Jump to content

கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

19-norway1-300.jpeg

டெல்லி: கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் அனுருப். அவரது மனைவி சகாரிகா பட்டாச்சாரியா. அவர்களுக்கு 3 வயதில் மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். அனுருப் தனது குடும்பத்துடன் நார்வேயில் வசித்து வருகிறார்.

அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

ஏனென்றால் அந்த நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு கையால் உணவு ஊட்டுவது பெருந்தவறு. அதனால் அந்த 2 குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு நபர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். குழந்தைகளைப் பிரிந்து அனுருப் தம்பதியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எனது மகன் தனது தந்தையுடன் தூங்குவான். நார்வேயில் அப்படி செய்யக் கூடாதாம். எனது கணவர் தனியாகத் தான் தூங்க வேண்டுமாம் என்று சகாரிகா தெரிவித்தார்.

இந்திய கலாச்சாரப்படி குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுவது வழக்கம். ஆனால் இங்கு கையால் உணவூட்டினால் அது குழந்தையைக் கட்டாயப்படுத்தி உண்ண வைப்பதாம் என்று அனுருப் தெரிவி்த்தார்.

அனுருப் தம்பதியினரை அவர்கள் குழந்தைகளைக் கூட பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்லோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த குழந்தைகளை சந்தித்தார்.

இதற்கிடையே வரும் மார்ச் மாதத்துடன் அனுருப்பின் விசா காலம் முடிகிறது. அதற்குள் குழந்தைகள் கிடைக்கவிட்டால் அவர்கள் விசாவை புதுப்பிக்கத் தான் வேண்டும்.

இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க...!

நன்றி வெப் துனியா

Link to comment
Share on other sites

இங்கே கனடாவில் சில வெள்ளைகளே கையால் வெழுத்து வாங்குகிறார்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது 'domestic case' ஆக இருக்கும்!

சும்மா கையால் குழந்தைக்குச் சாப்பாடு தீத்தினால் கொண்டு போய் விடுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுருப் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டு வழக்கப்படி கையால் உணவு ஊட்டியுள்ளனர். இதைப் பார்த்த நார்வே நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.

நோர்வே அதிகாரிகளுக்கு, "ஒய் திஸ், கொலை வெறி?" :icon_mrgreen:

020106TA28_prv.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்

Link to comment
Share on other sites

இது மிக மோசமான அடிப்படை மனித உரிமை மீறல்

இந்த செய்தி எவ்ளோ தூரம் உண்மையா இருக்கும்?

சரியா தெரியல!

வெள்ளைக்காரனா இருந்தாலும், என்னதான் நோர்வே சட்டத்தை கடைபிடிச்சாலும்.......

அவங்க குழந்தைகளுக்கு ,, பாண்...ப்ரெஞ்ச் ப்ரைஸ் ,,

எல்லாம் கரண்டியாலயா ஊட்ட முடியும்?

பட் கை சுத்தம் பேணப்படுவது நல்லதுதான்! :rolleyes:

Lifebuoy%20pic%202.jpg

http://clovetwo.com/articles/story.asp?file=/2009/5/4/healthnfitness/20090504091601&sec=healthnfitness

Link to comment
Share on other sites

கையால உணவூட்டுவதற்கே இந்த தண்டனை என்றால் இரண்டு தடிவைத்து உணவூட்டும் சீனாக்காரனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில் சாப்பாட்டுக்கடைகளுக்கு வந்தால்

பல வெள்ளைகளை குடும்பம் குடும்பமா தூக்கலாம்..

நாங்கள்தான் அவங்களுக்கு காட்டக்கூடாது என்பதற்காக கத்தி கரண்டியோட சண்டை பிடிக்கிறம்

Link to comment
Share on other sites

they received criticism from child welfare authorities that they slept in a bed with the kids

and they fed the kids with their hands. !

இப்போ புரிஞ்சுடுச்சா?

கையால உணவு ஊட்டினதில்ல மேட்டர்!

பிளஸ்..ம்ம்...இந்த சட்ட சிக்கலை விளங்கப்படுத்த& தெளிவா சொல்லணும்னா,, நம்ம நெடுக்கு தான் வரணும் .....

நெடுக்கு ப்ளீஸ் come up on stage!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவிலான படுக்கையறை

அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இல்லாமல் இருப்பது .

குழந்தைகளுக்கு கால நிலைக்கேற்ற உடைகள் அணிவிக்கத் தவறல்

குழந்தைகளின் பொழுதுபோக்கு , விளையாட்டுப் பொருட்கள் இல்லாமை

குழந்தை தங்கியிருக்கும் வீட்டை சுகாதார முறையில் சுத்தமாக வைத்திருக்காமை

குழந்தைக்கு உணவை அதன் விருப்பமின்றித் திணித்தல்

இன்னும் பல விடயங்கள் மேற்குலகில் பெற்றோர்களின்

முன் இருக்கும் சட்டப்பிரச்சனைகள்

Link to comment
Share on other sites

குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவிலான படுக்கையறை

அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இல்லாமல் இருப்பது .

குழந்தைகளுக்கு கால நிலைக்கேற்ற உடைகள் அணிவிக்கத் தவறல்

குழந்தைகளின் பொழுதுபோக்கு , விளையாட்டுப் பொருட்கள் இல்லாமை

குழந்தை தங்கியிருக்கும் வீட்டை சுகாதார முறையில் சுத்தமாக வைத்திருக்காமை

குழந்தைக்கு உணவை அதன் விருப்பமின்றித் திணித்தல்

இன்னும் பல விடயங்கள் மேற்குலகில் பெற்றோர்களின்

முன் இருக்கும் சட்டப்பிரச்சனைகள்

பிள்ளைக்கு வாற சோசல் காசை எடுத்து சீட்டுக்கட்டினால் இந்த வில்லங்கமும் வரும் வாத்தியார் ^_^^_^^_^:icon_idea: .

Link to comment
Share on other sites

அட பாவீங்களா குழந்தைங் கூட அவங்க அம்மா அப்பா படுத்ததா குற்றம் என்ன கொடுமை இது அறிவிலி சார்..........

Link to comment
Share on other sites

அட பாவீங்களா குழந்தைங் கூட அவங்க அம்மா அப்பா படுத்ததா குற்றம் என்ன கொடுமை இது அறிவிலி சார்..........

ஏன் அது குத்தமில்லியா....... படுபாவி சுண்டல்?

அம்மா அப்பா கூட தூங்ககூடாது..............

அப்புடிதானே சொல்லுது சட்டம்!

http://www.familyrelationships.gov.au/BrochuresandPublications/Pages/CIF_brochure_2007.aspx

ஏன் அது குத்தமில்லியா....... படுபாவி சுண்டல்?

அம்மா அப்பா கூட தூங்ககூடாது..............

அப்புடிதானே சொல்லுது சட்டம்!

http://www.familyrel...chure_2007.aspx

அப்புறம் ,,, இந்த திரி இங்கயா சுட்டாங்க.....?

...................> http://boards.straightdope.com/sdmb/showthread.php?p=14691781

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.