Jump to content

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்


shanthy

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

Link to post
Share on other sites
 • Replies 62
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

மேற்படி உறவுக்கு தேவைப்பட்ட உதவியும் கிடைத்த உதவி விபரக்கணக்கு

உதவியோர் விபரம் :-

விசுகு – 500,00€

ஜீவா – 500,00€

சாந்தி – 600,00€

உதயம் - 116,42€ + 69,84€ = 186,26€

நுணாவிலான் - 96,45€

அயந்தன் - 246,65€

மொத்தம் - 2129,36€

தன்னை எண்ணாமல் தனது குடும்பத்தை எண்ணாமல் இன்றும் மற்றவர்களையே நேசிக்கிற உறவின் பிணைக்காக உதவியை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

சற்று முன்னர் வரையும் இருந்த அந்தரம் மாறி ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

5352.jpg

20ம் திகதி நீதிமன்றுக்கு அந்தத்தோழன் நிம்மதியாய் சென்றுவருவார். 25ம் திகதி வழக்கு முடிவு கையில் கிடைக்கும். முடிவு கிடைத்ததும் உதவியவர்கள்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

தனிமடல் அனுப்பிவிட்டேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதவிய அனைவருக்கும் மிக மிக நன்றிகள். குறுகிய காலத்தில் செய்த உதவி அளப்பெரியது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

விபரம் கொடுத்துவிட்டேன். நாளைதான் எடுக்க முடியும். மீதி விபரங்கள் தனிமடலில் போடுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

குழவி உங்கள் நண்பர் அனுப்பி வைத்த 651,83€உதவி பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றிகள்.

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன்.

உங்கள் உதவி நேற்று உரியவரின் மனைவி பெற்றுக்கொண்டுள்ளார். மிக்க நன்றிகள்.

புலிக்குரல் - 5000.00ரூபா

கருத்தக்கந்தசாமி - 5000.00ரூபா

உதவிய அனைவருக்கும் நன்றிகள். நேற்று அவர்களுக்கு மொத்தம் 3லட்சரூபா கொடுக்கப்பட்டுவிட்டது. சில தினங்களில் முடிவு அறியத்தருவார்கள். கிடைத்ததும் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அக்கா....நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.......குறுகியகாலத்தில் விரைவாக சேர்க்கப்பட்ட மிகப்பெறுமதியான உதவி யாழ் உறவுகள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்!!!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இணைந்திருப்பதில், இவ்வாறான செயற்பாடுகளால், உங்களால், பெருமை.

அனைவருக்கும் நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை இங்கும் எங்கும் கூறுவது இதைத்தான்

புலம் பெயர் தமிழர் நாம் பொறுப்பெடுக்க முடிவெடுத்தால்(சிறியளவில் என்றாலும் எல்லோரும்)

ஈழத்தில் இல்லாமை என்பதை விரட்டிடலாம்.

நன்றி

ஓடி வந்து உதவிய மற்றும் கருத்தால் ஊக்குவித்த உறவுகள்; அனைவருக்கும்.

தாயகத்திலிருந்து உதவிய புலிக்குரலுக்கு என் பிரத்தியேக நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா..... என் மக்களுக்கான பணிகளில் என் பங்கு சிறியதே.... நிமிர்வான நிலைக்கு தாயகமக்கள் நிமிர்ந்தெழும் வரை உங்கள் பணிகள் மிக அவசியம், அவசரம்...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா,  இத்தனை தேசிய தூண்கள் இருக்கும் போது வாய் பேச்சு தேசிய பொல்லுகளை பற்றி ஏன் கவலை?

பொல்லுகள் தாமும் ஒன்றும் செய்யாமல் மற்றவரின் காலையும் வாருவார்கள்.

எல்லா தமிழ் கருணை உள்ளங்களுக்கும் நன்றி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன். உத‌விய‌ அனைத்து உள்ளங்க‌ளுக்கும் ந‌ன்றி!

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மேற்படி உறவுக்கு உதவியவர்களுக்கு மீண்டும் நன்றிகள். நீங்கள் உதவிய உறவின் வழக்கு 20ம் திகதி விசாரணைக்க எடுக்கப்பட்டது. வழக்கிற்கான முடிவு அறிவிப்பதாக வழங்கப்பட்ட 24ம் திகதி திடீரென மகசீன் சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த உறவின் முடிவு வருகிற கிழமை 6ம் திகதி அறிவிக்கப்படுமென நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் திகதிக்குப் பின்னர் முடிவு பற்றி அறியத்தரப்படும்.

24ம் திகதி ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட 220 கைதிகளுக்கான அவசர நிவாரண உதவிகள் ஒழுங்குகளில் நேரம் போனமையால் உடன் கருத்திடம முடியவில்லை. தாமதமான பதிலுக்கு உறவுகள் மன்னிக்கவும். 6ம் திகதிக்காக அந்த உறவின் குடும்பத்தோடு நானும் காத்திருக்கிறேன்.

அவரது விடுதலைக்கான இதர ஒழுங்குகள் செய்தாயிருற்கு. சட்டமாதிணைக்களத்தின் முடிவு தான் மீதமிருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பதிலை எதிர்பார்த்தபடி இருந்தோம்

நல்ல முடிவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக பிரார்த்திக்கின்றோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் பல தரம் நல்ல முடிவை எதிர்பார்த்து இப்பகுதிக்கு பல தரம் வந்து போனேன்......ம்...ம்.......அந்த உறவின் விடுதலைக்காக பிரார்த்திக்கின்றேன் நல்லதொரு முடிவு கிடைக்கும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதவி தந்து ஒரு உயிரை மீளப்பெற்றுத்தந்த அனைத்து உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். உங்கள் அனைவரையும் கையடுத்து வணங்குகிறேன். நாங்கள் விடுதலை வேண்டிய உறவின் மீட்சிக்கான பலன் கிடைத்துவிட்டது. தகவல் கிடைத்த இந்நிமிடமே இக்கருத்தை இடுகிறேன்.

மேலதிகமாக ஒருலட்சம் கட்டுமாறு திடீர் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டரை மணித்தியால அவகாசத்தில் அதையும் ஒழுங்குபடுத்தி எடுத்த முயற்சி வெற்றியாகியிருக்கிறது. நீண்டகாலம் நாட்டுக்காக வாழ்ந்த உறவின் தியாகம்தான் அந்த மீட்டெடுத்துள்ளது. கடவுள்கள் இருந்தால் அவர்களது கருணை இன்னும் சிறையில் அடைபட்டிருக்கிற எல்லோருக்கும் கதவு திறக்க வேண்டும்.

உங்கள் உதவி பெற்ற உறவு விரைவில் உங்களிடம் பெற்ற உதவிக்கான நன்றிக்கடிதம் அனுப்புவார் கிடைத்ததும் உதவியவர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். கடைசி நாள் வரையும் நம்பிக்கை தந்து ஏமாற்றத்தை பரிசளித்தவர்கள் மத்தியில் கேட்டவுடன் ஓடிவந்து உதவிய உறவுகளே உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

விசுகு அண்ணாவின் கருத்தே எனதும்... :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல்

அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

இதையும் பாருங்கள் சாந்தியக்கா

என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.