யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
இணையவன்

கருத்துகளில் மாற்றங்கள் [2012]

Recommended Posts

'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

மறுபடி யாழ் உறவோசைப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

"ஈழத்தில் மீண்டும் தம் இருப்பை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகள்!" என்ற திரி நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

'யாழில் பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்-அதிர்ச்சி செய்தி!!' என்ற தலைப்பு நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Edited by இணையவன்

Share this post


Link to post
Share on other sites

'மறைவிடத்தை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது எப்படி?' என்ற தலைப்பு நீக்கப்படுலிறது.

Share this post


Link to post
Share on other sites

"தமிழ் பெண்களின் நிர்வாண படங்களை விற்பனை செய்யும் இணையத்தளத்திலிருந்து உங்கள் மனைவி பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்"

என்ற செய்தி நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டும் தானாம் காணி, காவல்துறை அதிகாரங்கள் என்ற திரியில் ஒருமையிலும், அநாகரீகமாகவும் எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன. களத்தில் ஒருமையில் எழுதுவதும், ஆபசமாக ஒருவரை திட்டுவதும், அநாகரீகமாக எழுதுவதும் கள விதிகளை மீறும் செயல்கள் என்பதை நினைவில் கொள்ளவும்

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

"தற்காலிக திண்னை அனைத்து தமிழீழ சொந்தங்களும் உரையாட வருக..." என்ற திரி நீக்கப்படுகின்றது

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

'பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள்!' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

இத்தாலி நாய்க்கு இலங்கை என்ன நக்கும் எலும்புத் துண்டா? என்ற கவிதை அநாகரீகமான முறையில் எழுதப்பட்டமையால் நீக்கப்பட்டது

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி தனது முன்னைய பதிவுகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி தொடர்ந்தும் நீக்கி வருவதால் 15 நாட்களுக்கு யாழ் கருத்துக்களத்தில் இருந்து தடை செய்யப்படுகின்றார்.

கள விதி:

கருத்துக்கள உறவுகள் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் எழுதும் கருத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி உள்ளது. ஒருவர் தான் எழுதிய கருத்தில் உள்ள இலக்கணப் பிழைகளை (எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன அமைப்புப் பிழை) திருத்துவதற்கும், தான் எழுதிய கருத்தில் மேலதிக ஆவணங்களை இணைப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனது கருத்தை எழுதியதன் பின் - மற்றவர்கள் அவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - அவர் தன் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், எழுதப்பட்ட கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் - அந்தக் கருத்தை முற்றாக நீக்குவதற்கோ, அந்தக் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதற்கோ அனுமதியில்லை. (எனவே, ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் சிந்தித்து எழுதவும்.)

Edited by நிழலி
 • Like 9

Share this post


Link to post
Share on other sites

திண்ணை கள உறவுகளுக்கு மட்டுமானது. யாழில் இணையாதவர்கள் திண்ணையை பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த விடயம். திண்ணையில் கதைப்பதை திண்ணைக்கு வெளியே காவிச்செல்வதும், ஸ்கைப் போன்றவற்றினூடாக திண்ணைக்கு வெளியே கொண்டு செல்வதும், ஏனைய திண்ணை உறவுகள் அறியாமல் அதை திண்ணைக்கும் யாழுக்கும் வெளியே எடுத்துச் செல்வதும் தவறான செயல்கள்.

இப்படி செய்பவர்களின் திண்ணையில் கதைக்கும் உரிமையை / அனுமதியை நிர்வாகம் நிச்சயம் நீக்கும்

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

"வணக்கம் நான் நிமலா" என்ற திரி தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கு....

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி மீதான தற்காலிகத் தடை இந்த நிமிடத்தில் இருந்து நீக்கப்படுகின்றது

 • Like 8

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

கடந்த இரு வாரங்களாக யாழில் பல பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இயங்கிய கோமகனை நிரந்தரமாக யாழ் களத்தில் இருந்து தடை செய்கின்றோம்.

கோமகனது அண்மைக்கால செயல்கள்:

1. யாழ் களத்தில் இருந்து விலத்தி இருக்குமாறு யாழின் பல உறவுகளுக்கு மடல் அனுப்பியமை

2. யாழ் களத்தின் உறவுகள் சிலரது அனுமதியைப் பெறாமல் அவர்களது பெயர்களையும் இணைத்து மடல்கள் அனுப்பியமை

3. யாழ் தனிமடல்களை வெளியில் பகிர்ந்தமை

4. சாத்திரியின் தடையைப் பற்றிய தீர்மானத்தினை சாதகமாக்கி யாழை சிதைக்க முனைந்தமை

இவை அனைத்துக்கும் தகுந்த ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. எல்லா ஆதாரங்களையும் ஆராய்ந்த பின் நிர்வாக மட்டத்தில் ஆலோசித்த பின்னே இந்த துயரமான முடிவு விருப்பம் இன்றி எம்மால் எடுக்கப்பட்டது

நன்றி

யாழ் நிர்வாகம்

Edited by நிழலி
 • Like 6

Share this post


Link to post
Share on other sites

Tamilwin இல் இருந்து பதியபப்ட்ட ஒரு பதிவு நீக்கப்படுகின்றது

Share this post


Link to post
Share on other sites

கோமகன் நிர்வாகத்துக்கு தனது வருத்தத்தினைத் தெரிவித்து மடல் அனுப்பியதால் அவர் மீதான தடை இப்போது முதல் நீக்கப்படுகின்றது

நன்றி

 • Like 9

Share this post


Link to post
Share on other sites

அலை செய்திகள் என்ற திரி, இணையத்தளம் ஒன்றின் பெயரில் யாழில் இணைவது தவறு என்பதால் தற்காலிகமாக பூட்டப்படுகின்றது. திரியை ஆரம்பித்த உறவுக்கு பெயரை மாற்றும் படி கேட்கப்பட்டுள்ளது

நன்றி

Share this post


Link to post
Share on other sites

""3" திரைப்படத்தை பார்க்க." என்ற திரி நீக்கப்படுகின்றது

Share this post


Link to post
Share on other sites

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் திரியில் அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது

Share this post


Link to post
Share on other sites

'சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன் ' எனும் திரி ஏலவே இணைக்கப்பட்டு இருந்தமையாலும்

'நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- டக்ளஸ் தேவானந்தா ' எனும் திரி தமிழ்வின் இணைப்பு என்பதாலும் நீக்கப்பட்டன

Share this post


Link to post
Share on other sites

தான் எழுதியவற்றை நிர்வாகத்தின் அனுமதி இன்றி 'மதராசி' நீக்கியமையால் தொடர்ந்து அவர் தன் பதிவுகளை நீக்குவதை தடுப்பதற்காக அடுத்த 15 தினங்களுக்கு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்

Share this post


Link to post
Share on other sites

பதியப்பட்ட கருத்தொன்றிற்குச் சக கருத்தாளர் பதில் எழுதியபின்னர் தனது கருத்தை மாற்றியதற்காக இளங்கதிருக்கு (ilankathir) ஒரு எச்சரிக்கை வழங்கப் படுகிறது.

Share this post


Link to post
Share on other sites

யாழில் கறுப்புப் பட்டியலிலுள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்! விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார். தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர். ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம். வெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/118660?ref=home-imp-flag
  • இலங்கை குண்டுவெடிப்பு:புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பயிற்சி பெற்ற 160 தற்கொலை கொலையாளிகள் …செய்தி தொகுப்பு…!!! நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (25) சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.இம் மாநாடு காலை 10 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குவதாகவும், குறித்த தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.அவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடும் போது, இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை எதனையும் அமெரிக்கா முன்கூட்டியே வழங்கியிருக்கவில்லை என ,இலங்கைக்கான அமரிக்கத்தூதுவர் Alaina teplitzCNN தொலைக்காட்சி செய்திக்கு கூறியுள்ளார்.அமெரிக்கா மற்றும் இந்தியா முன்கூட்டியே தாக்குதல் குறித்து எச்சரித்திருந்ததாக அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா கூறி இருந்ததாக செய்திகள் வெளியானது தொடர்பாகவே மேற்படி தூதுவர் கூறியுள்ளார். இதே போன்று- நியூசிலாந்து மசூதிகள் தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றதாக அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா தெரிவித்ததை மறுதலிப்தாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Andern அவர்களின் செய்தி அமைந்துள்ளது. தமது புலனாய்வுத்துறை இவ்விதம் தவல்கள் எதையும் முன்கூட்டியே பெற்றிருக்கவில்லை, தற்பொழுது கருதவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அமைச்சரின் கருத்து குறித்து,பாதுகாப்புத்துறைசார் வல்லுனர்களும், நியூசிலாந்து தாக்குதல்களுக்கும்,இலங்கைத்தாக்குதல்களிற்குமிடையில் மிக குறுகிய கால இடைவெளியே இருப்பதனால்,அவ்வளவு விரைவாக இலங்கையிலான தாக்குதல்கள் திட்டமிட்டருக்கப்பட்டிருக்க முடியாது என சுட்டிக்காட்டி உள்ளனர். உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இலங்கை மற்றும் ஏனைய நாட்டை சேர்ந்தவர்கள் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்த சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் கவலைக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் ஒன்றுக் கூடியிருந்த சிறுவர்கள் உள்ளடங்கிய குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இட்டு அமைப்பு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தது. தாக்குதலில் வளர்ந்தோரைப் போன்று சிறுவர்களும் காயங்களுக்கு உள்ளாகினர். இவர்கள் தற்பொழுது தமது உயிருக்காக போராடி வருகின்றனர். பல சிறுவர்கள் தந்தை அல்லது தாயை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர்.இவ்வாறான நிலையில் யுனிசெப் அமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டு அவர்கள் தொடர்பான விபரங்களை பெற்று வருகின்றது. இவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதுடன் அந்த அமைப்பு மேற்கொள்ள உள்ள நிதி உதவிகள் குறித்தும் இவர்களுக்கான தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஒன்பது தாக்குதலாளிகளில் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை. பின்திய தகவல்களின் படி தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 9 பேரின் உடல்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 1 பெண்ணும், வெளிநாட்டில் படித்துப்பட்டம் பெற்றவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் லத்தீப் ஜமீல் முகமது 2006/7 ம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் கல்விகற்றார் . கல்வியை முடிக்காமல் அவுஸ்திரேலியா சென்று,அங்கு படித்து பட்டம் பெற்ற பின் இலங்கை திரும்பியவர் என தெரிய வருகிறது. இலங்கையில் எதிர்வரும் சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மறு சீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கைதுசெய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். හිටපු හමුදාපති ජෙනරාල් දයා රත්නායක මහතා නව ආරක්ශක ලේකම් ලෙස නම් කෙරෙයි. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Former Army Commander General Daya Ratnayake is appointed as the new Secretary of Defense. வௌ்ளவத்தை சவோய் திரையரங்கின் முன்பாக நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் அதனை கண்டு மக்கள் அச்சப்பட அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிடுவதற்கே இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை, விசேட அதிரடிப் படையினர் இணைந்து வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்தனர். சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் வரக்காபொல பிரதேசத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்ட வாகனம் இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SGPH – 3779 வகையைச் சேர்ந்த கறுப்பு நிற கெரவன் வேன் கைப்பற்றப்பட்டிருக்கிறது. வரக்காபொல – அங்குவெல்ல மஸ்ஜித் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை சோதனையிடும் போது சந்தேக நபர்களும், வேனும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 144-2646 என்ற இலக்கத்துடன் கூடிய மோட்டார் சைக்கிள்களையும், நான்கு வோக்கிடோக்கி இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். இலங்கையின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளுக்கு அமெரிக்காவின் FBI நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இதேவேளை, காத்தான்குடி – நாவலடி காயத்ரி அம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த களப்பில் இருந்து உருக் குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள். புத்தளம் வனாத்தவில்லு பகுதியிலிருந்த 75 ஏக்கர் காணியில் பயிற்சி பெற்ற தவகீத் ஜமாத்தைச் சேர்ந்த தற்கொலை கொலையாளிகள் 160 பேருடைய விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் பாதுகாப்பு தரப்பிடம் சிக்கியுள்ளது. சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடாகியிருந்த, குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டே, இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த குறித்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படும் திகதி பின்னர்அறிவிக்கப்படுமென, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை. போலீசாரால் தேடப்பட்டு வந்த இரு வாகனங்களும் வறக்காபொலயிலிருந்து அதிரடிப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.வத்தளை பகுதியில் வசித்த தற்கொலைதாரி ஒருவர் மனம் மாறி தப்பி ஓடிய போதும் கண்டியில் வைத்து கைதாகியுள்ளார். வீசா இல்லாமல் இலங்கைக்கு வருகைதந்த எகிப்து நாட்டுப் பிரஜையொருவர் மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (24) காலை குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் நான்கு வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எனினும் அவரிடமிருந்து கடவுச்சீட்டு, வீசா ஆகிய ஆவணங்களேதும் இல்லையெனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இந்நபர், குறித்த பகுதியில் அமைந்துள்ள அராபி பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருவதாகப் பொலிஸாரிடம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள விசா வழங்கும் நிலையங்கள் பல மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்தியாவுக்கான விசா வழங்கலை முன்னெடுத்துவரும் ஐ.வி.எஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு விசா வழங்கலை முன்னெடுத்துவரும் வீ. எப்.எஸ் குலோபல் நிலையம் என்பன இவ்வாறு மூடப்பட்டுள்ளன. அத்துடன், மலேசியா, தாய்லாந்து, சீன தூதகர அலுவலகத்துக்கு இணையான விசா சேவை நிலையங்கள் என்பனவும், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன. http://www.tibworld.com/2019/04/25/1VP5LVlD/?fbclid=IwAR3FCOoUfCauis5N5JVw00JN8kipd7QuDZbqRUk3LvqQxJ-pM2QoUTNu_nk
  • அந்தாள் இப்ப மக்காவுக்கு போய் புனிதர் பட்டம் வாங்கியிருக்கும்...
  • முதலில் பதவி விலக வேண்டியது பல சட்டவிரோத செயல்களை செய்த மைதிரிபால சிறிசேன தான்! பல சட்டவிரோத செயல்களை செய்த மைதிரிபால சிறிசேனவை பதவி விலகச் சொல்லி கேட்பதற்கு பதிலாக மற்றவர்களை பதவி விலகச் சொல்லி கேட்பது சந்தர்ப்பவாதியான விஜயதாஸ ராஜபக்ஸவின் சுயரூபத்தை மீண்டும் காட்டியுள்ளது.  இந்த விஜயதாஸ ராஜபக்ஸ தான் ஒரு மோசமான பேர்வழி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளான்.
  • கிரேக்கர்களின் சாப்பாடு அத்தனையும் தங்கப்பவுண். தொடருங்கள்.