Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

டொராண்டோவில் இன்று


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருது, தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் எழுத்தாளர் அகில்

 

2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசுமற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத்தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-


மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன், புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன்

 

புதினம் - அரு.மருததுரை, சிறுகதை - செல்வி பர்வின்பானு நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன் திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன்


மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன்

 

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன் அகராதி, கலைக்களஞ்சியம்,கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ் பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி


வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன்

 

கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன்

பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் -முனைவர் கி.அய்யப்பன்

சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன்

மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன்

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1.டாக்டர் இல.மகாதேவன், 2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ்.

சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன்

கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா

சுற்றுப்புறவியல்- வேணு சீனிவாசன்

நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன்

வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம்

இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி

தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்.

 

http://ekuruvi.com/award%20india%20writing

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • Replies 427
 • Created
 • Last Reply

கடந்த ஒருவாரத்துக்கும் அதிகமான காலம் காணாமல் போயிருந்த ரிம் பொஸ்மா (Tim Bosma) வின் எரிந்த உடலின் பாகங்களை இன்று காலை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 • தனது ட்றக் ஒன்றினை விற்பதற்காக ஒன்லைனில் விளம்பரம் போட்டு இருந்தார்
 • அதனை வாங்க இருவர் வந்து பரீட்சார்த்தமாக ஓட்டிப் பார்க வேண்டும் எனச் சொல்லி இவரையும் ஏற்றிக் கொண்டு போயிருந்தனர். அவர்களுடன் போனவர் மீண்டும் வரவில்லை.
 • மனைவி "அது ஒரு வெறுமனே ட்றக். அதனை வைத்துக் கொண்டு என் கணவரை விட்டு விடுங்கள். எனக்கு என் கணவர் வேண்டும். அவர் மகளுக்கு அப்பா வேண்டும்" என்று கெஞ்சி யுரியூபின் ஊடாக கோரிக்கை விட்டு இருந்தார்.
 • இது தொடர்பாக வாட்ட்ர் லூ பகுதியினைச் சேர்ந்த ஒரு வாலிபர் கைதானார்.
 • கைது செய்யப்பட்டவர் மிகுந்த செல்வம் உள்ள, பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்றும், பழகும் போது சாதனை கண்ட ஒரு சிறந்த  விமான ஓட்டி என்றும், எந்த விதமான குற்ற பதிவும் (Criminal records) இல்லாதவர் என்றும் சொல்லப்படுகின்றது.
 • காணாமல் போன ட்றக் இனை 3 தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவரின் தாயின் வீட்டில் இருந்து மீட்டனர்.
 • நேற்றுடன் இவர் காணாமல் போய் ஒரு வாரம் முடிந்து இருந்தது.
 • இன்று இவரது எரிந்த உடலின் பாகங்களை  மீட்டுள்ளனர். ஒரு வாகனத்தினை விற்கப் போய் இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

http://www.thestar.com/news/crime/2013/05/14/tim_bosma_missing_man_is_dead_body_burned_police_say.html

 

 

 

Link to post
Share on other sites

காசுக்கு ஆசைப்பட்டு கிஜிஜி, ஆட்டோட்ரேடர் போன்ற தளங்களில் விளம்பரப்படுத்தினால் வில்லங்கத்தையும் விலைகொடுத்து வாங்க நேரலாம்.. :unsure: நான் இவை எதற்குள்ளும் போவதில்லை.. இந்தக்காலத்தில் டீலர்களிடமே தள்ளிவிடலாம் வாகனங்களை.. ஆனால் விலை அதிகம் கிடைக்காது..

 

பொருட்கள் எதையும் கிஜிஜியில் போடுவதில்லை.. நேரா குப்பைதான்..

 

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இல்லை.....அவர் பெரிய சமுத்திரத்தை தேடுறார் எண்டு நினைக்கிறன் 😁
  • டீச்சர்: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற?.." மாணவன்: "கல்யாணம்.." டீச்சர் : "அது இல்ல.. நீ என்னவா ஆகா விரும்புற?.." மாணவன்: "புருஷன்.." டீச்சர் : "நோ நோ.. ஐ மீன், உனக்கு வாழ்கையில் என்ன கிடைக்கணும் நீ எதிர் பாக்குற?.." மாணவன்: "பொண்டாட்டி.." டீச்சர்: "ஐயோ.. இல்ல பா.. உங்க பெற்றோருக்கு என்ன பண்ண போற?.." மாணவன்: "மருமகள் தேடுவேன்.." டீச்சர்: "ஸ்டுபிட், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பர்கிறாரு?.." மாணவன்: "பேர குழந்தை..." டீச்சர்: "ஐயோ கடவுளே.. உன் வாழ்கை லட்சியம் என்ன?.." மாணவன்: “அப்பா ஆகா போறேன்..” டீச்சர் இன்னும் கோமாவிலிருந்து வெளிய வரலே..!!!!!!!
  • விடுங்கள் ஐயா! வர வர சிறுமைத்தனமாக இங்கே கருத்தெழுத  ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பதிலளித்தால் நிழலி வந்து அகற்றுகின்றார். ஆனால் கேள்வி மட்டும் அப்படியே இருக்கும். பதில்கள் அகற்றப்பட்டு விடும். கேட்டால் தனிமனித தாக்குதல் அல்லது    கள விதிகளுக்கு உட்படவில்லை என்பர். இங்கே தனிமனித தாக்குதலை விட தனி மனித செல்வாக்குதான் அதிகம்.
  • அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டபாயவின் சிங்களப் பேராசிரிய நண்பர்: இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா தீவுக்குள் புலிகளைப் போற்றுவோருக்கு புனர்வாழ்வு கொடு, புலம்பெயர் தமிழர்களைப் பட்டியலிடு என்றும் மதியுரை!       ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவியரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று சிங்களவரும் பிரபல பயங்கரவாத பேராசிரியருமான றொஹான் குணரட்ணா தெரிவித்துள்ளார்.   மாவீரர்நாளுக்கு முன்னதாக கடந்த 22ம் திகதி கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சண்டே ஒப்சேவருக்கு கருத்து வெளியிட்ட றொஹான் குணரட்ணா, மாவீரர்நாளை நினைவுகூரும் நகர்வு அரசியல் நோக்குடையது என்று தெரிவித்தது மட்டுமல்ல, புலிகளைப் போற்ற முயல்வோரை அரசாங்கம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தவேண்டும் என்றும் கருத்துவெளியிட்டுள்ளார்.     புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று குணரட்ணா கருத்து வெளியிட்டுள்ளார்   இதேவேளை, மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் ஓர் ஊடகவியலாளர் உட்பட ஆறு தமிழ் இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் நவம்பர் 26 பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டியும் மறுநாளான மாவீரர் நாளன்றும் இடுகையிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நீண்டநாள் அரசியற் தலைவராகவும் இருந்த ம.க. சிவாஜிலிங்கம் பிரபாகரன் அவர்களைப் போற்றும் நடவடிக்கையிலும் மாவீரர் நாளை நடாத்தும் திட்டத்திலும் தொடர்ந்து இயங்கிவருவதாகவும் குணரட்ணா கூறியிருக்கிறார். புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று குணரட்ணா கருத்துவெளியிட்டுள்ளார். சிவப்பு மஞ்சட் கொடிகளைப் பயன்படுத்துவதையோ, புலிச் சின்னங்களையோ மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புபட்ட குறியீடுகளைப் பயன்படுத்தவோ அனுமதிக்கலாகாதென்றும் அவர் சண்டே ஒப்சேவருக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அதேவேளை குடும்பங்கள் தமது இழப்புகளை வீட்டுக்குள்ளோ வழிபாட்டுத்தலங்களிலோ நினைவுகூருவதை சகித்துக்கொள்ளலாம் என்கிறார் குணரட்ணா. அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு ஆலோசகராக இருந்த குணரட்ணா, சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவக் கல்லூரியின் கௌரவ பேராசிரியராவார். இவர் சில காலத்துக்கு முன்னர் வரை சிங்கப்பூரில் இருந்து இயங்கும் நான்யாங் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் சர்வதேச வன்முறை தொடர்பான கற்கை மையத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர். அமெரிக்க இராணுவ மையங்களாலும் ஊடகங்களாலும் சர்வதேசப் பயங்கரவாதம் தொடர்பான நிபுணராகக் கையாளப்படுபவர். பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆய்வாளராகக் கடமையாற்றியவர். "அல்குவைடா அமைப்புக்கு உள்ளே" என்ற நூல் உட்பட பல நூல்களைத் தயாரித்தவர் இந்த குணரட்ணா. இவர் தற்போதைய இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நெருங்கிய ஆலோசகராகவும் இருந்துவருகிறார். வெவ்வேறு நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அப்பட்டியலில் இருந்து நீக்கிவிடுமாறு புலம்பெயர் அமைப்புகள் ஐரோப்பிய, பிரித்தானிய நீதிமன்றுகளை கடந்த சில வருடங்களாக அணுகிவரும் நிலையில், மேற்குலக இராணுவத்தரப்புகளோடும் உளவுத்துறைகளோடும் நெருங்கிய உறவைப் பேணும் குணரட்ணாவின் கருத்து வெளிவந்திருக்கிறது. இதேவேளை, கூட்டு நிகழ்வாக மாவீரர் நாளைக் கடைப்பிடிக்காதவாறு கொழும்பு அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிந்தோ அறியாமலோ பலியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள்ள சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி ஒரு கூட்டு நிகழ்வை நடத்தத் தவறியதன் சட்ட, சர்வதேசப் பின்னணியை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கூர்மை இணையத்தளம் விளக்கியிருந்தது. அமெரிக்காவில் இருந்து இயங்கும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் அடையாளங்களுடன் வெளியிடப்படும் பல இடுகைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம், உலகில் எங்கிருப்பவர்கள் இந்த வலைத்தளங்களில் இடுகைகளை இட்டாலும் அவை அமெரிக்க இறைமைக்குட்பட்ட சட்டத்துக்கு உட்படுவதாலும், அமெரிக்காவில் புலிகள் மீது தடை இருப்பதாலும் அவற்றை அகற்றிவிடுமாறு ஏனைய நாடுகள் கேட்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றை அகற்றுவதற்கான பொறிமுறைகளைச் செய்துவிடுவதே ஆகும். ஆக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் முகநூல் நிறுவனத்தாலும் சுந்தர் பிச்சை என்ற தமிழகத் தமிழர் முக்கிய பதவி வகிக்கும் கூகுள் நிறுவனம் நடாத்தும் யூரியூப்பிலும் விடுதலைப் புலிகள் சார்ந்த இடுகைகள் அகற்றப்பட்டு வருவதற்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் விடுதலைப் புலிகள் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1630&fbclid=IwAR3X5SbFn5JX-g-qsYrpIhX-AcJuyA5BJrzGrfLDhEEt2j0xaTUcN8c-uX4
  • இவ்வாறு இணையும் தமிழ் இளைஞர்களை பயிற்றுவித்து விட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பணி புரிய அனுப்பி அதன் மூலம் மேலும் பிளவுகளை சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.  எல்லைப் பிரச்சனை, காணிப் பிரச்சனை என்று தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சிவில் பிரச்சனைகளை தீவிரப்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இனை இந்திய ஏவல் படைகளின் மூலம் தூண்டி விட்டு தமிழ் - முஸ்லிம் மோதலை முதன் முதலில் இராணுவ ரீதியாக / ஆயுத ரீதியாக மாற்றியது இந்தியாவும் இலங்கை அரசும். அதே போன்று அந்த கணங்கை மீண்டும் அணைய விடாமல் பார்த்துக் கொள்ள இலங்கை அரசு முயலும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.