுபமாகுமென நம்பிய யாவரின் நம்பிக்கையும் தோல்வியானது.

அவளுக்குப் புதிய வெளிநாட்டு உறவுகள் உதவிகளாகக் கிடைத்தது. அவர்கள் பற்றி அவளது பழைய நட்புகளுக்குப் பெருமையாய்ச் சொன்னாள். ஆபத்தில் அவளுக்காக உதவியவர்களையெல்லாம் அவள் மறந்தாள் போலிருந்தது நிலமை. உதவுகிறவர்கள் அவளை வெளிநாடு எடுப்பார்கள் அவளுக்கான புதிய நல்வாழ்வைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவள் கனவு காணுகிறாள் என்பதனை மட்டும் புரிய முடிந்தது.

2011 இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் எல்லாம் அந்தச் செய்தி வந்தது. அது இலட்சியக்காதலனின் விடுதலைச் செய்தி. அந்தச் செய்தியை அவளது நட்புகள் பார்த்த போது உண்மையான காதல் தோற்காதென்று நம்பிக்கையை மீண்டும் வளர்த்தார்கள்.

2011வருட இறுதியாகிவிட்டது. இலட்சியக்காதலன் வெளியில் வந்து 5மாதங்கள் ஓடிவிட்டது. காதல் புதுப்பிக்கப்படவுமில்லை முடிவு சுபமாகவுமில்லை. மர்மமானது அந்தக்காதலர்களின் காதல்.

அண்மையில் அந்தக்காதலனின் ஊரவன் ஒருவன் சொன்னான். அவனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக. பெண்யாரெனத் தோழியொருத்தி கேட்டதற்கு அவன் சொன்ன பெயர் அவன் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிக் காத்திருந்த காதலியின் பெயரில்லை.

அப்ப அவேடை காதலின்ரை முடிவு முள்ளிவாய்க்கால் முடிவுதானென்றாள் தோழி. அந்த நண்பனுக்குப் புரியவில்லை.

என்னது ? முள்ளிவாய்க்கால் முடிவு ? முள்ளிவாய்க்காலில என்ன நடந்ததெண்டது ஆருக்கேன் தெரியுமோ ? இல்ல….அது அதுதான் இந்தக்காதலின்ரை முடிவு.

நான் கொஞ்சம் ரியூப்லைட் கொஞ்சம் விளக்கமாச் சொன்னால்….? என அவன் இழுத்தான். எட கேணைப்பயலே முள்ளிவாய்க்காலில அப்பிடி நடந்தது இப்பிடி நடந்தணெ்டு ஆளாளுக்கு அலசுறமெல்லோ ஆருக்காவது உண்மை தெரியுமோ ? தெரியாதெல்லோ ? முள்ளிவாய்க்கால் முடிவோடை சம்பந்தப்பட்டவையைத் தவிர மற்ற ஒரு குருவிக்கும் ஒரு நாசமும் தெரியாது. அதுமாதிரித்தான் நாங்கள் நம்பியிருந்த இந்த இலட்சிய காதல் சோடியைத் தவிர மற்ற ஒருதருக்கும் இலட்சியக்காதல் ஏன் தோற்றதெண்டது தெரியாது. அதுதான் சொன்னன் முள்ளிவாய்க்கால் முடிவு.

19.12.2011

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காதலென்பது 'தெய்வீகமானது' என்று ஒரு தெய்வீகத் தன்மையை நாம் தான் அதற்கு வழங்குகின்றோம்!

காதலும் சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறும் தன்மை கொண்டது!

;மனித மனம்' இயற்கையிலேயே தளம்பும் தன்மை கொண்டது!

தளம்பல் நிலை மட்டும், அவரவர் பக்குவ நிலைகேற்றவாறு, மனச்சாட்சிக்கு ஏற்றவாறு மாறுகின்றது!

கல்யாணங்களில் முடிந்த காதல்களே உடையும் போது, வெறும் காத்திருப்பில் மட்டும் வளர்ந்த காதல் எவ்வாறு தப்பிப் பிழைக்கும்?

முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல சாந்தி!

அது இன்னொரு பாதையின் ஆரம்பப் புள்ளி மட்டும் தான்!

நல்லதோர் கதைக்கு நன்றிகள், சாந்தி!

யதார்த்தத்தை சொல்லி உள்ளீர்கள் புங்கையூரான்...நன்றி சாந்தி அக்கா பகிர்விற்க்கு...

Link to post
Share on other sites

முள்ளிவாய்க்கால் முடிவு.

அவள் அவனுக்காகவே காத்திருக்கிறாள். அவன் வரும்வரை அது எத்தனையாண்டுகள் ஆனாலும் அவள் காத்திருப்பாள். அவன் விடுதலையாகி வெளிவரும் நேரம் ஒரு இலட்சியத்திருமணம் நிகழும் என்றுதான் பலர் சொன்னார்கள். இரண்டு இலக்கிய கர்த்தாக்களின் இணைவு இரண்டு மண்ணை நேசிக்கிற இதயங்களின் இணைவு ஒரு வரலாற்றை எழுதுமென்று அந்தக்காதலுக்குப் பலர் கெளரவ தூதர்களாக இருந்தது பெரிய கதை.

அந்தக்காதலன் புலியில்லை. புலிகளை நேசித்தவன். புலிகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கான முகவராக பணியாற்றியவன். 10ஆண்டுகள் முன் கைதாகி சிறையில் அடைபட்டவன்.

அந்தக்காதலி ஒரு பெண்புலி. 17வயதில் களம் சென்று பயிற்சியெடுத்துக் களங்களில் காவலிருந்து ஒரு காவியம் படைத்த சமரில் காயமுற்று ஊனமடைந்தவள். காவலரணில் நின்றபடி கவிதைகள் எழுதியவள்.

ஊனமுற்ற பின் களத்தைவிட்டு அரசியல்துறையில் இணைக்கப்பட்டாள். அரசியலில் இருந்தவளின் எழுத்தாற்றலை இனங்கண்டு அவளது எழுத்துக்களை ஊக்குவித்தார்கள். அவள் எழுத்துகள் வானொலி பத்திரிகை வரை வியாபிக்கத் தொடங்கியது. போராளிகள் ஒயாத இயங்கு சக்திகள் என்பதற்கு இலக்கணமாய் அவள் இயக்கம் ஒரு பிரிமிப்புத்தான் வெளியாட்களுக்கு.

அது சமாதானக்கதவுகள் திறபட்டதாய் நம்பப்பட்ட யுத்த நிறுத்தகாலம். சிறைகளில் உள்ளவர்களும் தொலைபேசும் வசதிகள் முதல் விஞ்ஞான வளர்ச்சியின் அத்தனை வசதிகளையும் வன்னிமண் பெற்றிருந்த காலம்.

சிறையில் இருந்தவர்களுடன் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கம்பிகளின் பின் கண்ணீரோடு இருந்தவர்களுக்கு மனிதர்களோடு பேசக்கிடைத்த தருணங்களை அவர்கள் வரமாகவே எண்ணினர். அத்தகைய ஒரு அழைப்பில் தான் அவனுடன் பேசக்கிடைத்தது அவளுக்கு. ஆரம்பம் அவன் எழுதிய எழுத்துக்களை அவள் தட்டச்சுச்செய்து வெளியீடுகளுக்கு அனுப்பினாள். தனது நிகழ்ச்சிகளில் சேர்த்தாள். அவன் அக்கா என்றும் இவள் தம்பியென்றும் உருவானது உறவு.

நாட்கள் போகப்போக அக்கா தம்பியுறவு அன்னியமாகியது. ஒருநாள் கதையோடு கதையாக அவன் அவளைக் காதலிப்பதாகத் தனது காதலை தொலைபேசியில் வெளிப்படுத்தினான். அதுவரை காதல் கல்யாணம் எவ்வித சிந்தனையும் அற்றிருந்தவள் திடுக்குற்றுப் போனாள்.

அடுத்த நாள் பொறுப்பாளர் அக்காவிடம் தனியே கதைக்க வேண்டியிருப்பதாய் சந்திப்பு நேரம் கேட்டாள். ஏதோ கொடுக்கப்பட்ட பணிபற்றிக் கதைக்கப் போகிறாள் என்றுதான் பொறுப்பாளரும் நினைத்தார்.

< அக்கா…..,அவன் என்னைக் காதலிக்கிறானாம்…..!

பொறுப்பாளருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

என்னடியாத்தை விளையாட்டுக்கும் அளவில்லையோ ?

அக்கா சிரிக்காதையுங்கோ….

உண்மையாத்தான் சொல்றன்……

என்னட்டை முடிவு கேட்டிருக்கிறார்….

உங்கடை சம்மதம் வேணுமெனக்கு….

சரி அவனுக்கு உன்னில காதல்…உனக்கு…? நானும் காதலிக்கிறேன்…..

எடுத்த எடுப்பிலேயே அவள் சொன்னாள்.

இதப்பாரம்மா….,அவன் சிறையில….

நீ வெளியில….

மற்றது உனக்கும் அவனைத் தெரியாது…அவனுக்கும் உன்னைத் தெரியாது…..இது சினிமாமாதிரியில்லையா…?

இது சாத்தியமாகுமோண்டு யோசிச்சீங்களோ ?

நேரை பாத்து விரும்பிச் செய்த கலியாணங்களே எத்தினை தமிழீழ நீதிமன்றத்துக்கு வந்த கதையள் உங்களுக்குத் தெரியுமெல்லோ….> ?

அவள் பொறுப்பாளரின் விளக்கம் விபரம் எதையும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நின்றாள். தங்கள் காதல் புனிதம் , தூய்மை , தெய்வீகம் , காவியம் என்றெல்லாம் கனக்க விளக்கம் சொன்னாள்.

அந்த முறுகலுக்குப் பின்னர் அந்தப்பிரிவை விட்டு அவள் வேறு பிரிவுக்கு மாறிப்போனாள். காரணம் முகம் தெரியாத குரல்கள் மட்டும் அறிமுகமான காதலைப் பிரிக்க நின்ற பாவம் பொறுப்பாளர் மேல் விழுந்தது. ஆனால் அவளது இலட்சியக்காதலுக்கு பலரது ஆதரவு கிடைத்து அவளும் சிறையில் இருந்த அவனும் காதலர்கள் ஆனார்கள்.

சமாதானப்பறவை இரத்தத்தில் சிதைய யுத்தம் ஆரம்பமாகி பல்லாயிரம் உயிர்கள் இழப்பு காணமற்போனவை கடைசியில் சிதைக்கப்பட்டவையென விடுதலைப்போராட்டத்தின் முடிவு மர்மமாகியது.

2009மேமாதம் அவளும் ஆயிரமாயிரம் பேருடன் சரணடைந்தாள். ஆயிரமாயிரம் துயரங்கள் சுமந்து அவளுக்கும் புனர்வாழ்வு கிடைத்துச் சிறையிருந்து 2010 விடுதலையாகி வெளியில் வந்தாள்.

இலட்சியக்காதலனின் தொடர்பைத் தேடிப்பெற்றுக் கொண்டு அவனுடன் தொடர்பு கொண்டாள். காவியக்காதல்கள் பற்றி புராண இதிகாசங்கள் தோற்றுப் போயிருக்குமென்றுதான் அவளது காதலுக்குத் துணைநின்ற பலர் நினைத்தார்கள்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட காதல் என்றென்றும் வாழும் சாகாதென்ற சத்தியத்தோடு உறவு புதுப்பிக்கப்பட்டது. அவன் வரும்வரை அவள் அவனுக்காகக் காத்திருப்பதாக மீண்டும் சபதமெடுத்தாள். அவனும் அப்படித்தான் அவளுக்குச் சொன்னான்.

2011வருட ஆரம்பம். புதுப்பிக்கப்பட்ட உறவு மெல்ல மெல்லக் கருகுவது போலிருந்தது அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடியோடு நின்ற நண்பர்களுக்கு.

ஒருநாள் ஒரு வெளிநாட்டுத் தோழி அவளுடன் பேசிய பொழுது அவர்களது காதல்பற்றிக் கேட்டாள் தோழி. அதைப்பற்றி அவள் அக்கறையெடுக்கவில்லை…..

என்னை வெளிநாடு எடுக்க முடியுமெண்டா உதவி செய்தால் நல்லம்….உதவ முடியுமா ? எனக்கேட்டாள்.

தோழிக்குப் பெரிய குழப்பமாகிவிட்டது. இலட்சியக்காதல் இதிகாசக்காதலென்ற தத்துவங்களையெல்லாம் நம்பியிருந்தவள். பச்சைக் கொடி மட்டுமில்லை அவர்களது திருமணத்திற்கு கட்டாயம் எங்கிருந்தாலும் போக வேண்டுமென்றிருந்தவளுக்கு ஆச்சரியம். அவள் சொன்ன காரணங்களுக்கான தனது தரப்புப்பதில்களைத் தோழி சொன்னாள். எதுவும் எடுபடவில்லை.

தகவல் பலமட்டங்களுக்குப் பரிமாறப்பட்டு இலட்சியக்காதலை வெல்ல வைக்கும் பிரயத்தனம் பல பக்கத்தால் நிகழ்ந்தது. எல்லாம் தோற்று கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையை சிறையில் இருந்த அவளது காதலனுடன் ஒருவர் நிகழ்த்தினார். முடிவு சுபமாகுமென நம்பிய யாவரின் நம்பிக்கையும் தோல்வியானது.

அவளுக்குப் புதிய வெளிநாட்டு உறவுகள் உதவிகளாகக் கிடைத்தது. அவர்கள் பற்றி அவளது பழைய நட்புகளுக்குப் பெருமையாய்ச் சொன்னாள். ஆபத்தில் அவளுக்காக உதவியவர்களையெல்லாம் அவள் மறந்தாள் போலிருந்தது நிலமை. உதவுகிறவர்கள் அவளை வெளிநாடு எடுப்பார்கள் அவளுக்கான புதிய நல்வாழ்வைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் அவள் கனவு காணுகிறாள் என்பதனை மட்டும் புரிய முடிந்தது.

2011 இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் எல்லாம் அந்தச் செய்தி வந்தது. அது இலட்சியக்காதலனின் விடுதலைச் செய்தி. அந்தச் செய்தியை அவளது நட்புகள் பார்த்த போது உண்மையான காதல் தோற்காதென்று நம்பிக்கையை மீண்டும் வளர்த்தார்கள்.

2011வருட இறுதியாகிவிட்டது. இலட்சியக்காதலன் வெளியில் வந்து 5மாதங்கள் ஓடிவிட்டது. காதல் புதுப்பிக்கப்படவுமில்லை முடிவு சுபமாகவுமில்லை. மர்மமானது அந்தக்காதலர்களின் காதல்.

அண்மையில் அந்தக்காதலனின் ஊரவன் ஒருவன் சொன்னான். அவனுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக. பெண்யாரெனத் தோழியொருத்தி கேட்டதற்கு அவன் சொன்ன பெயர் அவன் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிக் காத்திருந்த காதலியின் பெயரில்லை.

அப்ப அவேடை காதலின்ரை முடிவு முள்ளிவாய்க்கால் முடிவுதானென்றாள் தோழி. அந்த நண்பனுக்குப் புரியவில்லை.

என்னது ? முள்ளிவாய்க்கால் முடிவு ? முள்ளிவாய்க்காலில என்ன நடந்ததெண்டது ஆருக்கேன் தெரியுமோ ? இல்ல….அது அதுதான் இந்தக்காதலின்ரை முடிவு.

< நான் கொஞ்சம் ரியூப்லைட் கொஞ்சம் விளக்கமாச் சொன்னால்….? என அவன் இழுத்தான். எட கேணைப்பயலே முள்ளிவாய்க்காலில அப்பிடி நடந்தது இப்பிடி நடந்தணெ்டு ஆளாளுக்கு அலசுறமெல்லோ ஆருக்காவது உண்மை தெரியுமோ ? தெரியாதெல்லோ ? முள்ளிவாய்க்கால் முடிவோடை சம்பந்தப்பட்டவையைத் தவிர மற்ற ஒரு குருவிக்கும் ஒரு நாசமும் தெரியாது. அதுமாதிரித்தான் நாங்கள் நம்பியிருந்த இந்த இலட்சிய காதல் சோடியைத் தவிர மற்ற ஒருதருக்கும் இலட்சியக்காதல் ஏன் தோற்றதெண்டது தெரியாது. அதுதான் சொன்னன் முள்ளிவாய்க்கால் முடிவு > .

19.12.2011

உங்கள் பாணியில் வாழ்வின் யதார்த்தங்களைத் தொட்டிருக்கின்றீர்கள் சாந்தி அக்கா . நான் பச்சையில் மாற்றியது , பொறுப்பாளர் கூறியது நிதர்சனமான யதார்த்தம் . நான் இரண்டவது மாநிறத்தில் மாற்றியது , செத்தல் மிளகாய் யதார்த்தம் . எனது மனமார்ந்த பாராட்டுக்கள் . காதோட காதாய் உங்களுக்காவது தெரியுமே , அவை ஏனாம் பிறிஞ்சவை :lol: :lol: ????????????? என்ர பச்சை மை முடிஞ்சு போச்சுது நாளைக்கு போடுறன் சாந்தி அக்கா :) :) :) 1 .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்த வாழ்க்கையில் காதல் என்பது சிறு பிரச்சினைக்குரியது. சந்தர்ப்ப சூழ்நிலைகேற்ப மனித மனம் மாறுவது இப்பொழுது இயல்பாகி விட்டது. ஆனாலும் இக் கதையில் வரும் இருவருமே காதலுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றே நினைக்க முடிகிறது. காதலும் வீரமும் இணைந்திருந்த ஈழ மண்ணில் இன்று எப்படியாவது நான் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலம் கொடிகட்டிப்பறக்கிறது.

உங்கள் கதை இன்றைய சூழலை விளக்கி நிற்கிறது. பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காதலென்பது 'தெய்வீகமானது' என்று ஒரு தெய்வீகத் தன்மையை நாம் தான் அதற்கு வழங்குகின்றோம்!

காதலும் சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறும் தன்மை கொண்டது!

;மனித மனம்' இயற்கையிலேயே தளம்பும் தன்மை கொண்டது!

தளம்பல் நிலை மட்டும், அவரவர் பக்குவ நிலைகேற்றவாறு, மனச்சாட்சிக்கு ஏற்றவாறு மாறுகின்றது!

கல்யாணங்களில் முடிந்த காதல்களே உடையும் போது, வெறும் காத்திருப்பில் மட்டும் வளர்ந்த காதல் எவ்வாறு தப்பிப் பிழைக்கும்?

முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல சாந்தி!

அது இன்னொரு பாதையின் ஆரம்பப் புள்ளி மட்டும் தான்!

நல்லதோர் கதைக்கு நன்றிகள், சாந்தி!

உண்மைதான் புங்கையூரான். யுத்தம் நடந்த காலப்பகுதியில் இத்தகைய கருத்துகளும் காதலும் உணர்ச்சி மயமாக உருவாகுகிறது. தோல்வியின் பின்னால் ஒவ்வொருவரின் சொந்த வாழ்வும் சுயநலமும் கொள்கை லட்சியங்களையும் தூக்கியெறிய வைக்கிறது. இத்தகையதொரு நிலமைதான் இந்தக்காதலுக்கும் நிகழ்ந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவில்லை ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுபற்றிய எங்களது ஊகங்களையும் முள்ளிவாய்க்கால் என்ற சொல் மூலம் அடையாளப்படுத்தியுள்ளேன்.

முள்ளிவாய்க்காலும் தமிழீழக்கனவும் முடிந்து போகவோ மறந்து போகவோ முடியாதவை. அவை எப்போதும் இருக்கும் நாங்கள் தான் இல்லாது போவோம். எங்காவது ஒரு புள்ளி அனலைக் குடைந்து எழும்பும்.

காதோட காதாய் உங்களுக்காவது தெரியுமே , அவை ஏனாம் பிறிஞ்சவை :lol: :lol:

விடுப்பு அறிய வேணும் ???? :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இக் கதையில் வரும் இருவருமே காதலுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றே நினைக்க முடிகிறது. காதலும் வீரமும் இணைந்திருந்த ஈழ மண்ணில் இன்று எப்படியாவது நான் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலம் கொடிகட்டிப்பறக்கிறது.

காதலும் வீரமும் நிறைந்தது உலகம். ஆனால் ஈழத்தவர்களாகிய நாங்கள் கொஞ்சம் அதிகப்படியாக எங்களிடம் தான் இவ்விரு உணர்வும் அதிகம் என்று ஒரு மாயைக்காட்டி வளர்ந்துவிட்டோம்.

சுயநலமும் என்பதனைவிடவும் காலம் இவர்களை ஏமாற்றிவிட்டது. அவர்களையும் நாங்கள் குற்றவாளியாக்க முடியாது.

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கு காதலி எடுத்த முடிவை குறைவாக நினைக்கவில்லை. சிங்களத்து சிறையில் இருந்த அனுபவத்தின் பின்பு சிங்கள தேசத்தினை விட்டு வெளியே செல்வது தான் நல்லது என முடிவெடுத்திருக்கலாம். முதலில் உயிருடன் நிம்மதியான வாழ்வு தேவை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமுதாயச் சூழ்நிலை அதில் வாழும் மனிதனின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, அப்படியிருக்கும் போது, முள்ளிவாய்கால் கொடுமை எப்படிப்பட்டவரையும் விரக்தி நிலைக்குத் தள்ளியிருக்கும். அங்கே என்ன நடந்தது? யாருக்கும் தெரியாது. அதுபோல்தான் இக்காதல் முடிவும். யாரையும் குற்றம் சொல்ல முடியாது. கதையின் கருவும் முடிவும் பாராட்டத்தக்கது. பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் நடக்காது (வருவார் வரமாட்டார்) ....அதுதான் முள்ளிவாய்க்கால் முடிவு...நல்ல கதை பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உயிருடன் நிம்மதியான வாழ்வு தேவை.

உண்மைதான். நிம்தியான வாழ்வுக்கான முடிவாக அமைந்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

மேலும் கருத்தளித்த செம்பகன், புத்தன் இருவருக்கும் நன்றிகள்.

Link to post
Share on other sites

பெயரில் வெற்றியைக் கொண்ட‌வர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாது

Link to post
Share on other sites
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவுபற்றி சில கள உறவுகள் எழுதியதை பார்த்திருக்கிறேன். அது எங்கே வருகிறது என்பது இதுவரையில் புரியாத புதிராகவே இருந்தது. இன்றொருவர் இன்றைய தேர்வில் உங்கள் கதை வந்தது வாசித்தேன் என இணைப்பையும் மின்மடலிட்டிருந்தார். இப்போதுதான் முகப்பில் அவதானித்தேன்.

தெரிவு செய்த நியானிக்கு நன்றிகள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மியூகோர்மைகோசிஸ்: இந்தியாவில் கோவிட் நோயாளிகளைத் தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ பட மூலாதாரம், GETTY IMAGES சனிக்கிழமை காலை, மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அக்‌ஷய் நாயர், மூன்று வாரங்களுக்கு முன்பு கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்ட 25 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யக் காத்திருந்தார். அறுவை சிகிச்சை அறையின் உள்ளே, காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவர் ஏற்கனவே அந்த நீரிழிவு நோய் பாதிப்புள்ள நோயாளிக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.  அவர் அவரது மூக்கில் ஒரு குழாயைவிட்டு, அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்றான மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றிக் கொண்டிருந்தார். இந்தத் தீவிரமான தொற்று மூக்கு, கண், சில நேரங்களில் மூளையைக்கூட பாதிக்கிறது. அவரின் சிகிச்சை முடிந்ததும், நோயாளியின் கண்ணை அகற்ற டாக்டர் நாயர் மூன்று மணி நேர நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். "அவளுடைய உயிரைக் காப்பாற்ற நான் அவளுடைய கண்ணை அகற்றவேண்டும். அது தான் இந்த நோயின் தன்மை" என்று டாக்டர் நாயர் என்னிடம் கூறினார். கோவிட் -19 இன் கொடிய இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கி வரும் இந்நிலையில், கோவிட் -19 நோயிலிருந்து மீண்ட, மீண்டுகொண்டிருக்கும் நோயாளிகளை "கருப்பு பூஞ்சை" என்றும் அழைக்கப்படும் ஒரு அரிய நோய்த்தொற்று பாதிப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இப்போது தெரிவிக்கின்றனர். மியுகோர்மைகோசிஸ் என்பது என்ன? மியூகோர்மைகோசிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. "இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது" என்கிறார் டாக்டர் நாயர். இது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் நீரிழிவு, புற்று, எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்குக் கூட ஆபத்தை விளைவிக்கக்கூடியது.  50% இறப்பு விகிதத்தைக் கொண்ட இது, தீவிர கோவிட் -19 நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  ஸ்டீராய்டுகள் கோவிட் -19 நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும் போது ஏற்படக்கூடிய சில சேதங்களைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத கோவிட் -19 நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சி மியூகோர்மைகோசிஸ் என்ற நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. "நீரிழிவு உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, கொரோனா வைரஸ் அதை அதிகரிக்கிறது. கோவிட் -19 உடன் போராட உதவும் ஸ்டீராய்டுகள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாகச் செயல்படுகின்றன" என்று டாக்டர் நாயர் கூறுகிறார்.     கொரொனாவின் இரண்டாவது அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான மும்பையில் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர் நாயர் - ஏப்ரல் மாதத்தில் பூஞ்சைத் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 40 நோயாளிகளை ஏற்கனவே தான் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களில் பலர் நீரிழிவு நோயாளிகளாக இருந்ததாகவும் அவர்கள் வீட்டில் இருந்தே கோவிட் -19 ல் இருந்து மீண்டவர்கள் என்றும் கூறுகிறார். அவர்களில் 11 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கண் அகற்றப்பட வேண்டியிருந்தது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய ஐந்து நகரங்களில் உள்ள அவரது ஆறு உடன் பணிபுரிபவர்கள் இத்தகைய தொற்று 58 பேருக்குப் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், கோவிட் -19 இலிருந்து மீண்ட 12 முதல் 15 நாட்களுக்குள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறுப்பிடத்தக்கது.  மும்பையில் பரபரப்பாகச் செயல்படும் சியோன் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களில் 24 பூஞ்சைத் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டனர். முன்னர் இது ஓர் ஆண்டுக்கு ஆறு என்ற அளவில் இருந்தது என்று மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் ரேணுகா பிராடூ தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் இதனால் ஒரு கண்ணை இழந்ததாகவும் ஆறு பேர் உயிரையே இழந்ததாகவும் அவர் கூறுகிறார். அவரது நோயாளிகளில் பெரும்பாலோர் நடுத்தர வயது நீரிழிவு நோயாளிகள், அவர்கள் கோவிட் -19 ல் இருந்து மீண்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். "இப்போதே இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேரைப் பாதிப்பதை நாங்கள் காண்கிறோம். பெருந்தொற்றுக் காலத்தில் இது மேலும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது" என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.  தென்னிந்திய நகரமான பெங்களூரில், கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரகுராஜ் ஹெக்டே இதே போன்ற ஒரு நிகழ்வைக் கூறுகிறார். கடந்த இரண்டு வாரங்களில் அவர் 19 பேருக்கு இந்த மியூகோர்மைகோசிஸ் நோய் பாதித்ததைக் கண்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் இளம் நோயாளிகள் என்றும் சிலரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அறுவை சிகிச்சை கூடச் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.  கடந்த முதல் அலையின் போது ஏற்பட்டதை காட்டிலும் தற்போது ஏற்படும் பூஞ்சை தொற்று வீரியம் நிறைந்ததாகவும், எண்ணிக்கையில் அதிகம் இருப்பதையும் கண்டு வியப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 10க்கும் குறைவான தொற்றுகளே பதிவான நிலையில் இந்த ஆண்டு நிலைமையே வேறு என்கிறார் டாக்டர் நாயர்.  பெங்களூரின் டாக்டர் ஹெக்டே ஒரு தசாப்தமாக ஆண்டுக்கு ஓரிரண்டுக்கு மேல் இந்தத் தொற்று பதிவாகவில்லை என்று கூறுகிறார்.  பூஞ்சை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக மூக்கடைப்பு, மற்றும் மூக்கில் ரத்தம் வழிதல், வீக்கம், கண்ணில் வலி, கண் இமை இறக்கம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, பார்வை மங்குதல் முதல் பார்வை இழப்பு வரை ஏற்படுகிறது. மூக்கைச் சுற்றித் தோலில் கருப்புத் திட்டுகள் தோன்றலாம்.  மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் பார்வையிழப்பு ஏற்படத் துவங்கிவிட்ட கட்டத்தில் தான் சிகிச்சைக்கு வருவதாகவும் அந்தத் தொற்று மூளைக்குப் பரவாமல் தடுக்க, கண்ணை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.  சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் இரு கண்களிலும் பார்வை இழந்துவிடுவதாகவும் சில அரிய சந்தர்ப்பங்களில், நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் தாடை எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடிய ஒரே மருந்து, ஒரு டோஸ் 3,500 ரூபாய் மதிப்பில், எட்டு வாரங்களுக்கு அன்றாடம் நரம்பில் செலுத்த வேண்டிய ஒரு பூஞ்சை எதிர்ப்பு ஊசி மட்டுமே என்று கூறப்படுகிறது.  கோவிட் -19 நோயாளிகளுக்கு - சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் சரியான அளவிலான ஸ்டீராய்டுகள் சரியான காலத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதே பூஞ்சைத் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும் என்று மும்பையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டாக்டர் ராகுல் பாக்ஸி கூறுகிறார். கடந்த ஆண்டில் சுமார் 800 நீரிழிவு கோவிட் -19 நோயாளிகளுக்குத் தாம் சிகிச்சையளித்ததாகவும், அவர்களில் எவருக்கும் பூஞ்சைத் தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். "நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும், மருத்துவர்கள் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்று டாக்டர் பாக்ஸி என்னிடம் கூறினார். "இது மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும் இது தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்பதைக் கூற முடியவில்லை என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவிக்கிறார். "இது திரிபு வைரஸாகத் தோன்றுகிறது, இரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. மேலும் இது குறிப்பாக இளவயதுடையவர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது" என்கிறார் டாக்டர் ஹெக்டே.  அவர் இது வரை பார்த்ததில் மிகவும் இளம் வயது நோயாளி ஒரு 27 வயது இளைஞர். கடந்த மாதம் சிகிச்சையளிக்கப்பட்ட அவர் நீரிழிவு நோயாளி கூட இல்லை. "கோவிட் -19 தொற்று ஏற்பட்ட இரண்டாவது வாரத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரது கண்ணை அகற்ற வேண்டியிருந்தது. இது மிகவும் கொடுமையானது" என்று அவர் கூறுகிறார்.   https://www.bbc.com/tamil/india-57047576
    • உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 
    • சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁 இதுலயும் டூப்பிளிகேட் வருதாம் எண்டு சொல்லுகினமே...உண்மையே?
    • பெடரல் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும். 🤗
    • சரியான திசையிலேயே போகிறது. ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இனப்படுகொலை நடந்தது என்று நிறுவ சரியான சந்தர்ப்பம். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றத்தில் முதல்முறையாக நிறுவ தேவையான சந்தர்ப்பம். மறுவளமாக,  ஒன்ராரியோ உயர்நீதிமன்றம் இது இனப்படுகொலையல்ல என்று தீர்ப்பளித்தால் ... 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.