Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தாயும் நீயே தந்தை நீயே ..........

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தாயும் நீயே தந்தை நீயே ..........

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார். .அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் .......

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்.

.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக இருந்ததையிட்டு லதாங்ககினி பெருமைப்பட்டாள். தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியுடன் மன அமைதிபெற்றாள் .

எதிர் பார்த்த அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம் உறவினருக்கான விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின் அன்பும் வழி நடத்தி இருந்தன.என்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........

ஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக மட்டும் அல்ல என் தாயும் தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்

படம்: குமரன் சன் ஒப் மகாலட்சுமி

நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான அன்பை பொழியும் ஒரு பாடல் ) .இதோ ...நீங்களும் கேளுங்கள்...விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது

.குறிப்பு:

எனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும் சிறுபகிர்வு. .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நன்றி அக்கா பகிர்வுக்கு..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நன்றி அக்கா பகிர்வுக்கு..

சும்மா அங்க இங்க என்று சுத்தி திரியாமல் இப்படி அடிக்கடி ஏதாவது எழுதுங்கள் பாட்டி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் அக்கா..

கதையில் அக்கா,தம்பிக்கு இடையிலான பாசத்தை எடுத்து வந்து இருக்கும் விதம் நன்றாகவே இருக்கிறது..வளக்கமாக சொல்வது தான் எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்..ஒன்று,இரண்டு எழுத்துப் பிழைகள் இருந்தால் அதை கண்டு கொள்ளாமலும் விடலாம்.ஆனால் பல இடங்களில் எழுத்துப்பிழைகள் இருக்கவே செய்கிறது..எழுதும் போது விடும் பிழைகளை கண்டு கொள்ள முடியாது,பின்னராவது நன்றாக இரண்டு தரம் வாசித்து பிழைகளை சரி செய்து கொள்ளலாம் அல்லவா..இது மற்றத் தளங்கள் போன்று ஏதாச்சும் போஸ்ட் பண்ணினால் மீண்டும் திருத்திக் கொள்ள முடியாது என்று இல்லைத் தானே..:)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமையான சம்பவம்

பகிர்விற்கு நன்றி.

Link to post
Share on other sites

தாயும் நீயே தந்தை நீயே ..........

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார். .அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் .......

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்.

.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக இருந்ததையிட்டு லதாங்ககினி பெருமைப்பட்டாள். தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியுடன் மன அமைதிபெற்றாள் .

எதிர் பார்த்த அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம் உறவினருக்கான விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின் அன்பும் வழி நடத்தி இருந்தன.என்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........

ஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக மட்டும் அல்ல என் தாயும் தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்

படம்: குமரன் சன் ஒப் மகாலட்சுமி

நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான அன்பை பொழியும் ஒரு பாடல் ) .இதோ ...நீங்களும் கேளுங்கள்...விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது

.குறிப்பு:

எனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும் சிறுபகிர்வு. .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும்.

கதை எழுதுவதற்கு முயற்சித்த நிலாமதி அக்காவிற்கு வாழ்த்துக்கள் . உங்கள் கதையில் நிறைகளும் , குறைகளும் கலந்து அழகாக இருக்கின்றது . மனித உணர்வுகளைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கின்றீர்கள் . இந்தக்கதை மறைமுகமாக இன்னுமொரு செய்தியை தொடுகின்றது . எமது சமூகம் டொக்ரர் , என்ஜினியர் , எக்கவுண்டன் என்ற மாயையில் இருந்து இன்னும் விடுபடவில்லை . மேலும் , தொடர்ந்து எழுத எழுதத் தான் சரளமான வர்ணனையுடன் கூடிய எழுத்து நடை வரும் . அது உங்களால் முடியும் . உங்களிடம் நிறையவே எதிர்பார்க்கின்றேன் . ஒரு சில எழுத்துப் பிழைகள் இருந்தாலும் , எதையாவது யாழில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற நிலாமதி அக்காவிற்கு ஒரு ஓ...................... :):):) 3

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நிலாமதியக்கா!

கதை நன்றாக இருக்கின்றது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையில் ஒரு சகோதரியின் மேல் ஒரு தம்பி வைத்திருக்கும் பாசம், மரியாதை, அதன் வழி வரும் உணர்வுகள் என அனைத்தும் அழகு.

எனக்கும் இந்தப் பாட்டு மிகப் பிடிக்கும். உங்கள் கதை மேலும் மெருகு பெற என் வாழ்த்துக்கள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி அக்கா..கதையை இன்னும் கொஞ்சம் செழுமைப் படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்..; :)

Link to post
Share on other sites

இந்தக் கதையை தமிழ் சினிமா இயக்குநர் விக்ரமனிடம் கொடுத்தா படமாக எடுப்பார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பச்சையை குத்தி விட்டு நான் உனக்கு இத்தனையாவது பச்சை குத்தி இருக்கிறேன் என்பது ஏதோ உன் ஆக்கம் நல்லா இல்லை என்றாலும் உன் மேல

இரக்கபட்டு போட்டிருக்கிறேன் என்பது போல இருக்கு ஒரு ஆக்கம் நல்லா இருந்தால் அது பிடிச்சு இருந்தால் பச்சை குத்தி ஊக்கபடுத்தலாம் இதை எல்லாமா விளம்பரபடுத்துவாங்க..

இந்தக் கதையை தமிழ் சினிமா இயக்குநர் விக்ரமனிடம் கொடுத்தா படமாக எடுப்பார்.

lol.. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சகோதர‌ பாச‌த்தை வைத்து எழுதியுள்ளீர்கள்...தொட‌ர்ந்தும் எழுதுங்கள்

Link to post
Share on other sites

சும்மாவே ஐஸ் வைக்காம,, தவறையும் சொல்லணும்னா...

எழுத்து பிழைகளை கவனிச்சுக்கோங்க .........!

கதை ஆரம்பிச்ச விதத்தை பார்த்தா ,,,

என்னமோ சோகமா முடிக்கபோறீங்கன்னு நெனைச்சேன்...சகோதரம்!

கதைல கூட, மத்தவங்கள நோகடிக்க தெரியாதா உங்களுக்கு?

அந்த கதையைவிட,,,

என்னோட அக்கா நிலாமதி மனசுதான் ,,ரொம்ப அழகு!! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா!

கதை கொஞ்சம் மனசைத் தொட்டது.

பாட்டுக்காக கதை எழுதாமல்... கதையை எழுதிப்போட்டு பாட்டைத் தேடுங்கள் அக்கா. இன்னும் ஆழமாக எங்கள் மனதையும் தொடும் உங்கள் எழுத்துக்கள். :) 7

இது என் கருத்து மட்டுமே. தப்பாக இருந்தால் தயவுசெய்து இந்தத் தம்பியை மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகிர்ந்த அனை வருக்கும் நன்றி . :lol:. :lol:.. :lol:...

வார இறுதி சற்று நேரமின்மை .உடன் எழுத முடியவில்லை

.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.