Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 1

மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்

உயிரொளி வீச‌ உலகில் வாழலாம்.

திகதி 2

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி

போல் இனிதாவதெங்கும் காணோம்.

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

திகதி 4

உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும்

நிமிர்ந்து பார்க்க செய்யும்.

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 6

சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:

சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.

திகதி 7

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்

சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?

திகதி 8

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

திகதி 9

அர்த்தமற்ற‌ கண்ட‌றியாத புதுப் பெயர்களை விட‌

அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.

திகதி 10

சுதந்திர‌ம் தருபவர் முன் அட‌ங்கி இரு:

அட‌க்குபவர் முன் சுதந்திர‌மாய் இரு.

திகதி 11

சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!

சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.

திகதி 12

புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று

வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.

திகதி 13

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

திகதி 14

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நாட்காட்டி பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...தொடருங்கோ..

Link to comment
Share on other sites

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

இங்கை தான் ரதியக்கா நிக்கிறா :D:D தொடருங்கோ :):icon_idea: 1 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ரொம்ப அற்ராகிற்றிவ்வா இருக்கு...பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு

எனக்குப் பிடித்தது, இது தான் ரதி!

தொடருங்கள், உங்கள் கலண்டர் பொன்மொழிகளை!!!

Link to comment
Share on other sites

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

மனச்சாட்சி பலருக்கு இல்லாததால் தான் இன்று உலகமே ஒரு பதட்ட நிலையில் உள்ளது.

நாட்காட்டி பொன்மொழிகளை தொடருங்கள்,ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

உள்ளங்கள் பொங்க- உணர்வுகள் பொங்க

-உவகைகள் பொங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு. :D :D :D

இதை விட சிறப்பாக சொல்ல இயலாது,,,,,,,,,,,

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது.

ரதி இது உங்கள் சொந்த ஆக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் மிக்க நன்றிகள்...தப்பிலி எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் எனத் தான் ஆசை ஆனால் எழுதத் தெரியாதே :) ...இதை நான் சொந்தமாக எழுதியிருந்தேன் என நினைத்து யாராவது பாராட்டியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ...இதை நான் வாக்கிய பஞ்சாங்க கலண்ட‌ரில் இருந்து சுட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

அப்படியும் ஒன்று இருக்கின்றதா சிறீ அண்ணா ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம்

காதலின் அருமை காணா வெறுமணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் பொன்மொழிப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் .............ஒரு பச்சை

..........மேலும் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லாமே நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

விவாஹ சுப முகூர்த்தத்தின் நோக்கம்,மணமக்களின் நல்வாழ்வே தவிர,

விருந்தினர்கள் விருந்துண்ணும் பொழுதோ,விடுப்பெடுக்கும் நாளோ அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா,பூந்தோட்டம்

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

நான் நினைக்கிறேன் அங்கே என்டால் ஊரில்,இங்கே என்டால் புலத்தில்...இங்கே பொண்ணுங்கள் புடவை உடுப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறேன் :unsure::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.