• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
akootha

லெப். கேணல் அப்பையா அண்ணா

Recommended Posts

மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா

evtu_ltcolappaiyaa.gif

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர்.

மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982-ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் "களத்தில்" என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

"1983ம் ஆண்டு யுூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார்.

அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

நன்றி: விடுதலைப் புலிகள்

http://www.yarl.com/...s/ltcolappaiyaa

Edited by akootha
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நினைவு நாள் வீர வணக்கம்....

Share this post


Link to post
Share on other sites

அப்பையா அண்ணைக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

அப்பையா அன்னைக்கும் மற்றும் இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் வீரவணக்கம்.

Share this post


Link to post
Share on other sites

இவரது மாணவன் நான் இவர் பற்றி பழைய பதிவொன்று

http://www.yarl.com/...pic=11201&st=20

Posted 07 January 2007 - 09:02 PM

appg0.png

நிழலாடும் நினைவுகள்

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக

லெப் கேணல் அப்பையா அண்ணை

அப்பையா அண்ணை புலிகள் இயக்கத்தின் தலைவரிலிருந்து புதிதாய் சேர்ந்த போராளிகள் வரை அவரை அழைப்பது அப்படித்தான் இயக்கங்கள் பல ஆரம்பித்த எண்பதுகளில் இயக்க பெடியள் என்றாலே இருபதுவயது கார இளைஞர்கள் மட்டுமே என்கிற எல்லாரது எண்ணங்களையுமே மாற்றியமைத்து புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே 50 வயதான ஒரு மனிதர் இருந்தார் என்றால் அது அப்பையா அண்ணைதான்.

ஈழ பொராட்ட வரலாற்றில் ஆரம்பங்களில் இலங்கையில் எங்கு கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் மக்களிற்கு புலிகள் இயக்கம் தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் புலிகள் இயக்கத்தினரிற்கோ உடனே ஞாபக்திற்கு வருபவர் அப்பையா அண்ணை காரணம் அண்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளிற்கு எதிராக நடாத்த பட்ட அத்தனை கண்ணி வெடித்தாக்குதல்களிலும் அப்பையா அண்ணையின் பங்கு இருந்தது. 1982ம் ஆண்டு யாழ் காரைநகர் வீதியில் பொன்னாலை பாலத்தில் வைத்து புலிகளால் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதல் ஒன்று சரியாக வெடிக்காததால் இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த தாக்குதல் பற்றி புலனாய்வு செய்ததில் அதில் அப்பையா அண்ணையின் பங்கு இருந்ததை தெரிந்து கொண்டு அன்றிலிருந்து அவரும் அரசபடைகளால் தேடப்பட அவரும் மற்றைய போராளிகள் போல தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளபட்டார்.

ஆனால் புலிகள் மீண்டும் இன்னொரு கண்ணிவெடித்தாக்குதலிற்கு திட்டமிட்டு அதற்கான கண்ணிவெடி மற்றும் வெடிக்கவைக்கும் பொறிமுறைகளை தயாரிக்கும் பணி அப்பையா அண்ணையிடம் ஒப்படைக்கபட்டது.அப்பையா அண்ணையும் அந்த பணியை செய்துமுடித்து விட்டு மற்றைய போராளிகளிடம் அதை ஒப்படைக்கும் போது சொன்னார் சொன்னார் தம்பியவை இந்த முறை பிழைக்காது என்றார். அவர் சொன்னது போலவே அந்த தடைவை பிழைக்கவில்லை1983 ம்ஆண்டு யூலை மாதம் 23 ந் திகதி இரவு 11 மணியளவில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியடியில் இலங்கை வரலாற்றையே புரட்டிபோட்ட அந்த கண்ணி வெடி வெடித்தது.

அந்த தாக்குதலில் அப்பையா அண்ணையும் பங்களித்திருந்தார். அதன்பின்னர் கண்ணிவெடிகள் செய்வது மட்டுமின்றி வெவ்வேறு என்னென்ன வடிவங்களில் எல்லாம் வெடிபொருட்களை பயன்படுத்தி எதிரிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து புதிது புதிதாய் ஏதாவது ஆராச்சிகளில் ஈடுபட்டு கொண்டேயிருப்பார் அது மட்டுமல்ல பல போராளிகளிற்கும் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஊட்டி பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்.அது மட்டுமல்ல போராட்டத்தின் ஆயுதபாவனையில் புதியமுறைகளை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் அவரிடம் இருக்கும்.

இன்று புலிகளின் இராணுவ அணியில் கிட்டு பீரங்கி படையணி குட்டிசிறி மோட்டார் என்று தனி படை பிரிவுகள் இயங்குகின்ற வேளை இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக அப்பையா அண்ணை இருந்தார் என்றாலும் மிகையாகாது. புலிகள் மோட்டார் செல்களை தயாரிக்க தொடங்கிய காலம் அப்பையா அண்ணை மானிப்பாய் பகுதிகளில் இரு ஆயுததொழிற்சாலைகளை நிறுவி கண்ணிவெடிகள் மோட்டார் ஏவும் குளாய்கள் செல்கள் என்று என்று தாயாரிப்பில் இறங்கினார். அந்த காலகட்டங்களில் குறைந்தளவு தொழில் நுட்பவசதிகளுடன் உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இவைகளையெல்லாம் தயாரிக்கவேண்டிய கட்டாயம்.

எனவே எங்கு பழுதடைந்த ( C.T.B ) இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துவண்டிகள் இருந்தாலும் அவற்றை கட்டியிழுத்து வந்து வெட்டி உடைத்து உருக்கி செல்லாக வடிவமைத்து கொண்டு போய் யாழ் கோட்டைபகுதியில் காவல் கடைமையில் இருக்கும் போராளிகளிடம் கொடுத்து சொல்லுவார் இண்டைக்கு யாரோ சிங்களவனுக்கு காலம் சரியில்லை தம்பி அடியடா என்பார் போராளிகளும் அதை வாங்கி செல்லை குளாயில் போட்டு பின்பக்கம் திரியை கொழுத்தி விடுவார்கள் அதுவும் அவை உள்ஊரிலேயெ குறைந்தளவு தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டிருந்ததால் சீறியபடி எழுந்து அங்கும் இங்கும் ஆடியபடிபோய் கோட்டை பகுதிக்குள் விழும் வீழ்ந்ததம் சில வினாடிகளில் வெடித்து சத்தம் கேட்கும் போராளிகளும் அப்பையா அண்ணையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து துள்ளி குதிப்பார்கள்.

சில நேரங்களில் அவை வெடிக்காமலும் போகும் ஆனாலும் சோர்ந்து போக மாட்டார் அடுத்தடைவை வெடிக்கும் என்று போராளிகளிற்கு நம்பிக்கையூட்டிவிட்டு போவார்.யாழில் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் முதன் முதலில் நடந்த கைதி பரிமாற்றம் ஒன்றின் போது அன்றைய புலிகளின் யாழ்மாவட்ட தளபதி கிட்ண்ணாவிடம் யாழ் கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கொத்தளாவளை சொன்னார் நிங்கள் அனுப்பிய அலுமினியம் கோட்டைக்குள் நிறைந்து கிடக்கிறது முடிந்தால் இரண்டு வாகனம் அனுப்புங்கள் எற்றி அனுப்பிவிடுகிறேன் அதுமட்டுமல்ல உங்கள் செல்லுங்கு பயந்து இருபத்தி நாலு மணி நேரமும் ஆமிகாரர் பாவங்கள் பங்கருக்குள்ளையே தான் வாழ்க்கை என்று சொல்லி சிரித்தார்.

ஒரு நாள் மானிப்பாய் வீதியில் தன்னுடைய 90 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு போராளியுடன் போய் கொண்டிருந்தார். அங்கு ஒரு வாகனங்கள் திருத்துமிடத்தின் முன்னால் சில இரும்பு கழிவுபொருட்கள் குவித்து வைக்கபட்டிருந்தது அப்பையா அண்ணை பின்னால் இருந்த போராளியிடம் தம்பிடேய் ஒடிப்போய் கராச்காரரிட்டை அந்த இரும்புகள் தேவையா எண்டுகேள் தேவையில்லாட்டி ஒரு பையிலை அள்ளிகொண்டுவா என்றார்.அந்த போராளியோ அண்ணை எதுக்கு அந்த கறள்பிடிச்ச இரும்புகள் பேசாமல் நடவுங்கோ என்றான் .ஆனால் அவரோ விடுவதாய் இல்லை தம்பி அதுகளை வெட்டி பண்டிக்கை ( பண்டி சாச் என்பது ஒரு கண்ணிவெடியின் பெயர்) போட்டு அடிச்சா ஆமிகாரன் உடைனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கி வருத்தம் வந்து சாவான் என்றார்.

இப்படி தமிழீழத்தின் பகுதிகளில் கிடைத்த சிறிய ஆணிகள் கம்பிகள் இரும்புகள் என்று எல்லாவற்றையுமே எதிரிக்கு எதிராய் எப்படி திருப்பலாம் என்று சிந்தித்து செயல்பட்டவர். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் புலிகளிற்கு விமானப்படை ஒன்றை உருவாக்கும் கனவும் ஒன்று அவரிடம் இருந்தது அதற்கான தயாரிப்பு வேலைகளிலும் அவர் இறங்கி இரு விமானங்களையும் தயாரித்திருந்தார் அவையின் பரீட்சாத்தமான பறப்புகள் வெற்றியை தரவில்லை பின்னர் இந்திய படையின் வருகை அவரின் தொடர் முயற்சிக்கு முட்டுகட்டையாக அமைந்து விட்டது மட்டுமல்ல மானிப்பாயில் அமைந்திருந்த இவரது தொழிற்சாலையும் இந்திய படைகளால் தாக்கியழிக்கபட்டது. ஆனாலும் இவரது தொடர் முயற்சியின் பயனாக கிடைத்த பல கண்டுபிடிப்புகளான கண்ணி வெடிகள் கடல்கண்ணிகள் மோட்டார் செல்கள் என்று புலிகள் இயக்கத்தின் போராட்டகாலத்தில் அவைகளிற்கு பெரிதும் உதவியது.

பின்னர் 1997ம் அண்டு யெயசுக்குறு காலப்பகுதியில் அவரது தள்ளாதவயதில் மல்லாவி பகுதியில் வைத்து கடத்திகொண்டுபோய் கொலைசெய்யபட்டார். இன்று புலிகளின் படையணியினர் ஏவியதும் சீறியெழுந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கு தவறாமல் துல்லியமாக எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஆட்லெறி செல்களை பார்க்கும் போது அன்று அப்பையாண்ணை செய்து ஏவியதும் ஆகாயத்தில் ஆடியாடி போகும் அந்த அலுமினிய செல்களையும் அதன் பின்னால் இருந்த அவரது உழைப்பையும் அவரையும் ஒரு கணம் நினைவு கூருவோம்.

Edited by sathiri
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நினைவு நாள், வீர வணக்கங்கள்!

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

அப்பையா அண்ணைக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!

Edited by yarlkavi

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அப்பையா அண்ணைக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சங்கவி ரதனுக்கு  ,பாரட்டுகளும், வாழ்த்துக்களும்👏
  • 20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்ளார்; பிரசாந்தன் அறிவிப்பு August 11, 2020 கனகராசா சரவணன் ஏதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.   தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களபு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக் காரியாயத்தில் இன்று செவ்வாய்க்கிழம (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.   நடந்து முடிந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்கள் 2015 நல்லாட்சி தொடக்கம் மிக தோனையான பாதிப்பை ஏற்பட்டு அபிவிருத்தியிலும் தனித்துவத்திலும் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர். ஆகவே இந்த முறை மக்கள் வழங்கியிருக்கும் செய்தியானது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரமேற்று சி. சந்திரகாந்தன் தலைமையில் முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கி 4 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளனர்.   எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி கொள்கை சாந்தவர்களாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தாங்கள் சார்ந்த கட்சிக்காகவே அரசியல் இருப்புக்காகவே அல்ல என்பதனை வெளிப்படையக புரிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.   அதே போன்று தமிழர்களின் வசமிருந்த கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களிடம் வரவேண்டும் என கிழக்கு மாகாண மக்கள் உறுதியாக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை அந்த மாவட்ட தமிழ் மக்களை நடுக்கடலில் விட என்றும் தயாராகவில்லை. எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்தில்; அம்பாறை திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடும். தமிழர்கள் ஆண்ட சபையை பிள்ளையான் மீண்டும் தமிழர்கள் ஆள்வதற்காக தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றது.   தடுப்பு காவலில் இருக்கின்ற படியினால் பாராளுமன்ற என்ற சிறப்புரிமையின் கீழ் எதிர்வரும் 20 ம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு அவர் செல்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது அந்த நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் பிணைக்கு அப்பால் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பிணையில் விடுதலை செய்யமுடியாது சட்டம் பல போரளிகள் இன்று வரைக்கும் சிறையில் இருக்கின்றனர். ஆனால் முதலமைச்சராக இருந்தவருக்கு பயங்கரவாத தடைச்சட்டம் போடப்பட்டது என்பது மிகவும் வேடிக்குரிய விடயம்.   எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் அவர் வெளிவருவதற்கான அனைத்து விடயற்களும் சட்டப்படி முடிவடைந்துள்ளது அதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மிகவிரைவில் சட்டத்திற்கு முன் அவர் நிரபராதியாக வெளியில் வருவார். ஏன அவர் தெரிவித்தார்.   http://thinakkural.lk/article/61663
  • இரண்டு தடவை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வென்றது சாதனைதானே.😃 எத்தனை பேர் வெட்டி வீழ்த்த முயன்றும் சும் வென்றுதானே உள்ளார்!
  • வாழ்த்துக்கள்!  Rubik’s cube ஒழுங்காக்க நிறைய ஞாபகசக்தி வேண்டும்.