Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கஷ்டம் விளங்குகின்றது, நீங்கள் போன வருடம் செய்ததே பெரிய காரியம், உங்கள் கஷ்டத்திலிருந்து விரைவில் மீள பிரார்த்திக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply

உங்களுடைய நிலமையைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது..

 

இதுவரை காலமும் தொடர்ச்சியாக தரமான ஆக்கங்களைத் தெரிவு செய்து கௌரவித்தமைக்கு நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வசதிவரும் பொழுது இணையுங்கள்....

Link to comment
Share on other sites

உங்கள் சிக்கல்கள் விரைவில் தீர வேண்டும் என விரும்புகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து கவலை கொள்ளவேண்டாம் 

குறுக்கு வழியில் செல்பவர்களுக்குப்  பணம்  உடன் கிடைக்கும் .

 உடனேயே தீர்ந்துவிடும்  

 

ஆனால் நேர்வழியில் செல்பவர்களுக்கு, உழைப்பை நம்புபவர்களுக்கு

ஊதியம் பிந்தினாலும் ஊழி இல்லாத வாழ்வு கிடைக்கும்.

 

உங்கள் சேவைக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து.. உங்கள் கஸ்டங்கள் தீரும் வரை இதனைப் பிற்போடுவது தான் தீர்வென்றால் அதனை நீங்கள் செய்வதில் தவறே இல்லை. தனக்குப் பின் தான் தானம்.. என்று முன்னோரே சொல்லி இருக்கிறாங்க.

 

இத்தனை இடர் நடுவிலும்.. உங்களின் யாழ் கள உறவுகள் மீதான.. ஊக்குவிப்புப் பற்றி அக்கறை ஒன்றே பல கோடி மதிப்புள்ளது..!

 

இடர்கள் நீங்கி மீண்டும்.. மீண்டு வர வேண்டுகின்றோம். முயற்சி திருவினையாகட்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

நிர்வாக இடர்ப்பாடுகள் சில காரணமாக குறித்த நேரத்தில் 2013ம் ஆண்டு முதற் காலாண்டிற்கான பொற்கிளி(ழி)யை வழங்க முடியவில்லை.

 

எமது துறை (driver training industry) இதுவரை காணாத இக்கட்டான நிலையில் தற்போது உள்ளது. இதனால் Google, Yellow Pages, Flickr ஏனைய இதரவழிகளிலான விளம்பர சந்தைப்படுத்தல் தேவைகளை நாம் தற்காலிகமாக முடக்கியுள்ளோம்.

 

இந்த லிங்கில் சென்று பிரபல பத்திரிகையில் ஒன்றில் வந்த கட்டுரையை பாருங்கள். எமது துறை எப்படியான சவால்களை தற்போது எதிர்கொள்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கும். போக்குவரத்து அமைச்சின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான முறைகளில் பலர் விரைவாக பணம் சம்பாதிக்க முனைவதால் நீண்டகாலமாக நேர்மையான வழியில் நேர்த்தியாக இயங்கும் நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன.

 

http://www.thestar.com/news/investigations/2013/03/05/star_investigation_toronto_driving_schools_bending_the_rules_to_make_a_buck.html

 

2013 ம் ஆண்டுக்குரிய இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டுகளிற்கான பொற்கிளி(ழி) நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் தொடர்வதற்கு முயற்சி செய்கிறோம். ஆயினும், முதல் காலாண்டு முடிவுகள் விரைவில் வழங்கப்படும்.

 

நன்றி

 

உங்கள் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.. எங்கள் துறையிலும் இது உள்ளது..

 

ஒரு பொறியியலாளர் பாதுகாப்பற்றது என்று சொன்னால், பாதுகாப்பு உள்ளது என்று சொல்லக்கூடிய இன்னொரு பொறியியலாளரைப் பிடித்து வேலையைக் கொண்டு நடத்துவார்கள் சில முதலாளிகள்..! எலியட் குள (Elliot Lake) கட்டடம் விழுந்ததிலும் இது நடந்தது..

 

நாங்கள் செய்யக்கூடியதெல்லாம், இப்படியான போலி நிறுவனங்களை அடையாளம் காண்பதும், சம்பந்தப்பட்ட துறையில் முறைப்பாடு செய்வதும்தான்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.