Jump to content

தமிழரின் வாழ்வியல் கருவூலம்


Recommended Posts

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47

அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன் , பிற வழிகளில் வாழ்பவர்களை விடவும் தலை சிறந்தவனாகின்றான் .

எனது பார்வையில்:

கடவுளை அடையவும் , தெரியவும் , :unsure:வேணுமெண்டால் கட்டின மனிசியோட அதற்கேற்ற இலக்கணத்தோடை வாழுறவையளாலை தான் முடியும் :icon_mrgreen: .அப்போ அர்சுனனுக்கு எப்படி கண்ணன் விசுபரூபதரிசனத்தைக் காட்டினார் :o?லொஜிக் இடிக்குதே :icon_idea: .

In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.

Celui qui remplit les devoirs de la vie familiale est le plus grand de tous ceux qui s’efforcent de vaincre les sens.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48

பிறரை அறவழியில் செலுத்தி தானும் அவ்வழியல் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும் .

எனது பார்வையில்:

தன்னனைச் சுத்தி இருக்கிறவையை அவைன்ர வழியில விட்டு , தானும் அறத்தில இருந்து விலத்தாமல் கட்டினவளோடை வாழுற சீவியம் துறவியளின்ர பொறுமையை விட மேலாம் :unsure::unsure: . ம்............. என்னத்தைச் சொல்ல இதைத்தானே நாங்களும் இங்கை செய்யுறம் :lol:விலத்தவே முடியுது :blink::icon_idea: .

Others it sets upon their way, itself from virtue ne'er declines;

Than stern ascetics' pains such life domestic brighter shines.

Il y a plus de mérite au sein de la famille si l’on aide les religieux et si on pratique soi-même la vertu, que dans la vie ascétique.

Link to comment
Share on other sites

  • Replies 336
  • Created
  • Last Reply

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்லற வாழ்கையே ; அதுவே பிறரால் பழிக்கப்படாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும் .

எனது பார்வையில்:

கட்டி நாலைஞ்சு மாசத்தில கோடேறி மற்றவன் காறித்துப்பாமல் ^_^, நம்பி வந்த கட்டின மனிசியோடை சந்தோசமாய் சீவிக்கிற சீவியம் தான் அதி சிறந்தது :icon_mrgreen::):icon_idea: .

The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.

Qu’appelle-t-on vertu? La vie familiale. La vie ascétique n’est bonne que si elle n’est pas blâmée par autrui.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். 50

உலகில் வாழவேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவனனாக வைத்து மதிக்கப்படுவான் .

எனது பார்வையில்:

கட்டின மனிசியோடை ஒற்றுமையா சந்தோசமாய் ஒருத்தன் பூமியில சீவிச்சாலும் :unsure: , வானத்தில வாழுகின்ற தேவர்களில் ஒருத்தரா

கவனிக்கப்படுவார் என்று சொன்னாலும் :o , தேவர்கள் வில்லங்கம் பிடிச்ச ஆக்கள் :icon_mrgreen: .கண்ட இடத்தில நனைச்சு , கண்ட இடத்தில கழுவிற ஆக்கள் ........ :lol:லொஜிக் இடிக்குதே :D:icon_idea: ?

Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

Celui qui mène la vie familiale, bien qu’il vive sur terre, est considéré comme un des dieux qui habitent le ciel.

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - இல்வாழ்க்கைப் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத்துணை நலம் , The Goodness of the Help to Domestic Life ,Bien fait de la Compagne ).

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51

இரக்க குணம் பொருந்தி , கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள் .

என்பார்வை:

விரலுக்கேத்த வீக்கம் எண்டு சொல்லுவினம் :icon_mrgreen: .சும்மா அடுத்த வீடு ,பீ எம் டபுள் யூ வாங்கினால் தானும் வாங்கவேணும் , மங்களம் பவியோன் வீடு

வாங்கினால் தானும் வாங்கவேணும் , 50 பவுணில தாலிக் கொடி போடவேணும் :oஎண்டு அவரை அரையண்டம் பண்ணாமல்,அவர் எடுக்கிற சம்பளத்தில கட்டுச்செட்டாய் குடும்பம் நடத்திறவா தான் அதிசிறந்த மனைவி :lol::icon_idea:.

As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Est compagne, l'épouse qui, unit aux bonnes qualités et conduite inhérentes à la vie familiale, le talent de proportionner les dépenses aux revenus de son mari.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல். 52

இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

என்பார்வை:

ஊதாரித்தனமான ,நல்ல குணமில்லாத தரும்பத்தினி ஒராளுக்கு கிடைச்சால் :unsure::blink:, அவருடைய இல்வாழ்கை சிறப்பில்லாமலும் ,அவருடைய தலையிலை சனி நிரந்தரமாய் நிண்டு டிஸ்க்கோ ஆடுமாம் :o:lol::icon_idea:.

If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

Si l'épouse n'a pas les qualités et conduite d'une bonne ménagère,

la vie familiale quelque prospère qu'elle puisse être, n'est pas heureuse.

Link to comment
Share on other sites

உங்கள் இல்வாழ்க்கையை பற்றிய வரைவிலக்கணம் மிக நன்று. இதனால் வாய்விட்டு, மனம் விட்டு சிரித்தபடியே இக்குறளை படிக்கலாம். தொடரட்டும் தங்கள் குறளோவியம்...

Link to comment
Share on other sites

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடைக? 53

மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயன்ற்தாகும் .

என்பார்வை:

ஒருவனுக்கு நல்ல பண்புகளை உடைய மனைவி கிடைத்தால் :unsure:அவனுக்கு வாழ்கையில் சொர்கவாசல் அகலத் திறந்திருக்கும் :icon_mrgreen:.இதுக்கு எதிர்மாறாக மனைவி கிடைத்தால் :o அவனனை நரகவாசல் இறுக்கி அணைக்கும் :( :( :icon_idea: .

There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

Si l’épouse est vertueuse, que manque-t-il au mari? Et si elle ne l’est pas, que reste-t-il au mari.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின். 54

கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை .

என்பார்வை:

இதிலை ஓரவஞ்சனை செய்யிறார் :unsure:.கற்பு மனைவியிடம் இருந்தால் அது பெருமைக்குரிய விடையமாம் ^_^ ,அப்ப ஆம்பிளையள் :icon_idea:?என்னத்தைச்சொல்ல............... :( .

If woman might of chastity retain, What choicer treasure doth the world contain?

Quel bien meilleur pour un homme, qu’une épouse, infailliblement chaste?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்!

நல்ல அன்பும், கற்பும் பெண்ணிடம் இருந்தாலே போதும், அது அந்த சதியின் பதியை ஒழுக்கக் கேடான எந்தச் சதியில் இருந்தும் காப்பாற்றி விடும்!

Link to comment
Share on other sites

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. 55

கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி , காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ' பெய் ' என்றால் மழையும் பெய்யும்

என்பார்வை:

உண்மையில் இது பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே ஒழிய வேறு ஒன்றும் இல்லை :unsure: .இப்பிடிப்பட்ட மனைவியள் இல்லாததால்தானோ செயற்கைமழை பொழியப்பண்ணீனம் :o:lol::icon_idea: ?

No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!

Que l’épouse qui, sans adorer Dieu, adore seulement son mari,

dise à son réveil: ‘‘qu’il pleuve’’, il pleuvra.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56

கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி , தகுதியமைத்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள் .

என்பார்வை:

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி :unsure::icon_mrgreen:என்றாலும் , ஆம்பிளையளும் இப்பிடி நடந்தாலே அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி என்னும் தென்றல் வீசும் :). இல்லாட்டில் புயல் தான் கண்டியளோ.............. :o:icon_idea: .

who guards herself, for husband's comfort cares, her household's fame,

In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

Celle qui se garde jalousement, qui prend soin de son mari et

qui contribue à leur reputation commune, voilà la femme!

Link to comment
Share on other sites

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை. 57

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் முறை என்ன பயனைச் செய்யும் ? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சாலச் சிறந்தது.

என்பார்வை:

இப்பிடியெல்லாம் , மனைவிமார் அப்படி இருக்கவேணும் , இப்பிடி இருக்கவேணும் என்றெல்லாம் சொல்லிவிட்டு :icon_mrgreen: அந்த சட்டங்களை இயற்றின ஆம்பிளையளுக்கும் ஒரு அடி கொடுக்கிறார் :o . இங்கைதான் ஐயன் நிக்கிறார் :):icon_idea: .

Of what avail is watch and ward? Honour's woman's safest guard.

A quoi sert la garde des femmes dans le gynécée?

La vigilance gardienne de la chasteté de l’épouse est la meilleure.

ெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. 58

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செம்மையாகச் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர்.

என்பார்வை:

அப்ப இந்த உலகிலை ஒண்டுமே கிடையாதா.. :o?இப்பிடிச் சொன்னால் ஒருத்தியும் திருந்தமாட்டாட்டினம்.. :lol:. இப்ப எல்லாம் கெதீல நடக்கவேணும் எண்டு விரும்புகிற உலகம்.. தேவர் உலகம் போகும் வரைக்கும் இந்த மனிசிமார் வெயிற் பண்ணுவினமோ எண்டது ஐமிச்சம்தான்..திருவள்ளுவர் இப்ப இருந்திருந்தால் இதை மாத்தி புருசன்

வீட்டில் மேன்மை பெறுவார்கள் எண்டு பாடியிருப்பார்... :lol::icon_idea: .

If wife be wholly true to him who gained her as his bride,

Great glory gains she in the world where gods bliss abide.

Les épouses qui honorent leur mari seront fort honorées dans le ciel habité par les Dévas.

Link to comment
Share on other sites

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடுநடை. 59

கற்பில்லாத மனைவியைப் பெற்ற ஒருவனால் செருக்குடன் காளை போன்று நடை போட்டு, பகைவர்கள் முன்னால் செல்ல முடியாது.

என்பார்வை:

நல்ல பண்புகளால் அந்தக்குடும்பத்துக்குப் பெருமை சேர்க்காத மனைவி கிடைச்சால் :o ,சிங்கம் சிங்கிளாய்ப் பூனையாகத்தான் நடக்கவேணும் :icon_mrgreen::lol::D:icon_idea: .

Who have not spouses that in virtue's praise delight,

They lion-like can never walk in scorner's sight.

A ceux dont les épouse ne désirent pas la bonne renommée,

fait défaut la démarche haute du lion, devant leurs détracteurs.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு. 60

மனைவியின் நற்பண்பே இல்வாழ்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும் .

என்பார்வை:

எல்லாம் கிடைத்தும் நல்ல மக்கள் அந்த குடும்பத்துக் கிடைக்காட்டி :unsure: ,50 பவுணில தாலிக்கொடி போடாதமாதிரி இருக்கும் :lol::D:icon_idea: .

The house's 'blessing', men pronounce the house-wife excellent;

The gain of blessed children is its goodly ornament.

Avoir une épouse vertueuse est, dit-on, un bien;

avoir de bous enfants est l’ornement de ce bien.

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - வாழ்க்கைத்துணை நலம் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :) :) :) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல் , The Obtaining of Sons ,Procréation des fils ).

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற. 61

பெறுகின்ற செல்வங்களுள் , அறிவுடைய மக்களைப் பெறுவதிலைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை

எனது கருத்து:

எல்லாம் சரி . நல்ல அறிவைக் குடுத்து பிள்ளைகளை வளர்த்தாலும் , அதுகள் பிற்காலத்திலை எங்களை முதியோர் இல்லத்தில் விட்டால் , இந்தப்பிள்ளைகள் சிறந்த பேறுகளா :unsure::o ? என்ற கேள்வியும் எனக்கு வந்து துலைக்குது :icon_mrgreen::icon_idea:.

Of all that men acquire, we know not any greater gain,

Than that which by the birth of learned children men obtain.

De tous les bonheurs, nous ne connaissons pas de plus

grand que celui d’avoir des enfants doués de discernement.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின். 62

மாசற்ர பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது .

எனது கருத்து :

பிள்ளை பிறக்கும்பொழுது வெள்ளையாகத் தான் பிறக்கிது :). ஆனால் , அது வளர்றது மாசடைஞ்ச சூழல் :blink:^_^ .இதில் எப்பெடி நல்லபண்புள்ள பிள்ளையள் வருவினம் ? ஆக , துன்பம் ஏழுதலைமுறை காலத்துக்கு

பொறுக்கத் தேவையில்லை :icon_idea: .

Who children gain, that none reproach, of virtuous worth,

No evils touch them, through the sev'n-fold maze of birth.

Celui qui a des enfants à caractère irréprochable ne sera

pas atteint par le malheur, dans ses sept naissances.

Link to comment
Share on other sites

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும். 63

தம் பொருள் என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களே யாவர்.ஏனெனில் அவர்கள் செய்யும் நற்காரியங்களின் பலன் தந்தையை வந்து சேரும்

எனது பார்வை:

என்னதான் அம்மா அப்பா பிள்ளையளைப் பொத்திப் பொத்தி வளத்தாலும் :icon_mrgreen:, கடைசீல அதுகள் செய்யிற செய்கையளின்ர பலன் எல்லாம் அப்பா அம்மாட்டைத்தான் போகும் :o உதாரணமாய் ,அடுத்த வீட்டுப் பெட்டைக்கு பிள்ளைகளாகிய நீங்கள் கடலை போட்டால் :unsure: , கடிபடுறது இரண்டுபக்க அம்மாவும் அப்பாவும்தான் :icon_idea:.

'Man's children are his fortune,' say the wise;

From each one's deeds his varied fortunes rise.

Les enfants sont dit-on, la richesse du père, parce qu’ils lui transfèrent,

par leurs actes, méritoires tous les Biens qu’ils acquièrent.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ். 64

தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு , பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

எனது பார்வை:

இந்தக் குறளை படிக்க நல்லாய்தான் இருக்கு . ஆனால் , இது வெளிநாட்டுக்கு சரிப்பட்டுவருமா :unsure: ?எனக்கு இதைப் பாக்க எனக்கு அண்மையில நடந்த சம்பவம் ஞாபகம் வருகின்றது . நோர்வேயில தாய் தகப்பன் பிள்ளைக்கு கையால சாப்பாடு குடுக்க ,

கவுன்சில்காறன் வந்து தூக்கிகொண்டு போட்டான் :lol::icon_mrgreen: .இதை பிள்ளை செய்தாலும் தாய் தகப்பனுக்கு நடக்கும் . ஏனெண்டால் இது சுத்தம் சுகாதாரம் சம்பந்தமானது . இதில சென்ரிமன்ற் கலக்கிறது நல்லாயில்லை.............. :D:icon_idea: .

Than God's ambrosia sweeter far the food before men laid,

In which the little hands of children of their own have play'd.

La bouillie préparée par leurs petites mains est plus délicieuse que l’ambroisie.

Link to comment
Share on other sites

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு மிகுந்த இன்பமாகும் .

எனது பார்வை:

ஒரு அம்மா அப்பா அதிகமாகச் சந்தோசப்படுவது தாம்பெற்ற பிள்ளைகளின் உடம்பைக் கட்டிஅணைக்கும்போதும் , அவர்களின் மழலை மொழியைக் காதால் கேட்கும் போது தான் :) .என்றாலும் , அவர்களின் நடத்தைகள் அளவுக்கு அதிகமானால் இனிமையாக இருக்காது ,

கொடுமையாக இருக்கும் :o . உதாரணத்திற்கு சிறுவயதுப் பிள்ளகள் பெரிய ஆட்கள் போலப் பாவனை செய்து கதைப்பது :lol::icon_idea:.

To patent sweet the touch of children dear;

Their voice is sweetest music to his ear.

Toucher le corps des enfants fait les délices du corps,

entendre leurs paroles fait les délices de l’oreille.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். 66

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவரே, " குழலின் இசை இனிது " , " யாழின் இசை இனிது " என்றெல்லாம் கூறுவர் .

எனது பார்வை:

பொதுவாகச் சிறிய பிள்ளைகள் கதைக்கும் பொழுது அதன் பொருள் கிடையாது :icon_mrgreen: .ஆனால் ஒரு இசைக்கருவியை ( யாழ் அல்லது குழல் , மீட்டும் ) பொழுது அட்ச்சர சுத்தமான இசை பிறக்கின்றது :) . ஒரு குழந்தைப் பிள்ளைன்ர குதலை கதையும் முறையாப் பிறக்கின்ற இசைக்கருவியால வாற சத்தமும் ஒண்டா எண்ட கேள்வியும் வருது.

'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,

Who music of their infants' lisping lips have never heard.

Ce sont ceux qui n’ont pas entendu le babillage de leurs enfants qui disent: ‘‘la flute est douce ‘‘la lyre, est douce.’’

Link to comment
Share on other sites

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல். 67

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்.

எனது பார்வை:

ஒரு தந்தையானவனின் கடமை மகனுக்கு எப்படி இருக்கவேண்டும் என்றால் , கற்றவர் அவையில் அவனை முதல் ஆளாகச் செய்யவேண்டும் :blink: .நாங்கள் முதலில் கற்றோர் என்றால் யார் ? என்ற பொருளிற்கும் விடை தேடவேண்டிய அத்தியாவசியம் இருக்கின்றது :unsure:. வெறும் உயர் படிப்பும் , பல்கலைகழக அங்கீகாரமும் ஒருவனை கற்றவன் அல்லது அறிஞனாக்கி விடமுடியுமா ???? :icon_idea: இதில் எனது நிலைப்பாடு என்னவென்றால் , தந்தையானவன் தனது பிள்ளைகளுக்கு அனுபவம் என்ற வாழ்கைப் பாடத்தையும் , பாடசாலை அறிவையும் ஒரேசேரக் கொடுக்க வேண்டும் :).

அப்பொழுதுதான் அவர்கள் பூரணமான அறிவாளர்களாக இருப்பார்கள் . இல்லாவிட்டால் அவர்களது அறிவு வெறும் ஏட்டுச்சுரைக்காயாக இருக்கும் :lol::icon_idea:.

Sire greatest boon on son confers, who makes him meet,

In councils of the wise to fill the highest seat.

Le Bien que fait le père à son enfant, c’est de le rendre habile à tenir le premier rang dans l’assemblée.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

தம் மக்கள் அறிவுடையவராய் இருந்தால் பெற்றோராகிய தங்களுக்கு நன்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நனமையும் , மகிழ்சியும் தருவதாகும்.

எனது பார்வை:

இந்தக் கருத்து வள்வரின் காலத்தில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன் :icon_mrgreen: . ஏனெனில் , இந்தப் பிள்ளைகள் தாம் பெற்ற அறிவினால் இந்தப் பூமிப்பந்தை அளிவின் விளிம்பில் வைத்திருக்கிறார்கள் :o . இவர்களது அறிவானது மனித குலத்திற்கு பெரும் அழிவுகளைத் தான் தந்தது உலகின் வரலாறாக இருந்தபோதிலும் , ஒப்பீட்டளவில் சிறியளவிலேயே இவர்களது அறிவு மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு வழிகோலின :D:icon_idea: .

Their children's wisdom greater than their own confessed,

Through the wide world is sweet to every human breast.

L’érudition des enfants est plus agréable à tous les autres êtres qu’à soi-même.

Link to comment
Share on other sites

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தான் பெற்ற மைந்தனை ,அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள்.

எனது பார்வை:

ஒரு அம்மா பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமந்து தனக்கும் அதற்கும் உயிர்குடுக்கின்றாள் . அந்தக் குழந்தையை இந்தப் பூமிக்கும் , அந்தக் குழந்தை வரக்காரணமானவனுக்கும் அறிமுகப்படுத்துன்றாள் :icon_mrgreen:.அப்பொழுது அவள் அடைகின்ற மகிழ்ச்சியை விட , அந்தக் குழந்தை கல்வியாலும் , ஒழுக்கத்தாலும் நிறைந்தது என்று அறிவுடையோர் சொல்கின்றபொழுதே அந்தத் தாயின் வயிறு குளிர்கின்றது .( பெரிதும் மகிழ்கின்றாள் ) .இந்தக் குறளில் வள்ளுவர் ஏன் ஆண்மகன்

என்று மட்டும் குறிப்பிடுகின்றார் :o:blink: ????????அப்போ , அவர் பார்வையில் பெண் மகள் என்ன ? ஆராயவேண்டிய விடையம்...... :unsure:.

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'

Far greater joy she feels, than when her son she bore.

La joie de la mère qui entend proclamer (par les connaisseurs) le savoir de son enfant est plus grande que celle qu’elle a éprouvée, le jour où elle lui a donné naissance.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல். 72

மகன் தந்தைக்குச் செய்ம் கடமை ( பிரதியுபகாரம் ) " இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ " என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும்.

எனது பார்வை:

முன்னைய பகுதியில் , ஒரு அப்பா தனது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பார்த்தோம் . இதில் பிள்ளைகள் தங்களது தந்தைக்கு செய்யவேண்டிய கடமையை தெளிவாகவே வரையறை செய்வோம் :unsure::) . பி்ள்ளைகாளாகிய எங்களது அறிவையும் , ஒழுக்கத்தையும் பார்த்தவர்கள் " எங்களைப் பெறுவதற்கு எமது

அப்பா என்ன தவம் செய்தாரோ " என்று வியந்து பேசும்படியான நிலைக்குக் கொண்டுவரவேணும் . நான் இதில் பால்பேதம் பார்க்கவில்லை , அதனால் தான் பிள்ளைகள் என்று பொதுப்பட அழைக்கின்றேன் :):icon_idea: .

To sire, what best requital can by grateful child be done?

To make men say, 'What merit gained the father such a son?'

La reconnaissance de l’enfant envers son père consiste à faire dire:

‘‘Par quelles austérités, ce père a-t-il pu obtenir un tel fils.

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல் ( மக்கட்பேறு) பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :) :) :) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை , The Possession of Love , L’affection ).

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். 71

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்

எனது பார்வை:

நாங்கள் ஒருத்தரிலை அன்பு வைத்தால் அந்த அன்புக்கு வானமே எல்லையாயிருக்கும் :). அப்படிப்படவருக்கு வாழ்கையில ஏதாவது சந்தோசமோ , துன்பமோ நடந்திதுதெண்டால் எங்களை அறியாமலே கண்ணில தண்ணி வந்து எங்கடை அன்பை மற்றவைக்குக் காட்டிக்கொடுத்துப்போடும் :icon_idea:.

And is there bar that can even love restrain?

The tiny tear shall make the lover's secret plain.

Y a-t-il une targette pour cacher l’affection? Les douces larmes de ceux qui aiment (en voyant la douleur de l’être chéri) révèlent l’affection intérieure.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. 72

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர் . அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்திற்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வர்

எனது பார்வை:

இதுக்கு நல்ல உதாரணமாய் எங்கடை அரசியல்வாதியளைச் சொல்லலாம் :icon_mrgreen: .ஏனெண்டால் இவைக்கு சனத்திலை உண்மையான அன்பு இல்லை . அதாலைதான் அவைன்ர பேரில எக்கச்சக்கம் சொத்துப்பத்து இருக்குது :lol:. ஆனால் எங்கடை மாவீரர்களும் , கரும்புலிகளும் தங்களை விட மக்களிலதான் கூட அன்புவைச்சிருந்தவை :(. இந்தக் குறளுக்கு இதைவிட எனக்கு யோசிக்கத்தெரியேல :(.

The loveless to themselves belong alone;

The loving men are others' to the very bone.

Tout ce que possèdent ceux qui n’aiment pas leur appartient ! chez ceux au contraire, qui aiment, tout appartient au prochain, jusqu’à leurs corps.

Link to comment
Share on other sites

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு. 73

உயிரும் உடம்பும் தொடர்பு கொண்டு ஒன்றாயிருக்கும் உறவானது , அன்போடு பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

எனது அபிப்பிராயம்:

நீங்கள் ஒருத்தரிட்டை அன்பு வைச்சால் மட்டும் காணாது . அந்த அன்பாலை அவருக்கு நீங்கள் என்ன செய்யிறிங்கள் என்பதை வைச்சுத்தான் உங்கடை அன்பின்ரை பெறுமதி இருக்கும் :). இது எப்பிடியெண்டால் , லவ்வேர்ஸ் ஆளாழுக்கு எப்பிடியெல்லாம்

தங்கடை அன்பைக் காட்ட நடந்துகொள்ளுவினம்,அதேமாதிரித்தான்.

Of precious soul with body's flesh and bone,

The union yields one fruit, the life of love alone.

On dit que l’union de l’âme et du corps est un effet de l’affection.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74

தொடர்புடையவரிடம் கொள்ளும் பற்று , தொடர்பு இல்லாதவரிடமும் விருப்பத்தைத் தரும். அவ் விருப்பம் யாவரும் இவர்க்கு நண்பர் என்று கூறத்தக்க அளவிற்கு சிறப்பைத் தரும்.

எனது அபிப்பிராயம்:

எங்களுக்கு ஒரு ஆசை இருக்கு . எல்லாரும் எங்களை நண்பனாய் பழகவேணும் , எங்களை மதிக்கவேணும் எண்டு :icon_mrgreen:. ஆனால் , ஆசை மட்டும் இருந்தால் காணுமே ? முதல்லை நாங்கள் எங்கடை வீட்டிலை எல்லாரையும் நேசிக்க வேணும் . அப்பிடிச் செய்தால் வெளிஆக்களை நேசிக்கவேணும் எண்ட விருப்பம் வரும் , அப்பத்தான் எல்லாரும் எங்களை விரும்பி நட்பாக இருப்பினம் :). அதால வீட்டில நீங்கள் நேசிக்கிறதை வைச்சுத்தான் வெளிஆக்களும் உங்களை விரும்பி நட்பாக

பழகுவினம் :D:icon_idea: .

From love fond yearning springs for union sweet of minds;

And that the bond of rare excelling friendship binds.

L’affection (envers l’épouse et las enfants) engendre le désir (d’aimer le prochain) et procure la gloire incommensurable de l’amitié.

Link to comment
Share on other sites

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ் உலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு அவர் அன்பு உடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர்.

எனது அபிப்பிராயம்:

ஒருத்தர் தன்ரை வாழ்கையிலை செய்யவேண்டிய ஒரே விசையம் , சொந்த விருப்பு வெறுப்பிலாத மானிடநேயம் :) ( அன்பு கொள்ளல் ) . இதை அவர் செய்யாட்டில் அவர் இருந்தும் ஒரு பிரையோசனமும் இல்லை , இடத்தை பிடிச்சுக் கொண்டிருக்கிறதுதான் மிச்சம்

:icon_mrgreen:. எல்லாரிலையும் அன்புவைச்ச ஆள் எண்டால் எனக்கு உடனை ஞாபகம் வாறது ஒராள்தான் , அன்னை தெரேசா :icon_idea:.

Sweetness on earth and rarest bliss above,These are the fruits of tranquil life of love.

La gloire que l’on acquiert au ciel est, dit-on, l’effet de l’affection que l’on a témoignée dans la vie familiale.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை. 76

உண்மை அறியாதவர் சிலர் அன்பு அறத்திற்கே துணையானது என்பர். அறத்திற்கு மாறானவற்றைப் போக்குவதற்கும் அந்த அன்பே துணையாகும்.

எனது அபிப்பிராயம்:

ஒருத்தர் தான தறுமம் செய்ய மட்டும் அன்பு வந்து ஊக்கியாய் இருக்காது . மக்களை நேசிச்சு எங்கடை இனத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பெரிய வீரசாதனைகளைப் படைச்ச எல்லாப் போராளிகளுக்குப் பின்னாலையும் இந்த அன்பு தான் ஊக்கியாய் இருக்கு :). ஆனால் , உலக வரலாற்றில கறுத்த பக்கங்களை உருவாக்கின பல பேர்அரசர்கள் , சக்ரவர்த்திகள் அன்பினால் வந்த வீரச்செயல்களையா செய்தார்கள் ? எண்ட கேள்வியும் வந்து துலைக்குது :(:icon_idea:.

The unwise deem love virtue only can sustain,It also helps the man who evil would restrain.

Les ignorants soutiennent que l’affection est la compagne seulement de la vertu; elle aide aussi à éviter le péché.

Link to comment
Share on other sites

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம். 77

எலும்பு இல்லாத உடல் கொண்ட புழுக்கள் முதலியவற்றை வெயில் வருத்துவது காய்வது போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருந்துவார் .

எனது அபிப்பிராயம்:

ஆர் எந்தப்பெரிய கொம்பனாய் இருந்தாலும் , அவனுக்கு நியாயம் எண்டு ஒரு விசயம் தெரிஞ்சும் , அதைச் செய்யாமல் விட்டால் எண்டைக்காவது ஒரு நாள் அவன்ரை மனச்சாட்சி அவனை அரிச்சே கொண்டுபோடும் :( . உதாரணத்துக்கு , வெடிவால் முளைச்ச வயசில பெடிச்சி ஒண்டுக்கு கடலை போட்டு , அவளோடை இந்த ஊருலகமெல்லாம் சுத்தி ஒரு வாரிசையும் குடுத்துப்போட்டு :o , நல்ல கொழுத்த சீதனத்தோட பசையுள்ள ஒரு பார்ட்டியைக் கலியாணம் கட்டினவர் வாழ்க்கைல நூறு

வீதம் சந்தோசமாய் இருப்பர் எண்டு நினைக்கிறியளே :lol: ? அதுதான் இல்லை!!!!! அவற்ரை மனச்சாட்சி அவரை கொல்லும் கண்டியளோ :icon_idea:.

As sun's fierce ray dries up the boneless things,

So loveless beings virtue's power to nothing brings.

De même que le soleil consume les invertébrés,

la vertu consume ceux qui n’ont pas d’affection.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று. 78

மனதில் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்வது என்பது வலிய பாறை நிலத்தில் ஈரம் வற்றி உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றதாகும் .

எனது அபிப்பிராயம்:

கலியாணம் கட்டினால் ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் அன்பாயும் , நம்பிக்கையோடையும் வாழ்கையைத் தொடங்கவேணும் :) . குடும்பத்தில அன்பு இல்லாட்டி , அது ஒரு வறண்ட ஒண்டுக்கும் உதவாத

பாலைவனம் போல கிடக்கும் :( . அதில ஏதாவது புல்லு பூண்டு

முளைக்குமே ??? முளைக்காது . அப்பிடித்தான் குடும்பத்திலையும்

அன்பில்லாட்டில் நடக்கும் :icon_idea: .

The loveless soul, the very joys of life may know,

When flowers, in barren soil, on sapless trees, shall blow.

La vie familiale, quand il n’y a pas d’affection dans le cœur, ressemble aux arbres désséchés du désert qui bourgeonnent.

Link to comment
Share on other sites

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79

உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெளியிலுள்ள மற்ற உறுப்புகளால் எந்தப்பயனும் உண்டாகாது.

எனது அபிப்பிராயம்:

" அன்பிலாப் பெண்டிர் இட்ட உணவு " :( எண்டு கொடிது வரிசையிலை எங்கடை தமிழ் பாட்டி ஔவையார் பாடியிருக்கிறா . ஒரு விசையத்தை அன்போட செய்யேக்கைதான் அது அழகாய் இருக்கும் :) . அன்பில்லாமல் நீங்கள் எந்த செயலையும் செய்துபாருங்கோ , அசிங்கமாய் இருக்கும் :lol:. இதிலை அதைத்தான் ஐயன் , அன்பை உடம்பின்ரை உறுப்புகளோடை கொண்டுபோய் இணைக்கிறார் :icon_idea: .

Though every outward part complete, the body's fitly framed;

What good, when soul within, of love devoid, lies halt and maimed?

De quelle utilité peuvent être les autres organes extérieurs à ceux qui n’ont pas d’affection dans le cœur.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு. 80

அன்பின் வழி ஒழுகுவாருடைய உடம்புகளே உயிர் நிலைத்து வாழும் உடம்புகளாகும் ; அன்பில்லாதவர்க்குரிய உடம்புகள் எலும்பைத் தோலால் போர்த்து மூடி வைத்துள்ள வெற்றுடம்புகளேயாம்.

எனது அபிப்பிராயம்:

அன்பே சிவம் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம் :). அன்பு இல்லாத ஆக்கள் இருந்தும் ஒண்டுதான் , இல்லாட்டியும் ஒண்டுதான் :(. இதையும் ஐயன் " தோல் மூடின எலும்புக்கூடு " எண்டு , அன்பிலாத ஆக்களை நக்கல் அடிக்கிறார் எண்டால் பாருங்கோவன் :lol::icon_idea:.

Bodies of loveless men are bony framework clad with skin;

Then is the body seat of life, when love resides within.

Le corps où s’épanouit est vivant, mais le corps sans affection est un squelette recouvert du derme.

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - அன்புடமைப் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் ( Cherishing Guests, L’hospitalité ) .

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு. 81

மனைவியோடு வீட்டில் இருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கையெல்லாம் வந்த விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் .

எனது கருத்து :

வீட்டில புருசனாய் இருக்கிறவன் நாலு பொருள் பண்டம் சேர்க்கவேணும் . அது கட்டாயம் செய்யவேணும் :). அது ஏன் எண்டால் வாற விருந்தாளியளை வரவேற்று உபசரிக்கத் தான் :D:icon_idea: All household cares and course of daily life have this in view.

Guests to receive with courtesy, and kindly acts to do.

C’est pour bien accueillir les hôtes et leur être utiles, que l’on vit avec son épouse dans la maison familiale et que l’on converse les Biens.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

ஒருவன் தான் உண்பது சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்தினர் புறத்தே இருக்கத், தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது .

எனது கருத்து :

நீங்கள் வீட்டில நஞ்சைத் தான் தின்னுங்கோ :lol::o . ஆனால் விருந்தளியள் இருக்கேக்கை , கூடவே கூடாது :D.அது நொட்நைஸ்.

Though food of immortality should crown the board,

Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Goûter même le breuvage qui donne l’immortalité, en laissant les hôtes hors la maison est un acte indésirable.

Link to comment
Share on other sites

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று. 83

தன்பால் வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றி வருபவனது இல்வாழ்க்கை வறுமைத் துன்பதால் வருந்திக் கெடுவதே இல்லை.

எனது கருத்து :

இந்தக் குறள் எனக்கு கொஞ்சம் இடிக்குது . விருந்தாளியளை கவனிக்கிறது , சொந்த பந்தம் கூடும் எண்டு நல்ல விசையம் தான் :icon_mrgreen: .ஆனா , இது வள்ளுவற்றை காலத்திலை ஓக்கேயாய் இருக்கலாம் :).

இண்டையான் நிலமைல டெயிலி விருந்தாளிகளை கூப்பிடிறது எண்டால் எங்கை போக :o:rolleyes::icon_idea: ???????????

Each day he tends the coming guest with kindly care;

Painless, unfailing plenty shall his household share.

Le chef de famille qui, honore tous les jours, les hôtes qui viennent à lui, ne souffre pas de la misère et ne se ruine pas.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல். 84

நல்ல விருந்தினரை முகமலர்சியோடு போற்றுபவனது இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்

எனது கருத்து :

நாங்கள் சிலபேற்ரை வீட்டை போனால் அவைன்ரை வாய்தான் சொல்லும் வாங்கோ எண்டு :icon_mrgreen: . ஆனா செய்கையள் , எப்பிடிக் காய்வெட்டாலாம் எண்டு தான் யோசிப்பினம் . நாங்கள் திரும்பிறநேரம் பாத்து முழைங்கையிலை பிடிப்பினம் நிண்டு சாப்பிட்டிட்டுப் போங்கோ எண்டு :lol:. ஆனால் அப்பிடி இல்லாமை உண்மையில வாற விருந்தாளையள நல்லா குளிரப் பண்ணி அனுப்பினால் , உங்கடை வீட்டில செல்வ லெட்சுமியக்கா சந்தோசமாய் குடியிருப்பாவாம் :lol::D:icon_idea: .

With smiling face he entertains each virtuous guest,

'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

La déesse (Latchoumi) habite avec plaisir la maison de celui qui accueille et honore avec la mine rejouie, les hôtes dignes.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.