Jump to content

முகத்தாருக்கு பிரியாவிடை......!


Recommended Posts

கள உறவுகளுக்கு வணக்கம் உங்களுடன் ஒரு நிமிடம்

முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்

நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்

இண்றுவரை எங்களுடன் மகிழ்வாய் பேசிமகிழ்ந்த ஒரு அன்பு இதயமான முகத்தார் பிரிந்து போகிறார் அவரின் குடும்பவாழ்க்கையை அவர் காரணமாகச்சொன்னாலும் எங்களின் கனத்த இதயத்துடனான வாழ்த்துக்களைத்தான் சொல்ல முடிகிறது ......... :lol:

உங்களின் அன்பை என்றும் நாங்கள் மறவோம்.... உங்கள் மகிழ்வான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் முகத்தார்.....!

உங்கள் அன்புக்கு நண்றிகள்.....!

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

பிரிந்து போவதையிட்டு கவலை எண்றாலும். உங்களின் எதிர்காலம் என்பதால் உங்களை மனவுளைச்சலுக் உள்ளாக்கவும் விருப்பம் இல்லாமல், இரு மனத்தில் விடையளிக்கிறோம் முகத்தார். வாழ்த்துக்கள்.

மீண்டும் வருவீர்கள் எங்களுடன் கலந்தாட என்கின்ற நம்பிக்கையுடன் விடையளிக்கிறோம். !

Link to comment
Share on other sites

முகத்தார் உங்கள் ஆக்கங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. உங்கள் விடை பெறுகை வருத்தமாக இருக்கிறது.

தாயகத்தில் இருந்து தொடர்தும் உங்களால் முடிந்த பொழுதுகளில் எம்முடன் இணைந்திருங்கள். உங்கள் தாயக பயணமும், இல்வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவாராக,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் தாயகம் பயணம் என்றதில மட்டற்ற மகிழ்ச்சி.. பாலை வனத்தில பட்ட கஸ்டத்திற்கு முற்றுப்புள்ளி.. ம் ம்.. இலங்்கையில் இருந்தும் உறவுகள் வருகிறார்கள் நீங்களும் தொடர்ந்து வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. அப்படியே.. முகத்தார் வீடும் தொடரணும் என்று கேட்டுக்

கொள்்கிறேன்.. பயணங்கள்் இனிமையாக அமையட்டும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக அதிகம் கருத்தாடாவிட்டாலும், உங்கள் நகைச்சுவையாக கருத்துக்களை (அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டுபவைகளாகவும் உள்ளவற்றை) படித்துப் பயன்(!) பெற்றவன் என்ற முறையில், பிரியாவிடை சொல்லத் தயக்கமாக உள்ளது. இது தற்காலிகப் பிரிவு என்றே யாழ் கள உறுப்பினர்கள் கருதுவார்கள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தருவீர்கள் என்ற நம்பிக்கயுடன், உங்கள் தாயகப் பயணம் (வாழ்வு) இனிதாக இருக்க வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் அவர்களே!

நீங்கள் மற்றவர்களை சிரிக்க, சிந்திக்க வைத்ததுபோல் என்றும் சிரித்துக்கொண்டும், சிரிக்கவைத்துக்கொண்டும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

அங்கிள்

நீங்கள் தாயகம் செல்வதையிட்டு சந்தோசம். ஆனால் தொடர்ந்தும் வந்து நம்மை சிரிக்க வைப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உங்களை வருத்ததுடன் அனுப்ப தயக்கமாய் இருக்கின்றது. என்றாலும் வருவீர்கள் என்றா நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

இனித்தான் அங்கிளுக்கு பொன்னமாக்காவின் பாசங்கள் புரியப்போகுது. வாழ்த்துக்கள் அங்கிள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் அங்கிள்

தாயகம் போறிங்களா? சந்தோசம்/ தாயகம் போனாலும் யாழ் வரலாம் தானே? நீங்கள் வருவீர்கள் என எதிர் பார்த்து இருப்போம்/

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

உங்கள்... எங்கள்.... உணர்வுகள்... தாக்கங்கள்... களஅனுபவங்கள்... உண்மைகளை... உங்களுக்கும்... எங்களுக்கும்.... ஒரு எல்லைகளில்... நடைமுறை... அல்லது பழைய... களஉறவுகளுடனும் நின்றுகொண்டு....காணமுடியா முகத்தார்... எத்தனை எத்தனை... உறவுகள் ஒருபிரியாவிடை அல்லது போறதே தெரியாமல் போயுள்ளார்கள்.... இதற்கு காரணங்கள் பற்பல... (உண்மையானவர்களும்... உண்மையற்றவர்களும் ....பழையவற்றை பார்க்க தெரிகிறது.. ) அந்தவகையில் முகத்தார் நீங்களும் நாமும் பெருமைபடவேண்டும்.... 8) ஆனால் உண்மை எல்லாம் தெரிந்தவர்கள் என்றுமே இங்கு உள்ளார்கள்... :lol: அவர்கள் அனுபவம் பெற யாம் கொடுத்துவைக்க வேண்டும். :| :) :mrgreen:

ஆயிரம் ஆயிரம் களநண்பர்கள்... வரலாம் போகலாம்... ஆனால்....

ஒருகாலம்... உண்மை எல்லாம் தெரிந்தவர்கள்... அவர்கள் அனுபவங்களையும்... நாம் கட்டாயம் களத்தில் என்றோ ஓருநாள் அறியலாம்.... கட்டாயம். :idea:

அதுமட்டும் (களத்தில் உண்மையானவர்கள் எண்டால்) நாமும் நீங்களும் வந்துபோய்கொண்ருப்போம்... (கருத்துவைக்கா விட்டாலும் எங்கிருந்தாலும்) முற்றாகவே போகமாட்டோம்.... இதுவே யதார்த்தம் அதுயாவரும் அறிந்ததே......

Link to comment
Share on other sites

வணக்கம் அங்கிள்

உங்கள நகைச்சுவையால் யாவரையும் கவர்ந்தவர் நீங்கள். நீங்கள் முந்தி மாதிரி வர மாட்டீர்கள் என்று நினைக்க கவலையாக தான் இருக்கிறது இருந்தாலும் நீங்கள் தாயகம் செல்லுகிறீர்கள் எனும் போது மகிழ்வாக இருக்கிறது,. அங்கு இருந்து வரவும். உங்களை எதிர்பார்த்து இருப்போம். உங்கள் பயணம் இனிதே அமைய இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

நகைச்சுவை கருத்துக்களால் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த முகத்தார் தாத்தா தமிழீழம் சென்று தனது குடும்பத்துடன் இணைவது மகிழ்வழித்தாலும் ஓர் அன்பு உறவு பிரிகின்றதே என்ற ஒரு ஆதங்கம் மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வாக. அங்கிருந்தும் யாழ் கருத்துக்களம் வருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன் ........

அன்புடன் அருவி.

Link to comment
Share on other sites

முதியவராய் களத்தில்

முத்தான கருத்துக்களை

முன்வைத்து

முறுவலுடன் களத்தை

முடுக்கிவிட்டு

முடிவில் எம் நெஞ்சங்களை வேதனையால்

முறுக்கி பிழிந்துவிட்டு

போறாரே போறாரே முகத்தார்.

மீண்டும் எம்முடன் இணைவார் என்று நம்புகிறேன். :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

என் இனிய நண்பன் முகத்தான் !!!!!!

தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கருத்தால் எம்மனதை கொள்ளை கொண்ட முகத்தான் நாடு சென்று தன் குடும்பத்தாரோடு இணைந்து எம்மை எல்லாம் என்றும் மறவாமல் மீண்டும் களமாடவருவார் என்ற நம்பிக்கையுடன்

சிசிசிசிசி..........

Link to comment
Share on other sites

முகத்தார் ,

உங்கள் பயணம் இனிதே நடக்கட்டும்,இல்லாளுடன் இணைவதை இட்டு மகிழ்ச்சி.பொன்னாம்மா அக்காவையும் கூட்டிக் கொண்டு வரலாம், ஆனா என்ன இனி எழுதிறதுகளைக் கவனமா எழுத வேணும் பிறகு வீட்ட சாப்பாடு அந்த மாதிரிக் கிடைக்கும்...

Link to comment
Share on other sites

தாயகம் சென்று உறவுகளுடன் மகிழ்ந்து, எதிர்காலத்தில் என்றும் களிப்புடனும் நிம்மதியுடனும் வாழ வாழ்த்துக்கள் முகத்தார்.

தங்களது வாழ்க்கைப் பயணம் சீராகச் செல்ல எப்பொழுதும் நான் வணங்கும் இறை துணை நிற்பாராக!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾¡Â¸õ ¾¢ÕõÒõ ¦ÀâÂÅâüÌ Å¡úòÐì¸û! ±ó¾ ¿¡¼¡É¡Öõ ¾¡ö ÁÊ §À¡ø ͸õ ÅÕÁ¡ ±ýÉ? "Ó¸ò¾¡÷ Å£Î" ¦ÅÚ¨Á¡ɡÖõ ÀÚ¢ø¨Ä þÉ¢ ÍýÉ¡¸î ºó¨¾ ¸¨Ç ¸ðÊÅ¢Îõ ±ýÀ¨¾ ¿¢¨ÉòÐ Á¸¢ú§Â!

Link to comment
Share on other sites

நகைச்சுவையென்றாலும் நசுூக்காக சில சமுதாய தவறுகளைச் சுட்டிக்காட்டும் பாங்கும் எவர் கருத்தென்றாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை இப்படி எவ்வளவோ உங்களைப் பற்றி சொல்லலாம். அப்படியான நீங்கள் இப்படித் திடீரென்று விடைபெறுவது சங்கடமாகத் தான் உள்ளது. நீங்கள் என்றும் உங்கள் குடும்பத்தாருடன் சந்தோசமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் ஊரிலிருந்து எங்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

ஹாய் முகம்ஸ்.....ஊருக்குப் போறீங்களோ..சரி சந்தோசமாப்போட்டு நேரம் கிடைக்கும்போது யாழ் பக்கம் வாங்க.

Link to comment
Share on other sites

தாயகம் திரும்பும் முகத்தார் ஐயா பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன் -!

விரைவில் மீண்டும் யாழுடன் இணைந்திடுவீர்களென்ற நம்பிக்கையில் -மனங்களினால் - பிரியாத விடை தருகிறோம்-! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகந்தாரின் தாயகப்பயணம் ஒரு கள உறவாய் இருந்து வருந்தும் அதே நேரம் ஒரு சாதாரண மனிதனாக இருந்து மகிழ்வடைகின்றேன். உங்கள் தாயக வாழ்வு வளமுடன் அமைய வாழ்த்தி...தொடந்தும் யாழுடனும் அதன் இனிய கள உறவுகளுடனும் இணைந்திருக்குமாறு அன்போடு வேண்டுகின்றேன்..

Link to comment
Share on other sites

கவலையா இருக்கு.....

போறீங்களா?

உண்மையா?

சரி . . போங்க . . .

போட்டு வாங்க....

சரியா . . .

உங்களோட பெரிசா நான் பழகேல்ல ...

உங்கட ஆக்கங்கள மிகவும் விரும்பி வாசிப்பன்

தாயகம் நோக்கிய உங்கள் பயணம் எந்தவித பிரச்சனையுமில்லாம அமைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

மற்றது . . .

எனது வாழ்த்துக்களும்...

வீட்டை போன உடன மறக்காம தந்தி அடிங்கோ.....

றோட்டைக் கடக்கும் போது ரெண்டு பக்ககமும் வடிவா பார்த்து கடவுங்கோ.

கவனம்.

மீண்டும் சந்திப்போம் என்ன நம்பிக்கையுடன்.

உங்கள் அபிமான வாசகன்.

ராகுலன்.

Link to comment
Share on other sites

நண்பா எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்.....

Link to comment
Share on other sites

முகம்ஸ் சுகமே போய்ட்டுவாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்த்து காத்திருப்போம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார்-மாசலா மா, இன்சா அல்லா மீண்டும் உங்களை களத்தில் சந்திப்போம்.இனி எழுதுபவை இராணுவகட்டுபாடு பகுதியாயின் கவனமாக எழுதவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.