Jump to content

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

தொடருங்கள். வாழ்த்துக்கள். 1

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு திரி..

மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பேஸ்புக்கில் எல்லாம் இணைத்தால் அதிகம் இளையவர்களைக்கவரக்கூடும். தமிழ் என்றால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டாங்கள். ஆங்கிலம், ப்ரெஞ் சில் இருப்பதால் proverbs போல விரைவில் கவரக்கூடும். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள் அண்ணா. :)

(கொலைவெறி போல பப்ளிசிட்டி பண்ணுங்கப்பா :icon_idea: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோமகன்

தூர நோக்கோடு நீங்கள் செய்யவிருக்கும் திரியை மிகவும் வரவேற்கிறேன்.

குறளையும் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் எழுதினால் நன்று.

அடுத்து முக்கியமாக இதற்கென்று இன்னொரு திரி தொடங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தொடங்கிய திரியில் நீங்கள் மட்டும் தான் பதிய வேண்டும்.மறு திரியில் சக உறவுகள் கருத்தெழுதுவதை வைக்கலாம்.இல்லையென்றால் புதிதாக வாசிப்பவர்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து கொண்டு போக கடைசியில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். தொடக்கத்திலேயே இதற்கான கருத்துக்களை எழுத இங்கே அழுத்தவும் என்று ஒரு சுட்டியை தொடக்கவும்.

நல்ல கருத்து. :)

ஒரு பச்சை..

Link to comment
Share on other sites

கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதில் பதியுங்கள்

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

உங்கள் முயற்சிக்கு நன்றி கோமகன்.

இதில் பிரெஞ்சு மொழியை google மூலம் மொழிபெயர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நுண்ணிய பொருளடக்கத்துடன் உள்ள திருக்குறள் இப்படி மொழிபெயர்க்கும்போது தவறான அர்த்தத்தைத் தரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்

இணையவனுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் வாழ்த்துகள், நல்ல முயற்ச்சி, கீழ் உள்ள இணைப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு & கருத்துடன் உள்ளது, தேவையென்றால் பாவிக்கவும்

http://perthmurugan.org.au/uploads/Thirukkural_with_Meaning.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு முயற்சி, கோமகன்!

தெய்வப் புலவனின் கருத்துக்கள், இந்து மதத்தின் கருத்துக்களில் இருந்து முற்றாக வித்தியாசமான பார்வையுடயவை!

இவர் ஒரு இந்துவாக, சிந்திக்காத படியினால் தான், காலத்தால் அழியாத கருத்துக்களை இவரால் எழுத முடிந்தது!

இவரது முற்போக்கான கருத்துக்களைச் சகிக்க முடியாத, இந்து தத்துவவாதிகள், இவரைப் புலையன் என்று கூட அழைத்துள்ளார்கள்!

இவரது முற்போக்கான கருத்துக்களுக்கு, ஒரே ஒரு உதாரணம்! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இவர் எழுதிய குறள் ஒன்று, இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது!

'சிறை காக்கும் காப்பு எவண் செய்யும்,

மகளிர் நிறை காக்கும் காப்பே தலை!

ஒரு பெண்ணைச் சிறையில் வைத்துப் பாதுகாப்பதிலும் பார்க்க, அவள் தனது மனத்தால் தன்னைப் பாதுகாப்பதே தலை சிறந்தது!

Link to comment
Share on other sites

முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

முறையான அரங்கேற்றத்தில் சோதிக்கபடாத கருணாநிதியின் கோமாளித்தனங்களை, காலம் சோதித்த மணிரத்தினங்களான பரிமேழளகர், ஜி.யு. போப் போன்றவர்களுடையதுடன் இணைப்பது அழகல்ல.

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் கோமகன்... யாழில் நல்லதொரு முயற்சி.

தொடருங்கள். :)6

http://www.tamilvu.org/courses/diploma/c031/c0313/html/c0313102.htm

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி

தொடருங்கள். வாழ்த்துக்கள். 1

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . முதன் முதலாக உங்கள் கையால் குட்டு வாங்கித் தொடங்குகின்றேன் :) :) :icon_idea:.

Link to comment
Share on other sites

நல்லதொரு திரி..

மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பேஸ்புக்கில் எல்லாம் இணைத்தால் அதிகம் இளையவர்களைக்கவரக்கூடும். தமிழ் என்றால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டாங்கள். ஆங்கிலம், ப்ரெஞ் சில் இருப்பதால் proverbs போல விரைவில் கவரக்கூடும். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள் அண்ணா.

(கொலைவெறி போல பப்ளிசிட்டி பண்ணுங்கப்பா )

மிக்க நன்றிகள் ஜீவா உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , உங்களைப் போன்ற இளையவர்கள் இதில் ஆர்வம் காட்டுவது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடையம் . நீங்கள் சொல்லியவாறே முகநூலிலும் தினமும் பதிகின்றேன் :) :) :) .

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன்

தூர நோக்கோடு நீங்கள் செய்யவிருக்கும் திரியை மிகவும் வரவேற்கிறேன்.

குறளையும் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் எழுதினால் நன்று.

அடுத்து முக்கியமாக இதற்கென்று இன்னொரு திரி தொடங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தொடங்கிய திரியில் நீங்கள் மட்டும் தான் பதிய வேண்டும்.மறு திரியில் சக உறவுகள் கருத்தெழுதுவதை வைக்கலாம்.இல்லையென்றால் புதிதாக வாசிப்பவர்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து கொண்டு போக கடைசியில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். தொடக்கத்திலேயே இதற்கான கருத்துக்களை எழுத இங்கே அழுத்தவும் என்று ஒரு சுட்டியை தொடக்கவும்.

மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , உங்கள் ஆலோசனைகளின்படியே இரண்டு பதிவுகளை மட்டுக்களின் அனுமதியின்பேரில் தொடங்கியுள்ளேன் . குறளை நேரடியாக ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்பு செய்தால் , அதன் உயிர்ப்பு குறைந்து விடும் என நினைக்கின்றேன் . ஆனால் பொழிப்புரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன் :) :) :) .

Link to comment
Share on other sites

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

உங்கள் முயற்சிக்கு நன்றி கோமகன்.

இதில் பிரெஞ்சு மொழியை google மூலம் மொழிபெயர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நுண்ணிய பொருளடக்கத்துடன் உள்ள திருக்குறள் இப்படி மொழிபெயர்க்கும்போது தவறான அர்த்தத்தைத் தரலாம்.

மிக்க நன்றிகள் இணையவன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , எனக்கு ஓர் இலக்கியத்தை அதன் அழகு கெடாது மொழிபெயர்க்கும் மேலதிக மொழிப்புலமை என்னிடம் இல்லை . எனவே எனது குலதெய்வமான < கூகிழானந்தாவிடமே > வரம் பெற்றேன் . நீங்கள் கூறுகின்ற கருத்தும் நூறுவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில மொழிபெயர்ப்பு : http://kural.in/Kural/books.asp

Link to comment
Share on other sites

மேலும் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் , வழங்கிய வாத்தியார் , உடையார் , புங்கையூரான் , அலைமகள் , மல்லையூரான் , புலவர் , கவிதை , தமிழினிக்கு , என்றுமே நான் கடமைப்பட்டவன் :):):) .

Link to comment
Share on other sites

கள உறவுகளே ,

குறளின் பொழிப்புரையை , எமது இளையவர்கள் அதிகம் செறிந்து வாழும் ஜேர்மன் , இத்தாலியானோ , டெனிக்ஷ் , மற்றும் நொஸ்க் , மொழிகளிலும் மொழிபெயர்ப்பை செய்யலாம் என்று யோசிக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கருத்துக்களத்தோழர்களே, கோமகனின் "தமிழரின் வாழ்வியல் கருவூலம்" பதிவிற்கு கருத்துப்பதிந்து வரவேற்பு கொடுப்பதை மிகவும் பாராட்டவேண்டும். ஆனால் அதே சமயம் அந்த முயற்சியாளனின் பதிவில் இருக்கக்கூடிய சிறிய தவறுகளை நீங்கள் காணவில்லையா? அல்லது அந்தபதிவரின் பதிவு மற்றவர்களின் நகைப்பிற்கு இடமானால் நமக்கென்ன என்று நினைத்து விட்டீர்களா? மன்னிக்கவும் தோழர்களே உங்களிடம் காட்டமாக பேசுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். இலகுவாக கருத்தை மாற்றக்கூடிய ஓரெழுத்துத் தவறுகள் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. இனிவரும் காலங்களில் என்னுடைய தவறாக இருந்தாலும் நேரடியாக இந்தக்கருத்துக்களத்தில் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம் எனக்கும் ஏற்படும் ஆனால் நாங்கள் எவரும் பண்டிதர் அல்லவே.. ஆதலால் நாங்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். முடிந்தவரை எழுத்துப்பிழைகளைத் திருத்தப்பழகுவதால் நாம் எந்த ஒரு நிறைவான நிலையிலிருந்தும் குறையப்போவதில்லை.

கோமகன் நீங்கள் எழுத எத்தனித்தவிடயம் பொய்யாமொழிப்புலவனுடைய இருவரிக் குறளமுதம். தமிழுக்குச்சிறப்புச் சேர்ப்பவைகளில் முன்னணியில் நிற்கும் ஒரு நூல். அவ்விடத்தில் ஆரம்பப்பந்தியில் இருக்கக்கூடிய எழுத்துப்பிழைகளை நீங்கள் அவதானிக்கவில்லையா? உலக மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அநேகமாக எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கும் தூயதமிழ் குறளமுதத்தினை உங்கள் பாணியில் மொழிபெயர்ப்பது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்கள்.., இருப்பினும் உங்கள் பதிவில் இடம்பெற்றிருக்கக்கூடிய ளகர,ழகர தவறுகளை திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். இதுகூட நீங்கள் விரும்பினால் மாத்திரமே திருத்துங்கள். உங்கள் மீதான நிர்ப்பந்தம் அல்ல. என்ன முகநூலில் எல்லாம் இணைத்திருக்கிறீர்கள் என்னதான் எழுதியிருக்கிறார் என்று பலரும் எட்டிப்பார்க்கக்கூடும் அல்லவா..

தெளிவாக கருத்தைச் சொல்லவரும் தமிழ் பார்க்கும்போது கடுமையானதாக தோற்றம் தரும். பழகிய தோழியின் கருத்தை மனம் சலிக்காத தோழன் புரிந்து கொள்வான் என்று நம்புகின்றேன்.

வணக்கம் அன்பான கள உறவுகளே ,

ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வளக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துளைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ளு தமிழில் இவை தொட்டுச் செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . எனதருமை நண்பர் அகோதா வேறு ஒரு பதிவில் இதைத் தொடங்கினாலும் , அவரது முன் அனுமதி பெற்று அவரின் பதிவையும் பூரணப்படுத்தி இந்த முயற்சியைத் தொடருகின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துளைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்கு சொல்லும் பொழுதிலேயே பூரணப்படுத்தப்படும் .

பி . கு : தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பின்வரும் சுட்டியை சொடுக்குங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thirukkural has been translated in how many languages around the world?

In following 37 languages:

Arabic

Bangla

Burmese

Chinese

Czech

Dutch

English

Fiji

Finnish

French

German

Gujarati

Hindi

Hungarian

Italian

Japanese

Kannada

Konkani

Korean

Latin

Malay

Malayalam

Marathi

Nederlands

Norwegian

Oriya

Polish

Punjabi

Rajasthani

Russian

Sanskrit

Saurashtra

Sinhalese

Spanish

Swedish

Telugu

Urdu

அநேகமாக அந்தந்த மொழிக்குரிய கூகுலாண்டவரிடம் கேட்டால் அதிகம் பயன் உண்டு கோமகன்.

Link to comment
Share on other sites

வணக்கம் கருத்துக்களத்தோழர்களே, கோமகனின் "தமிழரின் வாழ்வியல் கருவூலம்" பதிவிற்கு கருத்துப்பதிந்து வரவேற்பு கொடுப்பதை மிகவும் பாராட்டவேண்டும். ஆனால் அதே சமயம் அந்த முயற்சியாளனின் பதிவில் இருக்கக்கூடிய சிறிய தவறுகளை நீங்கள் காணவில்லையா? அல்லது அந்தபதிவரின் பதிவு மற்றவர்களின் நகைப்பிற்கு இடமானால் நமக்கென்ன என்று நினைத்து விட்டீர்களா? மன்னிக்கவும் தோழர்களே உங்களிடம் காட்டமாக பேசுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். இலகுவாக கருத்தை மாற்றக்கூடிய ஓரெழுத்துத் தவறுகள் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. இனிவரும் காலங்களில் என்னுடைய தவறாக இருந்தாலும் நேரடியாக இந்தக்கருத்துக்களத்தில் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம் எனக்கும் ஏற்படும் ஆனால் நாங்கள் எவரும் பண்டிதர் அல்லவே.. ஆதலால் நாங்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். முடிந்தவரை எழுத்துப்பிழைகளைத் திருத்தப்பழகுவதால் நாம் எந்த ஒரு நிறைவான நிலையிலிருந்தும் குறையப்போவதில்லை.

கோமகன் நீங்கள் எழுத எத்தனித்தவிடயம் பொய்யாமொழிப்புலவனுடைய இருவரிக் குறளமுதம். தமிழுக்குச்சிறப்புச் சேர்ப்பவைகளில் முன்னணியில் நிற்கும் ஒரு நூல். அவ்விடத்தில் ஆரம்பப்பந்தியில் இருக்கக்கூடிய எழுத்துப்பிழைகளை நீங்கள் அவதானிக்கவில்லையா? உலக மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அநேகமாக எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கும் தூயதமிழ் குறளமுதத்தினை உங்கள் பாணியில் மொழிபெயர்ப்பது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்கள்.., இருப்பினும் உங்கள் பதிவில் இடம்பெற்றிருக்கக்கூடிய ளகர,ழகர தவறுகளை திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். இதுகூட நீங்கள் விரும்பினால் மாத்திரமே திருத்துங்கள். உங்கள் மீதான நிர்ப்பந்தம் அல்ல. என்ன முகநூலில் எல்லாம் இணைத்திருக்கிறீர்கள் என்னதான் எழுதியிருக்கிறார் என்று பலரும் எட்டிப்பார்க்கக்கூடும் அல்லவா..

தெளிவாக கருத்தைச் சொல்லவரும் தமிழ் பார்க்கும்போது கடுமையானதாக தோற்றம் தரும். பழகிய தோழியின் கருத்தை மனம் சலிக்காத தோழன் புரிந்து கொள்வான் என்று நம்புகின்றேன்.

மிக்க நன்றிகள் சகாறா அக்கா உங்கள் தெளிவான விமர்சனத்திற்கு . நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை எனது அறிவுக்கு எட்டியவகையில் திருத்தியுள்ளேன் . மேலும் , எனக்கு எப்பொழுதும் " ழ " கர " ள " கர வில் மயக்கம் வருவதுண்டு . அது நான் வேண்டுமென்று அந்தத் தவறுகளை விடுவதில்லை . மேலும் , இலக்கிய ரீதியாக நான் விமர்சனம் , சுயவிமர்சனம் , இரண்டுக்குமே கட்டுப்பட்டவன் . எனவே நீங்கள் என்னைத் தாராளமாக விமர்சனம் செய்யலாம் . மேலும் , இதில் தவறுகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உலகின் பெருமளவு வக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துளைழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ளு தமிழில் இவை தொட்டுச் செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . எனதருமை நண்பர் அகோதா வேறு ஒரு பதிவில் இதைத் தொடங்கினாலும் , அவரது முன் அனுமதி பெற்று அவரின் பதிவையும் பூரணப்படுத்தி இந்த முயற்சியைத் தொடருகின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துளைழைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுளுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்குச் சொல்லும் பொழுதிலேயே பூரணப்படுத்தப்படும் .
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.