Jump to content

"தூள்கிங் ராமராஜன் கைது"


Recommended Posts

ஜயோ ஜயோ எனது சார்வதேச பொறுப்பாளரை உள்ளே தள்ளும் பலம் உடையவன் ஜெனிவாவில் ஆர். ம்ம்ம் இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஊடாக அவனை விடுதலை செய்யுமாறும் அல்லது லஞ்சம் தரவரதாகவும் கூறி வெளியில் எடுக்குமாறும் அறிவித்துள்ளேன்.

இதை எதிர்த்து ஒரு பத்தாயுரம் பேரைக் கூட்டி ஒரு ஆர்ப்பாட்ட போராட்டத்தை நடத்தினால் மக்கள் ஆதரவு உள்ள தலைவைரை வெளியில் விட சந்தர்ப்பம் உள்ளது.

இல்லை முகமது- நபிக்கான போராட்டம் போல இலங்கையில் உள்ள சுவிஸ் தூத்ரகத்தை அடித்து உடையுங்கப்பா.! இல்லாட்டால் சிங்களவர் நோர்வே தூதரகத்துக்கு முன்னால் செய்தது போலயாவது.

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply

ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:

Link to comment
Share on other sites

ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:

உந்தக் கோயிலுக்கை ஏன் கொண்டுபோய் கொட்டுகினம். அது கடவுளுக்கு போய் சேரும் எண்டுதானே.! இப்ப அது தேவையானவைக்கு போய்ச் சேரப்போகுது. ஈழமக்களின் பல்லாதரவு பெற்ற தலைவர் வெளிவருவதற்காய் அந்தப்பணம் பயன் படுமானால் மக்கள் மனம் குளிரும்.

(சோடா எங்கையப்பா.? :roll: )

Link to comment
Share on other sites

ஜெயதேவன், தோஸ்த் ராமராஜை வெளியில எடுக்கப்போறாராம்,,, (அட சொந்த செலவில இல்லையப்பா,, இழி*** வாய் தமிழர்கள் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய உண்டியலுக்கை அள்ளி அள்ளி போட்ட காசாலத்தானாம்) :oops: :oops: :evil:

பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசியின் நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? :P :P :P

Link to comment
Share on other sites

பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசியின் நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? :P :P :P

மன்னிக்கவும் நான் நகையை விட்டுட்டு வாசித்துவிட்டேன்

:P :P :P

Link to comment
Share on other sites

பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசி நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? :P :P :P

இப்படியா வாசிச்சீங்க முகமூடி? அட அதெல்லாம் எப்பவோ அடைவு வைச்சாச்சு,, மாற்றுக்கருத்துக்காரங்களுக

Link to comment
Share on other sites

பினையில் எடுக்க 50000பிரங் வேணுமாம், வெளிய வந்தாலும் சுவிஸ்வங்கி அனுமதித்தால்தான் வெளிய வரமுடியுமா. வங்கியில் கிறடிட் எடுத்துக்கொண்டு ஓடி இருக்காவிட்டால் வரலாம், ஜேர்மனியில் ஒருவர் மனிசி நகை எல்லாம் அடைவு வைத்து உதவி செய்யுறாராம் தெரியுமா? :P :P :P

இப்படியா வாசிச்சீங்க முகமூடி? அட அதெல்லாம் எப்பவோ அடைவு வைச்சாச்சு,, மாற்றுக்கருத்துக்காரங்களுக

Link to comment
Share on other sites

அவசர வேண்டுகோள்! ராமராசன் பற்றிய தகவல்கள் அதாவது பணமோசடி, ஆட் கடத்தல், போதை வஸ்து கடத்தல், கட்டாய இராணுவ பயிற்சிக்கு ஆட் கடத்தல், போன்ற தகவல்கள் தெரிந்தவர்கள் உடன் கீழ் கண்டவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Geneva Police Department

20 Police Plaza Phone: 630-232-4736

Geneva, Illinois 60134

Fax: 630-232-7711

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205

Geneva Tel. : 022 427 81 11

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205

Geneva Tel. : 022 427 81 11

எனக்கு நடந்த சம்பவம் இப்படியானதுதான். ஆனால் யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தில் பயிற்ச்சிக்காக நான் 14 வயதாக இருந்த போது TNA இந்திய இராணுவ துணைப்படைகளால் நாவற்குளியில் வைத்து இராணுவ பயிற்ச்சிக்காக பிடிக்கப்பட்டேன்.

இது சம்பந்தமான தகவல் வேண்டின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கோ. TP நம்பர் தாறன்..

Link to comment
Share on other sites

சுவிஸ் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ராம்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் போது கைது

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளைக் கண்டித்து, அங்கு நேற்று முன்தினம் புதன்கிழமை ஐ.நா. அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த துணைப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதி ராம்ராஜை (குடு முஸ்தபா) சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் நூறு பேருடன் இவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார், இவரை வளைத்துப் பிடித்து கைவிலங்கிட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

ஜெனீவாப் பேச்சுகளுக்கு எதிராக இவர் இந்த ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டார்.

ஐரோப்பாவிலுள்ள தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வேளையில் அங்கு வந்த சுவிஸ் பொலிஸார் ராம்ராஜை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டுக் கொண்டு சென்றனர்.

சுவிஸில் இவர் தங்கியிருந்தபோது போதைவஸ்து கடத்தல் (குடு முஸ்தபா) வியாபாரம், ஆட்கடத்தில், வங்கி அட்டை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட போது இலங்கைக்கு தப்பி வந்து பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் லண்டன் சென்று புகலிடம் தேடியிருந்தார்.

தற்போது லண்டனிலிருந்து ஒட்டுப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வந்த இவர் அங்கு தமிழ் வானொலி நிலையமொன்றை நடத்தி வந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபின் சுவிஸிலிருந்து தப்பிச் சென்ற இவர் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிக இரகசியமாகக் கலந்து கொண்ட போது இவரது சகாக்களினால் சுவிஸ் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபட்டார்.

சுவிஸில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக இவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படவுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm

Link to comment
Share on other sites

நோர்வே நாட்டு புளொட் அமைப்பின் தலைவரும் கருணா குழுவின் நோர்வே பொறுப்பாளரும் நான் நோர்வே வந்தால் காரில் கூட்டிதிரியும் முட்டாளும் றாமறாஜனுடன் சுவிஸ் சென்ற கருணா குழு துரோகியுமான புளொட் றாஜன் என்ற பண்னாடை இதுதான்.

Link to comment
Share on other sites

பிரபல கேடி பவுடர் கஞ்சா அபின் வியாபாரி மீண்டும் லண்டனுக்கு நாடு கடத்தபட இருப்பதாக அறியப்படுகிறது. பிரித்தானிய புலனாய்வு துறை விசாரனையின் பின் பரதேசி வெளியில் வர உள்ளான்.

ஒரு விசியம் உந்த பன்னாடை ஒரு றேடியோ வைச்சிருக்கிறதாலை உது ஒண்டும் ஊடகவியலாளன் இல்லை. காரணம்

1. மனித உரிமை மீறல்களில் சதமை மிஞ்சியவர்

2. படுகொலை செய்வதில் போல் பொற்றை வென்றவன்.

3. ஆண்;, பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவதில் இடிஅமீனுக்கு இணையானவன்.

4. கள்ளக் கடத்தலில் மாபியாவை வென்றவன்

5. கள்ளக்காட்டில் கண்டபடி சுட்டவன்

6. ஆட்களிடம் பணமோசடியை மிக மோசமாக செய்தவன்.

7. சொந்த குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவன்

8. இளம் சிறூர்களை வலிந்து இராணுவத்திற்கு கடத்தியவன்

9. சிறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவன்

10. ஏழைகள் வீடுகளை கொள்ளையடித்தவன்.

இவை வெறும் கற்பனை அல்ல ராமராசனின் பத்து அடிப்படைகள். இவனை இதை விட கேவலமாக அழைத்தாலும் பிரச்சனை இல்லை! காரணம். இவன் மனிதனே அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¬Õõ ÍÅ¢Š Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø «øÄÐ þ¾Ã °¼¸í¸Ç¢ø þÐÀüÈ¢ Åó¾ ¦ºö¾¢¸ÙìÌ þ¨½ôÒ ÌÎí§¸¡Åý. ¿¡í¸Ùõ ¦¸¡ïºõ À¡òÐ ºó§¾¡ºôÀðÎ즸¡ûÙÅõ.

Link to comment
Share on other sites

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி... கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி.... கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறையில் ராம்ராஜ் - சில சிந்தனைகள்!

ரிபிசியின் பணிப்பாளர் சுவிஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழீழ தேசியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது சுவிஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர். நேற்று (23.02.06) ரிபிசியின் அரசியல் விவாதம் ரிபிசியின் பணிப்பாளர் ராம்ராஜ் இல்லாமலேயே நடைபெற்றது.

இவருடைய கைது நடைபெற்றதும் பலர் என்னை தொடர்பு கொண்டு கதைத்தனர். அவர்கள் அவர் கைது செய்யப்பட்டது பற்றி மிகவும் மகிழ்வுடன் இருந்தார்கள். ஆனால் சில செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் நான் ராம்ராஜுடன் சில முறை தொடர்பு கொண்டு பேசியிருந்ததன் காரணமாக, எதிர்தரப்பில் இருந்தாலும் என்னுடன் நன்றாக பழகக்கூடிய ஒரு மனிதர் சிறையில் இருக்கின்றார் என்பது குறித்து என்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஆகவே ஜெகநாதன் என்பவர் ரிபிசியில் நேற்று சொன்னது போன்று, இந்த சிறைவாசம் ராம்ராஜுக்கு சிந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ஆறுதல் பட்டுக் கொள்கிறேன். அவருக்கு எவ்வாறான சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கும் சில கருத்துக்கள் உண்டு.

இதுவரை ரிபிசியில் ராம்ராஜ் மற்றும் அவரைச் சார்ந்த அனைவரும் அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனால், அப்படி போகின்றவர்களுக்கு சில சட்டம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்கின்ற கருத்தை அடிக்கடி சொல்லி வந்தார்கள். விடுதலைப்புலிகளுக்காக ஊர்வலம் போகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு நேரம் வரும் போது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை ரிபிசியில் பயமுறுத்துவார்கள். அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, இவருக்கு இந்த பிரச்சனை வந்தது என்று பெயர்களுடன் கூட சில சம்பவங்களையும் சொல்வார்கள். விடுதலைப்புலிகளின் ஒரு சில ஆதரவாளர்கள் இவர்களின் இந்தக் கதைகளை கேட்டு நம்பியதும் உண்டு.

ஆனால் விந்தை என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஊர்வலம் போன ராம்ராஜ்தான் இன்று சிறையில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனவர்கள் அல்ல. இந்த முரண்பாட்டை ஒருமுறை ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

இன்னும் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ரிபிசி வானொலியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கதைப்பவர்களை, நாட்டுக்கு போய் போராடச் சொல்லி கிண்டல் அடிப்பது வழக்கம். இது ரிபிசி மேற்கொள்ளும் ஒரு மிக மலிவான நடவடிக்கை. நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக மட்டும்தான் போராட முடியும் என்பதில்லை. இவர்கள் சொல்கின்ற "ஜனநாயகத்திற்காகவும்" போராடலாம். ஆகவே போராடப் போக வேண்டியது இவர்கள்தான். இங்கு புலத்தில் விடுதலைப்புலிகளுக்காக வாதாடுபவர்கள் யாரும் தாங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் ரிபிசி வானொலியில் ராம்ராஜும் ஜெயதேவனுமே அடிக்கடி "எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை" என்று முழங்குவார்கள். இன்று சுவிஸிற்கு சென்றால் அங்கு பொலிஸாரால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் ஏதோ ஒரு அசட்டுத் துணிவில் ராம்ராஜ் சென்றிருக்கின்றார். தற்பொழுது கைதாகி சிறையிலும் இருக்கின்றார். "உயிர் கொடுப்பதற்கும் சிறை செல்வதற்கும் துணிவு கொண்ட நீங்கள் அல்லவா நாடு சென்று நீங்கள் சொல்லும் ஜனநாயகத்திற்காக போராட வேண்டும்" என்று ராம்ராஜ் வெளியில் வந்ததும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேட்பார்களே. இதையும் அவர் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விடுங்கள். சில ஊடகங்கள் ராம்ராஜ் குறித்து எழுதுகின்ற பொழுது, அவர் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர் என்று எழுதுவார்கள். நம்புவதற்கு கடினமான பல குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தவார்கள். ஆனால் ரிபிசி ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இவ்வளவும் ஏன்? நான் கூட இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்பியதில்லை. விடுதலைப்புலிகளை எதிர்பதால் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மனிதன் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றே நினைத்தது உண்டு. ஆனால் இப்பொழுது இவருக்கு வாக்காலத்து வாங்கிய அனைவரின் முகத்திலும் கரியை பூசி விட்டாரே. பாவம். இனி ரிபிசி நேயர்கள் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள்? இதையும் ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது போன்ற பல சிந்தனைகள் அவருக்குள் உருவாகி, தன்னுடைய கருத்துக்களை மாற்றி தேசியத்தை அவமதிக்காத ஒரு மனிதராக அவர் வெளியே வர வேண்டும். வந்து புத்தகமும் எழுத வேண்டும். அவர் மாறாவிட்டாலும் பரவாயில்லை. விரைவில் வெளியே வர வேண்டும். எங்களுக்கும் பொழுது போக வேண்டுமல்லவா?

கடைசியாக ரிபிசியிடம் ஒரு கேள்வி. உண்மைக்கு முதலிடம் கொடுக்கும் நீங்கள் ராம்ராஜ் கைது விடயத்தில் மட்டும் மென்று விழுங்குவது ஏன்? உண்மைகளை சொல்வதில் என்ன தயக்கம்? விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்கள் பற்றிய உண்மைகளை உங்களிடம் சொல்ல வேண்டும். சிறிலங்கா அரசு, ஈபிடிபி இப்படி யார் என்றாலும் உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மையை அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்று எங்களுக்கு பாடம் சொல்லித் தந்தவர்கள் நீங்கள். இந்தக் கைது விவகாரத்தின் உண்மைகளையும் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.

-சபேசன் (24.02.06)

http://www.webeelam.com/Ramraj.htm

Link to comment
Share on other sites

இதுவரை ரிபிசியில் ராம்ராஜ் மற்றும் அவரைச் சார்ந்த அனைவரும் அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனால், அப்படி போகின்றவர்களுக்கு சில சட்டம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்கின்ற கருத்தை அடிக்கடி சொல்லி வந்தார்கள். விடுதலைப்புலிகளுக்காக ஊர்வலம் போகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டு நேரம் வரும் போது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை ரிபிசியில் பயமுறுத்துவார்கள். அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது, இவருக்கு இந்த பிரச்சனை வந்தது என்று பெயர்களுடன் கூட சில சம்பவங்களையும் சொல்வார்கள். விடுதலைப்புலிகளின் ஒரு சில ஆதரவாளர்கள் இவர்களின் இந்தக் கதைகளை கேட்டு நம்பியதும் உண்டு.

ஆனால் விந்தை என்னவென்றால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஊர்வலம் போன ராம்ராஜ்தான் இன்று சிறையில் இருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போனவர்கள் அல்ல. இந்த முரண்பாட்டை ஒருமுறை ராம்ராஜ் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

தற்காலிகமாக ஒரு பனிப்பாளர்தேவை எங்களுடைய பனிப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எங்கள் வானொலியை இயக்குவதற்கும் அரசியல் ஆய்வுகளுக்கும்(?)

ஜனநாயகமாக எங்கள் வானொலியை இயக்குவதற்கும் ஒரு பனிப்பாளர் தேவை.

தகமைகள் தமில் தெரியாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கூசாமல் அண்டப்புழுகு புழுககூடியவர்கள் விரும்பபடுவர்.

இப்படிக்கு டமில் ஜனநாயக வானொலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்கை வன்னியரே

ராமராசன் மாதிரிக்கதைக்க நாக்கையுமெல்லோ கொஞ்சம் பிளேட்டாலை சீவவேணும். அதை மறந்திட்டீரோ ? அப்பதானே விடுதளைபுளியளெண்டு பேசவசதியா இருக்கும்.

Link to comment
Share on other sites

நம்மடை மன்னரும் மந்திரியாரும் முன்பு ஒரு இணையஒலிபரப்பு செய்தவை அதை நம்மடை பனிப்பாளருக்கு சொன்னால் அவரும் உள்ளையிருந்து ஒலிபரப்பு செய்யலாம்தானே?

பரமன்சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?

இறங்கி கீழே வந்தவுடன் சுவிஸ்கருடன் லபக்கென்று பிடித்துவிட்டது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அது அந்தகாலம்.

முற்பகல் செய்யின் முற்பகலே விளையும் இது இந்தகாலம்.

காட்டிக்கொடுத்த அந்த நல்ல உள்ளத்துக்கு

நன்றி நன்றி நன்றி நன்றி.................................................................

................................................................................

................................................................................

...................

Link to comment
Share on other sites

இவரின் வருகையை எதிர்பார்த்து பொலிசார் 50 பேரும் கைவிலங்கும் காத்து ஜ.நா முன்றலிலைநின்றதாம். தூள் கிங் வந்து ஆடிய ஆட்டம் எல்லாம் பாத்து சிரித்துப்போட்டு தூக்கியபோது முஸ்தபா திகைத்துபோனாராம். கையெடுத்து கும்பிட்டாராம். ஆர்ப்பாட்டத்திலை பெரிய கோட் ரையோ நின்டு கும்மாளம் அடிச்சுப்போட்டு கைவிலங்கோட அதே சனக்கூட்டத்திற்கு முன்னாலை பொலிசிலை நாய்கூட்டுக்கை அடைத்து போறது போன்று கொன்டு செல்லப்பட்டாராம். தனது வாயால உலகத் தமிழரை பேக்காட்டிய பெருமைக்குரியவன் அல்லவா அவனுக்கே அலுவா கொடுக்க ஒரு திருப்பதி அலுவா ஜெனிவாவில் இரந்திருக்கு என்று நினைக்கும்போது பாராட்டுகள்.

இனி இவர் விடுதலையானால் என்ன சிறையில் இருந்தால் என்ன தம்பி கடந்த 3 நாட்களாக வடிவா கம்பி எண்னறார் என்பதிலை சந்தோசமே.

*****

*****

*****

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்.

Link to comment
Share on other sites

திருமலையில், இந்திய இராணுவ காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கூலிக்கும்பல்களினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலம் ....

..... தம்பலகாமத்தைச் சேர்ந்த தற்போது லண்டனிலிருக்கும் எனது நண்பன் குடும்பம், அப்போது இடம்பெயர்ந்து திருமலை நகருக்குள் வசித்து வந்தார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். திருமலையில் இந்திய ஆதரவு கூலிகளின் பழி வாங்கும் படலம் ஆரம்பமானவுடன், முஸ்தப்பா எனும் பெயரில் கூலிப்படைகளிலிருந்த இதே "ராம்ராஜ்" தனது சில கூலிகளுடன் எனது நன்பனின் வீட்டினுல் புகுந்து, அவனது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை, அவர்களது தாய்/தந்தையர்களுக்கு முன்பாகவே கண்ட துண்டமாக வெட்டி, வெட்டிய பாகங்களை, பெற்றோரது கைகளில் பிரித்துக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். இது போன்று திருமலையில் முஸ்தப்பா செய்த கொலைகள் நூறுக்கு மேல் ....

இந்த கொலை வெறி ராம்ராஜுக்கு சிறைதான் தண்டனையா???????????? .... இல்லை!!!!! கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கொடுக்கபட்டே தீர வேண்டும்!!

நாங்கள் மன்னித்து விட்டுப் போக ஜேசுபிரானோ, காந்தியோ அல்ல!!!!

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் தவறான தகவல். சரியான முகவரி : Adresse : Bd Carl-Vogt 17, 1205

Geneva Tel. : 022 427 81 11

எது எப்பிடியோ - ஏன் இப்பிடி ஒரு குழப்பமான பெயரில நீங்க இங்க இருக்கிங்க?

முடியுமானால் மாற்றுங்க- யாருக்கு நீங்க இங்க பயம்? 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.