Jump to content

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ரதி

தெருவால் போறவன் தங்கள் முகத்துக்கு மேல் காறித்துப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்???

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் உங்களப் பொறுத்த வரை மணி இந்தியா மேலாதிக்கத்திற்காக பட‌ம் எடுக்கிறார் என்டால்,அவர‌து பட‌ங்களை பிடிக்கவில்லை என்டால் ஏன் திரும்ப,திரும்ப அவர‌து பட‌த்தைப் பார்த்து அவருக்கு வருமானத்தையும்,உங்களுக்கு நோயையும் தேடிக் கொள்கிறீர்கள்?

இனி வரும் படங்களையும் கண்டிப்பாக DVD லாவது பார்ப்பேன். காரணம், மிக சிம்பிள். ஒருவரை விமர்சிக்கவும், எல்லாராலும் தலைக்கு பின் ஒளிவட்டம் பிடிக்கப்பட்டுக் கொண்டும் இருப்பவரின் உண்மையான அரசியலை அறியவவும் கண்டிப்பாக அவரது படைப்பை பார்த்தே ஆகவேண்டும். மணிரத்தினத்தின் இக்காலத்தைய படங்கள் (பம்பாய் படத்தின் பின்னான படங்கள்) வியாபாரரீதியில் வெற்றி பெற்ற படங்கள் அல்ல; ஆனால் அரசியல் ரீதியில் பல்வேறுபட்ட சலனங்களை ஏற்படுத்திய படங்கள்.

பல முறை சோபா சக்தியின் அல்லது அவரைப் போன்றவர்களின் எழுத்தை கடுமையாக விமர்சிப்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வியே 'அவரது எழுத்தை முழுமையாக வாசித்துள்ளீர்களா' என்பதுதான். ஒன்றை முழுமையாக நாமே அறியாமல் கதைக்க கூடாது என்பது விமர்சனம் செய்ய முனைபவர்களுக்கு இருக்கவேண்டிய மிகக் குறைந்தபட்ச தகுதி

மணி இப்போது 'கடல்' என்ற படம் எடுக்கப்போகின்றார். சினிமா வட்டாரம் 'கடல்' ஈழப்பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்கின்றனர். கண்டிப்பாக வந்தவுடன் பார்த்தே ஆவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் ரதி

தெருவால் போறவன் தங்கள் முகத்துக்கு மேல் காறித்துப்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்???

என்னைப் பார்த்து நாய் குரைக்குது என்று பதிலுக்கு நானும் நாயைப் பார்த்துக் குரைத்தால் எனக்கும்,நாய்க்கும் என்ன வித்தியாசம் விசுகு அண்ணா?

Link to comment
Share on other sites

எதோ மணிரத்னம் இந்திய மேலாதிக்கதிற்காகவும், பிராமணனுக்காகவும் படம் எடுப்பது போல் அல்லவா எல்லாறும் இங்கே நடக்குது சரி மணிரத்னம் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் எத்தனை சிறந்த திரைப்படங்கள் வந்தன நான் கீழே குறிப்பிடும் படங்களில் பிராமணம், இந்திய தேசியம் எங்கு இருக்கு என்று சொல்ல முடியுமா?

1.பல்லவி அனு பல்லவி(கன்னடா) - திருமணமானமாகி விவாரத்து ஆன பெண்ணூக்கும் அவரை விட வயது குறைந்த பெண்ணுக்கும் இடையிலான உறவை கதையாகக் கொண்ட படம்

2.உனரு(மலையாளம்)- தொழிற்சங்கங்கள் பற்றிய திரைப்படம்

3.மவுன ராகம்- காதலனை இழந்து, பிடிக்காத திருமணத்தில் சிக்குன்ட பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய திரைப் படம்

4. நாயகண்- மும்பாயில் உண்மையில் இருந்த தாதாவான வரதராஜ முதலியார் பற்றிய திரைப் படம்

5. தளபதி- அனாதை ஒருவனுக்கும் அவனது நண்பனுக்கும் இடைலான நட்பை பற்றிய படம், இதில் நாயகன் விதவை ஒருவரை திருமணம் செய்வார் எங்கே போனது உங்கள் பிராமணம்.

6.கீதாஞ்லி (தெலுகு)- மரணிக்கப் போகும் இருவருக்கிடைலான காதல் கதை,

7.அக்கினி நட்சதிரம்- 2 மனைவிகளின் மகன்மாருக்கு இடைலான பிரச்சனைகளைப் பற்றிய படம்

8 அஞ்சலி- மன வளர்சி குறைந்த குழந்தையை பற்றிய படம்

9.திருடா திருடா- இரு சில்லறை திருடர்கள், கோடிகணக்கன பணத்துடன் வில்லன் கூட்டத்டிடம் மாடி அவர்கள் படும் அவஸ்த்தையை நகைச்சுவையாக காட்டிய படம்

10.இருவர்- கருணாநிதி வாழ்க்கை வரலாறு பற்றிய படம்

11.அலைபாயுதே- விளயாட்டக திரிந்த வாலிபனுடைய காதல் படம்,மிக மிக யதார்த்தமா எடுத்த படம் பார்க்க பார்க்க சலிக்கத படம்

12.ஆயுத எழுத்து- வாழ்க்கையில் 3 வேறு திசைகளில் சென்றவர்கள் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அவர்களில் ஏற்படும் மாற்றங்களை காட்டிய பட்ம்

இப்படி எத்தனையோ பிராமணம், இந்திய தேசியவாதம் கலக்காத படங்கள் இருக்க ஒரு சில படங்களை மட்டும் ஏன் ஆராய்கிறீர்கள்

மணிரத்னம் ஒரு மிக்ச் சிறந்த இயக்குனர், அதை மலினப் படுத்த வேண்டாம் !!!!!

Google இல் நன்றாக தேடியுள்ளீர்கள்.

மணியின் படங்களை ரோஜாவுக்கு முன் பின் என்று பிரிக்கலாம். ரோஜாவிற்கு முன் அவரிடம் இருந்தது நல்ல சினிமாவுக்கான தேடல். தமிழில் மட்டுமே படங்கள் எடுத்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில் அவை அரசியல் ரீதியான தாக்கத்தை கொண்டு இருக்கவில்லை. நாயகன் போன்ற தமிழ் சினிமாவின் போக்கையை மாற்றி அமைத்த படைப்பை தந்து கொண்டு இருந்தார். ரோஜா படத்தில் இருந்து அவரின் 'இனிப்பு தடவிய விசம்' போக்கிலான படங்கள் வர ஆரம்பித்து அகண்ட இந்தியா, இந்திய தேசியம் என்று பேச ஆரம்பிக்கும் போதுதான் அவரது இந்திய தேசியத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் ஆதிக்க வெறி வெளிப்பட ஆரம்பித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் படங்களையும் கண்டிப்பாக DVD லாவது பார்ப்பேன். காரணம், மிக சிம்பிள். ஒருவரை விமர்சிக்கவும், எல்லாராலும் தலைக்கு பின் ஒளிவட்டம் பிடிக்கப்பட்டுக் கொண்டும் இருப்பவரின் உண்மையான அரசியலை அறியவவும் கண்டிப்பாக அவரது படைப்பை பார்த்தே ஆகவேண்டும். மணிரத்தினத்தின் இக்காலத்தைய படங்கள் (பம்பாய் படத்தின் பின்னான படங்கள்) வியாபாரரீதியில் வெற்றி பெற்ற படங்கள் அல்ல; ஆனால் அரசியல் ரீதியில் பல்வேறுபட்ட சலனங்களை ஏற்படுத்திய படங்கள்.

பல முறை சோபா சக்தியின் அல்லது அவரைப் போன்றவர்களின் எழுத்தை கடுமையாக விமர்சிப்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வியே 'அவரது எழுத்தை முழுமையாக வாசித்துள்ளீர்களா' என்பதுதான். ஒன்றை முழுமையாக நாமே அறியாமல் கதைக்க கூடாது என்பது விமர்சனம் செய்ய முனைபவர்களுக்கு இருக்கவேண்டிய மிகக் குறைந்தபட்ச தகுதி

மணி இப்போது 'கடல்' என்ற படம் எடுக்கப்போகின்றார். சினிமா வட்டாரம் 'கடல்' ஈழப்பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்கின்றனர். கண்டிப்பாக வந்தவுடன் பார்த்தே ஆவேன்.

ஒன்றைப் பற்றி தெரியாமல் அதைப் பற்றி விமர்சிக்க கூடாது என்பது தான் என் கருத்தும் ஆனால் இங்கே சிலர் ஒரு பக்கத்தால் புறக்கணி இலங்கை,இந்தியப் படங்களைப் புறக்கணிப்போம் என சொல்லிக் கொண்டு மறு பக்கத்தால் அதை விமர்சிப்பதைத் தான் ஏற்க முடியவில்லை[ஒன்றைப் புறக்கணித்தால் அதை எப்படி விமர்சிக்க முடியும்?]...நீங்கள் படங்கள் வேண்டுமானால் பாருங்கள்,தமிழ் தொலைக் காட்சிகளையும் பாருங்கள்...பார்த்தால் தான் அந்த தொலைக் காட்சியில் என்ன போடுகிறார்கள்,அந்தப் படம் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் ஒரு பக்கத்தாலே இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு மறு பக்கத்தாலே புறக்கணி எனக் கோசம் போடுவது தான் சகிக்க முடியவில்லை...மணி எடுக்கப் போகும் "கடல்" திரைப்படத்தை எங்களுக்கு ஆதரவாக எடுத்தாரானால் அவர் முன்னர் எடுத்த படங்களை விமர்சனம் செய்வதை தவிர்த்து அவரை எங்கள் ஆதரவாளராக ஏற்றுக் கொள்வீர்களா?...இவர் ஒரு வியாபாரி,தனக்கென்று ஒரு பாணி வைத்து விமர்சனம் செய்கிறார்...தெரிந்தோ,தெரியாமலோ நாங்களும் இவர‌து வியாபார‌த்திற்கு துணை போகின்றோம்...அவர‌து பட‌ம் தொட‌ர்ச்சியாக தோல்வியடைந்தாலும் நாங்கள் தொட‌ர்ந்து இவர‌து பட‌ங்களைப் பார்ப்பதால் தானே இவரும் தொட‌ர்ந்து பட‌ம் எடுக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பார்த்து நாய் குரைக்குது என்று பதிலுக்கு நானும் நாயைப் பார்த்துக் குரைத்தால் எனக்கும்,நாய்க்கும் என்ன வித்தியாசம் விசுகு அண்ணா?

நாய் குரைப்பதோடு நிறுத்தினால் பரவாயில்லை

அது தன் வீட்டை சுத்தம் என்று காட்டுவதற்காக என் வீட்டுக்குள் என் சோற்றுக்குள் அசுத்தத்தை விட்டால் ...???

Link to comment
Share on other sites

ஒன்றைப் பற்றி தெரியாமல் அதைப் பற்றி விமர்சிக்க கூடாது என்பது தான் என் கருத்தும் ஆனால் இங்கே சிலர் ஒரு பக்கத்தால் புறக்கணி இலங்கை,இந்தியப் படங்களைப் புறக்கணிப்போம் என சொல்லிக் கொண்டு மறு பக்கத்தால் அதை விமர்சிப்பதைத் தான் ஏற்க முடியவில்லை[ஒன்றைப் புறக்கணித்தால் அதை எப்படி விமர்சிக்க முடியும்?]...நீங்கள் படங்கள் வேண்டுமானால் பாருங்கள்,தமிழ் தொலைக் காட்சிகளையும் பாருங்கள்...பார்த்தால் தான் அந்த தொலைக் காட்சியில் என்ன போடுகிறார்கள்,அந்தப் படம் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் ஒரு பக்கத்தாலே இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு மறு பக்கத்தாலே புறக்கணி எனக் கோசம் போடுவது தான் சகிக்க முடியவில்லை...மணி எடுக்கப் போகும் "கடல்" திரைப்படத்தை எங்களுக்கு ஆதரவாக எடுத்தாரானால் அவர் முன்னர் எடுத்த படங்களை விமர்சனம் செய்வதை தவிர்த்து அவரை எங்கள் ஆதரவாளராக ஏற்றுக் கொள்வீர்களா?...இவர் ஒரு வியாபாரி,தனக்கென்று ஒரு பாணி வைத்து விமர்சனம் செய்கிறார்...தெரிந்தோ,தெரியாமலோ நாங்களும் இவர‌து வியாபார‌த்திற்கு துணை போகின்றோம்...அவர‌து பட‌ம் தொட‌ர்ச்சியாக தோல்வியடைந்தாலும் நாங்கள் தொட‌ர்ந்து இவர‌து பட‌ங்களைப் பார்ப்பதால் தானே இவரும் தொட‌ர்ந்து பட‌ம் எடுக்கிறார்

மற்றவர்கள் சார்பாக நான் கதைக்க முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் எவரையாவது / எதையாவது நன்றாகவோ அல்லது மோசமாகவோ ஊடகங்களும் அமைப்புகளும் விமர்சித்தால், அவற்றை பற்றிக் கதைக்கும் முன், நிச்சயம் நானே அதைப் பற்றி அறிந்த பின் / பார்த்த பின் தான் விமர்சிப்பேன்

உங்களின் அடுத்த கேள்விக்கான பதில். 'கடல்' படம் உண்மைகள் பேசும் படமாக இருந்தால் நிச்சயம் அந்தப் படத்தை நல்லதென்றே கூறுவேன். அப்படி கூறும் போது, அவரின் மற்ற படங்கள் நல்லதென்று கூறத் தேவையான அவசியம் எங்கு இருந்து வருகின்றது?

அத்துடன், மணிரத்தினம் ஒரு வெறும் வியாபாரி என்று சொல்ல மாட்டேன்..அவர் எடுக்க முனையும் களங்கள் முற்றிலும் அரசியல் பேசும் களங்கள். வெறும் வியாபாரியாக இருந்தால், சங்கர் போன்று படம் எடுக்கவே முனைவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியும் சங்கரும் ஒருவகையில் ஒரே ரகம்தான்

இருவரும் படம் வெளிவரமுன்பே பேசவைத்துவிடுவர்

ஆனால்

சங்கர் தொழில் நுட்பம் சார்ந்து பேசவைப்பார்

மணி அரசியல் நொடிவைத்து பேசவைப்பார்.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் சில வருடங்கள் இருந்ததால் ஏற்பட்ட அனுபவமிது .கணையாழி ,சுபமங்களா,உயிர்மை , புதிய ஜனநாயகம்,புதிய கலாசாரம் போன்ற போன்ற பத்திரிகைகள் வாசிக்க நேரிட்டது.குறிப்பாக புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என நான் குழம்பியதுண்டு.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குரலாகத்தான் அவை இருக்கும், ஆனால் வெகு எக்ஸ்றீம் ஆன நடைமுறைக்கு ஒவ்வாத விதத்தில் ஆக்கங்கள் இருக்கும் அதனால் பெரும்பான்மையோரை அடைவதில்லை.பல சமயங்களில் முட்டையில் மயிர் பிடுங்குவது போலும் எல்லாவற்றிலும் எவரிலிலும் குற்றம் பிடிப்பது போலும் இருக்கும்.நடைமுறையில் ஏதும் செய்கின்றார்களோ என்றால் அதுவும் பெரிதாக இல்லை.

ஒரு பத்திரிகையாளர் சொன்னார் தம்மை அடையாள படித்திக்கொள்ள ,தமக்கு ஒரு அங்கீகாரம் வேண்டித்தான் பெரும்பாலானோர் இவற்றில் எழுதிகின்றார்கள் அந்த அங்கீகாரம் கிடைத்தும் எவரை வைத்து வாங்கினார்களோ அவர்களுடன் தான் இவர்களும் சேர்ந்து பின்னர் பயனிக்கின்றார்களா என்று .

இணையங்கள வந்தபின் அதே நிலைப்பாட்டில் பல இணையங்கள் உருவாகிவிட்டன .அவற்றை வாசிக்கவெளிகிட்டால் நாம் எதையும் பிழையான கோணத்தில் பார்க்கும் மனிதர்களாகிவிடுவோம்.

Link to comment
Share on other sites

பல முறை சோபா சக்தியின் அல்லது அவரைப் போன்றவர்களின் எழுத்தை கடுமையாக விமர்சிப்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வியே 'அவரது எழுத்தை முழுமையாக வாசித்துள்ளீர்களா' என்பதுதான். ஒன்றை முழுமையாக நாமே அறியாமல் கதைக்க கூடாது என்பது விமர்சனம் செய்ய முனைபவர்களுக்கு இருக்கவேண்டிய மிகக் குறைந்தபட்ச தகுதி

நான் வாசித்து அறிந்து கொண்ட முறையில், தமிழ்த் தேசியப் பூசாரிகள் எவ்வளவுக்கு எவ்வளவு மாற்றுக் கருத்து மாணிக்கங்களிடம் வெறுப்பை உமிழ்கிறார்களோ அதேயளவு ஷோபா சக்தியின் படைப்புக்களும் புலி எதிர்ப்பு வாதத்தையே முதன்மைப்படுத்துகின்றன. ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை. ஆதிக்க வெளிப்பாடுகளில்தான் மாற்றங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தில் வந்த அழகில்லாமல் இருந்த சுஹாசினியின் காரக்டர் பிடிக்கும், ஆனால் கதை மறந்துவிட்டது! அவர் ஏன் அழகான கதாநாயகர்களை இப்போது தேடுகின்றார் என்பது புரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநனருக்கு எப்போதும் சொந்தமாக கற்பனை திறன் இருக்கவேண்டும்.. எல்லாம் கொஞ்சம் காலம் தான்.. தளபதி படத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.. அது துரியோதனன் கர்ணன் இடையே ஆனது .. ராவணன் ஒரிஜனல் ராமாயணம்.. அடுத்து பொன்னியின் செல்வன்.. கன்னத்தில் முத்தமிட்டால் ..? சொந்த சரக்கு போயிந்து.. கோவிந்தா.. கோவிந்தா.. இனிமேல் எதாவது ஒரு சிக்கலை முன்னிலை படுத்து தமது அதில் சொந்த கருத்த திணித்து ... அதற்கு பாலீஸ் போட்டு எப்பா சாமி..

உட்டாலங்கடி கிரி .. கிரி..

சரக்கு தீர்ந்து போச்சு சிரி.. சிரி...

டிஸ்கி:

இது கோடம்பாக்த்து லேட்டஸ்ட் ஸ்பீச்.... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் சார்பாக நான் கதைக்க முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் எவரையாவது / எதையாவது நன்றாகவோ அல்லது மோசமாகவோ ஊடகங்களும் அமைப்புகளும் விமர்சித்தால், அவற்றை பற்றிக் கதைக்கும் முன், நிச்சயம் நானே அதைப் பற்றி அறிந்த பின் / பார்த்த பின் தான் விமர்சிப்பேன்

உங்களின் அடுத்த கேள்விக்கான பதில். 'கடல்' படம் உண்மைகள் பேசும் படமாக இருந்தால் நிச்சயம் அந்தப் படத்தை நல்லதென்றே கூறுவேன். அப்படி கூறும் போது, அவரின் மற்ற படங்கள் நல்லதென்று கூறத் தேவையான அவசியம் எங்கு இருந்து வருகின்றது?

அத்துடன், மணிரத்தினம் ஒரு வெறும் வியாபாரி என்று சொல்ல மாட்டேன்..அவர் எடுக்க முனையும் களங்கள் முற்றிலும் அரசியல் பேசும் களங்கள். வெறும் வியாபாரியாக இருந்தால், சங்கர் போன்று படம் எடுக்கவே முனைவார்.

"கட‌ல்" சில நேர‌ம் எமக்கு ஆதர‌வாக எடுக்க கூடும் அதற்கு பிறகு அவர் எடுக்கும் "ஆமி" இந்தியன் ஆமிக்கு ஆதர‌வாக எடுக்க கூடும்...மணி செய்வது வியாபாரம்,நாங்கள் செய்வது முட்டாள்த்தனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தில் வந்த அழகில்லாமல் இருந்த சுஹாசினியின் காரக்டர் பிடிக்கும், ஆனால் கதை மறந்துவிட்டது! அவர் ஏன் அழகான கதாநாயகர்களை இப்போது தேடுகின்றார் என்பது புரியவில்லை!

எழுத வெட்கமாக இருந்தால் ............... ஓகே.

வெட்கத்தை மறைக்க இப்படி முழு பூசணிகாயையா "தெரியவில்லை" என்று மறைக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் உங்களப் பொறுத்த வரை மணி இந்தியா மேலாதிக்கத்திற்காக பட‌ம் எடுக்கிறார் என்டால்,அவர‌து பட‌ங்களை பிடிக்கவில்லை என்டால் ஏன் திரும்ப,திரும்ப அவர‌து பட‌த்தைப் பார்த்து அவருக்கு வருமானத்தையும்,உங்களுக்கு நோயையும் தேடிக் கொள்கிறீர்கள்?

உண்மையிலேயே தெரியாமல்த்தான் கேட்கிறீர்களா அல்லது சும்மாவா என்று தெரியவில்லை. ஒருவரின் படைப்பை பார்க்காமலேயே அவரை விமர்சிப்பது எப்படி என்று சொல்லுங்களேன். மணிரத்திணத்தின் ஒவ்வொரு படத்தையும் ஒருமுறையல்ல பலமுறை பார்த்திருக்கிறேன். அவரின் அரைவாசிப்படங்களின் வசனங்கள் கூட எனக்கு மனப் பாடம். நாயகன், தளபதி, இதயத்தைத் திருடாதே, மவுனராகம், திருடா திருடா....இப்படிப் பல படங்களை நான் ரசித்திருக்கிறேன். அதேபோல பின்னர் வந்த அரசியல் கலப்புப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரின் அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான்.

அவரின் படங்களை இன்னும் நான் பார்ப்பேன். ஏனென்றால் அவர் ஒரு தரமான படைப்பாளி. அதற்காக அவரின் கருத்துக்களுடன் ஒத்துபோகவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

கமலகாசன் எனது அபிமான நடிகர். அதற்காக அவரின் அரசியல் எனக்குப் பிடிக்கும் என்பதில்லை. அதுபோலத்தான் மணிரத்தினமும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எல்லாம் தெரிஞ்ச அம்புஜம் - நடிகை சுஹாசினி!!

Share

அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.

அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.

உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.

மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.

அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.

இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.

native%2Bfaces.jpg

இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.

அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.

ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்:எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.

இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?

angaditheru.jpg

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?

இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))

சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

http://thekkikattan.blogspot.com/2012/01/blog-post.html

Link to comment
Share on other sites

சுகாசினி தனது முகம் அழகா என்று கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

அவவுக்கு தான் ஒரு ஜெனோலியா, அமலா பால், சினேகா என்ற நினைப்பு.

உங்கட சண்டையில் ஏன் அமலா பாலை இழுக்கிறீங்கள்? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

http://thekkikattan..../blog-post.html

அத்தனையும் தமிழில் இருக்கும் போது

இதை மட்டும் ஏன் ஆங்கிலத்தில்

எழுதியிருக்கின்றார்கள்.

இது தான் சுகாசினி விடயமும்

Link to comment
Share on other sites

ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவல் பதம். மணிரத்தினத்துக்கு, ரோஜா, மும்பாய், குருதிப்புணல், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே போன்றவையே போதும், அவர் யாரென்பதைக் காட்ட. அவரின் எல்லாப் படங்களளையும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

குருதிப்புனல் மணிரத்னம் படம் இல்லையே?

மேலும் அவர் அரசியல் பிடிக்காமல் போவதற்கு அவர் அரசியல்வாதியல்லவே?

அவர் எடுக்கும் படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்.

நான் சிலரின் படங்களை பார்ப்பதே இல்லை. அதனால் எனக்கு நேரம் மிச்சம்.

Link to comment
Share on other sites

இயக்குநனருக்கு எப்போதும் சொந்தமாக கற்பனை திறன் இருக்கவேண்டும்.. எல்லாம் கொஞ்சம் காலம் தான்.. தளபதி படத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.. அது துரியோதனன் கர்ணன் இடையே ஆனது .. ராவணன் ஒரிஜனல் ராமாயணம்.. அடுத்து பொன்னியின் செல்வன்.. கன்னத்தில் முத்தமிட்டால் ..? சொந்த சரக்கு போயிந்து.. கோவிந்தா.. கோவிந்தா.. இனிமேல் எதாவது ஒரு சிக்கலை முன்னிலை படுத்து தமது அதில் சொந்த கருத்த திணித்து ... அதற்கு பாலீஸ் போட்டு எப்பா சாமி..

உட்டாலங்கடி கிரி .. கிரி..

சரக்கு தீர்ந்து போச்சு சிரி.. சிரி...

டிஸ்கி:

இது கோடம்பாக்த்து லேட்டஸ்ட் ஸ்பீச்.... :D :D

பல இயக்குனர்கள் தாமே கதையை எழுதுவதில்லை. நல்ல கதைகளை சிறந்த திரைக்கதைகளாக மாற்றி இயக்குவதே அவர்கள் தனித்திறமை. சரித்திர கதைகளை நல்ல திரைக்கதைகளாக்கி படம் பண்ணுவது ஹாலிவுட்டில் கூட நடக்கும் சங்கதி.

இன்னமும் பார்க், பீச் என்று கதாநாயகனும் கதாநாயகியும் நடனமாடும் படங்களைத்தான் கோடம்பாக்கம் ரசிக்கிறது. நல்ல படங்களுக்கு தியேட்டர் கூட கிடைப்பதில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருதிப்புனல் மணிரத்னம் படம் இல்லையே?

மேலும் அவர் அரசியல் பிடிக்காமல் போவதற்கு அவர் அரசியல்வாதியல்லவே?

அவர் எடுக்கும் படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்.

நான் சிலரின் படங்களை பார்ப்பதே இல்லை. அதனால் எனக்கு நேரம் மிச்சம்.

குருதிப்புணல் கமலின் படம்.

உங்களின் அறிவுரைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

குருதிப்புணல் கமலின் படம்.

உங்களின் அறிவுரைக்கு நன்றி.

இது அறிவுரையல்லவே ரகுநாதன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருதிப்புனல் மணிரத்னம் படம் இல்லையே?

இதிலிருந்து என்ன தெரியுது

அவர்கள் எல்லோருமே ஒரே குடும்பம் என்றே கணக்கெடுக்கப்படுகின்றனர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.