Jump to content

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே....

Recommended Posts

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே

குழந்தைகளின் மன நலம் அமையும்..*

--------------------------------------------------------------------------------

பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது.

அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.

சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.

இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.

நன்றி

தினகரன் :o

Link to comment
Share on other sites

பல பெற்றோர்கள் குழந்தைகள் அருகில் இருப்பதையே மறந்து மற்றவர்களைப்பற்றியோ அயலவர்களைப்பற்றியோ தப்பாக கதைப்பார்கள். உடனே அந்த பிள்ளைகளுக்கும் ஒ அவர்கள் கூடாது என்றா தப்பான அபிப்பாராயம் வந்து விடும்.

எமது காலத்தில் என்றாலும் இந்த வகையான தப்புகளை செய்யமால் இருப்போம்.

நல்லதொரு தகவலை இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி.

Link to comment
Share on other sites

நன்றி தகவலை இணைத்தமைக்கு. தாய் தந்தைக்கு இடையிலான நல்லுறவு மிக அத்தியாவசியமானது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனை குழந்தைகளை பாதிப்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி தகவலுக்கு நன்றி

குறை விளங்கவேண்டாம்.

எழுதுவதை நேரமெடுத்தாலும் மாதிரிக்காட்சியில் மீண்டும் ஒருமுறை வாசித்து ஆங்கில எழுத்துக்கள் கலந்திருந்தால் அவற்றை மாற்றிவிட்டு களத்திற்கு அனுப்புங்கள்.

நல்ல பாயாசத்தைக் குடிக்கும்போது சிறு சிறு கற்கள் இடையே கடிபடுவதைப்போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

தவறுக்கு மன்னிக்கவும் செல்வமுத்து அங்கிள்..

அனி சொல்லி திருத்தி போட்டேன்..ஆனாலும் அதையும் மீறி சில "h" இடையில் இருந்திருக்கின்றது. அது தமிழ் எழுத்துக்களோட இருக்கையில் நான் கவனிக்கவில்லை..

அடுத்த தலைப்புக்களில் அதை கவனத்தில் கொள்கிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மருமகள்!

நான் இலண்டனுக்கு வரும்போது எனது ஆசிரியை ஒருவர் எனது "ஓட்டோகிறாப்" புத்தகத்தில் "செய்வன திருந்தச் செய்" என்று எழுதிவிட்டிருந்தார். அந்த வசனம் நான் எதனைச் செய்தாலும் என் கண் முன்னே வந்து நிற்கும். கூடியளவு அவர் எழுதியபடியே செய்ய முற்படுவேன். இருந்தாலும் சிலவேளைகளில் முடிவதில்லை.

அவர் இப்போது கனடாவில் வாழ்கிறார். அவரிடமும் நான் இதுபற்றிக் கூறியிருக்கிறேன். அவருக்கு மிகுந்த சந்தோசம்.

அதுதான் அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

:shock: ஐயோ.. நண்பன் மனைவிக்கும் அடி விழுந்திருக்கலாம்..பிள்லை யாரை பார்த்து பழகிச்சோ..என்றாலும் இருவருமே ரொம்ப பாவம்..

இதுதான்..முந்தைய காலத்தில் அம்மா, அப்பா அல்லது பக்கத்து வீட்டார் ஏதும் பெரீய விசயங்கள் கதைப்பதென்றால் எங்களை வீட்டுக்குள்ளே போக சொல்வார்கள்..அது ஏன் என்று பின்பு தான் விளங்கியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

Link to comment
Share on other sites

பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.

சந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி :oops: :oops: :cry:

Link to comment
Share on other sites

வடிவேலு எழுதியது: மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.

சந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி ³§Â¡---³§Â¡ ---þ¨¾ ±øÄ¡õ ¦ÅÇ¢Â¢Ä ¦º¡øÄôÀ¢¼¡Ð-- வடிவேலு º¡÷ :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.