Jump to content

எனது ஆய்வு..!


Recommended Posts

தனிய இயந்திரங்களின் படத்தை மாத்திரம் போட்டிருக்கு. பங்கு பற்றியவரகளின் படங்களையும் போடணும். நிறையவெ படித்து பட்டங்கள் பெற்று எமது தமிழீழத்துக்கு நிச்சயம் சேவை செய்வீர்கள் என எண்ணுகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

 

நன்றி அண்ணா...

 

மேலும்...

 

அண்ணா.. இந்த ஆய்வைச் செய்தவன் நான் என்றாலும் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது. நான் ஒரு பொதுப் பொழிப்புரை தான் எழுத முடியும். பல்கலைக்கழக அனுமதி இன்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தானது. இங்கு இணைக்கப்பட்ட படங்கள் எவையும் பல்கலைக்கழகச் சொத்துக்களின் நேரடி இணைப்பு அல்ல. அவற்றை ஒத்த இணையத்தில் அனுமதிக்கப்பட்ட வெளியார் இணைப்புக்கள்.

 

(என்னிடம் ஆய்வு சாலையில் எடுத்த சில படங்கள் இருந்தாலும்.. எனது ஆய்வு ரிப்போட்டுக்காக எடுத்தது.. அவற்றை இங்கு இணைக்கவில்லை. copyright இல இருந்து பல பிரச்சனைகளை அது கொண்டு வரலாம்.)

 

குறிப்பாக இன்று இங்கிலாந்தில் இத்துறையில் படிக்க விசேட பாதுகாப்பு அனுமதி பெற வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உயிரியல் தொழில்நுட்பம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம் என்ற வகையில் சில கடுமையான நடைமுறைகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகின்றன. அவற்றிற்கு உட்பட்டுத்தான் நாங்கள் விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். ஏன் வில்லங்கங்களை வீணா விலைக்கு வாங்குவான்.

 

யாழ் கள விதியும் இப்போ இதில் கூடிதல் தடை போட்டுள்ளது. :):icon_idea:

 

 •  

  ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான எந்தவித கருத்துகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

   

Link to post
Share on other sites
 • Replies 105
 • Created
 • Last Reply

ஒமேகா 3 முக்கிய கொழுப்பு அமிலங்களில் ஒன்று. அதனை நாளாந்த உணவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதை நாளாந்த உணவில் எடுக்க முடியாத சூழலில்.. குளிசை வடிவில் எடுக்கலாம் அதனால் பிரச்சனைகள் இல்லை.

மல்ரி விற்றமின்.. என்பதும் கூட சரியான அளவில் எடுக்கப்பட்டால் பக்க விளைவுகள் வராது. ஆனால் மக்கள் மல்ரி விற்றமினை அது சத்து தருகிறது என்ற ஒரு எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பின்விளைவுகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

விற்றமின்கள் சிறிய அளவில் ஆனால் முக்கியமான தேவைப்படுகின்ற உணவுக்கூறுகள். அவற்றை சரியான அளவில் எடுக்காவிட்டாலும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக எடுத்தாலும் பிரச்சனை. இதனை உணர்ந்து நாளாந்த உணவில் அவற்றை எடுக்கக் கூடிய வகையில் நிறை உணவை வகுத்து உண்டு வருவதே சிறப்பு. அதற்கு சந்தர்ப்பமில்லாத வேளையில் வைத்திய ஆலோசனைகளின் கீழ் மல்ரி விற்றமின் எடுக்கலாம் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி உள்ளெடுப்பது நன்றல்ல..! :icon_idea:

நன்றிகள் அண்ணா தகவலுக்கு கையோடு ஒரு க்ரில் ஆயில் உம் ஒரு men's multi vitamin tablet வாங்கிட்டன் :D

Link to post
Share on other sites

நன்றிகள் அண்ணா தகவலுக்கு கையோடு ஒரு க்ரில் ஆயில் உம் ஒரு men's multi vitamin tablet வாங்கிட்டன் :D

 

இவற்றை உள்ளெடுக்க முதல்.. எதற்கும் உங்கள் குடும்ப நல ஆலோசகரின் கருத்தினையும் கேட்கவும். உங்களின் உடல்நிலைக்கு ஏற்ப அவர்கள் தரும் சிபாரிசே சிறந்தது..! :)

Link to post
Share on other sites
 • 3 months later...

இதற்கு பின்னரான ஆய்வுகளை  யாழ் களத்துடன் பகிர முடியுமா நெடுக்ஸ்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க  வேண்டும். உதயம் முடிந்தால் ஒரு தனித் திரி (வாழும் புலத்தில்) திறந்து இதைப் பதிக்கவும்.

 

மன்னிக்கவும் நிழலி, இத்திரியை அதன் பிறகு பார்க்கவில்லை. இப்போது இதற்கான காலம் கடந்து விட்டது.

 

Link to post
Share on other sites

இதற்கு பின்னரான ஆய்வுகளை  யாழ் களத்துடன் பகிர முடியுமா நெடுக்ஸ்?

 

மேலும் இரண்டு ஆய்வுகளை மட்டும் செய்திருக்கிறன்.

 

1. prokaryotic drug resistance mechanisms (மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் பொறிமுறைகள் சம்பந்தப்பட்டது)

 

[இது பற்றி மக்கள் அறிய வேண்டிய விடயங்களை ஒரு செய்தியின் அடிப்படையில் இங்கே ஒரு பதிவில் இட்டிருக்கிறோம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=118842 ]

 

2. BP (Beyond petroleum முன்னர் British petroleum என்றிருந்தது ) நிறுவன BP post-gulf of Mexico disaster strategy சம்பந்தப்பட்டது. (முகாமைத்துவக் கல்விக்கானது.)

 

இவை இரண்டும் சாதாரணமா மக்களுக்கு இலகுவில் புரிய வைக்கக் கூடியவை அல்ல. அவர்கள் இவற்றை விரிவாக.. தெரிஞ்சுக்கனுன்னு ஒரு பெரிய அவசியத்தையும் கொண்டிருக்கல்ல. மக்கள் தெரிய வேண்டியது.. அனுபவிக்க வேண்டியது.. இவற்றின் விளைவுகளையே. நமக்கும்.. இவற்றில் எந்தளவை இங்க எழுதலாம் என்ற ஒரு நெருக்கடி உள்ளது. அந்த வகையில் தவிர்த்திட்டம்.

 

நன்றி நுணா உங்கள் ஆர்வத்திற்கு. :icon_idea::)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.