Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

டொராண்டோவில் இன்று


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோவை அண்மித்த பெர்லிங்க்டனில் புகையிரதம் தடம்புரண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் ஊழியர்கள் (இருவர் பொறியியளார்கள், ஒருவர் வேலை பழகுபவர்), இதில் மொத்தமாக எழுபத்தி ஐந்து பேர் பயணிகள் இருந்தனர், பத்து பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

http://www.680news.com/news/local/article/334967--three-dead-in-via-train-derailment-in-burlington

Link to comment
Share on other sites

 • Replies 427
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை காலை டொராண்டோவில் பனியும் பனிமழை பொழியும் சாத்தியமும் உள்ளது :(

Special weather statement issued for GTA, potential for freezing rain

http://www.680news.com/weather/article/335553--special-weather-statement-issued-for-gta-potential-for-freezing-rain

Freezing%2BRain.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோவில் வாழ்பவர்கள் எவ்வாறு உயரும் எரிபொருள் செலவை கட்டுப்பத்தலாம் என பல வழிகள் இதில் ஆராயப்பட்டுள்ளது : http://www.wheels.ca/columns/article/805353

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோ பெரும்பாகத்தில் போக்குவரத்து ஒரு பாரிய பிரச்சனை. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதியுடன் நிலக்கீழ் இல்லை நிலமேல் போக்குவரத்து சேவையால் ஒப்பீடளவில் பெரிதாக இணைக்கப்படவில்லை.

ஆளும் நகரபிதா சமர்ப்பித்த நிலக்கீழ் திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 200 மில்லியன்கள் தேவைப்படும் என்பதால் சில திட்டங்கள் நிலத்திற்கு மேலாகவும் சிலதிட்டங்கள் இரத்தாகும் நிலையும் உள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11250

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

கனேடிய சனநாயக பண்புகளை காப்பாற்ற நேற்று மக்கள் வான்கூவரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அது வரும் நாட்களில் டொராண்டோவை அடையும் !

Protests against 'robo-calls' begin in Vancouver, expected to reach Toronto

http://www.680news.com/news/local/article/337455--protests-against-robo-calls-begin-in-vancouver-expected-to-reach-toronto

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா: சர்வதேச பெண்கள் நாள் பற்றி இராதிகா சிற்சப ஈசன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார இறுதியில், சனி இரவு, ஒரு மணி நேரத்தை இழக்க உள்ளோம்.

வருடாந்த நேர மாற்றம் இந்த சனிக்கிழமை இடம்பெறும். இது பொருளாதார வலுவை கூட்டவும் எரிசக்தியை சேமிக்கவும் உதவும் ஒரு நடைமுறை.

daylight_savings_2012.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்ரோ காவல்துறை இனவாதம் கொண்டதா?

உலகிலேயே அதிகளவு பலகலாச்சார மக்களை கொண்டது டொராண்டோ மாநகரம். இந்த அருமையான நகரத்திலே புகலிடம் தேடிவந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட பலரும்

நல்ல பாதுகாப்பான சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆனால், அதன் அர்த்தம் எல்லாம் சமமாக எல்லோருக்கும் கிடைப்பது என்றில்லை.

கனடாவின் மிகப்பெரிய பத்திரிகையும் டொராண்டோவில் வெளிவருவதுமான டொராண்டோ ஸ்டார் இந்த மாநகரத்தின் காவல்துறை பற்றியும் அதன் சில புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி காவல்துறையினர் வழமையாக ஆட்களை வாகனங்களில் மறிப்பதும் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும் வழமை. இவை எந்தவொரு பிரச்சனையற்ற சூழலிலும் நடப்பது வழமை. ஆனால், இந்த புள்ளிவிபரங்களின் படி இவ்வாறு நடப்பது வெள்ளைகள் அல்லாதோர் மீது, அதாவது கருப்பு நிற இல்லை மண்ணிற தோலை கொண்டவர்கள் மீது அதிகமாக நடப்பதாக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ரொறொண்ட ஸ்டார் கருத்து வெளியிட்டுள்ளது.

Toronto police stop and document black and brown people far more

http://www.thestar.com/specialsections/knowntopolice

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

$ 3,150 CAD மையமாகக் கொண்ட பிரச்சினையில் ரொரன்ரோ(கனடா) மேயர் றெப் போட்டின் பதவி பறிபோகலாம்??

இவர் முன்னராக மாநகரசபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் இவர் ஒரு விளையாட்டு கழகத்திற்கு தனது உத்தியோகபூர்வ எழுத்து படிவத்தை பாவித்து பணம் சேர்த்ததாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதனால் இவர் நகரபிதாவாக வர முடியாது எனவும் தாக்கீது செய்தவர்களால் கூறப்பட்டுள்ளது.

பலத்த ஆதரவுடன் பதவிக்கு வந்த இந்த நகரபிதா தந்து கடும்போக்கால் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார், அவர்கள் எதையும் காரணம் காட்டி இவரை பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கின்றனர்.

Lawyer Clayton Ruby alleges Ford breached the act in February when he asked council to remove a year and a half old sanction placed upon him by the city’s integrity commissioner. Ford had been ordered to repay $3,150 worth of donations to his football foundation he solicited using councillor letterhead. Ford then voted on the issue, which passed.

http://www.thestar.c...ict-of-interest

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராதிகா, முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மீதும் அவர் வெற்றி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் பழமைவாத கட்சியின் இந்த தொகுதி உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேவேளை இந்த ஊடக அறிக்கையில் மாநில லிபரல் கட்சி உறுப்பினரும் தமிழர்கள் கள்ள வாக்குகள் போட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

Marlene Gallyot, a federal Conservative candidate who lost to the NDP’s Rathika Sitsabaiesan, has complained to Elections Canada, alleging ineligible voters “by the dozens” turned up on voting day and filed ballots illegally.

"They came with a Future Shop bill,” she told CBC News. “They came in with a Canadian Tire bill. They were coming in without proper identification."

http://www.cbc.ca/ne...carborough.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூதாட்ட விடுதிகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுவதை கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

சூதாட்ட விடுதிகளை விரிவுபடுத்தும் ஒன்றாரியோ அரசின் செயற்பாட்டிற்கு ஒன்றாரியோ மக்களின் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக கருத்துக் கணிப்பொன்று காட்டுவதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

தமது ஏட்டிற்கென Forum Research நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்டவர்களில் 69 சதவீதமானவர்கள், ரொறன்றோ, ஒட்டாவா போன்ற நகரங்களில் புதிய சூதாட்ட விடுதிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

OLG நிறுவனத்தின் புதிய திட்டத்தினை 24 சதவீதமானவர்கள் மட்டும் ஆதரித்தார்கள்.

1.3 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தைத் தரக்கூடிய இந்தத் திட்டம் காரணமாக, சிறுபான்மை லிபரல் அரசுக்கு ஆதரவு குறைந்துள்ளதென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 40 சதவீத ஆதரவும், லிபரல் கட்சிக்கு 28 சதவீத ஆதரவும், என்டீபீக்கு 23 சதவீத ஆதரவும் நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது

குபெக்கை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பிரபல தொலைபேசி நிறுவனமான பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது.

3.38 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஒப்பந்தம் முடிவாக்கப்பட்டுள்ளது.

CFTK,TV, CFJW FM and EZ Rock Radio Stations போன்ற பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை Astral Media கனடா முருவதும் நடத்தி வருகின்றது. இவற்றுள் பல்வேறு பிரென்ஞ்சு மொழியிலான தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலிச் சேவைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11414

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருவருடமும் கனடாவின் மாநிலமான ஒன்ராறியோவில் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக மாநில அரசால் உழைப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இன்று அந்தப்பட்டியால் வெளியானது.

மொத்தம் 78914 பேர் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக கடந்த உழைத்துள்ளார்கள். அவர்களின் பெயர்களை அவர்கள் வேலைசெய்யும் துறை சார்ந்து பார்க்கலாம் : http://www.fin.gov.on.ca/en/publications/salarydisclosure/2012/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓன்றாரியோவின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

உள்ள செலவு தாக்கம் 16 பில்லியன்கள்

சமர்ப்பித்த வரவு செலவு 2015 அளவில் சமநிலைப்படுத்தும்

பல மாநில அரச தொழிலாளர்களும் சம்பள ஏற்றம் பல வருடங்களுக்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.theglobeandmail.com/news/politics/ontarios-austerity-budget-sets-up-public-sector-showdown/article2383082/

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

அது ஒரு குழப்பமான செய்தி :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 136.8 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise 2.8 cents to 136.8 cents a litre

http://www.680news.com/news/local/article/276513--gas-prices-expected-to-rise-2-8-cents-to-136-8-cents-a-litre

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்ராறியோவின் வட பகுதியில் ஏற்பட்ட பெருந்தெரு விபத்து ஒன்றில் 3-5 மில்லியன்கள் நாணய குத்திகள் வீதிகளில் சிதறுண்டு கிடந்தது.

si-brinks-coins-300.jpg

http://www.cbc.ca/news/canada/sudbury/story/2012/03/28/sby-hwy11-crash.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/news/canada/story/2012/03/29/federalbudget-main.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/ne...udget-main.html

இந்த வருடத்துடன் கனடாவில் ஒரு சதம் (சதக்குத்தி) உருவாக்கப்படமாட்டாது. அதை செய்ய சதம் முடிகின்றதாம்.

எனவே வாங்கும் பொருட்கள் கிட்ட உள்ள இலக்கத்துடன் சேர்க்கப்படும் (குறையும் இல்லை கூடும்) அதாவது ஐந்து இல்லை பத்துசதமாகும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 140.1 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise by 4.5 cents to 140.1 cents a litre

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டன் என்ற ஒன்ராரோயோ நகரில் நடக்கும் எட்டு வயது சிறுமியின் கொலைவழக்கு பலரையும் உலுக்கும்.

இந்தச்சிறுமியை ஒரு ஆணும் பெண்ணும் பாடசாலை முடிந்த நேரத்தில் தந்திரமாக கதைத்து அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலைசெய்து மறைத்தனர்.

பல நாட்களாக தொடரும் இந்த விசாரணை இன்று மூன்று வருடங்களுக்கு முன்னராக தொண்டு எடுக்கப்பட்ட உடலை ஆராய்ந்த வைத்தியரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் இரக்கத்தையும் மறுபக்கம் ஆத்திரத்தையும் வரச்செய்யும் கூற்றுக்கள்.

http://www.theglobeandmail.com/news/national/tori-staffords-body-too-badly-decomposed-to-determine-if-sex-assault-occurred-jury-told/article2390767/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எரிபொருளின் விலை கிட்டத்தட்ட ஒரு லீட்டர் 1.40

இது 1.70 ஆக உயர்ந்தால் என்ன நடக்கும்??

- பலருக்கு வேலை இல்லாமல் போகும்

- மீண்டும் வட அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் தள்ளப்படும்

- அமெரிக்கா கூடுதலாக பாதிக்கப்படலாம், அது கனடாவையும் பாதிக்கும்

- பங்குச்சந்தைகள் சரியும்

http://www.theglobea...article2391729/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.