Jump to content

அமைதிப் பேய்கள்....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப் பேய்கள்....

ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்கிக்கொண்டிருந்த அச்சிலை மிதிச்சுத்தான் சைக்கிளை ஓடவேணும்..என்ன களைகளைக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை...இதிலை ஆறுமுகத்தார் அம்புலன்ஸ்மாதிரி அவசரமாக உழக்கு உழக்கெண்டு சைக்கிளை உழக்கி வீட்டைநோக்கிப் பறந்துகொண்டிருந்தார்...செக்கிலை இருந்து எண்ணெய் வடியிறமாதிரி ஆறுமுகத்தாருக்கு மேலாலை வேர்வை ஊத்திக்கொண்டிருந்தது...

கேற்றைத் திறந்து வீட்டுவளவுக்கை உள்ளட்டதும் "எடியே சரசு" எண்டு ஆறுமுகத்தார் வேகமாகக் குரலெடுத்துக் கூப்பிட முயற்ச்சிக்கிறார்..ஆனால் சைக்கிளோடி வந்த களைப்பிலை எடியே எண்டது முழுசா வாய்க்க வருகுது ஆறுமுகத்தாருக்கு ஆனால் சரசு எண்டது முழுசா வருகுதில்லை...முழுங்குப்படுகுது...எங்க துலைஞ்சிட்டாள் இவள்...மனதிற்க்கை திட்டினபடி சைக்கிளை முற்றத்திலை நிண்ட பிலா மரத்தில சாத்திப்போட்டு வேகமாக வீட்டுக்குள்ள நுழைகிறார்...

முருக்கங்காய்க் கறியை அடுப்பில வைச்சுக் கிண்டிக்கொண்டிருந்த சரசுவுக்கு அடுப்பு வெக்கையிலையும்,புகையிலையும் கண்ணுமடைச்சுக் காதுமடைச்சுப் போயிருந்தது..ஆறுமுகத்தார் மட்டுமில்லை அந்த நேரம் வேற யார் கூப்பிட்டாலும் சரசுவின்ரை காதிலை விழப்போறதில்லை...ஆறுமுகத்தாருக்கு முருக்கங்காய்க் கறி நல்ல தடிப்பா இருக்கவேணும்..தண்ணியாய் இருந்தா இரவு தண்ணியைப் போட்டிட்டு வந்து வீட்டிலை சிவதாண்டவம் ஆடும் மனுசன்.."இந்த அடுப்போடை நான் படுகிற அவஸ்த்தைக்கு அவருக்கு வறட்டி வைக்கவேணுமோ கறி" சரசுவுக்கு கடுப்பாக இருந்தது...ஆனால் அடுத்த நிமிசமே ஆறுமுகத்தார் மேல் கழிவிரக்கமாகவும் இருந்தது..பாவம் என்ர மனுசன்...இவளவு காலமும் எங்கடை இந்த உடைஞ்சுபோன வாழ்க்கை வண்டியை அந்தமனிசன்தான் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு போகுது...இவ்வளவு கஸ்ரத்தையும் அந்தாள்த்தான் தனியச் சுமக்குது...மனதுக்குள் நினைத்துக்கொண்ட சரசுவுக்கு ஆறுமுகத்தார் மேல் அளவற்ற அன்பு பொங்கியது...முருக்கங்காய்க்கு இன்னும் கொஞ்சம் தூள்போட்டுக் கறி உறைப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்..ஆறுமுகத்தாருக்கு உறைப்பெண்டால் நல்லாய்ப் பிடிக்கும்..ஆளின்ர வெறிவாய்க்கு கறி நல்ல உறைப்பாக இருந்தால் கண்ணாலையும் மூக்காலையும் வடியவடியச் சந்தோசமாகச் சாப்பிடுவார்...

ஆறுமுகத்தார் வேர்த்துக்களைச்சுப் பதற்றத்தோட உள்ள வந்ததைப் பார்த்த சரசுக்கு விளங்கீட்டுது ஏதோ வில்லங்கம் எண்டு."என்னப்பா..? என்னாச்சு..? ஏன் இப்பிடி அரக்கப்பரக்க ஓடிவாறியள்...?"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்."எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே..? உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது..."ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்..?மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்.."ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தான் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்...? என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்..

ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டிருந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழுசுறாய்...?நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ..? உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு "இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்போட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அப்பாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோழியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்...

நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்டுக்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்..."சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு..."ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்....

அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு..? ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ...? மனதிற்க்குள் திட்டியபடி"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி.."ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்...

ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுபடாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சாய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்...

அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந்தோடுவதற்க்காநிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது...

தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் "சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்...

இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது..

ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்..

ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்...

ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது...?

இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜயரைக்கொண்டுபோனதும் ஆறுமுகத்தார் "ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்.."பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்...

ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது...

சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்..."உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்..."ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது...

ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிருக்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் "துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது...

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு....

1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்..."ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே...? உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்..."ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது..."உண்மையாகவே ஆறுமுகத்தார்..? அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே..?உமக்குப் பின்னேரம் தாறன்..." ஆறுமுகத்தாரிடம் இருந்து மண்வெட்டியை வாங்கித் தோளில்ப் போட்டுக்கொண்டு முகத்தில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆறுமுகத்தார் தனியாளா வெட்டின ஆறடிக்கிடங்கை ஜயர் தனியாளாத்தூர்க்க வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்...

Link to comment
Share on other sites

அமைதிப் பேய்கள்....

ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்கிக்கொண்டிருந்த அச்சிலை மிதிச்சுத்தான் சைக்கிளை ஓடவேணும்..என்ன களைகளைக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை...இதிலை ஆறுமுகத்தார் அம்புலன்ஸ்மாதிரி அவசரமாக உழக்கு உழக்கெண்டு சைக்கிளை உழக்கி வீட்டைநோக்கிப் பறந்துகொண்டிருந்தார்...செக்கிலை இருந்து எண்ணெய் வடியிறமாதிரி ஆறுமுகத்தாருக்கு மேலாலை வேர்வை ஊத்திக்கொண்டிருந்தது...

கேற்றைத் திறந்து வீட்டுவளவுக்கை உள்ளட்டதும் "எடியே சரசு" எண்டு ஆறுமுகத்தார் வேகமாகக் குரலெடுத்துக் கூப்பிட முயற்ச்சிக்கிறார்..ஆனால் சைக்கிளோடி வந்த களைப்பிலை எடியே எண்டது முழுசா வாய்க்க வருகுது ஆறுமுகத்தாருக்கு ஆனால் சரசு எண்டது முழுசா வருகுதில்லை...முழுங்குப்படுகுது...எங்க துலைஞ்சிட்டாள் இவள்...மனதிற்க்கை திட்டினபடி சைக்கிளை முற்றத்திலை நிண்ட பிலா மரத்தில சாத்திப்போட்டு வேகமாக வீட்டுக்குள்ள நுழைகிறார்...

முருக்கங்காய்க் கறியை அடுப்பில வைச்சுக் கிண்டிக்கொண்டிருந்த சரசுவுக்கு அடுப்பு வெக்கையிலையும்,புகையிலையும் கண்ணுமடைச்சுக் காதுமடைச்சுப் போயிருந்தது..ஆறுமுகத்தார் மட்டுமில்லை அந்த நேரம் வேற யார் கூப்பிட்டாலும் சரசுவின்ரை காதிலை விழப்போறதில்லை...ஆறுமுகத்தாருக்கு முருக்கங்காய்க் கறி நல்ல தடிப்பா இருக்கவேணும்..தண்ணியாய் இருந்தா இரவு தண்ணியைப் போட்டிட்டு வந்து வீட்டிலை சிவதாண்டவம் ஆடும் மனுசன்.."இந்த அடுப்போடை நான் படுகிற அவஸ்த்தைக்கு அவருக்கு வறட்டி வைகவேணுமோ கறி" சரசுவுக்கு கடுப்பாக இருந்தது...ஆனால் அடுத்த நிமிசமே ஆறுமுகத்தார் மேல் கழிவிரக்கமாகவும் இருந்தது..பாவம் என்ர மனுசன்...இவளவு காலமும் எங்கடை இந்த உடைஞ்சுபோன வாழ்க்கை வண்டியை அந்தமனிசன்தான் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு போகுது...இவ்வளவு கஸ்ரத்தையும் அந்தாள்த்தான் தனியச் சுமக்குது...மனதுக்குள் நினைத்துக்கொண்ட சரசுவுக்கு ஆறுமுகத்தார் மேல் அளவற்ற அன்பு பொங்கியது...முருக்கங்காய்க்கு இன்னும் கொஞ்சம் தூள்போட்டுக் கறி உறைப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்..ஆறுமுகத்தாருக்கு உறைப்பெண்டால் நல்லாய்ப் பிடிக்கும்..ஆளின்ர வெறிவாய்க்கு கறி நல்ல உறைப்பாக இருந்தால் கண்ணாலையும் மூக்காலையும் வடியவடியச் சந்தோசமாகச் சாப்பிடுவார்...

ஆறுமுகத்தார் வேர்த்துக்களைச்சுப் பதற்றத்தோட உள்ள வந்ததைப் பார்த்த சரசுக்கு விளங்கீட்டுது ஏதோ வில்லங்கம் எண்டு."என்னப்பா..? என்னாச்சு..? ஏன் இப்பிடி அரக்கப்பரக்க ஓட்டிவாறியள்...?"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்."எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே..? உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது..."ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்..?மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்.."ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தன் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்...? என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்..

ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டிருந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழுசுறாய்...?நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ..? உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு "இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்போட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்...

ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அபாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோழியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்...

நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்டுக்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்..."சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு..."ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்....

அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு..? ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ...? மனதிற்க்குள் திட்டியபடி"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி.."ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்...

ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுபடாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்...

அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந்தோடுவதற்க்கா நிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது...

தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் "சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்...

இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது..

ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்..

ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்...

ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது...?

இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜயரைக்கொண்டுபோனதும் ஆறுமுகத்தார் "ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்.."பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்...

ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது...

சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்..."உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்..."ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது...

ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிருக்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் "துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது...

இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு....

1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்..."ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே...? உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்..."ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது..."உண்மையாகவே ஆறுமுகத்தார்..? அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே..?உமக்குப் பின்னேரம் தாறன்..." ஆறுமுகத்தாரிடம் இருந்து மண்வெட்டியை வாங்கித் தோளில்ப் போட்டுக்கொண்டு முகத்தில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆறுமுகத்தார் தனியாளா வெட்டின ஆறடிக்கிடங்கை ஜயர் தனியாளாத்தூர்க்க வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்...

இருவேறுபட்ட உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் செலுத்தி வெற்றியடைந்திருக்கிறீர்கள் . இந்த முறையானது மிகவும் கடினமானது ஒன்றாகும் . நல்ல சொல்லாட்சியும் , கற்பனைவளமும் கைவரப்பெற்றவர்களாலேயே இது கைகூடும் . நீங்கள் அதில் முன்னேறியிருப்பது கண்டு மகிழ்வடைகின்றேன் :):):) 7 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பேச்சு வழக்கில் அந்தநாள் ஞாபகங்கள் வந்துபோயின.........

ஐயருக்கு வல்ல சீவன். :D ........பகிர்வுக்கு நன்றி ..

Link to comment
Share on other sites

எம்மவரின் அவலங்கள் பற்றிய பதிவு.

நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):):)

கோமகன்

ஏனிந்த கொலைவெறி

இரண்டு தரம் கதையை வாசிக்கமுடியுமா?

சுபாசுக்கு பாராட்டுக்கள்

கதைக்கும்

கதையின் தலைப்புக்கும்

அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட நாட்களின் பின், நல்ல நகைச்சுவைக் கதையை... ஈழத்தமிழில் வாசித்த திருப்தி :D:lol: .

பாராட்டுக்கள் சுபேஸ். பரிசாக ஒரு பச்சை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்ப எல்லோரும் போட்டி,போட்டுக் கொண்டு திறமாக எழுதுகிறார்கள் என்னைத் தவிர...சுபேசுக்கு பாராட்டுங்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்[எழுத வேண்டாம் என சொன்னால் நிறுத்தவா போறீங்கள்]

முதலில் நீங்கள் கதையை எழுதுங்கள்

வரும் வரவேற்பைக்கண்டு கொள்ளலாம் ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உங்கள் எழுத்து கதையின் பாத்திரங்களைக் கண்முன்

கொண்டு வந்து நிறுத்துகின்றது.

தொடருங்கள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், ஒரு எழுத்தாளனின் திறமை, வாசகர்களைக் கதையின் களத்துக்கே, கொண்டு செல்வதில் தான் தங்கியுள்ளது!

அதைத் திறமையாகச் செய்துள்ளீர்கள்!

உங்கள் கதையில் ஒவ்வொரு பாத்திரங்களும், உயிரோடு துடிக்கின்றன! நன்றிகள்!!!>>>>

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் :icon_idea: சுபேஸ் ஒரு சோகத்தை நகைச் சுவையோடு நகர்தியிருக்கிறீங்கள். நான் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறன். இதை படித்ததன் பிறகு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு :lol: :lol: ஆனாலும் உணர்வு ரீதியான ஒரு கதை சொல்லலில் அளவிற்கதிமான உவமான நகைச்சுவை வலிந்து திணித்ததுபோல எனக்கு ஒரு உணர்வு ஆனால் அது பலரிற்கு பிடித்திருக்கலாம். தொடருங்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுபேஸ். நன்றாக இருக்கு, சாத்தண்ணாவிற்கு வயிறு கலக்குது அதுதான்

Link to comment
Share on other sites

கதையில் உள்ள யதார்த்தம், அதில் இழையோடும் நகைச்சுவை மிக அருமை. இதனை வாசிக்கும் போது சிரிப்பும் வருகிறது , அதே நேரம் இந்தியன் ராணுவத்தால் நம் மக்கள் பட்ட இன்னல்களும் நினைவுக்கு வருகின்றன.

நடந்து முடிந்த நிஜ நிகழ்வுகளை நகைச்சுவையின் தன்மையோடு தந்த உங்கள் கதைக்கு மிக்க நன்றிகள்.

தொடர்ந்து எழுதுங்கள் ........... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குக் கருத்துக்களையும்,பாராட்டுக்களையும்,விமர்சனங்களையும் வைத்த எல்லோருக்கும் நன்றிகள்....

சாத்திரி அண்ணா! உங்களுடைய பார்வை சரியானதே..இதை எழுதி முடித்தபோது எனக்கும் அதே உணர்வு தோன்றியது...பலகதைகள் எழுதும்போது சில கதைகளை இப்பிடியும் எழுதுவம் எண்ட உந்துதலில்தான் எழுதினேன்...இதே முறைமையில் எல்லாக் கதைகளையும் எழுதமுடியாது...ஆனால் பேச்சுவழக்கில் எழுதப்படும் கதைகளை அதிகமானவர்கள் விரும்பி ரசித்துப் படிக்கிறார்கள் என்பது உண்மையே..இந்தக் கதையை எழுதி முடித்தபோது நான் சிந்திதேன் எனது சீரியஸான எழுத்து நடையை தொலைத்து விட்டேனோ என்று...அழகான தமிழ் நான் சுவாசிக்கும் மூச்சு..அதனால் கதைகளை கொஞ்சம் கலகலப்பான எழுத்து நடையிலும்,நினைவுப் பகிர்வுகளையும்,கவிதைகளையும் எனது சீரியஸான எழுத்து நடையிலும் எழுதுவம் எண்டு என்னை நானே சமாதானம் செய்திருக்கிறேன்..

Link to comment
Share on other sites

சுபேஸ்! அருமையான நடையுடன் அழகாக எழுதியிருக்கின்றீர்கள்.

கதை சுவாரஸ்யமாக இருந்தாலும்... அந்த நேரத்தில் அவ்விடத்தில் இருந்தவர்களின் பரிதவிப்பையும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக எழுதியிருக்கலாம். ஏனெனில், அவைகள் மறக்க முடியாத வலிகள்.

ஆனாலும் தங்கள் கதையின்படி எடுத்த முயற்சிக்கு.... பாராட்டுக்கள் சொல்லியே ஆகவேண்டும். அதிலும் அவற்றை மறைமுகமாக உணர்த்தித்தான் நின்றீர்கள்.

பாராட்டுக்கள் சுபேஸ். :)

(நான் பச்சை எழுத்தினை ஒரு பதில் கருத்தில் பாவிக்கின்றேன் என்றால் அந்த ஆக்கத்துக்கு பச்சை குத்தியுள்ளேன் என அர்த்தப்படும்!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.