Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

'உச்சிதனை முகர்ந்தால்' புலம்பெயர் தேசங்களில்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம்

இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால்.

தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.

தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி.

பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். சக மனிதன் மீது கொள்ளும் நெருக்கம், உறவு, பரிவு என்பவற்றை, நடேசனின் [சத்தியராஜ்] மாமியாரைத் தவிர்த்து, ஆட்டோ சாரதி உட்பட எல்லாக் கதாபாத்திரங்களும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இப்படத்தை பார்க்கும் போது, ஆழ் மனதில் பதிந்து கிடந்த வலிமிகுந்த உயிர்ப்புள்ள நினைவுகள், மனவெளியில் மீண்டும் மிதக்க ஆரம்பித்தன.

”இது உன் தேசத்தில் நடந்தது… இன்னமும் நடக்கிறது… வலிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து , கற்பனைச் சித்திரங்களை நிஜமென்று நம்பி கைதட்டிக் கொண்டிருக்கிறாயா” என்று முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.

புனிதவதியை வாழ்வின் நெருக்கடிகள் கடுமையாக முடக்கினாலும், பறவை,நாய், செடிகொடிகள் எல்லாமே அவளுடைய நண்பர்கள்தான். அமுதனோடு [நாயின் பெயர்] அவள் பேசுகிறாள். நாய் பேசாது என்று தெரிந்திருந்தும் பேசுகிறாள். அது அவளுக்கான வடிகால்.

விமானம் பறக்கும் இரைச்சலைக் கேட்டவுடன், அவளைத் தாயக நினைவுகள் பலவந்தமாக துரத்துகின்றன.. இன்றும் கூட ,தாயகத்தில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ,பெரியவர்கள் இவ்வகையான உளவியல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றார்கள். இவர்களை ஆற்றுப்படுத்த எவருமில்லை.

போர்க்காலத்தில் எதிர்கொண்ட அதே ஆக்கிரமிப்பு இராணுவமே இன்றும் அவர்கள் வீதிகளில் உலாவிக்கொண்டிருக்கிறது. கொடூரமான சம்பவங்களை அவை இன்றும் நினைவூட்டுகின்றன. நினைவுகளை அழிக்க முடியவில்லை.

மார்ச் 1 …அவள் வாழ்வினை சூது கவ்விக் கொண்ட நாள். சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் அவளை குதறிக் கடித்த நாள். ”அன்னைக்குத்தான் எனக்கு வலிச்சது அக்கா” என்று அவள் குழந்தைத்தனமாக சொல்லும்போது நிர்மலாவின் [சங்கீதா] கண்கள் பனித்தன என்று கூறுவதைவிட, அதில் மனிதத்தின் மீதான நேசிப்பினை கண்டேன் என்று கூறுவது பொருத்தமானது. இசைஅமைப்பாளர் டி.இமான் பற்றியும் குறிப்பிட வேண்டும். ‘உச்சிதனை முகர்ந்தால்…சுட்டிப் பெண்ணே…. இருப்பாய் தமிழா நெருப்பாய்..’ போன்ற பாடல்கள், கதை நகர்த்தலுக்கு எவ்விதமான இடையூறையும் விளைவிக்கவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத, வலிந்து திணிக்காத வகையில் இவை இணைக்கப்பட்டுள்ளன.

புனிதவதியின் அசைவியக்கம் இறுதிக் கணத்தை நெருங்கும் வேளையில், ”இருப்பாய் தமிழா நெருப்பாய்..” என்கிற அற்புதமான போராட்ட இசை, ஒடுக்கப்படும் மக்களின் புதிய குரலாய் எழுகிறது. விழ விழ எழும் போராட்டத்தத்துவத்தை காட்சியோடும் கானத்தொடும், பிசிறல் இல்லாமல் சரிவரக் கலந்து படைத்திருக்கும் புகழேந்தி அவர்கள் நிற்சயம் போற்றுதலுக்குரியவர்.

”உன் தாய் மண்ணை எங்கே புதைப்பார்கள்…” ..இதுதான் மண் மீதான எமது பிறப்புரிமையை, இறைமையை தெளிவாகச் சொல்லும் வரிகள். காசி அண்ணனின் கவிதைகள் மண்ணின் பெருமூச்சாகவும், மீண்டும் எழுவதற்கான ஊன்றுகோலாகவும் இருக்கிறது. உணர்ச்சிக் கவிக்குள் உண்மையின் உன்னதங்களை இரண்டறக் கலந்திருக்கும் அவரின் கவிதைகள், இசைவடிவத்துள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றது.

மெட்டிற்கு பாட்டு எழுதுவது இலகுவான விடயமல்ல. இசைக்குரிய சொற்களை கவிதைக்குள் புகுத்தும் வித்தையையும் காசி அண்ணன் கற்றுள்ளார் போல் தெரிகிறது.

பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். காட்சிகளுக்கு ஏற்ப ,தேவையற்ற இடங்களில் பின்னணி இசை தவிர்க்கப்பட்டிருக்கிறது..

பேரிரைச்சல் நிறைந்த தமிழ் திரைப்படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு, இத் திரைப்படம், சில காட்சிகளில் மெதுவாக நகர்வது போன்றதொரு தோற்றப்பாட்டினை கொடுக்கும்.ஆனாலும் தமிழருவி மணியன் அவர்களின் ‘பஞ்ச் டயலக்’ இல்லாத நிதர்சனமான வார்த்தைகளும், ‘பெரியார்’ புகழ் சத்தியராஜ், பிதாமகனில் புது அவதாரமெடுத்த சங்கீதா, நாசர், லக்ஷ்மி, ‘செந்தமிழன்’ சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் போன்றோர்களது பங்களிப்பு இப்படத்தை தூக்கி நிமிர்த்தியுள்ளது என்று கூறலாம்.

இதன் படத் தொகுப்பாளர் , ‘பா’ வரிசையில் பல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்த இயக்குனர் பீம்சிங் அவர்களின் புதல்வர் திரு.லெனின் அவர்கள். சென்னை திரைப்பட தணிக்கை சபையின் வாள் வெட்டுக்கள் ஆங்காங்கே தெரிந்தாலும், இயலுமானவரை தனது பணியை அவர் திறம்படச் செய்துள்ளார்.

பிராந்திய மேலாதிக்கவாதத்தின் கழுகுப் பார்வையில், இத்திரைப்படமானது தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமைக்கான விடுதலைப் போராட்டம், மற்றும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பவற்றை ஆதரிப்பதோடு, தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவான மீண்டுமொரு எழுச்சி உருவாகிவிடுமோவென்கிற அச்சம் தென்படுகிறது. இவை தவிர, இத்திரைப்படத்தில், சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்திலுள்ள, கண்கள் கட்டப்பட்ட தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள், மீள் உருவாக்கம் செய்து காண்பிக்கப்படுகின்றது. அதில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலைஜர்களின் பங்களிப்பில் சில குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது.

இப்படத்திற்கு வசனமெழுதிய தமிழருவி மணியன் அவர்கள் குறித்து கட்டாயம் பேச வேண்டும்.தனது அனுபவங்களை , ஆளுமையை எந்தவொரு பாத்திரத்தின் மீதும் அவர் திணிக்க முற்படவில்லை.

‘என் வயிறு பெரிதாகிவிட்டதால் என்னை பள்ளிக்கூடத்திலிருந்து நிற்பாட்டிவிட்டார்கள்’ என்று புனிதவதி கூறும் போதும்,புனிதவதியிடம் வம்பு பண்ண சில வாலிபர்கள் முயலும் போது ‘நீங்களெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?’ என்று அந்தத் திருநங்கை கொதித்தெழும் போதும், இவளின் கடந்த காலத் துயரங்களைப் புரியாமல் ‘பதின்மூன்று வயதில் எவன் கூடப் படுத்தாய்’ என்று மிகக் குரூரமாக மோசமான வார்த்தைகளில் ஆச்சி வசைபாடும் போதும், மணியன் அவர்களின் இயல்பான மொழி வழக்கின் ஆளுமை புரிந்தது.

‘ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வுகூட …..அதற்கு இல்லாமல் போச்சே’ என்று தனது தாயைப் [ஆச்சி] பற்றி மகள் நிர்மலா விமர்சனம் செய்கையில், அங்கு உயர்ந்து நிற்கிறார் எங்கள் தமிழருவி. திருநங்கையரை, நல்ல இதயமுள்ளவர்களாக, மனிதம் போற்றும் மகத்தான பிறவிகளாக, இது போல் எந்தத்திரைப்படமும் நேர்மையாகக் சித்தரித்ததாக நினைவில் இல்லை. இவர்களை இலங்கையில் ‘அலி’ என்று கூறுவார்கள். அரவாணி என்பது தற்போது திருநங்கையாக உயர்வு பெற்றுள்ளது தமிழ்நாட்டில். சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இவர்களால், ஒடுக்குமுறைக்கு உள்ளான அந்தப் புனிதவதியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் குறித்தான சமூகப் பார்வை, மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற வகையில் , இவர்கள் உடனான புனிதவதியின் தொடர்பாடல்களை இப்படத்தில் இணைத்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்னும் பல விடயங்கள் குறித்து எழுதலாம், பேசலாம். ஆனால் அதுவே , மணியன் அவர்களின் உரைநடைக்கான பொழிப்புரையாக மாறி விடுமென்பதால் இத்தோடு நிறுத்துவது சாலச் சிறந்தது என எண்ணுகிறேன்.

இனி குறிப்பாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் குறித்து பேச வேண்டும்.திரைப்பட உருவாக்கத்தில் திரைக்குப் பின்னால் நின்று உழைத்த மனிதர்கள் இவர்கள். நோர்வேயைச் சேர்ந்த இந்த ஈழத்தமிழர்கள், வணிக நோக்கோடு இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பதை உறுதி செய்ய ,படத்தின் திரைக்கதையே சாட்சி. திரையரங்கை விட்டு வெளியேறும்போது , என்னைக் கடந்து சென்ற பெண்மணி ஒருவர் கூறிய கருத்து: ”கொஞ்சம் கொஞ்சமா எங்கட சனங்கள் எல்லாத்தையும் மறந்து போகுதுகள்.இதைப் பார்த்தாவது திருந்தட்டும். இவ்வளவு காலமும் படம் எண்டு சொல்லி என்னைத்தையோ எங்களுக்கு காட்டி இருக்கிறாங்கள். இதுதான் எங்கட படம்.”

-இதயச்சந்திரன்

http://www.eelamview...ukarntha-movie/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க்கில்

uchi.jpg

Vejle lørdag d. 07-01-2012 kl. 09:00

Honslet lørdag d. 07-01-2012 Kl. 11:00

Vamrup 06-01-2012 kl.21:00

Sture 08-01-2012 kl.14:00

=======================================================================

சிட்னியில்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=96342

=======================================================================

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Uchchithanai Mukarnthal Movie Online – Review

Uchchithanai-Mukarnthal-Movie-Online-Review-235x200.jpg

A movie on Lankan issue always garners attention. Director Pughazhendhi Thangaraj, who made Kattrukenna Veli, on a similar theme, laid his ihands on the ethnic issue again. But this time documented the struggles on a young girl who suffered at the hands of Lankan army. Sathyaraj, Seeman and Sangeetha play pivotal roles. Check out the film. Tamil movie review.

Story

Professor Natesan (Sathyaraj) is a pro-Tamil sympathiser, who speaks for their cause and often lands up in jail for his outburst. His wife (Sangeetha) too shares his concerns. When the couple expects their child, a young girl Punithavathi (Neelika) from Batticoloa lands up in their house. She is allegedly gang raped by Lankan Army on 1 March 2009. She is just 13-years-old, but expects a baby. Enters a noble doctor (Lakshmi). Natesan, his wife and the doctor try their best to ensure the safety of the child. There is one Charles Anthony (Seeman), a noble inspector who helps them. One fine day they come to know that the young girl is down with AIDS. They approach Dr CND (Nasser) for help/ the girl is traumatized. What they do next forms the rest.

Performance

it’s Neelika’s show all the way. She emotes. Brings her best. Be it with Lankan tigers or the puzzled life in Chennai, she gives right emotions. Sathyaraj does his role with caution. So are Sangeetha and Seeman. Lakshmi walks away with dignity

Technicalities

B Kannan, the veteran has cranked the camera and he has captured the atrocities of Lankan army well. So is the innocence of a young girl well. D Imman’s music is awesome. Fits the theme well.Thamizha Irupai Nee Nerupai is worth a mention. Director Pughazhendi Thangaraj has documented the struggles of Tamils in Lanka well.

Verdict

On the whole it may sound like a documentary. But finding flaws in such a sensitive theme is needless. With sharp dialogues and catchy scenes, the movie sounds good.

3/5

Uchchithanai Mukarnthal Review – 2

The Sri Lankan Tamils issue is always a sensitive one and any film on the same more often than not gains extra attention. Director Pughazhendhi Thangaraj, who made ‘Kattrukenna Veli’ earlier, on a similar theme, tries his hands on the long-drawn ethnic issue again.

The difference this time is that he has documented the struggles of a young girl whosuffered at the hands of the island army. Sathyaraj, Seeman and Sangeetha are the lead actors in the film.

Professor Natesan (Sathyaraj) is a Tamil sympathizer, who speaks out for their cause and often lands in jail for his outbursts. His wife (Sangeetha) too shares his concerns.

When the couple is expecting their child, a young girl Punithavathi (Neelika) from Batticaloa lands up in their house. She has allegedly been gang raped by Lankan Army personnel on 1 March 2009.

She is just 13 but is expecting a child. At this point , a noble doctor (Lakshmi) makes an entry. Natesan, his wife and the doctor try their best to ensure the safety of the child.

Charles Anthony (Seeman), an upright police inspector helps them. One day they come to know that the young girl is suffering from AIDS. They seek the help of Dr CND (Nasser). The girl is traumatized. How they go about helping forms the rest of the story.

Neelika, the young lass is a show-stealer, without doubt, and she displays her acting talent in abundance. Sathyaraj underplays his role while Sangeetha and Seeman do an adequate. Veteran Lakshmi also deserves kudos for her performance.

Veteran cinematographer B Kannan measures up well and lives up to expectations. D Imman’s music is praiseworthy and matches the occasion.

Pughazhendhi Thangaraj deserves applause for making an honest attempt without bowing to commercial pressures. Kudos to Gemini Film Circuit for distributing such an honest venture and a sincere film…

http://www.tamilkey....ine-review.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப்படத்தை பார்த்தேன்.

நல்லதொரு படைப்பு. பல இடங்களில் கண் கலங்குகின்றது.

ஒரு குறை மட்டும் திருத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. நாய்க்கு அமுதன் என்று தமிழில் பெயர் வைத்து தமிழ் பொழி மீதுள்ள பற்றை புனிதா நிருபிக்றிhர். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை நடேசன் அவர்களை பார்த்து அங்கிள் அங்கிள் என்பது மனதிற்க்கு பிடிக்கவில்லை. ஊருக்கு தான் உபதேசம் என்பது போல...

இது எனது பார்வை.

ஒட்டுமொத்தமாக அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய படம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோவில் Woodside திரையரங்கில் காண்பிக்கப்படுகின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் திரையிடப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படத்தை பார்க்க வேண்டும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தைவிட ஈழத்தின் வலியை நிதர்சனமாய் உணர்த்தி இருப்பர்கள் என் தோன்றுகிறது..ஏனெனில் இது அடிபட்டவர்களிடமிருந்து சிதறிய வலியின் ஒளி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன் தியேட்டரில் சனமே இல்லை...தேசியம்,புலி ஆதரவு என சொல்பவர்களில் 10% மானோர் கூட இந்தப் படத்தைப் போய் பார்க்கவில்லை...பிறகு எப்படி எமக்கு ஆதரவு தரும் இப்படியான படங்களை தயாரிப்பாளார்கள் எடுப்பார்கள்?...தைப் பொங்கலுக்கு விஜயின் படம் வந்தவுடன் விழுந்தடித்து கொண்டு போவார்கள்.

படத்தில் அந்த குட்டிப் பெண்ணிணதும்,அவரது தாயினதும்[அவர் ஈழத்துப் பெண்ணாம் நீங்கள் யாராவது கேள்விப் பட்டீர்களா?],சத்தியராஜ்,சங்கீதா,வைத்தியப் பெண்,அலியாக நடித்தோர் அந்த கதா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்...பாராட்டுக்கள்...இலங்கை இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பார்த்தால் அவர்களது முகத்தில் கொடூரம் தெரியவில்லை மாறாக அப்பாவியாக தெரிகின்ற மாதிரி எனக்கு இருக்குது சில வேளை உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம்...கரும் புலி பெண்ணுக்கு சக்கை கட்டி விடுகிறார்கள் ஆனால் அந்தப் பெண் கொஞ்சம் உடம்பானாவர் இப்படியான பாத்திர‌ங்களில் கொஞ்ச‌ம் கவனம் எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து...பட‌த்தின் இசை நன்றாக உள்ளது...பாடியவர்கள் நன்றாக பாடியுள்ளார்கள்...ஒரு பாட்டிற்கு பிரேம்கோபால் நன்றாக நட‌னமாடியுள்ளார்.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பட‌ம் ...முடிவின் ஒரு பகுதி எனக்கு இஸ்ட‌மில்லை அதை எல்லோரும் பட‌ம் பார்த்து முடித்த பின் விமர்சிக்கலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் திரையிடப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படத்தை பார்க்க வேண்டும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தைவிட ஈழத்தின் வலியை நிதர்சனமாய் உணர்த்தி இருப்பர்கள் என் தோன்றுகிறது..ஏனெனில் இது அடிபட்டவர்களிடமிருந்து சிதறிய வலியின் ஒளி.

தமிழ் நாட்டில் சென்ற மாதம் 16ம்திகதி திரையிடப்பட்டது. பெரும்பாலான திரையரங்கில் ஒரு கிழமை மட்டுமே இப்படம் ஓடியது. சென்னையில் முதல் 3(வெள்ளி,சனி, ஞாயிறு) நாட்கள் ஒரு இலட்சத்து 33 ஆயிரம் இந்தியா ரூபாக்களில் வசூல் கிடைத்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா தியேட்டர்கள் போவதில்லை என்பதால்.. இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. இருந்தாலும்.. குத்துப் பாட்டு.. இரட்டை வசன நகைச்சுவைகள்.. அப்படி இப்படின்னு கவர்ச்சி காட்டிற படங்கள் என்றால் தானே நம்ம ஆக்களும் பாப்பினம். விளம்பரங்களும் பிச்சுக்கிட்டு இருக்கும்..! எதுஎப்படியோ.. சில படங்கள் விளம்பரங்களால் பிரபல்பயம் அடையும்.. சில படங்கள் மக்களின் மனங்களில் விளைவுக்கும் தாக்கங்களால் நிலைக்கும். இது இரண்டாம் வகையில் அடங்கும் என்பதை இங்கு பகிரப்பட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையில்.. நிச்சயம் கூறக்கூடியதாக உள்ளது. :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்தில்

Uchithanai+Muharnthaal.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று.. திண்ணையில், தமிழினியால் இணைக்கப் பட்டிருந்த ராஜ் தொலைக்காட்சியின் திரைவிமர்சன ஒளிப்பதிவை பார்த்த போது...

இப்படத்தை பார்க்க வேண்டும், என்னும் ஆவலை தூண்டியது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் சென்ற மாதம் 16ம்திகதி திரையிடப்பட்டது. பெரும்பாலான திரையரங்கில் ஒரு கிழமை மட்டுமே இப்படம் ஓடியது. சென்னையில் முதல் 3(வெள்ளி,சனி, ஞாயிறு) நாட்கள் ஒரு இலட்சத்து 33 ஆயிரம் இந்தியா ரூபாக்களில் வசூல் கிடைத்தது.

வருத்தப்பட வேண்டிய விடயம்.

கண்ட குப்பைகளை ஆதரிக்கும் மக்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு ஏன் இல்லை என்பதே புரியவில்லை...ஒரு வேளை இப்படத்திற்கு மத்திய மாநில அரசுகளின் மறைமுக நெருக்குதல் இருக்கலாம்... விளமபரங்களும் அதிகமில்லாமல், ஊடகங்களின் தயக்கத்தினாலும் இருட்டடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று.. திண்ணையில், தமிழினியால் இணைக்கப் பட்டிருந்த ராஜ் தொலைக்காட்சியின் திரைவிமர்சன ஒளிப்பதிவை பார்த்த போது...

இப்படத்தை பார்க்க வேண்டும், என்னும் ஆவலை தூண்டியது.

அதை மீண்டும் இணைக்க முடியுமா? நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில் அந்த குட்டிப் பெண்ணிணதும்,அவரது தாயினதும்[அவர் ஈழத்துப் பெண்ணாம் நீங்கள் யாராவது கேள்விப் பட்டீர்களா?],.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பட‌ம் ...முடிவின் ஒரு பகுதி எனக்கு இஸ்ட‌மில்லை அதை எல்லோரும் பட‌ம் பார்த்து முடித்த பின் விமர்சிக்கலாம்

இவரின் பேட்டியைக் கேட்கும் போது தமிழகத்து சிறுமி போல இருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசி ஆனந்தனும் அவரின் துனைவியாரும் தான் புனிதாவதி என்ற பாத்திரத்தில் நடித்த தமிழகத்து சிறுமிக்கு இப்படத்தில் ஈழத்தமிழில் கதைக்க உதவி செய்திருக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று.. திண்ணையில், தமிழினியால் இணைக்கப் பட்டிருந்த ராஜ் தொலைக்காட்சியின் திரைவிமர்சன ஒளிப்பதிவை பார்த்த போது...

இப்படத்தை பார்க்க வேண்டும், என்னும் ஆவலை தூண்டியது.

அதை மீண்டும் இணைக்க முடியுமா? நன்றிகள்.

http://www.youtube.com/watch?v=QJbu5AP05_g&feature=player_embedded&list=PLA94C7C2986C03C87

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதை மீண்டும் இணைக்க முடியுமா? நன்றிகள்.

காலையில் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால், மாலையில் வந்து இணைப்போம் என்றிருந்தேன்.

அதற்கிடையில், தமிழினி கேள்விப்பட்டு இணைத்துவிட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்கள் தப்பாக விளங்கிக் கொண்டீர்கள் அந்த சிறுமி இந்தியா தான் ஆனால் அவரின் தாயாக நடித்த பெண் தான் ஈழத்தை சேர்ந்தவராம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன் தியேட்டரில் சனமே இல்லை...தேசியம்,புலி ஆதரவு என சொல்பவர்களில் 10% மானோர் கூட இந்தப் படத்தைப் போய் பார்க்கவில்லை...பிறகு எப்படி எமக்கு ஆதரவு தரும் இப்படியான படங்களை தயாரிப்பாளார்கள் எடுப்பார்கள்?...தைப் பொங்கலுக்கு விஜயின் படம் வந்தவுடன் விழுந்தடித்து கொண்டு போவார்கள்.

படத்தில் அந்த குட்டிப் பெண்ணிணதும்,அவரது தாயினதும்[அவர் ஈழத்துப் பெண்ணாம் நீங்கள் யாராவது கேள்விப் பட்டீர்களா?],சத்தியராஜ்,சங்கீதா,வைத்தியப் பெண்,அலியாக நடித்தோர் அந்த கதா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்...பாராட்டுக்கள்...இலங்கை இராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பார்த்தால் அவர்களது முகத்தில் கொடூரம் தெரியவில்லை மாறாக அப்பாவியாக தெரிகின்ற மாதிரி எனக்கு இருக்குது சில வேளை உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம்...கரும் புலி பெண்ணுக்கு சக்கை கட்டி விடுகிறார்கள் ஆனால் அந்தப் பெண் கொஞ்சம் உடம்பானாவர் இப்படியான பாத்திர‌ங்களில் கொஞ்ச‌ம் கவனம் எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து...பட‌த்தின் இசை நன்றாக உள்ளது...பாடியவர்கள் நன்றாக பாடியுள்ளார்கள்...ஒரு பாட்டிற்கு பிரேம்கோபால் நன்றாக நட‌னமாடியுள்ளார்.

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பட‌ம் ...முடிவின் ஒரு பகுதி எனக்கு இஸ்ட‌மில்லை அதை எல்லோரும் பட‌ம் பார்த்து முடித்த பின் விமர்சிக்கலாம்

ரதி இந்தத் திரைப்படம் எங்களுடைய பார்வையில் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. ஒன்றை அவதானித்தால் அது ஏன் என்பது இலகுவாகப் புரிந்துவிடும். இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை தமிழருவி மணியன் அவர்கள் எழுதியிருந்தார்... அவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் அவரால் ஈழத்தின் இதயத்துடிப்பை அப்படியே எழுத்தில் கொண்டுவந்து நிறுத்துவது என்பது மிகக் கடினமான ஒன்று இருப்பினும் அவருடைய வசனக்கோர்வைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதாவது எங்களுடைய தளத்தில் இருக்கக்கூடிய கதாசிரியர்கள் இந்த இடத்தில் தமிழ்நாட்டுக் கலைஞர்களுடன் பணியாற்றி இருந்தால் இன்னும் எமக்கே உரிய இயல்பான நேர்த்தியுடன் இத்திரைப்படம் வெளிவந்திருக்கும்.நீங்கள் சொல்வதுபோல் பெண்போராளிகள் விடயத்தில் அதிக கவனம் எடுத்திருக்கலாம். அவர்களுடனான நிகழ்வு ஒரு கதைசொல்லியின் வாயிலாக வந்திருக்கக்கூடிய காட்சியாகவே இருப்பதனால் அவற்றை அப்படித்தான் அந்தக் கலைஞர்களால் சொல்லக்கூடியதாக இருந்திருக்கிறது.

ரதி, பிரசவ வலியை..... அதன் ஒவ்வொரு விகாரிப்பையும் தாயால் மாத்திரமே உணர முடியும். பக்கத்தில் உள்ள மருத்துவருக்குத் தெரியும் ஆனால் உணர முடியாது. அதுபோலத்தான் அந்தக்கலைஞர்கள் நிலையும். எங்களுக்கு நெருடக்கூடிய தாக காட்சிகள் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் நாங்கள் இருக்கக்கூடிய தளமே. அதுதான் அந்த வலிகளோடே துயருற்றுக் கொண்டிருக்கும் தளம். நாங்கள் வலிகளோடே வாழ்பவர்கள் அவர்கள் எங்கள் வலிகளை எடுத்துச் சொல்லும் தளத்தில் பயணிப்பவர்கள்

இது யதார்த்தத்தின் வடிவம் ஒப்பனை இல்லாத காவியம்...

ரதி நீங்கள் அங்கு அவதானித்ததைப் போல் நானும் அவதானித்தேன். இங்கும் இந்தப்படத்தை பார்க்க பின்நிற்கிறார்கள் காரணம் கேட்டதற்கு பார்த்தால் துயரமாக இருக்கும் என்பதால் பார்க்கவில்லை என்று சப்பைக்காரணங்கள் சொல்கிறார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்க்கப்போகின்றேன் கருத்து கூறியவர்களுக்கு நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன் தமிழ் மக்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் திரையிடப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படத்தை பார்க்க வேண்டும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தைவிட ஈழத்தின் வலியை நிதர்சனமாய் உணர்த்தி இருப்பர்கள் என் தோன்றுகிறது..ஏனெனில் இது அடிபட்டவர்களிடமிருந்து சிதறிய வலியின் ஒளி.

தமிழ் நாட்டில் இன்று முதல் மீண்டும் சில திரையரங்கில் திரையிடுகிறார்கள்.mdsg461017m.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜ் தொலைக்காட்சியில் வந்த காணொளியின் தொடர்ச்சியினை தமிழினி இணைக்க தவறுதலாக மறந்திருக்கிறார்.http://www.youtube.com/watch?v=0S0xW-uZSlo&feature=endscreen&NR=1http://www.youtube.com/watch?v=a8Ppy29zBds&feature=relatedhttp://www.youtube.com/watch?v=lvEzBGGmB4g&feature=related

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திரைப்படத்தினை தமிழகத்தில் திரையரங்கில் பார்வையிட்ட பிரபல்யமான பதிவாளர் சி.பி.செந்தில்குமார் அவர்களின் விமர்சனத்தினைப் பார்வையிட

http://adrasaka.blogspot.com.au/2011/12/blog-post_1506.html

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.