Jump to content

எனது ஆய்வு..!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐந்து ஆண்டுகள் கலாநிதிப் பட்டத்திற்காகச் செய்த ஆய்வை இங்கே எழுத முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் விஞ்ஞானச் சஞ்சிகைகளுக்கு சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய அனுபவமும் சக விஞ்ஞானிகள் பிரசுரத்திற்குச் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை சில சஞ்சிகைகளுக்காக மதிப்பீடு(peer review) செய்யும் அனுபவமும் இங்கே ஆய்வுக் கட்டுரை எழுத முயலும் மாணவர்களுக்கு உதவும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்:

முதலில் எழுதுபவனாக:

1. (hopping) துள்ளித் துள்ளி எழுதுங்கோ! நான் ஒரு அத்தியாயத்தையோ கட்டுரையையோ எழுதும் போது செய்யும் முதல் வேலை அதன் பகுதிகளைத் தலைப்பிட்டுக் கொள்வது தான். பிறகு அறிமுகம், செயன் முறை, என்று மாறி மாறி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கங்களை நகர்த்துவேன். என் அனுபவப் படி 35 பக்கக் கட்டுரையில் முதல் 15 பக்கம் நிரப்புவது தான் கஷ்டம்-மிகுதி 20 பக்கங்கள் சட சடவென்று நகரும்-இது ஒரு மாயாஜாலம்!

2. எழுத ஆரம்பிப்பது தான் கடினம். இந்தச் சோம்பலை மீற ஒரே வழி உடனே ஆரம்பித்து சில பக்கங்களை நிரப்பி விடுவது தான். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய் நிரப்ப வேண்டியது தான்.

3. ஆய்வு முடிவுகளை எப்போதும் ஒரு பவர் பொயின்ற் வடிவிலோ அல்லது பிரிண்ட் செய்தோ எழுதும் இடத்தில் வைத்துக் கொள்வது உங்கள் செயல் திறனில் பெரிய வித்தியாசத்தைத் தரும்.

4. பக்கத்தில் ஒரு பென்சிலும் நோட்டும் வைத்து எழுதும் மேற்கோள்களின் உசாத்துணையை குறித்து வைத்துக் கொண்டால் உசாத்துணை போடுவது மிக இலகுவாகி விடும்-இல்லையேல் அதுவே இரண்டு நாள் வேலையாகி விடும் (இப்போது write N cite வசதிகள் உள்ளன-பென்சில் பேப்பர் தேவையில்லை)

5. திடீரென்று ஒரு நாள் உங்களால் ஒரு வரி கூட நகர முடியாது போய் விடும். இதை writer's block என்பார்கள். வேறு ஏதாவது வாசிப்பது போன்ற வேலையில் மனத்தைச் செலுத்தலாம். நான் அனேகமாக எழுதுவதை விட்டு விட்டு உடல் உழைப்புடன் சம்பந்தப் பட்ட வேலையேதும் செய்வேன்.

ஒரு மதிப்பீட்டாளனாக:

ஒரு ஆய்வுக் கட்டுரையை மதிப்பீடு செய்யும் போது எரிச்சல் தரும் சில விடயங்கள்:

1. சொன்னதையே பல தடவை சொல்வது

2. தெளிவான எடு கோள்/இலக்கு வசனத்தில் இல்லாமை

3. வழக்கமாகப் பாவிக்கும் விஞ்ஞானச் சொற்களில் (conventions) தவறுகள்

4. சக ஆய்வாளர் செய்திருக்கக் கூடிய சம்பந்தப் பட்ட ஆய்வை வேண்டுமென்றே மறைத்திருத்தல்

5. ஆய்வு முடிவுகளை அளவுக்கு மிஞ்சி வியாக்கியானம் (interpret) செய்து பாரிய அறிக்கை விடுதல்

6. எழுத்துப் பிழைகள்

இவற்றை நான் சொல்லக் காரணம், ஒரு விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரிக்கும் தரத்தில் உங்கள் எந்த ஆய்வறிக்கையையும் எழுதுவீர்களானால் அது நிச்சயம் யாரையும் கவரக் கூடிய உயர் தரமுடையதாக அமையும்.

Link to post
Share on other sites
 • Replies 105
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

ஆய்வு என்டால் மர்ர ஆகளுக்கு விளன்காத மாதிரி எழுதிற தானே ? நானும் ஒரு ஆய்வாளர்தானப்பா :icon_idea:

உங்களைப் போன்ற ஒருவரைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். தகவலுக்கும்.. இதில் கலந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

என்னுடைய வினவல்.. ஒரு இறுதி வரைபு வரை வந்துவிட்ட ஆய்வறிக்கைக்கு (முன்னரும் காண்பிக்கப்பட்டு.. feedbacks பெறப்பட்டிருக்கிறது.) ஒரு பேராசிரியர் இறுதி feedback தரும் போது..aspect ம் conclusion ம் மாற்றப்பட்டால் நன்று என்று குறிப்பிட்டு தந்ததை.. இன்னொரு பேராரிசியர்.. எல்லாம் தவறு.. திருப்பி எழுது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவர்.. appeal panel க்கு கொண்டு போய் இந்த முடிவு குறித்து challenge பண்ணி வெல்ல முடியுமா..??!

சித்தியடைய தேவையான புள்ளிகள் 50% என்றிருக்கு.. முன்னையவர் இறுதி வரைபுக்கு 41% கொடுத்திருக்கிறார். மற்றவர் புள்ளி எதுவும் கொடுக்காமலே.. திருப்பி எழுது என்று சொல்லி இருக்கிறார். 3 ஆண்டுகளாக செய்த ஆய்வை திருப்பி எழுதிறது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அந்த மாணவர் உண்மையில் நொந்து போனார்..! தன் மேலான காழ்புணர்ச்சியில் தான் அப்படிச் செய்வதாகச் சொன்னார்..!

இது ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. குறிப்பாக.. பி எச் டி மற்றும் MPhil/ MSc research பட்டம் பெற ஆய்வுகளும் அறிக்கையும் முக்கியம். அந்த வகையில் எம்மோடு இருந்த ஒருவருக்கு இப்படி நடந்தது. அவர் ஏலவே அமெரிக்காவில் MS பட்டம் பெற்றவர். இங்கு.. PhD செய்தவர்..!

மேலும்.. பேராசிரியர்கள் விடும் எவ்வாறான தவறுகளோடு மாணவர்கள்.. appeal panel க்கு தமது ஆய்வைக் கொண்டு செல்வது நல்லது என்பதையும் பொதுவாக சுட்டிக்காட்டினீர்கள் என்றால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சித்தியை அடையுறதுகு புள்ளி வேற போடுறான்களா இப்ப ? :unsure: 50என்டால் 100கோ 1000கோ எதுகு 50 ? :icon_idea: ரொம்ப மக்கு பையனோ

தேர்தல் ஆனையாளரை அடக்கிறதுகும் மேல ஒருத்தன் இருகான் என்டு அறியும்போது எவ்ளோ புளுகமாய் இருக்கு :icon_mrgreen: பேராசிரியர்களே இன்த பெடியன்களே இப்பிடிதான் ஒழுன்கா படிகிறது இல்ல எழுதுறது இல்ல சும்மா எதையாசும் கிறுக்கிபோட்டு சித்தியை கேக்கிறது :D இவன்கள நல்லா முறிச்சு வாங்குன்கோ :icon_idea:

ஐயா தேவையில்லாமல் உங்கட கற்பனைகளை இதுக்குள்ள சேர்க்காமல்.. நாங்கள் எங்களையே பற்றி மட்டும் சிந்திக்காம எங்களை சுற்றி உள்ளவங்களுக்கும் வரும் பிரச்சனைகளை ஆராயனும்... என்ற அடிப்படையில் பொதுவில் வைக்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க அனுமதிப்பது நன்று.

அப்போதுதான் எமக்கும் பிறர்க்கும் அப்படியான நிலைகள் ஒருவேளை எதிர்காலத்தில் வருமானால் தீர்வுகளை இலகுவாக விரைந்து தேட முடியும்.

நான் கண்டிருக்கிறேன்.. எத்தனையோ.. PhD மாணவர்கள் படும் சிரமத்தை. இதனை வெளியில் இருந்து விடுப்புப் பார்க்கிறவை உணர முடியாது. நாங்களாவது ஒரு வருடத்தில் படிச்சு முடிக்கிறம். அவர்கள் 3 வருடத்தை ஆராய்ச்சிக்காக கொட்டி.. இறுதியில் ஆய்வறிக்கையில் குழறுபடி என்பது அவர்களின் கஸ்டத்தை அறிந்த எந்த மனிதனாலும் அதை ஏற்றுக் கொள்வது கடினமாகவே இருக்கும்..! அதைப் புரிந்து கொண்டு.. இதற்கு விடயம் அறிந்தவர்கள் பதிலளிக்க குழப்படி செய்யாமல் குறுக்க புகுந்து இடையூறு செய்யாமல்.. இடமளிக்க வேண்டும்..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் ஆராட்சியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள். விரைவில் கலாநிதியாகவுள்ள நெடுக்காலபோவான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

யாழ்கவி அக்காவும் எதோ ஆராட்சி செய்வதாகக் கேள்விப்பட்டேன். யாழில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது ஆராட்சி கொஞ்சம் நெடுக்கரோட ஒத்திருக்கு. கலங்களுக்கான கணித மாதிரிச் சட்டத்தை வடிவமைத்தலும் அது எவ்வாறு இரசாயன எந்திரவியலில் செல்வாக்கு செலுத்தும் என்பது தொடர்பான விடய ஆய்வு..

எனக்கு கடைசி நேரத்தில வந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக என்னால் அவ்வாராய்ச்சியில் முழு மனதோடு ஈடுபட முடியவில்லை. இறுதியாக 53% அராய்ச்சி கட்டுரைக்கு கிடைத்து சித்தி கிடைத்தது.இப்ப மேல் படிப்புக்கு முயற்சி செய்கிறேன். எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு கிடைத்த குறைந்த மதிப்பெண்கள் காரணமாக முனைவர் பட்டத்துக்கான அனுமதி பெறுவது சிரமமாக உள்ளது..

பயனுள தகவல்கள் ஜஷ்டின் மற்றும் நெடுக்கு. நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்!

உங்களின் ஆராட்சியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள். விரைவில் கலாநிதியாகவுள்ள நெடுக்காலபோவான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

யாழ்கவி அக்காவும் எதோ ஆராட்சி செய்வதாகக் கேள்விப்பட்டேன். யாழில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

நானும் எனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆராட்சி கட்டுரையை போன வருட நடுப்பகுதியில் சமர்ப்பித்து போனமாதம் சிறிய திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாளை final version சமர்ப்பிக்கின்றேன். நெடுக்காலபோவான் மாதிரி என்னால் எழுத முடியாது, ஆனால் இயலுமானவரை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

Link to post
Share on other sites

இன்றுதான் பார்த்தேன் நெடுக்கு

எங்களுடன் பகிர விரும்பிய உங்கள் நல்லெண்ணத்துக்கு என் பாராட்டுகள். மேலும் மேலும் வளர்ச்சியடைந்து உங்கள் துறையில் முன்னேற என் அன்பான வாழ்த்துக்கள்

யாழ் களம் "கலாநிதிகள்" களமாக விரைவில் மாறிவிடும் என எண்ணும் போது பெருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற ஒருவரைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். தகவலுக்கும்.. இதில் கலந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

என்னுடைய வினவல்.. ஒரு இறுதி வரைபு வரை வந்துவிட்ட ஆய்வறிக்கைக்கு (முன்னரும் காண்பிக்கப்பட்டு.. feedbacks பெறப்பட்டிருக்கிறது.) ஒரு பேராசிரியர் இறுதி feedback தரும் போது..aspect ம் conclusion ம் மாற்றப்பட்டால் நன்று என்று குறிப்பிட்டு தந்ததை.. இன்னொரு பேராரிசியர்.. எல்லாம் தவறு.. திருப்பி எழுது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த மாணவர்.. appeal panel க்கு கொண்டு போய் இந்த முடிவு குறித்து challenge பண்ணி வெல்ல முடியுமா..??!

சித்தியடைய தேவையான புள்ளிகள் 50% என்றிருக்கு.. முன்னையவர் இறுதி வரைபுக்கு 41% கொடுத்திருக்கிறார். மற்றவர் புள்ளி எதுவும் கொடுக்காமலே.. திருப்பி எழுது என்று சொல்லி இருக்கிறார். 3 ஆண்டுகளாக செய்த ஆய்வை திருப்பி எழுதிறது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அந்த மாணவர் உண்மையில் நொந்து போனார்..! தன் மேலான காழ்புணர்ச்சியில் தான் அப்படிச் செய்வதாகச் சொன்னார்..!

இது ஒரு முக்கியமான விடயமாக உள்ளது. குறிப்பாக.. பி எச் டி மற்றும் MPhil/ MSc research பட்டம் பெற ஆய்வுகளும் அறிக்கையும் முக்கியம். அந்த வகையில் எம்மோடு இருந்த ஒருவருக்கு இப்படி நடந்தது. அவர் ஏலவே அமெரிக்காவில் MS பட்டம் பெற்றவர். இங்கு.. PhD செய்தவர்..!

மேலும்.. பேராசிரியர்கள் விடும் எவ்வாறான தவறுகளோடு மாணவர்கள்.. appeal panel க்கு தமது ஆய்வைக் கொண்டு செல்வது நல்லது என்பதையும் பொதுவாக சுட்டிக்காட்டினீர்கள் என்றால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்..! :):icon_idea:

நெடுக்கு, சிக்கலான கேள்வி இது. காரணம் எனக்குத் தெரிந்தது அமெரிக்காவில் உள்ள வழமை மட்டுமே-அதுவும் பல்கலைக்குப் பல்கலை பாட நெறிக்குப் பாடநெறி வேறு படும் முறைமைகள். பொதுவான அமெரிக்க முறைமையின் படி கலாநிதிப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்கு புள்ளிகள் போடுவதில்லை. "ஆம்" அல்லது "இல்லை" தான். ஆலோசனைக் குழுவில் உள்ள மூன்று பேரும் பாஸ் பண்ணா விட்டால் பரீட்சார்த்தி பெயில். இதற்கு அப்பீல் இல்லை. ஆனால் குரோதம் காரணமாக பேராசிரியர் ஒருவர் பெயில் கொடுப்பதைத் தடுக்கும் ஒரு வழியாக ஏன் சித்தியடையச் செய்யவில்லை என விரிவான அறிக்கையை ஆலோசனைக் குழு மிகவும் குறுகிய காலத்தினுள் (சில இடங்களில் இது 24 மணி நேரம்) பாடசாலைக்குக் கொடுக்க வேண்டும். இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு நீதி மன்றம் தான் போக முடியும்-அனேகமான பல் கலைகளில் மேன் முறையீடு செய்ய முடியாது. மேலும், ஆய்வுக் கட்டுரை குறித்து அது எழுதப் படும் போதே தொடர்ந்து பின்னூட்டங்கள் கிடைக்கும் படி வழி முறைகள் அமெரிக்க முறைமையில் இருக்கின்றன. இதனால் இறுதி ஆய்வுக் கட்டுரையை ஆலோசனைக் குழு புறக்கணிக்க வழி இல்லை. நான் இருக்கும் பல்கலையில் கடந்த ஏழு வருடங்களில் இப்படி நடந்ததாக நான் அறியவில்லை.உங்கள் நண்பரின் பல்கலையில் இது பற்றி என்ன நடைமுறை இருக்கிறது? எழுத்தில் ஏதாவது இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். பின்னூட்டம் கிடைத்த ஆய்வுக் கட்டுரையென்றால் முதலில் திருப்பி எழுதக் கேட்ட பேராசிரியர் என்ன பின்னூட்டம் கொடுத்தார் என்று ஏதாவது எழுத்து மூல ஆதாரம் இருக்கிறதா? ஏனெனில், பல்கலை மட்டத்தில் மேல் முறையீட்டுக்குப் போனாலும் சகல ஆதாரங்களுடனும் போக வேண்டும். துவேஷம் என்பதைக் கூட நிரூபிக்க இயலா விட்டால் உங்கள் நண்பருக்குத் தான் ஆபத்தாக முடியும். உங்களுக்கு உரிய பதில் அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்!

Link to post
Share on other sites

உங்களின் ஆராட்சியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள். விரைவில் கலாநிதியாகவுள்ள நெடுக்காலபோவான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

யாழ்கவி அக்காவும் எதோ ஆராட்சி செய்வதாகக் கேள்விப்பட்டேன். யாழில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

இல்லை கந்தப்பு. இது நான் எனது முதலாவது Taught Master இல் செய்த ஆய்வு. அதை வெற்றிகரமாக சில காலங்களுக்கு முன் நிறைவும் செய்து விட்டேன். கலாநிதி பட்டம் பெற இன்னும் நிறைய பயணிக்க வேண்டி உள்ளது..! அதற்கான திட்டம் இருந்தாலும்.. காலம் கூட வரனுமே..! வாழ்த்துக்கு நன்றி. :):icon_idea:

வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்!

நானும் எனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆராட்சி கட்டுரையை போன வருட நடுப்பகுதியில் சமர்ப்பித்து போனமாதம் சிறிய திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நாளை final version சமர்ப்பிக்கின்றேன். நெடுக்காலபோவான் மாதிரி என்னால் எழுத முடியாது, ஆனால் இயலுமானவரை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் யாழ்கவி..! :):icon_idea:

Link to post
Share on other sites

எனது ஆராட்சி கொஞ்சம் நெடுக்கரோட ஒத்திருக்கு. கலங்களுக்கான கணித மாதிரிச் சட்டத்தை வடிவமைத்தலும் அது எவ்வாறு இரசாயன எந்திரவியலில் செல்வாக்கு செலுத்தும் என்பது தொடர்பான விடய ஆய்வு..

எனக்கு கடைசி நேரத்தில வந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக என்னால் அவ்வாராய்ச்சியில் முழு மனதோடு ஈடுபட முடியவில்லை. இறுதியாக 53% ஆராய்ச்சி கட்டுரைக்கு கிடைத்து சித்தி கிடைத்தது.இப்ப மேல் படிப்புக்கு முயற்சி செய்கிறேன். எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு கிடைத்த குறைந்த மதிப்பெண்கள் காரணமாக முனைவர் பட்டத்துக்கான அனுமதி பெறுவது சிரமமாக உள்ளது..

பயனுள்ள தகவல்கள் ஜஷ்டின் மற்றும் நெடுக்கு. நன்றி

சேம் பிளட்..!

எனக்கும் குறித்த படிப்பில்.. taught modules க்கு சராசரி புள்ளிகள் 65% க்கு மேல்..! ஆனால் ஆராய்ச்சி கட்டுரைக்கு இறுதியில் 57% தந்தார்கள். நான் 70% க்கு மேல் எதிர்பார்த்தேன்..! அதனால் distinction கிடைக்காமலே போயிட்டுது. அதிகூடிய புள்ளியாக ஒரு component க்கு 98% எடுத்திருக்கிறேன் அதுவும் Lab module க்கு. குறைந்த புள்ளியாக 57%. இறுதி ஆராய்ச்சிக் கட்டுரையில் தான் 57% தந்து சொதப்பிட்டாங்க..! :(

இருந்தும் எனக்கு கலாநிதி பட்டம் படிக்க இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தன. நேர்முகத் தேர்வுகளில் வெற்றியடைந்தும் இருந்தேன். ஆனால் கொலசிப் இல்லை. சுயநிதியில் படிக்க என்று தந்தார்கள். போடாங் கொய்யாலா என்றிட்டு எழுந்து வந்துவிட்டேன். அப்புறம்.. வேறு துறைகளில் கவனம் செலுத்தி அதில் top-up செய்து.. professional membership எடுத்து அந்த வழியில் முன்னேறிப் போக எத்தனிக்கிறன். குறிப்பாக Biomedical science சார்ந்து நிறைய பாட விதிவிலக்கும் தந்து கொஞ்சக் கொலசிப்பும் தந்து.. top-up செய்ய விட்டாங்க லண்டனில் ஒரு யுனியில். அதனால் தான் தலைநகருக்கு வர வேண்டி இருந்தது..! அதையும் வெற்றிகரமாக நிறைவு செய்திட்டன்.

இப்போ.. முகாமைத்துவக் கல்வி வேலை நிறுவனங்களில் உயர் பதவிக்கு வர அவசியம் என்ற படியால் அதைப் படிக்கிறேன்..! எனது கனவு.. இப்போ... PhD அல்ல. CEO... தான். :)

நீங்கள் நம்பிக்கை தளராது.. தொடர்ந்து விண்ணப்பியுங்கள். நல்ல ஒரு research proposal ஐ தெரிவு செய்யுங்கள். உங்களுக்குள்ள தகுதியில் அதை நீங்கள் நன்கே செய்வீர்கள் என்று நிரூபித்தால்.. MSc புள்ளி பெரிய செல்வாக்குச் செய்யாது. அதேவேளை.. புலமைப்பரிசில் அல்லது நிதி உதவி அளிக்க உத்தரவாதம் உள்ள ஆராய்ச்சிகளையும் தெரிவு செய்யுங்கள். சிலர் சுயநிதி ஆராய்ச்சிகளை தொடங்க சம்மதித்துவிட்டு.. பின்னர் (ஓராண்டுப் படிப்பின் பின்) நல்ல பெறுபேறு கிடைப்பின்.. பல்கலைக்கழக ஆராய்ச்சி நிதி திட்டங்களுக்கு விண்ணப்பித்து நிதி பெற்றுள்ளதை கண்டிருக்கிறேன். சிலர் சுயநிதியில் படித்துக் கொண்டு யுனியில் demo வாகவும் பணி செய்து சுயநிதியை சரிக்கட்டுவதையும் கண்டிருக்கிறேன். எல்லாம் சரியான வாய்ப்பு அமைந்தாலே அன்றி மற்றும்படி சிரமமே என்பதை என்னால் முற்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். :):icon_idea:

Link to post
Share on other sites

நெடுக்கு, சிக்கலான கேள்வி இது. காரணம் எனக்குத் தெரிந்தது அமெரிக்காவில் உள்ள வழமை மட்டுமே-அதுவும் பல்கலைக்குப் பல்கலை பாட நெறிக்குப் பாடநெறி வேறு படும் முறைமைகள். பொதுவான அமெரிக்க முறைமையின் படி கலாநிதிப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்கு புள்ளிகள் போடுவதில்லை. "ஆம்" அல்லது "இல்லை" தான். ஆலோசனைக் குழுவில் உள்ள மூன்று பேரும் பாஸ் பண்ணா விட்டால் பரீட்சார்த்தி பெயில். இதற்கு அப்பீல் இல்லை. ஆனால் குரோதம் காரணமாக பேராசிரியர் ஒருவர் பெயில் கொடுப்பதைத் தடுக்கும் ஒரு வழியாக ஏன் சித்தியடையச் செய்யவில்லை என விரிவான அறிக்கையை ஆலோசனைக் குழு மிகவும் குறுகிய காலத்தினுள் (சில இடங்களில் இது 24 மணி நேரம்) பாடசாலைக்குக் கொடுக்க வேண்டும். இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு நீதி மன்றம் தான் போக முடியும்-அனேகமான பல் கலைகளில் மேன் முறையீடு செய்ய முடியாது. மேலும், ஆய்வுக் கட்டுரை குறித்து அது எழுதப் படும் போதே தொடர்ந்து பின்னூட்டங்கள் கிடைக்கும் படி வழி முறைகள் அமெரிக்க முறைமையில் இருக்கின்றன. இதனால் இறுதி ஆய்வுக் கட்டுரையை ஆலோசனைக் குழு புறக்கணிக்க வழி இல்லை. நான் இருக்கும் பல்கலையில் கடந்த ஏழு வருடங்களில் இப்படி நடந்ததாக நான் அறியவில்லை.உங்கள் நண்பரின் பல்கலையில் இது பற்றி என்ன நடைமுறை இருக்கிறது? எழுத்தில் ஏதாவது இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். பின்னூட்டம் கிடைத்த ஆய்வுக் கட்டுரையென்றால் முதலில் திருப்பி எழுதக் கேட்ட பேராசிரியர் என்ன பின்னூட்டம் கொடுத்தார் என்று ஏதாவது எழுத்து மூல ஆதாரம் இருக்கிறதா? ஏனெனில், பல்கலை மட்டத்தில் மேல் முறையீட்டுக்குப் போனாலும் சகல ஆதாரங்களுடனும் போக வேண்டும். துவேஷம் என்பதைக் கூட நிரூபிக்க இயலா விட்டால் உங்கள் நண்பருக்குத் தான் ஆபத்தாக முடியும். உங்களுக்கு உரிய பதில் அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்!

இங்கே நடைமுறைகளில் நிறைய வித்தியாசம் உண்டு. நீங்கள் ஒரு முடிவு குறித்து.. திருப்தி இல்லையேல்.. feedback கோரலாம். அதை மேற்பார்வையாளர்கள் தருவார்கள் அல்லது.. யுனி பெற்றுத் தரும். அதன் படி மீள இன்னொரு தடவை ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்கலாம். அதுவும் பிரச்சனை என்றால் மேன்முறையீட்டு சபைக்கு கொண்டு சென்று அது விசாரணைகளை ஆரம்பிக்கும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆராய்ச்சிக் கட்டுரையில் ஒரு மேற்பார்வையாளர் தனது குரோதத்தை காட்டி பெயில் செய்துவிட்டார். ஆனால் அவர் மேல்முறையீட்டில் தனக்கு சரியான வழிகாட்டல் கிடைக்கவில்லை என்பதை நிரூபித்து.. கிடைத்த குறைந்த பட்ச வழிகாட்டலுக்கு அமைய தனது சொந்த முயற்சியில் வழங்கப்பட்ட ஆராய்ச்சி இலக்கின் பெரும்பகுதியை எட்டியதை நிரூபித்த படியால்.. compensation சித்தி வழங்கி பட்டமும் அளிக்கப்பட்டார்.

ஆனால்.. இவருக்கு அப்படி ஒன்றும் ஆகவில்லை. இவருக்கு பிரச்சனை.. முதல் சமர்ப்பிப்பிலேயே இரண்டாம் மேற்பார்வையாளர் அதனை ஏற்றுக் கொள்ள சம்மதிக்காதது பிரச்சனையாக அமைந்துவிட்டது. இவரின் பிரச்சனை வேறு மாதிரியாக இருக்கிறது. அதுதான் கேட்டேன்..!

இருந்தாலும் உங்கள் நேரத்திற்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி..! :)

Link to post
Share on other sites

இன்றுதான் பார்த்தேன் நெடுக்கு

எங்களுடன் பகிர விரும்பிய உங்கள் நல்லெண்ணத்துக்கு என் பாராட்டுகள். மேலும் மேலும் வளர்ச்சியடைந்து உங்கள் துறையில் முன்னேற என் அன்பான வாழ்த்துக்கள்

நன்றி நிழலி..! நீங்களும் வேலையில் இன்னும் மேலே உயர்பதவியை அடைய முயற்சிப்பதாக கூறி இருந்தீர்கள். அதில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

மேலும்...

உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால்.. எவ்வாறு கீழ் நிலை.. நடுநிலை பதவி மட்டங்களில் இருந்து உயர்நிலைக்கு உயர்வது.. அதற்கு அவசியமான காரணிகள் என்ன என்பதைச் சொன்னால்.. இளையவர்களுக்கு.. விடயம் அறியாதவர்களுக்கு உதவியாக இருக்குமே..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மேலும்...

உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால்.. எவ்வாறு கீழ் நிலை.. நடுநிலை பதவி மட்டங்களில் இருந்து உயர்நிலைக்கு உயர்வது.. அதற்கு அவசியமான காரணிகள் என்ன என்பதைச் சொன்னால்.. இளையவர்களுக்கு.. விடயம் அறியாதவர்களுக்கு உதவியாக இருக்குமே..! :)

உண்மையில் சந்தோசமாக இருக்கிறது

எமது இளசுகள் அதிலும் தாயக பற்றுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து இதுபோன்ற விடயங்களைப்பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும்போது அந்த மக்களின் பெருவாழ்வு கண்முன்னே தெரிகிறது.

தொடருங்கள் .நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் முயற்சிக்கும், எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துகள்.

குட்டியின் தந்தையின் அறிவுரை நன்றாக இருந்தது. மிகவும் உதவும்.

மேலும், உங்கள் நண்பரின் விடயம் சிக்கலானது நெடுக்ஸ். முறையீட்டின் பொது எல்லாவற்றையும் நிரூபிப்பது கடினம். அப்படி பட்டம் பெற்றாலும், இந்த பேராசிரியர்கள் ஒருவிதமான பெயரை உங்கள் நண்பர்களுக்கு உருவாக்கி அவர் பல்கலைக்கழக வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிரச்சனைகளை உருவாக்கலாம்.

அவர் தன் பேராசிரியரை மாற்ற முயற்சிக்கலாம், ஆனால் காலம் கடந்து விட்டது போல் தெரிகிறது.

அவரும் இதைத்தான் உணர்ந்தார். அவர்களோடு பிரச்சனைப்படுவதிலும்.. முடித்த இரண்டு வருடங்களுக்கான.. MPhil பட்டத்தை எடுத்துக் கொண்டு வேறு பல்கலைக்கழகத்தில் பி எச் டி யை எடுக்க முயற்சிக்கப் போவதாகச் சொன்னார். நானும் அது நல்ல யுக்தி என்று ஊக்கப்படுத்தினேன். மற்றைய நண்பர்களும் நண்பிகளும் அதையே பரிந்துரைத்தனர். ஆனால் யுனி மாணவர் மன்றம் தான் அப்பீலுக்கு முயற்சிக்க அவரைக் கேட்டது.

இவை எல்லாம் ஆராய்ச்சிப் பட்டம் படிப்புக்குப் போற இடங்களில் நடக்கக் கூடிய விடயங்கள் என்பதை மற்றவர்களும் அறிந்து கொண்டு கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இங்கு பகிர்ந்து கொண்டேன்..! இப்படியான அனுபவங்களை நம் சூழலில் இருந்து கற்றுக் கொள்வது எமக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பெற உதவும்..! :icon_idea::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பிக்கும் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவரது பேராசிரியர், ஆராய்ச்சியில் பங்கு பற்றாத தன் நண்பர் ஒருவரின் பெயரை கட்டுரையில் இணைக்குமாறு பணித்தார். நண்பியும் முதலில் போராடிவிட்டு, பிறகு அந்த பெயரையும் இணைத்தார். இப்போது அவர் வேறு பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கே கனடாவில் பொதுவாக மருத்துவம் முடித்து (பத்து ஆண்டுகளுக்கு மேலாக படித்து) பின்னர் முகாமைத்துவம் படிப்பவர்கள் பொதுவாக வைத்தியசாலைகளின்

நிறைவேற்று அதிகாரியாக (CEO)கடமையாற்றுவார்கள்.

நீங்களும் அவ்வாறே வர வாழ்த்துகிறேன்.

ஆகா.. நம்ம இலக்கை கண்டுபிடிச்சிட்டீங்களே..! CEO.. நோக்கிய இலக்கே இப்போது பயணத்தில் தெரிகிறது. நான் எனது professional body (Institute of Biomedical science) காட்டித் தந்ததற்கு அமைய படிக்கிறேன் (ஒன்றைக் கவனிக்கனும் எம்மவர்கள் யாரும் எனக்கு அப்போ இந்த வழிகாட்டலைச் செய்யல்ல. மாறாக.. ஏப்பா உனக்கு எனியும் படிப்பு என்று கேட்டவர்கள் தான் உண்டு. நீங்கள் அதிலிருந்து விலகி இருக்கிறீர்கள்... நன்றி.). வெறும் எம் பி ஏ மட்டும் அதைச் சாத்தியப்படுத்த முடியாது. நல்ல ஆளுமைப் பண்பும் தலைமைத்துவப் பண்பும் அவசியம் என்பதை உணர முடிகிறது. :):icon_idea:

வாழ்த்துகள் நெடுக்ஸ்

உங்களிடம் ஒரு கேள்வி பிழை இருப்பின் மன்னியுங்க

நீங்கள் படித்து இருக்கும் பாட பரப்பு எனது அறிவுக்கு எட்டிய வரையில் பயோ டெக்னாலஜி சார்ந்தது என்று நினைக்கிறன்

பொது மருத்துவமனையின் CEO ஆக ஒருவர் வருவதற்கு (MBBS ,SURGEON

பட்டம் பெற்றிருக்க தேவை இல்லையா )

அதாவது பயோ TECH படிச்ச ஒருவர் வர முடியுமா பொதுவாக பயோ TECH படிச்சவங்க ஏதும் pharmaceutical COMPANY

ஆரம்பிச்சு அதற்கு தான் CEO ஆவாங்க ஆனால் அகூதா குறிப்பிட்டு இருந்தார் பொது மருத்துவமனையின் CEO ஆவது பற்றி ...நீங்களும் CEO ஆவது தான் உங்கள் நோக்கம் என்று சொன்னீர்கள் ஆனால் எதற்கு என்று சொல்லவில்லை

அதான் கேட்டன்

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

உங்களைப் போலவே பலருக்கும் இந்தக் குழப்பம் உள்ளது. பழைய கால நிலையில் அப்படி இருந்திருக்கலாம் ஆனால் இன்று அப்படியல்ல.

என்னுடைய பாடப்பரப்புக்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. MBBS மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள்.. கூடிய அளவு கிளினிக்கல்.. சம்பந்தட்டவர்கள். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது குறைவு. ஆனால்.. நான் இங்கிலாந்தில் மட்டும் 3 பிரதான துறைகளில் கற்றிருக்கிறேன். ஒன்று.. பயோரெக்னோலொஜி.. மற்றது மரபணு மற்றும் மூலக்கூற்றுப் பொறியியல்.. மேலும்.. உயிரியல் மருத்துவ விஞ்ஞானம்.

இவை 3 துறைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மருந்து தயாரிப்பு.. மருந்து வடிவமைப்பு.. சிகிச்சை முறைகள்.. குறிப்பாக அதிநவீன சிகிச்சை முறைகள்.. மரபணு ஆலோசகர்கள்.. மரபணு சிகிச்சை முறைகள்.. stem cell therapy என்று எம் துறைசார்ந்தவர்களின் பங்களிப்பு நீண்டது. அது தவிர மருத்துவப் பகுப்பாய்வுகள்.. நோய்களை.. அதன் கிருமிகளை இனங்காணும் பகுப்புக்கள்.. உடல் சம்பந்தப்பட்ட இரசாயனப்பகுப்புக்கள்.. IVF .. நுண் உயிரியல்.. வைரஸ் உயிரியல்.. இரத்தம்.. இரத்தப் பரிமாற்றம்.. இழையவியல் பகுப்பாய்வு.. என்று.. எம் துறை பரந்தது.

MBBS அல்லது சத்திரசிகிச்சை நிபுணரின் அறிவு உடல் அதன் இயக்கம்.. நோயியல்.. மருந்தியல் சார்ந்தே அதிகம் இருக்கும். ஆனால் அவர்களின் ஒவ்வொரு இயக்கத்திற்கும்.. எம் துறைகளின் பங்களிப்பு சரியாக அமைந்து ஆலோசனை வழங்காவிட்டால் அவர்கள் பாடு அதோ கதிதான்.

நான்... இவற்றோடு.. Medical physics (X ray.. MRI, CT scan, Ultrasonic scanning, radiotherapy for treatment, endoscope மற்றும் பிற) மற்றும் bio physics, biochemistry.. microbiology , patient psychology என்றும் படிச்சிருக்கிறன். பல்கலைக்கழக மட்டத்தில் அதனால் ஒரு பன்முகப்படுத்திய அறிவை வளர்க்க முடிந்துள்ளது. எல்லாமே நவீனமான இன்றைய உலகிற்கு அவசியமான பாடத்துறைகள்.

எனது தெரிவாக.. biomedical சார்ந்து.. biotech சார்ந்து மருத்துவ ஆய்வு அல்லது பகுப்பாய்வுப் பணிகளில் ஈடுபட.. அல்லது கருவிகளின் தொழில்திறன் தரத்தை உயர்த்த ஆய்வுகளை செய்ய முடியும். அப்படியான நிறுவனங்களில்.. வைத்தியசாலைகளில் நாம்.. CEO ஆக வரலாம்.! அப்படி வந்திருக்கிறார்கள். அதற்கு வர்த்தக முகாமைத்துவ அறிவும் IT அறிவும் தேவை. ஏனெனில் இன்றைய பல பகுப்பாய்வு விடயங்கள்.. automated இயந்திரங்களால் நடத்தப்படுகின்றன. அவற்றின் இயக்கம் பற்றிய கணணி அறிவு அவற்றின் தரவுகளை கையாளும் பாதுகாக்கும் அறிவு என்று பல தேவைப்படுகிறது. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. நான்.. BCS associate membership அளவிற்கு IT கற்றிருக்கிறேன். ஆனால் BCS இல் மாணவ அங்கத்துவத்தோடு இருக்கிறேன். காரணம்.. அங்கத்துவ நிலையை கூட்ட.. வருடாந்த சந்தாக் காசும் கூட்டிக் கட்டனுமே..! :lol::):icon_idea:

இன்றைய காலத்தில் பட்டங்கள் குறுகிய பாடப்பரப்புள்ளனவாக உள்ளதால் ஒரு தொழிலை செய்ய 4 பட்டம் பெற்ற வெவ்வேறானவர்கள் தேவைப்படுகின்றனர். அதே திறமைகள் ஒருவரில் இருந்தால்.. அவருக்கு கூடிய அளவில் மேல்நிலைக்குப் போக வாய்ப்பு இருக்கும்..! :icon_idea:

========================

இன்றை NHS CEO களில் ஒருவர் அவரும்.. biomedical scientist தான்.

“I hope my experience working in operational and policy roles at local, regional and national level in the NHS will be of benefit to the Trust as it seeks to work with its partners to deliver a transformation in the quality of care for patients across the communities we serve.”

ian%20cumming%20again.jpg

Ian will start his new role as Chief Executive in April 2012 and in the meantime Ruth Brunt will continue as Chief Executive until her retirement, ensuring a smooth transition of responsibilities.

Biography: Professor Ian R Cumming OBE - National NHS Managing Director for Quality during transition

Ian started his career in the NHS as a Biomedical Scientist and later worked in research into coagulation disorders in the Haemophilia Centre in Manchester, England before moving into general management in the late 1980s.

Ian has held a variety of NHS senior management posts.

http://www.nbt.nhs.uk/news__media/latest_news/new_chief_executive_appointed.aspx

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அனுபவங்களை நம் சூழலில் இருந்து கற்றுக் கொள்வது எமக்கும் முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பெற உதவும்..! :icon_idea::)

250 பேர் இருந்த பரீட்சை மண்டபத்தில் எனது மகனை மட்டும் ஒதுக்கும் வகையில் ஒரு மேற்பார்வையாளர் நடந்தகொண்டார். அந்தவகையில் அதை எதிர்கொண்டு இதனால் வரும் தீர்ப்பு எனக்கு பிரயோசனப்படுத்தாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு உதவட்டுமே என்று இதனுடாடு சம்பந்தப்பட்ட மற்றும் மேற்பார்வையாளர்களாக வேலைசெய்யும் எனக்குத்தெரிந்த சிலரைச்சந்தித்து ஆலோசனை கேட்டேன். எவருமே உற்சாகப்படுத்தவில்லை.

காரணம்

1- இனவெறி சட்டத்துக்குள் இது போகும்

2- அரச ஊழியருக்கெதிரானது என்பதால் அரசு தன்னை குற்றவாளியாக்க அனுமதியாது

3- தோற்றால் பிள்ளையின் படிப்பு முற்றாக பறித்தெறிக்கப்பட்டுவதுடன் தண்டிக்கவும்படுவார்.

இன்றும் அது எனக்குள் நெருப்பாக இருக்கிறது. ஆனால் என்றாவது வேறு ஒருவர் தொடங்கும்போது நானும் சேர்ந்து கொள்வேன..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எனக்கு ஒரு உதவி தேவை.. நீங்கள் MBA படிக்கும்போது எப்பிடி university ஐ தெரிந்தீர்கள்..  distance learning MBA பற்றி என்ன நினைகிறீர்கள்..? is it worth it? do you have any suggestions..? 

Link to post
Share on other sites

CEO ஆக வர முயற்சிப்பது நல்ல யோசனை..! :rolleyes: வருசத்துக்கு அரை மில்லியன் போனஸ் வாங்கலாம்..! :D ஏதாவது பிழைத்தது என்றால் "I take responsibility for what has happened and resign my job as CEO." என்று அறிக்கை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணமான மில்லியன்களுடன் விடைபெற்றுச் செல்லலாம்..! :icon_mrgreen:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.