நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

By
சுபேஸ்,
in சிரிப்போம் சிறப்போம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளைப் பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியைப் புனரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை, கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததினால் அழிவடைந்துள்ளது. நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதனால் இந்த அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பகுதியில் சிலரால் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகளே இந்த நிலைமைக்குக் காரணம். கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடன்பெற்றும் நகைகளை அடகு வைத்தும் செய்கை பண்ணப்பட்ட விவசாய நிலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் தமக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். நவகிரி ஆற்றுப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான மண் அகழ்வுகளும் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் கொங்கிறீட் கட்டுகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.meenagam.com/சட்ட-விரோத-மண்-அகழ்வுக்க/ -
By கிருபன் · பதியப்பட்டது
சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 1948ஆம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொளித்தும், எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக ஸ்ரீலங்கா அரசு தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் ஸ்ரீலங்காத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் . 2009 இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த இனவழிப்பு அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது. தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியை பெறுவோம். பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ ஸ்ரீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும். அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இனியாவது ஸ்ரீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பருந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணி நடாத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில் காலை 8-30 மணிக்கு ஆரம்பமாகும். அதே நேரம் கிழக்கு மாகாணம் நேரத்தில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர நினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.meenagam.com/சிங்கள-தேசத்தின்-சுதந்தி/ -
By கவிப்புயல் இனியவன் · பதியப்பட்டது
இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!! -
By கிருபன் · பதியப்பட்டது
கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும் 01/25/2021 இனியொரு... Michele Bachelet, ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்படவுள்ள இலங்கை அரசிற்கு எதிரான அறிக்கை என்பது இப்போது சண்டே ரைம்ஸ் இதழுக்கு கசிவடைந்துள்ளதாக வெளியிட்ட தகவல் இலங்கை அரசு வரலாறு காணாத போர்க்குற்றமிழைத்து 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சில குறிக்கத்தக்க மாற்றங்களை காணமுடிகிறது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது அமர்விற்கு முன்னதாகவே வெளியாகியுள்ள இந்த அறிக்கை ஊடகம் ஒன்றிற்குக் கசிந்துள்ளதான தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது ராஜபக்ச இனக்கொலை சர்வாதிகார அரசிற்கு எதிரான அனைத்து சனநாயக முற்போக்கு அணிகளதும் அவா என்பதில் ஐயம் இருக்கமுடியாது. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது என்ற தலையங்கத்தில் கடந்து போன பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனிதப்படுகொலையை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நாம் தான் கொலை செய்தோம் என ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரசின் வெற்றி என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளதும் தோல்வி. இனப்படுகொலையின் சூத்திரதாரிகளையே ஆட்சியில் அமர்த்த வாக்களித்த சிங்கள மக்களின் தோல்வி. ராஜபக்சக்களின் வெற்றிக்கு வழியமைத்துக்கொடுத்த தமிழ் இனவாதிகளின் தோல்வி. இந்த நிலையில் ஐ.நாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அறிக்கை என்பது உலகின் இன்னொரு முலையில் கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு மனிதர்கள் மத்தியில் உலாவரும் இன்னொரு இனக்கொலையாளிக்கு அச்சுறுத்தலாக அமையும். அதன் மொழியாக்க விபரங்கள்: 1. உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமை ஆணையம் விடுக்கவுள்ள வேண்டுகோள்: – பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்த OHCHR ஐ நோக்கி கோரிக்கை முன்வையுங்கள் , மேலும் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள்; – எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைப்பவர்களுக்காகவும் வாதிடுவதற்கும், உறுதியான அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகளில் தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் ஒரு பிரத்யேக திறனை ஆதரித்தல். – உலகளாவிய அதிகார வரம்பு உள்ளிட்ட உள்நாட்டு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். – கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு நம்பத்தகுந்ததாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற சாத்தியமான இலக்கு தடைகளை ஆராயுங்கள்; – இலங்கை காவல்துறை மற்றும் இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட ராணுவ வீரர்களுக்கு கடுமையான சோதனை முறைகளைப் பயன்படுத்துங்கள்; – சிவில் சமூக முன்முயற்சிகள் மற்றும் இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களின் இருதரப்பு மனிதாபிமான, மேம்பாடு மற்றும் உதவித்தொகை திட்டங்களுக்கு உதவ முன்னுரிமை அளித்தல்; – பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை நாட்டினருக்கான புகலிடம் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள் மற்றும் சித்திரவதைக்கான உண்மையான ஆபத்து அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களை முன்வைக்கும் வழக்குகளில் எந்தவிதமான மறுசீரமைப்பையும் தவிர்க்கவும் 2. இலங்கை அரசிற்கு வழங்கப்படவுள்ள பரிந்துரைகள்: – அனைவருக்கும் பாகுபாடு காட்டாதது மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில், மற்றும் 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, இலங்கைக்கான அனைத்தையும் உள்ளடக்கிய, பன்மைத்துவ பார்வையை தீவிரமாக ஊக்குவித்தல்; – அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிவர்த்தி செய்வதை உறுதி செய்தல்; – சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என்று இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் படைகளின் அனைத்து கிளைகளுக்கும் பகிரங்கமாக தெளிவான வழிமுறைகளை வழங்குதல்; – மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக நடிகர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடவும்; – மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், சித்திரவதை மற்றும் மோசமான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக, முழுமையாக, மற்றும் பாரபட்சமின்றி விசாரித்து வழக்குத் தொடரவும், நீண்டகால அடையாள வழக்குகளில் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கவும்; – மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட அலுவலக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளிடமிருந்து நீக்குதல்; பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வை ஆகியவற்றை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் துறையின் பிற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல்; – மனித உரிமைகள் ஆணையம் சுயாதீனமாக செயல்படுவதற்கும் போதுமான ஆதாரங்களைப் பெறுவதற்கும் கட்டமைப்பு பாதுகாப்புகளை உறுதி செய்தல்; – காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்பட மற்றும் சுயாதீனமாக செயல்படக்கூடிய சூழலை உறுதிசெய்க; இரண்டு அலுவலகங்களுக்கும் அவற்றின் ஆணையை திறம்பட நிறைவேற்ற போதுமான ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்குதல்; பாதிக்கப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பாலின மையத்துடன் இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பயனுள்ள மற்றும் விரிவான இழப்பீடுகள் மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான உரிமைகள் இருந்தபோதிலும்; – சர்வதேச சிறந்த நடைமுறைகளை கடைபிடிக்கும் சட்டத்தால் மாற்றப்படும் வரை புதிய கைதுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த தடையை நிறுவுதல்; – ஜனாதிபதியால் மன்னிப்பு அல்லது பிற வகையான அனுமதியை வழங்குவதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவுதல், அதை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்துதல், மற்றும் கடுமையான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களைத் தவிர்த்து; – சம்பந்தப்பட்ட கருப்பொருள் ஆணை வைத்திருப்பவர்களால் புதுப்பிக்கப்பட்ட நாட்டு வருகைகளை திட்டமிடுவதன் மூலம் சிறப்பு நடைமுறைகளுக்கான அதன் நிலையான அழைப்பை மதிக்கவும்; ஒப்பந்த உடல்களுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள்; ஐ.நா. மனித உரிமை வழிமுறைகளின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் OHCHR இலிருந்து தொடர்ந்து தொழில்நுட்ப உதவியை நாடுங்கள். இவை தவிர,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, இலங்கையின் கடந்தகால போர்க்குற்ற நிகழ்வுகள் மறைக்கப்பட்டுவிட்டன, நீதித்துறை சுயாதீனமானதாக இல்லை, சிறுப்பான்மை இனங்களுடனான நல்லிணக்கம், அவர்களின் சுய மரியாதை அற்றுப்போயுள்ளது, இலங்கையின் இன்றைய நடைமுறை மேலதிக மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகிறது, அது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகவும் காணப்படுகிறது போன்ற தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. தவிர, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசின் சிவில் நிர்வாகப் பதவிகளில் நியமிப்பது தொடர்பான குறிப்பு இன்றைய சூழலில் மிகவும் பிரதானமனது. பொதுமக்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்தவர்கள் உட்பட செயலில் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை அரசாங்கம் நியமித்துள்ளதுடன், பொதுமக்கள் செயல்பாடுகளை ஆக்கிரமிக்கும் இணையான பணிக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களையும் உருவாக்கியுள்ளது. நிறுவனங்களுக்கான நிலுவைகளை தனியதிகாரத்திற்கு உட்படுத்தும் 20 வது திருத்தச்சட்டம் மேலும் அடிப்படை ஜனநயகத்தை அச்சுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வர்த்த்க ஊடகங்கள் தமது சொந்த வியாபார நலங்களுக்காகச் செய்தி வெளியிடுவது போன்று இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாகவோ அன்றி சர்வதேச நீதி மன்றத்திற்குப் பரிந்துரை செய்வது தொடர்பாகவோ கசிவடைந்ததாகக் கூறப்படும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் சிங்கள தமிழ் இனவாதிகளும் இனவாதமுமே சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ட போன்ற பேரினவாதப் பாசிஸ்டுகளைப் பலப்படுத்துகிறது. இலங்கையின் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இரண்டும் பெரும் பாராளுமன்றக் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளே. பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள மக்களை மடைமாற்றும் வேலைத்திட்டம் மட்டுமே ராஜபக்சக்களை மட்டுமல்ல பிரேமதாச போன்றவர்களையும் ஆட்சியிலிருந்து அகற்றும் வழிமுறை. பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் ஒரே வழி. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுய நிணய உரிமைக்காகப் போராடுவதும் அதற்கு ஆதரவான பெரும்பானமைச் சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதுமே தமிழ்ப் பேசும் மக்கள் முன்னால் உள்ள ஒரே வழிமுறை. அரசியல் முழக்கமாக அமையும்.இவை அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகளில் தங்கியிருக்கும் புலம் பெயர் அடிமைகளாலோ அன்றி அரசியல் கட்சிகளாலோ சாத்தியப்படாது. https://inioru.com/unhrc-report-in-and-out/ -
இயேசு அழைக்கிறார், மன்னிக்கவும் வருமானவரி துறையினர் அழைக்கிறார்கள் - வசந்தன் நடராசா பால் தினகரனிடம் அவரது சபையை சேர்ந்த ஒருவர், "ஐயா இவை தான் இன்று காலையில் முதலில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், செபக் கூட்டங்களின் பட்டியல்" என்று ஒரு பட்டியலை கொடுக்கிறார். பால் தினகரன் இன்றைய நிலையில் என்ன சொல்லுவார். நான் செய்வேன், ஆனால் எனக்கு முதலில் கட்டாயமாக போக வேண்டிய ஒரு கூட்டம் இருக்கிறது. அது வருமான வரித்துறைக்காரர்களுடனான கூட்டம். இயேசு அழைத்தல் போகாமல் இருக்க முடியும், ஆனால் வருமான வரித்துறையினர் அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா? பால் தினகரனின் தந்தையான துரைசாமி ஜெப்ரி சாமுவேல் தினகரன் என்பவர் புரட்டஸ்தாந்து கிறீஸ்தவத்தின் ஒரு அமைப்பான தென்னிந்திய திருச்சபையைச் (Church of South India) சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் எளிமையான வாழ்நிலையை கொண்ட குடும்பமாக இருந்தது. தினகரன் வங்கி ஊழியராக வேலை செய்தார். பின்பு "இயேசு அழைக்கிறார்" என்னும் சுவிசேச சபையை தொடங்கினார். சுவிசேசம் என்றால் "நல்ல செய்தி" என்று நல்ல தமிழில் சொல்லலாம். இயேசுவின் தந்தையான கடவுளின் அரசை பற்றியும், தேவ குமாரன் என்று சொல்லப்படும் இயேசுவை நம்பி தொழுபவர்களுக்கு கிடைக்கும் மீட்சியையும் சொல்லும் கிறீஸ்தவ வேத ஆகமத்தை பரப்புதல் என்பதே இந்த நல்ல செய்தி என்று செல்லப்படுகிறது. "இயேசு அழைக்கிறார்" என்று மக்களை தினகரன் அழைத்தார். அந்த கூட்டங்களுக்கு வரும் நோயாளிகள் குணமடைவார்கள்; பார்வையற்றவர்கள் விழிகளில் ஒளிகள் பெறுவார்கள்.;பேச முடியாதவர்கள் பேசுவார்கள் என்று நற்செய்தி எங்கும் விளம்பரம் செய்யப்பட்டது. நீங்கள் ஒரு சிறிய நன்கொடை மட்டும் செலுத்தினால் போதும். கடவுளின் நல்ல செய்தி தினகரனின் ஊடாக உங்களை வந்தடையும். நல்ல செய்தி வந்தது. ஆனால் அந்த நல்ல செய்தி மக்களுக்கும் வரவில்லை. தினகரனுக்கு வந்தது. பணம் என்ற நல்ல செய்தி கோடி, கோடியாக வந்தது. இயேசு தினகரனை அழைக்கவில்லை. ஆனால் வங்கிகள் தினகரனை தங்களிடம் முதலீடு செய்யும்படி அழைத்தார்கள். காருண்யா பல்கலைக்கழகம் என்னும் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் அளவிற்கு சுவிசேச வியாபாரத்தில் இலாபம் குவிந்தது. நோயாளிகளுக்கு நற்செய்தி சொல்லி குணப்படுத்துவேன் என்று பொய்ச்செய்தி சொன்னவருக்கு சிறுநீரகத்திலும், இருதயத்திலும் நோய்கள் வந்தன. அந்த நோய்களை தீர்ப்பதற்கு தினகரன் செபம் செய்யவில்லை; பிரார்த்தனை செய்யவில்லை; தனக்குத் தானே நற்செய்தி சொல்லவில்லை. அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கேயே இறந்தார். தினகரன் இறந்த பிறகு இயேசு அழைத்தாரா தெரியவில்லை மகன் பால் தினகரன் குடும்ப வியாபாரத்தை தொடர்கிறார். . இவரிடம் இயேசு அவ்வப்போது வந்து பேசுகிறார். அவர் சும்மா சொல்லவில்லை. இயேசு வந்து அவரிடம் பேசுவதற்கு சாட்சி உண்டு. அது வேறு யாரும் இல்லை பால் தினகரனின் சொந்த மனைவி தான் அந்த சாட்சி. மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களை கொல்லவில்லை என்று இலங்கை அரசினது பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் சாட்சி சொல்வதை ஏற்று கொள்கிறார்களே அது மாதிரித் தான் பால் தினகரனின் மனைவியும் சாட்சி சொல்கிறார். மோடி வெற்றி பெறுவார் என்பதை இயேசு இவருக்கு சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்பதையும் இயேசு இவருக்கு முதலிலேயே சொல்லி விட்டாராம். Graham Stuart Staines என்னும் அவுஸ்திரேலிய கிறீஸ்தவ மத போதகரையும் அவரது பத்து வயது மகன் பிலிப்பையும் ஆறு வயது குழந்தை திமோத்தியையும் 23.01.1999 அன்று நெருப்பிலே எரித்து "பஜ்ரங் தள்" என்னும் பயங்கரவாத அமைப்பு கொன்றது. இந்த அமைப்பு விசுவ இந்து பரிசம் அமைப்பின் இளைஞர் பிரிவாகும். விசுவ இந்து பரிசம் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி என்பவற்றின் ஒரு அங்கம். இந்த பயங்கரவாதிகளின் அமைப்பை சேர்ந்த மோடி வெற்றி பெறுவார் என்று இயேசு தனக்கு சொன்னார் என்னும் அளவிற்கு பால் தினகரனின் அதிகாரங்களுடன் தொடர்பு வைத்து வசதிகளை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற பேராசை இருந்திருக்கிறது. கடவுள் தனது கண்களுக்கு தெரிகிறார் என்ற நித்தியானந்தாவுக்கு கமரா இருந்தது கண்ணுக்கு தெரியவில்லை. மோடி வெற்றி பெறுவார், ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று பால் தினகரனிடம் தேர்தல் கருத்து கணிப்புகளை சொன்ன இயேசு வருமானவரித் துறையினர் சோதனை செய்ய வருவார்கள் என்பதை சொல்லவில்லை. என்ன இருந்தாலும் கடவுள்கள் இப்படி தங்களின் தரகர்களை கை விட்டிருக்க கூடாது. http://poovaraasu.blogspot.com/2021/01/blog-post_24.html
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.