• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

பிரிட்டனில் குடியேற விரும்புவோர்க்கு வருமான கீழ் வரம்பு 31 ஆயிரம் பவுண்டுகள்

Recommended Posts

பிரிட்டனில் குடியேற விரும்புவோர்க்கு வருமான கீழ் வரம்பு 31 ஆயிரம் பவுண்டுகள்

பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது.

பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது.

குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடியும் என நிபந்தனை விதிப்பது பற்றி திட்டமிட்டுவருவதாக குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் சமூகத்திற்கு கூடுதலான மதிப்பையும், பலன்களையும் கொண்டுவரும் விதமானோரை மட்டும் நாட்டில் குடியேற விடுவது என்ற அடிப்படையில் அரசாங்கம் கைகொள்ள இருக்கின்ற புதிய அணுகுமுறையின் அங்கமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரீன் கூறினார்.

பிரிட்டனுக்குள் புதிதாகக் குடியேற வருவோரின் வருடாந்த எண்ணிக்கையை லட்சங்கள் கணக்கிலிருந்து ஆயிரங்கள் கணக்கிற்கு குறைப்பது என்பதில் தீவிரமாக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

குடிவரவு விஷயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கவுள்ள புதிய அணுகுமுறை பற்றி கோடிகாட்டிய பிரிட்டிஷ் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன், பிரிட்டனுக்குள் வருவோரின் எண்ணிக்கை என்ற விஷயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துவதற்கு மாறாக எப்படிப்பட்ட தகுதி உடையவர்கள் நாட்டுக்குள் வருகிறார்கள் என்பதை ஆராய்ந்து ஆட்களை தேர்ந்தெடுத்து பின்னர் குடியேற அனுமதிப்பதற்கு வகை செய்ய அரசாங்கம் விரும்புவதாக குறிப்பிட்டார்.

“வெளிநாட்டிலிருந்து ஒருவர் வேலைபார்ப்பதற்கெனவோ, படிப்பதற்கெனவோ அல்லது மணம் முடித்தவருடன் வாழ்வதற்கெனவோ பிரிட்டனுக்குள் வரும்போது, பிரிட்டிஷ் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்யும் தகுதி அவரிடம் இருக்கிறததா, பிரிட்டனில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்னர்தான் அனுமதி வழங்க முடியும் என்ற உரிமை பிரிட்டனுக்கு உள்ளது.” என்றார் அமைச்சர் கிரீன்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்து படிக்கவோ வேலை பார்க்கவோ விரும்பும் ஆட்களுக்கு கூடுதலான நிபந்தனைகளை விதிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் அதனையும் தாண்டி, குறைந்த வருமானம் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகள் வெளிநாட்டில் பிறந்தவர்களை தங்கள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு சேர்ந்து வாழ்வதற்காக அவர்களை பிரிட்டனுக்குள் அழைத்து வருவதென்பதைத் தடுப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த யோசனை இறுதிசெய்யப்படும் பட்சத்தில் நிச்சயம் அதற்கு சட்டரீதியான சவால்கள் எழும் என்று தெரிகிறது.

ஆனால் பிரிட்டனுக்குள் குடியேற விரும்புவோரில் யார் யாரை அனுமதிப்பது என்பதை தேர்ந்தெடுக்கிற ஓர் நிலையில் அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்கு பிரிட்டிஷ் வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஏனென்றால் பிரிட்டனுக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக குறைக்கப்பட வேண்டும் என்பதையே இந்நாட்டில் பலர் விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

நன்றி – பிபிசி

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது. இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது. அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வரவேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75843
    • மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியாது இலங்கையுடன் ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு :20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந் நிலையில் இன்று கொழும்பு சரவணமுத்து கிரக்கெட் மைதானத்தில் ஆரம்பமான பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டரன் பிராவோ 88 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்களையும், சுனில் அம்ரிஸ் 41 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும், தக்ஷில டிசில்வா, கவிந்து நதீஷன், புலின தரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதன் பின்னர் 283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியனது 47.3 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் இப்போட்டிக்கு தலைமை தாங்கிய உபுல் தரங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 124 பந்துகளில் ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 64 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஷெல்டன் கொர்ட்ரல், ஹெய்டன் வேல்ஸ் மற்றும் பேபியன் அலென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கீமோ பவுல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/75845
    • இன்னொரு காத்தான்குடி உருவாகிறது. குண்டு வைத்தும் அவர்கள் ஆக வேண்டியதை சிங்களவனைக் கொண்டே செய்விக்கிறார்கள்.. நாங்கள்.. இருந்த கல்முனையையும் இழந்து கொண்டிருக்கிறோம்.  
    • ’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’ இலங்கையிலுள்ள மாணவர்கள் 1200 மணித்தியாலங்களை மாத்திரமே கற்றல் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, முழுமையாக 5 நாள்கள் மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்பகிறது என்றும் தெரிவித்தார். உலகின் மற்றைய நாடுகளுன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள மாணவர்களே கல்விக்காக குறைந்தளவு நேரத்தைதை ஒதுக்குவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறிருக்கும்போது பரீட்டைகளால் மாத்திரம் அவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றார். பின்லாந்து போன்று கல்வியில் உயர் மட்டத்தில் இருக்கும் நாடுகள் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் திறனை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ள அவர்,  அவ்வாறான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரடச-மறயல-மறறம-வணடம/175-245660
    • அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத் “எங்கள் சேவையில், உங்களையும் இணைத்திடுங்கள்” எனும் தொனிப்பொருளில், உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தால் கொடி வாரம்,  கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பீ. தர்ஷினியால் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பார்வையற்ற, பார்வைக் குறைபாடு உடையவர்களை இனங்கண்டு, அவர்களின் வாழ்வாதாரம், கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தி, சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை, மேற்படி அமைப்பு முன்னெடுத்து வருவதாக, உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் போன்ற பல்வேறு தேவைப்பாடு உடைய அங்கத்தவர்கள், இந்த அமைப்பின் ஊடாக வழங்கப்படும் அனைத்துச் சேவைகளையும் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றுத் தொடக்கம் இம்மாதம் 28ஆம் திகதி வரை இந்தக் கொடி வாரம்  அனுஷ்டிக்கப்பட உள்ளதாக, உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் டி.பேனாட், மாவட்டச் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் திருமதி  பிரகலா சுதர்சன், தலைமையக  சிரேஷ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/திருகோணமலை/எஙகள-சவயல-உஙகளயம-இணததடஙகள/75-245637