Jump to content

எனது ஆய்வு..!


Recommended Posts

வாழ்த்துக்கள் தோழர் நெடுக்ஸ் என் மச்சான் கூட தங்களை போல ஒரு ஆராய்ச்சியாளான்(சி.எல் .ஆர் .ஐ.)ஸ்டை பண்டுதான்... இதே பீல்டு போஸ்ட் டாக்ரேட் பண்ணி கொண்டுஇருக்கான்..

எனிவே நீங்கள்தான் இனி தமிழீழ அறிவியல் துறை அமைச்சர் அல்லது சுகாதாரதுறை அமைச்சர்...

உங்களின் மச்சானும் அவர் துறையில் சிறக்க வாழ்த்துக்கள். :)

தமிழீழத்தை எங்கள் மாவீரர்கள் போல.. ஆக்க அத்திவாரமாக இருப்போமே அன்றி.. ஆக்கிய தமிழீழத்தின் கதவுச் சேலையாக.. யன்னல் சேலையாக.. அலங்கரிக்க துணியமாட்டோம்..! அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • Replies 105
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரியேலியாவில் படித்த ஜி.எல் பிரீஸ் தாய் நாட்டுக்கு சிக்கல் என்றவுடன் சேவை செய்தது நினைவுக்கு வந்துட்டுது ..என்ன சேலையோ விடுங்கப்பா...

Link to post
Share on other sites

ஆஸ்திரியேலியாவில் படித்த ஜி.எல் பிரீஸ் தாய் நாட்டுக்கு சிக்கல் என்றவுடன் சேவை செய்தது நினைவுக்கு வந்துட்டுது ..என்ன சேலையோ விடுங்கப்பா...

ஜி. எல். பீரிஸ் அவுஸ்திரேலியாவில் படித்தது பற்றி எனக்குத் தெரியாது. இலங்கைப் பல்கலைகழகத்தில் மற்றும் ஒக்ஸ்பேட்டில்.. படித்தது மட்டும் தெரியும்..!

அவர் தாய் நாட்டுக்கு சேவை செய்யேல்ல.. பண்டாரநாயக்காவின் இனவாதக் கட்சியை வளர்க்க சேவை செய்யுறார். அவ்வளவே..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா :)

மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நெடுக்குதம்பி

கொழுப்பமிலம் என்று நீங்கள் குறிப்பிடுவது எதனை? உங்களுடைய பவர் பொயின்டை இங்கு இணைக்கலாமே.... பங்கசு வளர்க்கும் கருவியைக்காட்டிலும் அவை வளரும் நிலையைத்தான் பவர் பொயின்ட்டில் காட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிப்படியான மாற்றங்களைப் பதிவு செய்திருப்பீர்கள். நாங்கள் தெரிந்து கொண்டுவிடுவோம் என்ற பொறாமை கூடாது. :lol::icon_mrgreen:

சிரிக்க வேண்டாம் சிதம்பரசக்கரத்தை நான் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் :blink:

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்குதம்பி

கொழுப்பமிலம் என்று நீங்கள் குறிப்பிடுவது எதனை? உங்களுடைய பவர் பொயின்டை இங்கு இணைக்கலாமே.... பங்கசு வளர்க்கும் கருவியைக்காட்டிலும் அவை வளரும் நிலையைத்தான் பவர் பொயின்ட்டில் காட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிப்படியான மாற்றங்களைப் பதிவு செய்திருப்பீர்கள். நாங்கள் தெரிந்து கொண்டுவிடுவோம் என்ற பொறாமை கூடாது. :lol::icon_mrgreen:

சிரிக்க வேண்டாம் சிதம்பரசக்கரத்தை நான் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் :blink:

நன்றி அக்கா.

அந்த பவர்பொயின்ட் இப்ப எங்க இருக்கோ யார் அறிவார். யுனியை விட்டு போகும் போது யுனி ஒரு சிடி தரும். ஒருவேளை யுனி சேவரில் சேமித்திருந்தால்.. அது அடித்து தந்த சிடியில் இருக்கலாம். என்னிடம் யு எஸ் பியில் இருந்தது.. ஆனால் அது எங்க போச்சோ. இப்ப அதுக்குப் பிறகு பல யு எஸ் பிக்கள் கைமாறிவிட்டன. மேலும்.. பவர்பொயின்ட்டை வைச்சுக் கொண்டு ஒன்றும் செய்ய ஏலாது. பவர்பொயின்ட் எங்களுக்கான ஒரு சுருக்கமே அன்றி.. மற்றவர்கள் அதனைப் பார்த்து முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. நாங்கள் தான் விளங்கப்படுத்தனும்..! இதே விளங்கல்லைன்னா.. அது எப்படி..??! இருந்தாலும் தேடிக் கிடைச்சால் இணைக்கிறேன். சில விடயங்கள் இணைக்க முடியாது. காரணம் அவற்றிற்கு யுனியின் அனுமதி தேவை. இப்படியான ஆய்வுகளை திருடி.. பல மில்லியன் பெறுமதியான கண்டுபிடிப்புக்களையும் செய்ய முடியும் அல்லது விற்க முடியும்..! அதனால் தான் யுனி declaration forms தந்து.. ஆயிரத்தெட்டு கையெடுத்து வாங்கிறது. அவற்றை யார் முழுசா வாசிச்சா..! :icon_idea::)

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுஸ் .

உது ஏதோ பெரிய படிப்பு போல கிடக்கு.தொடருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஆய்வைத் தெளிவாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.. கேம்பிரிட்ஜ் பக்கம் வந்து சேருங்கள்!

Link to post
Share on other sites

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! :D

32220.png

அந்த இடப்பக்கத்துக் குழாயை வலப்பக்கமா சொருகி இருந்தால் பல விவாதங்களைத் தவிர்த்திருக்கலாம்..! :D

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுஸ் .

உது ஏதோ பெரிய படிப்பு போல கிடக்கு.தொடருங்கள்.

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா :)

மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் அண்ணா :)

எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லுறீங்களே தவிர நீங்கள் ஒருத்தரும் நீங்கள் செய்த ஆய்வுகளைப் பற்றிச் சொல்லுறீங்கள் இல்லையே. அவற்றைப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் நாம் தவற விட்ட பிழை விட்ட விடயங்களை அறிய திருத்த சந்தர்ப்பம் கிடைக்கலாம். இல்லையா. புதிய மாணவர்களுக்கு.. பெற்றோருக்கு வழிகாட்டும் இல்லையா..! பல்கலைக்கழகம் போகாத பெற்றோருக்கு அங்கு ஆராய்ச்சி என்ற பெயரில் என்ன நடக்குது பிள்ளை என்ன செய்ய வேண்டி இருக்குது என்பதாவது தெரிய வருமே..!! :):icon_idea:

Link to post
Share on other sites

நெடுக்ஸ் ஆய்வைத் தெளிவாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.. கேம்பிரிட்ஜ் பக்கம் வந்து சேருங்கள்!

அண்மையில் கேம்பிரிஷ் Trinity College பக்கம் வந்தனான். என்ன அமைதியான சூழல். எனக்கு ரெம்பப் பிடிச்சிருந்திச்சு. என்ன.. நேர்முகத் தேர்வே.. இவ்வளவு ஸ்ராங்கா இருக்கு.. கொலசிப் எல்லாம்.. எங்க வரப்போகுது. பார்ப்பம்..! அப்ப நீங்கள் அந்தப் பக்கமோ..???! :lol::icon_idea::rolleyes:

Link to post
Share on other sites

எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லுறீங்களே தவிர நீங்கள் ஒருத்தரும் நீங்கள் செய்த ஆய்வுகளைப் பற்றிச் சொல்லுறீங்கள் இல்லையே. அவற்றைப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் நாம் தவற விட்ட பிழை விட்ட விடயங்களை அறிய திருத்த சந்தர்ப்பம் கிடைக்கலாம். இல்லையா. புதிய மாணவர்களுக்கு.. பெற்றோருக்கு வழிகாட்டும் இல்லையா..! பல்கலைக்கழகம் போகாத பெற்றோருக்கு அங்கு ஆராய்ச்சி என்ற பெயரில் என்ன நடக்குது பிள்ளை என்ன செய்ய வேண்டி இருக்குது என்பதாவது தெரிய வருமே..!! :):icon_idea:

நாங்கள் செய்த ஆராய்ச்சியைச் சொல்லுறதெண்டால்.. scratch-head03-idea-animated-animation-smiley-emoticon-000416-large.gif

:lol: :lol: :lol:

Link to post
Share on other sites

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! :D

அந்த இடப்பக்கத்துக் குழாயை வலப்பக்கமா சொருகி இருந்தால் பல விவாதங்களைத் தவிர்த்திருக்கலாம்..! :D

நன்றி.

இதொன்றும் குண்டில்ல.. வெடிக்காது..! என்ன.. லீக் ஆகினால் தான் பிரச்சனை... ஆபத்தான நுண்கிருமிகள்.. சூழலுக்குள் புகுந்திடும். அப்புறம் எயிட்ஸ் மாதிரி... வைரஸ்களோட நீங்கள் தான் கஸ்டப்பட வேண்டி வரும்..! :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லுறீங்களே தவிர நீங்கள் ஒருத்தரும் நீங்கள் செய்த ஆய்வுகளைப் பற்றிச் சொல்லுறீங்கள் இல்லையே. அவற்றைப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் நாம் தவற விட்ட பிழை விட்ட விடயங்களை அறிய திருத்த சந்தர்ப்பம் கிடைக்கலாம். இல்லையா. புதிய மாணவர்களுக்கு.. பெற்றோருக்கு வழிகாட்டும் இல்லையா..! பல்கலைக்கழகம் போகாத பெற்றோருக்கு அங்கு ஆராய்ச்சி என்ற பெயரில் என்ன நடக்குது பிள்ளை என்ன செய்ய வேண்டி இருக்குது என்பதாவது தெரிய வருமே..!! :):icon_idea:

நாங்கள் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறம்? போட்ட படமே சிதம்பரத்திலை பேய்பார்த்தமாதிரி கிடக்கு :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் நெடுக்கர்.

உங்கள் ஆய்வுகளை பகிரங்கமாக பகிர்ந்து கொள்வது பின்விளைவுகளை (உங்களுக்கு) உண்டாக்காதா?

Link to post
Share on other sites

உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் நெடுக்கர்.

உங்கள் ஆய்வுகளை பகிரங்கமாக பகிர்ந்து கொள்வது பின்விளைவுகளை (உங்களுக்கு) உண்டாக்காதா?

நன்றி.

எழுத முன் யோசிச்சனான். பிரச்சனைகள் ஏதேனும் கிளம்புமோ என்று. அதனால் தான் நிறைய விடயங்களை தவிர்த்துக் கொண்டு விட்டேன்.

நான் செய்முறைகள் (protocols) ஒன்றையும் எழுதல்லையே. மற்றும் ஆய்வின் தெளிவான முடிவையும் எழுதவில்லை. ஆனால்.. ஒரு சின்ன விடயம்.. வலுவான hypothesis question உருவாக இடமளிச்சிருக்கிறன். ஆனால் அதை எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்..! விசயம் தெரிந்தவர்கள் இதனை வைச்சு.. ஒரு நல்ல ஆராய்ச்சியை நோக்கி நகரலாமே தவிர... அப்படியே பின்பற்ற வாய்ப்பில்லை. மேலும் படங்கள் எதுவும் எனது யுனியில் இருந்து எடுத்த படங்கள் அல்ல. அவற்றை இணைப்பது தான் தவறு. அவற்றிற்கு ஒத்த படங்களை இணைப்பது தவறல்ல. அனுமதி இன்றி.. ஆராய்ச்சிக் கட்டுரையை அப்படியே இணைப்பது தான் குற்றம். இது ஆய்வுசாலையில் என் அனுபவத்தை சுருங்கப் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவ்வளவே..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நெடுக்கு, உங்களின் நம்பிகையும் & முயற்ச்சியும் CEO ஆக வருவதற்கு உதவி புரியும்.

ஆய்வுக் கட்டுரை எழுத முதல் மனதில் தோற்றும் எல்லாவற்றையும் குறிப்புகளாக தொகுத்துவிட்டு, அவற்றை பிறகு கட்டுரை எழுதும் போது பாவிக்க வசதி, அத்துடன் நாம் எழுதிய கட்டுரையை எங்கள் துறையில் இல்லாத 2 / 3 பேரிடம் வாசிக்க கொடுத்தால் அவர்களின் கருத்துகள் வலுவுள்ளதாக இருக்கும். அத்துடன் எழுதி முடித்த கட்டுரையை 3/4 நாட்களின் பின் வாசித்து பார்த்தால் நாம் விட்ட பிழைகள் நமக்கே சிரிப்பா இருக்கும், கட்டுரையில் அலம்பாமல் பிற் சேற்கையில் கனக்க விடயங்களை சேர்க்கலாம், புள்ளி விபர வரை படங்கள் இணைத்தால் கட்டுரைக்கு மெரு கூட்டும்.

Link to post
Share on other sites

நாங்கள் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறம்? போட்ட படமே சிதம்பரத்திலை பேய்பார்த்தமாதிரி கிடக்கு :(

கு.சாண்ணா உங்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் பாடப்பரப்புக்குள் நுழையாமல் நான் இருந்தாலும் எனக்கும் எதுவும் தெரியப் போறதில்லை. எனக்கு இங்கு தெரிந்தவை.. பிற துறைகளில் தெரியாது.

ஆகவே தான் பல்கலைப் படிப்பை வைச்சுக் கொண்டு அறிவுசீவி என்று பீற்றிக்கிறவை தப்பான வழியில மக்களை வழி நடத்தினம். அவர்களுக்கு அந்தந்த பாடப்பரப்பில் ஓரளவு ஆழமான அறிவு இருக்குமே அன்றி.. அவர்களை முழுப் புத்திசீவிகள் என்று சொல்வதில் ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இதனை எல்லா மக்களும் அறிய வேண்டின்.. இப்படியான பதிவுகளூடு மூடுமந்திரமாக பல்கலைக்கழகங்களில் நடக்கும் விடயங்கள் மக்களை எளிமையாக வந்து சேர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தெரிய வரும்.. புத்திசீவிகள் என்ற போர்வையில் ஊரை ஏய்ப்பவர்களைப் பற்றியும்..! அதற்காகவாவது இது உதவும்..! உண்மையில் நீங்கள் அந்த உபகரணங்களைப் பற்றி ஆழமாக அறிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தப் பாடப்பரப்பில் உள்ளவரின் வேலையே அது..! ஆனால் நீங்கள் இவற்றின் இருப்புப் பற்றி தெரிந்து கொள்வதில் தப்பில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட உதவும். :)

வாழ்த்துகள் நெடுக்கு, உங்களின் நம்பிகையும் & முயற்ச்சியும் CEO ஆக வருவதற்கு உதவி புரியும்.

ஆய்வுக் கட்டுரை எழுத முதல் மனதில் தோற்றும் எல்லாவற்றையும் குறிப்புகளாக தொகுத்துவிட்டு, அவற்றை பிறகு கட்டுரை எழுதும் போது பாவிக்க வசதி, அத்துடன் நாம் எழுதிய கட்டுரையை எங்கள் துறையில் இல்லாத 2 / 3 பேரிடம் வாசிக்க கொடுத்தால் அவர்களின் கருத்துகள் வலுவுள்ளதாக இருக்கும். அத்துடன் எழுதி முடித்த கட்டுரையை 3/4 நாட்களின் பின் வாசித்து பார்த்தால் நாம் விட்ட பிழைகள் நமக்கே சிரிப்பா இருக்கும், கட்டுரையில் அலம்பாமல் பிற் சேற்கையில் கனக்க விடயங்களை சேர்க்கலாம், புள்ளி விபர வரை படங்கள் இணைத்தால் கட்டுரைக்கு மெரு கூட்டும்.

நன்றி.

ஆய்வுக் கட்டுரை வரைவது தொடர்பான உங்கள் ஆலோசனை பலருக்கு உதவும்.

உண்மை தான் இன்று என் ஆய்வுக்கட்டுரையை ஒரு தேவைக்காக மீள வாசிச்சன். அதன் பிரதிபலிப்பே இந்தப் பதிவு. அதை வாசிக்கும் போது சில இடங்களில் இதை நானா எழுதினன் என்று தோன்றிச்சு.. சில இடங்களில் இப்படியும் எழுதி இருக்கனே என்றும் தோன்றிச்சுது. என்ன மேற்பார்வையாளரும் சிலதை கண்டுக்காமலே விட்டிருக்கிறார் போல..! அவருக்கும் என்ன பிசியோ..! :lol::D:icon_idea:

Link to post
Share on other sites

Research Archive spacer.gifLAND-ra.jpg Search the Archive

Advanced Search Browse arrow.gifCommunities

& Collections arrow.gifTitle arrow.gifAuthor arrow.gifSubject arrow.gifDate Log in to arrow.gifMy Archive arrow.gifReceive email

updates arrow.gifEdit Profile arrow.gifHome arrow.gifFAQ arrow.gifStatistics arrow.gifHelp arrow.gifContact/Feedback arrow.gifFind an Expert Powered by

DSpace_logo.gif

Lincoln University > Research Archive > Theses and Dissertations > Theses and Dissertations with Restricted Access > Cite or link to this item using this URL: http://hdl.handle.net/10182/1502

Full metadata record

DC Field Value Language dc.contributor.author Rabeendran, Nimal - dc.date.accessioned 2010-03-17T02:19:04Z - dc.date.available 2010-03-17T02:19:04Z - dc.date.issued 2000 - dc.identifier.uri http://hdl.handle.net/10182/1502 - dc.description.abstract Sixty three fungal isolates, obtained from the local region (Canterbury, New Zealand), were tested for their ability to inhibit mycelial growth and sclerotial production of Sclerotinia sclerotiorum using a cabbage petiole bioassay. Eight isolates (Trichoderma longipile 6Sr4, 8Sr4-2, 3Sr4-2, SIBYG; Trichoderma tomentosum 5Sr2-2; Trichoderma virens GV4, B19 and Gliocladium roseum 9Sr4) significantly reduced petiole infection (>75%) and completely prevented sclerotial production. This is the first report of biocontrol activity by T. longipile and T. tomentosum in New Zealand. Nine fungal isolates (the eight fungal isolates described above and Coniothyrium minitans A69) were evaluated in three cabbage pot assays during 1997-98 to determine their ability to parasitize or inhibit mycelia and/ or sclerotia of S. sclerotiorum in a non-sterile environment. Two isolates: C. minitans A69 and T. longipile 6Sr4 significantly reduced apothecial production compared to the pathogen control and were not phytotoxic or pathogenic to cabbage. The same nine fungal isolates were applied as conidial suspensions (10⁶ conidia mL⁻¹) to sclerotia of S. sclerotiorum in a further cabbage pot assay and a sclerotial parasitism assay. Coniothyrium minitans A69 significantly reduced apothecial production, ascosporic infection and reduced the viability of sclerotia in the absence and presence of the host plant. Trichoderma virens B19 significantly reduced apothecial production and viability of sclerotia in the sclerotial parasitism assay. Trichoderma longipile isolates SIBYG and 3Sr4-2 significantly reduced apothecial production. In the first lettuce field trial, the nine fungal isolates were evaluated for their biocontrol activity by incorporating conidiospore suspensions into the transplant potting mix (10⁵ -10⁶ conidia g⁻¹ potting mix) and planting lettuce transplants into a Sclerotinia minor infested field site during the 1997-98 growing season. Two isolates of T. longipile (6Sr4 and SIBYG) and T. virens GV4 significantly reduced disease by 30% and C. minitans A69 and T. longipile 8Sr4-2 reduced disease by 50% under conditions of high disease pressure (100% in untreated plots). Coniothyrium minitans A69, T. virens B19 and T. longipile 6Sr4 were selected for further field evaluation against S. minor on lettuce in a second field trial and S. sclerotiorum on cabbage (two trials) and bean (one trial) during the 1998-99 growing season. In the second lettuce trial, C. minitans A69 and T. longipile 6Sr4 applied to the transplant potting mix (10⁶ conidia g⁻¹ potting mix) significantly reduced S. minor disease by 62 and 44%, respectively and increased marketable yield compared to the untreated control. Both isolates were shown to colonise the rhizosphere at 10⁴-10⁵ and 10⁶ - 10⁷ cfu g⁻¹ dry weight of lettuce root, respectively. Application of C. minitans A69 and T. longipile 6Sr4 in maizemeal-perlite as a soil amendment just before planting (0.8 L m⁻² plot) significantly reduced disease by 40 and 29%, respectively from the untreated control (77% disease). Trichoderma longipile 6Sr4 in maizemeal-perlite also gave a significant increase in yield compared to the control. Both fungi were shown to survive in the soil over the period of the trial at 10⁴-10⁵ and 10⁶ cfu g⁻¹ soil, respectively and effectively colonised the rhizosphere at 10⁴-10⁵ and 10⁶_10⁸ cfu g⁻¹ dry weight of lettuce root, respectively. Commercial formulations of C. minitans (C. Mins A69 WG and Contans WG [Prophyta product containing a German isolate]), when incorporated into the soil (0.8 g m⁻²) 42 days prior to planting, gave low levels of disease control and their survival in soil and root colonisation was low. In the first S. Sclerotiorum/cabbage trial, C. minitans A69 and T. longipile 6Sr4, incorporated into the transplant potting mix, significantly reduced infection by 46-52%; C. minitans A69, T. virens B19 and T. longipile 6Sr4, applied in maizemeal-perlite as a soil amendment at planting, reduced S. sclerotiorum infection by 36-48% under medium-high disease pressure (35% disease in untreated plot). In the second cabbage trial, there was a trend of disease reduction with the commercial formulation of C. minitans A69 and T. longipile 6Sr4 applied in maizemeal-perlite. However, there was high variation in infection recorded for these treatments and this resulted in no significant difference from the untreated control. In the S. sclerotiorum/bean trial, the commercial formulations of C. minitans (C. Mins A69 WG and Contans WG), T. virens B19 in maizemeal-perlite applied 42 days prior to planting, and C. minitans A69 in maizemeal-perlite applied as a soil amendment at planting significantly reduced apothecial production by 40-60% and subsequent S. sclerotiorum infection of bean by 24-32% under conditions of high disease pressure (65% disease in untreated plots). Coniothyrium minitans A69, C. Mins A69 WG and T. Virens B19 in maizemeal-perlite also significantly reduced disease severity indices of stem (38- 42%) and pod tissues (37-40%) compared to the untreated control. In a complementary series of experiments, the eight Trichoderma isolates selected from the cabbage petiole assay, were evaluated for their effect on various plant growth parameters (viz. leaf area, dry weights of shoot and root) of cabbage seedlings in three glasshouse trials during the period 1997-98. Cabbage transplants treated with T. Longipile 6Sr4 and 3Sr4-2 and T. tomentosum 5Sr2-2 showed significant increase in leaf area (58- 71%), and dry weights of shoot (91-102%) and root (100-158%) at 28 days after transplanting. This growth promotion effect was transient and was only observed when plants were grown under sub-optimal but not optimal conditions. The results of this study highlight the potential of C. mini tans A69 and T. virens B19 as effective biocontrol agents against S. sclerotiorum and C. minitans A69 and T. Longipile 6Sr4 as effective agents against S. minor. Coniothyrium minitans A69 acted as a mycelia and sclerotial parasite, suppressed apothecial production and subsequently reduced disease caused by S. sclerotiorum whereas T. virens B19 acted as a sclerotial parasite, contaminated apothecia and inhibited ascospore release thereby reducing infection by S. sclerotiorum. Trichoderma longipile 6Sr4 exhibited mycelial parasitism and possibly localised antibiosis against S. minor whereas C. minitans A69 showed both mycelial and sclerotial parasitism and possibly localised antibiosis against S. minor. Further studies are required to determine the exact mechanism of action operating in the field. Optimization of application methods and examination of combinations of treatments is required before an effective, practical and economical biocontrol system for Sclerotinia diseases can be realized. en dc.language.iso en en dc.publisher Lincoln University en dc.rights.uri http://purl.org/net/lulib/thesisrights - dc.subject biological control en dc.subject Sclerotinia sclerotiorum en dc.subject plant pathogens en dc.subject vegetables en dc.subject pathogen control en dc.subject Trichoderma longipile en dc.subject fungus en dc.title Biological control of Sclerotina diseases of vegetables en dc.type Thesis en thesis.degree.grantor Lincoln University en thesis.degree.level Doctoral en thesis.degree.name Doctor of Philosophy en dc.subject.marsden Fields of Research::300000 Agricultural, Veterinary and Environmental Sciences::300200 Crop and Pasture Production::300204 Plant protection (pests, diseases and weeds) en dc.subject.marsden Fields of Research::270000 Biological Sciences::270400 Botany::270403 Plant pathology en dc.subject.marsden Fields of Research::270000 Biological Sciences::270300 Microbiology::270301 Bacteriology en lu.thesis.supervisor Stewart, Alison - lu.thesis.supervisor Moot, Derrick - lu.thesis.supervisor Jones, Eirian - lu.contributor.unit Department of Ecology en dc.rights.accessRights Digital thesis can be viewed by current staff and students of Lincoln University only. Print copy available for reading in Lincoln University Library. May be available through inter-library loan. en Appears in Collections: Department of Ecology

Theses and Dissertations with Restricted Access

இது பங்கசு பற்றிய ஒரு ஆராய்சி.எனக்கு தெரிந்தவர் ஒருவர் செய்தது .

Link to post
Share on other sites

நெடுக்ஸ், தொடந்து கல்வியை தொடர வாழ்த்துக்கள்.

நன்றி நுணா அண்ணா. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆய்வுப் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ். நீங்கள் தொடரும் கல்வியில் மென்மேலும் வெற்றி பெற்று இளைய சமுதாயத்திற்கு அதனைப் பகிர்ந்து கொள்ள மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :)

உங்களைப் போல முதுமாணிப் பட்டம் எல்லாம் பெறுவதற்குரிய ஆய்வுகள் எதுவும் செய்ததில்லை, இருப்பினும் ஒரு சின்ன (இப்ப அதை சின்னன் என்று சொல்கிறேன், ஆனால் அந்த independent research project -ஐ செய்து முடித்து சித்தியடையும் வரை நான் பட்ட அவஸ்த்தை எனக்கு மட்டும் தான் தெரியும்.. ^_^) பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகும் முன்பு ஆயத்தப் படுத்தும் ஆண்டில் ஒரு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. வருடத் தொடக்கத்திலையே அறிவித்து இருந்தாலும் இரண்டாவது தவணையில் தான் ஆரம்பித்தார்கள். ethnic discrimination in classrooms என்ற தலைப்போடு 5000 - 5500 வாத்தைக்களுக்குள் அடக்க வேண்டி இருந்தது. இப்படி ஒரு தலைப்போ அல்லது இவ்வளவு வார்த்தைகள் வைத்தோ நான் எதுவும் இதற்கு முன்பு எழுதியதில்லை. நான் இருந்த பகுதி நூலகம் முழுதும் child psychology, prejudice and discrimination/ racism சம்பந்தமாக புத்தகங்கள் தேடியே பாதி நேரம் போனது. இந்த ஆய்விற்காக 2 பாடசாலைகளில் அதிபரின் அனுமதியோடு பெற்றோருக்கு questionnaire கொடுத்து, அவரிகளின் பதிலில் இருந்தும் சில தரவுகளையும் அடக்கி இருந்தேன். கல்லூரியில் உள்ள இணைய வசதி மட்டுமே அந்த நேரம் இருந்தது. அதனால் பெரும்பாலான நேரங்களில் கல்லூரியிலேயே சென்றது... தொடக்கத்தில் எப்படி ஆராம்பிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன், எழுத ஆரம்பித்ததும் கொடுக்கப் பட்ட வார்த்தையின் எல்லை தாண்டியதால் நிறைய இடத்தில் வெட்ட வேண்டி இருந்தது...

இரண்டு வெள்ளை இனத்து ஆசிரியர்கள் தான் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள். இருவருமே நான் எடுத்தத் தலைப்பைப் பார்த்து ஆரம்பத்தில் புருவத்தைத் உயர்த்தினாலும் தேவையான ஆதரவு தந்து உதவினார்கள் (அடிக்கடி திருத்தங்கள் செய்து தத்தும் சில ஆலோசனைகள்/ அபிப்பிராயங்கள் தந்தும் உதவினார்கள்) மூன்றாவது மேற்பார்வையாளர் தான் கடைசியாக பார்த்து புள்ளிகள் போட்டவர். 'இதை பெயில் ஆக்கினால் அங்கயே இருந்து திரும்ப தங்கட உயிரை வாங்கும்' என்று நினைத்து பாசாக்கி விட்டார்களோ அல்லது 'ஏதோ கஸ்ரப்பட்டு புலம்பி இருக்கு' என்று நினைத்து பாசாக்கி விட்டார்களோ தெரியாது... :icon_mrgreen: (பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்தும், தொடர முடியாமல் போனது துரதிஸ்ரம் :()

இந்த ஆய்விற்கு power-point presentation செய்ய வேண்டி இருக்கவில்லை, ஆனால் child psychology சம்பந்தமாக ஒரு 15 நிமிட presentation செய்ய வேண்டி இருந்தது. வகுப்பில் 18 பேரில் 12 பேர் வெள்ளைகள்... presentation கொடுப்பதற்கு முதலில் யாருமே முன்வரவில்லை. எல்லோரும் எழுத்தில் கொடுக்கிறோம் என்று சொல்லிப் பார்த்தார்கள், ஆசிரியர்கள் விடுவதாக இருக்கவில்லை... வேறு வழி இல்லாது அதையும் செய்தது... என்ன தான் ஆயத்தப் படுத்தினாலும் எங்க மேல spot light வந்து நின்றால் ஒரு பதட்டம் இருக்கும் தானே... :blink: (இதில வேற பின் வரிசையில் இருக்கிற ஒரு நாதாரி தனக்குக் கேட்க இல்லை என்று சொல்லும்... அந்த நேரத்தில நினைவில இருகிறதும் மறந்து போகும் நிலை... :mellow:) வீட்டில்ல நண்பர்கள்/ குடும்பத்தினர் முன்பு (நாம் சொல்லத் தொடங்கும் போது அவர்கள் சிரிக்காமல் கேட்பவர்களாக இருக்க வேண்டும்) சத்தம் போட்டு சொல்லி பார்த்து ஆயத்தப் படுத்துவது நல்லது. அதோடு power-point தேவையானதைச் செய்தாலும் கையில் flashcards வைத்திருப்பது நல்லது என்றும் சிலருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

தந்தையாரின் அன்றைய ஆலோசனை:

-தனியா இருந்தாலும் சத்தம் போட்டு முழுக்க சொல்லிப் பார்க்க வேணும்.

-eye contact இருக்க வேணும்.

-ஒரே இடத்தில் நின்று கதைக்காமல் மெதுவாக இரண்டு மூன்று அடிகள் நடந்து கதைக்கலாம்.

-கடைசியில் கேள்வி நேரத்தில் யாரும் கேள்வி கேட்டால், 'I am glad you asked me that..' என்ற தொனியில் பதில் சொல்ல ஆரம்பிக்கலாம்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.

என் வாழ்த்துக்களுக்கு என்றைக்குமே பஞ்சம் இராது நெடுக்ஸ். :) :)

மேற்கொண்டு படிக்கிறதென்றால் டிகிரிகளுக்கிடையில கன இடைவெளி விடவேண்டாம். சொந்த அநுபவம். கொஞ்ச காலத்துக்கு முன்னம் ஒரு அலுவலா யூனிக்கும் போனன்.

உள்ளிடவே பிடிக்கேல்ல. :huh:

.

Link to post
Share on other sites

நன்றி குட்டி.

நான் நினைக்கிறேன் நீங்கள் BTEC பல்கலைக்கழக நுழைவு தகுதிக்கான மினி புராஜெக்ட் பற்றியே கதைச்சிருக்கீங்கன்னு. உண்மையில் அது பல்கலைக்கழக பிரதான புராஜெக்ட்டுக்கு நல்ல அடிப்படை. நீங்கள் உங்கள் பல்கலைக்கழக கல்வியை அப்போ தொடர முடியாமல் போனது கவலை. ஆனால் இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவே நான் உணர்கிறேன். எனவே அதை செய்து முடிக்க வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும்.. உங்கள் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி. குறிப்பாக பிரசென்ரேசன் பற்றிய குறிப்புக்கள் மிகப் பயனுள்ளனவாக உள்ளன. :)

என் வாழ்த்துக்களுக்கு என்றைக்குமே பஞ்சம் இராது நெடுக்ஸ். :) :)

மேற்கொண்டு படிக்கிறதென்றால் டிகிரிகளுக்கிடையில கன இடைவெளி விடவேண்டாம். சொந்த அநுபவம். கொஞ்ச காலத்துக்கு முன்னம் ஒரு அலுவலா யூனிக்கும் போனன்.

உள்ளிடவே பிடிக்கேல்ல. :huh:

நன்றி ஈசன்.

நீங்கள் சொல்வது உண்மை. அதனால் தான் நான் கல்வியில் இடைவெளி விடுவதில்லை. ஆனாலும் எனக்கு இயல்பாகவே கற்றதை அவ்வளவு இலகுவில் மறக்கும் இயல்பும் இல்லை. எதையும் நாம் பூரணமாக விளங்கிச் செய்தால் அவை மறந்து போக மாட்டா.. என்பது எனது அனுபவத்தில் உணர்ந்தது..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல முதுமாணிப் பட்டம் எல்லாம் பெறுவதற்குரிய ஆய்வுகள் எதுவும் செய்ததில்லை, இருப்பினும் ஒரு சின்ன (இப்ப அதை சின்னன் என்று சொல்கிறேன், ஆனால் அந்த independent research project -ஐ செய்து முடித்து சித்தியடையும் வரை நான் பட்ட அவஸ்த்தை எனக்கு மட்டும் தான் தெரியும்.. ^_^)

நான் HNC படிக்கும் பொழுது ஒரு Project செய்து முடிக்க சரியாகக் கஷ்டப்பட்டேன். அதை வாசித்த விரிவுரையாளர் ரெம்ப அவஸ்தைப்பட்டுப் போனார். :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.