Jump to content

கிட்டு என்னும் காவிய நாயகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டுவை பற்றி அய்யரின் பதிவுகளில் விளக்கமாக இருக்கு.

"கந்தன் கருணைச் சம்பவம்.. பாதிக்கப்பட்ட ஒருவரின் துப்பாக்கி பாதிப்பை உண்டு பண்ணியவர்கள் மீது.. தீர்ப்பு வழங்க முதல் வெடித்த நிகழ்வே தவிர.. அது படுகொலை அல்ல. இதனை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரும் அறிவர்."

நெடுக்சின் கருத்திற்கு நூறு பச்சைகள் சிங்களவன் குத்துவான். பாதிக்கப்பட்ட சிங்கள ராணுவம் நாப்பதனாயிரம் தமிழர்களையும் போட்டதேன்று பைலை மூட வேண்டியதுதான்.

ஏன் நீங்கள் மாணிக்கதாசனை வைச்சுக் கொண்டு வவுனியாவில போட்டுத் தள்ளினதுகளையும் படுகொலைகளுக்குள் அடுக்கினால்.. அது வெலிகடையில் சிங்களவன் செய்ததுகளை விட மோசமான ஒன்றாக இருக்கும். மாணிக்கதாசன் நடத்திய வதை முகாம்கள் குறித்த பதிவுகள் சர்வதேச அமைப்புக்களிடமும் உண்டு. புலிகள் மீது குற்றம் சுமத்த முன் உங்களை நோக்கி சுட்டும் நான்கு விரல்களையும் உற்று நோக்குங்கள். அப்போ தெரியும்.. யார் உண்மையான படுகொலையாளர்கள்.. இனத்துரோகிகள் என்பது.

கந்தன் கருணை சம்பவம்.. ஒரு தனிப்பட்ட நபரின் சுயாதீன முடிவின் பால் நிகழ்ந்த ஒன்று. ஆனால்.. வவுனியாவில் புளொட் செய்தது.. திட்டமிட்ட இன அழிப்பின் ஒரு பகுதி. அதேபோல் வெலிகடையில்.. நடந்தது.. இன அழிப்பின் ஒரு பகுதி. கந்தன் கருணை நிகழ்வினை யாரும் வீரம் என்று போற்றவில்லை. அதே நேரம் அது விடுதலைப்புலிகள் எதிர்பாராது நிகழ்ந்த ஒரு சம்பவம். திட்டமிட்ட படுகொலைச் செயல் அல்ல..! அதை நீங்கள் உணர்ந்து கொண்ட பின் தான்.. திட்டமிட்ட இன அழிப்பை செய்யும் சிங்களவனை கூட்டிக் கொண்டு வந்து என் கருத்துக்கு பச்சை குத்த வைக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply

மற்றவர்கள் மாதிரி வெளிநாடு வந்த உடன் தாயகம் போக மறுக்காமல், இங்கே சுகபோகமா இருக்காமல் இங்கு இருந்தும் நாட்டிற்காக உழைத்து தலைவரின் அழைப்பை மறுக்காமல் தாயக கனவுடன் சென்ற சுத்தமான அப்பழுக்கு அற்ற ஒரு இனத்தின் விடிவை மட்டுமே சுவாசித்த வீரன். அவர் பற்றிய வசை பாடலை நிறுத்துங்கள்.

தலைவர் 80 களில் அடிக்கடி சொல்லும் வாக்கியம் தமிழீழத்தில் கிட்டுவும் தமிழகத்தில் பொன்னம்மானும் இருக்கும் வரை தனக்கு கவலை இல்லை என்று.. தமிழ் ஈழத்திற்கான நம்பிக்கை வழிகாட்டி அவர். யாரும் அவரை விமர்சிக்க தகுதி வேணும்.

எமது இனத்திற்காக ஏதாவது சாதித்தவர்கள் மட்டுமே எந்த மாவீரனையும் விமர்சிக்கலாம்

Link to comment
Share on other sites

கந்தன் கருணைப் படுகொலை தொடர்பாக 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டி தமிழரங்கம் இணையத்திலிருந்து.

kanthankarunai.png

Link to comment
Share on other sites

கிட்டண்ணா, ... பார்த்து வியந்தவர்களில் ஒருவர்! .. அழியாத நினைவுகளோடு ...

Link to comment
Share on other sites

கிட்டண்ணா, ... பார்த்து வியந்தவர்களில் ஒருவர்! .. அழியாத நினைவுகளோடு ...

நானும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய டாங்கை அடித்த மாணிக்கம் என்றும் அஞ்சா நெஞ்சன் கந்தன்(பொட்டரையே தூக்கி வந்தவர்) என்றும் வியந்துதான் இருந்தோம். பின் உண்மைமுகங்களை (சுழிபுரம் கொலை )கண்டுதான் தப்பி ஓடிவந்தோம் ,அது அவர்களின் தவறல்ல அவர்களை அப்பிடி உபயோகித்தவர்களின் தவறு .

நான் கந்தசாமியுடன் தான் முதல் மரியாதை படம் பார்த்தேன் ,அன்று மனம்விட்டு கதைத்தேன் ,அப்போது சொன்னார் "தன்னில் விசாரணை வைத்து தான் பிழை செய்திருக்கும் பட்சத்தில் தண்டனை ஏற்க தயார் "என்று.விசாரணை நடக்க விட்டால் தானே . ராஜபக்சா இன்று சொல்வதுமாதிரித்தான் .

இவ்வளவு அநியாயமும் நடந்தது தனது இனத்திற்காக என்ற போர்வைக்குள் .முழுபழியும் பாவமும் யாழ்பாண மேல்குடியையே சேரும் .

நல்லூர் பின் வீதியில் இருக்கும் கந்தன் கருணையில் இக் கொலைகள் நடக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலை தொடர்பாக 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டி தமிழரங்கம் இணையத்திலிருந்து.

kanthankarunai.png

நன்றி மின்னல். இந்த துண்டுப்பிரசுரத்தை சரிநிகர் அடிச்சிருக்குமோ..???! அதுதான் நிழலி அண்ணரும்.. அதே பதத்தைப் பாவிக்கின்றார் போலும்.

சிங்களவன் கொன்றால் படுகொலை.. இந்தியா கொன்றால் படுகொலை.. புலிகள் கொன்றால் பாசிசப் படுகொலை.. நீங்கள்.. துரோகிகள்.. அசோகா கொட்டல்.. மணியாரம் தோட்டம்.. மருதனார் மடம் வதை முகாம்.. காங்கேசந்துறை வதை முகாம்.. பரந்தன் வதை முகாம்.. வவுனியா.. பூந்தோட்டம்.. அது இதென்று வைச்சு.. நடத்திய வதை முகாங்கள்.... என்று பல வகை வதை முகாம்களை நடத்தி போட்டுத் தள்ளிய தொகை.. 60 அல்ல.. 1000 ங்களை தாண்டும்..! அதில் அப்பாவி மக்களும் உள்ளனர்.

எனக்குத் தெரிய எங்கள் வீட்டுச் சந்தியில் சைக்கிள் கடை நடத்திய ஒரு அப்பாவி தமிழ் இளைஞனை இந்தியப் படைகள் காலத்தில் புளொட் காரங்கள் கடத்திக் கொண்டு போய் நச்சு ஊசி போட்டு.. இறுதில் அவர் மரணிக்கும் தறுவாயில் வீதியில் வீசப்பட்டு கிடந்தவர். இத்தனைக்கும் அவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை. குடும்பத்தின் கஸ்டத்தை போக்கவே வேலை செய்தவர். அவரும்.. இந்த புளொட் இந்தியக் கூலிகளுக்கு புலியாகி துரோகியாகி தெரிந்தது போல.. மகா கொடுமை இந்த உலகில் வேறும் எங்கும் நடந்திருக்க முடியாது.

இவங்கள் எல்லாம் இந்த 60 பேருக்கு துண்டுப்பிரசுரம் அடிப்பதே பாவம். அந்தளவுக்கு கொடுமைகளைச் செய்த இவர்கள்.. அடுத்தவனுக்கு துண்டுப்பிரசுரம் அடிக்க என்ன அருகதை இருக்குது. புலிகள்.. தாங்கள் செய்த தவறுகளுக்களை உணர்த்திருந்தார்கள்.. பலவற்றை திருத்தி இருந்தார்கள். மாற்று குழுக்களை அரவணைத்தார்கள். ஆனால் இந்த துரோகி நாய்கள்.. வரலாற்றில்.. 1981 இல் எப்படி இருந்துதுகளோ.. அதே தமிழின விடுதலை எதிர்ப்புணர்வோடே.. புலிப் பாசிசம் பேசி தமிழ் மக்களை காட்டிக் கொடுத்துக் கொண்டு.. பேரழிவுகளுக்குள் தள்ளிக் கொண்டு.. இன்றும் இருக்குதுகள் என்பதற்கு யாழிலும் சிலர் சாட்சியாக உள்ளனர்...!

புலிகள் அல்ல.. இவர்களின் அநியாயத்தை சந்திக்கும் கேட்டறியும்.. எந்த ஒரு மனிதனும்.. இந்தத் துரோகிகளை.. மன்னிக்கமாட்டார்கள். அருணா அன்றைக்கு சும்மா சுட்டிருக்கமாட்டார். அவருக்கும்.. வெறுப்பேற்றி இருப்பார்கள். அதனால் தான்.. இந்தக் கதியே நிகழ்ந்திருக்கும்.

ஆம் கிட்டு மாமா.. தற்கொலை தான் செய்து கொண்டார். அருணா தற்கொலை செய்து கொண்டார். இந்த 60 பேரை கொன்றதற்காக அது என்றால்.. உமாமகேஸ்வரன் தேடுவாரின்றி கொழும்பில் செத்துக் கிடந்தானே.. பத்மநாபா.. சென்னையில் செத்துக் கிடந்தானே.. அதெல்லாம்.. அவை செய்த கொலைகளுக்கு என்றும் அடக்கிக் கொள்ளுங்கள்.

உமாமகேஸ்வரன்.. கொன்று கொன்று வெட்டிப் புதைத்த தொகைகளை எண்ணுங்கள்.. பத்மநாபா.. சுட்டுக் கொன்று சந்தியில் வீசியதைகளையும்.. கோணிப் பைகளில் கட்டி.. சந்தியில் போட்டதுகளையும் எண்ணுங்கள். யாழ் இந்துக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களையும் ஆசிரியர்களை சுட்டுக் கொன்றதை நினையுங்கள்..! நீங்கள் செய்தா எதிரிகளுக்கான.. புலிக் களை எடுப்பு.. !

புலிகள்.... மக்களைக் கொலை செய்யுற காட்டிக் கொடுக்கிற.. எதிரிக்கு கூலியாக இருக்கிற.. உங்களை தண்டிச்சா.. அது படுகொலை.. அதுவும் இனப்படுகொலை.

புலிகள் உங்களின் அநியாயங்களுக்கு பதில் அளித்தால் மட்டும் தான்.. அது படுகொலையோ..???! நீங்கள் செய்வது எல்லாம்.. நல்ல.. புண்ணியமான செயல்கள் தானே.நீங்கள் செய்த படுகொலைகள்.. இனப்படுகொலைகள் ஆகாதோ..???!

ஒரு இனப்படுகொலையாளன் செய்யும் இனப்படுகொலையோடு ஒப்பிட்டு உங்களின் துரோகத்திற்கு இன அழிப்பிற்கு.. நியாயம் தேடும்.. துரோகிகளே... இனப்படுகொலையால் அழியும் இனத்தின் அழிவை நியாயப்படுத்தும் கோழைகளே.. உங்களை இந்தப் பூமியில் வைத்திருப்பதால் மட்டும்.. உயிர்கள் வாழ்ந்திடும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.. மாறாக ஆபத்தே விஞ்சி உள்ளது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்..!

புலிகள் அழித்ததை விட புலிகளை அழிக்கிறோம் என்று நீங்கள் எதிரிகளோடு சேர்ந்தும்.. நீங்களாகவும் அழித்த எம் மக்களின் வீரர்களின் தொகை 2,00,000 இற்கும் மேல். ஒரு இனப்படுகொலையை சிங்களம் விடுதலை வேண்டிப் போராடிய எம்மினம் மீது திணிக்க நீங்களும் அவனுக்கு கொலை வாள் ஏந்தி சேவகம் செய்ததை எந்தத் தமிழனும் மற்ற மாட்டான். உங்கள் துரோகமே இந்த உலகில் சொந்த இனத்திற்கு செய்யப்பட்ட... செய்யப்படுகின்ற துரோகங்களில் மிகக் கொடுமையானது.. என்பதையும் மறவாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடைப்படுகொலையுடன் கந்தன் கருணை கொலைச்சம்பவத்தை ஒப்பீடு செய்த நிழலியைக்கண்டிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு: புலிகளின் வீர வரலாற்றில் பல வெற்றிகளை ஈட்டி புலிகள் இயக்கத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் மிக மோசமாக மாற்று இயக்கங்களை போட்டுத் தள்ளி தமிழர் மத்தியில் பிரிவினைக்கான உறுதியான வேர்களை இட்டு நிரப்பிய ஒருவரும் இவர்தான். வெலிகடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா

இந்தகருத்து ஏற்க்கமுடியாத கருத்து

Link to comment
Share on other sites

சக விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பை ஆரம்பித்து வைத்த புளொட்

mano.jpgமனோ மாஸ்டர்

1983ம் ஆண்டு யூலை கலவரத்துக்குப் பின் இந்திய அரசால் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட “தார்மீக ஆதரவும்” அதனுடன் கூடவே இராணுவப் பயிற்சியும், அதன் பின்னான காலப்பகுதியில் இந்திய அரசினால் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் வீக்கத்தை ஏற்படுத்த ஒரு காரணமாகவிருந்தது. சிறிய குழுக்களாக இருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் இந்த வீக்கமானது அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகளை நோக்கி இட்டுச் சென்றது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயான அரசியல் மற்றும் கருத்து முரண்பாடுகள் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் தீர்த்து வைக்கப்பட்டன அல்லது இயக்கங்களுக்குள்ளான பிளவுகளில் முடிவுற்றன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய உள்முரண்பாடுகளால் மனோ மாஸ்டருடன் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தனர்.

ragavan.jpegதமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் தோன்றிய உள்முரண்பாடுகளால் ராகவன் தலைமையில் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளி மாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது. தமிழீழ விடுதலை இராணுவத்துக்குள் தோன்றிய முரண்பாடுகளால் தமிழீழ விடுதலை இராணுவம் இரண்டாகப் பிளவுற்றது. பிளவுபட்டவர்களின் ஒருபகுதியினர் இந்தியாவில் புளொட்டுடன் இணைந்து கொண்டு விட்டதாக எமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியினரோ தமிழீழ விடுதலை இராணுவம் என்ற பெயரிலேயே தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ராஜன், அராலியைச் சேர்ந்த கூச், குப்பிளானைச் சேர்ந்த சேகர் ஆகியோர் முன்னணி உறுப்பினர்களாக இருந்தனர். புளொட்டுக்கும் – குறிப்பாக புளொட் இராணுவப் பிரிவுக்கும் – தளத்தில் செயற்பட்ட தமிழீழ விடுதலை இராணுவத்தினருக்குமிடையே ஒருவித பகைமை நிலை அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. எமது இராணுவப் பிரிவினரும் தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இராணுவத்தை (TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கடத்தப்பட்டனர். பதிலுக்கு தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எமது இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கடத்தினர். துப்பாக்கி மோதல்கள் ஆரம்பமாகின. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழீழ விடுதலை இராணுவத்தினரை(TELA) சேர்ந்தவர்கள் எமது இராணுவத்தால் கைதிகள் ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த கூச் (அராலி) சேகர்(குப்பிளான்) ஆகிய இருவரும் எமது இராணுவப் பிரிவினரால்- நாம் “புரட்சிகர இராணுவம் எனப் பீற்றிக்கொண்ட எமது இராணுவப் பிரிவினரால் -அவர்களின் குரல்வளை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக அறிந்தோம். எமது இராணுவப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தோர் வேறு சிலரும் கொலை செய்யப்பட்டிருந்தனர். எதற்காக தமிழீழ விடுதலை இராணுவத்தினரின் மீதான அழிப்பு நடவடிக்கை? யாருடைய உத்தரவின் பேரில் எமது இராணுவப் பிரிவினர் இத்தகைய கொடூரத்தனத்தில் ஈடுபட்டனர்? நிட்சயமாக தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கின் உத்தரவின் பேரில் அல்ல. ஏனெனில் டொமினிக் ஏற்கனவே கூறியதுபோல் அனைத்துமே அவர் கைகளுக்கு வெளியே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்படியாயின் தமிழீழ விடுதலை இராணுவம் மீதான கொடூரச்செயலுக்கு, தமிழீழ விடுதலை இராணுவத்தினரை அழிப்பதற்கு எமது இராணுவப் பிரிவினருக்கு உத்தரவு இட்டது யார்?

இந்தக் கேள்விக்கு சின்ன மென்டிசிடம் இருந்து வந்த ஒரே பதில்: “பெரிசு” (உமா மகேஸ்வரன்).

உமா மகேஸ்வரனின் நேரடி உத்தரவின் பேரில் தளத்தில் சக விடுதலை இயக்க உறுப்பினர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கோரத்தனமான கொலைகளையும், சக விடுதலை இயக்கம் – அது எவ்வளவு தான் சிறிய விடுதலை இயக்கமாக இருந்தாலும் கூட – ஒன்றை ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் அழித்தொழித்த “பெருமை” யை எமது இராணுவப் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத போராட்டமாக உருப்பெற்றெழுந்த காலத்தில் இருந்து பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய இயக்க தலைவர்களையே குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஒபரோய் தேவன் படுகொலை, தமிழீழ விடுதலைத் தீவிரவாதிகள் இயக்க(TELE) ஸ்தாபகரும் அதன் தலைவருமான ஜெகன் படுகொலை போன்றவை இதன்பாற்பட்டவையே.

ஆனால் எமது இராணுவப் பிரிவினரோ சக விடுதலை இயக்கமொன்றை முழுமையாக அழித்தொழித்ததன் மூலம் வரலாற்றில் தமது முத்திரையை பதித்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சக விடுதலை இயக்கங்களை எப்படி அழித்தொழிப்பது என்பதில் வழிகாட்டியாகவர்களாகவும் இருந்தனர். தமிழீழ விடுதலை இராணுவத்தையும் அதன் முன்னணி உறுப்பினர்களையும் அழித்ததன் மூலம் – அதுவும் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் அழித்ததன் மூலம் – எமது அமைப்பின் செயலதிபரும் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவப் பிரிவும் எவ்வழியில் செல்கின்றனர் என்பதையும், செயலதிபர் உமாமகேஸ்வரன் உத்தரவிட்டால் எமது இராணுவப் பிரிவினர் எந்தக் கோரத்தனத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கூட சக விடுதலைப் போராட்ட இயக்கத்தையும் அதன் போராளிகளையும் அழிப்பதற்கே எமது இராணுவப் பிரிவினரால் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

கிட்டண்ணாவின் மனிதாபிமானதிட்கு ஒரு எடுத்து காட்டு ....

80 களில் டெலோ தடை செய்யப்பட்ட நேரம் டெலோவின் அரசியல் துறை பொறுப்பாளர் தயா அண்ணா அவர்கள் விடுதலை புலிகளினால் கைது செய்யப்படார். ஆனால் கிட்டு அண்ணா அவர்களினால் உடனடியாக பொது மன்னிப்பு கொடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். காரணம் அவரது சகோதரர் ஒபரோய் தேவன் அண்ணா (தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தலைவர்) அவர்கள் தலைவர் அவர்களால் தண்டிக்கபட்டவர். ஆகவே இவரை நாம் மன்னித்துவிட வேண்டும் என்று சொன்னவர் கிட்டு அண்ணா.ஒரே குடும்பத்தில் தேவை அற்ற இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானி அவர்

( டெலோ முன்னாள் அரசியல் பொறுப்பாளர் இப்பவும் ஐரோப்பாவில் இருக்குறார் )

அவர் எனது உறவினர் என்ற படியால் எனக்கு இந்த விபரங்கள் அதிகம் தெரியும். அதன் பின் அவர் போராட்டத்தை விட்டு ஒதுங்கி விட்டார். இதுவே மற்ற கொலை கும்பல்களிடம் இப்படி ஒரு பெரிய பொறுப்பாளர் கிடைத்தால் என்ன பண்ணுவார்கள் என்று சொல்ல தேவை இல்ல. உ +ம் புளட் ,இபி ஆர் எல் எப், இபி டி பி கும்பல்கள்

Link to comment
Share on other sites

தமிழனை அழித்தவர்கள் பட்டியல்.

1.சிங்கள இராணுவம்

2.இந்திய இராணுவம்

3.விடுதலைப்புலிகள்

4.மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து.

இது உலகம் அறிந்த உண்மை.

கிட்டண்ணாவின் மனிதாபிமானதிட்கு ஒரு எடுத்து காட்டு ....

80 களில் டெலோ தடை செய்யப்பட்ட நேரம் டெலோவின் அரசியல் துறை பொறுப்பாளர் தயா அண்ணா அவர்கள் விடுதலை புலிகளினால் கைது செய்யப்படார். ஆனால் கிட்டு அண்ணா அவர்களினால் உடனடியாக பொது மன்னிப்பு கொடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். காரணம் அவரது சகோதரர் ஒபரோய் தேவன் அண்ணா (தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தலைவர்) அவர்கள் தலைவர் அவர்களால் தண்டிக்கபட்டவர். ஆகவே இவரை நாம் மன்னித்துவிட வேண்டும் என்று சொன்னவர் கிட்டு அண்ணா.ஒரே குடும்பத்தில் தேவை அற்ற இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானி அவர்

( டெலோ முன்னாள் அரசியல் பொறுப்பாளர் இப்பவும் ஐரோப்பாவில் இருக்குறார் )

அவர் எனது உறவினர் என்ற படியால் எனக்கு இந்த விபரங்கள் அதிகம் தெரியும். அதன் பின் அவர் போராட்டத்தை விட்டு ஒதுங்கி விட்டார். இதுவே மற்ற கொலை கும்பல்களிடம் இப்படி ஒரு பெரிய பொறுப்பாளர் கிடைத்தால் என்ன பண்ணுவார்கள் என்று சொல்ல தேவை இல்ல. உ +ம் புளட் ,இபி ஆர் எல் எப், இபி டி பி கும்பல்கள்

வீட்டிற்கு ஒருவரை சேர்ப்பது போல் வீட்டிற்கு ஒருவரைத்தான் போடுவது என்ற கொள்கையும் வைத்திருந்தார்களோ என்னவோ ?

ஒபரே தேவன் தொடங்கி தயா வரை எனக்கு தெரியும்.மச்சான் ரட்னபாலனையும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழித்தவர்கள் பட்டியல்.

1.சிங்கள இராணுவம் + மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து

2.இந்திய இராணுவம் + மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து

3.மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து.

4.முஸ்லீம் ஊர்காவல் படை மற்றும் ஜிகாத்.

5.விடுதலைப்புலிகள்.

இது உலகம் அறிந்த உண்மை.

இப்படி அமைவதை தான் உலகம் நன்கறியும்.

அண்மையில்... ஈபிடிபி.. கருணா கும்பல்.. புளோட் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்.. மற்றும் விசாரணைக் குழுக்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களும் இதனை மெய்ப்பிக்கின்றன. அதுமட்டுமன்றி புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் என்று பார்க்கையில் அது சிறிய ஒரு தொகையாகவே இருக்கும்..! புலிகளால் எச்சரிக்கை வழங்கப்பட்டு அதனை செவி மடுக்காது தேச விரோத துரோகச் செயலில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களே அதிகம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழித்தவர்கள் பட்டியல்.

1.சிங்கள இராணுவம்

2.இந்திய இராணுவம்

3.விடுதலைப்புலிகள்

4.மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து.

இது உலகம் அறிந்த உண்மை.

வீட்டிற்கு ஒருவரை சேர்ப்பது போல் வீட்டிற்கு ஒருவரைத்தான் போடுவது என்ற கொள்கையும் வைத்திருந்தார்களோ என்னவோ ?

ஒபரே தேவன் தொடங்கி தயா வரை எனக்கு தெரியும்.மச்சான் ரட்னபாலனையும் தெரியும்.

அப்படி என்றால் நீங்கள் எப்படி தப்பினீர்கள்???

நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் புலிகள் எவ்வளவு நல்லவர்கள் என்பது வெளிப்படும்.

Link to comment
Share on other sites

தமிழனை அழித்தவர்கள் பட்டியல்.

1.சிங்கள இராணுவம்

2.இந்திய இராணுவம்

3.விடுதலைப்புலிகள்

4.மற்றைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து.

இது உலகம் அறிந்த உண்மை.

சரி ஒரு விவாதத்திற்கு அது முள்ளிவாய்க்கால் வரை என்று முடிக்கலாம். ஆனால், இன்று ஆயுதப்போராட்டம் இல்லாத நிலையில் கூட தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள். இன்னும் பத்தோ இல்லை இருபது வருடத்தில்

அடுத்த தலைமுறை யாரைக்குறை கூறும்?

இது நீங்கள் நாளை எழுதப்போகும் 'உலகம் அறிந்த உண்மை' :

1.கூட்டமைப்பு

2. புலம்பெயர் அமைப்புக்கள் - நாடு கடந்த அரசு, உலகத்தமிழர் பேரவை, தமிழர் தேசிய அவைகள்,.

எனவே எங்கள் பங்கிற்கு முடிந்ததை ஒற்றுமையாக செய்து நாளைய வரலாற்றை எமதாக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சகாறா அக்கா உட்பட பல அதி தீவிர தேசிய ஆதரவாளர்கள் அதி தீவிர நேசிப்பால் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எவ்வளவு பிழை விட்டாலும் அது அவர்களுக்கு அது பிழையாக தெரிவதும் இல்லை,அதை சுட்டிக் காட்டுவதும் இல்லை...போராட்ட ஆரம்ப காலத்தில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் அழிந்த பிறகும் இந்த நிலை தொடர்கிறது...இனி மேலாவது விட்ட பிழையில் இருந்து பாடம் படிப்போம் என்றும் இல்லை...நா.க.அரசேயோ,உலக தமிழ் பேரவையைக் கூட யாராவது விமர்சித்தாலோ அல்லது பிழை சொன்னாலோ பல பேருக்கு பிடிப்பதில்லை.பிறகு எப்படி ஆக்க பூர்வமாக எதாவது செய்வது? பிழை/சரிகளை சுட்டிக் காட்டாமல் எல்லாத்திக்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் சரி என்பதே பலரது விருப்பம்

Link to comment
Share on other sites

இங்கு சகாறா அக்கா உட்பட பல அதி தீவிர தேசிய ஆதரவாளர்கள் அதி தீவிர நேசிப்பால் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எவ்வளவு பிழை விட்டாலும் அது அவர்களுக்கு அது பிழையாக தெரிவதும் இல்லை,அதை சுட்டிக் காட்டுவதும் இல்லை...போராட்ட ஆரம்ப காலத்தில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் அழிந்த பிறகும் இந்த நிலை தொடர்கிறது...இனி மேலாவது விட்ட பிழையில் இருந்து பாடம் படிப்போம் என்றும் இல்லை...நா.க.அரசேயோ,உலக தமிழ் பேரவையைக் கூட யாராவது விமர்சித்தாலோ அல்லது பிழை சொன்னாலோ பல பேருக்கு பிடிப்பதில்லை.பிறகு எப்படி ஆக்க பூர்வமாக எதாவது செய்வது? பிழை/சரிகளை சுட்டிக் காட்டாமல் எல்லாத்திக்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் சரி என்பதே பலரது விருப்பம்

முழுக்க முழுக்க சரி என்பதும் பிழை

முழுக்க முழுக்க பிழை என்பதும் பிழை

எனவே இடையில் பயணிப்பதே ஆக்கபூர்வமாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க சரி என்று எது உண்டு உலகில் என்பதைப்புரிந்து கொண்டால் அல்லது ஏற்றுக்கொண்டால்

முழுக்க முழுக்க பிழையானதை நாம் பின் பற்றவில்லை என்பதை அறிந்து கொண்டால் அல்லது நினைவு படுத்தினால்

எந்தக்கேள்வியும் எழாது. இடமிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சகாறா அக்கா உட்பட பல அதி தீவிர தேசிய ஆதரவாளர்கள் அதி தீவிர நேசிப்பால் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எவ்வளவு பிழை விட்டாலும் அது அவர்களுக்கு அது பிழையாக தெரிவதும் இல்லை,அதை சுட்டிக் காட்டுவதும் இல்லை...போராட்ட ஆரம்ப காலத்தில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் அழிந்த பிறகும் இந்த நிலை தொடர்கிறது...இனி மேலாவது விட்ட பிழையில் இருந்து பாடம் படிப்போம் என்றும் இல்லை...நா.க.அரசேயோ,உலக தமிழ் பேரவையைக் கூட யாராவது விமர்சித்தாலோ அல்லது பிழை சொன்னாலோ பல பேருக்கு பிடிப்பதில்லை.பிறகு எப்படி ஆக்க பூர்வமாக எதாவது செய்வது? பிழை/சரிகளை சுட்டிக் காட்டாமல் எல்லாத்திக்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் சரி என்பதே பலரது விருப்பம்

சரி பிழைகளை சுட்டி காட்டுவதை யாரும் தவறு என்று சொல்லவரவில்லை.

சரி பிழை தெரிந்தவர்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள் சப்பாணி கட்டிக்கொண்டு அலம்பி பிழைப்பை போக்குவதையே பிழை என்று சொல்கிறார்கள்.

முன்பு புலி கடிக்கும் ஒறும்மும் என்று சாக்கு போக்கு காட்டினார்கள் இப்போ எலிகூட இல்லை களத்தில இறங்கி வித்தையை காட்டுங்கோ என்றால்.

இப்பவும் கந்தன் கருணையிலே நின்றால்...........?

இந்த கந்தன் கருணையிலே சொந்த உறவுகளையே இழந்தவர்கள் நாங்கள். தமது சொந்த வாழ்விற்கு மேம்பூட்ட இவர்கள் கத்ருகுரார்களே தவிர அதன் வலி கூட இந்த நாய்களுக்கு புரியபோவதில்லை. அது தெரிந்திருந்தால் அங்கயட்கன்னிகள் வெடி சுமந்த போதும் அதன் வலி புரிந்திருக்கும். அவர்களும் தமிழுக்குத்தான் வெடி சுமந்தவர்கள். இந்த பேமாளி புல்லுரிவிகள் அவர்களுக்காக அழுதால் அதுதான் அசிங்கம் என்று நினைக்கிறோம் அதில் உறவுகளை கொடுத்த நாங்கள்.

கந்தன் கருணையில் இறந்தவர்கள் மண்ணுக்கு போரடபோனவர்கள். தனிநபர்களின் சதி சிந்தனைகளால் அநியாயமாக இறந்து போனார்கள். அவர்களுடைய தலைமைகளுக்கு தமிழ் மண்ணின் விடிவு தேவை இல்லை என்றான பின்பு அதற்கு அவர்கள் பலியாகி போனார்கள்.

உடலிலே தமிழ் இரத்தம் ஓடினால் தமிழுக்காக எவன் செத்தாலும் அது துடிக்கும்.

இந்த சரிபிழைகளை கடந்த மூன்று வருடங்கள் பேசி அலசி ஆராய்ந்து விட்டீர்கள். அதன் பிரதி பலனாக மண்ணிலே ஒரு புல்லை என்றாலும் புடுங்கிநீர்களா? இன்னும் முப்பது வருடம் நீங்கள் முக்கினாலும் எதையும் செய்யமாட்டீர்கள் என்பது எமக்கு தெரியும். முயல் பிடிக்கிற.............. தெரியுமாம்.

நா. அ. ஒரு பாதையாவது போட்டுள்ளது இனி துடிப்புள்ள இளையவர்கள் அதில் நடக்க தொடங்கினால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையாவது போகலாம்.

Link to comment
Share on other sites

அது சரி இப்ப புலிகள் விட்ட பிழையள சொல்லிக்காட்டி என்ன செய்ய போறீங்க? எதிhகளை மன்னிக்கலாம் ஆனால் துரோகிகளை? போராட்டம் என்டால் ஆயிரம் பிழைகள் இருக்கும் எல்லா விஷயத்திலயும் மிஸ்ட்டர் பெர்பெக்ட்டா இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

30 வருஷமா எந்தவித பலனையும் எதிர்பாரமல்.......தாயகம் விடுதலை மக்கள் இந்த ழூன்றை மட்டும் உயிர் ழூச்சா கொண்டு தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தின் உயிhகள் அனைத்தையும் இழந்த அந்த தளபதிகள் போராளிகளை கொன்ஞமாவது மதியிங்கப்பா...யார் வேணும் எண்டாலும் யார்லையும் பிழை பிடிக்கலாம் அவனுக்கு தான் தெரியும் அதனோட வலி வேதனை எல்லாமே..ஒட்டுக்குழுக்கள சேர்ந்தவர்களை எல்லாம் விழத்தும் படி தான் முதல் அறிவிக்கப்பட்டு பிறகு நடவடிக்கை எடுக்கப்ட்டது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சகாறா அக்கா உட்பட பல அதி தீவிர தேசிய ஆதரவாளர்கள் அதி தீவிர நேசிப்பால் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எவ்வளவு பிழை விட்டாலும் அது அவர்களுக்கு அது பிழையாக தெரிவதும் இல்லை,அதை சுட்டிக் காட்டுவதும் இல்லை...போராட்ட ஆரம்ப காலத்தில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் அழிந்த பிறகும் இந்த நிலை தொடர்கிறது...இனி மேலாவது விட்ட பிழையில் இருந்து பாடம் படிப்போம் என்றும் இல்லை...நா.க.அரசேயோ,உலக தமிழ் பேரவையைக் கூட யாராவது விமர்சித்தாலோ அல்லது பிழை சொன்னாலோ பல பேருக்கு பிடிப்பதில்லை.பிறகு எப்படி ஆக்க பூர்வமாக எதாவது செய்வது? பிழை/சரிகளை சுட்டிக் காட்டாமல் எல்லாத்திக்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தால் சரி என்பதே பலரது விருப்பம்

ரதி இதற்கு என்னிடம் இருந்து என்ன பதில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வருஷமா எந்தவித பலனையும் எதிர்பாரமல்.......தாயகம் விடுதலை மக்கள் இந்த ழூன்றை மட்டும் உயிர் ழூச்சா கொண்டு தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தின் உயிhகள் அனைத்தையும் இழந்த அந்த தளபதிகள் போராளிகளை கொன்ஞமாவது மதியிங்கப்பா...யார் வேணும் எண்டாலும் யார்லையும் பிழை பிடிக்கலாம் அவனுக்கு தான் தெரியும் அதனோட வலி வேதனை எல்லாமே..ஒட்டுக்குழுக்கள சேர்ந்தவர்களை எல்லாம் விழத்தும் படி தான் முதல் அறிவிக்கப்பட்டு பிறகு நடவடிக்கை எடுக்கப்ட்டது.....

ஒட்டுக்குழுக்கள சேர்ந்தவர்களை எல்லாம் விலத்தும் படி தான் முதல் அறிவிக்கப்பட்டு பிறகு நடவடிக்கை எடுக்கப்ட்டது.....

மன்னிக்கவும் திருத்தததிற்காக.

Link to comment
Share on other sites

போடுவோம் வாருங்கள்

இவன் அவனைக் கொன்றான்

அவன் இவனைக் கொன்றான்

தமிழனைத் தமிழர் கொன்ற

குருதி குடிக்கும் காவியங்கள்

சுந்தரத்தை யார் போட்டான்

சுந்தரத்தைப் போட்டவனை

யார் போட்டான்

சிறியை கிட்டன் போட்டான்

கிட்டனை யார் போட்டான்

TELA வை PLOTE போட்டான்

PLOTE ஐ LTTE போட்டான்......

.............................................

அருணா யாரைப் போட்டான்

அருணாவை யார் போட்டான்

அருணாவை இந்தியன் ஆர்மி போட்டான்

EP மொத்தத் தமிழனையும் போட்டான்

அவனையும் சேர்த்து வரதராஜப் பெருமாள் போட்டான்

சந்ததியாரை யார் போட்டான்

கந்தசாமியை யார் போட்டான்

உமாவை கந்தசாமி போட்டான்

கந்தசாமியை மூர்த்தி போட்டான்.........

யார் யாரைப் போட்டான்

உமா யாரைப் போட்டான்

பிரபா யாரைப் போட்டான்

உமைகுமாரனை யார் போட்டான்

இறைகுமாரனை யார் போட்டான்

கூழை டக்கி கவிழ்த்தான்

டக்கியை நிர்மலா கவிழ்த்தார்..........

தமிழனை தமிழன் போடுவதும்

கவிழ்ப்பதும் தொடர்கதை.

அடுத்த போடுதல்களும் கவிழ்த்தல்களும் உனதே

விழித்திரு தமிழா

பிற்குறிப்பு - பெயர்கள் மாறியிருந்தாலும் போடுதல்களும் கவிழ்த்தல்களும் மாறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விடுதலைப் புலிகளில் பிடித்த விசயமே இதுதான். அவர்கள் அடுத்தவன் பேச்சைக் கேட்டு கொண்டு நிற்கிறதில்லை. நின்றிருந்தால்.. இந்த மாற்றுக்குழு.. துரோகக் கும்பல்கள் போல 1981 ம் ஆண்டில் அவர்கள் எப்படி இருந்தார்களோ.. அதே புறணிபாடு அரசியல் தான் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

எங்கட தேசிய தலைவர் மாறுபட்டவர். போடுறதிற்கும் அவரிட்ட கணக்கிருந்தது.. போராடவும் அவரிடம் நேர்த்தி இருந்தது..! அதனால் தான் அவரால் ஒரு மாபெரும் விடுதலை அமைப்பை உருவாக்கி தமிழனுக்கு இலங்கைத் தீவில் பிரச்சனை உண்டு என்பதை உலகறியச் செய்ய முடிஞ்சது. அதுவே பல துரோகிகளுக்கு வெளிநாட்டிலும்.. உள்நாட்டிலும் அரசியல் வாழ்வளித்தும் உள்ளது.

de facto வடிவில் என்றாலும் தமிழீழத்தை நிறுவி நிர்வகித்து.. உலகிற்கே தமிழீழத்தின் இருப்பு சாத்தியம் என்று காட்டியவர் தலைவர்.

இந்தக் கால வெளியில்.. துரோகிகள் செய்தது என்னை.. வீட்டுக்கொரு ஆளைப் பிடிச்சு சிங்களவனட்டையும்.. இந்தியப் படைகளட்டையும் சுடச் சொல்லி.. குடுத்திட்டு.. தாங்களும் கூட நின்று போட்டுத் தள்ளிட்டு.. கப்பல் ஏறினது தான்..!

எனவே உந்தப் பழசுகளைக் கிளறி... இவர்கள் திருந்த.. மனம் மாற இடம் வரும் என்று நினைக்கிறது மகா தப்பு.

அவர்களுக்கு அவர்கள் செய்ததோடு.. கதை பேசிப் பேசி.. எதிரிக்கு.. காட்டிக் கொடுத்து.. வாழ்ந்து பழகிப் போச்சு. அதிலிருந்து அவர்கள் மீளப் போவதில்லை.

அந்த வகையில்.. புலிகளில் குறை பிடிக்கிறவை.. அதை விட்டிட்டு.. உருப்படியா.. சர்வதேசத்தின் முன்.. இனப்படுகொலையாளனை நிறுத்தி.. தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி இருக்கான்னு.. பாருங்க..! அதுதான் இன்றைய தேவை.

செத்தவை எவரும் வந்து எதுவும் செய்யப் போறதில்லை.. சொல்லப் போறதும் இல்லை. நாங்கள் திட்டுவதனால்.. காட்டிக் கொடுக்கிறவன்.. அதைச் செய்யாமல் இருக்கப் போறதும் இல்ல. ஆனால் எம் சனத்தைக் கொன்றவனை.. எங்கள் விடுதலைப் போராட்டத்தை நசுக்க நிற்கிறவனை.. மக்கள் தண்டிப்பதில் இருந்து தவறக் கூடாது. அதேபோல்.. சிங்களப் பேரினவாதம் எம்மைக் கொலை செய்திட்டு தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. அதேபோல்... தமிழீழக் கனவோடு வீழ்ந்த தமிழ் மறவர்கள் எல்லோரினதும் கனவு நிறைவேறும் வரை அதை எவரும் கைவிடக் கூடாது. இதுதான் இன்றைய தேவை..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.