Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

என் தங்கை இசைப்பிரியா....(.படித்ததும பகிர்வும்)

Recommended Posts

என் தங்கை இசைப்பிரியா

empty.gif

கண்ணுக்கு எதிரிலேயே

கற்பழித்துக் கொல்லப்பட்ட

அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு

ஒரு கையாலாகாத அண்ணனின்

கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி

உன் தமிழும்

தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து

சிங்கார உச்சரிப்பில்

செய்திகள் வாசிப்பாயே!

இப்போது நீயுமொரு

செய்தியாகிப் போவாய் என்று

கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த

பனித்துளிகூட விலகாத

ஒரு காலைரோஜாவின்

அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்

திமிர் பிடித்த சிங்களனின்

திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி பிணமாக

ஒரு சிங்கள காட்டுக்குள்

நீ படுத்திருந்த காட்சி...!

நீ துடிதுடிக்க

கொல்லப்பட்ட போதும்,

உன் துணிமணிகள்

அவிழ்க்கப்பட்ட போதும்,

தொலைக்காட்சிப் பெட்டியிலே

உன் தொலைதூர ஓலங்கள்

ஒலித்த போதும்

சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர

இந்த அண்ணனால்

ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்

தொகுப்பாளராய் பணியாற்றி

தன் வாழ்க்கை

தொகுக்கப்படும் முன்பே

ஒரு சிங்கள காட்டுக்குள்

சிதைந்து போய் கிடக்கும்படி

தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா

அண்ணனுக்கு தங்கச்சியாய்

தரம் கெட்ட தேசத்திலே

போராடும் தமிழச்சியாய்

பிறந்து வந்ததைத் தவிர

தவறு என்ன செய்தாயடி-வேறு

தவறு என்ன செய்தாயடி?

_________________

வாழ்ந்த எவனையும் விட

வரப்போகும் எவனையும் விட

வலிமை வாய்ந்தவன் நான்

இறந்தகாலமும்

எதிர்காலமும்

கைகுலுக்கி கொள்ளும்

நிகழ்காலத்திற்குரியவனென்பதால்.

1945-5.jpg

சுந்தரபாண்டி

அவை வெறும் வரிகள் அல்ல தோழி.

உண்மையில் நெஞ்சுருகி எழுதியதுதான் அது.

ஒரு ஆண்மகனாய் இருந்தும் என் சகோதரிகளைப்

பாதுகாக்க முடியவில்லையே என்று ஏங்கி எழுதிய வரிகள்தான் அவை.

வாழ்த்துக்கு நன்றி தோழி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சம் கனக்கிறது.

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

Share this post


Link to post
Share on other sites

தட்டிக்கேட்பேன் சகோதரி

என் உயிர் உள்ளவரை

தட்டிக்கேட்பேனடி

எனது பிள்ளைக்கும்

அவனது பிள்ளைக்கும்

உன்னை அழித்தவனை

இனம் காட்டிச்செல்வேனடி

Share this post


Link to post
Share on other sites

இந்திய சேவல்கள் ஏறிமிதித்த போதும்,

சட சடத்தபடி போராடிக்கொண்டிருந்த...

ஈழத்தின் காவல் குஞ்சுகள்

எங்கே போனார்கள்?

தீர்ப்பெழுதி வன் தலையெடுத்த தளபதிகள்

எங்கே போனார்கள்?

வடிந்தகுருதி மண்ணீரோடு கரைந்து,

மறுபடியும் கண்ணீராய் வருகிறதே...

உம் கதைகளை மீள நினைக்கையிலே!

எங்கே போனீர்?

சாட்சி சொல்ல சட்டம் முன்னால்...

சடலங்கள்தான் வரும்,

அதுவும் நிர்வாணமாய்...!

சங்கடங்களை தாண்டிய

கோபமொன்று... இன்னும் தீயாய் எரிகின்றது!

கண்ணீர் வேண்டாம்! செந்நீரும் உதிர்ப்போம்!

மீண்டுமொரு காலம் வரட்டும்!

மறுபடியும் பழிதீர்ப்போம்...!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

*****************************************************************************************************************

இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா!

அந்த சகோதரனிற்கும் எம் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்!

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் சகோதரி :) :)

Share this post


Link to post
Share on other sites

இந்திய சேவல்கள் ஏறிமிதித்த போதும்,

சட சடத்தபடி போராடிக்கொண்டிருந்த...

ஈழத்தின் காவல் குஞ்சுகள்

எங்கே போனார்கள்?

தீர்ப்பெழுதி வன் தலையெடுத்த தளபதிகள்

எங்கே போனார்கள்?

வடிந்தகுருதி மண்ணீரோடு கரைந்து,

மறுபடியும் கண்ணீராய் வருகிறதே...

உம் கதைகளை மீள நினைக்கையிலே!

எங்கே போனீர்?

சாட்சி சொல்ல சட்டம் முன்னால்...

சடலங்கள்தான் வரும்,

அதுவும் நிர்வாணமாய்...!

சங்கடங்களை தாண்டிய

கோபமொன்று... இன்னும் தீயாய் எரிகின்றது!

கண்ணீர் வேண்டாம்! செந்நீரும் உதிர்ப்போம்!

மீண்டுமொரு காலம் வரட்டும்!

மறுபடியும் பழிதீர்ப்போம்!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

*****************************************************************************************************************

இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா!

அந்த சகோதரனிற்கும் எம் நன்றியைத் தெருவித்துவிடுங்கள்!

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றியக்கா

Share this post


Link to post
Share on other sites

தொப்புள்கொடி உறவுகளின்,

தூய்மையான உணர்வுகளின்,

அடையாளமாய்,

ஒரு முத்துக்குமாரன்!

புலத்துத் தமிழனின்,

பொங்கி எழுந்த உணர்வுகளின்,

புனிதச் சின்னமாய்,

ஒரு முருகதாசன்!

ஈழத்தின் பெண்கள்,

இரையாகிப் போன,

வேள்விக்கிடங்கில்.

வீழ்ந்து மடிந்த,

வீராங்கனைகளின்,

அடையாளமாய், நீ!

எங்கள் நினைவுகளில்,

என்றும் நீ,

இசைப்பிரியாவாக,

இனிய தங்கையாக,

இடம் பிடித்திருப்பாய்!

இணைப்புக்கு நன்றிகள்,நிலாமதியக்கா!>>>>

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சம் கனக்கிறது

நெறி கெட்ட மாந்தரின்

நடத்தையில் மனம் துவள்கிறது!

சகோதரனாய் வடித்த

வேதனையின் சாரங்கள் மிக துயரத்தைத் தருகிறது. நிஜத்தின் வார்த்தைகளில் கோர்த்த கவிதையின் இணைப்பிற்கு மிக்க நன்றி

கலாமதி அக்கா .

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா

இவர்கள் போன்ற உறவுகள் இருக்கும் வரை

எங்கள் வலிகள் உலகம் எங்கும்

ஒலித்துக் கொண்டிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சம் கனக்கிறது

இணைப்பிற்கு நன்றியக்கா

Share this post


Link to post
Share on other sites