Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவில் இன்று

இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday :icon_mrgreen: )

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை

காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன்

விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து :o

0cfff6b0-5ae1-4c87-baab-855e38f1e33f_500.jpg

12eb0c92-f46d-47b1-aac8-c8d2d5fd5169_500.jpg

23a55957-951d-4794-86e4-bae273bc50fc_500.jpg

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

Link to comment
Share on other sites

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

நானே வெளியிட்ட புத்தகத்தில் அன்றே கூறியிருந்தேன். இதற்கு ஒரு வழி சொல்கின்றேன் கேளுங்கள் என. ஆனால் யூதர்கள் கேட்கவில்லை.

உலக நடப்புக்களைக்கவனிக்கவில்லை.

இன்று தமக்குள் அதுவும் தமது குடும்பத்துக்குள் குத்துப்பட்டு அழிகின்றனர்.

நான் அன்றே எழுதினேன்......................................தொடரும்..................

:( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, சைக்கிள்ள ஆர் எங்கட அர்ஜுன் ரணதுங்க அண்ணையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வேலைக்குப் போகும் வழியில் ஒரு ட்ரக் மோதி பெண்ணொருவர் அபாயநிலையில் இருந்தார் வழிகள் அடைக்கப்பட்டதால் வேலைக்கு லேட்

இன்று நேற்று நான் கண்ட விபத்திற்கு அடுத்த இரு சந்திகளில் இருவேறுவாகனவிபத்துகள் இன்று வேலைக்கு லேட்.... :(

Link to comment
Share on other sites

சமூக விரோதிகளுக்கு எம்மவர் செய்யும் இப்படியான செய்கைகளை சுட்டிக்காட்டும் போது கடுப்பு ஏறத்தான் செய்யும் .

90 களில் டொரான்டோவில் இடம் பெற்ற எம்மவரின் வன்முறைகளால் ஒரு கலைநிகழ்ச்சி வைக்க மண்டபம் எடுக்க முடியாத நிலையும் ,சில மண்டபங்கள் பொலிஸ் பாதுகாப்பு இருந்தால் மாத்திரம் என்றும் (அதற்கு இரண்டாயிரம் டொலர் வரும் )உதைபாந்தட்டம் வைக்க மைதானம் கொடுக்கமாட்டதாத நிலையும் ,எம்மவர் ஆட்டத்திற்கு நடுவர்கள் வரமாட்டம் என்ற நிலையும் இருந்தது .மைதானம் எடுக்க ,மண்டபம் எடுக்க அலைந்தவ்ர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்

அதைவிட பாடசாலைகளில் ,வேலைத்தளங்களில் தமிழன் என்றால் வன்முறையாளன் என்ற பெயர் கூட உருவாகி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர்கள்தான்இருக்கின்றார்கள்.

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .அதைவிட 2009 இற்கு பின் எதற்கெடுத்தாலும் நாட்டில போராட்டம்,விடுதலை ,தேசியம் என்று சுத்தி திரிந்தவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது

சர்வதேசம் நாட்டில் செய்தது ? அதை ஏன் எழுதுவான் .

Link to comment
Share on other sites

இவ்வளவும் எழுதும் அர்சுனுக்கு அமெரிக்க ஈரூந்து படை ஆப்கான மக்களின் பிணத்துக்கு மேல் என்ன நடந்தது (சரி அல்லது பிழை) என எழுத பயம் அல்லது பக்தி இருக்க வேண்டும்(அமெரிக்கர்களிடம்).

மற்றைய இனத்தின் கெட்டவைகள் இவருக்கு தெரியாதது போல் நடிப்பது இவர் எப்படியான நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

இல்லை வந்திருக்கின்றது, இருந்திருக்கின்றது.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற 9/11 க்குப்பிறகான காலத்தில் உண்மையான போராட்டம் அகப்பட்டுவிட்டது. கன்சவேட்டிவ் அரசு இன்று ஓரளவுக்கு எமக்காக குரல் கொடுக்கின்றது, ஏமாந்தது சிங்களத்திடம்.

Link to comment
Share on other sites

ரொறன்றோ காவல்துறை போதைப் பொருட் தடுப்புப் பிரிவினருக்கு எதிரான வழக்கு இன்று ஆரம்பமாகிறது

main_10749.jpg

ரொறன்றோ காவல்துறையின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

சந்தேக நபர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தையும், போதைப் பொருட்களையும் கொள்ளையிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

காவல்துறை ஆவணங்களில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, தமது குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது வழக்கு இடம்பெறம்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு அவர்கள் மீது முதன் முறையாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை மிகுந்த கால தாமதமாக இடம்பெறுவதாக முடிவு செய்த நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு அவர்கள் மீதான வழக்கை நிறுத்தி வைத்தது.

ஆனால், அந்த முடிவை ஒன்றாரியோவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாற்றி, வழக்கு விசாரணை இடம்பெறவேண்டுமென உத்தரவிட்டது.

கனடாவில் காவல்துறையில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஊழல் குறித்த மிகப் பெரும் வழக்காக இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/...l.aspx?ID=10749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் பணமுள்ளவனும், அதிகாரத்தில் உள்ளவனும் செய்யும் ஊழல்கள் கொஞ்சமா நஞ்சமா? வெளியில் வருவதில்லை. பணமில்லாத ஏழைகள் செய்துவிட்டால் பிடித்து பெரிதாகப்போட்டுக்காட்டி தண்டனையும் வழங்கி சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என்று பறைசாற்றுகின்றார்கள். ஆதிவேகமாக வாகனம் செலுத்தி பிடிபட்டால் ஒரு சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது இது 95வீதம் தள்ளுபடியாகின்றது.. நீங்களாகச்சென்று வாதிடடால் வாதிட விடமாட்டார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த அபராதம் என்று சொல்லி குறைந்த கட்டணம் அறவிடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் கூண்டில் நிற்பவர் பணத்தை இழந்தாகவேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் சட்டமா?

நான் நினைக்கின்றேன் சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது சட்டவல்லுனருக்குக் கொடுத்தபணத்தில் ஒரு பங்கு அங்கும் செல்கிறது என்று. இது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யவேண்டும். எங்கும் அபத்தம் எதிலும்; அபத்தம். உலகம் அழிந்து புது உலகம் உருவாகக் கடவுளை வேண்டுகின்றேன். காப்பதற்கு நல்ல மனிதரே இல்லாததால் கடவுள் ஆவதாரம் எடுக்கவில்லைப்போலும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கால் நுழையத்தெரிந்தவன் தான் கனடாவில் வாழலாம். அதற்கு பணமும் வேண்டும். முடிந்தால் பாருங்கள் ஆமலே இருக்கும் வழக்கு ஒரு வகையாக தள்ளப்பட்டுவிடும்

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

மிக முட்டாள்தனமான யோசனை.... புதிதாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு ஒரு புது பெயர் (அளவீடு சம்பந்தமான) பெயர் வைக்காமல், முன்னம் இருந்த அனைத்தின் பெயரையும் மாற்ற வேண்டிய தேவை ஏன் 'ரிம்' இற்கு வந்தது

வழக்கமான வாடிக்கையாளர்களை முற்றாக குழப்ப போகின்றது இந்த அளவீடுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொஞ்சம் வித்தியாசமான இடமா இருக்கும் போல கிடக்கு!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கனடாவின் கடற்படை அதிகாரி ஒருவர் இரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு கொடுத்ததாக அரசால் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

A Halifax-area Royal Canadian Navy sub-lieutenant and intelligence officer has been charged under this country’s secrets law with passing secret government information to “a foreign entity.”

Jeffrey Paul Delisle of Bedford, N.S., has been charged under the 2001 Security of Information Act with criminal breach of trust and communicating “to a foreign entity information that the government of Canada is taking measures to safeguard.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

நீங்கள் உங்கள் குவளையை கொண்டு சென்றால், ஐந்து சதம் மிச்சம் + குழப்பத்தையும் குறைக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

Link to comment
Share on other sites

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

ஆமாம். இங்கே மூலைக்கு மூலை இருக்கும் கடை. கோப்பி மட்டுமல்லாது, குளிர்பானங்கள், உணவுகளையும் வழங்குகின்றனர்.

இது கனேடியர்களின் அடையாள சின்னமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புக்கள் சண்டையிட சென்ற பொழுதும் அங்கே ஒரு கடை போட்டார்கள்.

Link to comment
Share on other sites

இன்று கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார் ஐரோப்பாவின் தொடரும் யூரோ பிரச்சனையால் நாட்டுக்கு இந்த ஆண்டு பத்து பில்லியன்கள் (10,000,000,000 CAD ) பொருளாதார நட்டம் வரும் என்று.

http://www.theglobea...article2306524/

இன்றைய உலகமயமாக்கலில் புலம்பெயர் கனடாவாழ் மக்கள் 250,000 என வைத்தாலும் இதில் ஒவ்வொரு தமிழனின் பங்கும் / இழப்பு 40,000 CAD :o

Link to comment
Share on other sites

கடந்த வார இறுதியில் ஒரு பிரபல்ய தொடரடுக்கு வர்த்த சாவடியில் ஒருவர் சில ஆயிரம் டாலர்களுக்கு ஆப்பிள் பொருட்களை வாங்கி தனது மோட்டார்வண்டியில் வைத்துவிட்டு மீண்டும் வேறு பொருட்கள் வாங்க திரும்பியுள்ளார். பின்னால் வந்த திருடர்கள் தமது கைவரிசையை கா ட்டி விட்டனர்.

பொருட்களை தொலைத்தவர் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளார் ( வசதியானவர் போலுள்ளது). காரணம் - ஆப்பிள் நிறுவனம் இந்தப்பொருட்களை திருடர்கள் அபகரிப்பார்கள் என எச்சரிக்கவில்லையாம் என்பதே

ஆப்பிள் நிறுவனம் அவருக்கு அவரின் பணத்தை திரும்பி தந்ததுடன் மேலதிக பணத்தையும் கொடுத்துள்ளது.

இதுவே ஒரு தமிழருக்கு நடத்திருந்தால், அம்போ தான் இப்படி வழக்கு போடலாம் என்பதும் தெரியாது, தெரிந்தாலும் பண / நேர வசதிகள் இருக்காது :wub:

Link to comment
Share on other sites

உங்க ஆசை ஓவரா தெரியல ? மோடார்வன்டி பொருட்களை திருடியது தமிழாரய் இருககூடாது என்டு ஆசைபடுங்க அஆ :unsure:

Link to comment
Share on other sites

:Dஇலவசம் இலவசம் முற்றிலும் இலவசம் :D

கனடாவில் வரும் ஒரு தேசியப்பத்திரிகையான நசனல் போஸ்ட்டை இலவசமாக மூன்று மாதங்கள் பெறலாம். இது அரசியல் ரீதியாக வலதுசார் கொள்கை உடைய பத்திரிகை, ஆனால் பொருளாதார செய்திகளை தரம் வாய்ந்ததாக தருகின்றது.

https://subscriptions.nationalpost.com/parknfly/

மூன்று மாதம் முடிய 'வேண்டாம்' என கூற மறக்காதீர்கள் :D

Link to comment
Share on other sites

கனடாவின் சனத்தொகை அண்ணளவாக 34 மில்லியன்கள். அதில் தமிழர்கள் அண்ணளவாக 250,000 - 300,000

கனடாவில் கிட்டத்தட்ட 33% பேர் வாடகை வீட்டில் வாழுகின்றனர். தமிழர்கள் எவ்வளவு பேர் வாழுகிறார்கள் வாடகை வீட்டில் எனத்தெரியவில்லை. ஆனால், எமது சமூகத்தில் அதிகளவில் வீடு முகவர்கள் உள்ளனர். அந்த வகையில் எமது மக்கள் வீடுகளில் முதலீடு அதிகளவில் செய்கிறார்கள்.

ஒரு வீடு விற்கப்போட்டு அது எவ்வளவு காலத்தில் விலைபோனது என்பதை வைத்து எந்தெந்த இடங்கள் முறையே 'கொதிப்பாக' 'சூடாக' 'குளிராக; உள்ளது என்பதை டொராண்டோ பெரும்பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.thestar.com/news/article/1119423--toronto-real-estate-watch-is-your-neighbourhood-hot-or-not?bn=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.