Jump to content

( சு )தந்திரம்


Recommended Posts

சுதந்திரத்தின் வலி தெரியாது

தந்திரத்தால் வந்த சுதந்திரத்தை

கொண்டாடுதாம் சிங்களம்

தமிழனின் ரத்த வாடையுடன்

கொண்டாடுதாம் சுதந்திரத்தை

கேடுகெட்ட சிங்களம்

ரெண்டுக்கும் சுதந்திரம் போய் கனகாலம்

வடக்கில் ஒரு கூட்டம்

சுதந்திரம் எங்கேயெண்டு தேட

கிழக்கிலே ஒரு கூட்டம்

உதயமாகுதெண்டு லூசுக்

கதை கதைக்குது

சுதந்திரம் போய் கனகாலம்

வெள்ளை போட்ட பிச்சையை

போராடி பெற்றதெண்டு

கொண்டாடும் பே சிங்களமே

சுதந்திரம் உனக்குமில்லை

எனக்குமில்லை

என்பதை

எப்பொழுது உணரப்போகிறாய்...?

Link to comment
Share on other sites

கோ! இத்தனை கவித்திறமையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எங்கே ஒளிந்திருந்தீர்கள்?

நம் சுதந்திரம் பறிபோன நாளில் ... யதார்த்தமான வரிகளுடன் அருமையான கவிதை.

பாராட்டுக்கள்! 1 :)

Link to comment
Share on other sites

கொண்டாடும் பே சிங்களமே

சுதந்திரம் உனக்குமில்லை

எனக்குமில்லை

என்பதை

எப்பொழுது உணரப்போகிறாய்...?

அதை சிங்களம் உணரும் பொழுது நாடு வேறொரு நாட்டின் கைகளில் இருக்கும். அது சீனாவா இந்தியாவா என்பதுதான் கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வெள்ளை போட்ட பிச்சையை

போராடி பெற்றதெண்டு

கொண்டாடும் பே சிங்களமே

சுதந்திரம் உனக்குமில்லை

எனக்குமில்லை

என்பதை

எப்பொழுது உணரப்போகிறாய்...?

நியமான வரிகள்

உணர்ச்சி பூர்வமான தங்கள் கவி அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தந்திரமானவர்கள்,தங்களுக்குள் ஒற்றுமையானவர்கள்...ஒரு போதும் தங்கள் நாட்டை மற்றவர்களுக்கு அடவு வைக்க மாட்டார்கள்...கோமகம் உங்கள் கவிதை அருமை தொடர்ந்தும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

கோ! இத்தனை கவித்திறமையை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எங்கே ஒளிந்திருந்தீர்கள்?

நம் சுதந்திரம் பறிபோன நாளில் ... ஒரு யதார்த்தமான வரிகளுடன் அருமையான கவிதை.

பாராட்டுக்கள்! 1 :)

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளிற்கும் . மேலும் , உங்கள் கவி தைகளுக்கு முன்னால் நான் ஒரு துகள் . என்னையும் உங்களுடன் அரவணைக்க முயல்வது கண்டு சந்தோசம் :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் உணரப் போவதில்லைக் கோமகன்...அப்படி உணர்ந்தால் நாடு எங்கையோ போயிருக்கும்...நன்றி கவிதைக்கு...

Link to comment
Share on other sites

...வெள்ளை போட்ட பிச்சையை

போராடி பெற்றதெண்டு

கொண்டாடும் பே சிங்களமே

சுதந்திரம் உனக்குமில்லை

எனக்குமில்லை

என்பதை

எப்பொழுது உணரப்போகிறாய்..

சிங்களவர் என்றுமே உணரப்போவதில்லை. ஆனால் நம்மினம் உணர்ந்தாலே போதும். நாம் இழந்தவை மீளவும் கிடைத்துவிடும்.

.

உண்மையை உணர்வுபூர்வமாகக் கூறியிருக்கிறீர்கள்.

உங்கள் கவிதை நடை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்...

தொடருங்கள் ........ வாசிக்கக் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை விட்டு விட்டுப் போன ஆங்கிலேயருக்கு

இலங்கை சுண்டைக்காயைப் பொல் இருந்தது.

அதனால் இலங்கையையும் கைவிட்டார்கள்.

தமிழ்ப் புத்திசீவிகள் விட்ட பிழைகளால் சிங்களம்

வாழ்கின்றது.

நன்றி கோமகன் உங்கள் கவிதை காலத்திற்கேற்ப அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

அதை சிங்களம் உணரும் பொழுது நாடு வேறொரு நாட்டின் கைகளில் இருக்கும். அது சீனாவா இந்தியாவா என்பதுதான் கேள்வி

மிக்க நன்றிகள் சாத்திரி உங்கள் நேரத்திற்கும் , கருத்துகளுக்கும் . இந்தியா , சீனாவைவிட இன்னுமோர் மூன்றாம் தரப்பும் பங்கு போடலாம் :) :):) .

Link to comment
Share on other sites

கோமகன் கவிதை அருமை தொடர்ந்து எழுதுங்கள்

சுதந்திரம் பெற்ற சிங்களவன் தந்திரசாலிகள். புத்திசாலிகள். அவன் யார் வந்தாலும் கொள்கை பிரளாதவர்கள். தமிழன் அப்படியில்லை. தான் வாழ்ந்தால் சரி என்று நினைப்பவன். அன்றிலிருந்து இன்றுவரை அதுதான் நடக்கிறது. முள்ளிவாய்காலின் பின்பும் அது தொடர்கதையாக உள்ளதுதான் பெரும் கவலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் காலத்திற்கேற்ற கவிதை, கோமகன்!

தலைப்பு மிகவும் அருமை!

தொடருங்கள், கோமகன்!>>>>>

Link to comment
Share on other sites

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள் பகி உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளிற்கும் :):):) .

Link to comment
Share on other sites

வெள்ளை போட்ட பிச்சையை

போராடி பெற்றதெண்டு

கொண்டாடும் பே சிங்களமே

சுதந்திரம் உனக்குமில்லை

எனக்குமில்லை

என்பதை

எப்பொழுது உணரப்போகிறாய்...?

நியமான வரிகள்

உணர்ச்சி பூர்வமான தங்கள் கவி அழகு

மிக்க நன்றிகள் நிகே உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):) .

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் தந்திரமானவர்கள்,தங்களுக்குள் ஒற்றுமையானவர்கள்...ஒரு போதும் தங்கள் நாட்டை மற்றவர்களுக்கு அடவு வைக்க மாட்டார்கள்...கோமகம் உங்கள் கவிதை அருமை தொடர்ந்தும் எழுதுங்கள்

மிக்க நன்றிகள் ரதி உங்கள் நேரத்திற்கும் , கருத்துப் பகிர்வுகளுக்கும் . மேலும் , சிங்களவர்களிடம் நீங்கள் கூறியமாதிரி ஒரு பொதுமை உள்ளது . அதாவது , நண்டுக்குணம் அவர்களிடம் இல்லை . நாங்கள் தானே கல் தோன்றா முன் தோன்றிய மூத்தகுடிகள் . நான் எப்ப பேர் மாத்தின்னான் :o:lol::D ????

Link to comment
Share on other sites

கருத்துக்களை என்னுடன் பகிர்ந்த சுபேஸ் , கல்கி , வாத்தியார் , செம்பகன் , புங்கையூரான் நீங்கள் எல்லோரும் எனது அன்புக்கும் நட்புக்கும் , உரியவர்கள் . நான் உங்களுக்குத் தனித்தனியாக நன்றிகள் சொல்லி இடத்தைப் பிடிக்காது , எல்லோருக்கும் எனது தலை வணங்குகின்றது :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் இப்ப தானே பார்த்தேன் :(

எல்லாப்பகுதியிலும் அசத்துறிங்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்தும் எழுதுங்கள் :)

Link to comment
Share on other sites

இதை நான் இப்ப தானே பார்த்தேன் :(

எல்லாப்பகுதியிலும் அசத்துறிங்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா தொடர்ந்தும் எழுதுங்கள் :)

உங்களைவிடவா ஜீவா ???????? மிக்கநன்றிகள் கருத்துக்களைப் பதிந்ததிற்கு :):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.