Jump to content

யாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி? புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா?

Recommended Posts

தான் ஒவ்வொரு முறையும் கையெழுத்து வைக்க போகும் போது முகாமிலிருந்த ஒரு புலி தனது ஒருபிடி மயிரை பிடிங்கி நக்கலாக சிரிக்குமாம் .

உங்கள் நண்பரின் பொய் பித்தலாட்டம் இந்த இடத்திலேயே சந்தி சிரிக்குது..! :D ஒரு பிடி தலைமயிரைப் பிடுங்க எவ்வளவு பிரயர்த்தனம் வேணும் என்பது உங்களுக்கும் தெரியவில்லை..! கனவுகண்ட உங்கள் நண்பருக்கும் தெரியவில்லை..! அவனவன் ஒரு பிடி மயிடைக்கொண்டு காரையே இழுக்கிறான்..! :lol:

அப்படியே இயந்திரத்தை வைத்து இழுத்தாலும் அது ஒரு சித்திரவதைப் பொழுதிலேயே நடக்கும்..! கையெழுத்துப் போடும்போதெல்லாம் ஒரு கற்றை நெற்பயிரை இழுத்தமாதிரி உங்களுக்கு அளந்திருக்கிறார்..! ஒரு 5 முறை கையெழுத்துப் போட்டவுடன் வழுக்கையாகி இருப்பாரே..! :D

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

ஒட்டுக் குழுக்கள்: புலி எதிர்த்ததனால் தமிழீழ கோரிக்கையை முற்றாக கைவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து தாம் ஒருகாலத்தில் யாருக்காக போராட வெளிக்கிட்டனரோ அவர்களுக்கே எதிராக (தமிழ் இனப்) படுகொலை செய்த குழுக்கள்

புலிகள்: தாம் செய்வது அனைத்தும் தமிழீழத்திற்கான விடிவு என்பதற்காய் அதை எதிர்த்த அனைவரையும் (இதில் இந்தியா + இலங்கை அரசு மாற்று இயக்கங்கள்) எதிர்த்து போரிட்ட இயக்கம்.

ஒட்டுக் குழுக்களின் அனைது செயல்களும் தம் அமைப்பின் / தம் சொந்த நலனில் அக்கறை கொண்டு முடிந்தன. புலிகளின் அனைத்து செயல்களும் தமிழ் ஈழத்துக்கானது என்ற நினைப்பில் அமைந்தன;

அர்ஜுன் ஒன்று கேட்கின்றேன்.

இன்று இலங்கையில் புலி இல்லை; ஆனால் அனைத்து ஒட்டு குழுக்களும் இருக்கின்றன

ஒரு சிங்கள காவாலி இன்று கிளிநொச்சியில் அல்லது கிழக்கில் உள்ள வாகரையில் ஒரு தமிழர் வீட்டினை தனதாக்கி திடீரென குடி புகுந்து குடும்ப பெண்களையும் வல்லுறவுக்குள்ளாக்கும் போது (மிக அண்மையில் இதே போன்ற ஒரு சம்பவம் தனங்கிளப்பில் இலங்கை இராணுவம் அல்லது ஒட்டுக் குழுவால் நடந்தது), பக்கத்தில் இருக்கும் ஒட்டுக் குழுக்கள் காப்பாற்றுவார்கள் என நினைப்பார்களா அல்லது இன்று புலி இல்லையே இந்த வேசமக்களுக்கு பதில் சொல்ல என்று நினைப்பார்களா?

....

ஒரு இயக்கத்தை தடை செய்து விட்டு அந்த இஅயக்கத்தின் அடிமட்ட உறுப்பினர் அந்த உறுப்பினரை காதலித்த பெண் என்று தெரு நாய்களை சுவதை போல் சுட்டு சிங்களவன் அரவனைக்க செய்து விட்டும் அந்த இயக்கதில் படித்தவன் போராட்டத்தை தொடங்கியவனை எல்லாம் கிட்டு சுடாதே என்று கெஞ்ச கெஞ்ச சுட்டு தள்ளிப்போட்டு மீச்சம் மீதம் இருக்கும் அடிப்படை அறிவே இல்லாத மாற்று இயக்க உறுப்பினர் வந்து ஏதாவது மக்களுக்கோ இல்லை ஈழத்தை பற்றி பேச சொன்னால்?

சிங்களவன் மட்டும் என்ன மோடனா? நீங்கள் ஆளுக்கு ஆள் தனி நாடு என்று போராட்டம் தொடங்குவிங்கள் பின் உங்களுக்க உங்களுக்கு சுடுபடுவிங்கள் பின் முடியாமல் ஓடி தங்களிடம் வருவீர்கள் வந்து உயிர் பிச்சை கொடுத்த பின் மீண்டும் தனிநாடு தமிழீழம் தமிழ்மக்கள் என்று ஓலமிட விடுவானோ?

முள்ளிவாய்க்களில் கைதூக்கி சரண்டைந்த போராளிகளுக்கும் புலிகளால் விரட்ட விரட்ட சுட்டு கலைக்கப்பட்ட மாற்று இயக்க உருப்பினருக்கும் என்ன வித்தியாசம் நிழலி??????

இந்த இருவரும் உயிருக்காக சிங்களவனிடம் போய் காலில் விழுந்தார்கள் . புலிகளால் விரட்டியடிக்கப்பட்டவர்களும் சிங்கள்வனுக்கு எதிரி தான் ஆனால் அப்போது சிங்களவனுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களையும் பயன்படுத்தி இருந்தான். புலிகள் சரண்டையும் போது சரண்டைந்த புலிகள் சிங்களவனுக்கு தேவை இல்லை படுகொலை செய்தான் ஏன் 2004 பிரிந்த கருணா முள்ளிவாய்க்கல் சண்டைக்கு 1 நாள் சரண்டைந்தாலும் அவனையும் போட்டு தள்ளி இருப்பார்கள் முதேவியின் அதிஷ்டம் 2004லில் வேலைசெய்ய தொடங்கிவிட்டது...........

மேற்க் கொண்டு இன்று இரவு எழுதுகிறேன்.

நான் புலிகளுக்கு எதிரானவன் இல்லை ஆனால் அவர்கள் விட்ட தவறின் இருந்து படிப்போம் என்று தான் சொல வந்தேன் ஆனால் இங்கை கருத்து எழுதினவர்கள் ஏதோ புலிகள் வானத்தில் இருந்து காக்க வந்த தேவதைகள் போலவும் தவறே செய்யத அமைப்பும் என்பதுக்காகவே நானும் கொஞ்சம் எல்லை மீறி வசனங்களை எழுதினேன்............ புலிகள் கொள்கையில் இருந்த பற்றில் கால்வாசிக்கு கூட மற்ற இயக்கங்கள் நின்று பிடிக்கவில்லை ஆனால் அதற்க்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதா என்பது சந்தேகம்........ ஒரு உறையில் 2 வாள்களா என்று புலிகள் யோசித்தன் விளைவே மாற்று இயக்கங்களின் களைஎடுப்பும் அழிப்பும்........... நானே ராஜா நானே மந்திரி என்ற என்னமும் காரனமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

வரைவிலக்கணணங்கள்..! :D

இல. ==== குழு============மனிதாபி மானம்======புத்திசாலித்தனம்======கொள்கை

1) =====தாயக மக்கள்=====45%===== ============25%===================30%

2)======பு.பெ. மக்கள்=======20%=================50%===================30%

3)======சிங்களவன்========2%==================60%===================38%

3)======புலிகள்============33%=================33%===================33%

4)======ஒட்டுக்குழுக்கள்====0%==================0%====================0%

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

தேவையற்ற விவாதங்களை தவிர்த்து

இதுவரை என்ன செய்தோம்,இப்போ என்ன செய்கிறோம்,இனி என்ன செய்ய வேண்டும் இதுதான் எமது குறிக்கோளாக வேண்டும்

Link to comment
Share on other sites

பொதுவாக தமிழர்களுக்கு ஒன்று கூடி இயங்கும் மனப்பான்மை (Team Work) இல்லை. ஒவ்வொருவருக்கும் நான் என்ற ஆணவம், எனக்கென்ற அகங்காரம். இனத்திற்காக நல்லது செய்ய விரும்புவம், ஆனால் அதிலும் நான்தான் பெரியவனாக இருக்க வேண்டும். பள்ளிக்கூடம், கோயில், ஊர் சங்கங்கள் என்று ஆரம்பித்தாலும் அதற்குள்ளும் அடிபாடு ஏற்பட்டு அதுவும் நாலாகப் பிரியும்.

கனக்கப் போகத் தேவையில்லை. கச்சைத் துண்டு நிலத்தை மீட்கப் போராடப் போன ஒவ்வொரு இயக்கமும் எத்தனை பிரிவுகளாய்ப் பிரிந்ததேன்று ஒரு Family Tree போட்டுப் பார்த்தால் தெரியும்.

மோசமான மே 19 அழிவிற்குப் பின்னும், புலத்தில் தமிழர்களுக்குள் எத்தனை அமைப்புகள்? ஒருவனை ஒருவன் எதிர்த்து எத்தனை அறிக்கைகள்? சிங்கள அரசுடன் சேர்ந்த இயங்கும் தமிழ் அமைப்புக்களிலும் எத்தனை பிரிவுகள்? (அவர்களுக்குள்ளும் அடிபாடு நடக்காமல் தனது தேவைக்காக சிங்களம் அவர்களை ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்பது வேறு விடயம்)

வைக்கோல் பட்டறை நாய் இனத்திற்குள் இருந்து தோன்றும் அமைப்புகள் மாத்திரம் புனிதர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

தாயைப் போல சேய், நூலைப் போல சேலை.

கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களிலிருந்து திருந்தி, தமிழன் இனத்தை முன் நிறுத்தி வாழ்ந்தால், வரும் அடுத்த சந்ததியாவது விடுதலையை வெற்றியடையச் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

நன்றி சுகன்

தங்கள் கருத்துக்களுக்கும் நேரத்திற்கும்

நிழிலிக்கு

ஏன் புலிகளின் செயல்கள் பற்றி விமர்சிப்பதை தவிர்க்கின்றேன் என்பதை இந்த திரியில் சிலரது எழுத்துக்கள் மூலம் நீங்களே உணர்ந்திருப்பீர்கள் என்பதை தங்களின் கருததிலேயேய எழுதியுள்ளீர்கள்.

புலிகள் எதைச்செய்தாலும் அது தாயகக்கடமை என்றே செய்தார்கள். அந்தவகையில் அவர்கள் விட்ட சில தவறுகள் அதற்குள் வந்து விடுகின்றன. ஆனால் அதை காலம் தாழ்ந்து விமர்சிப்பதனால் அவர்களது செயல்களும் தியாகங்களும் திரிக்கப்படடு வரலாறு தவறாகப்பதியப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வரும் என்பதாலேயே புலிகள் பற்றிய விமர்சனங்களை தற்போது நான் தவிர்க்கின்றேன். இதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கின்றேன்.

அடுத்து சுகன்

இந்த பிரிவினைகள் பிடுங்குப்பாடுகள் ............ அத்தனையையும் தாண்டி தமது தியாகத்தாலும் தாயக பற்றாலும் எம்முடன் பிறந்த புலிகள் ஒரு நாட்டை நிறுவி அதை உலகத்துக்கே எடுத்துக்காட்டாக உருவாக்கி சில வருடங்கள் வழிநடாத்திக்காட்டினார்கள் என்பதை நாம் மறுக்கமுடியுமா?

அவர்களால் முடிந்த ஒன்றை எம்மால் முடியாது என்று சொல்வதன் அர்த்தம் எமது இயலாமையே தவிர வேறெதுமில்லை.

அதே நேரம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு நீங்கள் சொல்பவை எதுவும் காரணமல்ல. அவற்றை எல்லாம் தமது தியாகத்தால் அவர்கள் விரட்டினார்கள்

உலகப்போக்கே காரணம்.

(தற்போது இந்த திரியைப்பார்க்க சரியான திசையில் செல்வதுபோல் இருக்கு. ஒருசிலரின் எழுத்தை தவிர)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு நீங்கள் சொல்பவை எதுவும் காரணமல்ல. அவற்றை எல்லாம் தமது தியாகத்தால் அவர்கள் விரட்டினார்கள்

உலகப்போக்கே காரணம்.

வைரம் நொறுங்குமே தவிர வளையாது என்பதில் பெருமைப்பட்டுக்கொள்வதில் என்ன இருக்கின்றது.

உலகப் போக்கைச் சரியாகக் கணித்து எப்போதுமே சரியான நோக்கில் இயங்கவேண்டும். தமிழர்களை உலகம் அப்போதும், இப்போதும் கண்டுகொள்ளாததற்குக் காரணம் எம்மைப் பற்றிய நம்பகத்தன்மை இல்லாததுதான். இழந்த நம்பகத்தன்மையை உருவாக்குவது இலகுவான காரியம் இல்லையாயினும் முடியாததொன்றல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்திலுள்ள வளையாத நொருங்காத பதங்களில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் (அவர்கள் எவ்வளவு வளையமுடியுமோ எவ்வளவு நொருங்கினார்கள் என்பது எனக்கு தெரியும்)

புலிகளில் இன்றையநிலையிலிருந்து மற்றவர்களால் அல்லது எம்மால் நீங்கள்குறிப்பிடுவதுபோல் அடுத்த கட்டத்தை நகர்த்தலாமே. அதற்கான என்ன முயற்சிகளை நாம்எடுத்தோம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் இன்றையநிலையிலிருந்து மற்றவர்களால் அல்லது எம்மால் நீங்கள்குறிப்பிடுவதுபோல் அடுத்த கட்டத்தை நகர்த்தலாமே. அதற்கான என்ன முயற்சிகளை நாம்எடுத்தோம்???

வேற்று இனத்தவர்களுடன் பேசும் போது, மிகவும் நம்பிக்கை வைத்துப் பேசுபவர்கள்கூட நான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழன் என்று சொல்லும்போது கொஞ்சம் நம்பிக்கை தளர்ந்து போகின்றார்கள்.

எனவே அவர்களின் என்மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கத் தற்போது முயற்சிக்கின்றேன்.

இதுபோலவே அரசியல் தலைமைகள், இலங்கையரசு மீதான போர்க்குற்றத்தை முன்னெடுப்பவர்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரம் நொறுங்குமே தவிர வளையாது என்பதில் பெருமைப்பட்டுக்கொள்வதில் என்ன இருக்கின்றது.

உலகப் போக்கைச் சரியாகக் கணித்து எப்போதுமே சரியான நோக்கில் இயங்கவேண்டும். தமிழர்களை உலகம் அப்போதும், இப்போதும் கண்டுகொள்ளாததற்குக் காரணம் எம்மைப் பற்றிய நம்பகத்தன்மை இல்லாததுதான். இழந்த நம்பகத்தன்மையை உருவாக்குவது இலகுவான காரியம் இல்லையாயினும் முடியாததொன்றல்ல.

ஜேசு கிறிஸ்து சிலுவையில் அறையபட்டது எந்த நம்பக தன்மையின் அடிப்படையில்?

உலகமே ஒரு விடுதலை போராளி என அறிந்த சேகுவர எந்த நம்பக தனமியின் கீழ் கொல்லபட்டார்?

தத்துவாந்தம் எழுத படிக்க நல்லாக இருக்கும். நிதர்சனங்கள் வேறாக இருக்கிறதை புரியாது அல்லது புரியாத மாதிரி ஒரு போக்கை காட்டும் வரை.

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த இனங்களிலேயே தன்னைத்தானே தாழ்த்தி நினைத்துக்கொண்ட இனமென்றால் அது தமிழினந்தான்! நான் கூட சில வேளைகளில் நினைப்பேன், ஏன்தான் தமிழனாய்ப் பிறந்தோமென்று....!?

எந்த இனத்தின் விடுதலைப் போராட்டங்களில் பிரிவினை வந்ததே இல்லை; எந்த இனத்தில் துரோகிகள் உருவாகவில்லை; எந்த இனத்தின் விடுதலை உடனேயே கிடைத்தது? இல்லவே இல்லை...!!

எல்லா இனங்களும் எல்லாவிதமான பிரச்சினைகள், எழுச்சி ... வீழ்ச்சி என எல்லாவற்றையும் தாண்டி, எத்தனையோ இழப்புக்கள் தியாகங்கள் என எல்லாவற்றையும் அர்ப்பணித்துத்தான் தம் விடுதலையைப் பெற்றிருக்கின்றார்கள்!

அவற்றோடு ஒப்பிடுகையில் நாம் பட்டது மிகக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஒட்டுக்குழுக்கள்" என்பது பற்றிய வரைவிலக்கணம் என்பதனை தமிழில் சொல்ல அருகதையற்ற ஈனப்பிறப்புக்கள் அவர்கள். அவர்களைப்பற்றி விமர்ச்சிப்பதோ அல்லது பேசுவதோ எமது நேரத்தினை வீணடிக்கும் செயல்! அந்த நேரத்தில் நாம் 'இனி என்ன செய்ய வேண்டும்'? என சிந்திப்பது சிறந்தது!

ஆனால், "விடுதலைப் புலிகள்" என்ற விடயத்தில், அவர்கள் செய்த நற்காரியங்கள், அவர்களின் உன்னத தியாகங்கள், போராட்டங்கள் என .... எங்களுக்காகவே அவர்கள் செய்த அத்தனை நன்மைகள்,தியாகங்கள் முன்னால் நாம் அவர்களை விமர்சிக்கும் தகுதியினை இழந்து நிற்கின்றோம் என்பதனை உணர வேண்டும்!!

புலிகளின் தலைவரும், தலைமைப் பதவியில் உள்ளவர்களுந்தான் புலிகள் என்று நினைக்கும் ஜாம்பவான்களே....!!!

களத்தில் நின்று போராடி மடிந்த சாதாரண புலிவீரனும் அவனைப்போல தன்னலமில்லாமல் வீரமரணமடைந்த அத்தனை வேங்கைகளும் புலிகள்தான்.

அவர்களின் தியாகங்கள்தான்..... புலிகள் என்ற அமைப்பினை இன்றும் நாம் புனிதமாய்ப் போற்றுவதற்கு காரணம்.

இவர்களின் தியாகங்கள்தான், இன்னுமொரு போராட்டத்தினை .... அது எந்த வகையிலேனும் அமையட்டும்.... ஆனால் ஒரே இலட்சியத்துடன் பயணிக்கக்கூடிய போராட்டத்தினை கொண்டு நடத்தும் உந்து சக்தியாக இருக்கின்றது.

மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்தபடி முன்னெடுக்கப்படும் போராட்டம் மட்டுமே இனிமேலும் முன்னெடுக்கப்படக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒற்றுமை என்பது எமக்குள் இல்லாத வரைக்கும் ஈழத் தமிழர்களின் அவல வாழ்க்கையினையோ அல்லது அடிமை வாழ்வினையோ தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமையை தவிர்க்க முடியாது!

மனிதநேயம் என்ற ஒன்றை தற்போதுதன்னும் முழுமையாய்

நம் மனதினில் நிலைநிறுத்திக் கொள்ளுவோமே!

நம் இனத்துக்காகவேனும் நமக்குள் ஒற்றுமை என்றொன்றினை வளர்த்துக் கொள்ளுவோமே!

இறந்து கிடந்த சிங்களச் சிப்பாயின் உடலத்தைப் பார்த்து

கண்ணீர்வடித்த தமிழ்த் தாய்மார்கள், தமிழ் உறவுகளை

கண்ணூடே கண்டவன் நான்.

எங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனிதநேயத்தினை வெளிக்கொண்டுவந்து போராடினால்தான் ... இனிவரும் காலங்களில் எம் போராட்டங்களும் உலகின் பார்வையில் எடுபடும்.

இறுதிவரைக்கும் புலிகளும் அதனைக் கடைப்பிடித்தார்கள்.

ஆனால் "பயங்கரவாதம்" எனும் திரையின் பின்னால் அனைத்துமே மறைக்கப்பட்டன. அதற்குரிய காரணங்கள் பல.

முடிந்தால்... ஒற்றுமைப்படுங்கள்! இல்லாவிட்டால் ஒதுங்கிப் போங்கள்!!

கருத்தறுக்காமல், கழுத்தறுக்காமல்... கண்ணியமாய் ஒதுங்கிப் போங்கள்!

மீண்டும் எழுந்து போராட துணிந்தவர்கள் போராடட்டும்!!

போராடிப் போராடி நொந்து போனவர்கள் கொஞ்சமேனும்

எழுந்துவர கொஞ்சம் வழிவிடுங்கள்!

உங்கள் வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் அவர்களை வீழ்த்தாதீர்கள்!!

இந்தத் திரியினைப் பொறுத்தவரை...

என் இறுதிக் கருத்து இதுவாகவே இருக்கும்!!!

விவாதங்கள் என்பது அவசியந்தான்... ! ஆனால், வீண்வாதங்கள்.... அநாவசியமானவை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை

கருத்துக்கும் நேரத்திற்கும்

நீங்களெல்லாம் இவற்றைப்பார்த்து மௌனித்து ஒதுங்கியிருப்பதாலேயே இவ்வளவும் வருகின்றது.

சரி அல்லது பிழை என்பதை எந்தத்திரியாகினும் எழுதுங்கள்

அதுவே இன்று தேவை.

அதைத்தான் நான் செய்கின்றேன். செய்வேன்.

இதன் மூலம் பலரின் முகமூடிகள் கிழியும் காலமிது.

தயவு செய்து கண்டும் காணாதது போல் இராதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனத்தவர்களுடன் பேசும் போது, மிகவும் நம்பிக்கை வைத்துப் பேசுபவர்கள்கூட நான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழன் என்று சொல்லும்போது கொஞ்சம் நம்பிக்கை தளர்ந்து போகின்றார்கள்.

அரசியல் பேசும் போத அல்லது சதாரண பேச்சுகளின் பொழுதா? அரசியல் என்றால் முழு சமுகமும் பொறுப்பு என்று சொல்லலாம்.சதாரண பேச்சு என்றால் நீங்கள் வேற்று இனமக்களுடன் வடிவாக பழகவில்லை என்று அர்த்தம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கிருபன் சொல்வதற்கு எதிர்மறையாகத்தான் உள்ளது. நான் எழுதினால் அது விசுவாசத்துக்குள் வந்துவிடும். அதனால்தான் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தாங்கிய குழுக்கள் (புலிகள் உடபட) ஏன் தமிழர்களுக்கு கொடுமை செய்தார்கள்? இதற்கான அடிப்படை என்ன? இதற்கான பதிலை ஆராய்ந்தால் இனத்தின் மீதான பாசம் பற்று என்பது வெறும் புறத்தோற்றமே ! உள்ளகமாக அவ்வாறு ஒன்றும் கிடையாது. ஒரு சிறு ஊரை எடுத்துக்கொள்வோம், அங்கே பல சாதிகள் இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று முரண்பட்டு அடிமனதில் பகையுடனே காலகாலம் வாழ்கின்றான். இழிவு படுத்தல் தாழ்த்துதல் சபையில் அவமானப்படுத்தல் தள்ளிவைத்தல் திட்டுதல் வஞ்சித்தல் இப்படி செயலிலும் உளவியலிலும் பெரும் பகை நிரந்தரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கின்றது. ஒரு தாய் தன் பிள்ளை மேல் உள்ள பாசத்தைப்போன்று என் இனம் என்ற பாசத்திற்கு துளியும் உணர்வுரீதியில் சம்மந்தம் இல்லை. உலகின் எந்தச் சமூகத்திலும் காணமுடியாத சிக்கலான சமூகக் கட்டமைப்பு இது. சகட்டுமேனிக்கு மண்டையில் போடுவதற்கான மனநிலை எங்கிருந்து வருகின்றது என்றுதான் யோசிக்கவேண்டும். இவன் என் இனம் , இவனை சுடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். என் இனத்தையே கருவறுப்பதற்கு துணிகையில் மனட்சாட்சி குற்ற உணர்வு வரவேண்டும். அப்படி எதுவும் இருந்ததாக அறிகுறி இல்லை. எப்படி இது ஒரு இனமாக முடியும்?

ஒரு குழந்தையை எப்போதும் அச்சுறுத்தி அடித்து வந்தால், தாழ்த்தி கேவலப்படுத்தி வந்தால் வெகுவிரைவில் அது மனநலம் பாதிக்கப்பட்டுவிடும். இதெல்லாம் எமது சமூகத்தில் இயல்பு. சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் உளவியல் ரீதியில் பெரும் குறைபாடு இருக்கின்றது. இனம் என்ற பொதுக் கருத்தை மையமாக வைத்து போராட புறப்பட்டிருந்தாலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்ததின் விழைவை அனுபவிக்கநேர்ந்தது. இவற்றை இயக்கவாரியாக பிரிப்பதில் எந்தப்பலனையும் காணமுடியும் என்று நம்பவில்லை.

ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்.

புலிகள் உட்பட்ட எந்த ஒரு போராட்ட குழுவும் அதன் தலமைகளும் அவைகள் தமக்குள் மோதிக்கொண்டதும் தமது இன மக்கள் மீது எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும் ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம்.

என்ன கொடுமை செய்தார்கள் என்று எழுதினால் இதற்கான பதில்களை தேட முடியும்.

அல்லது உங்கள் சொந்த கருத்தியலுக்கு நியாயம் கற்பிக்க துணை கேள்விகளாக இவை வேண்டும் என்றால். இப்படியே தொடரலாம்.

முப்பது வருட அடக்குமுறையை மறந்து நடுநிலமையாகவும் ஜெனநாயக ரீதியாகவும் வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பேசும் போத அல்லது சதாரண பேச்சுகளின் பொழுதா? அரசியல் என்றால் முழு சமுகமும் பொறுப்பு என்று சொல்லலாம்.சதாரண பேச்சு என்றால் நீங்கள் வேற்று இனமக்களுடன் வடிவாக பழகவில்லை என்று அர்த்தம்.....

சாதாரணமாகப் பழகுவதில் எதுவித சிக்கலும் இல்லை. அரசியல் பேசும்போது நம்பகத்தன்மையைக் காக்க வெளிக்கிட்டால், விசுவாசத்தை விடவேண்டியுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன், சுபேஸ் மற்றும் சசி

புலிகளின் போராட்டம் தோற்றது எதனால்???

சாதியால்

ஊர்ச்சண்டையால்

தமிழரிடையே உள்ள பிரிவுகளால்???

பதில்தரவும்.

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்றே அணுக முற்படுகின்றேன். தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் என்பதுள் புலிகளும் அடக்கம்.

நீங்கள் குறிப்பிட்ட சாதியால் ஊர்ச்சண்டை (பிரதேசவாதம்)யால், தமிழர்களிடையே உள்ள உட்பிரிவால், (வர்க்கம் மதம் போன்றன) இவைகள் இனவிடுதலைப்போராட்ட காலத்திற்கு முன்பும் போராட்டகாலத்திலும் தற்போதும் இருந்துவருகின்றது. இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை. இது வெளிப்படையான உண்மை.

ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..?

இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்...இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது..

Link to comment
Share on other sites

என்ன கொடுமை செய்தார்கள் என்று எழுதினால் இதற்கான பதில்களை தேட முடியும்.

அல்லது உங்கள் சொந்த கருத்தியலுக்கு நியாயம் கற்பிக்க துணை கேள்விகளாக இவை வேண்டும் என்றால். இப்படியே தொடரலாம்.

முப்பது வருட அடக்குமுறையை மறந்து நடுநிலமையாகவும் ஜெனநாயக ரீதியாகவும் வாசிக்க மிகவும் நன்றாக உள்ளது.

தமிழர்கள் தமக்குள் எடுத்த அத்தனை நடவடிக்கையும் கொடுமை என்றுதான் சொல்ல முற்படுகின்றேன். அது அச்சுறுத்தல் உட்பட ஆளை போட்டுத்தள்ளுதல் ஒரு சமூகத்தையே வெளியேற்றுதல் குழு மோதல்கள் என ஆயிரக்கணக்கான செயல்கள். இவற்றை இந்த ஊரில் இன்ன நபரை மண்டையில் போட்டது என்று சொல்லவும் அதற்கு நபர் துரோகி அதனால் கொல்லப்பட்டார் என்று நியாயம் கற்பிக்கும் பதில்கேட்கவுமாக நான் எந்தக் கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை. ஒட்டுமொத்தமகாக எமக்குள் உள்ள முரண்பாடுகள் அவை எங்கே தோன்றுகின்றது அதன் விழைவுகள் என்ன என்பது குறித்து எழுத முற்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

வைரமுத்துவின் கவிதை தான் எனக்கு பிடிக்கும் அவர் கருணாநிதிக்கு வீசும் சாமரமல்ல ,அதுபோல் தான் நமது யாழ் கவிதையின் கருத்தும்.

ஏழு கோடி தமிழனில் கடைசி இரண்டு கோடி தமிழனாவது கருணாநிதியை இன்றுவரை தலைவனாக தான் வரிந்து கட்டி நிற்கின்றான் ,கருணாநிதியுடன் ஒப்பிடும் போது உங்கள் தலைவர் ஒரு மூலைக்குமில்லை .இதுதான் தமிழரசு என்னை கேட்ட யதார்த்தம் என்றால் என்ன என்றதற்கான பதில் .

நெடுமாறன் ,வை.கோ ,சீமான் ,திருமாவளவன்,ராமதாஸ் இவ்வளவு பேரும் கூட்டு சேர்ந்தாலும் ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ வெல்ல முடியாது என்பதுதான் யதார்த்தம்,அதை விட்டு எங்கள் தலைவன் சீமான் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றான் என்றால் அது அபத்தம் ,ஆனால் அதை நம்ப ஆயிரம் புலம் பெயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் .இன்றுவரை சீமான் தான் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியவர் என்று நம்புகின்ற மொட்டுக்கூட்டம் யாழிலேயே இருக்கு .

சிங்கள ,இந்திய இராணுவம் செய்த அநியாயம் உங்கள் பல பேரை எதையும் சிந்திக்காத நிலையில் தள்ளிவிட்டது .தியாகம் ,தற்கொடை என்ற பெயர்கள் எமது மக்களுக்கு விடுதலை பெற்று தரப்போவதில்லை .புத்திசாலித்தனமும் ராஜதந்திரமும் தான் எமக்கான சரியான தீர்வைதரும்.சண்டித்தனமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரை அதிகம் விமர்சிப்பது என்பதற்குள் சாதியும் ஊரும் மதமும் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

இந்த ஊர்ப்பிரிவு அல்லது ஊர்ச்சங்கம் என்பதற்குள் நானும் வருவதால் அது பற்றி ஒரு திரியை நானே தொடங்குகின்றேன். அங்கு விவாதிக்கலாம்.

;இங்கு திரிக்கான பதில் என்ன???

Link to comment
Share on other sites

யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் தன்மையும், சுயவிமர்சனமும் இருக்க வேண்டும். ஆனால், அவை ஒரு தேசத்தையோ, அமைப்பையோ, இனத்தையோ அல்லது தனிமனிதர்களையோ நகரமுடியாத சகதிக்குள் அமிழ்த்தி பின்னோக்கி நகர்த்துவதாக அல்லாமல், குறிப்பிட்டவற்றை உயர்ந்த நோக்கத்திற்காக முன் நோக்கி நகர்த்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்ற கருத்தை புலிகள் களத்திலே இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கத் தொடங்கியிருப்போருக்கும், புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்;ட காரணத்தால், தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வெற்றிபெறுவது கேள்விக்குறியே எனக் கருதுவோருக்கும் பொதுவானதும், பொருத்தமானதுமான கருத்தொன்றை இப் பத்தியிலே பதிவுசெய்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

[மேற்கூறிய இரு சாரருக்குமான பதில் அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி என்ற பகுதிக்குள்ளும் பரவி நிற்கின்றது]

முதலாவதாக, பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் புலிகள் சரிவர புரிந்துகொள்ளாததால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களில் பலர், நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை புலிகளின் இராணுவத் திறனில் நம்பிக்கை வைத்திருந்ததோடு, அதற்கேற்ற வகையிலேயே தமது கருத்துக்களையும் பதிவுசெய்து வந்தனர். அதற்கு முன்னர், அத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக அறிய முடியவில்லை. அத்தகையவர்கள், இராணுவ பலம் இல்லாத ஒரு காரணத்தினை முன்வைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாதென வாதிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான முகவரியாக, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக ஆயுதப் போராட்டம் விளங்கியது. ஆனால், அதன் அழிவோடு, தமிழ்த் தேசியப் போராட்டமும் அழிந்து விட்டதாகவோ அல்லது இனி அது சாத்தியப்பாடான விடயம் இல்லையென்றோ கூறமுடியாது.

உண்மையிலேயே, பலகோணங்களிலும், ஆழமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் நடந்த விடயங்களைப் பார்ப்போமானால், அங்கு இடம்பெற்ற செயற்பாடுகள் ஊடாகவே அடுத்த கட்ட போராட்டத்திற்கான சேதி சொல்லப்பட்டு விட்டது.

.

புரிந்தவர்களால், உலக அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். புரியமுடியாதவர்கள், புரிந்துள்ளவர்களை அல்லது புரிய முற்படுபவர்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தி தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழிப்தற்கு முற்படுவார்கள்.

போராட்டத்தின் தளங்கள், களங்கள், கதாபாத்திரங்கள்; மற்றும் அதன் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால், பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் மனஉறுதியும், ஆத்மபலமும் தளர்வடையக்கூடாது. நாளை என்பது, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த நாளைக்கான மாற்றத்திற்கான ஆரம்பத்தை அறிவியல் ரீதியாக சிந்திப்பதால் உண்டாகும் சிந்தனைப் புரட்சியால் உண்டாக்க முடியும். இந்த சிந்தனைப் புரட்சியில் முற்போக்கு சிந்தனையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் முன்னணி வகிக்க வேண்டும்.

http://www.yarl.com/...t=0#entry720913

புரிந்தவர்கள் வலுவாக இருந்தால், புரியமுடியாதவர்களின் குழப்பகரமான கருத்துக்கள்/நடவடிக்கைகள் வலுவற்றதாகிவிடும்.

சிந்தனைப் புரட்சி தமிழர்களிடையே தோன்றி தெளிவாக நோக்கத்தோடு செயற்படக்கூடிய தலைமைத்துவம் உள்ளவர்கள் வெளிப்பட்டு தேசியத்தை வலுப்படுத்தி தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் விடிவுக்கு ஆதரவான சக்திகளையும் ஒன்று திரட்டி உரிமைகளை வெல்லலாம்தான். ஆனால் இதையெல்லாவற்றையும் 60 - 70 களில் தொடங்கியிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் தன்மையும், சுயவிமர்சனமும் இருக்க வேண்டும். ஆனால், அவை ஒரு தேசத்தையோ, அமைப்பையோ, இனத்தையோ அல்லது தனிமனிதர்களையோ நகரமுடியாத சகதிக்குள் அமிழ்த்தி பின்னோக்கி நகர்த்துவதாக அல்லாமல், குறிப்பிட்டவற்றை உயர்ந்த நோக்கத்திற்காக முன் நோக்கி நகர்த்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்ற கருத்தை புலிகள் களத்திலே இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கத் தொடங்கியிருப்போருக்கும், புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்;ட காரணத்தால், தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வெற்றிபெறுவது கேள்விக்குறியே எனக் கருதுவோருக்கும் பொதுவானதும், பொருத்தமானதுமான கருத்தொன்றை இப் பத்தியிலே பதிவுசெய்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

[மேற்கூறிய இரு சாரருக்குமான பதில் அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி என்ற பகுதிக்குள்ளும் பரவி நிற்கின்றது]

முதலாவதாக, பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் புலிகள் சரிவர புரிந்துகொள்ளாததால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களில் பலர், நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை புலிகளின் இராணுவத் திறனில் நம்பிக்கை வைத்திருந்ததோடு, அதற்கேற்ற வகையிலேயே தமது கருத்துக்களையும் பதிவுசெய்து வந்தனர். அதற்கு முன்னர், அத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக அறிய முடியவில்லை. அத்தகையவர்கள், இராணுவ பலம் இல்லாத ஒரு காரணத்தினை முன்வைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாதென வாதிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான முகவரியாக, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக ஆயுதப் போராட்டம் விளங்கியது. ஆனால், அதன் அழிவோடு, தமிழ்த் தேசியப் போராட்டமும் அழிந்து விட்டதாகவோ அல்லது இனி அது சாத்தியப்பாடான விடயம் இல்லையென்றோ கூறமுடியாது.

உண்மையிலேயே, பலகோணங்களிலும், ஆழமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் நடந்த விடயங்களைப் பார்ப்போமானால், அங்கு இடம்பெற்ற செயற்பாடுகள் ஊடாகவே அடுத்த கட்ட போராட்டத்திற்கான சேதி சொல்லப்பட்டு விட்டது.

.

புரிந்தவர்களால், உலக அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். புரியமுடியாதவர்கள், புரிந்துள்ளவர்களை அல்லது புரிய முற்படுபவர்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தி தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழிப்தற்கு முற்படுவார்கள்.

போராட்டத்தின் தளங்கள், களங்கள், கதாபாத்திரங்கள்; மற்றும் அதன் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால், பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் மனஉறுதியும், ஆத்மபலமும் தளர்வடையக்கூடாது. நாளை என்பது, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த நாளைக்கான மாற்றத்திற்கான ஆரம்பத்தை அறிவியல் ரீதியாக சிந்திப்பதால் உண்டாகும் சிந்தனைப் புரட்சியால் உண்டாக்க முடியும். இந்த சிந்தனைப் புரட்சியில் முற்போக்கு சிந்தனையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் முன்னணி வகிக்க வேண்டும்.

http://www.yarl.com/...t=0#entry720913

இக்கருத்தை வழிமொழிகிறேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்

முக்கியமாக சில நிமிடங்களேனும் ஒதுக்கி இது போன்று எல்லோரும் தத்தமது கருத்துக்களை பதிவு செய்யுமாறு தயவுடன் கேட்கின்றேன். நீங்கள் பார்த்தும் பாராததுமாக ஒதுங்கியிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பொய்யும்புரட்டும் கற்பனைகளும் திருவுபடுத்தல்களும் போராளிகளின் மீதான வஞ்சக தாக்குதல்களும் நிறுவப்பட்டு அவையே எமது அடுத்த தலைமுறைக்கான வரலாறுகளாக பதியப்பட்டு எம்மவர் செய்த அத்தனை தியாகங்களும் உயிரை துச்சமென மதித்து தாயக கனவே அதைவிட மேலென உணர்ந்து தம்மையே எமக்காக தந்த அந்த மறவர்களின் பெயர்களில் திருத்தமுடியாத வடுக்களாக ஒட்டிக்கொள்ளும் என்பதனையும் இங்கு சுட்டிக்ககாட்ட முனைகின்றேன்.

Link to comment
Share on other sites

ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..?

இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்...இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது..

பச்சை :icon_idea::icon_idea::icon_idea: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.