Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

வெளிநாடுகளில் கனேடிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு எதிரான சட்டங்கள் பலப்படுத்தப்படவுள்ளன.

 

வெளிநாடுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் கனேடியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இலகுவாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கனேடிய அரசு முன்வைத்தது.

 

விதிகளுக்கு அமைவாக கனேடிய நிறுவனங்கள் செயற்படவேண்டுமென எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்தார்.


செனற் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஐந்து வருட காலமாக உள்ள சிறைத் தண்டனை 14 வருடங்கள் வரை அதிகரிக்கப்படும். அபராதத்திற்கு வரையறை விதிக்கப்படவில்லை.

 

இந்த அறிவிப்பை வரவேற்பதாக என்டீபீ அறிவித்தது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13625

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

எச்சரிக்கை. வியாழன் இரவு கடுமையான மழை, பனி இருக்கும்!

 

வியாழக் கிழமை இரவு மழையும் பனியும் ரொறான்ரோ நகரைத் தாக்கப் போவதாக கனடிய வானிலை நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.


மெலிதாய் இருக்கும் பனிப் பொழிவு வியாழன் காலையில் மிச்சிகன் மற்றும் லேக் ஹூரான் பகுதியிலிருந்து மெல்ல நகன்று ரொறான்ரோவை நோக்கி வரும் என்று அந்தத் தகவல் கூறுகிறது.

 

உறைய வைக்கும் குளிர் மழையும் சில இடங்களில் பனிக் கட்டி மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இந்த கடும் பனிப் பொழிவு வெள்ளி முழுவதும் இருக்கும் என்று தெரிகிறது.


ரொறான்ரோ உட்பட ஒண்டோரியோவின் கிழக்குப் பகுதியில் 15 செண்டிமீட்டர் வரை பனிப் பொழிவு இருக்கும். குளிர் -2 டிகிரிக்கு சென்று விடும் என்று வானிலை நிலையம் தெரிவிக்கிறது.

 

http://ekuruvi.com/news%204582013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கை - கனடா சுற்றுச்சூழல் திணைக்களம்
பிப் 7, 2013
 
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கையொன்றை கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்தது.
தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றாரியோவின் பெரும் பகுதியில் பனிப் புயல் ஒன்று காரணமாக இன்றிரவு பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

07022013%20031.jpg

ரொறன்றோவில் குறைந்தது 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது.

மிசிசாகா, பிறம்ரன், ஹமில்டன், பேர்ளிங்ரன், ஓக்வில் ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் குறித்த அவதானிப்பு நிலையை, பனிப்புயல் குறித்த எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் திணைக்களம் மாற்றியது.

கடந்த ஐந்து வருட காலத்தில் ரொறன்றோவில் 24 மணி நேரத்தில் 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/26695/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

சில விபத்துக்கள் ஏற்படும். பலரின் வாகன காப்புறுதி பணம் உயரும்.

பல மணி நேரங்களை வீதியில் செலவழிக்கவேண்டி இருக்கும்.

எனவே நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Southern Ontario braces for biggest snowstorm in years

 

 

li-labrador-weather-2013020.jpg

 

 

நாளைக்குரிய வேலையை வீட்டில் இருந்தவாறே செய்யக் கூடியவர்கள் செய்யலாம் தானே, விடுமுறை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லைத் தானே.

Link to comment
Share on other sites

ஆம், வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை அதற்கு மேலிடமும் அனுமதித்தால் வீட்டில் இருந்து வேலையை செய்யலாம்.

Link to comment
Share on other sites

- பாடசாலைகள் திறக்கப்படும், ஆனால் போக்குவரத்து வசு வண்டிகள் ஓடாது
- இதுவரை பொழிந்த பனியை விட மேற்கொண்டுதான் அதிகமாக பொழிய உள்ளது
- 8 தொடக்கம் 11 வரை
- மணிக்கு ஒரு சென்றி மீட்டர் பொழிய உள்ளது
- மிசிசிசாகா, ஹமில்டன் பக்கம் அதிகமாக பொழிய உள்ளது

 

snow.jpeg.size.xxlarge.letterbox.jpeg

Link to comment
Share on other sites

கடும் பனிப்பொழிவால் பல விமானங்கள் ரத்து பேரூந்து , ரயில் சேவைகளும் மாற்றம்

 

ரொறொன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையடுத்து தெற்கு ஒன்றோரியப் பகுதிகளில் வாகனங்களில் எங்கும் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ள்ளன.


விமானப் போக்குவரத்து தாமதம் மற்றும் ரத்து தொடர்பான விபரங்களை கீழே காணலாம்.

 

 

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் :

பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 120 விமானங்களும் , வந்து சேரவேண்டிய 110 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விமானங்களின் வருகை புறப்பாடு குறித்த மேலதிக: http://www.torontopearson.com/en/flights/schedules/#%23



GO போக்குவரத்து மாற்றங்கள் :

GO போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும் கூட விரைவு ரயில்கள் பெரும்பாலான நிலையங்களில் நிற்காது என்பது உள்ளிட்ட பல மாற்றங்களும்,  சில வழித்தட பேருந்து மற்றும் ரயில்  சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதனை சரியாக அறிந்து: http://www.gotransit.com/public/en/schedules/winterstorm.aspx#



http://ekuruvi.com/toronto%20weather%20feb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமய நிலவரப்படி

 

img6251x.jpg



img6252i.jpg

Link to comment
Share on other sites

வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை + ஆறுக்கு செல்கின்றது. பொழிந்த பனியில் கணிசமான பகுதி உருகும்.

 

 

பின்னர் திங்கள் அளவில் மழை. பின்னர் - க்கு செல்லும் வெப்பநிலை.


பல இடங்களில் ஆபத்தான சறுக்கல் நிலை ஏற்படும்.

Link to comment
Share on other sites

மாலை நாலு மணியளவில் பொழியும் பனி பலவீனம் அடையும்
இரவு பத்து மணிக்கு முழுமையாக நிற்கும்.
அப்பொழுது 15-25cm அளவில் இருக்கும் - பனி  :icon_idea:

 

அமெரிக்காவில் சில இடங்களில் 80 cm வரை பனி பொழியும்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

61785_538051706228649_308023291_n.jpg

 

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

1958 லிருந்து இதுவரை காலமும் புழக்கதிலிருந்து வந்த பென்னி என்று அழைக்கப்படும் கனேடிய ஒரு சத நாணயம் இந்த மாதத்தோடு விடை பெற்றுக்கொள்கிறது.

 

1959 லிருந்து 1907 வரை இது  இங்கிலாந்தில் தான் தயாரிக்கபட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் இந்த பென்னி என்று அழைப்கப்படும் நாணயம் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

2012ம் ஆண்டில் ஒன்றின் உற்பத்தி செலவு 1.6 சதம்.

 

இதுவரையில் கனடாவில் புழகத்திலிருக்கும் இவற்றின் மொத்த நிறை 3100 மெட்ரிக் தொன்.

 

ஆனால் ஒரு சதம் செல்லுபடியாவதற்கு காலவரையறை இல்லை.ஏற்றுக்கொள்ளுவதும் மறுப்பதும் வணிக நிறுவனங்களின் முடிவு.வங்கிகள் எப்போதும் பென்னிகனை ஏற்றுக்கொள்ளும்.

 

கொள்வனவுகளுக்குப் பணம் செலுத்தும் போது கிட்டடிய 5 சதத்தில் செலுத்துவீர்கள்.
(உ-ம் $1.02 1.00. $2.63, $ 2.65)

 

வங்கி அட்டைகள் மூலம் கொள்வனவுக்கான தொகையை மட்டுமே செலுத்துவீர்கள்.


(உ-ம் $24.32 ; $24.32)

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.


 

சிறுவர்களின் சேமிப்பு பழக்கம் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Link to comment
Share on other sites

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

 

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.

 

எப்பொழுதுமே இலாபம் அடையலாம், பணத்தை இல்லை மட்டையை தேவைக்கு ஏற்ப பாவித்தால்  :D

Link to comment
Share on other sites

கடும் பனிப்புயலால் ரொறொன்ரோ சாலைகள் சேதம் - சுத்தப்படுத்த $4 மில்லியன் வேண்டுமாம்!!

 

கடந்த சில ஆண்டுகளில் இதுவரை கண்டிராத அளவிற்கான கோரப் பனிப்புயலின் தாக்கம் ரொறொன்ரோ நகர மக்களை மட்டுமன்றி சாலைகளையும் புரட்டிப் போட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். 30-cm அளவிற்கான பனி விமான வழித்தடங்களிலும் , சாலைகளிலும் அடர்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு $4 மில்லியன் செலவாகும் என்ற கணிப்பினை வெளியிட்டுள்ளார் மாநகர சாலைகள் செயல் மேலாளர் ஹெச்டோர் மொரேனோ.

இது ரொறொன்ரோ நகர் சாலைகளை சுத்தப்படுத்துவதற்கான தொகை மட்டுமே . உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையங்களை சுத்தம் செய்வதற்கு இன்னமும் அதிகம் செலவாகலாம் எனத் தெரிகிறது.

இந்த பனிப்புயலினால் வெள்ளிக்கிழமையன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும், நேற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

http://ekuruvi.com/snow%204%20millian

Link to comment
Share on other sites

நில மாற்ற வரி நீக்கப்படும் - மேயர் ஃபோர்ட் அறிவிப்பு

 

மேயர் தேர்தலில் போட்டியிடும்போது அதிகமாய் இருக்கும் நில மாற்ற வரியை நீக்குவேன் என்று ராப் ஃபோர்ட் அறிவித்திருந்தார். தற்போது அதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். வானொலியில் தன்னுடைய வார நிகழ்ச்சியில் அவர் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.


’வரப் போகும் சில மாதங்களில் இந்த வரியில் பத்துசதவீதத்தை நீக்கிவிடுவோம். பிறகு படிப்படியாக அந்த வரி முழுமையாக நீக்கப்படும்’ என்று அந்த வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருக்கிறார் ஃபோர்ட்.

‘இந்த வரியால் நகர சபைக்கு பணம் வருகிறது. ஆனால் இந்த வரியை விதிக்கும் ஒரே நகரச்பை நம்முடையதுதான். அதுவும் இது இரட்டை வரிவிதிப்பு போன்றது. இது நியாமல்ல. நான் தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை நீக்குவேன் என்று அறிவித்திருந்தேன். அந்த வாக்குறுதியை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன்’ என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த நில மாற்ற வரியை ஃபோர்டுக்கு முந்தைய மேயர் டேவிட் மில்லர் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்தார். அப்போது நகரசபையின் பணத்தேவைக்காக இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டது.

 

http://ekuruvi.com/Ford%20promises%20to%20cut%20land%20transfer%20tax

Link to comment
Share on other sites

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

 

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!


ஸ்காபுரோவில் பட்டுச் சேலைகள்  மற்றும் இதர துணிமணிகளை விற்று வரும் பிரபல நிருவனங்களுள் ஒன்று ராஷி சில்க்ஸ். பிரேமநாதன் மற்றும் ஜெயந்தினி கண்ணப்பநாதனுக்குச் சொந்தமான இந்தக் கடையில் பேரம் பேசி துணிகளை வாங்குவதற்கு பலர் வருவது வழக்கம்.

இரு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய 17 வயது இளையோர் இருவர் இந்தக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் உரிமையாளர்களையும் , பணியாற்றியவர்களையும் மிரட்டியுள்ளனர். சாதுர்யத்துடனும் , துணிச்சலுடனும் கணவன், மனைவி இருவரும் துப்பாக்கி ஏந்திய கும்பலுடன் போராடி அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் துணிச்சலுடன் போராடியதைக் கண்டு பலர் வியந்துள்ளனர். குறிப்பாக பெண்மணி ஒருவர் கயவர்களுடன் துணிச்சலாக சண்டையிட்டதே நேற்று கனடிய ஊடகங்கள் அனைத்திலும் பெரிதாய் பேசப்பட்டது.

 

http://ekuruvi.com/carborough%20store%20owners%20fight%20off%20armed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போலியான பயணச் சீட்டுக்கள் பெருக்கத்தால் நட்டத்தில் ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகம்!!
Feb 19 2013 08:57:43
 
9516ab384abe9a5.jpg

 

ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தொடரூந்துகளில் பயணம் செய்வோரில் பலர் போலியான பயணச் சீட்டு , மற்றும் அனுமதிச் சீட்டுக்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரொறொன்ரோ மாணவர்கள் பயன்படுத்தி வந்த அனுமதி அட்டைகளே.

 
இது போன்ற மக்களின் செயல்களால் கடந்த ஆண்டு மட்டும் $2 மில்லியன் வருமான இழப்பு ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படிப் போலியாகத் தயாரிக்கப்பட்ட அனுமதி அட்டைகள் பல சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன . அவை அச்சு அசலாக கனடிய டோக்கன்கள் போன்று இருப்பதால் கண்டுபிடிப்பதும் எளிதாக இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

 

http://ekuruvi.com/Fake%20tokens%20Metropasses%20cost%20TTC%20nearly

Link to comment
Share on other sites

கனடாவிற்குள் குடியேறி தனி முத்திரை பதித்தவரா நீங்கள்?

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்குள் குடியேறி தொழிற்துறையில் தொடங்கி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய 25 பேர்களில் நீங்களும் ஒருவரா ? அப்படியெனில்  உங்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்க  காத்திருக்கிறது றோயல் பேங்க் ஒப் கனடா.


2013 ஆம் ஆண்டின்  25 RBC Top 25 Canadian Immigrant  விருதுக்கான மனுத் தாக்கல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்டுதோறும்  றோயல் பேங்க் ஒப் கனடாவால்  வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் கடந்த ஆண்டுகளில் கனடாவிற்கு வந்து தொழிற்துறையில் சாதனை படைத்தோர் , சிறந்த மனித நேயப் பண்பாளர்கள் , சிறந்த கலைநயம் மிக்கவர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பலருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதற்கான தகுதிகள் என்ன தெரியுமா??

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து கனடாவில் ஏதாவது ஒரு துறையில் தனி முத்திரை பதித்து நாட்டில் உள்ள பலருக்கும் நீங்கள் முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதே. சமூக சேவை, கலை, தொழில் உள்ளிட்ட எந்த பிரிவினையும் சார்ந்தவராக நீங்கள் இருக்கலாம்.

 

இந்த தகுதிகள் உங்களிடம் இருந்தால் இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக  http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/  தளத்திற்குச் சென்று மனுத்தாக்கல் செய்யுங்கள். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி திகதி பெப்ரவரி 28

 

http://ekuruvi.com/best%20immigration%20award

 

Link to comment
Share on other sites

புதிதாக வாகனங்களை வாங்குவோர் கவனத்திற்கு......

 

    இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒன்ராறியோ அரசு வாகனப்புகையிலிருந்து ஏற்படும் காபனீரொட்சைட் மற்றும் மாசுகளை கட்டுப்படுத்தும் பரிசோதனை இயந்திரங்களை மாற்றியுள்ளது.முந்தைய இயந்திரத்தில் வாகனங்களின் உற்பத்தி திகதிக்கேற்ப அளவீடுகள் மாறுபடும். இப்புதிய இயந்திரமானது ஒரே அலகை மாத்திரம் கொண்டுள்ளது.பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 2004ம் ஆண்டுக்கு முற்பட்ட வாகனங்கள் பலத்த சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.( charcoal canister)சாக்கோல் கனிஸ்டர் மற்றும் (catalytic converter) கற்றலிக்கொன்வேட்டர் போன்றவைகளின் செயற்பாடுகள் ஐந்து ஆறு வருடங்களின் பின் செயலற்றுப்போவதால் இவகளை மாற்றீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.இவையிரண்டும் வாங்குவதற்கு குறைந்தது $1000 செலவாகும். அத்துடன் மாற்றுவதற்குரிய செலவு $300.00-$500.00 வரையாகலாம்.இந்த புகை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனம் சித்தி பெறாதவிடத்து அதே இடத்தில் நீங்கள் $450.00+வரி செலுத்தி சிறு திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.அப்படியும் சித்தி பெறாத வாகனங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இரண்டு வருடத்திற்கான பாவனை உரிமம் வழங்கப்படும்.இரண்டு வருடம் முடிய பழைய இரும்பிற்கு பேரிச்சம்பழம் தான்.

                                                          சரி இனி விடயத்திற்கு வருவோம்.பாவித்த வாகனங்களை வாங்குவோர் வாகனத்தை வாங்க முன்பு புகைப்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? சாதரணமாய் சித்தியெய்தியுள்ளதா? என்று கவனமாய் வாங்க முன்பு ஆராயவும்.விற்பவர் வாங்குபருக்கு தற்போதுள்ள நிலையிலேயே வாகனத்தை விற்கிறேன் என்று எழுதினால் வாங்குபவர் பணத்தை இழக்க நேரிடும்.

 

அன்புடன்

 நீலக்குருவி

 

 

 

Link to comment
Share on other sites

தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை - Sick Children Hospital

 

இலங்கைத் தமிழர் ஒருவரின் 10 - 12 வயதான மகன் கண்பார்வை மிக வேகமாக குறைந்து வருவதனை அவதானித்து வைத்திய ஆலோசனைக்காக அழைத்துச்சென்று உள்ளனர்.  சோதனைகளின் பின்னர், இவ்விதமான் நோய்/குறைபாடு இலங்கைத் தமிழ் வம்சாவழிக் கனேடியத் தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருவதனை ரொரன்றோ Sick Children Hospital ஐச் சேர்ந்தை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.  இது தொடர்பான சிகிச்சைகள் / வைத்திய ஆய்வுகளுக்காக இலங்கைத் தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை உள்ளது. 


மேற்குறித்த மரபணுச்சோதனைகளுக்காக இரத்த உறவில்லாத ஆகக் குறைந்தது 100 இலங்கைத் தமிழராவது தமது உமிழ்நீர் மாதிரியை வழங்கி உதவி புரியலாம்.  நீங்கள் வழங்கப் போகும் உமிழ்நீர் மாதிரி விலைமதிப்பே இல்லாததாகும்


இடம்:  Maclean Community Centre in Ajax
காலம்: Sunday Feb 24th from 3 – 7 PM

 

http://ekuruvi.com/dna%20testing

Link to comment
Share on other sites

உதவுங்கள் உறவுகளே.உமிழ்நீர் தானே. ஆராட்சிக்கு தானே கேட்கிறார்கள்.எதிர்கால சிறார்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு உதவுங்கள்.

Link to comment
Share on other sites

ரொறொன்ரோவைத் தாக்க வருகிறது மற்றுமொரு பனிப்புயல்!!

 

45kuruvi.jpg

http://ekuruvi.com/Winter%20storm%20could%20hit%20Toronto%20Tuesday%20evening

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டி(cheese) திரும்ப அழைக்கப்படுகின்றன
Peter February 26, 2013 Canada
 
இத்தாலி நாட்டில் இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டியில் லிஸ்ரிறியா என அழைக்கப்படும் பதார்த்தம் சேர்ந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையிட்டு அவைகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.
 
இந்தப்பாலாடை கட்டிகள் இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். மாயுறி, ஹொற்கொன்சொலா என்ற பெயரையுடைய பாலாடைக் கட்டிவகைகளே திரும்ப அழைக்கப்படுகின்றன. இவைகள் 1.44 கில்லோக்கிராம் அளவுகளில் உள்ளன. அத்துடன் யூலை1, 2013, யூலை4, 2013 காலங்களுக்கு முன்பு பாவக்கும்படி குறிப்பிடப்பட்டவைகள் என தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
கனடிய உணவு பரிசோதனைத் தாபனமானது இதுவரையில் இந்தப் பொருளைப் பாவித்ததால் எந்தவிதமான நோய் ஏற்பட்டதாக தகவல்கள் எதும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
 
லிஸ்ரிறியாவால் பாதிக்கப்பட்ட பொருட்கள் எந்தவிதமான மணத்தையும் தெரிவிக்காது, ஆனால் அவற்றை உண்பதனால் கடுமையான காய்ச்சல், தலையிடி, கழுத்தில் இறுக்கம், வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என கூறப்படுகின்றது. கருவுற்றிருக்கும் பெண்கள், வயது முதியவர்கள் இவற்றை உண்டால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.