• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

தேநீரா? தேநீர் கோப்பையா?

Recommended Posts

தேநீரா? தேநீர் கோப்பையா?

ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்கையை பாடமாக சொல்லி கொடுத்து வாழ்ந்து வந்தார் ஜென்துறவி ஒருவர். அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர்.

அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பிபோக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென்துறவியோ எதுவுமே நடக்காதது போலப் புன்முறுவல் புரிந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன நிம்மதி இல்லை என குறைபட்டனர் . மீண்டும் அந்த ஜென்துறவி புன்முறுவல் புரிந்தார்.

அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். தேநீர் கோப்பையும் ஊற்றி குடிபதற்காக காலி கோப்பைகளையும் அவர்கள் முன்னே வைக்கப்பட்டன .

காலி கோப்பைகள் வைரம் பதித்தவை, தங்கம், வெள்ளியிலான அழகிய வேலைபாடு கொண்டவை, மண் மற்றும் கண்ணாடியில் செய்யப்பட்டவை என பல கோப்பைகள் இருந்தன. அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த கோப்பைகளை எடுத்துக் கொண்டனர்.

மீதமிருந்த மண் மற்றும் கண்ணாடி கோப்பைகளை கண்ட குரு சொன்னார்,

நீங்கள் அனைத்து உயர்ந்த ரக கோப்பைகளை எடுத்து கொண்டதுடன் அருகில் இருந்தவருடன் உங்கள் கோப்பையை ஒப்பிட்டு கொண்டீர்கள். தேநீர் அருந்துவது தான் நோக்கமே அன்றி கோப்பை அல்ல. வாழ்க்கை என்பது தேநீர் போன்றது. பதவி, அதிகாரம், பணம் போன்றவை கோப்பைகள் போன்றது. பல சமயம் நாம் கோப்பையில் தான் கவனத்தை வைக்கிறோம் ஆகையால் தான் நாம் வாழ்கையை இழக்கிறோம். கோப்பை தேவையே அன்றி முக்கியமல்ல. இனிமேலாவது கோப்பைக்கு முக்கியத்துவம் தராமல் தேநீருக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்றார்.

வந்த மாணவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வாழ்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய குருவிற்கு நன்றி கூறி விடை பெற்றனர் .

நன்றி : இளங்கதிர்

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

நன்றி பாட்டி

சிறு விடயமானாலும் காரம் பெரிது.

Share this post


Link to post
Share on other sites

எனது பதிப்பை மீள் இடுகை செய்தமைக்கு நன்றிகள்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்கையின் அர்த்தத்தைப் புரியவைக்க குரு கையாண்ட முறை அருமை.

நன்றிகள் தங்கள் இணைப்பிற்கு.

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா அக்கா! :)

Share this post


Link to post
Share on other sites

அழகான கருத்தை சொன்ன கதை

வாழ்க்கைக்கு மிக அவசியமானதும் கூட

Share this post


Link to post
Share on other sites

நன்றி அக்கா பகிர்வுக்கு.

Share this post


Link to post
Share on other sites

தேனீருக்கு நன்றிகள் நிலாமதி.....

Share this post


Link to post
Share on other sites

வாழ்கையின் எதார்த்தத்தை உணர்த்தும் கதை . நன்றி அக்கா

Share this post


Link to post
Share on other sites

கதை சிறிதானாலும் கருத்து மிக்கது. நல்ல சீடர்கள். தேநீர் கோப்பையைக் கொண்டுசெல்லவில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this