Archived

This topic is now archived and is closed to further replies.

ilankathir

மரணமே நெருங்காதே...

Recommended Posts

மரணமே நெருங்காதே

கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன்

மரணமே நெருங்காதே

கிடைத்தற்கரிய பரிசாய்

எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான்

என்னுள் நனைந்தான்

கடந்த கால நினைவுகளை

காயங்களாக கொண்டவனின்

காயம் போக்க காதல் செய்ய

வரம் கிட்டியது என் பேறு

தொலைவில் இருந்தாலும்

காதலால் தீண்டுகிறான்

தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க

வார்த்தைகள் தெவிட்டுகிறதே

அவன் அன்பை வருணிக்க.....

அன்னாகரீனா, நாஸ்தென்காவை

காதலிகளாக கொண்டவன்

என்னையும் காதலியாக ஏற்றான்

அவன் அன்பிற்கும் மட்டுமல்ல

அறிவிற்கும் நிகரில்லா என்னை

ஆயுள் வரை அவனோடு பயணிக்க

எதற்காக தேர்ந்தெடுத்தான்

என்னில் எதை வியந்தான்....?

உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம்

உலக அரசியல் பேசும் அவனிடம்

எப்படி அறிவிக்க எனது மடமையை

ஐக் மாதவ், தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய்

பற்றி வியந்து உரைப்பவன்

ஜானகிராமன், மு.வ பற்றியும் கூற தவறவில்லை

அன்பை பரிமாறும் காதலர்கள் மத்தியில்

ஏடுகளை பரிமாறி எழுத்தறிவித்தான்....

இப்படி ஒருவன் என் வாழ்வில் நுழைந்தது

ஆச்சரியமான ஒன்று தான்

கானல் நீரில் மட்டுமே கரைந்த என்னை

கானத்திலே, காற்றிலே, மழையிலே கரைய வைத்தான்

சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்

காதலோடு கடைசி வரை வாழ

துடிக்கிறது மனம்...

கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன்

மரணமே என்னை நெருங்காதே.......

-தமிழ்மதி

http://www.ilankathir.com/?p=2871

Share this post


Link to post
Share on other sites

சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும்

காதலோடு கடைசி வரை வாழ

துடிக்கிறது மனம்...

இறுதி ஆசை..... மனம் வாழ்த்துகிறது

Share this post


Link to post
Share on other sites