• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

அக்கா எங்கே போனாள்?

----“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”----

சுட்டி :

Share this post


Link to post
Share on other sites

விரைவில் உங்கள் கொடி கதைகதையாம் பகுதில் பட்டொளி வீசிப்பறக்கட்டும் . வாழ்த்துக்கள் ஜே கே :) :) :) .

Share this post


Link to post
Share on other sites

நன்றி கோமகன் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு!     by : Anojkiyan ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியும் உள்ளார். கே.எல்.ராகுலும் ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளார். ஷிகர் தவான், ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஆசிய பதினொருவர் அணியில், இலங்கை அணியின் வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார். தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணியில், முஸ்தாபிஸூர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷ்பிகூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான், நேபாளத்தின் சந்தீப் லமேச்சேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்த அணிக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. …………… உலக பதினொருவர் நட்சத்திர அணியை பொறுத்தவரை அணித்தலைவராக தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோனி பேயர்ஸ்டொவ், அடில் ராஷித் ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான, கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், கிரன் பொலார்ட், செல்டோன் கொட்ரெல், ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்து அணியில் மிட்செல் மெக்லிகனும், தென்னாபிரிக்கா அணியில் லுங்கி ங்கிடியும், சிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லரும் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரி-20 போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ரி-20 போட்டி 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் நாடானது 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதே{க்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் காலமானார். இந்நிலையில் அடுத்த வருடம் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவும். அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான், நோபளம் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும் அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும். டெஸ்ட், ஒருநாள், ரி-20, ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான ரி-20 தொடர், 10 ஓவர்கள் கொண்ட போட்டி என பல்வேறு போட்டிகளை பார்த்து இரசித்த இரசிகர்களுக்கு, இப்போட்டித் தொடர் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது. http://athavannews.com/நட்சத்திர-வீரர்களுக்கான/
    • சிரியாவில் கிளர்ச்சியார்கள் மீது உக்கிர தாக்குதல்: மூன்று பகுதிகளை கைப்பற்றியது அரசுப்படை!     by : Anojkiyan சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கிய பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மூன்று முக்கியப் பகுதிகளான அல் நக்யார், அர நபியா, அல் டையிர் ஆகிய பகுதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, சிரிய அரசுப் படைகளால் தங்கள் வசம் உள்ள பகுதிகள் கைப்பற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மீதமுள்ள ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் மேற்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் சிரிய படைகள் வலுவடைந்துள்ளன. முன்னதாக, சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில், கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 90,000 பேர் சிரியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. http://athavannews.com/சிரியாவில்-கிளர்ச்சியார/
    • யாழ் பல்கலைகழக பகிடி வதை விசாரணை  அறிக்கை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன் ’ யாழ் பல்கலைக் கழக கிழிநொச்சி வளாகத்தில் 2020ம் ஆண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் பகிடி வதையும்  குற்றச் செயல்மட்டத்துக்கு சீர்குலைத அதிற்ச்சிதரும் செய்திகள் 06.02.2020 அன்று வெளியாகி நமக்கெல்லாம் பேரதிற்சியை ஏற்படுத்தியது. மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணை ஆரம்ப அறிக்கை யாழ் பல்கலைக் கழப் பதிவாளரால் 24.02.2020 வெளியிடபட்டுள்ளது.  விசாரணைகள் யாழ் பல்கலைக்ழக மாண்புக்கேற்ப பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதிக்கும் அதேசமயம் சம்பந்தபட்ட  மாணவர்களின் திருந்திய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகிறது. இதற்க்காக பழைய மணவன், முன்னைநாள் மாணவர் தலைவன் என்கிற வகையில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிக்கிறேன்.   யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகம் மிகுந்த பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் விசாரணைகளை நடத்துவது நிம்மதி தருகிறது. பாதிக்கப் பட்ட மாணவ மாணவிகளின் நலன்களை கவனத்தில் கொண்டு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டு செயல்படுவது சரியான நடைமுறையாகும்.  சந்தேகத்துக்கிடமில்லாமல் தவறு நிரூபிக்கப் படுகிற இடத்து தண்டனைகள் வளங்கபடும். எனினும் மாணவர்களுக்கு  தண்டணைகள் வளங்கும்போது  ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக வளங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பல்கலைக் கழக பகுடிவதைக் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துக்கு நிறைவேற்றபடும் தண்டனையைவிட ஒத்திவைக்கபட்ட தண்டணைகளே பெரியும் பயனுள்ளதாக அமையும். இதனையும் பல்கலைக்கழக விசாரணைக்குழு கவனத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகிறேன்.  ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் தவறு செய்த மாணவர்களுக்கு கால்கட்டாகவும் அதேசமயம் மீண்டும் தவறிளைத்தால் தப்பமுடியாது என்ற  கடுமையான எச்சரிக்கையாகவும் அமையும்.  அதே சமயம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நல்வழிப்படவும் கல்வியை பூர்த்தி செய்யவும் நல்ல குடிம்மகனாக மேம்படவும் ஒரு வாய்ப்பளிப்பதாகவும்  அமையும். பாதிக்க பட்ட மாணவ மாண்விகளுக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தாத தீர்பாகவும் ஒத்திவைக்கபட்ட தண்டனைகள் அமையும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன். யாழ் பல்கலைக் கழகத்துக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன்
    • திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – மீண்டும் அறிவித்தது ஜப்பான்!     by : Benitlas திட்டமிட்ட வகையில் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் மீண்டும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் ஜப்பான் இது தொடர்பான அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. ஜப்பான் அமைச்சரவை செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் குழு, டோக்கியோ நகர அரசாங்கம் மற்றும் அமைப்புக்களின் குழுக்களுடன் இது தொடர்பாக ஓன்றிணைந்து செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓலிம்பிக் தீபத்தினை எடுத்து செல்லும் நிகழ்வு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இது தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திட்டமிட்ட-வகையில்-டோக்க/
    • மன்னார் பிரிமீயர் லீக்: எஸ்.எல்.எப்- ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!     by : Anojkiyan மன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், எஸ்.எல்.எப் மற்றும் ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மன்னார் பிரிமீயர் லீக் தொடரின் எட்டாம் நாள் போட்டி, நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடின. எனினும் கடும் போராட்டத்திற்கு பின்னர், முதல் கோல் போடும் வாய்ப்பு ஈடன் அணிக்கு கிடைத்தது. அந்த அணியின் வீரரான ஏ.நியூட்டன் 21ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோலை புகுத்தி, மைதானத்தில் குழுமியிருந்த தங்களது இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து எஸ்.எல்.எப் அணி, பதில் கோல் போடுவதற்கு கடுமையாக போராடியது. இதன்பலனாக 40ஆவது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை புகுத்தி, கோல் கணக்கை சமநிலை செய்தது. இந்த கோலை ஜே.எடிசன் அடித்தார். இதனையடுத்து விறுவிறுப்பு எகிற முற்பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, ஆரம்பமான பிற்பாதியில் முன்னிலை கோலை புகுத்த இரண்டு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடின. எனினும், இரு அணி வீரர்களினதும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைப் பெற்றது. http://athavannews.com/மன்னார்-பிரிமீயர்-லீக்-எ/