• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

இளைஞன்

இளங் கலைஞன் "நிரு"

Recommended Posts

வணக்கம் அனைவருக்கும்...

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னொரு இடத்தில் எமது கலைஞன் வரவேற்கப்படுகிறான் என்பது மகிழ்வுக்குரியதே. இது முற்றுமுழுதாக அந்தக் கலைஞனின் திறமைக்கு, அந்த ஈழத்து இளங்கலைஞனின் முயற்சிக்கு கிடைத்த பலனே. இந்திய சினிமா ஊடகம் எதனால் எமது கலைஞனை உள்வாங்கியுள்ளது என்பது வேறுவிடயம். அதுபற்றி இங்குவேண்டாம். ஆனாலும் கலைஞனுக்குரிய அங்கீகாரம் அங்கு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.

அதனடிப்படையில் அந்தக் கலைஞன் அங்கு இசைத்துறையில் தனது முத்திரையை பதிக்கவும், ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கு பெருமைசேர்க்கவும் வேண்டும் என நாமும் மனதாற வாழ்த்துகிறோம். அந்தக் கலைஞனின் வளர்ச்சிக்கு நாம் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். எப்படி? அந்தக் கலைஞன் இசையமைத்த பாடல்களை கேட்டு, அதற்கான எமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து அந்த இளைஞன் மேலும் திறம்பட வளர்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். நீங்கள் இங்கு யாழ்களத்தில் எழுதுகிற கருத்துக்கள் நிச்சயமாக அந்தக் கலைஞனை சென்றடையும். எனவே தயக்கமின்றி பாடல்களைக் கேட்டு இங்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நாம் கொடுக்கிற வரவேற்பும் அந்த இளங்கலைஞன் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நிலைபெற உதவும் என்பதை மனதில்கொண்டு உங்கள் கருத்துக்கள இங்கே தெரிவியுங்கள்.

கலாபக் காதலன்

இங்கே அழுத்தி பாடல்களைக் கேளுங்கள்.

mp3 பாடல்கள் எங்கும் தரவிறக்கக் கிடைத்தால் அவற்றையும் இணையுங்கள்.

உங்கள் கருத்துக்களை எழுதுவீர்கள் தானே?

நன்றி

Share this post


Link to post
Share on other sites

ஆ ஆ வாழ்த்துக்கள்...நன்னா இருக்கு...... :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

நன்றி இளைஞன் தகவல்களுக்கு. ஏற்கனவே கலாபக்காதலன் திரைப்படம் பற்றி நிறைய எதிர்பார்ப்புக்கள் உண்டு. உங்களது தகவல்கள் அதனை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன. பாடல்கள் கேட்டேன். நன்றாகவுள்ளன. ஒரு ஈழத்துக் கலைஞன் என்ற வகையில் அவரை வாழ்த்தி வரவேற்கின்றேன். அது போல் இந்தக் கலைஞனுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர் உயர்விற்கு வழி சமைத்த அனைவருக்கும் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

நிருவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி. பாடல்கள் நன்றாக வந்திருக்கிறன. இளம் கலைஞ்ருக்கு வாழ்த்துக்கள். அவர் தன் துறையில் மேலும் வளர இறையருள் கிட்டட்டும்.

Share this post


Link to post
Share on other sites

இந்த இணைப்பில் நிரு இசையமைத்த கலாபக் காதலன் பட பாடல்களை எம்பி3 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் ....

http://www.tamilbeat.com/tamilsongs/newrel...alabakKadhalan/

Share this post


Link to post
Share on other sites

நிரு இசையமைத்த அல்பம் ஒன்றினை முன்பு கேட்டதாக நினைவு அதன் பெயர் மூங்கில் நிலாவாக இருக்க வேண்டும்.

கலாபக் காதலன் படத்திற்கு இசையமைத்து திரைப்பட இசையமைப்பாளராக மாறியுள்ள நிரு மேன் மேலும் வளர வேண்டும் நல்ல பாடல்களை தரவேண்டும் அவை புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கும் பாடல்களுக்கும் நன்றிகள். நமது கலைஞர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். :P

Share this post


Link to post
Share on other sites

இசையால் வசமாகா இதயமெது?

நல்லதொரு இசைமேதையாக கலையுலகிலே மிளிர எம் ஈழத்தமிழ் கலைஞனுக்கு எனது வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நிருவுக்கு எனது வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

பாடல்களை கேட்டேன். வித்தியாசமாக உள்ளது. வளர வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழத்துக்களும் பாராட்டுக்களும் நிருவுக்கு

Share this post


Link to post
Share on other sites

நிருவின் மூங்கில் நிலா பாடல்களைக் கேட்டு இருக்கிறேன். அருமை. தகவல் இணைத்த இளைஞனுக்கு நன்றிகள்.

வளரும் நிரு குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி இளைஞன். பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அவர் இத் துறையில் மேலும் சிறந்து விளங்க இரசிகையின் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

நிரு அவர்கள் மேலும் இத்துறையில் சிறப்புற வாழ்த்துக்கள்

இணைப்புக்கு நன்றிகள் இளைஞன்.

Share this post


Link to post
Share on other sites

கலாபக் காதலன் பாடல்களை நானும் கேட்டுப்பார்த்தன் ...வித்தியாசமாக.. அருமையாக இருக்கு... நிரு அண்ணாவிற்க்கு பாரட்டுக்களும்..வாழ்த்துக்கள

Share this post


Link to post
Share on other sites

அறிமுகத்துக்கு நன்றி இளைஞன்.ஏற்கனனே கேட்ட பாடல்களாக இருந்தபோதும் நம்மவர் ஒருவர் இசையமைத்த பாடல் என்றறிந்து திரும்ப பாடல்களைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

நிருவின் மூங்கில் நிலா ஒலிப்பேலையில் இடம் பெற்ற பாடல்கள்போல் கலாபக்காதலன் திரையிசைப்பாடலும் நன்றாகவே இருக்கிறது.படம் பார்த்தேன் பின்னனி இசையிலே அங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும். இன்றைய இறைச்சலான திரையிசைக்கு முன்னால் ஒரு அழகான கவி போன்ற உணர்வைத்தரும் இசை நன்று. வாழ்த்துக்கள் நிரு.

Share this post


Link to post
Share on other sites

பாடல்கள் நன்றாக இருக்கின்றன. அவர் மேலும் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும். தகவலுக்கு நன்றிகள் இளைஞன்

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து இரவு பகலாக கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் டுபாயில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://athavannews.com/ஜெயலலிதா-நினைவிட-கட்டுமா/
    • கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் கங்கையைப் புதுபிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது என கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியை கொண்ட கங்கை நதிப் படுகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் கங்கை நதி இன்று மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அது அதன் தரத்தையும், நீரோட்டங்களையும் பாதிக்கிறது. கங்கையில் மாசுபாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நதி மற்றும் அதன் துணை நதிகளில் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/கங்கையை-சுத்தப்படுத்தும/
    • பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மோதலில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளாத 1967ஆம் ஆண்டு எல்லைகளில் எந்த மாற்றங்களையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். இது இஸ்ரேலுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும்’ என கூறினர். பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947ஆம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967ஆம் நடந்த 6 நாள் போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது. சர்வதேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. சர்வதேச சட்டம், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் இரண்டையும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாகக் கருதுகிறது மற்றும் யூத குடியேற்றத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. இந்த ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய யூதக் குடியிருப்புகள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றது. https://athavannews.com/பாலஸ்தீனிய-பிரதேசங்களை-இ/
    • காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் பரவுவது குறித்த வழிகாட்டலை புதுப்பிக்குமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வன் கெர்கோவ், காற்று வழியாகவும் கொரோனா பரவுவதற்கான சாத்தியத்தையும் தற்போது விவாதத்திற்கு ஏற்று இருப்பதாக தெரிவித்தார். கொரோனாத் தொற்று பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதத்தை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களை காட்டியுள்ளனர். இவர்கள் கோரியபடி உலக சுகாதார ஸ்தாபனம் காற்று வழியாகவும் கொரோனா பரவுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் உலகம் முழுவதும் ஓரடி சமூக இடைவெளி என்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கங்களுக்கு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூக்கு மற்றும் வாய்வழியாக உதிரும் நீர்த்துளிகளால் மட்டும் கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த காலத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆதாரம் இல்லை என்றும் அந்த அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலகளவில் 11.9 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 540,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/காற்றிலும்-கொரோனா-வைரஸ்/