Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

கள தோழர்கள் பலர் கடவுளை கண்டு இருப்பார்கள் .. அவர்கள் பாவித்த வழி முறையை இங்கிட்டு பகிர்ந்து கொள்ளவேணும் .. ஒம் நமோ நாராயணா என்று சொல்லி மண்டை கிழிந்து அது மேல்லோகத்தில் மட்டும் தான் செல்லுபடி ஆகுமாம் .. ஆதை இந்த இக லோகத்தில் சொல்லி மண்டை கிழிந்து செத்து போனார் நம்ம ராமானுஜர் திரும்பெரும்புதூர் (ராஜுவ் பழி தீர்க்க பட்ட இடம் ..) யார் மண்டை கிழிந்தால் என்ன ..? எனக்கு இக வாழ்கை போரடித்து போய்விட்டது ஐ வாண்ட் நெக்ஸ்ட்... புயுச்சர் பிளான்ஸ்.. அவரவர் செய்த பாவங்களும் புண்ணியங்களும் அந்த அந்த ஆத்மாவை சுற்றி ஒரு நூல்கண்டு போல வருமாமே..? தியானம் செய்து அதை அறுக்க முடியுமா..?

கண்களைத்தான் பாவித்தோம் .

எமது கண்களால் நாம் கண்ட கடவுள்கள் மாவீர்கள்தான்

மருது நான் பேய் என்றால் ஏன் அத்தானை இழுக்கிறீர்கள்?

உங்களை வேறு யார்தான் தூங்கவைக்க போகிறார்கள்?

Link to comment
Share on other sites

 • Replies 155
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Eelathirumagan

ம்.. மிகவும் நல்லது, ஈசன் எனது கருத்துக்களை தொடரமுன், இரு விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 1. நான் ஒரு உளவியலாளனோ அல்லது உளவியல் நூல்களை நுணுகி ஆராய்ந்தவனோ அல்ல. 2. இது ஒரு மிகவு

புரட்சிகர தமிழ்தேசியன்

உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை...

புரட்சிகர தமிழ்தேசியன்

திருவாசகம் - நான் யார் ? திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று "நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர்

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருது பேய் என்றால்என்ன?

எதற்கும் நிழலியின் இக்கவிதையை வாசியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96625

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப் படி, உயிர் என்பது அழிவில்லாது! அழிக்கப் பட முடியாதது!

நாங்கள் விஞ்ஞானத்தில், சந்தித்த கருதுகோள்கள் சில காலங்களின் பின்பு உடைத்து விழுவதை, எமது கண்களாலேயே காண்கின்றோம்!

உதாரணமாக, ஒளி நேர்கோட்டில் பயணிக்கின்றது! இது உண்மையல்ல என்கின்றன, தற்போதைய ஆய்வுகள்!

டார்வினின் கூர்ப்புத் தத்துவம்! இது உண்மையாக இருக்காது என்கின்றது, நவீன விஞ்ஞானம்!

கீதை ஓரளவிற்கு, உண்மையைப் பேச முனைகின்றது! ஆயினும், வருணாச்சிர தர்மத்தை, விட்டுக்கொடுக்க விரும்பாததால், சில இடங்களில் தனக்குத் தானே,சமாதி கட்டிக் கொள்கின்றது!

ஆக, உயிர் என்பது, பிரபஞ்சத்தின் சடங்களைப் போலவே, ஏதோ ஒரு பகுதியில் இருந்து தோன்றுகின்றது. அதற்கு அழிவில்லை.

எல்லாக் கோள்களும், சில அடிப்படை மூலகங்கள் மூலம் உருவானவை! இந்த மூலகங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை.

இதே போல பிரபஞ்சத்தில் இருந்தே பகுத்தறிவும் உருவாகியது!

அதாவது பிரபஞ்சம் பகுத்தறிவு உள்ளது! அதிலிருந்தே எமக்கும் பகுத்தறிவு வந்திருக்க வேண்டும்!

உங்கள் மனம் மட்டுமே உங்களுடன் எப்போதும் வந்து கொண்டிருக்கும்!

அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தையே, எல்லாம் மதமும் வற்புறுத்துகின்றன!

ஆழ்நிலைத் தியானம், செபம் போன்றவை,மனத்தைத் தூய்மைப் படுத்தும் வழிகளே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

ஏன் நீங்கள் ஊறனி சுடலை பக்கமோ அங்கையல்லாம் இந்த கதைகள் சகஜம்.

Edited by purmaal
Link to comment
Share on other sites

ஊடகங்களின் "முன்ஜென்ம' வியாபாரம் - இறைவி

media-3.jpg

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்களில் நேரத்தை வீணடிப்பதில் சிறிதுகூட கவலைப்படுவதோ, வெட்கப்படுவதோ இல்லை. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களில் பலரும் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

எந்த அளவிற்கு இந்த நிலைமை சென்று கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களை பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின்போது வீட்டில் உள்ள கேபிள் இணைப்புகளை நீக்கவும், தொடர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லி கேட்டுக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது.

சரி, தொடர்களின் பிடியில் மாட்டக்கூடாது என்ற உறுதியுடன் அரசியல் விவாதங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள், நாட்டு நடப்புச் செய்திகள், அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்றால், அவற்றிலும் கூடுமானவரை மூடநம்பிக்கைகளைத் திணித்து, ஆசைகளை விதைத்து, அருவெறுப்புகளை வளர்க்கும் வண்ணம்தான் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தொடர்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றால், குப்புறத்தள்ளிய குதிரை, குழியையும் பறித்தது போல, மடமைச் சேற்றில் தள்ளுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன நிகழ்ச்சிகள். அந்த வரிசையில், முன்ஜென்மம் என்ற பெயருடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் கூத்து மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.

நடிகர் அஜய் ரத்தினத்தின் முன் உரையுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி பைபிள், குரான், கீதை போன்றவற்றைத் துணைக்கழைத்தது மட்டுமன்றி அறிவியல் ஏற்றுக்கொண்ட ஹிப்னாடிசம் மூலமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது என்றவுடன் அதனைப் பார்க்கும் ஆர்வம் இயல்பாகவே உந்த ஆரம்பிக்கிறது.

சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட்டும், அவரது அக்கா வளர்மதியும் அக்கா மகனும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன்னை ஷீர்டி சாய்பாபாவின் பக்தன் என்றும், தாம் சரியான வாய்ப்புகளை நடிப்புத் துறையில் பெறாத பொழுதெல்லாம் தனது அக்கா சாமியாடி அருள்வாக்குச் சொல்லி தமக்கு நம்பிக்கை அளித்ததாகவும், அரசியலில் ஒரு பெரிய தலைவரின் கீழ் பணியாற்றும் மிகச் சிறப்பான வாய்ப்பும், அவர் கதை வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் தமக்கு ஷீர்டி சாய்பாபாவின் அருளால் கிடைத்தது என்றும் புளகாங்கிதமடைந்த அவர் தனது குணங்களாக எல்லோரையும் நேசிப்பவன் என்றும், முன்கோபம் உடையவன் என்றும், சிறுவயதில் திருவிழாகடை ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிவிட்டு பின் பயந்து அதனைத் தூக்கி எறிந்ததாகவும், இசுலாமிய நண்பர்கள் பலர் உள்ளதாகவும், பலருக்கு நன்றிக்கடன் பட்டவராகவும் தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.

media-2.jpgஅவரை ஹிப்னடைஸ் செய்யும் மருத்துவராக வந்த வேதமாலிகா அவர் பங்குக்கு முன்ஜென்மம் என்பது கதையோ அல்லது கற்பனையோ இல்லை. இதன் தாய்வீடு இந்தியா என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகவும், ஆதிசங்கரரின் புனரபி ஜெனனம் முதல் திருவள்ளுவரின் எழுபிறப்பின் தீயவை தீண்டா வரை அனைத்தையும் துணைக்கழைத்து அமெரிக்காவில் இதனை நிரூபித்துள்ளார்கள் என்று நீண்ட புளுகு உரையுடன் போஸ் வெங்கட்டை நினைவுத் தூக்க (ஹிப்னாடிசம்) நிலைக்கு அழைத்துச் சென்றார்.

முதலில் இந்த ஜென்மத்தில் (0-வயது) அம்மா வயிற்றில் அவர் இருந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாக கூறி - அவரிடம் நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். போஸ் வெங்கட் இல்லை என்றும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறுகிறார்.

பிறகு, அதிலிருந்து முந்தைய ஜென்மத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூற போஸ் தான் ஒரு போர்வீரனாக சண்டையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். உடனே மருத்துவர் எந்த நாட்டுடன் சண்டை எனக் கேட்க அவர் வேறு நாட்டுடனல்ல, ஜாதிச் சண்டை என்கிறார். ஓ ஜாதிச் சண்டையா எந்த நாடு எனக் கேட்க நான் சீனாவில் போர்வீரனாக இருக்கிறேன் என்கிறார். பின் என்னவாயிற்று என்று கேட்க நான் இறந்துபோய்விட்டேன் என நினைக்கிறேன். வெள்ளை தாடி, பூமாலை சின்னப் பசங்க எல்லாம் குதித்து ஆடுவதுபோல் தெரிகிறது என்கிறார். ஓ நீங்கள் இறந்துவிட்டீர்கள். என்ன வயது என்று தெரிகிறதா எனக் கேட்க வயது 40-45க்குள் இருக்குமென நினைக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு மருத்துவர் அதற்கு முந்தைய ஜென்மத்திற்குச் செல்வதாகக் கூறுகிறார். அதில் பச்சை வயல்கள் நிரம்பிய ஊரில் மதகுருவாக மசூதி ஒன்றில் இருப்பதாகக் கூறுகிறார். வயது என்ன என்று கேட்க 70-க்கு மேல் என்கிறார். எந்த நாடு என்று மருத்துவர் கேட்க மலைகள் நிறைய இருக்கிறது. ஈரான் அல்லது ஈராக்காக இருக்கலாம் என்கிறார். அந்த வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருந்து இறந்ததாகக் கூறுகிறார்.

அடுத்து வேறொரு ஜென்மத்திற்குள் செல்ல அதிலும் முஸ்லிமாக இருப்பதாகவும் மலைப்பகுதியில் உள்ள தாஜ்மகால் போன்ற அமைப்பில் ஒரு இந்து கோவில் ஒன்றில் திருடச் செல்வதாகவும், ஆனால் அங்கு எதையும் திருடி வரவில்லை என்றும் கூறுகிறார்.

முடிவாக மருத்துவர் அவர் கடந்த எந்தப் பிறவியிலும் திருமணம் ஆகாதவராகவே இருந்திருக்கிறார் என்றும் அப்படி இருந்தது வாழ்க்கை முழுமையடைந்ததாகாது என்றும், எனவே அப்பா, அம்மா, அன்பான அக்கா, மனைவி குழந்தையுடன் வாழ்ந்து, விட்டுப்போன கடமைகளை முடிக்கவே இந்த ஜென்மத்தில் அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றிருப்பதாகவும், அனைவருக்கும் உதவும் நல்ல குணமுள்ளவராக இருப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை முடிக்கிறார்.

இந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முழுமையாகக் கூறக் காரணம், சீனாவின் போர் வீரனாக ஜாதிச் சண்டையில்(!?) ஈடுபட்டு இறந்ததையும், பசுமையான ஊராக(!?) ஈரானிலோ அல்லது ஈராக்கிலோ மதகுருவாக இருந்ததையும், தாஜ்மகால் போன்ற மொகலாய கட்டட அமைப்பில் இந்து கோவில்(!?) ஒன்றையும் பார்த்ததாகக் கூறுவதை நம்புவோம் என்று நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அனைவரையும் வடிகட்டிய முட்டாளாக ஆக்கும் எண்ணத்துடன் செயல்படும் ஹிப்னாடிசம் செய்யும் மருத்துவரையும், நிகழ்ச்சியை வழங்கும் நடிகரையும் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்காகத்தான்.

இதே போன்றுதான் அடுத்த வாரத்தில் வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிஷா, ஆண் மயிலாக ஒரு ஜென்மத்திலும், பசுமாடாக ஒன்றிலும், கேரளப் பெண்ணாக பாம்பு கடித்து இறப்பவராக ஒன்றிலும் இருந்ததாக கதையளக்கப்பட்டது. இவரும் இந்த ஜென்மத்தில் அம்மா வயிற்றில் இருந்தபோது மகிழ்ச்சியாக இல்லை என்றார். வாரத்திற்கு இருமுறையாவது சென்னை கபாலீசுவரர் கோவிலுக்குச் செல்லவில்லையென்றால் தனக்கு நிம்மதியாக இருக்காது. அந்த அளவிற்குப் பக்தி உள்ளவள் என்று தம் பெருமையைக் கூறினார்.

தொலைக்காட்சித் தொடர்களில் பார்ப்பனப் பெண்மணியாக நடித்து வரும் லட்சுமி என்ற நடிகை ஒரு ஜென்மத்தில் மைசூர் அரண்மனை நாட்டியக்காரியாகவும், அடுத்த ஒன்றில் காஞ்சிபுரத்தில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே இருக்கும் அக்கிரஹாரத்தில் உலாவும் ஆவியாகவும், திருப்பதி மடத்து(!) தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியாக ஒன்றிலும், மற்றொன்றில் பார்ப்பனக் குடும்பத்தில் காயத்ரி என்ற பெயரில் இளம்பெண்ணாக இருந்ததாகவும் தண்ணீரில் விழுந்து இறந்த தனக்கு எல்லாக் காரியங்களும் செய்ததாகவும் கூறினார். காஞ்சிபுரத்தில் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறிய இவர் நினைவுத் தூக்கத்தின்போது காஞ்சிபுர கோவில் தெருக்களைச் சரியான முறையில் கூறி வேதம் புதிது படத்தில் வரும் கதையையும் சேர்த்துக் கதையளந்தார். அடுத்தடுத்த வாரங்களிலும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் பாபிலோனா, தொலைக்காட்சித் தொடர் நடிகைகள் காவேரி, அபிதா போன்ற அனைவரையும் இந்த மாதிரியே பல ஜென்மங்களில் பிச்சைக்காரியாக, ராணியாக, புறாவாக என பலவிதமாக இருந்ததாகக் கூறி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மணிநேர வியாபாரத்தை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். சாதாரண நிலையில் உள்ள பொதுமக்களில் யாரையாவது அழைத்து வந்து இந்த நிலைக்கு உட்படுத்த நினைக்காமல் நடிகர், நடிகையாகவே பார்த்து நடிக்க வைத்திருப்பதே இந்த நிகழ்ச்சியின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அப்போதுதானே அடுத்து வருபவர்களுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்சியளிக்க முடியும்.

media-1.jpgஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முன்னுரையுடன் மறுபிறப்பு பற்றி புத்த மதத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டாக்டர் பிரைய்ன் வெய்ஸ் இப்படிச் செய்தார். பைபிளில் ஏசு இப்படிச் சொன்னார்; ஏதோ ஒரு நாட்டில் எட்கர் கேஸ் இப்படிக் குணப்படுத்தினார் என்று நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களை ஏதோ மருத்துவ முறைப்படிதான் நிகழ்ச்சியை நடத்திச் செல்வதாக ஏமாற்றும் இந்தக் கயமையை நாம் எப்படி ஆதாரபூர்வமாக மறுப்பது? இப்படிப்பட்ட பேய், பில்லி, ஆவி, மறுபிறப்பு மூடநம்பிக்கைச் சவால்களை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்ட மனநல மருத்துவர் கோவூர் அவர்கள் தமது நூல்களில் இவற்றைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறார். டாக்டர் கோவூர் அவர்களின் வளரும் நாடுகளும் மடமை நம்பிக்கைகளும் என்ற கட்டுரையில் ஹிப்னாடிசம் (நினைவுத் தூக்கம்) மூலமாக இப்படிப்பட்ட கற்பனைக் கனவு காணும் உணர்வுகளை உந்திவிட முடியும். முற்பிறப்பில் நம்பிக்கையுள்ள ஓர் இந்து அல்லது பவுத்தரை இப்படி ஹிப்னாடைஸ் (மயங்க) செய்தால், அவர் உடனே தமது முந்திய பிறவி பற்றிக் கதையளக்கத் தொடங்குவார். சொர்க்கம் நரகம் இவற்றை நம்புகின்ற ஒரு கிறித்தவர் அல்லது ஒரு முஸ்லிம் இப்படி ஹிப்னாடிசத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அவர் சொர்க்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டால் உடனே அதைப்பற்றி வருணிக்கத் தொடங்கிவிடுவார். இப்படி ஓர் அரைமயக்க நிலையில் இருப்போரிடமிருந்து உண்மைகளை வரவழைப்பதாகச் சொல்வது முட்டாள்தனமாகும். மனோதத்துவ (உளவியல்) மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இது ஆராய்ச்சிக்கு உதவலாம் என்றும்,

படிப்பறிவில்லாத பாமரர்கள் தங்கள் அறியாமையால் மூடக்கற்பனை காணும் நோய்வாய்ப்பட்டு ஏதாவது சொன்னால், அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பெயரைச் சூட்டி மனநோய் மருத்துவ விடுதியில் சேர்த்து விடுகிறோம். ஆனால் படித்தவர்கள் இந்த நோயாளராகும்போது நிலைமை முற்றிலும் முரணாகிறது. சாதாரணப் பாமரப் பைத்தியத்தைவிட இவர்கள்தாம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள், மானிட மனத்தூய்மையில் கலப்படும் செய்து கெடுப்பவர்கள்.

வேதியியல், ரசாயனம், தாவர இயல், விலங்கியல், பொறியியல், மருந்தியல், நிலநூல், வரலாறு, வான இயல் ஆகிய பல்வேறு அறிவியல் துறைகளைப்பற்றி ஆராயும் அறிவாளிகள் படைக்கின்ற நூல்கள் சிந்தனைக் கருவூலங்களாகத் திகழ்பவை. ஆனால் ஈசாப்புக் கதைகள், அராபிய இரவுக் கதைகள் (1001) ஒடிஸ்ஸி, இராமாயணம், பாரதம், குரான், பைபிள் போன்ற ஆபாசக் கற்பனைக் கதைகள் புராணிகர்களின் புளுகுமூட்டைகளாக விளங்குகின்றன.

மனிதனுடைய அறிவுபூர்வமான ஆக்கச் சிந்தனையின் விளைவாகத்தான் இன்றைய விஞ்ஞான விந்தைகளான அணுசக்தி, வானொலி, வானொளி, நிலவில் இறங்குதல், விண்கோள் செலுத்துதல், இருதய மாற்றுச் சிகிக்சை, இரத்தம் செலுத்துதல், செயற்கை மூச்சு (சுவாசம்) கொடுத்தல், சிறுநீரகம் பொருத்துதல் ஆகியவை சாத்தியமாயின. எந்த மதத்தையும் சார்ந்த பக்தி நூல்கள் எவையும் இம்மாபெரும் அற்புதங்களைக் கண்டுபிடிக்க எள்முனையும் உதவிடவில்லையே! என்று மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலும் மற்றொரு கட்டுரையில், வாழ்கின்ற மதங்களில் மிகப் பழைமை வாய்ந்த இந்து மதத்தில், எல்லா உயிர் வாழ்வனவும், அழிவில்லாத ஆத்மா படைத்தவை என்று போதிக்கப்படுகின்றது. ஆனால் மாறுபடாத யூத-_கிறித்தவ_இசுலாமிய மதங்களில், மனித ஆத்மா மட்டுமே அழிவற்றது என்று கூறப்படுகின்றது! 2000 ஆண்டுகட்கு முன் இருந்த புத்தர் இந்து மதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர்; இந்தியாவின் சிறந்த சமுதாய - மதச் சீர்திருத்தவாதி; அவர் மனித ஆவிகூட நிலையானதல்ல என்று கூறிவிட்டார். இதுதான் இன்றைய அறிவியல் (விஞ்ஞானம்) கண்டுபிடிப்பும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் புத்த வேதங்களை எழுத வந்த சிலர், பித்தலாட்டமாகப் புத்தரின் அடிப்படைக் கொள்கைகளையே திரித்துக் கூறிவிட்டனர்! மனித மரணத்துக்குப்பின் அந்த ஆவி நிலைத்திருப்பதற்கு ஏதாவது காரணகாரிய விளக்கம் உள்ளதா? பார்க்கலாம் நாமே!

உயிர் என்பது என்னவெனில், மூச்சு (சுவாச) ஓட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு சக்தியேயாகும். மூச்சின் (சுவாசத்தின்) மூலமாக குளுகோஸ், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் ஆற்றலாக மாற்றப்பட்டு பயன் உள்ளவை ஆகின்றன. ஒரு மெழுகுவர்த்தி எரிவதற்கு இதை ஒப்பிடலாம். மெழுகு உருகிவிடாமல், அல்லது எரிபொருளாக மாறாமல் இருக்குமானால், ஒரே மெழுகுவர்த்தியை எத்தனை தடவை வேண்டுமானாலும் கொளுத்தி, அணைத்து, பயன்படுத்த முடியும்! அதே போல, உயிர் போனபின் மனித உடல் அழுகித் தேய்ந்து குறைந்து மாய்ந்துபோகாமல் இருக்கக் கூடுமானால், அந்த உயிர் அல்லது ஆவியையே மீண்டும் செலுத்தி, மனிதன் சாகாமல் இருக்கச் செய்ய இயலும்.

உயிர் என்பது தங்கியிருக்க எப்போதுமே ஓர் உடல் தேவை! உடலை விட்டுப் பிரிந்து, அது எங்கேயும், எதிலேயும், தங்கமுடியாது! அதேபோல், மனம் என்பது தனியாக இயங்கக் கூடியதல்ல. அறிவியல் பரிசோதனைகளில், மனத்தைச் சார்ந்த உணர்வுகளான காதல், அன்பு, கோபம், வெறுப்பு, கொடுமை, இரக்கம் ஆகியவற்றுக்கு மூளையில் தொடர்புடைய தனித்தனி நரம்புகளை, மின் அதிர்வு செய்ததன் மூலம், உருவாக்கிக் காட்ட முடிந்தது! அதன் வாயிலாக என்ன புரிந்தது? மனித உடலில்தான் உயிர் தங்க முடியும்! அந்த உடலில் உயிர் தங்கி, உடலும் கெடாமலிருக்கும்போதுதான், மூளையிலுள்ள மனம் என்று நாம் அழைக்கும் செயலும் இருக்க முடியும்! உயிருக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டு, ஆத்மா என்றோ, ஆவி என்றோ, ஏதும் கிடையாது! கிடையவே கிடையாது!! என்றும் கூறுகிறார்.

மனித ஆத்மா மட்டும்தான் அழியாதது என்று பிற மதங்களின் நம்பிக்கைப்படிப் பார்த்தால், வண்ணத்துப் பூச்சியாகவும், வண்டாகவும், புறாவாகவும் பிறந்தவர்களின் ஆத்மா எப்படி அழியாமல் இருக்கிறது?

எல்லா உயிர்களுக்கும் ஆத்மா உண்டெனில், செடி, கொடி, புழு, பூச்சி, பூஞ்சை, பாசி வகையறாக்களின் ஆத்மாக்கள் எல்லாம் எங்கே? அவற்றின் மறுசுழற்சிக்கு என்று என்ன விதிகள் இருக்கின்றன?

ஆ... ஊ... என்றால் ஆயிரம் விளக்கங்களைக் கேட்கும் விஜய் டி.வி. நடந்தது என்ன? குழு, விஜய் டி.வி. அரங்கத்துக்குள் நடப்பது என்ன? என்பதை வெளியே கொண்டுவர வேண்டாமா?

ஆக்கபூர்வமான விவாதங்கள் என்று அறியப்படும் நிகழ்ச்சிகளிலேயே அமானுஷ்யங்கள் என்று விவாதிக்கும்போது, உங்கள் அறிவியல் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பேசுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. அப்படியென்றால் முட்டாள்தான் அங்கு பேச முடியுமா? பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் விளக்கமளிக்க முடியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்படும் அனுபவத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்களே! அப்படியென்றால் அவர்கள் விரும்புவது சுவாரஸ்யத்தை நீட்டித்துக் கிடைக்கும் வியாபாரத்தைத்தானே!

தொடர்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த மாதிரி உளவியல் மருத்துவர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளும் நம் மூளையை மழுங்கடிக்கின்றன என்றால் அறுவை சிகிச்சைக் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் முட்டாள், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னதில் எள்ளளவாவது பிசகு இருக்கிறதா? மக்களின் மடத்தனத்தைப் பயன்படுத்தி, அதை விரிவாக்கி விற்றுக் காசு பார்க்கும் இந்த மகாமகா அயோக்கியத்தனத்தைத்தான் அத்தனை ஊடகங்களும் செய்து வருகின்றன. இவற்றை அம்பலப்படுத்தி, மக்களைத் தெளிவுபெறச் செய்ய வேண்டியது நம் கடமை.

http://www.unmaionline.com/new/687-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF.html

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப் படி, உயிர் என்பது அழிவில்லாது! அழிக்கப் பட முடியாதது!

நாங்கள் விஞ்ஞானத்தில், சந்தித்த கருதுகோள்கள் சில காலங்களின் பின்பு உடைத்து விழுவதை, எமது கண்களாலேயே காண்கின்றோம்!

உதாரணமாக, ஒளி நேர்கோட்டில் பயணிக்கின்றது! இது உண்மையல்ல என்கின்றன, தற்போதைய ஆய்வுகள்!

டார்வினின் கூர்ப்புத் தத்துவம்! இது உண்மையாக இருக்காது என்கின்றது, நவீன விஞ்ஞானம்!

கீதை ஓரளவிற்கு, உண்மையைப் பேச முனைகின்றது! ஆயினும், வருணாச்சிர தர்மத்தை, விட்டுக்கொடுக்க விரும்பாததால், சில இடங்களில் தனக்குத் தானே,சமாதி கட்டிக் கொள்கின்றது!

ஆக, உயிர் என்பது, பிரபஞ்சத்தின் சடங்களைப் போலவே, ஏதோ ஒரு பகுதியில் இருந்து தோன்றுகின்றது. அதற்கு அழிவில்லை.

எல்லாக் கோள்களும், சில அடிப்படை மூலகங்கள் மூலம் உருவானவை! இந்த மூலகங்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை.

இதே போல பிரபஞ்சத்தில் இருந்தே பகுத்தறிவும் உருவாகியது!

அதாவது பிரபஞ்சம் பகுத்தறிவு உள்ளது! அதிலிருந்தே எமக்கும் பகுத்தறிவு வந்திருக்க வேண்டும்!

உங்கள் மனம் மட்டுமே உங்களுடன் எப்போதும் வந்து கொண்டிருக்கும்!

அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தையே, எல்லாம் மதமும் வற்புறுத்துகின்றன!

ஆழ்நிலைத் தியானம், செபம் போன்றவை,மனத்தைத் தூய்மைப் படுத்தும் வழிகளே!

நீங்கள் உயிரும் ஆத்மாவும் ஒன்று எனக் கருதுவது போல் தெரிகிறது பூங்கையூரன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டிங்க ... இந்த கேள்விக்கு விடை தெரியாத படியால்தானே எல்லா மதங்களும் உயிர்வாழமுடியுது. எத்தனை கொலைகள் , சண்டைகள் .....மனித உயிருக்கு மதிப்பளிப்பதாக சொல்லிக்கொண்டு கொல்வதும் அவர்களே. விலங்குகளுக்கு எந்த தயவையும் வழங்காததும் அவையே. எவ்வளவு பணம் விரயம் கடவுளின் பெயரால் . மறுபடியும் சொல்றேன், அண்ணே விட்டுடுங்க துறவறம் வேண்டாம் .

ஈழத்த்தமிழனுக்கு ஆறடி நிலம் கூட இல்லை

Edited by kssson
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்..

எல்லாம் மயக்கங்களே

Vivekananda.jpg

அடிமை அடிமையை காண்பான் மோகம் கொண்டவன் மோகத்தை காண்பான் தூய்மையற்றவனே தூய் மை அற்றவற்றை காண்பான் தேசம் காலம் நிமித்தம் எல்லாம் மயக்கங்களே நீ பந்தபட்டுள்ள வயதான காலத்தில் நீ முக்தனாவாய் என்பெதெல்லாம் உனை பீடித்துள்ள நோய் . பேச்சை வளர்க்காதே நீ மாற்றம் இல்லாதவன் நீ அமர்ந்து இரு இந்த வாழ்க்கை ஒரு கனவு அதை கரைந்து போக விட்டுவிடு அவை வெறும் கனவுகள் வேற்றுமைக்ளும் இல்லை பாகுபாடுகளும் இல்லை நீ யார் என்பதை முதலில் தெரிந்து கொள்.

நான் பேரானந்ததின் சாரம் . எந்த கொள்கையையும் பின்பற்ற வேண்டாம் இருப்பவை அனைத்தும் நீயே .யாருக்கும் நீ அஞ்ச வேண்டாம் சந்த மக இரு. கலக்கம் வேண்டாம். நீ பந்தமுற்று இருந்தது இல்லை என்று எண்ணு. பாவம் புண்ணியம் எதுவும் உனை ப்ற்றியது இல்லை.

யாரை வழிபடுவது?

நான் ஆன்மா நான் ஆன்மா என்று சொல்லிகொண்டே இரு ஏனையவை அழிந்து போகட்டும் இரவும் பகலும் புலன்களும் உன்னை ஏமாற்றி கொண்டு இருக்கின்றன இதை நம்முன்னோர்கள் முன்னரே எடுத்துரைத்தனர் .இப்போது அதே உண்மையை நவீன விஞ்சானம் கண்டுபிடித்து வருகிறது ஒரு படம் என்றால் அதற்கு நீளம் அகலம் உண்டு ஆனால் ஒவியனோ அதற்கு ஆழமும் உண்டு என ஏமாற்றி விடுகிறான்

அனைத்திற்கும் மெய் பொருள் எது?

அட்டை ஒன்றிலுள்ள ஊசி துவாரத்தின் வழியாக ஒரு படத்தினை பாக்கிறோம் என வைத்து கொள்வொம் . அந்த படம் முழுமையாக தெரியாத விடத்து அந்த படத்தினை பற்றி தவறான கற்பிதங்களே உண்டாகும். அந்த ஊசி அளவு உள்ள துவாரத்தினை பெரிதாக்க பெரிதாக்க முழுமையான ஓவியம் தெரிகிறது

தவறான கருத்துக்களை நாம் மெய் பொருள் சார்ந்து உருவாக்கி கொள்கிறோம் .ஆனால் படம் எப்படி முன்னர் இருந்ததோ அப்படியேதான் இப்ப்போதும் உள்ளது .நாமே அனைத்துமாக இருக்கிறோம்.நம்மை நாமே எதிரில் வருபவைகளிடமும் உள்ளோம்..

நாம் யார் ? நூலில் சுவாமி விவேகானந்தர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உங்கள் கேள்வி ஒரு மிக மிக மிக மிக பழைய கேள்வி என்பதால் எவருமே ஒரு விடையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ரீதியில் அவ்வாறு பதிலளித்தேன். ஆனால் கூகிள் மூலம் தேடிய போது யோகர் சுவாமியின் வரிகளை motto ஆக வைத்துக்கொண்ட இந்த வேலன் சுவாமியார் அகப்பட்டார். என்ன சொல்கிறார் என்று பார்க்க முதல் இவரின் குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி, யோகர் சுவாமிகளிடம் குரு உபதேசம் பெற்றவர் என்றவிசயம் தெரிய வந்தது.

wiki: http://en.wikipedia....tha_Veylanswami

His guru: http://en.wikipedia....ubramuniyaswami

yogar swami wiki : http://ta.wikipedia....%AE%AE%E0%AE%BF

their web site: http://www.hinduismtoday.com/

Edited by kssson
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி தோழர். பதில்தான் தெரியவில்லை.

பார்வையாளராக இருக்க விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் செத்து போனால் எப்படி? நான் தோழர் தப்பிலியுடன் மற்றும் பல ஆருயீர் சகோதர சகோதரிகளுடன் லைனில் இருக்க விரும்புகிறேன்... செத்தவுடன் எல்லா நினைவுகளுடன் அனைத்தியும் கொண்டு போய்விடுமா .. கற்ற கல்வி .. அடித்த எழுத்து..?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

நானே நரகத்திற்கு சென்றாலும் சில தறுதலைகள் இருக்கு அதெல்லாம் வேண்டி விரும்பி வந்தாலும் நரகத்தில் கூட பார்க்க மாட்டேன்.. :D. எண்ணை கொப்பறையில் போட்டு வறுத்தாலும் சரி... எப்பா சாமி நாளை பஞ்ச பூதங்களோடு சந்திப்பம் .. உடலே பஞ்ச பூதங்களால் ஆனதாம்.. நாமே நினைத்தால் அதை அத்தோடு கரைத்து விட முடியுமாம் .. உதாரணம் ராமலிங்க அடிகளார் ஆண்டாள்....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாம் யார் என்று தேடினது போதும் கொஞ்சம் இவங்கட கூத்தையும் பார்த்து ரசிக்கலாம் தானே

Edited by kssson
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உயிரும் ஆத்மாவும் ஒன்று எனக் கருதுவது போல் தெரிகிறது பூங்கையூரன்.

ஈஸ்,

பகவத் கீதை, இருவிதமாக அழைக்கின்றது! மூலத்தை 'பரமாத்மா' என்கின்றது! உயிரை ' ஜீவாத்மா' என்கின்றது!

ஜீவாத்மாவும், பரமாத்மாவும், எதிர் எதிராக, இதயத்தில் அமர்ந்திருப்பதாகவும், ஜீவாத்மாவைப் பரமாத்மா நெறிப்படுத்துவதாகவும் கூறுகின்றது!

இதையே எமது, சைவ மதமும் கூறுகின்றது! அதாவது எமது உடலும், பிரபஞ்சமும் ஒன்றே என்றும், ஒரு 'சிறிய வடிவிலான' பிரபஞ்சமே உடல் என்றும் கூறுகின்றது!

பொதுவாக எல்லா மதங்களும் இதையே சொல்லுகின்றன!

பிரபஞ்சமெங்கும், நிறைத்திருக்கும் 'Dark Matter' ஐ இன்னும் நாங்கள் தேடிகொண்டிருக்கின்றோம்!

அதாவது, திணிவுள்ளது ஆனால், உருவமில்லாதது! இங்கேயே எங்கள் சடப் பொருளின் வரைவிலக்கணம் அடிபட்டுப் போகின்றது!

ஆனால், விண் கலங்களின் திசையை மாற்றக் கூடிய 'ஈர்ப்புவிசை' இந்த 'dark matter' இற்கு உண்டு!

இதே போலவே உயிரும் இருக்கலாம்!

ஆனால், ஆழ்நிலைத் தியான நிலைக்குள், நீங்கள் உள்ளிடும்போது, பிரபஞ்சத்தின் அதிர்வை நீங்கள் உணர்வீர்கள்! அதன் அதிர்வும், உங்கள் அதிர்வும், ஒன்றோடொன்று சீராக, இருப்பதையும் அவதானிக்க முடியும்!

இதனாலேயே, அநேகமான துறவிகள், சந்நியாசிகள் தொடர்ந்தும் தியான நிலையில் இருக்கக் காரணமாகும்!

அவர்கள், அந்த வேளையில், பிரபஞ்சத்தின் அதிர்வுடன் ஒன்றிப் போய் இருக்கின்றார்கள்!

'ஓம்' என்ற ஒலிவடிவத்தின். மூலமும் இந்த பிரபஞ்சத்தின் அதிர்வே!

விஞ்ஞான விளக்கமேனின், Big Bang அதிர்வின், விளைவே இந்த 'பிரபஞ்ச' அதிர்வாகும்!

உயிரானது திரும்பவும், தனது மூலத்திற்கு, திரும்புவதையே வள்ளுவர் கூடப், பின்வருமாறு கூறுகின்றார்.

'அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால்,

பிறவாழி நீந்தலரிது"

அறவாழி அந்தணன் என்பது, பிராமணக் கலப்பால் வந்திருக்கலாம்!

ஆனால், தொடங்கிய இடத்திற்கு, ஆன்மா திரும்பிப் போவதே இதன் உட்கருத்தாகும்!

இதையே, சிறி வைகுந்தம்' என்று கீதை கூறுகின்றது!

சொர்க்கம் என்று பைபிளும், குரானும் கூறுகின்றன!!!

Buddhist Meditation

Meditation and mindfulness

In the Buddha's great discourse on the practice of mindfulness, the Maha-Satipatthana Sutta, both the object and the means of attaining it are clearly set forth. Attentiveness to the movements of the body, to the ever-changing states of the mind, is to be cultivated in order that their real nature should be known. Instead of identifying these physical and mental phenomena with the false concept of "self," we are to see them as they really are: movements of a physical body, an aggregate of the four elements, ('mahabhutas') subject to physical laws of causality on the one hand, and on the other, a flux of successive phases of consciousness arising and passing away in response to external stimuli. They are to be viewed objectively, as though they were processes not associated with ourselves but belonging to another order of phenomena.

Buddhist Meditation : true selfbuddha.jpg

From what can selfishness and egotism proceed if not from the concept of "self" ('sakkayaditthi')? If the practice of any form of meditation leaves selfishness or egotism unabated, it has not been successful. A tree is judged by its fruits and a man by his actions; there is no other criterion. Particularly is this true in Buddhist psychology, because the man 'is' his actions. In the truest sense they, or the continuity of kamma and 'vipaka' which they represent, are the only claim he can make to any persistent identity, not only through the different phases of this life but also from one life to another. Attentiveness with regard to body and mind serves to break down the illusion of self; and not only that, it also cuts off craving and attachment to external objects, so that ultimately there is neither the "self" that craves nor any object of craving. It is a long and arduous discipline, and one that can only be undertaken in retirement from the world and its cares. Yet even a temporary retirement, a temporary course of this discipline, can bear good results in that it establishes an attitude of mind which can be applied to some degree in the ordinary situations of life.

Buddhist Meditations: Detachment & Concentration

Detachment, objectivity, is an invaluable aid to clear thinking; it enables a man to sum up a given situation without bias, personal or otherwise, and to act in that situation with courage and discretion. Another gift it bestows is that of concentration -- the ability to focus the mind and keep it steadily fixed on a single point ('ekaggata', or one-pointedness), and this is the great secret of success in any undertaking. The mind is hard to tame; it roams here and there restlessly as the wind, or like an untamed horse, but when it is fully under control, it is the most powerful instrument in the whole universe. He who has mastered his own mind is indeed master of the Three Worlds.

In the first place he is without fear. Fear arises because we associate mind and body ('nama-rupa') with "self"; consequently any harm to either is considered to be harm done to oneself. But he who has broken down this illusion by realizing that the five 'khandha' process is merely the manifestation of cause and effect, does not fear death or misfortune. He remains equable alike in success and failure, unaffected by praise or blame. The only thing he fears is demeritorious action, because he knows that no thing or person in the world can harm him except himself, and as his detachment increases, he becomes less and less liable to demeritorious deeds. Unwholesome action comes of an unwholesome mind, and as the mind becomes purified with Meditation, healed of its disorders, bad kamma ceases to accumulate. He comes to have a horror of wrong action and to take greater and greater delight in those deeds that are rooted in 'alobha', 'adosa', and 'amoha' -- generosity, benevolence and wisdom.

மூலம்: http://www.freemeditations.com/buddhist_meditation.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் செத்து போனால் எப்படி? நான் தோழர் தப்பிலியுடன் மற்றும் பல ஆருயீர் சகோதர சகோதரிகளுடன் லைனில் இருக்க விரும்புகிறேன்... செத்தவுடன் எல்லா நினைவுகளுடன் அனைத்தியும் கொண்டு போய்விடுமா .. கற்ற கல்வி .. அடித்த எழுத்து..?

செத்துப் போனவுடன், நீங்கள் தூக்கத்திலிருந்து எழும்புவது போல இருக்குமெனவும், உண்மையில் இந்தப் பூவுலக வாழ்வுதான் மாயை, என்பதை உணர்வீர்கள் என்றும், போய்த் திரும்பி வந்தவர்கள் கூறுகின்றார்கள்!

தோழர்களுக்கு வேண்டுமானால், இரவில் எங்காவது தனியாகப் போகும்போது 'ஹலோ' சொல்லிக்கொள்ளலாம்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்,

பகவத் கீதை, இருவிதமாக அழைக்கின்றது! மூலத்தை 'பரமாத்மா' என்கின்றது! உயிரை ' ஜீவாத்மா' என்கின்றது!

ஜீவாத்மாவும், பரமாத்மாவும், எதிர் எதிராக, இதயத்தில் அமர்ந்திருப்பதாகவும், ஜீவாத்மாவைப் பரமாத்மா நெறிப்படுத்துவதாகவும் கூறுகின்றது!

உங்கள் ஆன்மீகப் பாதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பூங்கையூரன். இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய விளக்கம் (Understanding) சற்று வித்தியாசமானது.

ஒரு கருத்தின் (Concept) நம்பகத்தன்மையை நிரூபிக்க மூன்று முறைகளைக் கையாள்வேன்.

1. விஞ்ஞானம் முலம் நிரூபித்தல்.

2. தர்க்க வியல் (Logic).

3. சாத்தியக்கூறை ஆராய்தல் (Probability).

முறை 1 சரி வராவிட்டால் 2 உம், அது சரிவராவிட்டால் 3 உம் அதுவும் சரி வராவிட்டால் கருத்தை மறத்தல் / மறுத்தல்.

உங்கள் அணுகுமுறையும் இதுபோன்றதே. சைவ சித்தாந்த முப்பொருள் உண்மை தத்துவத்தை விஞ்ஞான கருத்துகள் மூலம் பலப்படுத்தும் முயற்சி இந்த அணுகுமுறைதான்.

நம்முடைய ஆய்வு ஒற்றுமை அந்தளவோடு முடிகிறது.

நான் சைவ சித்தாந்த கருத்துக்களில் இருந்து விலகி 10 வருடங்களிற்கு மேலாகிறது.

மேற் சொன்ன மூன்று முறைகள் மூலமும் சைவசித்தாந்த கருத்துக்களை என் அறிவுக்கெட்டியவரை சோதனைக்கு உள்ளாக்கிய போது ஒரு குறித்த எண்ணிக்கையான விடைகாணப்படாத கேள்விகள் மிஞ்சின.

அதே சோதனையை அத்துவைதம் (வேதாந்தம்) மீது நடாத்திய போது அங்கும் ஒரு குறித்த எண்ணிக்கையான விடைகாணப்படாத கேள்விகள் மிஞ்சின. ஆனால் அவற்றின் எண்ணிக்கை சைவசித்தாந்தத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.

குறிப்பாக சைவசித்தாந்தத்தின் சீவாத்மாக்கள், கர்மா , மறுபிறப்பு போன்ற கருத்துகள் பலவீனமாகத்தென்பட்டன. அங்கு பல கேள்விகள் விடை இல்லாதவை. உதாரணமாக ஆத்மாக்களின் கர்மாவை நிர்வகிப்பவர் (Accounts Management ) யார் ?

இது நிச்சியமாக பரமாத்மாவின் வேலையல்ல.

கருத்துக்களின் பலவீனம் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள், பாவ புண்ணியம், மறுபிறப்பு , மோட்சம் போன்ற கருத்துக்களை கைவிட்டுவிட்டேன்.

அதேசமயம் வேதாந்தத்தின் மிகப் பெரிய "ஏன்" என்ற கேள்விக்கான விடையாக‌ மாயை விளங்கிக் கொள்வதும் லேசுப்பட்ட வேலையல்ல.

கீழே இணைப்பில் 3:46 செக்கனில் இலிருந்து பாருங்கள் :)

 • Like 1
Link to comment
Share on other sites

ம். சற்றே வித்தியாசமான ஒரு திரி.

நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசித்தேன். நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டும். தத்துவங்கள், அவை எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், மெய்யறிவை உணர்ந்து கொள்ள உதவா. அவை விஞ்ஞானமாக இருந்தாலும் சரி, மெய்ஞானமாக இருந்தாலும் சரி.

புரட்சி. ஏன் திடீர் என்று இந்த தேடல்? :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புரட்சி. ஏன் திடீர் என்று இந்த தேடல்?

வாழ்க்கை போரடித்து போய்விட்டது.. அடுத்த கட்டம் நோக்கி நகரலாம் என உத்தேசித்துள்ளேன் தோழரே!!

ஆன்மா--ஒரு விளக்கம்

திருமூர்த்தி வடிவமாகிய பரமாத்மாவே ஆன்மா எனப்படும். இது ஜீவாத்மா - பரமாத்மா என இருவகைப்படும். பரமாத்மாவினுள் ஜீவாத்மா ஐக்கியப்பட்டதாகும். இதனால் தான் சீவாத்மா பிரம்மரந்திரம் வழியாக உடலில் புகுந்து , மூளையை அனுசரித்து அவ்வழியாகவே ஆக்கினையை இயக்கி முடிக்கும். ஆன்மா ஒன்றே உலகின் மூலப்பொருளாகவும் - மற்ற யாவுமே சேர்க்கை பொருளாகவும் கருதப்படும். உடலும் மனமும் அத்தகையதே. ஆத்மா பிற விபரங்களை தானாகவே அறிவதால் தனக்கு தானே விளங்கும் தன்மை உடையது. உடலின் மலங்கள் யாவும் கழிந்து - மனதின் மும்மலங்களும் அறவே ஒழிந்து தூய்மை அடையும் பொழுது தான் ஆன்மா சக்தி சகலத்திலும் பிரவர்த்திக்க காரணம் ஏற்படும்.

இது ஒன்றே ஆயினும் ஆன்மா - முமூட்சு - நித்தியா முக்தன் - சீவன் முக்தன் என நான்காக விளக்கப்படும். சுத்த சத்துக்கள் தொடர்பாக உடல் முற்றும் பரவி நிற்கும் சுத்த சூக்கும தத்துவமாகிய ஆன்மா எந்த வடிவிலும் பொருந்தியதல்ல. பிற தத்துவங்களைப் போல் அழியக்கூடியதல்ல. சகல உயிர்களிலும் சமமாக அமைந்துள்ளது.மனதிற்கெட்டாதது பூதமுமின்றி , பிரகிருதியுமின்றி , சுயம்புவாய் தனக்கு தானே விளங்க கூடியது . பேதமும் நிறமும் அற்றது -- பிறப்பற்றது -- நித்தியமானது--மாறாதது -- சூக்குமத்தில் சூக்குமமானது --பெரிதினும் பெரிதானது காலத்தில் தோன்றி அழியும் பொருளல்ல - எப்போதும் அழியாத்தன்மையுடயது . ஆதியும் அந்தமும் அற்றது , இதை சித்தர்களால் மட்டுமே அறிய இயலும்.

http://siddharmaruthuvam.blogspot.in/2012/01/blog-post_29.html

வாழ்வும் மரணமும் இஸ்லாமியர் பார்வை

மனிதர்களின் வாழ்வில் பிறப்புக்கு பின் இறப்பு என்பது தவிர்க்கமுடியாததாகும். காலங்காலமாக மனிதர்கள் இறப்பிலிருந்து விடுபட முடியுமாவென வினவிக்கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால், இதுவரை மரணத்திற்கு மாற்றை யாரும் கண்டுபிடித்ததில்லை. மரணம் என்றால் என்ன? பஹாவுல்லா தமது மறைமொழிகள் எனும் நூலில் மரணத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:

அதீதரின் மைந்தனே!

மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளேன். நீ ஏன் வருந்துகிறாய்? ஒளியின் பிரகாசத்தினை உன்மீது விழுமாறு செய்துள்ளேன். அதிலிருந்து நீ ஏன் உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்?

பெரும்பாலான மனிதர்கள் என்றுமே இறப்பை கண்டு பயந்தே வந்துள்ளனர். இது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பாகவே உள்ள ஓர் உணர்வு. அதை ஓர் ஆற்றல் எனவும் கூறலாம். ஆம், பயம் என்பதும் ஒருவித ஆற்றல்தான் அதாவது பயப்படுவதற்கான ஆற்றல். இந்த ஆற்றல் இயல்பானது, உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது குறித்த உணர்வு மிகவும் அவசியமாகின்றது. பயம் இல்லையேல் மனிதர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதில் கவனமாக இருக்கமாட்டார்கள். மனிதப் பிறவியின் பாதுகாப்பிற்கு இந்த உணர்வு அவசியமாகின்றது. ஆனால், இந்த உணர்வு மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பிரத்தியேக உணர்வும் அல்ல. அது எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. மனிதர்கள் சில வேளைகளில் இப்பய உணர்வை மீறி தற்கொலை, போர் போன்றவற்றில் மரணத்தை தழுவுகின்றனர். வேறு சிலர் தங்கள் நம்பிக்கைக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். உதாரனமாக பஹாய் சமயத்தின் ஆரம்பகாலத்தில் புதிய சமயமான பஹாய் சமயத்தின் துரிதமான பரவலால் பீதியடைந்த அதிகாரிகள் சுமார் 20,000 விசுவாசிகளை கொன்றனர். இதில் விசேஷம் என்னவெனில் இவர்கள் எல்லோரும் தங்கள் நம்பிக்கையை விடமுடியாது என கூறியதால் கொலை செய்யப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இரான் நாட்டில் சுமார் 300க்கும் அதிகமானோர் இதே ரீதியில் கொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் மரண தண்டனைக்கு உள்ளாகியும் உள்ளனர். ஆகவே மரணம் இயல்பாகவும் நிகழலாம் அல்லது அகாலத்திலும் நிகழலாம்.

மனிதர்களின் படைப்பு குறித்த பஹாய் வாசகங்களைப் படிப்போர் பின்வரும் குறிப்பைக் காணலாம்:

வள்ளன்மையின் மைந்தனே!

வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்;…

எல்லா சமயங்களிலும் உள்ளது போல், மரணத்திற்கு பிறகு வாழ்வு குறித்த பஹாய் கருத்துப்படிவம் ஆன்மாவின் இயல்பு மற்றும் இவ்வுலக வாழ்வின் நோக்கத்தோடு மிகவும் ஆழமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பகுத்தறியும் தனி ஆன்மா உள்ளது என பஹாவுல்லா உறுதிபடுத்தியுள்ளார். இறைவனின் உலகங்களில் இந்த ஆன்மா தோற்றம் காண்கிறது. அந்த உலகம் லௌகீகமானதல்ல. அஃது ஆன்மீக உலகம். கருத்தரிப்பின் போது அனுவளவே ஆன பூதவுடல் ஜடப்பொருள்களால் உருவாகின்றது மற்றும் அத் தருணமே இறைவனின் உலகில் இருக்கும் ஆன்மா இந்த கருவோடு இனைகின்றது, இந்த உலக வாழ்வின் போது அந்த ஆன்மா பௌதீக உடலோடு இணைந்தே உள்ளது மற்றும் அதன் பயனாக மனிதப்பிறவி ஏற்படுகின்றது. ஆன்மா நமது உடலுக்கு உயிரியக்க சக்தியை வழங்குகின்றது மற்றும் அந்த ஆன்மா நாமே அன்றி வேறெதுவுமில்லை.

ஆன்மாவை நாம் பௌதீக கருவிகளைக் கொண்டு கண்டுணர முடியாது ஆனால், ஒவ்வொரு தனிமனிதனோடும் நாம் தொடர்புபடுத்தும் நடத்தைப் பண்புக்கூறுகளால் ஆன்மா தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. அன்பு மற்றும் கருணை, நம்பிக்கை மற்றும் மனவுறுதி, மற்றும் மனிதனை ஒரு மிருகம் அல்லது ஒரு பல்கூறான ஜீவனுடைய யந்திரம் என மட்டும் விளக்கமுடியாத இது போன்ற பிற “மானிட” பண்புக்கூறுகளுக்கும் ஆன்மா ஒரு குவிமையமாகும்.

ஆன்மா மரிப்பதில்லை; அது என்றும் நிலைத்திருக்க வல்லது. மனித உடல் மரணமெய்தும்போது, ஆன்மா பூதவுடலுடனான தனது தொடர்பிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பொருளுலகிலிருந்தும் விடுபட்டு ஆன்மீக உலகங்களினூடே அதன் வளர்ச்சியை ஆரம்பிக்கின்றது. ஆன்மீக உலகென்பது நேரம், இடம் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட, நமது பிரபஞ்சத்தின் ஒரு தொடர்ச்சியே என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும் – அதற்கு மாறாக அது எங்கோ உள்ள அல்லது நமக்கு அப்பாற்பட்ட ஓர் இடமல்ல.

ஒன்பது மாத காலம் மனிதன் தாயின் கர்ப்பத்தில் வளர்ச்சி பெறுகின்றான். ஆனால், இந்த கர்ப்ப உலகம் அவனுக்கு நிலையானதல்ல. பிறகு தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகில் பிறக்கின்றான். இவ்வுலகில் சுமார் என்பது தொன்னூறு வருடங்கள் வாழ்ந்து அவன் மடிந்துவிடுகின்றான். இவ்வுலக வாழ்வும் அவனுக்கு நிறந்தரமல்ல. தாயின் கர்ப்பத்திலிருந்து அவன் ஒன்பது மாதமானவுடன் வெளிவந்துவிடுகின்றான். அதை பிறப்பு என்கிறோம். பிறகு அவன் காலம் கனிந்தவுடன் மரணம் எய்துகிறான், அதை இறப்பு என்கிறோம். ஆனால், பஹாய் திருவாக்குகள் மரணத்தை, அதாவது இறப்பை மனிதனின் மறுபிறப்பு என கூறுகின்றன. அதாவது கர்ப்பத்திலிருந்து இந்த உலகிலும், அதன் பிறகு இந்த உலகிலிருந்து வேறோர் உலகில், ஓர் ஆன்மீக உலகிலும் மனிதன் பிறக்கின்றான். ஆனால், கர்ப்பத்தில் உள்ள ஓர் சிசு எவ்வாறு இவ்வுலகை உணர முடியாதோ அதே போண்று நாம் இந்த உலகிலிருந்துகொண்டு மறு உலகை உணரமுடியாது. இந்த உலகிற்கு புலன்களும் அவயங்களும் அவசியமாகின்றன. அவ்வுலகிற்கு வேறு விதமான ஆற்றல்கள் அவசியமாகின்றன. கர்ப்பத்தில் நாம் இவ்வுலகிற்கு தேவையான புலன்களையும், அவயங்களையும் அடைந்தது போல், அவ்வுலகிற்கான ஆற்றல்களை நாம் இவ்வுலகிலேயே அடைய வேண்டும். மறுமை உலகிற்கான நமது பிரவேசம் நமக்கு பெரும் களிப்பை அளிக்கும் இயல்திறம் கொண்டது. பஹாவுல்லா மரணத்தை பிறப்பு குறித்த ஒரு படிசெயற்பாட்டோடு ஒப்பிடுகின்றார். அவர் பின்வருமாறு விளக்குகின்றார்: “தனது தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையின் உலகு இவ்வுலகினின்று எவ்வாறு வேறுபட்டுள்ளதோ அதுபோன்றே அவ்வுலகு இவ்வுலகினின்று வேறுபட்டுள்ளது.”

உலகவாழ்வு குறித்த பஹாய் கண்ணோட்டத்தை கர்ப்பம் குறித்த ஒப்புமை பல வகைகளிலும் தொகுத்துரைக்கின்றது. ஒரு மனிதனின் ஆரம்ப உருவாக்கத்திற்கு கருப்பை எவ்வாறு ஒரு முக்கிய இடமாக திகழ்கின்றதோ, அது போன்றே பொருளுலகு தனி ஆன்மாவின் மேம்பாட்டிற்கான ஒரு முதிர்விடமாக திகழ்கின்றது. அதன்படி, இவ்வுலகவாழ்வை அடுத்த உலகிற்கு தேவைப்படும் பண்புக்கூறுகளை மேம்படுத்திடும் ஒரு பயிலரங்கமென பஹாய்கள் கருதுகின்றனர்.

பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

“ஒரு மனிதனின் ஆன்மா இறைவன் வழியில் நடந்திருக்குமாயின், அது நிச்சயமாகத் திரும்பிச் சென்று, நேசரின் பேரொளியினில் ஒன்று திரட்டப்படும் என்பதை, நீங்கள், மெய்யாகவே அறிவீராக. இறைவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த ஓர் எழுதுகோலும் விவரிக்க இயலாத, எந்த ஒரு நாவும் வருணிக்க இயலாத ஸ்தானத்தை எய்திடும்.”

ஆனாலும், நாம் நமது வாழ்க்கையை பின்வரும் எச்சரிக்கை்கு இணங்க வாழ்ந்தால் மட்டுமே தேவையான அந்த ஆன்மீக ஆற்றல்களை நாம் அடைய முடியும்.

தூய்மையான நற்செயல்களின் மூலமும், மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்

என்பது மற்றொரு போதனை. இங்கு உலக சீர்திருத்தம் என்பது தனிமனிதனின் சீர்திருத்தத்தை உள்ளடக்கியுள்ளது. தனிமனிதனின் சீர்திருத்தம் அவனுடயை தூய்மையான நற்செயல்கள் மற்றும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தை சார்ந்திருக்கின்றது. அடுத்த உலகிற்கான நமது ஆன்மீக ஆற்றல்கள் இந்த தூய்மையான நற்செயற்களையும் மெச்சத்தகுந்த பொருத்தமான ஒழுக்கத்தையும் சார்ந்துள்ளன. நல்ல உணவு உடலுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிப்பது போல நல்ல செயல்களும் நல்லொழுக்கமும் நமது ஆன்மாவுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிக்கின்றன, நாம் ஆன்மீக ஆற்றல்களை அதன் மூலம் பெற்றிட வாய்ப்பும் ஏற்படுகின்றது.

உயிருருவின் புத்திரனே!

மொத்தக் கணக்குப் பார்க்க அழைக்கப்படுவதற்கு முன், நீ, உனது ஒவ்வொரு நாளையச் செயலையும் கணக்கிட்டுக் கொள்வாயாக; ஏனெனில், மரணம், முன்னறிவிப்பு எதுவுமின்றி உன்னைத் தாக்கும், அப்பொழுது, நீ, உன் செயல்களுக்குக் காரணம் கூற அழைக்கப்படுவாய்.

சமயங்கள் அனைத்தும் மனிதர்களின் உலகவாழ்விற்கு வழிகாட்டிகளாக நம்மிடையே தோன்றுகின்றன. பஹாய் சமயமும் இதற்காகவே தோன்றியுள்ளது. அதன் போதனைகள் நாம் அடுத்த உலகிற்கு செல்வதற்கான வழிகாட்டிகளாக இருக்கின்றன. அவற்றில் நாம் கவனமாக இல்லையெனில் அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும். மேற்கண்ட வாசக குறிப்பு இதைத்தான் நமக்கு கூறுகிறது.

இறுதியில், சுவர்க்கம் என்பது ஆண்டவனின் அருகாமை குறித்த ஒரு நிலையே என ஒரு வகையில் நாம் கருதக்கூடும்; நரகம் என்பது கடவுளிடமிருந்து தூர விலகியிருக்கும் ஒரு நிலையே ஆகும். ஆன்மீக மேம்பாட்டுக்கான தனிமனித முயல்வுகளின் இயல்விளைவாக, அல்லது அவ்வாறு முயலாமல் இருந்ததின் விளைவாக ஏற்படுவதே சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் நிலைகளாகும். கடவுளின் அவதாரங்கள் வரையறுத்துள்ள வழியை பின்பற்றுவதே ஆன்மீக மேம்பாட்டிற்கான திறவுகோல் ஆகும்.

மறுமை, விண்ணுலகம், அடுத்த உலகம், சுவர்க்கம், பரமண்டலம் என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தை கொண்டவையாகும். மற்றபடி மனிதன் தோற்றம் காணும் கர்ப்ப உலகம், பிறகு இவ்வுலகம், அதன் பிறகு விண்ணுலகம் என மனிதன் ஒவ்வோர் உலகமாக படிப்படியாக வெவ்வேறு உலகங்களில் வளர்ந்துகொண்டே செல்வான் மற்றும் செல்கிறான். விண்ணுலகமும் ஒரே உலகம் அல்ல. அதிலும் கணக்கிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அவை குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

ஆண்டவனின் உலகங்களைக் குறித்து உங்கள் கேள்வி சம்பந்தமாக. இறைவனின் உலகங்கள், எண்ணிக்கையில் கணக்கற்றவை என்பதையும், அளவில் எல்லையற்றவை என்பதையும் நீங்கள், உண்மையாகவே அறிந்திடுவீராக. சர்வஞானியும் சர்வ விவேகியுமான இறைவனைத் தவிர வேறு எவருமே அவற்றைக் கணக்கிடவோ புரிந்து கொள்ளவோ இயலாது…

ஆகவே, நாம் ஒவ்வோர் உலகமாக வளர்ந்துகொண்டே செல்வோம். ஓர் உலகைத் தாண்டி அடுத்த உலகிற்குள் அடியெடுத்து வைப்பதே மறுபிறப்பென்பதாகும். அது மனிதனுக்கு தொடர்ச்சியான ஒரு முன்னேற்றமும் ஆகும்.

மறுமை உலகம் குறித்து பஹாய் திருவாக்குகள் பல குறிப்புகளை வழங்குகின்றன. அவற்றை கீழே காணலாம்:

மறுமை உலகென்பது லௌகீக உலகல்ல. அது ஆன்மீக ரீதியானது. ஆகவே அங்கு பரிமாணங்கள் (dimensions) கிடையாது. அதாவது, பொருள் சார்ந்த, நீளம், கொள்ளளவு, வெப்பம், நேரம் என்பன போன்ற அளவைகள் அங்கு கிடையாது. உதாரணமாக, நீர் உறைந்தால் கட்டியாகும், கட்டி கரைந்தால் அது திரவமாகும், வெப்பம் அதிகரித்தால் திரவம் ஆவியாகிவிடும். இந்த ஒவ்வோர் நிலையிலும் நீரின் (H2O) பண்புக்கூறுகளும் அதன் இயங்குமுறைகளும் வெவ்வேறாகவே இருக்கும். நீர் நீர்தான் ஆனால் கட்டி, திரவம், ஆவி ஆகிய நிலைகளில் அதன் செயல்பாடு முற்றிலும் வேறுபட்டிருக்கும். அது போன்றுதான் லௌகீக உலகு மற்றும் ஆன்மீக உலகின் இயல்பு. மனிதர்கள் இரண்டிலும் வாழ்கிறார்கள் அனால் அவற்றின் பண்புக்கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை.

மறுமை வாழ்வு பற்றி பஹாய் திருவாசகங்களில் கணக்கிலடங்கா குறிப்புகளை காணலாம். அவற்றுள் சில கீழே வழங்கப்பட்டுள்ளன:

“ஓர் ஆத்மா உடலை விட்டுப் பிரியும் வேளையில் உலக மனிதர்களின் வீண்கற்பனைகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும். அப்படிப்பட்ட ஆத்மா அதன் படைப்போனின் விருப்பத்திற்கிணங்கவே வாழ்ந்து, இயங்கி மிக உயரிய சொர்க்கத்தினுள் பிரவேசிக்கும். விண்ணுலகக் கன்னிகளும் மிக உயர்வான மாளிகைகளின் வாசிகளும் அதனைச் சுற்றி வலம் வருவர். இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதன் உறவை நாடுவர். அவர்களுடன் அவ்வாத்மா தங்குதடையின்றிச் சம்பாஷித்து அது எல்லா உலகங்களிலும் தேவராகிய ஆண்டவனின் பாதையில் சகித்துக் கொண்டவைகளை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.”

“இருப்பினும் நாத்திகர்களின் ஆன்மாக்கள், கடைசி மூச்சு விடும் வேளையில் அவர்களது கவனத்தை ஈர்க்காதிருந்த நற் செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். தங்களது நிலையினை எண்ணி வருந்துவர். இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர். இதற்கு யாமே சாட்சியம் கூறுகிறோம். உடலை விட்டுத் தங்களது ஆத்மாக்கள் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.”

“அவன் பாவிகளை மன்னித்து அவர்களது தாழ்வான நிலையினை நிந்திக்கச் செய்யலாகாது; ஏனெனில் இறுதியில் தன் நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. எத்தனை முறை ஒரு பாவி மரணத்தறுவாயில் இருக்கும்போது, நம்பிக்கையின் சாராம்சத்தினைப் பெற்று நிலையான நீரினைப் பருகி விண்படையினரின் முன்னிலைக்கு உயர்ந்திருக்கின்றான்! மற்றும் எத்தனை முறை பக்தியுடைய ஒரு நம்பிக்கையாளன் தனது ஆத்மாவின் பிரிவு நேரத்தில் நரகத்தீயில் விழுமளவு மாற்றம் அடைந்திருக்கின்றான்!”

“இந்த லெளகீக உலகில், எந்தப் புதிர்களைப் பற்றி மனிதன் கவனமில்லாமல் இருக்கின்றானோ, அவற்றை அவன் விண்ணுலகில் கண்டுபிடிப்பான், மெய்ம்மையின் இரகசியத்தை பற்றி அவன் அங்கு அறிவிக்கப்படுவான்: அப்படியென்றால் தான் நெருங்கி பழகியவர்களை அவன் இன்னும் எவ்வளவு அதிகமாக அடையாளங்காணவோ, கண்டுபிடிக்கவோ முடியும். சந்தேகமின்றி தூய்மையான கண்ணைக்கொண்டு, உட்பார்வைகளைக் கொண்டிருக்கும் சலுகையைப் பெற்ற புனித ஆன்மாக்கள் ஒளிகளின் இராஜ்ஜியத்தில் எல்லா புதிர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் உயர்வுமிக்க ஆன்மாவுடைய மெய்ம்மையினைப் பார்க்கும் வெகுமதியை நாடுவார்கள். மேலும் அவர்கள் அவ்வுலகில் இறைவனுடைய பேரழகினை வெளிப்படையாகக் கண்ணுறுவார்கள். அவ்வாறே, கடந்த மற்றும் சமீபத்திய காலங்கள் ஆகிய இரண்டினையும் சார்ந்த இறையன்பர்கள் அனைவரும் விண்ணுலகக் கூட்டத்தினரின் சந்நிதானத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். 15

“எல்லா மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடும், தனிச்சிறப்பும் இயற்கையாகவே, அவர்கள் இந்த லெளகீக உலகிலிருந்து பிரிந்து சென்றபிறகு, உணரப்படும். ஆனால் இது (தனிசிறப்பு) இடம் சம்பந்தமானதல்ல; ஆன்மா மற்றும் மனசாட்சி சம்பந்தமானதாகும். ஏனெனில் இறைவனுடைய இராஜ்ஜியமானது நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அது வேறோர் உலகம் வேறொரு பிரபஞ்சம். ஆனால் புனித ஆன்மாக்களுக்காகப் பரிந்துரைப்பு எனும் பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் தெய்வீக உலகங்களில் ஆன்மீக அன்பிற்குரியவர்கள் (நம்பிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் அடையாளங்கண்டு (ஒருவரோடு ஒருவருக்கான) இணக்கத்தை – ஆன்மீக இணக்கத்தை நாடுவார்கள் என்பதனை நீங்கள் நிச்சயமாகவே அறிவீர்களாக. அதுபோலவே ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தப்படும் அன்பானது இராஜ்ஜியத்தின் உலகத்தில் மறக்கப்படாது. அவ்வாறே, நீங்கள் லெளகீக உலகில் வாழ்ந்த வாழ்க்கையை (அங்கே) மறக்க மாட்டீர்கள்.”

“உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆத்மாவின் நிலை சம்பந்தமாக மேலும் தாங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள். ஒரு மனிதனின் ஆத்மா ஆண்டவனின் வழியில் சென்றிருக்குமாயின், அது நிச்சயமாக அன்பரின் ஒளியின்பால் திரும்பி அவரால் ஒன்று சேர்த்துக் கொள்ளப்படும் என்பதனை மெய்யாக நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. ஆண்டவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த எழுதுகோலும் விளக்கவோ எந்த நாவும் வர்ணிக்கவோ இயலாத நிலையினைச் சென்றடையும். ஆண்டவனின் சமயத்தின்பால் விசுவாசத்தோடு இருந்து அவரது வழியில் அசையாத வலுவுடன் நிற்கும் ஓர் ஆத்மா மேலுலகை எய்தியதும், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் அவர் மூலம் பயன் பெறும் அளவு அத்துணைச் சக்தியினைப் பெறும்.”

“எனது ஊழியர்களே! இந்நாட்களில் இவ்வுலக மட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு மாறானவைகள் இறைவனால் நியமிக்கப்பட்டு வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வருந்தாதீர்கள். ஏனெனில் பேரானந்தம், தெய்வீக மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் நிச்சயமாக உங்களுக்கென காத்துக் கொண்டிருக்கின்றன. புனிதமான, ஆன்மீக ஒளிமிக்க உலகங்கள் உங்கள் கண்களுக்கு வெளிப்படுத்தப்படும். நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் அவைகளின் நன்மைகளை அனுபவிக்கவும், அவைகளின் இன்பத்தில் பங்குப் பெறவும், அவைகளின் பேணும் அருளின் ஒரு பகுதியினைப் பெறவும், விதிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அவை ஒவ்வொன்றையும், அடைவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.”

இதற்கும் மேற்பட்டு மறுமை வாழ்வு குறித்து உண்மை நிலவரம் ஒரு பெரும் மர்மமாகும். இறப்பிற்கு பின் ஆன்மாவின் இயல்பு எவ்வகையிலும் வருணிக்கப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்.

http://prsamy.wordpress.com/2011/10/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

சிவஞானபோதம் மூன்றாம் நூற்பா

“உளது இலது என்றலின், எனது உடல் என்றலின்,

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்

உண்டி வினைஇன்மையின், உணர்த்த உணர்தலின்,

மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா” (சிவஞானபோதம் – நூற்பா-3)

உயிர்கள் செய்த வினைக்கேற்ப இறைவன் அவற்றைச் செயல்படுத்துவான் என்பதனை மெய்கண்டார் சிவஞானபோதம் இரண்டாம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். உயிரை ஆன்மா என்பது தத்துவ மரபு. ஆன்மா உண்டு என்பதனை மூன்றாம் நூற்பாவில் நிலைநாட்டியுள்ளார். ஆன்மாவாகிய உயிர் எது? என்பதனைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

1. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுவோர் சூனிய ஆன்மாவாதிகள்.

2. உடம்பே ஆன்மா என்போர் தேகான்மாவாதிகள்.

3. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.

4. கனவில் செயல்படும் நுண்ணுடம்பே (சூக்கும தேகம்) ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.

5. பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மவாதிகள்.

6. சுத்த பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள்.

7. எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சமூக ஆன்மாவாதிகள்.

இவ்வாறு கூறும் எழுவர் கருத்துக்களையும் மறுத்துத் தனியாக ஆன்மா உளது என்று நிலைநாட்டி உள்ளார் மெய்கண்டார்.

1. ஆன்மா சூனியம் என்று கொள்பவர் பெளத்தரில் ஒரு பிரிவினர். உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பகுத்து ஆய்ந்து பார்த்து ஆன்மா இன்னது என்று அறிய முடியாமையினால் ஆன்மா சூனியம் என்றனர்.

ஆன்மா இல்லை என்று கூறும் சூனிய ஆன்மாவாதிகளும் இல்லை என்று வாளா கூறாமல் உடல், பொறி முதலியவற்றையெல்லாம் முறையே இஃது ஆன்மா அன்று, இஃது ஆன்மா அன்று என்று ஒவ்வொன்றாக கழித்து அங்ஙனம் இல்லை என்று கூறும் ஓர் அறிவு உண்டல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆகும். (இலது என்றலின் ஆன்மா உளது).

2. உடம்பில்தான் அறிவு நிகழ்கின்றது, அதனால் உடலையே ஆன்மா என்பர் தேகான்மவாதிகள்.

எனது வீடு, எனது மனைவி, எனது கணவன் என்பதைப் போலவே எனது கை, கால், எனது உடல் என்று கூறுகின்றோம். எனது உடல் என்று கூறும்போது உடலுக்கு வேறாக ஆன்மா உள்ளது என்பது தெரிய வருகிறது. நான் உடல் என்று யாரும் கூறுவதில்லை. தொல்காப்பியரே ‘காலம், உலகம், உயிரே, உடம்பே... ’ என்று உயிர் வேறு, உடல் வேறு என்று குறிப்பிட்டுள்ளார். (எனது உடல் என்றலின் ஆன்மா உளது).

3. உடம்பில் உள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு, ஆகிய ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை அறிகின்றன. ஆதலால் ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.

உடலில் உள்ள பொறிகளில் ஒன்று ஒன்றை மட்டுமே அறியும், மற்றொன்றை அறியாது. கண் உருவத்தை அறியும், ஆனால் கேட்கும் செயலைச் செய்யாது. காது கேட்டலைச் செய்யும், ஆனால் ஒரு பொருளின் சுவையை சுவைக்க முடியாது. ஏனைய பொறிகளும் இவ்வாறே ஆகும். ஐம்பொறிகளும் தன்னை உணரமாட்டா, தம்மைச் செயல்படுத்துகின்ற ஆன்மாவையும் அறியமாட்டா. ஐம்பொறிகளையும் செயல்படுத்துகின்ற – அனுபவிக்கின்ற ஆன்மாவானது ஐம்பொறிகளுக்கு வேறாக உள்ளது. (ஐம்புலன் அறிதலின் ஆன்மா உள்ளது).

4. ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து மற்றும் அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்று என்ற எட்டும் சேர்ந்தது நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகும். கனவு நிலையில் இச்சூக்கும உடலே செயல்படும். ஐம்பொறிகளையும் சூக்குமதேகம் உள்ளே இருந்து செலுத்தி அறிகின்றதாகையால் அச்சூக்கும தேகமே ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.

சூக்குமதேகம் ஆன்மா என்றால் கனவில் கண்டவற்றை நனவில் தெளிவாக அறிந்து கூற வேண்டும். முந்திய நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நனவில் மறுநாள் மாறாமல் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால், இரவில் கண்ட கனவு நிகழ்ச்சிகளை மறுநாள் காலையில் மறவாமல் முழுவதும் கூற முடிவதில்லை. கனவு கண்டதும் விழித்துக் கொண்டாலும் உடனே மறந்து விடுகின்றது. தெளிவாக அறிந்துகூற முடிவதில்லை. கண்ட கனவைத் தெளிவாகத் தெரிந்து கூற முடியாமைக்குக் காரணம், ஆன்மா பருஉடம்பு (தூலதேகம்), நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகிய இரண்டிற்கும் வேறாக உள்ளதே ஆகும்.

நனவு நிலையில் ஆன்மா பருஉடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நிலையில் பரு உடம்பு செயலற்றுக்கிடக்க, ஆன்மா சூக்கும உடம்புடன் கூடி நின்று அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நீங்கி நனவுக்கு வரும்போது சூக்கும உடம்பை விட்டு நீங்கிப் பருவுடம்பிற்கு வருகின்றது. அந்த மாற்றத்தால் ஆன்மா சூக்குமதேகத்தில் இருந்து கண்டவற்றை மறந்து விடுகின்றது. தூலதேகம், சூக்குமதேகம் ஆகிய இரண்டிற்கும் வேறாகிய ஆன்மா ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தைப் பற்றும்போது தேக மாற்றத்தால் மறதியைப் பெறுகின்றது. ஆதலால் ஆன்மா சூக்குமதேகத்தின் வேறாக உள்ளது என்பது புலனாகிறது. (ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது). ஒடுக்கம் ஐம்பொறிகளும் செயல்படாமல் ஒடுங்கி நிற்கின்ற கனவு நிலையாகும்.

5. பிராண வாயு என்ற மூச்சுக் காற்று உடலின் உள்ளே புகுந்து தொழிற்பட்டு, உடலில் உள்ள கருவிகளைச் செயல்படுத்தி அறிந்து கொள்ளும் தன்மை உடையதாய் இருத்தலால் அப்பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மாவாதிகள்.

ஒடுங்கிய உறக்க நிலையில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருந்தாலும் இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழவில்லை. நனவில் ஏனைய கருவிகள் இயங்கும் பொழுது இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழ்கின்றன. பிராணவாயுவே ஆன்மா என்றால் நனவைப் போலவே உறக்கத்திலும் அப்பிராணவாயு இயங்கிக் கொண்டிருப்பதால் நனவில் நிகழ்கின்ற இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடம்பின் தொழிற்பாடும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழாமையால் பிராணவாயுவே ஆன்மா என்பது பொருந்தாது. (கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது).

கண்படில் – உறக்கத்தில், உண்டி – இன்பத் துன்ப நுகர்ச்சி, வினை – உடல் தொழிற்படுதல். இன்று பலரும் பிராணவாயுவே ஆன்மா என்று கருதுகின்றனர். அக்கொள்கை மறுக்கப்பட்டுள்ளது.

6. பருவுடம்பு, ஐம்பொறிகள், சூக்குமதேகம், பிராணவாயு ஆகியன சடப்பொருள்கள் ஆகும். அவற்றைத் தனித்தனி ஆன்மா என்று கூறுதல் பொருந்தாது. பரம்பொருள் என்னும் பிரமம் அறிவாய் உள்ளது. ஆதலால் பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள். பிரமமே ஆன்மா என்பதால் பிரமான்மவாதி என்றும் பிரமம் பேரறிவுடையது, அவ்வறிவே ஆன்மா என்பதால் விஞ்ஞான ஆன்மவாதி என்றும் வழங்கப் பெறுவர்.

ஆன்மாவானது கருவிகள் தொழிற்படாமல் அடங்கிய நிலையில் எதனையும் அறிவதில்லை. எல்லாக் கருவிகளும் கூடிய விழிப்பு நிலையில் அனைத்தையும் நன்றாக ஆன்மா அறிகின்றது. ஆனால் பிரமமோ கருவிகள் எவற்றின் துணையும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக அறிகின்றது. ஆன்மா எதனையும் தானே அறிய மாட்டாது. துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கின்றது. அறிவித்தால் அன்றி அறிய மாட்டாத ஆன்மா, எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் பிரமத்தின் வேறாகும். (உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது).

உணர்த்த உணர்தலின் ஆன்மா உள்ளது என்ற கொள்கை தொல்காப்பியர் காலந்தொட்டு வரும் உண்மையாகும். “உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து” என்று சேனாவரையர் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

7. உடல், ஐம்பொறி, சூக்குமதேகம், பிராணவாயு ஆகியவற்றுள் ஒவ்வொன்றே ஆன்மா என்றால் பொருந்தாது. அவற்றுள் ஒன்று குறைந்தபோது அறிவு நிகழாமையால் அவை எல்லாம் கூடியபோது அறிவு நிகழ்வதால் அவை அனைத்தும் கூடிய கூட்டமே (சமூகம்) ஆன்மா என்பர் சமூக ஆன்மவாதிகள்.

எல்லாக் கருவிகளும் சேர்ந்த கூட்டம் (சமூகம்) உடம்பு என்று பெயர் பெறுவதின்றி ஆன்மா என்று பெயர் பெறுவதில்லை. உடம்பு ஓர் இயந்திரம் போன்ற இயல்பு உடையது. உடம்பில் உள்ள கருவிகள் அந்த இயந்திரத்தினுடைய உறுப்புகள் போன்ற இயல்பின. இயந்திரத்தின் உறுப்புகள் நன்றாக இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது, அவ்வியந்திரத்தை இயக்குவோன் வேறாக ஒருவன் இருந்து இயக்க வேண்டும். அதுபோல உடம்பும் கருவிகளுடன் சேர்ந்திருந்தாலும் இயக்கும் ஆன்மா வேறாக இருந்து இயக்கும் போதுதான் செயல்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்கும் அறிவாகிய ஆன்மா, சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக இருத்தல் வேண்டும். (மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது).

அதாவது, மாயையின் காரியங்கள் ஆகிய கருவிகளால் ஆக்கப் பெற்ற இயந்திரம் போன்ற உடலினுள்ளே அக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக ஆன்மா உள்ளது.

“பாராதி பூதம் நீயல்லை – உன்னிப்

பார் இந்திரியம் கரணம் நீயல்லை

ஆராய் உணர்வு நீஎன்றான் – ஐயன்”

‘அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி’ என்று தாயுமானவரும் பூதங்களால் ஆன உடல், ஐம்பொறிகள், கருவிகள் முதலியன ஆன்மா அன்று, ஆராய்ந்தறியும் அறிவே ஆன்மா என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியங்கள் மன்னுயிர், நல்லுயிர், இன்னுயிர், தொல்லுயிர் என்று குறிப்பிடுகின்றன.

“காணாமரபிற்று உயிர்” தொல்காப்பிய உரையில் காட்டப் பெறும் பழைய மேற்கோளாகும்.

பசுவின் மயிர் ஒன்றை நூறு கூறு செய்து, அதில் ஒரு கூறை ஆயிரம் கூறாக்கி, அதில் ஒரு கூறை நூறாயிரம் (இலட்சம்) கூறு ஆக்கினால் அதில் ஒரு கூறு ஆன்மா என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிரம் ஆயினால்

ஆவியன் கூறது நூறாயிரத்தொன்றே)” (திருமந்திரம்)

இன்றைய மருத்துவ அறிவியலில் இரத்தத்திலுள்ள அணுக்களில் நுண்ணணுக்கள் உள்ளே நாற்பதுக்கும் மேற்பட்டன உள்ளன. அவை உயிர் அணுக்கள் என்கின்றனர். திருமூலர் கூறுவது எவ்வளவு நுட்பமானது?

உயிர்க்கு ஆன்மா, பசு, சீவன், புருடன், பூமான், கிஞ்சிஞ்ஞனன், சுதந்தரவீனன், அகர்த்தா, அணு, அழியாதவன், உள்ளம், சைதன்னியன், பிரகிருதி, புத்தி, பிராணன், சதசத்து, புற்கலன் முதலிய பல பெயர்கள் உள்ளன. எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே.

உயிர்த்தலால் உயிர், வியாபகம் உடையது ஆன்மா. பச்-கட்டு; பசு-கட்டப்பட்டது. சீவித்தலால் சீவன். காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் ஐந்தால் ஆனது புருடன். பிரகிருதி மாயை காரணமாக அமைந்த உடலுக்குத் தலைவனாதலின் பூமான், தேகத்தை உடையவன் தேகி. கிஞ்சித் – சிறிய, ஞனன் – அறிவோன், சிற்றறிவுடையவன் கிஞ்சிஞ்ஞனன். இறைவனுக்கு அடிமை ஆதலின் சுதந்தர ஈனன். எச்செயலுக்கும் தான் கர்த்தா அல்லன் ஆதலால் அகர்த்தா. ஆணவமலத்தால் அணுத்தன்மை படுதலின் அணு. மன்னுயிராதலின் அழியாதவன். பூதஉடல், நுண்ணுடல் முதலிய உடம்புக்குள்ளே இருத்தலின் உள்ளம். அறிவு வடிவினன் சைதன்னியன். குண தத்துவங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருத்தலால் பிரகிருதி. புத்தித் தத்துவத்தைப் பொருந்தி நிற்றலால் ஆன்மா புத்தி எனப்படும். பிராணன் - உயிர், சத்தாகிய பதியுடன் சேர்ந்து சத்தாகியும், அசத்தாகிய பாசத்துடன் சேர்ந்து இருத்தலால் சதசத்து. புற்கலம் – உடம்பு, உடம்பை உடையவன் புற்கலன்.

“உளது இலது என்றலின், எனது உடல் என்றலின்,

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்

உண்டி வினைஇன்மையின், உணர்த்த உணர்தலின்,

மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா” (சிவஞானபோதம் – நூற்பா-3)

1. இலது என்றலின் ஆன்மா உளது.

2. எனது உடல் என்றலின் ஆன்மா உளது.

3. ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது.

4. ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது.

5. கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது.

6. உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது.

7. மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது.

இவ்வாறு மேற்சொன்னபடி நூற்பாவைப் பிரித்துக் காட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

http://www.manivasagar.com/SGB_OM_SAKTHI_3.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புரட்சி நாம் யார் என்பதை கொஞ்சம் விட்டுவிட்டு (மரணம் என்றால் என்ன கேள்விக்கு பிந்தைய அல்லது முன்னைய கேள்வி இது) மேலே நீங்கள் சொன்ன எல்லா தத்துவங்களும் நேரத்தை அடிப்படையாக கொண்டவை. நேரம் என்று ஒன்று உண்டா? அண்மைய நாட்களாக ,என்னுடைய மண்டையை பிய்க்கும் கேள்வி (அடுத்து அணு என்று ஒன்று உண்டா? ...அதை இப்போது விட்டுவிடுவோம்) நேரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த தத்துவங்கள் எல்லாம் தவறுதானே...

இந்த மனிதரின் விளக்கத்தை கேளுங்கள் , நான் கொஞ்சம் tubelight கொஞ்சம் யாராவது இன்னும் ஒருபடிமேலே போய் விளங்க வைக்க முடியுமா?

What time is it at the North and South Pole?

Since lines of longitude converge at the North and South Pole, it's almost impossible (and very impractical) to determine which time zone you're in based on the longitude.

Therefore, researchers in the Arctic and Antarctic regions of the earth usually use the time zone associated with their research stations. For example, since nearly all flights to Antarctica and the South Pole are from New Zealand, New Zealand time is the most commonly used time zone in Antarctica.

thanks: about.com

Edited by kssson
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தோழர் தாங்கள் பகவத்கீதையை முழுதாக வாசிக்கவில்லை போல் உள்ளது ..

யுகம்..

கிருதயுகம்

திரேதாயுகம்

துவாபரயுகம்

கலியுகம்

தர்மம் அதர்மம் முறைபடி

முழுது

கால்வாசி (ராமாயணம் நடந்தது)

அரைவாசி(மகாபாரதம் நடந்தது )

முக்கால் வாசி (இப்போ)

கீதையில் காலமும் நானே அவற்றின் முடிவும் நானே .. எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்று சொல்லி இருக்கார் தோழர் .. அடுத்த கல்கி அவதாரத்தில் விசுணு யசஸ் என்ற பெயருடையவருக்கு மகனாக பிறப்பேன் .. உலக்த்தினை ஒரு நாளைக்கு 7 முறை சுற்றிவருவேன் ( அப்படி சுற்றி வரும் போது வழியில் கில்மா வேலைகள் செய்து கொண்டிருப்பவன் எல்லாம் அதோ கதிதான்) எப்பா சாமி நம்பிக்கைதானே வாழ்க்கை .. தமிழீழம் விடுதலை பெறும் போது அதை ஏனைய தோழர்களுடன் அதை வானத்தில் இருந்து ரசிப்பேன் என்று சொன்னவர்தானே திலீபன்..

டிஸ்கி:

அனைத்தினையும் தவத்தினால் தியானத்தில் பெற இயலுமென்றால் .. நடுவானில் தொக்கி நிற்கினற அளவுக்கு இன்னோரு சொர்க்கத்தினை விசுவாமித்தரனால் உருவாக்க முடியும் என்றால் .. முயற்சி செய்வம் என்று உத்தேசித்துள்ளேன் தோழரே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காயமே இது பொய்யடா

காற்றடைத்த பையடா

உயிரின் அடுத்த நிலை

காற்றோடு காற்று

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காயமே இது பொய்யடா

காற்றடைத்த பையடா

உயிரின் அடுத்த நிலை

காற்றோடு காற்று

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

ஈசன்,

விஞ்ஞானம் ஒரு வடிவமைக்கப்பட்ட தர்க்க சாஸ்த்திரம் தானே. கணிதம் என்பது அதன் மொழியாக உள்ளது. மேலும் சாத்தியக்கூறு என்பதும் கணிதத்தின் ஒரு பகுதியே. ஆனால் கணிதம் என்பது முழுமையானது அல்ல. அதி உயர் கணித பகுமுறைகள் தம்முள் முரணானவை. உதாரணமாக ஐன்ஸ்டைன் கண்டறிந்த ஒரு தீர்வு ஓரலகு ஆரையுள்ள வட்டத்தின் பரிதி 2*Pi இலும் கூட. இது கணித ரீதியில் சாத்தியமில்லை. மாபெரும் கணித மேதை கோடெல், தன்னுடைய The Incompleteness Theorem என்பதில் கணிதத்தின் அடியாதாரங்களை முழுமையானதல்ல என விவரித்துள்ளார்.

முழுமையான பேருண்மையை, முழுமையற்ற தர்க்க விதிகளால் விவரிக்க முடியாது. எனவே அறிவு என்ற முழுமையற்ற தர்க்க பகுப்பாய்வுகள் பேருண்மையை கண்டுணர என்றுமே பயன்படாது. சித்தாந்தங்களும், வேதாந்தங்களும், விஞ்ஞானமும் அறிவின் வெவ்வேறு பகுதிகளே.

எமது மனஸ் எப்படி தொழிற்படுகிறது? நான் மூளை பற்றி குறிப்பிடவில்லை.

 1. sub concious mind
 2. concious mind
 3. super concious mind

பொதுவாகவே (1) எப்போதும் இயங்குவது. இதற்கு தர்க்க வியாக்கியானங்கள் தெரியாது. ஒருவரை மயக்க நிலையில் வைத்திருந்தாலும் இது வேலை செய்யும். வலி, கவலை, துன்பம், இன்பம் என்றவை இதை அணுகா. (இல்லையேல் மயக்க நிலையில் பல சத்திர சிகிச்சைகள் செய்ய முடியாது :lol:)

இதில் (2) நாம் விழிப்புடன் இருக்கும்போது இயங்குவது. பொதுவாகவே தர்க்கரீதியில் முடிவுகளை எடுக்கும். அறிவு தொழிற்படுவது இதில் தான். எமது கருத்துக்கள், எடுகோள்கள், பகுப்பாய்வுகள் எல்லாமே இத்தோடு நின்றுவிடுகின்றன.

முக்கியமாக (3) மிக மிகச் சிலரே அடைந்திருக்கின்றனர். எல்லா மனிதரும், இதை இயக்க முடியும் என்பது ஒரு உண்மை. புவியீர்ப்பு எப்படி எல்லாருக்கும் ஒரே மாதிரி தொழிற்படுகிறதோ அதேபோல் இந்த (3) ம் எல்லோராலும் முடியும். ஆனால் இதை அடையும் வழி இலேசுப்பட்டதல்ல.

எனவே, (1) + (2) ஐ கடக்காதவரை பேருண்மை புலப்படாது. இதில் விநோதம் என்னவென்றால், (3) ல் பேருண்மையை தரிசித்தவர்கள் எந்த பெருமுயற்சி செய்தாலும் (1) அல்லது (2) ல் உள்ளவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் மொழி மூலம் (இது ஏற்கனவே சொன்னது போல முழுமையற்றது) தாம் பெற்ற அனுபவங்களை பகிர முனைந்தனர். அதுவும் இயல்பாகவே பிறழ்வாகி போனது.

எனவே சாஸ்திர சித்தாந்த வேதாந்தங்கள் மூலம் விடை தேடுவது பயனற்ற வேலை.

இனி நீங்கள் சொன்ன Account Management.

ஒரு சின்ன உதாரணம். எங்கள் வீட்டுக்கருகில் ஒரு குரக்கன் தோட்டம் இருந்தது. நான் எங்கள் வீட்டு பசு மாட்டை தோட்டத்துக்கருகில் மேயக்கட்டும் போது குரக்கன் பாத்திக்குள் போகாத மாதிரி அளவாக ஒரு கட்டை அடித்து கட்டி விடுவேன் :). குரக்கன் தோட்டமும் தப்பியது, மாடும் மேய்ந்தது. மாடு ஒர் வட்ட பரப்பில் மேயும். எனவே மாட்டை பற்றி நான் பின்பு கவனிக்க வேண்டியது இல்லை. கயிறு அதை பார்த்துக்கொள்ளும். இந்த கயிறுதான் இயற்கை விதி. மாட்டை கயிற்றில் கட்டி விடுவது மட்டும் தான் என் வேலை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

 • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வாழ்த்துக்கள் 🏃🏾 @இணையவன்👏👏👏  மரதன் ஓடுவது இலகுவானது அல்ல என்பதை 25 கிலோமீற்றர்கள் அண்மையில் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.
  • நன்றி ஜஸ்ரின், நீங்களும் ஓடுகிறீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாரத்தில் 25 மைல்கள் ஓடும் நீங்கள் நிச்சயமாக மரதன் ஓட வேண்டியவர். பயிற்சியின்போது கால் வலிகள் ஏற்படுவது சாதாரணம். என்ன விதமான வலி என்பது தெரியவில்லை. ஓட முடியாது என்று உணர்ந்தால் நிறுத்தி ஓய்வு எடுக்கத் தயங்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.  மரதன் ஓடுவதற்கு வயது கால எல்லை தடையில்லை. விரைவில் நீங்களும் மரதன் ஓட வாழ்த்துகள். நன்ற்றி ஏராளன். அவதார் படத்தைப் பார்த்து என்னைவிட வயதானவர் என்று நினைத்திருந்தேன்.
  • டி23 புலி : வனத் துறையை பாராட்டிய நீதிபதிகள்! மின்னம்பலம்2021-10-21   நீலகிரியில் சுற்றி திரிந்த டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் டி23 என்ற புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்று, அங்குள்ள மனிதர்களை அச்சுறுத்தி வந்தது. மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தனர். ஆனால், புலி சிக்காமல் காட்டிற்குள் பதுங்கி வந்ததால், ஒருகட்டத்தில் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை வனத் துறை அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதுபோன்று கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்தப் புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன. புலியை உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து, ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள், மோப்ப நாய்கள், ஆகியவற்றைக் கொண்டு டி23 புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வனத் துறையினர் கண்ணில் படாமல் கிட்டதட்ட 22 நாட்களாக புலி போக்கு காட்டி வந்தது. ஒருவழியாக கடந்த அக்டோபர் 15ஆம் தேதி டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்டோபர் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. புலியை உயிருடன் பிடித்த வனத் துறையினருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.   https://minnambalam.com/public/2021/10/21/32/high-court-appreciates-forest-department-for-capturing-t23-tiger-alive  
  • நன்றி சுவி அண்ணா. எப்போதும் தொடர்ச்சியான உங்கள் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
  • முகம் தெரியாத எத்தனை பேர் எம்மை எம் வாழ்வில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்! 7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.