Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உயிரின் அடுத்த நிலை என்ன..?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆன்மீகப் பாதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பூங்கையூரன். இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய விளக்கம் (Understanding) சற்று வித்தியாசமானது.

ஒரு கருத்தின் (Concept) நம்பகத்தன்மையை நிரூபிக்க மூன்று முறைகளைக் கையாள்வேன்.

1. விஞ்ஞானம் முலம் நிரூபித்தல்.

2. தர்க்க வியல் (Logic).

3. சாத்தியக்கூறை ஆராய்தல் (Probability).

முறை 1 சரி வராவிட்டால் 2 உம், அது சரிவராவிட்டால் 3 உம் அதுவும் சரி வராவிட்டால் கருத்தை மறத்தல் / மறுத்தல்.

உங்கள் அணுகுமுறையும் இதுபோன்றதே. சைவ சித்தாந்த முப்பொருள் உண்மை தத்துவத்தை விஞ்ஞான கருத்துகள் மூலம் பலப்படுத்தும் முயற்சி இந்த அணுகுமுறைதான்.

நம்முடைய ஆய்வு ஒற்றுமை அந்தளவோடு முடிகிறது.

நான் சைவ சித்தாந்த கருத்துக்களில் இருந்து விலகி 10 வருடங்களிற்கு மேலாகிறது.

மேற் சொன்ன மூன்று முறைகள் மூலமும் சைவசித்தாந்த கருத்துக்களை என் அறிவுக்கெட்டியவரை சோதனைக்கு உள்ளாக்கிய போது ஒரு குறித்த எண்ணிக்கையான விடைகாணப்படாத கேள்விகள் மிஞ்சின.

அதே சோதனையை அத்துவைதம் (வேதாந்தம்) மீது நடாத்திய போது அங்கும் ஒரு குறித்த எண்ணிக்கையான விடைகாணப்படாத கேள்விகள் மிஞ்சின. ஆனால் அவற்றின் எண்ணிக்கை சைவசித்தாந்தத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.

குறிப்பாக சைவசித்தாந்தத்தின் சீவாத்மாக்கள், கர்மா , மறுபிறப்பு போன்ற கருத்துகள் பலவீனமாகத்தென்பட்டன. அங்கு பல கேள்விகள் விடை இல்லாதவை. உதாரணமாக ஆத்மாக்களின் கர்மாவை நிர்வகிப்பவர் (Accounts Management ) யார் ?

இது நிச்சியமாக பரமாத்மாவின் வேலையல்ல.

கருத்துக்களின் பலவீனம் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள், பாவ புண்ணியம், மறுபிறப்பு , மோட்சம் போன்ற கருத்துக்களை கைவிட்டுவிட்டேன்.

அதேசமயம் வேதாந்தத்தின் மிகப் பெரிய "ஏன்" என்ற கேள்விக்கான விடையாக‌ மாயை விளங்கிக் கொள்வதும் லேசுப்பட்ட வேலையல்ல.

கீழே இணைப்பில் 3:46 செக்கனில் இலிருந்து பாருங்கள் :)

நன்றிகள் ஈசன்!

உங்கள் கருத்துக்களைப் புரிந்து கொள்கின்றேன்!

விஞ்ஞானத்தால் சில விடயங்களை நிறுவமுடியாது! ஏனெனில் விஞ்ஞானம் இன்னும் அந்த நிலைக்கு வளரவில்லை! இன்னும் வளர்ந்த பின்பு, இந்நிலை சாத்தியப்படலாம்!

மெய் ஞானத்தால் நிறுவுவதற்கும் வழியில்லை! ஏனெனில் மெய்ஞானக் கருத்துக்கள், வேண்டுமென்றே குழப்பமாக எழுதப் பட்டன! அதாவது, சூத்திரர்கள் புரிந்துகொள்ளாதவாறு எழுதப் பட்டன!

அனுபவ வழியே உகந்தது என நான் கருதுகின்றேன்!

நீங்கள் கூறியபடி, ஆத்மாக்களின் கர்மாவை நிர்வகிப்பது அவற்றின் மனமே! இறக்கும் போது, உங்கள் மனம் எந்த நிலையில் இருக்கின்றதோ, அந்த நிலையையே ஆத்மாவானது, தன்னுடன் காவிச்செல்லுகின்றது! அந்த நிலையே அந்த ஆத்மாவின், அடுத்த நிலையை நிர்ணயிக்கின்றது!!! உங்கள் ஏக்கங்கள். எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்பவே, உங்கள் ஆத்மா, அதை நிறைவு செய்ய, அதற்கு ஏதுவாக, இன்னொரு பிறப்பை எடுக்கின்றது! புதிய பிறப்பில் புதிய எதிர்பார்ப்புக்கள்! அதனாலேயே, பிறவிப் பெருங்கடல் என வள்ளுவர் அழைக்கின்றார்!

கொலைகளும், குற்றங்களும் செய்த ஒருவன், தனது உடலை விட்டு உயிரானது நீங்கும் போது, 'குற்றவுணர்வு' அல்லது பிரமஹத்தி என்று கூறும் நிலையில்லாது, இருப்பான் எனின், அவனது ஆத்மாவும் புனிதமாகின்றது!

அதையே தான் அர்ஜுனனை நோக்கிய கண்ணனும் கூறுகின்றான்!

'கொல்பவன் நானே" என்று கண்ணன் கூறுவது, அர்ஜுனனைக் 'குற்றவுணர்வில்' இருந்து விடுவிக்கும் பொருட்டே!

கிறிஸ்தவர்களின், 'பாவமன்னிப்பும்'; மனத்தில் இருந்து இந்தக் குற்றவுணர்வை, நீக்கும் பொருட்டே!

எப்போதும் மனம் தூய்மையாக இருக்குமேனின், மரணத்தை எப்போதும் வரவேற்கலாம்!

செய்த கருமங்களைப் பொறுத்து, மறுபிறவி அமையும் என்பது, வேத காலத்துப் பிராமணரின் 'புருடாவாக' இருக்க வேண்டும்!

சைவ சித்தாந்த வழியில், ஒருவரும் சரியையையும், கிரியையும் தாண்டுவதில்லை.

மூன்றாவது, நான்காவது நிலைகளான யோகத்திற்கும், ஞானத்திற்கும் செல்ல, அவர்களது 'பற்றுக்கள்' அவர்களை அனுமதிப்பதில்லை!!!

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

 • Replies 155
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Eelathirumagan

ம்.. மிகவும் நல்லது, ஈசன் எனது கருத்துக்களை தொடரமுன், இரு விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 1. நான் ஒரு உளவியலாளனோ அல்லது உளவியல் நூல்களை நுணுகி ஆராய்ந்தவனோ அல்ல. 2. இது ஒரு மிகவு

புரட்சிகர தமிழ்தேசியன்

உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை...

புரட்சிகர தமிழ்தேசியன்

திருவாசகம் - நான் யார் ? திருவாசகத்தில் உள்ள மிக சிக்கலான பாடல்களில் ஒன்று "நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர்

 • கருத்துக்கள உறவுகள்

.

ஈழத்திருமகன்,

உங்கள் பதிலின் முதலாம் பகுதியைச் சுருக்கமாகச் சொன்னால், முழுமையற்ற மனித அறிவியலால், இந்தப் பிரபஞ்சப் பிண்ணனியை( பரம்பொருளை) அறியமுடியாது என்பதாக எடுக்கலாம்.

இது 100 க்கு 200% உண்மை.

ஆனால் ஆன்மீகத் தேடலை ஆரம்பிக்கும் ஒருவன் எந்தப் பாதையை தெரிவு செய்யலாம் என்பதற்கு அப்பாதைகளைச் சோதிக்கும் கருவியாக அறிவியலைப் பயன் படுத்தலாம் என்பதே என் கருத்து. அறிவியல் முழுமையற்றதாக இருந்தாலும் கூட இப்பாதைகளை வடிகட்டும் அளவிற்கு அவை இன்று வளர்ச்சியடைந்துள்ளன.

உதாரணமாக ஆபிரிக்க காட்டுவாசிகளின் மதத்தையோ, செவிந்தியர்களின் மதத்தையோ நாம் பின்பற்றுவதில்லை. மிக மிக எளிமையான அறிவியலின் மூலம் அவற்றை நிராகரித்து விடுகிறோம்.

ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த் சித்தாந்ததையோ வேதாந்ததையோ சோதிக்க சிக்கலான அறிவியல் முறைகள் தேவைப்படுகிறது.

இங்கு மூன்று முறைகளைக் கையாள்வதன் நோக்கம் அவை வெவ்வேறு மட்டங்களில் இயங்குவதால்.

ஆய்வு கூடப் பரிசோதனை மூலமோ அல்லது கணித நிறுவுகை மூலமோ நிரூபிக்கப் படக் கூடியதை விஞ்ஞான முறை என்கிறேன். ம்ற்றவை இரண்டும் அப்படியல்ல என்பதாக எடுக்கிறேன். நான் இங்கு சொல்லும் சாத்தியக்கூறை ஆராய்தல் என்பது கணித நிகழ்தகவல்ல.

கீழ்வரும் உதாரணங்களைப் பாருங்கள்.

உ+ம் 1 : சூரியன் பூமியைச் சுற்றுகிறது.

விஞ்ஞான முறைமூலம் இதை நிராகரிக்கலாம்.

தர்க்க வியல் மூலம் கடின‌ம்.

சாத்தியக்கூறும் 50% என்பதாகச் சொல்லும்.

உ+ம் 2 : பிரபஞ்சம் ஒரு நாள் அழியும்.

விஞ்ஞான முறைமூலம் இதை நிரூபிக்க முடியாது.

தர்க்க வியல் சொல்லும்: பொருட்கள் யாவும் அழிவுடையவை ஆகவே பிரபஞ்சமும் அழிவுடையது.

சாத்தியக்கூறு 50% என்று சொல்லும்

உ+ம் 3 : அழிந்த பிரபஞ்சம் மீண்டும் தோன்றும்.

இதற்கு விஞ்ஞானமும் தர்க்கவியலும் மௌனமாக இருக்க வேண்டியது தான்.

சாத்தியக்கூறு சொல்லும் இது சாத்தியமே படாத ஒரு விசயம் அல்ல என்று.

(சாத்தியம்!!)

*********************************************************************

உங்கள் பதிலின் இரண்டாவது பகுதி கடவுளை உணர்தலோடு தொடர்பு பட்டது. (முதலாவது பகுதி அறிதலோடு தொடர்பு பட்டது).

நீங்கள் சொல்வது போல் இறையுணர்வு பெற்றவர்கள் தம் அனுபவத்தை மனித மொழிகளின் குறைபாடு காரணமாக பகிரமுடியாதுள்ள‌தென்பது. இதுவும் 100 க்கு 200% உண்மையே.

(இறையுணர்வு மட்டுமல்ல மிக எளிமையான உணர்வான சீனியின் இனிப்புச் சுவை என்ன என்பதைக்கூட மற்றவர்களுட‌ன் மனித மொழி மூலம் பகிர முடியாது. )

ஆனால் இங்கும் பல‌ கேள்விகள் உள்ளன.

உதாரணமாக, மனித மனத்தின் ஒரு நிலையை ( State of Mind ) எப்படி இறையுணர்வு என்று சொல்ல முடியும் ? super conscious mind ஐ சில இரசாயன பதார்த்தங்களை உள்ளெடுப்பதன் மூலமும் அடையலாம். எனவே இதை எப்படி இறைவனை உணர்ந்து கொள்ளும் நிலை என்பது ?

***************************************************************

கயிற்று உதாரணத்திலும் எனக்குச் சற்று சிக்கல் இருக்கின்றது ஈழத்திருமகன். ஏனென்றால் உதாரணத்தின் படி பசுக்களை பாசம் என்னும் கயிற்றால் இணைப்பவன் இறைவன் என்று ஆகிவிடும்.

ஆனால் சித்தாந்தம் பாசத்தை இறைவனிடம் இருந்து விலத்தி வைத்திருக்கின்றது. ஆகவே இந்த பசுக்களுக்கும் பாசக்கயிற்றுக்கும் இடைப்பட்ட தொடர்பை பண்ணுவது ( Accounts Management ) யார் என்பதே கேள்வி.

பசு தானாக கயிற்றை தலையில் மாட்டாது.

கயிறும் தானாக போய் பசுவை மாட்டாது.

தொடர்ந்து விவாதியுங்கள் ஈழத்திருமகன். தத்துவ விசாரணைகள் அருமையானவை. :)

.

Edited by esan
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு யோகியின் சுயசரிதை ,ஒரு அருமையான புத்தகம் . பகவத்கீதை போல எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் . வாழ்க்கை . மரணம் , மரணத்தின் பின்னதான நிகழ்வுகள் என யுத்தீச்வர் தனது சீடர் யோகனந்தருக்கு தனது மரணத்தின் பின்னரும் தோன்றி விவரிக்கிறார். வாசித்தால் கட்டாயம் வாழ்கையில் ஒரு தெளிவு பிறக்கும் . கட்டாயம் வாசிக்கவும் . தமிழில் இணைப்பை தேடினேன் . கிடைக்கவில்லை . ஆங்கிலத்தில் தான் கிடைத்தது . முடிந்தவர்கள் தமிழில் முயற்சி செய்யவும் .

oru-yogin-suya.gif

ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)

By வகை : ஆன்மிகம்

விலை

Rs. 125.00

Stock Available

Delivered in 2-3 business days spacer.gif

btn_buy_now.gif

இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றுமு் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.

சுவாமி பரமஹம்ச யோகனந்தர் எழுதிய

ஒரு யோகியின் சுயசரிதை (ஆங்) மென்புத்தகம்.

Right click and save.

ஒரு யோகியின் சுயசரிதை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அலோ தோழர்களே நான் குண்டலி ஏத்தலாம் என உத்தேசித்துள்ளேன்... :) :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அலோ தோழர்களே நான் குண்டலி ஏத்தலாம் என உத்தேசித்துள்ளேன்... :) :)

குண்டலினி, உங்கள் குஞ்சியம்மாவா தோழரே?

கூப்பிட்டவுடன் ஓடி வருவதற்கு! :D:lol::D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அலோ தோழர்களே நான் குண்டலி ஏத்தலாம் என உத்தேசித்துள்ளேன்... :) :)

தத்துவம் நம்பர் ஒன்.

குண்டலியின் சூட்சுமம் உங்கள் சுண்டெலியில்.

........தோழர்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு யோகியின் சுயசரிதை ,ஒரு அருமையான புத்தகம் . பகவத்கீதை போல எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் . வாழ்க்கை . மரணம் , மரணத்தின் பின்னதான நிகழ்வுகள் என யுத்தீச்வர் தனது சீடர் யோகனந்தருக்கு தனது மரணத்தின் பின்னரும் தோன்றி விவரிக்கிறார். வாசித்தால் கட்டாயம் வாழ்கையில் ஒரு தெளிவு பிறக்கும் . கட்டாயம் வாசிக்கவும் . தமிழில் இணைப்பை தேடினேன் . கிடைக்கவில்லை . ஆங்கிலத்தில் தான் கிடைத்தது . முடிந்தவர்கள் தமிழில் முயற்சி செய்யவும் .

oru-yogin-suya.gif

ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)

இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிவு நன்பன் ஒருவன் மூலம் கிடைத்தது (93 - 94ம் ஆண்டளவில்) . பல தடவைகள் வாசித்துவிட்டேன்.

99.9999% பிடித்திருந்தது. ஒரே ஒரு விசயத்தைத் தவிர.

ஆரியர்கள் இந்தியாவிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளிற்கு இடம்பெயர்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஆராய்வது சற்று இடிக்கிற விசயம். ( ஆரியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவனமாகப் பார்த்து ஏத்துங்க தோழர். பிழைத்தால் ஏற்கனவே எத்தினதெல்லாம் இறங்கிவிடும். :(

:lol::D

குண்டலினி, உங்கள் குஞ்சியம்மாவா தோழரே?

கூப்பிட்டவுடன் ஓடி வருவதற்கு! :D:lol::D

:lol:

குண்டலியின் சூட்சுமம் உங்கள் சுண்டெலியில்.

........தோழர்...

:lol:

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

அருமையான பதிவு

அதற்கான கருத்துக்களும் அதனை மெருகூட்டுகின்றன.

தொடருங்கள்

பருக ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

bhagavad-gita1.jpg

பகவத் கீதை - அத்தியாயம் 1 - 18

பகவத் கீதை - அத்தியாயம் 1

அர்ஜூன விஷாத யோகம்

திருதராஷ்டிரர் அமைச்சர் சஞ்சயனிடம் கூறினார் : சஞ்சயா, அறத்துக்குப் பெயர் பெற்ற குரு நிலத்தில் போர் புரியத் திரண்டிருந்த என் மக்களும் பாண்டு புத்திரர்களும் என்ன செய்கிறார்கள்?

சஞ்சயன் : பாண்டுவின் சேனையைப் பார்த்தவாறு, துரியோதனன் தன் ஆசாரியரிடம் கூறுகிறான்.

குருவே, உங்கள் சீடன் துருபத குமாரனால் நன்றாக அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவ சேனையைப் பாருங்கள்.

பீமனுக்கும் அர்ஜூனனுக்கும் சமமான வீரர்கள் அங்கு பலர் உள்ளனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மஹாரதர்களும் உள்ளனர்.

த்ருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற பலவான்களும், யுதாமன்யும், உத்தமவ்ஜன் மற்றும் திரவுபதி, சுபத்ரையின் புதல்வர்கள் உள்ளனர்.

சிறந்தவரே, இனி நமது சேனைத் தலைவர்களை உமக்குத் தெரியப்படுத்துகிறேன். எப்போதும் வெற்றி வீரரான நீர், பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், பூரிசிரவஸ் மற்றும் எனக்காக பிராண தியாகம் செய்யக்கூடிய - வல்லமை வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். பீஷ்மர் தலைமை ஏற்றுள்ள நமது படைபலம் அளவிட இயலாதது. ஆனால் பீமனின் படையோ சிறியது.

முக்கியமான போர் முனைகளிலிருந்து நீங்கள் முதியவரான பீஷ்மருக்கு பாதுகாப்பு கொடுங்கள்.

பின்னர் குருவம்சத்து வீரரான பிதாமஹர் பீஷ்மர் தமது சங்கை, சிம்ம கர்ஜனை போல் முழங்கி துரியோதனனை மகிழ்வித்தார். தொடர்ந்து சங்குகள், குழல்கள், பறைகள், முரசுகள், கொம்புகள் ஒரே சமயத்தில் முழங்கின.

மறுபுறத்தில், வெண்குதிரைகள் கொண்ட தேரில் இருந்தபடி பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜூனனும் தமது தெய்வீகமான சங்குகளை முழங்கினர்.

கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும், அர்ஜூனன் தேவதத்தம் எனும் சங்கையும், சாகச வீரனான பீமன் பெளண்ட்ரம் எனும் சங்கையும் முழங்கினர். யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் ஸூகோஷம், புஷ்பகம் எனும் சங்குகளையும் மற்றும் காசிராஜன், சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், ஸாத்யகி, துருபதன், திரவுபதியின் புதல்வர்கள், சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு போன்றோரும் தமது சங்குகளை முழங்கினர்.

சங்கொலிகளால் பூமியும் வானமும் நடுங்கின. திருதராஷ்டிரனின் மகன்களது இதயங்கள் நொறுங்கினது போலாயின.

திருதராஷ்டிர மன்னனிடம் அமைச்சர் சஞ்சயன் கூறினான். : மன்னா, ஹனுமன் கொடி பறக்கின்ற ரதத்தில் இருந்த அர்ஜூனன் உமது படைகளை நோக்கி வில்லேந்தியபடி கிருஷ்ணரிடம் கூறினான்.

அச்யுதா, எவருடன் நான் போரிட வேண்டும் என்பதைக் காண்பதற்கேதுவாக என்னை படையிடையே ரதத்துடன் நிறுத்துவீராக. துர்மதியனான துரியோதனனை மகிழ்விக்கும்பாங்கில் போருக்கு வந்திருப்போரை நான் காண வேண்டும்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் தமது சிறந்த ரதத்தினை சேனைகளின் நடுவே நிறுத்தினார். பீஷ்மர், துரோணர் மற்றும் சேனைத் தலைவர்கள் முன்னிலையில் "பார்த்தா, கூடியிருக்கும் குருவம்சத்தினரைப் பார்" என்று கூறினார்.

சேனைகள் நடுவே நின்ற அர்ஜூனன், எதிரணியில் தாய் - தந்தை, பாட்டனார், குருமார், சகோதரர், புத்திரர், பேரன்மார் வழியிலான உறவினர்களையும், தோழர்களையும் கண்டு அதிர்ந்தான். பின்னர் இரக்கத்துடன் கூறினான்.

அன்பிற்குரிய கிருஷ்ணா, போரிடும் எண்ணத்துடன் இங்கு கூடியிருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு என் உடல் நடுங்குகிறது. வாய் உலர்கிறது. ரோமம் சிலிர்க்கிறது, சருமம் எரிகின்றது, காண்டீபம் நழுவுகின்றது. இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. குழப்பத்தால் என்னை மறக்கின்றேன். கேசியை அழித்தவரே, கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன்.

கோவிந்தா, உறவினரை அழிப்பதால் எனக்கென்ன லாபம்? அப்படியொரு வெற்றியையோ, அரசையோ, இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

அரசும், சுகவாழ்வு அடைவதற்கும், யாருக்காக வாழவும் விரும்புவோமோ அவர்களையெல்லாம் கொன்றுவிட்டு சுகமாயிருக்க முடியுமா? மூவுலகும் கிடைத்தாலும் நான் இவர்களை இழக்க மாட்டேன். நான் கொல்லப்பட்டாலும் இவர்களைக் கொல்ல மாட்டேன். அல்ப பூமியைப் பெற நான் இதைச் செய்வேனா?

ஜனார்த்தனா, இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கொல்வதால் நமக்கு பாபம்தான் வரும். திருமகள் கணவா, உறவுகளை அழித்துவிட்டு எப்படி மகிழ்வாய் இருக்க முடியும்?

பேராசையினால் கலகம், குலநாசம் இவைகளைச் செய்வதில் இவர்கள் பாபத்தைக் காணாவிடிலும் நாம் ஏன் பாபச்செயல்களில் ஈடுபடவேண்டும்?

குலம் அழிவதால் குலதர்மம் கெடும். இதனால் மீந்திருப்பவர்களும் அறமற்ற செயல்களைச் செய்வார்கள். குலத்தை அதர்மம் சூழ்ந்தால் குலப்பெண்கள் கெட்டுப்போய் தேவையற்ற சந்ததிகள் (வர்ண ஸங்கிரஹம்) உருவாகும். இவர்களுக்கு நரகமே கிட்டும். இத்தகைய குலங்களில், இறந்து போன முன்னோருக்கான பிண்ட காரியங்கள் சரிவர நடப்பதில்லை.

இதனால் நிலையான ஜாதி தர்மங்களும், குலதர்மங்களும் நிலை தடுமாறுகின்றன.

குலதர்மம் கெட்ட மனிதர்களுக்கு நரகமே கிடைக்கும் என நான் கேள்விப்பட்டுள்ளேன். ஐயகோ! அரசபோக ஆவலால் பாபம் புரிவதா?

திருதராஷ்டிர மக்களுடன் நான் போர் புரிவதைவிட, எதிர்ப்பின்றி அவர்களால் கொல்லப்படுவதையே சிறந்ததாக நினைக்கிறேன்.

சஞ்சயன் : இவ்வாறு கூறிய அர்ஜூனன், வில்-அம்பினை கீழே நழுவவிட்டபடி, தொங்கிய முகத்துடன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

அத்தியாயம் 2 >>

====++++====

பகவத் கீதை - அத்தியாயம் 2

ஸாங்க்ய யோகம்

கவலையும், கண்ணீருமாய் கலக்கத்துடன் அமர்ந்துவிட்ட அர்ஜூனனைப் பார்த்து மதுசூதனர் கூறினார்.

அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதெ. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்.

அர்ஜூனன் : மதுசூதனா, எனது வணக்கத்திற்குரிய பீஷ்ம, துரோணர்களை நான் எப்படி எதிர்ப்பேன். தனது ஆசிரியனைக் கொன்று வாழ்வதை விட பிச்சையேற்பதே மேல். அவர்கள் பேராசைப்பட்டாலும் பெரியோர்களே. அவர்கள் ரத்தம் சிந்திய நிலத்தை நான் அனுபவிப்பதா? யார் வெல்வார். எது சிறந்தது என்பதை நாமறியோம். யாரை இழந்தால் நாம் வாழ விரும்பமாட்டோமோ அவர்களல்லவா எதிரில் நிற்கின்றனர்.

கடமையைப் பற்றி நான் குழப்பமடைந்து பலவீனத்தால் எனது இயல்புகளை இழந்துள்ளேன். எது நல்லது என்பதை நீரே தெளிவுபடுத்தும். உம் சீடன் நான். அருள் கூர்ந்து அறிவுரை தாரும். வளமான பூமி, விரோதியற்ற நாடு, விண்ணுலக வாழ்வு என எனக்கு எது கிடைத்தாலும் என்னை வாட்டுகின்ற இத்துன்பங்களைப் போக்குவதற்கான வழி உம்மைத்தவிர வேறெங்கும் கிடைக்காது.

சஞ்சயன்: வீரனான அர்ஜூனன், குழப்பத்துடன் "கோவிந்தா, நான் போரிடேன்" என்று கூறி அமர்ந்தான்.

துயரத்துடனிருந்த அர்ஜூனனைப் பார்த்து புன்சிரிப்புடன் பகவான் கூறினார் : அறிவாளியைப் போல் பேசும் நீ, கவலைப்பட வேண்டாததற்காக கவலைப்படுகிறாய். அறிஞன் இருப்பவருகாகவோ, இறப்பவருக்காகவோ வருந்துவதில்லை. நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாதிருந்ததும் இல்லை, இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

உடலில் உயிராயுள்ள ஆன்மா, பாலகன் - இளைஞன் - வயோதிகன் என உடலை மாற்றிக் கொண்டிருப்பது போல இறப்பின் போது வேருடலுக்கு மாறிக்கொள்கிறது. தன்னை (ஆத்மாவை) அறிந்தவன் இதற்காகத் திகைப்பதில்லை.

கோடையும் குளிரும் பருவ காலத்திற்கேற்ப நிலையற்று மாறுவது போல, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் புலனுகர்வாலேயே ஏற்படுகின்றன. இதில் பாதிப்படையாமல் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்வாயாக.

சிறந்தவனே, இன்ப துன்பங்களினால் பாதிப்படையாமல் தன்னிலை மாறாதிருப்பவனே விடுதலைக்குத் தகுதி பெற்றவனாவான்.

நிலையானது, நிலையற்றது இந்த இரண்டிலும் உண்மையை அறிந்தவர்களின் தீர்வு நிலையற்றதற்கு நீடிப்பு, நிலைத்தவைக்கு முடிவில்லை என்பதாகும்.

உடல் முழுவதும் அழிவற்ற ஒன்று (ஆன்மா) பரவி இருக்கின்றது. அதனைக் கொல்வதற்கு யாருமில்லை. அது அளவிட இயலாதது. ஆதலால் பரதகுலத் தோன்றலே, போரிடுவாயாக. ஆன்மா அழிவதுமில்லை, அழிப்பதுமில்லை. இதை அறிவாளிகள் அறிவார்கள். ஆன்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. முன்பு உண்டாகாமல் பின்பு உண்டாகிறதுமில்லை. அது பிறப்பற்றது, நித்தியமானது, சாசுவதமானது, புராதனமானது, உடல் அழியும்போது ஆன்மா அழிவதில்லை.

ஆன்மாவை அழிவற்றதாக, பிறப்பற்றதாக, மாறாததாக அறிந்திருப்பவன் யாரையும் கொல்வதுமில்லைம் கொல்லச்செய்வதுமில்லை.

நைந்து போன ஆடைகளை புறக்கணித்து, புது ஆடைகளை ஏற்பதுபோல, ஆன்மாவானது உபயோகமற்ற உடலைப் புறக்கணித்து, புதிய உடலை ஏற்கின்றது. அத்தகு தனிப்பட்ட ஆன்மாவை, ஆயுதம் பிளக்காது, நெருப்பு எரிக்காது, நீரும் நனைக்காது, காற்று உலர்த்தாது. எங்கும் இருப்பது, என்றுமிருப்பது, அசையாதது, மாறாதது, மாற்றமுடியாதது, கண்ணுக்கெட்டாதது, சிந்தைக்கு அப்பாற்பட்டது. இவைகளை அறிந்து நீ உடலுக்காக வருந்தாதே.

மேலும் ஆன்மா எப்போதுமே பிறந்து இறந்து கொண்டிருப்பதாகவே நீ எண்ணினாலும் அதில் துக்கப்பட என்ன இருக்கிறது? பிறப்பதெல்லாம் இறப்பது உறுதி என்றால் இறப்பதெல்லாம் பிறப்பதும் உறுதி அல்லவா? தவிர்க்க முடியாத இவ்விஷயத்தில் நீ கடமை செய்யக் கலங்கலாமா?

தோன்றுபவை எல்லாமெ முதலில் தோன்றாதிருந்து, இடையில் தோன்றி, இறுதியில் தோன்றா நிலையை அடகின்றன. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது.

ஆன்மாவைப் பற்றி சிலர் வியப்பாகப் பார்க்கிறார்கள், சிலர் வியப்பாக பேசுகிறார்கள், சிலர் வியப்புடன் கேட்கிறார்கள். ஆனாலும் ஆன்ம உணர்வுடன் யாரும் வாழ்வதில்லை, அதனை அறியாதவராகவே இருக்கின்றனர்.

உடலின் வாழும் அவன் (ஆன்மா) நித்தியன், அழிக்கப்பட முடியாதவன். எனவே பிறப்புடைய எந்த ஆன்மாவுக்காகவும் நீ வருந்தத் தேவையில்லை. உனக்கான (சத்ரியன்) தர்மத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் நீ வருந்தத் தேவையில்லை. நீதிக்காகப் போரிடுவதைக் காட்டிலும் ஒரு சத்திரியனுக்கு வேறு கடமைகள் உண்டோ? தயங்காதே. வீரனுக்கு வலியவரும் போர்வாய்ப்புகள் மேலுலகின் கதவுகளைத் திறக்கின்றன. அதனால் அரசர்கள் மகிழ்கின்றனர். இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யாவிட்டால், அதர்மம் புரிவதுடன், உனது பெயரையும், புகழையும் இழந்து பாபமடைவாய். உலகம் உன்னை அவமதிக்கும். மதிக்கப்பட்டவனுக்கு வரும் அவமானம் மரணத்தைக் காட்டிலும் கொடியது.

இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், வெற்றி தோல்விகள் இவற்றைக் கருதாமல் போரிடு, இதனால் பாபம் ஏற்படாது.

ஸாங்க்ய நெறிகளைக் (ஆன்மாவின் இயல்புகள்) கூறினேன். இனி பலன்பாராமல் செயல்படும் யோக முறைகளைக் கூறுகிறேன். இத்தகைய அறிவுடன் செயல்பட்டால், பந்தப்படாமல், செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபடுவாய்.

இம்முயற்சியில் குறைவோ, இழப்போ இல்லை. சிறு முன்னேற்றம் கூட மிகப்பெரிய பயத்திலிருந்து உன்னைக் காக்கும்.

இவ்வழியில் உள்ளோர் உறுதியான நோக்கமுடையவர். இவர்களுக்கு இலட்சியம் ஒன்றே. உறுதியற்றவர்களுக்கோ அது பல கிளைகளை உடையதாய் இருக்கிறது.

மேல் கிரஹங்களுக்கு செல்வது, நற்பிறவி அடைவது, ஆற்றல்கள் பெறுவது போன்ற வேதங்களின் பலன் தரும் பதங்களால் குறைமதியாளர்கள் கவரப்படுகிறார்கள். இதைவிட உயர்ந்தது எதுவுமில்லை என்று அத்தகைய புலனுகர்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய வார்த்தைகளில் மயங்கி போகத்திலும், செல்வத்திலும் ஈடுபட்டவர்களின் மனதில், இறைவன் மீது நிலையான உறுதி ஏற்படுவதில்லை.

வேதங்கள் முக்குணங்களுக்கு உட்பட்டவை (ஸத்வம் - சாந்தம், ரஜோ - தீவிரம், தமோ- மந்தம்). நீ அவைகளுக்கு அப்பாற்படுவாயாக. எல்லா இரட்டைகளிலிருந்தும், அடைதல் - காத்தல் போன்ற கவலைகளில் இருந்தும் விடுபட்டு தன்னுணர்வில் நிலைபெறுவாயாக.

சிறு கிணற்றினால் அடையப்படும் எல்லாத் தேவைகளும் பெரும் நீர்த்தேக்கத்தினால் உடனேயே நிறைவேற்றப்படும், அதுபோல வேதங்களின் எல்லா நோக்கங்களும் தன்னை அறிந்தவனால் அடையப்பட்டதாகும்.

விதிக்கப்பட்ட கடமையைச் செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது. செயலின் பலனில் அதிகாரம் இல்லை. இருப்பதாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையையும் விரும்பாதே. வெற்றி, தோல்விகளை எண்ணாமல் நடுநிலையுடன் செயல்படு. இத்தகைய மனநிலையே யோகம் எனப்படும்.

கஞ்சர்களே கர்மபலனைக் கருதியபட் இருப்பர். புலனுக்கான பலனோக்கச் செயல்களிலிருந்து விடுபட, புத்தியுடன் பகவானைச் சரணடைந்து பக்தியுடன் செயல்படுவாயாக. இவ்வாறு செயல்படுபவன் சிறந்தவன். அவன் இவ்வாழ்விலேயே நல்ல, தீய விளைவுகளிலிருந்து விடுபடுகிறான்.

இறைவனுக்குத் தொண்டாற்றும் அவன், கர்ம பலன்களில் சிக்காமல் ஜனன மரண சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன், துன்பங்களுக்கு அப்பாற்பட்ட நல்ல நிலையை அடைகிறான்.

மயக்க நிலையை அறிவால் நீ கடந்து விட்டால், கேட்டவை - கேட்பவை இவற்றில் வைராக்கியம் பெறுவாய். பலன் தரும் விஷயங்கள் குறித்த வேதக்கூற்றுகளில் மனம் கவரப்படாதபோது - தன்னுணர்வில் நீ திளைத்திருக்கும்போது நீ உன்னத உணர்வில் இருப்பவனாவாய்.

அர்ஜூனன் : உன்னத உணர்விலிருப்பவனின் (ஸ்தித பிரக்ஞன்) அறிகுறிகள், அவனது பேச்சு, நடவடிக்கைகள் யாவை?

பகவான் : பார்த்தனே, ஆசைகளை அகற்றி, பிற ஒன்றினால் இன்றி தனக்குள்ளேயே திருப்தி கொண்டிருப்பவன் ஸ்தித பிரக்ஞன் (உன்னத உணர்வுடையவன் அல்லது உணர்வு நிலைபெற்றவன்) ஆவான்.

இன்ப, துன்பங்களால் பாதிக்கப்படாதவனும், பற்று, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனும், மனம் நிலைபெற்ற முனிவனாவான். அவன் நன்மைகளால் களிப்புறாமல், தீமைகளால் கவலைப்படாமல் பற்றற்று முழு அறிவில் நிற்பவனாவான்.

ஆமை தன் அவயங்களை தனக்குள்ளே இழுத்து வைத்திருப்பது போல, புலன்களை விஷயங்களிலிருந்து விலக்கி வைத்திருக்கிறான். அவனுக்கு விஷய அனுபவங்கள் இல்லாவிட்டாலும், அவற்றின் மீதான சுவை இருக்கத்தான் செய்யும். ஆனால் (பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே) பகவான் மீது அவனுக்கு சுவை ஏற்பட்டுவிட்டால் பிற சுவைகள் எல்லாம் மங்கி விடுகின்றன.

புலனடக்கம் பயிலும் நல்லறிஞனுடைய மனதையும் கூட சக்தி வாய்ந்த புலன்கள் இழுத்துச் சென்றுவிடுகின்றன. அவைகளை அடக்கி என்னில் மனதை நிறுத்துபவனின் அறிவே நிலைபெற்ற அறிவாகும்.

புலன் நுகர்வுக்கான பொருட்களை எண்ணிக்கொண்டே இருப்பதால் ஒருவனுக்கு அப்பொருளில் பற்று ஏற்படுகிறது. பற்றிலிருந்து காமமும், காமத்திலிருந்து சினமும் வளர்கின்றன. சினத்திலிருந்து மயக்கமும், மயக்கத்தால் நினைவு தடுமாற்றமும் உண்டாகின்றன. நினைவு தடுமாறுவதால் அறிவை இழந்து பிறப்பு - இறப்பு கொண்ட ஜடச்சூழலில் இழிகிறான். (பற்று - ஒரு பொருளின் மீதான தொடர்ந்த எண்ணம். காமம் - எண்ணிய பொருளை அடையும் விருப்பம். சினம் - விருப்பம் நிறைவெறத் தடை ஏற்படும்போது வருவது.)

விடுபடும் பொருட்டு புலனடக்கம் கொண்டிருப்பவனோ இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகி விருப்பு, வெறுப்பு எனும் இருமைகளிலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு மனம் நிலைபெற்றவனுக்கு உலகத் துன்பங்களால் பாதிப்பில்லை. அவனது அறிவு ஸ்திரமாகிறது.

உன்னத உணர்வு பெறாதவனுக்கு கட்டுப்பட்ட மனமோ, நிலையான புத்தியோ இருக்காது. இவையில்லையேல் அமைதிக்கும் வழியில்லை. அமைதி இல்லையேல் ஆனந்தம் இல்லை.

படகானது காற்றால் இஷ்டம் போல அடித்துச் செல்லப்படுவது போல, மனம்போன ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.

எனவே பலம் வாய்ந்தவனே, விஷயங்களிலிருன்து முற்றிலும் விலகி கட்டுபாட்டுடன் இருப்பவன் நிலைத்த அறிவுடையவனாவான். பிறருக்கு இரவாய் இருப்பதே அவனுக்குப் பகலாகும். பிறரது விழிப்பு நேரமே அவனுக்கு இரவாகும்.

நதிகள் பெருக்கெடுத்து ஆடிஓடி பெரும் ஓசையுடன் வந்தாலும், அவற்றைப் பெரும் கடலானது, அடங்கி அமைதியாய் இருப்பது போல ஆசைப் பெருக்கினால் பாதிக்கப்படாதவனின் மனம் அடங்கி அமைதி காண்கிறது. மாறாக ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பவனின் மனம் அமைதி பெற முடியாமல் தவிக்கின்றது.

புலனிச்சைகளைத் துறந்தவனும், விருப்பமற்றவனும், கர்வம் மற்றும் உரிமை உணர்வுகளிலிருந்து விடுபட்டு இருப்பவனும் மட்டுமே பக்குவமான அமைதியைப் பெற முடியும். இந்த ஆன்மீகமான பாதையை ஒருவன் ஏற்றால் அவனுக்கு என்றுமே குழப்பமில்லை. கடைசி காலத்தில் கூட தன் (பிரம்ம) உணர்வினால் அவன் இறையரசை அடைகிறான்.

அத்தியாயம் 3 >>

====++++====

பகவத் கீதை - அத்தியாயம் 3

கர்ம யோகம்

அர்ஜூனன் : ஜனார்த்தனா, கேசவா, பலனை விரும்பும் செயலை விட (கர்மம்), நிலையான அறிவு (ஞானம்) சிறந்ததாயின், கோரமான கொலைத் தொழில் புரிய என்னை ஏன் பலவந்தப்படுத்துகிறீர்? இருவழிகளை ஒன்றுபோல கூறும் உமது பேச்சுக்களால் எனக்கு மயக்கம் ஏற்படுகிறது. எது நன்மையானதோ அதை முடிவாகக் கூறும்.

களங்கமற்றவனே, இறை உணர்வைப் பெற விரும்புவோர் இருவிதமாக உள்ளனர். சிலர் மனக்கற்பனை ஓட்டத்தினாலும், சிலர் இறைவனை இறுதி இலக்காகக்கொண்டு கடமையாற்றியும் அவரை அறிய முயலுகின்றனர். ஆனால் விளைவுகளுக்கு அஞ்சி, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் அதிலிருந்து தப்புவதால் மட்டும், விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அதேசமயம் துறவினால் மட்டும் பக்குவம் அடைய முடியாது. ஏனெனில் இயல்பான குணங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர். ஒருகணம் கூட செயல்படாமல் இருப்பது எவருக்கும் இயலாது.

புலன்களை அடக்கி, ஆனால் மனதால் புலன் விஷயங்களை எண்ணிக்கொண்டு இருப்பவன் போலியாவான்.

புலன்களை மனதால் அடக்கி, இறை உணர்வுடன் அவரையடையும்படி, கடமையில் ஈடுபட்டிருப்பவன் நல்லவன் ஆவான்.

செயலற்ற நிலையைவிட, பக்தியுடன் செயல்படுவதே சிறந்தது. ஏனெனில் செயலின்றி உடலைக்கூட பராமரிக்க முடியாது.

ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவதுடன் பற்றடங்கி வாழலாம்.

படைப்பின் துவக்கத்தில் குலங்கள், தேவர்கள், யாகங்களை ஏற்படுத்தி "யாகங்கள் செய்து பலனடைந்து சுகமாயிருங்கள், யாகங்களால் தேவர்கள் மகிழ்ந்து உங்களை மகிழ்விப்பார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் பேணி நலம் பெறுங்கள்" என இறைவன் கூறினார்.

யாகத்தால் திருப்தி அடையும் அதிகாரிகளான தேவர்கள், மனிதர்களுக்கான வாழ்வுத் தேவைகளை எல்லாம் வழங்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு பதிலுக்கு படைக்காமல் அனுபவிப்பவன் திருடனாவான்.

யாகத்தில் முதலில் படைக்கப்பட்டதை உண்பதால் பக்தர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் தனது புலன் இன்பத்திற்காக உணவு தயாரிப்பவர்களோ பாபத்தையே உண்கின்றார்கள்.

விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது யாகமாகும். யாகத்தால் மழையும், மழையினால் தானியமும், தானியத்தால் ஜீவர்களும் வாழ்கின்றனர். ஒருவருக்கான கடமைகள் இறைவனிடமிருந்து தோன்றிய வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. யாகங்களில் இறைவன் உறைகிறார்.

இத்தகைய யாகச்சக்கரத்தினை கடைப்பிடிக்காதவன் பாபி ஆவான். புலனின்பமே கதியாய் இருக்கும் அவனது வாழ்வு வீணாகும்.

தனக்குள் மகிழ்ந்து - திருப்தி கொண்டு பக்குவமாய் இருப்பவனுக்கு கடமைகள் ஏதுமில்லை. தன்னை உணர்ந்தவனுக்கு எந்தக் கடமையுமில்லை. செயலினால் அடைய வேண்டிய நோக்கமும் அவனுக்கில்லை. இறைவனைத் தவிர எவரையும் அவன் சார்ந்திருக்க வேண்டியதில்லை.

ஆதலால் பலனில் பற்றின்றி, கடமைக்காக செயல்படுவாயாக. இதனால் மேன்மை அடையலாம். ஜனகர் போன்ற மன்னர்கள் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்தே பக்குவமடைந்தனர். எனவே உலகுக்கு நல்வழி காட்டவாவது செயல்படுவாயாக.

வழிகாட்டும் பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதையே மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்களின் செயல்களையே உலகம் உதாரணமாகக் கொள்கிறது.

பார்த்தனே, மூவுலகிலும் எனக்கென்று கடமைகள் ஏதும் கிடையாது. அடைய வேண்டியதும் ஏதுமில்லை. இருப்பினும் நான் செயல்படுகிறேன். ஏனெனில் நான் செயல்படாவிடில் மனிதரெல்லாம் என்னையே பின்பற்றி செயல்படாமல் இருந்து விடுவார்கள். நான் செயல்படுவதை நிறுத்தினால் உலகம் அழியும். தேவையற்ற இதற்கு நானே காரணமாகி ஜீவர்களின் அமைதியைக் கெடுத்தவனாவேன்.

பலனில் பற்றுடன் பாமரர்கள் செயல்படுவது போல், நல்ல புத்தியுள்ளவன் மக்களை வழி நடத்தும் பாங்கில் பற்றின்றி கடமையாற்ற வேண்டும். பாமரர்களுக்கு அவன் புத்திக் குழப்பத்தை ஏற்படுத்தாமலும், செயலிலிருந்து விடுபடத் தூண்டாமலும், பக்தியுடன் செயலாற்றத் தூண்ட வேண்டும்.

குணங்களால் மயங்கிய நிலையில் ஒருவன், இயற்கையால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே காரணமாகக் கருதுகிறான்.

பூரண உண்மையை அறிந்தவர்கள் தன்னை புலன்களிலோ, புலனுகர்ச்சியிலோ ஈடுபடுத்திக் கொள்வதில்லை. பக்தியுடன் செயல்படல், பலன் விரும்பிச் செயல்படல் இவ்விரண்டின் வித்தியாசத்தை அறிந்துள்ளனர். குணங்களால் மங்கியிருக்கும் அறியாதவர்களே, செயல்களில் தீவிர பற்றுக் கொள்வர். அது கீழ்த்தரமாயினும் அறிவுடையவர்கள் அவர்களைக் கலங்கடிக்கக் கூடாது.

எனவே எனக்கு அர்ப்பணமாக - என்னில் மனதை நிறுத்தி, பலன் கருதாமல், பொய் அஹங்காரத்தையும், ஊக்கமின்மையையும் கைவிட்டு போரிடுவாயாக.

இவ்வறிவுரையை பொறாமையின்றி நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுபவன் எல்லா விளைவுகளில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் பொறாமையுடன் இதனை ஏற்காமல் இகழ்ந்து, பின்பற்றாதிருப்பவன் வீணன் ஆகிறான்.

அறிவிற் சிறந்த ஞானியும் கூட தன் இயல்புப்படியே நடக்கிறான். இயல்பினைத் தடுப்பதால் ஆவதென்ன?

இந்திரியங்களுக்கு விருப்பு, வெறுப்பு இருந்தாலும் அவைகளுக்கு வசப்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவை தன்னுணர்வுப் பாதையில் தடுப்பாக அமைகின்றன.

பர தர்மங்களைச் சிறப்பாய் செய்வதைவிட குறையாயினும் சுயதர்மத்தை செய்வது நல்லது. பிற தர்மம் பயம் தரும். சுயதர்மமோ புரிகையில் அழிவுற்றாலும் நல்லது தான்.

அர்ஜூனன்: விருஷ்ணியே, விருப்பமே இல்லாவிட்டாலும் பாபச் செயல்கள் புரிய ஒருவன் தூண்டப்படுவது எதனால்?

பகவான்: அர்ஜூனா, ரஜோ குணத்தில் உண்டாகி, கோபமாய் உருவெடுக்கும் காமமே பாபமிக்க விரோதியாகும். அது எல்லாவற்றையும் அழிக்கும்.

நெருப்பு புகையாலும், கண்ணாடி தூசியாலும், கரு கருப்பையாலும் மூடப்பட்டிருப்பதைப் போல் ஜீவன் பலதரப்பட்ட காம உணர்வுகளால் மறைக்கப்பட்டிருக்கிறான். ஒருவனது தூய உணர்வானது, என்றுமே திருப்தி அடையாத நெருப்பு போன்ற, நித்திய விரோதியான காமத்தால் சூழப்பட்டுள்ளது.

புலன்கள், மனம், புத்தி இவைகளே ஜீவனின் அறிவை மறைத்து மயக்கும் காமத்தின் இருப்பிடங்கள் ஆகும்.

புலன்களை நெறிப்படுத்தி, அறிவு - அனுபவத்தை அழிக்கும் பாபச்சின்னமான காமத்தினை ஆரம்பத்திலேயே அடக்கி ஒழி.

ஏனெனில் புலன்கள் உடலை விட உயர்ந்தது. மனமோ புலன்களை விட உயர்ந்தது. புத்தி மனத்தை விட உயர்ந்தது. ஆன்மாவோ புத்தியை விட உயர்ந்தது. இவ்வாறாக ஆன்மாவை அறிந்து, அதன் உயர்ந்த இயல்புகளால் காம வடிவான கீழ் இயல்புகளை வெல்வாயாக.

அத்தியாயம் 4 >>

====++++====

பகவத் கீதை - அத்தியாயம் 4

ஞான கர்ம சன்யாச யோகம்

பகவான்: அழிவற்ற இந்த யோக முறையை முன்பு சூரிய தேவனுக்கு கூறினேன். அவன் மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் இதை உபதேசித்தனர். இவ்வாறு பரம்பரை முறையில் கிரமப்படி வந்துள்ள இச்செய்தியானது புனிதமான மன்னர்களாலும் அறியப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் மறைந்தது போலத் தோன்றுகிறது.

நீ எனக்கு நண்பனும், பக்தனுமாதலால் இறைத்தொடர்பு பற்றிய இவ்விஞ்ஞானம் இன்று உனக்கு என்னால் கூறப்படுகிறது. இதன் ரகசியத்தையும் உன்னால் புரிந்து கொள்ள முடியும்.

அர்ஜூனன்: பிறப்பினால் உமக்கு முந்தையவர் விவஸ்வான், அவருக்கு நீர் எப்படி உபதேசித்தீர்?

பகவான்: பற்பல பிறவிகளை நாம் கடந்துள்ளோம். அவற்றை நாமறிவோம், நீயறியாய். நான் பிறப்பற்றவன். எல்லா உயிர்களுக்கும் இறைவன். இருந்தாலும், திவ்வியமான ஆன்மீக சரீரத்துடன் யுகம்தோறும் தோன்றுகிறேன்.

எப்பொழுதெல்லாம் அறநெறிகளுக்கு தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் என்னை நான் இவ்வாறு உருவித்துக் கொள்கிறேன். சாதுக்களைக் காக்கவும், கொடியவர்களை ஓய்ப்பதற்காகவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் யுகந்தோறும் வருகிறேன்.

எனது திவ்யமான பிறப்பு, செயல்கள் இவற்றின் மேலான தன்மைகளை உள்ளபடி அறிபவன், ஜட உடலை விட்டபின் மீண்டும் இங்கு பிறப்பதில்லை, அவன் என்னை அடைகிறான்.

ஆசை, பயம், சினம் இவற்றை விட்டு என்னிடம் சரணடைந்த பலர், ஞானதவத்தால் தூய்மையடைந்து என்னிடம் நல்ல முறையில் அன்பு கொண்டுள்ளனர். என்னிடம் அவர்கள் சரணடைவதற்கேற்ப நான் பலன் அளிக்கிறேன். எவ்வழியிலும் அவர்கள் என்னையே பின்பற்றுகின்றனர்.

பலனிச்சையால் மனிதர்கள் தேவர்களைப் பூசிக்கின்றனர். இத்தகு செயல்களுக்கு உடனடி விளைவுகளும் அமைகின்றன.

குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப மனிதரில் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. (பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்). எனினும் மாற்றமில்லாத என்னை, செயலுக்கு அப்பாற்பட்டவன் என்பதை அறிவாயாக.

எச்செயலும் என்னை பாதிப்பதுமில்லை. செயலின் பலனுக்காக நான் ஏங்குவதுமில்லை. இவ்வாறு என்னை அறிபவன் செயலின் விளைவுகளால் கட்டுப்படுவதுமில்லை.

முன்னோர்கள்கூட இவ்விதம் செயல்பட்டு விடுபட்டுள்ளனர். நீயும் அதுபோல மேலான உணர்வுகளுடன் கடமைகளைச் செய்.

செயல்களே ஒருவனை விடுபடுத்துகின்றன. எது செயல், எது செயலற்ற நிலை என்பதைத் தீர்மானிப்பதில் அறிவாளியும் குழம்புகிறான். எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடக் கூடிய அத்தகைய செயல்களைப் பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் (கர்மா), விலக்கப்பட்ட செயல்கள் (விகர்மா), மற்றும் விளைவற்ற செயல்கள் (அகர்மா - பகவானுக்காக ஆற்றப்படுபவை) உள்ளன. அறிவதற்கு கடினமாயினும், இவற்றை அறிந்தே ஒருவன் செயல்பட வேண்டும்.

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே அறிஞன். அவன் செயல்பட்டாலும் விடுபட்டவனாவான்.

புலன் நுகர்வுக்கான நோக்கமின்றி செயல்படுபவன் சிறந்தவன். அவன் தனது பக்குவத்தால் விளைவுகளை எரித்து விடுவதால் அறிஞர்கள் அவனைப் போற்றுகின்றனர்.

செயலின் பலனில் பற்றற்று, சதா திருப்தியுடன் சார்பற்று இருப்பவன், செயல்பட்டாலும் செயலற்றவனே ஆவான்.

அப்படிப்பட்டவனது மனதும் அறிவும் கட்டுப்பட்ட நிலையில் உரிமை உணர்வின்றி குறைந்தபட்சத் தேவைகளுக்காக செயலாற்றுகிறான். அவன் தீய விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லை.

தானாய்க் கிடைப்பதில் திருப்தி அடைந்தவன், இருமைகளிலிருந்து விடுபட்டவன், பொறாமையற்றவன், வெற்றி - தோல்விகளில் சமமாய் இருப்பவன் - இவன் செயலாற்றினாலும் விளைவுகளால் பந்தப்படுவதில்லை.

பரம புருஷரின் திருப்திக்காக செய்யப்படும் செயல்களுக்கு ஜட விளைவுகள் கிடையாது.

கிருஷ்ண உணர்வில் லயிப்பவன் ஆன்மீக உலகை அடைகிறான். ஏனெனில் அவனது செயல்பாடுகளின் லட்சியமும் அதுதான். அவனால் சமர்ப்பிக்கப்படும் எதுவும் ஆன்மீக இயல்பு கொண்டதாக இருக்கின்றது.

ஆன்மீகிகளில் சிலர் தேவர்களுக்காகவும், சிலர் பரம்பொருளுக்காகவும், சிலர் மனம் எனும் நெருப்பில் புலன்களை அடக்கியும், சிலர் புலனுகர்ச்சிக்கான விஷயங்களை யாக நெருப்பிலிட்டும் யாகங்கள் செய்கின்றனர்.

தன்னுணர்வில் விருப்பம் கொண்ட சிலரோ புலன்களை அடக்கி, அதன் இயக்கங்களையும், பிராணனையும் அடங்கியிருக்கும் மனத்தீயில் யாகம் செய்கின்றனர். சிலர் பொருளாலும், சிலர் விரதம் போன்றவற்றாலும் யாகம் புரிகின்றனர். இன்னும் சிலர் அஷ்டாங்க யோகப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் அறிவை இலக்காய்க் கொண்டு வேதம் பயில்கின்றனர்.

லயிப்பிற்காக சிலர் சுவாசக் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். உள்சுவாசத்தில் வெளிசுவாச இயக்கத்தையும், வெளிசுவாசத்தில் உள்சுவாச இயக்கத்தையும் நிறுத்தப் பயின்று அதில் லயிக்கின்றனர். இவர்களில் சிலர் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வெளிசுவாசத்தை அதிலேயே யாகமாக அர்ப்பணிக்கின்றனர்.

யாகத்தின் போக்கினை அறிந்த இவர்கள் அனைவரும் ஜடக் களங்கங்களிலிருந்து விடுபட்டு, யாக விளைவு எனும் அமிர்தத்தைச் சுவைப்பதால் நித்திய உலகை அடைகிறார்கள்.

குருவம்சத்தவனே, யாகங்களின்றி இவ்வுலகில் யாரும் சுகமாக இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மறுவுலகைப் பற்றி என்ன சொல்வது? இந்த யாகங்கள் அனைத்தும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. கர்மங்களிலிருந்து தோன்றியவை. இதையறிந்து விடுதலையடைவாயாக.

பரந்தபா, பொருட்களினாலான யாகத்தை விட, ஞான யக்ஞம் சிறந்தது. ஏனெனில் எல்லா கர்ம யக்ஞங்களும் ஞானத்தில் தான் முற்றுப்பெறுகின்றன.

ஆன்மீக குருவுக்குப் பணிந்தும், பணிவிடைகள் புரிந்தும் கேள்விகள் கேள். உண்மையை உணர்ந்த அவர், உனக்கு உண்மை ஞானத்தை உணர்த்துவார்.

அதன்பின் மயக்கம் நீங்கி, எல்லா உயிரினங்களும் என் அங்கமே, அவை என்னுடையவை, என்னில் இருப்பவை என்றறிவாய்.

பெரும் பாபியாக நீ கருதப்பட்டாலும் ஞானப் படகினால், துன்பக்கடலைத் தாண்டுவாய்.

தீச்சுடரானது விறகுகளை சாம்பலாக்குவது போல், ஞானமானது கர்ம பந்தங்களை எரிக்கின்றது. ஞானம் போல் சிறந்ததும், தூயதுமில்லை. அதுவே யோக கனியாகும். இதைப்பெற்றவன் காலப்போக்கில் தன்னுணர்வில் திளைக்கின்றான்.

சிரத்தையுள்ளவன், புலனடக்கத்தாலும், ஞானத்தாலும், பரத்தில் ஆழ்ந்து, ஆன்மீக அமைதியை அடைகிறான். வேதங்களில் நம்பிக்கை இல்லாதவன் நாசமாகிறான், அவனுக்கு இவ்வுலகிலும், எவ்வுலகிலும் இன்பமில்லை.

செயலின் பலனில் இச்சையின்றி இறையருளால் சந்தேகங்கள் போக்கப்பட்டு, தன்னில் நிலைபெற்றவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துவதில்லை.

எனவே அர்ஜூனா, அறியாமையால் விளைகின்ற சந்தேகங்களை, அறிவெனும் ஆயுதத்தால் அழித்துவிட்டு, யோக கவசம் அணிந்து எழுந்து போரிடு.

அத்தியாயம் 5 >>

====++++====

பகவத் கீதை - அத்தியாயம் 5

கிருஷ்ண உணர்வில் செயலாற்றல்

அர்ஜூனன்: கிருஷ்ணா, கர்ம ஸந்நியாசத்தையும் (செயல் துறத்தல்), பிறகு கர்ம யோகத்தையும் (முழு அறிவுடன் பகவானை இலக்காய்க் கொண்டு செயல்படல்) உபதேசிக்கிறீர். இவற்றில் எது சிறந்தது என்பதைக் கூறுவீராக.

பகவான்: இரண்டும் சிறப்பைத் தரும், எனினும், செயலைத் துறத்தலை விட பக்தித் தொண்டில் செயல்படுவதே மேலானது.

செயலின் விளைவில் விருப்பு வெறுப்பற்றவனே நித்யமான துறவியாவான். அவன் இருமைகளிலிருந்தும், பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.

உலக ஆய்வறிவு (ஸாங்க்யம்), கர்மயோகம் இரண்டும் வெவ்வேறானது என அறிவற்றோர் கூறுகின்றனர். இவற்றில் எதை முழுமையாகப் பின்பற்றினாலும் ஒரே பலனைப் பெறலாம்.

துறவினால் அடையப்படும் பக்குவம், பக்தித் தொண்டினாலும் அடையப்படும். இவ்வகையின் செயலும், துறவும் ஒன்றெனக் காண்பவன் உண்மையை அறிந்தவனாகிறான்.

பகவானுக்காக தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே செயலை மட்டும் துறப்பவன் இன்ப நிலையை அடைய முடியாது. தத்துவமறிந்தவன் இறைச்செயல்களால் தூயவனாகி, விரைவில் பரத்தை அடைகிறான்.

அத்தகு தூய ஆத்மா தன்னடக்கத்தால் அனைவரிடமும் அன்புள்ளவனாகவும், அன்பு கொள்ளப்பட்டவனாகவும், செயலில் ஈடுபட்டாலும் கட்டுப்படாதவனாகவும் இருக்கிறான்.

உண்மையறிந்தவன் பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணல், செல்லல், உறக்கம், சுவாசம் இவற்றில் ஈடுபட்டாலும், தான் ஒன்றும் செய்யவில்லை என்பதை அறிந்துள்ளான். பேசும்போதும், கண்மூடித் திறக்கும்போதும், பெறும்போதும், கழிக்கும் போதும், தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என அறிந்துள்ளான்.

நீரிலிருக்கும் தாமரை இலைகளில் நீர் ஒட்டாதது போல், இறைவனை மையமாகக் கொண்டு செயல்படும் பற்றற்றவனை கர்மவிளைவுகள் பாதிப்ப‌தில்லை.

பற்றைத் துறந்து மனம், புத்தி, உடல் மற்றும் புலன்களால் கூட தங்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் யோகிகள் செயல்படுகின்றனர்.

எல்லாச் செயல்களின் விளைவுகளையும் எனக்கே அர்ப்பணம் செய்த, உறுதியான பக்தியுடைய ஆன்மா தூய அமைதியை அடைகிறான். அவ்வாறு செய்யாதவன் கர்ம பந்தங்களில் சிக்குகிறான்.

உடல் கொண்ட ஆன்மா, தன் இயற்கையைக் கட்டுப்படுத்தி மனதால் செயலைத் துறக்கையில், ஒன்பது கதவுகளையுடைய நகரில் அவன் செய்யாமலும், செயலுக்குக் காரணமில்லாமலும் இன்பமாய் வாழ்கிறான். உடல் நகரின் தலைவனான ஆன்மா செயல்களையோ, செயற்பலனையோ உண்டாக்குவதுமில்லை; யாரையும் செயல்படத் தூண்டுவதுமில்லை.

யாருடைய பாப, புண்ணியங்களுக்கும் பரமாத்மா பொறுப்பல்ல. அஞ்ஞானத்தினாலேயே ஆன்மாக்கள் மயங்குகின்றனர். எல்லாம் கதிரவனால் வெளிப்படுத்தப்படுவது போல, அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானத்தால் ஒருவனுக்கு உண்மை ஞானம் வெளிப்படுகிறது.

அறிவு, மனம், நம்பிக்கை இவற்றை இறைவன் மீது நிறுத்தி சரணடைந்தவன், தனது ஞானத்தால் களங்கங்கள் அகன்று, விடுபடும் பாதையில் முன்னேறுகிறான்.

அடக்கமுள்ள சாது - அறிவின் காரணத்தால் நல்ல அந்தணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் இவர்கள் அனைவரையும் சமநோக்குடன் காண்கிறான்.

ஆன்மா குறித்த ஒருமை, சமத்துவம் - இவற்றை அறிந்தவர்கள் இப்பிறவியிலேயே உலக நியதிகளை வென்றவர்களாவர். பிரம்ம உணர்வில் இருப்பதால் அவர்கள் பிரம்மம் போன்றே களங்கமற்றவர்களாவர்.

பிரியமானதை அடைவதால் மகிழ்வும், பிரியமற்றதை அடைவதால் துயரமும் கொள்ளாது, தன்னறிவுடன் மயக்கமற்று இறைவிஞ்ஞானத்தை அறிபவனாகவும் இருப்பவன் பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

அவன் இன்பத்திற்காக ஜடவுலகத் தொடர்புகளால் கவரப்படுவதில்லை. பரத்தில் கருத்தை செலுத்தியதால் தன்னுள்ளே எல்லையற்ற ஆனந்தத்துடன் இருக்கிறான். ஜட இன்பங்களுக்கு ஆரம்பமும், முடிவும் உள்ளன என்றும் துன்பத்திற்கு காரணமாக புலனீடுபாடுகள் இருக்கின்றன என்றும் அவன் அறிந்துள்ளதால் அவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

சரீரத்தை விடும்முன்பே புலன் மற்றும் காம, குரோத உந்துதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தவனே யோகி ஆவான். தனக்குள் இன்புற்று, மகிழ்வுடன் இருக்கும் அவன் தன்னுணர்வால் பரத்தை அடைகிறான்.

இருமை - ஐயங்களுக்கு அப்பாற்பட்டு, மனம் உள் நோக்கிய நிலையில், எல்லா ஜீவர்களின் நலனுக்குமாய் வாழ்பவன், பாபங்களிலிருந்து விடுபட்டு பரத்தை அடைகிறான்.

புலனிச்சைகள், கோபம் இவற்றிலிருந்து விடுபட்ட, தன்னுணர்வும் தன்னொழுக்கமும் கொண்ட, முழுமைக்காகப் பாடுபடும் சாதகன் விரைவில் பரத்தை அடைகிறான்.

புலன் விஷயங்களை வெளி நிறுத்தி, புருவ மத்தியில் பார்வையை நிறுத்தி, மனம், புலன், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு நிரந்தரமாய் இந்நிலையிலிருக்கும் சாதகன் நிச்சயம் விடுதலை பெற்றவனாவான்.

எல்லா யாகங்களுக்கும், தவங்களுக்கும் இறுதி லட்சியமாகவும், எல்லா லோக தலைவர்களுக்கும் மகேஸ்வரனாகவும், எல்லா உயிரினங்களின் நண்பனாகவும் என்னை அறிபவன், உலகத் துயர்களிலிருந்து விடுபட்டு அமைதியடைகிறான்.

http://hindumessage.blogspot.in/2009/09/blog-post_5036.html

:rolleyes: :rolleyes:

சாதி ...குலம்... கோத்திரம் ....என அக்க போர் செய்யாமல் தேவையான கருத்துக்களை "ஆன்மா" மட்டும் பேசலாம் என நினைக்கிறேன் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

ஈசன்,

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே கோட்டில் பயணிக்க முடியாது. அடிப்படையில், விஞ்ஞானம் “ஏன்”, “எப்படி” என்ற கேள்விகளுடன் அதற்கான பதிலை தேடுகின்றது. விஞ்னான விளக்கம் என்பது இந்த கேள்விகளுக்கான பதில்களே. இந்த பதில்கள் முழுமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றது சரியானபடி வரையறுக்கப்பட்ட செயன்முறைகள் மூலம் விளைவுகள் வாய்ப்புப்பார்கப்படலாம். உதாரணத்துக்கு, அன்று Youngs செய்த பரிசோதனையை நான் இன்றும் செய்து பார்க்கலாம். முடிபுகள் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். மேலும் தொடர்ச்சியான அறிவுக் கோர்வைகள், சரியானபடி இணைக்கப்படுகின்றன.

மெய்ஞானத்தில் இது சாத்தியமல்ல. ஏன், எதற்கு என்ற கேள்விகள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. ஆனாலும் நமக்கே தெரியாத எதிர்கலத்திலும் , முற்பிறப்பு என்பதிலும் பல பதில்களை செருகி வைத்திருக்கின்றனர். இவை என்றுமே வாய்ப்பு பார்க்க முடியாதவை.

எனவே ஒன்றோடொன்று இணையாத, விஞ்ஞான ரீதியில் மெய்ஞானத்தை அணுகுதல் சாத்தியமான ஒன்றல்ல.

மேலும், ஆய்வுகூட பரிசோதனைகள் கூட, அதன் இறுக்கமான பார்வையில், தனி நபர் சார்ந்ததாகி விடுகின்றது. அங்கு பார்ப்பவனும் (observer) பார்க்கப்படும் பொருளும் (observed) வேறு வேறாக தெரியும் மாயத்தோற்றத்தாலேயே பரிசோதனைகள், தியறிகள் என்பன வருகின்றன. பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் ஒன்றிவிட்டால் அங்கு நேரம் (time) , காலம் (period), தேசம் (space) என்பன ஒடுங்கிவிடும். அனுபவம் என்பது கூட அங்கு இருக்காது என நினைக்கின்றேன்.

எனவே, ஆபிரிக்க மதத்தை பின்பற்றுவதும், அதி உன்னதமான இன்னொரு மதத்தை பின்பற்றுவதும் ”அடிப்படையில்” ஒரே மாதிரித்தான். ஆனால் பின்னையதில் சிறிது கர்வம் வரலாம். சாதாரண விமானத்திலோ அல்லது உலங்கு வானூர்தியிலோ பயணித்து சந்திரனுக்கு போக முடியாதென்பது உண்மை எனும் போது எதில் பயணித்தால் என்ன? விமானம் சிறுது comfort ஆக இருக்கக்கூடும்.

உண்மைகளை தரிசிக்கும் அனுபவம் அற்புதமானது. பாருங்கள், ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்விலும் மரணம் என்பது சத்தியமான உணமை. என்றாவது அதை பற்றி சிந்திக்க தலைப்பட்டிருக்கிறோமா? உண்மைகளுக்கு பல வடிவங்கள் இல்லை. அது தன்னை செஞ்சூரியன் போல தகதகவென காட்டியபடி எந்தக்கணமும் உள்ளது. பொய்மையிலும், தற்காலிக சொகுசிலும் வாழ பிரியப்படும் மனம், உண்மைகளை பார்க்க அஞ்சும். உண்மைகள் பெரும் சுமையாக தோன்றும்.

எனவே ஒவ்வொரு மனமும் தனக்கு பிடித்தபடி ஏற்பாடுகளையும், அமைதி தரும் என அது நம்பும் முறைகளையும் கூட்டிணைத்து ஒரு செயல்முறையாக வாழ்க்கையை அமைத்து கொள்கிறது. இந்த பொய்மைகளை களைந்தெறிவது தான் மனித முன்னேற்றத்திற்கான முதற்படி. அமைதி, ஆத்மஞானம், காருண்யம் என்பன வெளியில் இருந்து என்றுமே, எப்போதுமே வர முடியாது. இது ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆழக்கிடங்கில் புதையுண்டிருக்கும் அற்புதமான அணிகலன்கள்.

state of mind என்பதை பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுவோம்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வேகமாய் வரும் பந்தைச் சரியாக ஏந்திப் பிடிக்க மூளை பல்லாயிரம் சமன்பாடுகளை சில வினாடிகளுக்குள் செய்துமுடித்துக் கட்டளைகளை பல்வேறு உறுப்புக்களுக்கும் அனுப்பிச் சரியாகத் தொழிற்படுத்துகின்றது. எல்லாவற்றையும் சீராகச் செய்வதற்கு "உயிர்" தேவை. உயிரற்ற உடம்பு பழுதான CPU உள்ள கணணி மாதிரித்தான்!

எனவே உயிருக்கு அடுத்த நிலை எதுவும் கிடையாது.. ஏனெனில் ஒவ்வொன்றும் தனித்துவமானவை!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனவே உயிருக்கு அடுத்த நிலை எதுவும் கிடையாது.. ஏனெனில் ஒவ்வொன்றும் தனித்துவமானவை!

அவ்வளவுதான்....இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால்.....மனிதனால் ஆத்மாவுக்கு பல கற்பனை கருத்துக்களை உருவாக்க முடியும்..

Edited by putthan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"தியானம்". இது மரணத்தைக் கடந்து அதற்குப் பிறகான மற்ற உலகங்களைப் பற்றியும், ஆத்மாவாகிய உயிர் இறுதியாக இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகிற வழித்தடங்களையும் மனிதனுக்கு காட்டக்கூடிய ஒரு உலகமாக இருக்கிறது. "நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிற கடமைகள், செயல்களினால் சிக்கியிருக்கும் மனம் தியானத்தின் பொழுது அதிலிருந்து விலகி மெல்ல... மெல்ல... ஒன்றுமற்ற ஒரே புள்ளியில் குவிகிற போது இந்த உண்மைகள் புலப்படும்" என்கிறார்கள் ஞானிகள்.

மரண பயத்திற்கு உட்படாத மனிதர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது. என்றைக்கு நிகழும் என்று நிச்சயிக்கப்படாத முடிவுகள் நிழல் போல் பின் தொடர்ந்த வண்ணம் மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் எல்லாவற்றின் மீதும் தீர்க்க முடியாத ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பயமும், வெறுப்பும் கொள்கிற போது சிலர் மரணத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கின்றனர். எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்வது ஒன்றே மகிழ்ச்சியானது என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் மரணம் தான் மகிழ்ச்சியானது என்பதாக தங்களின் உயிருள்ள போதே ஜீவ சமாதியடைந்த ஞானிகள் உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்(செத்தால்தான் நிம்மதி என்பது அவர்களின் நம்பிக்கை).

மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன? சொர்க்கமா, நரகமா? மறு பிறப்பு உண்டா? விவாதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இமையமலைக் குரு, பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர் 1936-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மும்பை ரீஜென்ட் ஓட்டல் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது விவரிக்க முடியாத ஒரு ஒளிக்கீற்று தியானத்திலிருந்து அவரை எழுப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே 10-ம் தேதி மார்ச் மாதம், பூரி ஆசிரமத்தில் புதைக்கப்பட்ட அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வரர் ரத்தமும், சதையுமாக எதிரில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார். நம்பமுடியாத அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

"இது நீங்களா?" என்று திகைத்துப்போன யோகானந்தர், பூரியின் கொடிய மணலில் புதையுண்ட அதே சரீரமா இது? என்று கேட்டபடியே சென்று யுக்தேஸ்வரரைக் கட்டியனைத்துக் கொள்கிறார்.

"ஆம். எந்த உடலை நீ புதைத்தாயோ! அதே ஸ்தூல உடல் தான். அதே போன்ற ஒரு சரீரத்தை இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களிலிருந்து படைத்தேன். இப்பொழுது நான் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பூவுலகில் அல்லாமல் ஒளி வடிவிலான சூட்சும உலகத்தில்" என்கிறார் ஸ்ரீ யுக்தேஸ்வரர்.

மெல்ல யோகானந்தரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சொல்கிறார்,

"இந்த மண்ணுலகில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு எப்படி மகான்கள் பிறப்பெடுக்கிறார்களோ! அப்படியே சூட்சும உலகில் உள்ளவர்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்து முக்தியடைந்து, அடுத்தபடியாக "ஹிரண்ய லோகம்' அடைய உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். ஹிரண்ய லோகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பூமியில் மரண காலத்தின் போது தங்கள் உடலை உணர்வுடனேயே விட்டுவிட்டவர்கள். சூட்சும உலகம் என்பது பூமியில் உள்ளவர்கள் இறந்த பின்பு வந்தடையும் ஒரு பிரதேசம்.

கடவுள் மனித ஆத்மாவை மூன்று சரீரங்களுக்குள் அடைத்து வைத்துள்ளார். இதில் எண்ணங்களால் ஆன 'காரண சரீரம்' முதன்மையானது. இரண்டாவது மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன 'சூட்சும சரீரம்'. மூன்றாவதாக புலன்களால் உணரக்கூடிய‌ சாதாரண 'ஸ்தூல சரீரம்' ஆகும். சமீபத்தில் உடலைவிட்டு பிரிந்த மனிதன், அதே போன்ற மனோபாவம் மற்றும் ஆன்மீகத் தன்மை உடைய ஒரு சூட்சும குடும்பத்தால் ஈர்க்கப்படுகிறான். சூட்சும உலகின் சராசரி ஆயுட்காலம் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள்.

மனிதனுடைய ஆத்மாவானது இறைவனின் முப்பத்தைந்து எண்ணங்களின் சேர்க்கை ஆகும். இதிலிருந்து பத்தொன்பது மூலப்பொருட்கள் அடங்கிய சூட்சும உடலையும், பதினாறு மூலப்பொருட்களை உள்ளடக்கிய ஸ்தூல உடலையும் உருவாக்கினான். ஸ்தூல உடலானது புலன்களின் மூலம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால் சூட்சும உடலோ ஒளிவடிவிலான அதிர்வலைகள் மூலம் தங்களின் ஆசைகளை, அனுபவங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இது ஒரு கனவு நிலைக்கு ஒப்பானது ஆகும். மேற்கூறிய இன்ப நிலைகளைக் கடந்த ஆத்மாவானது அடுத்ததாக காரண சரீரத்தில் வந்து நிற்கும். காரண உலகில் நினைத்த மாத்திரத்தில் எல்லா இன்பங்களையும் அடைய முடியும்.

ஒரு மனிதன் கற்பனையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் காரணவாசி நிஜத்திலும் செய்ய முடியும். ஸ்தூல உடல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிப்பது போல் மனதால் நினைத்தால் காரண உடலானது நிஜத்தில் பயணிக்கும். நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகள் என்பதே காரண உலகில் இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் தன் மனதை ஒருமுகப்படுத்தும் பேராற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் மண்ணுலகம், சூட்சும உலகம் ஆகிய இரண்டு உலகங்களின் முழுமையான பரப்பளவையும் 'ஒளிரும் பந்து வடிவிலான நிலையில்' வெளியிலிருந்து பார்க்கிறான்.அவற்றை தன் எண்ணங்களாகவும் மாற்றிக் காண்கிறான். ஒருவன் கண்ணை மூடிக்கொண்ட பின்னரும் இடங்களைப், பொருட்களை காட்சிகளை எப்படி எண்ணத்தினால் உணர்கிறானோ அப்படியே இது சாத்தியமாகும்.

சூட்சும் உலகில் நீடித்து வாழ்வதற்கு மனிதன் தன் மண்ணுலகக் கடமைகள், இச்சைகளை முழுவதுமாக தீர்த்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தங்கள் வினைக் கடன்களைத் தீர்க்க வேண்டியவர்கள் மீண்டும் ஸ்தூல உடலில் பிறப்பெடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மண்ணுலக கர்மாக்களை தீர்க்காதவன் சூட்சும உலகில் வந்து மரணமெய்தும் போதும் எண்ணங்களால் ஆன காரண உலகில் அனுமதிக்கப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் இவர்கள் ஸ்தூல மற்றும் சூட்சும உலகிலேயே அலைந்து கொண்டு இருப்பார்கள். பக்குவமடையாத மனித ஆத்மா இப்படியான மூன்று சரீர பந்தங்களிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணற்ற பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது.

இச்சைகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவானது மூன்று சரீரக் கூடுகளிலிருந்தும் வெளியேறுகிற போது தான் அதன் தனித் தன்மையை இழக்காமல் பரமாத்மாவுடன் இனைந்து விடுகிற நிலை ஏற்படும். மண்ணுலகில் இருக்கும் போதே இந்த மூன்று நிலைகளையும் மனிதன் உணர்ந்து இருக்கிறான். புலன்கள் வழியாக தொடும் பொழுதோ, ருசிக்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ ஸ்தூல உடலில் செயல்படுகிறான். கற்பனை செய்யும் பொழுதும், கனவுகளில் லயிக்கும் பொழுதும் சூட்சும சரீரத்தில் செயல்படுகிறான். எண்ணங்களால் வாழும் பொழுதும், தியானத்திலும் காரண சரீத்தில் செயல்படுகிறான்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் பதினாறு மணி நேரம் ஸ்தூல உடலில் சஞ்சரிப்பான். எஞ்சியுள்ள நேரத்தை தூக்கத்தில் செலவிடும் பொழுது கனவுகளின் மூலம் சூட்சும சரீரத்தை அடைகிறான்.அங்கே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறான். அவனுடைய நித்திரை கனவுகளற்று ஆழ்ந்து இருக்கையில் தன் உணர்வை அதாவது 'நான்' எனும் உணர்வைக் கடந்து காரண உலகத்தில் வாழ்கிறான். கனவு காண்பனுடைய நித்திரை களைப்பில் ஆழ்கிறது. மாறாக தன்னை மறந்து காரண சரீர நிலை எய்தும் உடலானது புத்துணர்ச்சி பெறுகிறது.

ஸ்ரீ யுக்தேஸ்வரர் கூற்றின்படி மனித ஆத்மாவானது அழிவில்லாத ஒன்று. ஆற்றலை எப்படி ஆக்கவோ, அழிக்கவோ முடியாதோ அதே நீதிப்படி இறைவனது எல்லா படைப்புகளும் உள்ளன. அது ஒன்றிலிருந்து வேறொன்றாக, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாக உள்ளது. எல்லாவற்றின் இறுதி நிலையும் அவனிடமே வந்து அடங்குகின்றன. அங்கு இன்பத்தை தவிர வேறெதுவுமில்லை. மனிதனைப் பொறுத்த அளவில் மனம் தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கும் சக்தி படைத்ததாக இருக்கிறது. அதை தியான‌த்தின் மூலம் ஒருமுகப்படுத்தி செயல்படுகிற போது பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணர முடியும்.

தியானம் என்பது என்ன?

தியானம் என்பது ஒரே வரியில் சொல்வதென்றால் பிரபஞ்சத்தோடு நம்மை இனைத்து வைப்பது அல்லது உணர வைப்பது என்று சொல்லலாம். மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

அடிப்படையில் மேல் மனம், அடிமனம், ஆழ்மனம் என்று மனமானது மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களின் வழியே புற விஷயங்களை நாம் உணர்ந்தவாறு இருக்கிறோம். இவை அனைத்தும் மேல் மனத்தினால் உணரப்பட்டு அடிமனத்தினோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது.

ஆனால் ஆழ்மனம் என்பது பெரும்பாலும் சராசரி மனிதர்களால் உணரப்படாமலே இருக்கிறது. எண்ணத்தின் அடிப்படியிலான அத்தனை தகவல்களும் இறுதி மூச்சு உள்ளவரை ஆழ்மனத்தினால் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மறந்து போன தகவல்களைக் கூட மெஸ்மரிசம் மூலம் மருத்துவர் கண்டறிந்து சொல்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஒரு நபர் ஈடுபடும் போது மேல்மனம் அதை மறைக்கப்பட்ட விஷயமாக நம்ப வைத்தாலும் ஆழ்மனம் அதை ஏற்பதில்லை. தவறென்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஆழ்மனத்தோடு தொடர்புடையவர்கள் தகாத செயல்களில் ஏடுபடுவதற்கான வாய்ப்பையே அளிக்காமல் ஆழ்மனமானது கடிவாளம் போட்டவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே செயல்கள் நல்வழிபடுத்தப்பட்டு வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக மாறுகிறது.

ஐம்புலன்களின் எந்த தூண்டலுக்கும் உள்ளாகாதவாறு மனதை ஒரே புள்ளியில் குவித்து தியானம் செய்வதால் டென்ஷன், படபடப்பு, கோபம், வெறுப்பு முதலிய வேண்டாத பிரச்சினைகள் தூக்கி எறியப்படுகின்றன. மனம் எப்பொழுதும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் அதே சமயம் கூர்மையான நினைவாற்றலுடன் இய‌ங்க‌ ஆர‌ம்பிக்கிற‌து.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தகீதம்

அப்பால்...ஒரு உலகம்

இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத்மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள்வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும்ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம்உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomeryக்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது.

THURSDAY, DECEMBER 29, 2011

two+colors_4b71e0850f748.jpg

Posted by
at
icon18_email.gif

MONDAY, DECEMBER 26, 2011

தான் புனிதத்தொண்டர் அந்தஸ்துக்குப் பொருத்தமானவரெனத் தன்னைப்பற்றிக் கருதிய ஒருவரைப்பற்றி மார்ச் முப்பதாம்திகதி எழுதுகையில் ஆர்தர் போர்ட் தனது கதைசொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டுநாள் நடந்த அந்த உரையாடல் மிகச்சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் இங்கே வந்ததும் கடவுளின் அரியாசனத்துக்கு செயின்ட் காப்ரியால் (Saint Gabriel) தன்னை அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:

"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லையென அனைவருக்கும் சொன்னார். களவெடுத்தலோ, கொள்ளையடித்தலோ, அடுத்தவரை ஏமாற்றுதலோ, அல்லது கற்பழித்தலோ போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லையாதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லையெனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும், சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை பார்த்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்குமுன் இந்தப்பிறவிதான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். அவருக்குக் கடைசியில் ஒரு குணப்படுத்தமுடியாத ஆனால் குறுகிய வருத்தம் வந்ததால், தனது உறவுகளுக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்துவிட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பணஉதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்தபின் சிலருக்கு ஆத்மஉலகில் திடீரென்று விழிக்கையில் ஏற்படும் மிகநீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்புநிறைந்த பூமியைக்கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலையலையான வெள்ளையாடையில் நிற்பதைக்கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப்பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லையென நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்றார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களையழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்கள்.

"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டார்கள். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லையென வியந்தார். எவ்வளவுக்கெவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ, அவ்வளுவுக்கவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதியவைப்பதுதான் தான் செய்யவேண்டிய ஒன்று என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பதுபோல் மகிழ்ச்சியாரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் செயின்ட் கேப்ரியால் (Saint Gabriel) எங்கேயெனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லையென்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்கள் எனக்கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போலிருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேனென்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு நேரமில்லை என்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுப் போவதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக்கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாழியின் குடிலைக்கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக்கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதியபருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

"ஆத்மஉலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக்கொள்வதால், புதிதாக வந்தவர் அச்செருப்புத்தைப்பவரைப் பார்த்து, அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லையென்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை, அவை தேய்ந்து பழுதாகாமலிருக்க என்ன செய்யவேண்டுமென்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். புதிதாக வந்தவர் செயின்ட் பீட்டர் அல்லது செயின்ட் கேப்ரியால் இடம் போவதற்குரிய வழி எப்படி என்று கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத்தான் அவர் கருதுகிறார் என இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத்தேடுவதற்குமுன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள் அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித்தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும்முற்றும் பார்த்தார். ஆனால் அந்த வயதானவரைத் தவிர வேறெவரும் தென்படவில்லை. சிறுவர்கள் போய்விட்டிருந்தார்கள்.

"அவர் வயதானவரை விழித்து 'வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத்தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்டநேரம் எடுத்ததனால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்குச் சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது, அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.

"அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உள்ளே பார்' என்றார். அவர் செருப்புத்தைப்பவரின் குடிலைச் சுற்றிப்பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். "எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப்படைத்தவனுடன் இணைவதற்குமுன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, 'நானொரு பிழையும் செய்யவில்லையே. எனது வாழ்வு ஒரு மாசுமறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்.' என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லமுன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், 'நண்பனே, உனது கர்வத்தைப்பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றார். புதியவர் குழம்பினார். 'ஆனால் நிச்சயமாக, நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்றவாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்' என்றார்.

"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்' என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், 'பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான், இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது அப்பிறவியில் நான் ஒரு மதபோதகராயிருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவிவந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழுநிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன்தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும், புனிதநாட்களிலும் நான் மாமிசம் அருந்தியதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து, மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்தபோது, தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனிதமும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்குநேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலகநேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின்தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன்.

"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருக்கும். நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயென்றாலும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழைத்தோம்?' என்றார் அவர். "

"அச்செருப்புத்தைக்கும் முதியவர், தனது கருவிகளைக் கீழேவைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். 'மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?' என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், 'நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப்பற்றி சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினாவிடைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்குபோட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக்கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப்பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உன் கைகளிலே எடுத்துக்கொண்டு 'வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்' என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடனிருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் நினைத்ததனால், நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்' என்றார்.

"செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய, இப்போ அவர் கலிபோர்ணியாவிலிருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதைக் கண்டார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப்படுத்திருக்க, அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித்தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டுவிட்டு 'நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்' எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, 'ஆம், ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்' என்றாள். அம்மனிதர், 'அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?' என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள், பெருமூச்சுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். மேலும் தொடர்ந்து, 'அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் முழுக்கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறதென்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். 'அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நினைக்கிறாயா?' என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே நேரத்தில் அவர் இவ்வளவும் கடவுளைத் திருத்தத் தொடங்கியிருக்க மாட்டாரென நினைக்கிறேன். ஒரு புனிதத்தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத்தானே சுயநியமனம் செய்துகொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.

அத்துடன் அவ்வெழுத்து முடிவடைந்தமையினால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடருவார்" என எழுதினார். உடனே போர்ட் (Ford) தொடங்கினார். "காலைவந்தனம் ரூத், தான் கண்ணைப்போல பாதுகாத்துவந்த தனது மனையாள் ஏன் தன்னைப்பற்றி இவ்வாறு கதைக்கிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டுணரட்டுமென அச்செருப்புத்தைக்கும் முதியவர் இவரிடமே விட்டுவிட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடிவாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி ஆட்சேபித்துக் கொண்டிருக்கையில், தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனையுணர்ந்தார். அவர்கள் தாங்களாகவே விளங்கிக்கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்லபெயர் வரவேண்டுமென்பதற்காகவும், வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும், பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.

"இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து, தான் கடவுளுக்கும், ஏனையோருக்கும் சேவை செய்ததையும் பார்க்கக் கூடிய அளவு தன்னையொரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டுமென்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதனையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும், புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டுவரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும், உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வதுதான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளையடவதற்குரிய வழியென அவர் உணரத்தொடங்கினார். திருத்தொண்டர்போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுலகில் செறிவூட்டியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப்பணிகளானவை வெறுமனே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.

"அச்செருப்புத்தைக்கும் முதியவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச் சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்மமுன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது மிகச்சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது மிகமகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்தபோதிலும் பார்க்க இப்போதான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என அவர்களுக்குத் தெரியும். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முழுமுயற்சியெடுப்பது என முடிவு செய்தார்கள். எனவே இருவரும், அம்மதபோதகர் தான் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தங்கியிருந்த அச்செருப்புத்தைக்கும் குடிலை விட்டு விட்டு ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அவர்களிருவரும் இப்போ இங்கே கற்கிறார்கள். எங்களது இரட்சிப்பின் இரகசியமானது பூவுலகில் நாமிருக்கையில் எங்களது முகங்களிலிருந்த மூக்குகளைப்போல மிகவும் வெளிப்படையானது என இப்போ கிரகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.

நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கான முதன்மைக்காரணம் இங்கிருக்கையில் நாம் அறிந்துகொண்ட பிரபஞ்சத்தின் அந்தப் பிரதான விதியைப் பூவுலகில் செயல்படுத்துகிறோமா என்பதனை அறிவதேயாகும். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும், எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப்போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கிடையிலும், நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாதநிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காதவகையிலும், எரிச்சலூட்டாத வகையிலும், அவர்களுக்கும் எமக்கும் ஒத்துவரக்கூடியதான ஒரு வாழ்க்கைமுறையைக் கைக்கொண்டோ வாழப்பழகவேண்டும். எமது சிருஷ்டிகர்த்தாவின் இராச்சியத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீகமுன்னேற்றம் அடைகிறோம்.

"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்றபிற்பாடு, தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்குகந்த ஒரு ஆத்மாவைக் கண்டுபிடித்ததையெண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்தவழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். சாசுவதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"

ஒரு சில நாட்களின் பின் போர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இருதயத்தையும், மனத்தையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். பிரதிநிதித்துவ அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்புவழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவரநினைத்தார். அவர் இந்தப்பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற்கதவைத் தேடித் தன்னைச்சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால்நீட்டிப்படுத்துக்கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென நினைத்துக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, 'சேர், இங்கே பாருங்கள் நான் மேரி ப்ளங் (Mary Blunk) என்னைக் கடவுளிடம் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்றாள்.

"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்றுநேரத்துக்கு ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால், தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால், அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச்சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற்கதவருகில் வந்தார். ஆனால் அப்படலை அவர் எதிர்பார்த்தது போல ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற்காவலனோ ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து தோட்டவழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளைகொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் இறைவனின் இருக்கையை எவ்வளவு விரைவில் அடையமுடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பினார். போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக்கொண்டோ இருந்தார்கள். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டே விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு மேலே கஷ்டப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்த சிலரைத் தாண்டிச்செல்லும் நோக்கத்துடன் அவர் விரைந்தார். இறங்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்களெனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறார்களெனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.

"அவருக்கு முன்னே போய்க்கொண்டிருந்தவர்களை விலத்திக்கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக நினைத்தாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரிசெய்து கொண்டாள். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதிசெய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக்கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார். அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக்கொண்டு, அவனிடம் இனிமையாக, "தயைகூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத்தாழ்த்தி வணங்கல்வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்: "ஆனால் அம்மணி, நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருக்கிறார்கள்' என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி, நெருங்கிக்கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்கவைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டுவரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக்கொண்டு பின்வருமாறு பதிலிறுத்தான்: 'ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் எப்படி நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்?' என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.

இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதன் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமான மாதிரி இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக்கோப்பையை ஏந்திக்கொண்டு தான் அவனைக் கடந்து போகையில் நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டுகொண்டாள். 'நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என அதிகாரத்தொனியில் கேட்டாள். அதற்கு அவன், தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும், தான் இப்போ தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலிறுத்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறுபடிகளிருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆத்மீகமுன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும்முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக்கொண்டு, அவரிடம் தன்னை நேரடியாக இறைவனின்பால் இட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். அதற்கு அம்மனிதர், 'அம்மணி!, நாமெல்லோரும் கடவுளே' எனப் பதிலிறுத்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக்காட்டுகையில் அப்பிச்சைக்காரக்கிழவனையும் சேர்த்துத்தான் காட்டுகிறான் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்தமாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. 'பகிடிவிடுவதை நிறுத்திவிட்டு என்னைப்படைத்தவனிடம் என்னையழைத்துச் செல்லுங்கள்' என்றாள் அவள்.

அவ்வழகிய வாலிபன், 'ஆனால் அம்மணி, அவர் உங்களை மட்டுமல்ல எம்மேல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப்பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையையடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும்வரையும், இடைப்பட்ட இக்காலகட்டத்தில், அங்கே நின்றுகொண்டிருக்கும், நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுனராக இருப்பார்' என்று பதிலிறுத்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள்! அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டுனராக ஏற்கவியலாதென்றும், வேறெவரையும்கூட அந்தவிதத்தில் ஏற்கவியலாதென்றும், தனக்குக் கடவுளுடன் மட்டும்தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்துவிட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் கடவுளெங்கே என்று கேட்டனர். அவர்களெல்லோரும் கடவுள் எங்கே இருக்கிறாரென அறியவிரும்பினர். வேறுபலரும் மேலே வந்து சேர்ந்துவிட்டிருந்ததால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.

"கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிகவினிமையான குரலில், 'கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்புவடிவிலானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்புசெலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும் கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலைசெய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றமடைந்துள்ளீர்களா என்று கவனித்துப்பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, 'எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?' என வற்புறுத்தினாள். 'நீங்கள் அதில் இருந்துகொண்டிருக்கிறீர்கள் அம்மணி' என அவ்விளைஞன் பதிலிறுத்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்தவிதமான ஆசனமுமில்லையென்பதனைக் கண்டுகொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்லவருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளோ இல்லையோ என்பதை வேறெவரும் சொல்லமாட்டார்கள். அவளே அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்றவாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றிய அதிக அக்கறையில், தனது தகுதிக்குக் கீழ்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்துகொள்ள மறந்துவிட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளையாடையில் கறைபடிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழேயிருந்தவர்களினால் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்குள்ளேயே இருந்தன. இறைவனால்கூடத் தீர்ப்பு வழங்குகையில், இப்படி நேரே நின்று பார்த்ததுபோல அவள் தன்னைத்தானே அலசி ஆராய்ந்தவாறு கதைத்திருக்க இயலாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனக்கருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசியாராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த, செய்யாத பிழைகளைக் கண்டுபிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும்தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.

மறுநாட்காலை, போர்ட், புதிதாக வருகை தந்திருந்த, பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை நினைத்து வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச்சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின்போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும், குழந்தைகளையும் பிரிந்ததை எண்ணி மனங்கலங்குவதால், ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார்செய்ய ,மறுக்கின்றாள். ஆர்ட் நேரே சொல்லட்டும்:

அவள் தனது கணவரையும், பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவைப்படுகிறதென அவள் நினைத்தாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொருவிதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேதவாக்காக இருந்தது. இந்தப்பக்கத்தில் இருக்கும், இப்படிப்பட்டவர்களுடன் பணிபுரிந்து பழக்கப்பட்டவர்கள், அதற்குரிய சாதனங்களுள்ள ஆத்மாக்கள் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு, பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை யாற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும், இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத்தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமுமிருக்கலாகாது என்று கற்பித்தனர். அவளது சொந்த முன்னேற்றம் மெதுவாகத்தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாய்ப்போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி, அவள் நம்பிக்கையும், பொலிவுமிழந்து பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.

"கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழமான நித்திரையில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ அன்றி வருடக்கணக்கிலோ நீளலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப்பழகிக்கொண்டார்கள். தான் நினைத்ததுபோல ஒன்றும் தான் அத்தியாவசியமாக அவர்களுக்கு இல்லையென்பதையும் கண்டுகொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதேபோன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில்வர வழிகாட்டக்கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீகவிழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்கபூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவுபூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்தபின் அவற்றுக்கு ஈடு செய்யவிரும்பினாள். மீண்டுமொருமுறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால், தான் தாயன்பு என்ற பெயரில் பிள்ளைகளில் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்கமுழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல், அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென அவள் உறுதிமொழிபூண்டாள். சுயநலத்துடன்கூடிய அன்புக்கும், சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.

"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பௌதீக உலகில் காணுகையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப்பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப்போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட வேண்டிவருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால், (அவர்கள் இதைப்பற்றி நினைப்பதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை நினைத்து வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி, ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொருநாள் பூவுலகிற் பிறப்பாள்.

ஆர்தர் போர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ, அவர் மதபோதகர்களைப் (அவர் அவர்களைப்பற்றிச் சொல்கையில் எப்போதும் preachers என்று தான் சொல்வார்) பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். Elsie Sechrist அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப்பார்க்கச் சொல்லிக் கூறிச் சிலநாட்களின்பின் அவர் ஒரு கிறிஸ்தவமார்க்க போதகரைப்பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின்போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும், இறப்பின்பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.

"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்களெல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழும்புவார்கள் என்பவைபோன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஒத்துப்போய்க்கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவர். தந்தையையடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியானமுறையில் வாழ்ந்தால் கடவுளின் அரியாசனத்துக்கருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப்படுவேனென நினைத்தார்.

"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து, அவர் இறுதியில் பூவுடலை நீத்தபின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்டபின், ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும்கொண்ட அழகிய ஒரு இடத்திற்குமுன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பதுபோல உணர்ந்தார். ஏனென்றால் அவர் போதனை செய்த இடமும் இதைப்போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்கமேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கியபின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக்கவனிக்கையில் சிலமுகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப்பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப்போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் 'நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும், அது இந்த முன்பின்தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளத்து எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், 'தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மேல்லோருக்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்' என்றார்.

"சபையோர்களனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர்விளைவு அவரை ஆச்சரியப்படவைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்களனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டுகளித்ததாகவும், அவரின் நிலையைச் சரிசெய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும், கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச்சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும், பிறந்த திகதியும், இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. 'இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத்தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும், உங்களுக்குப் போதனை செய்யவேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கயுள்ளோம். அதேநேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்' என்றனர் அவர்கள்.

ஆர்தர் போர்ட்டிடம் Elsie Sechrist இன் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால், திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், 'ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப்பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்துவிட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதாரவிரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்வைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடியகாலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் ஒருசிலமாத இடைவேளையில் உடலைநீக்கி இங்கே வந்தபோது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்துகொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய சந்தோஷத்துக்காகவும், ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால், அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில்கூடக் கருதவியலாத அளவு மிகச்சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் ஸ்தாபனமில்லாவிடினும், ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதொரு உன்னதநிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச்சமீபத்திய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென்று இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நடந்துவிட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப்பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்துவிட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்தபின்தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால்தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதில்லை. அவர்களிருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லையாயினும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் அப்படியானது.

"அவர்களிருவரும் இப்போ ஒன்றாகவிருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலேயன்றி எந்தவொரு சக்தியும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரியவிரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும். ஆனால் அதேநேரத்தில் கைவிரல்களோ, கால்விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ, சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே, சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை, சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம்முடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சிலபாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன".

ஆவிநிலையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை, ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம் - மேலும் விளக்கமாகச் சொன்னால், நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத்தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னதுபோல பால்பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணையமுடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.

நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "பாலியல் குழப்பத்துடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்கள் இங்கே தான் ஆணாகப் பிறப்பதா, பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்களாகும். அதனால் இந்தவிதமாகவோ அந்தவிதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது மாறுபட்ட எண்ணவடிவங்களாகும். இப்படிப்பட்ட ஏறக்குறைய பிரத்தியேகமான சூழ்நிலைகளில் சிலநேரங்களில் இப்படிப்பட்ட உடல்களை, தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் எடுக்கின்றன" என்றார்.

எட்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது.

Posted by
at
icon18_email.gif

SUNDAY, JUNE 26, 2011

ஏழாம் அத்தியாயம் - சில குறிப்பிட்ட நபர்கள் (Spicific Cases)

child+going+to+light.jpg

Posted by
at
icon18_email.gif

ஆர்தர் போர்ட் காலைவேளைகளில் சிறிது நேரம் எனது டைப்ரைட்டரை ஆக்கிரமிக்கத் தொடங்கியதிலிருந்து பத்துக் கிழமைகளின் பின் ஒருநாள் டெக்ஸாஸ், ஹூஸ்டனிலிருக்கும் (Houston, Texas) திரு, திருமதி வில்பிரட். ஏ. செக்றிஸ்ட் (Wilfred A. Sechrist) எமது மெக்சிகோ, குவேர்ணவகாவிலிருக்கும் வீட்டிற்கு வந்தார்கள். எல்ஸி, கனவுகளின் அர்த்தங்கள் பற்றியும் மற்றும் எம் அறிவுக்கப்பாற்பட்ட சூக்குமமான விடயங்கள் பற்றியும் வலு ஸ்திரமான சார்பான முடிவுகளைக் கொண்டவர். அவர் ஆர்தர் எழுதியுள்ளவற்றை ஆவலுடன் வாசித்துவிட்டு, சில குறிப்பிட்ட நபர்களைப் பற்றி அவர்கள் இறப்பு என்ற வாயிலினூடாக மறு உலகத்துள் புகுந்த பிற்பாடு அவர்களின் நிலைகளைப்பற்றி ஆர்தரிடம் கேட்டுப்பார்க்கலாமா எனக்கேட்டார். ஆர்தர் சந்தோஷத்துடன் சம்மதித்தார். மறுநாள் காலை அவர் பின் வருமாறு ஆரம்பித்தார்.

இன்று நானுனக்குக் கென்னடி சகோதரர்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். ஜாக் நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் பற்றி வேலை செய்துகொண்டிருக்கிறார். மிக முக்கியமாக அவர் இஸ்ரேலியர்களுக்கும், அராபியர்களுக்குமிடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டுவருவதற்கு முயல்கிறார். பாபி தங்களது சிவில் உரிமைகளுக்காகப் பொறுமையையிழந்து போராடுபவர்களை நிலைமையைச் சுமூகமாக்குவதன் மூலம் சாந்தப்படுத்த முயல்கிறார். 'ப்ளக் பாந்தேஸ்' (Black Panthers) போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தீவிரமான சில தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக இருக்கிறது என்று அவர் சொல்கிறார். அவர்களின் மனநிலையில் தன்னால் சிறிது மாற்றங்களை உண்டு பண்ண முடியுமென்கிறார். அப்படிப்பட்ட இயக்கங்கள் தலைவர்களைக் கடத்துவது, பழிக்குப்பழி வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவனவாகும். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களது இளமை நிறைந்த அழகான பூதவுடலை இளமையில் விட்டுவிட்டு ஆத்மவடிவில் இந்த மேலுலகுக்கு வரும் போது அங்கே அவர்களின் அந்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே பேசலாம்.

"ஜாக் இறந்தவுடன் உடனடியாக மேலுலகில் விழித்துக்கொண்டார். சிலர் போல அவர் மயக்கநிலையில் இருக்கவில்லை. தான் தலைமை தாங்கிய நாட்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் லிண்டனுக்கு (Lyndon) நிலைமைகளைச் சுமூகமாக்குவதற்கும், சட்டங்கள் சிலவற்றைப் பிரச்சினையில்லாமற் கொண்டுவருவதற்கும் உதவுகிறார். அவர் பூதவுடலுடன் இருக்கையில் பல விடயங்களைச் சரிவர நிறைவேற்றாமல் இருந்தாலும், அவற்றை இப்போதாகிலும் வெற்றிகரமாக நிறைவேற்ற விரும்பினார். வியட்நாம் போரில் எல் பி ஜே (LBJ) யின் கூடுதலான தலையீடானது ஒரு மாபெரும் பிழையென அவர் உணர்ந்தாலும் தான் லிண்டனுக்கு உதவாவிட்டால் அரசியலில் பெரும் குழப்பங்கள் வரப்பார்க்குமென அஞ்சினார். அவர் தலைவராயிருக்கையில் இவ்வாறான தலையீட்டைச் செய்திருந்தாலும், இப்படிப் பெரிய அளவிலான பங்களிப்பைச் செய்வதற்கு அவர் ஒருநாளும் நினைத்ததில்லை. அந்தப் போர்பூமியில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு அவர் விரும்பினார். அத்துடன் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே சமாதானத்தையுண்டாக்குவதில் தனது முயற்சிகளை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். ஏனென்றால் அந்த ஆதிகாலத்து எதிரிகளின் இருதயங்களில் சகோதர பாசங்களை உண்டுபண்ண முடியாவிடின் அப்புண்ணிய பூமியில் விபரீதமாக ஏதாவது நடக்கக்கூடிய சாத்தியக்கூறு எதிர்காலத்திலிருப்பதாக உணர்கிறார். வியட்நாம் போரில் சண்டையிட்டு மடிபவர்களைக் காண அவர் இதயம் புண்ணாகினாலும் அப்போர் கூடிய காலத்துக்கு நீடிக்காது என்பதை உணர்கிறார். பாலஸ்தீனத்தில் இருக்கும் வெறுப்புணர்வானது ஆதிகாலத்திலிருந்து இருந்து வருவதால் இஸ்ரேலியர்களுக்கும் அயல்நாடுகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வுக்கு இப்போ வராவிட்டால் அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவு நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அஞ்சுகிறார்.

"பாபி, சிவிலுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தில் தனது இதயத்தை விட்டுச் சென்றார். மிக வலிமை வாய்ந்த ஸ்தானத்திலிருக்கும் ஒருவர் ஆத்திரமுற்றிருப்பவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவர்களின் ஆத்திரத்தைத் தணியவைத்து, ஒரு நடுநிலைமை மாநாட்டு மேசையில் உட்காரவைத்து ஒற்றுமையையும் அதேநேரம் அவர்களின் உரிமையையும் பற்றிப் பேசவைத்தாலன்றி இந்தப் பிரச்சினை தீராதென்று அவர் உணர்கிறார். அவருக்குத் திடீரென்று ஆத்மஉலகில் கண்விழித்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் சகோதரர் ஜாக் அவருக்கு ஆரம்பத்தில் உதவுவதற்கு இருந்தபோதிலும் அவர் வலிமையிழந்து காணப்பட்டார். அந்தச் சகோதரர்களிடையே கூடுதலான முன்வினைத் தொடர்புகள் காணப்படுகின்றன. பற்பல முற்பிறவிகளில் அவர்களிடையே நெருக்கமான பந்தமிருந்து கொண்டு வந்ததால் ஒருவரின்றி மற்றவர் முழுமையாக உணரமாட்டார். பிறப்பதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படிதான் அவர்கள் அவ்வளவு நெருங்கிய உறவுமுறையுள்ள குடும்பத்தில் பிறந்தனர். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மீண்டும் மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். அவர்களனைவரும் ஆரம்பகாலத்து இங்கிலாந்தில் ஒரு மிகமகிழ்ச்சியான சூழலில் ஒரு குடும்பமாகவிருந்தனர். அதனால் இனிமேல் பிரிவதில்லையென ஒரு உறுதியான முடிவெடுத்தார்கள். இப்படியாக எடுக்கப்படும் முடிவுகளெல்லாம் ஒரே நிறைவேறுவதில்லை. ஆனால் இம்முறை பூமி நேரப்படி இருபதாம் நூற்றாண்டில் மீண்டுமொரு முறை சரியான ஊடகம் மூலமாக எல்லோரும் மறுமுறை ஒரே இரத்தசம்பத்தமுள்ள குடும்பமாக வரக்கூடியதாக இருந்தது. ஏதெல்(Ethel) கென்னடியும் அந்த ஆரம்பத்தைய குடும்பத்தில் ஒருத்தியாக இருந்திருக்கிறார். ஆனால் இம்முறை ஒரே தாயின் வயிற்றில் பிறக்கமுடியாமற் போனாலும் பூவுலகில் பாபியும்(Bobby) அவளும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்பதென்பது கேள்விக்கிடமேயில்லாத ஒரு விடயம். காலகாலத்துக்கும் அவர்களிருவரும் நெருக்கமாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஈருடலும் ஓருயிரும் போல. ஜாக்கி கென்னடி ஒனாசிஸ்(Jackie Kennedy Onassis) முற்பிறவிகளில் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல-அவர் இங்கிலாந்தில் இவர்களறிந்த ஒரு அரசியாவிருந்தார். எனவே ராஜமரியாதை செலுத்துமுகமாகவும், அதே நேரத்தில் அவரைத் தங்களிலொருவராக ஏற்றுக்கொள்ள இயலாமலுமிருந்தது."

சிலநாட்களின்பின் போர்ட் மீண்டும் கென்னடி குடும்பத்தைப் பற்றி ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் பின்வருமாறு எழுதினார்: நாம் குறிப்பிட்டது போல் பிரார்த்தனையின் சக்தியானது எங்கள் பக்கத்திலும் அதேபோல மனிதனால் இறப்பு என அழைக்கப்படும் திரையின் மறுபக்கமாகிய உங்கள் பக்கத்திலும் முக்கியமானது. எமது அன்புக்குப் பாத்திரமான ஒருவர் அந்தத் திரையை விலத்திக் கொண்டு பூதவுடலை நீத்துவிட்டு வரும்போது, கூடுதலாக ஒன்றுமே புரியாதநிலையில், ஏதோ தொலைந்து போனமாதிரியும், கைவிடப்பட்ட நிலையிலும் தான் காணப்படுவர். அவரது கடந்து போன வாழ்க்கையில் அவர் சந்தித்த இடையூறுகளிலும் பார்க்க மேலுலக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதென்பது சில சமயங்களில் கூடுதலான கஷ்டமாக அவருக்கு இருக்கக்கூடும். சொர்க்கமென்ற இடத்தைப்பற்றி நாமிங்கே சந்திக்குமிடத்தைவிட முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்பைப் பலர் கொண்டிருப்பதால், அவர்களின் அந்தரித்த நிலையைக் கடவுள் நிச்சயமாக அறிந்திருப்பாரோவென அவதிப்பட்டு அறியத்தலைப்படுவார்கள். பூவுலகில் அவரின் உறவினர்களால் அவரின் ஆத்மசாந்திக்காகச் செய்யப்படும் அன்பான பிரார்த்தனைகள் அவரைச் சாந்தப்படுத்தி, அவரின் ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சந்தேகமின்றிக் கடவுளுக்கு எல்லாப் பிரார்த்தனையும் கேட்கும். இப்போ நானிருக்கும் நிலையிலும் கற்றறிதல் வளர்ச்சியுறல், போன்ற முன்னேற்றங்கள் உண்டு. நாமும் உங்களைப்போலவே முன்னேற்றப்பாதையில் மேல் நோக்கி எம்மைப் படைத்தவனுடன் இரண்டறக்கலக்கும் நாளை எதிர்பார்த்து முன்னேறிக்கொண்டிருப்போம். எனவே பிரார்த்தனைகளானது மிகவும் முக்கியமானது. கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதென்பது மிகவும் சரியான வழி. ஏனைய சமயத்தவர்களும் வேறு நம்பிக்கையுள்ளவர்களும் முடிவற்ற வாழ்வின் அடுத்த கட்டத்தையடைந்த ஆத்மாக்களின் மேல் இன்னும் அன்பு செலுத்தும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாகும். பௌதீக நிலையில் இருந்ததிலும் பார்க்கக் கூடுதல் அக்கறையெடுத்து இங்கு நாம் பிரார்த்தனைகள் செய்வோம். அதனால் கிட்டத்தட்ட எம்மைப் படைத்தவனின் நிலைக்கேற்ப மாறக்கூடியதாக இருப்பதனால் பூவுலகில் இருந்தபோதிலும் பார்க்கக் கூடுதல் விரைவில் அதனது விளைவுகளை இங்கே நாம் உணரக்கூடியதாக உள்ளது. சில வேளைகளில் இங்கு வரும் ஆத்மாவானது பௌதீக உலகிலிருப்பவர்களின் பிரார்த்தனைகளின் நிமித்தமே விழிக்கக்கூடியதாகவுள்ளது.

கென்னடி சகோதரர்கள் பிரார்த்தனையின் சக்திக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். ஜனாதிபதி கொல்லப்பட்ட போது உடனடியாக எழுந்த பிரம்மாண்டமான பிரார்த்தனைகளின் காரணமாக அவர் இங்கே வந்தவுடன் தன்னிலையை மறக்கவேயில்லை. கிட்டத்தட்ட உடனடியாகவே அவர் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகள் அவரை முன்னோக்கியும், மேல்நோக்கியும் தள்ளியதால் பேர்க்கேட்டரி (purgatory) என்று அவரது சர்ச்சைச் சேர்ந்த பாதிரிமார் குறிப்பிடும் நிலையை அவர் கடுகளவு நேரம் கூட அனுபவிக்கவில்லை. 'பேர்கேட்டரி' என்னும் நிலையானது ஆத்மாக்கள் தொலைந்துபோனவர்கள் போல ஒரு இலக்குமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரியும் நிலையாகும். இந்த நிலையானது அவர்களுக்கு அவர்களின் உண்மையான நிலையையும் அதனது புதிய தன்மைகளையும் ஏதாவது ஒரு விஷயமானது உணர்த்தும் வரையும் தொடரும். பாபியின் விஷயத்திலும் கூடப் பிரார்த்தனைகள் பலித்தன. அத்துடன் மூத்தசகோதரருடனும், மற்றும் மனிதஉரிமைகளுக்காக இவர்கள் முழுவதுமாக போராடியதனைப் போற்றியவர்களுடனும் இங்கே அவருக்காகக் காத்திருந்த அவரது சகோதரரின் அன்பும் அவருக்கு வலுவாக உதவியது எனலாம். நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் ஏனையவர்கள் எனக்கு இந்த விடயங்களைச் சொன்னார்கள். அந்த இரு ஆத்மாக்களும் மனித குலத்தின் மாட்சிமையைக் காப்பாற்றப் பாடுபட்டதனாலும் அவர்கள் நீண்ட நெடுநாட்கள் சம்சாரசாகரத்தில் கிடந்தது உழலவேண்டிய தேவையில்லாததாலும் இங்கே அவர்கள் வரும்போது கோலாகலமாக வரவேற்கப்பட்டார்கள். உனக்கு நல்லவர்களெல்லாம் இளமையிலேயே இறந்துவிடுவார்களென்ற பழைய பழமொழியொன்று நினைவிருக்கிறதா? அநேகமாக எல்லா ஆத்மாக்களும் நல்லனவே. ஆனால் எல்லோரும் இளமையில் இறப்பதில்லை. ஆனால் ஒரு ஆத்மா குறிப்பிட்ட பிறவியில் நிறைவேற்ற எண்ணி வந்தவைகளைக் குறைவான காலகட்டத்தில் நிறைவேற்ற முடிந்து, அதனுடன் வயதான காலத்தில் வரும் தளர்வுகளைத் தவிர்த்தால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார். சில பெருமைவாய்ந்த ஆத்மாக்கள் தங்களது பழம்பெரும் வயதுவரையும் வாழ்ந்து இவ்வுலகுக்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் சில ஆத்மாக்களோ அதிர்ஷ்டவசமாகத் தங்களது வாழ்வின் உச்சக்கட்டத்தில் தாங்கள் எண்ணிவந்த கடமைகளை நிறைவேற்றியவுடன் பூதவுடலை விட்டுவிட்டு இந்த உலகுக்கு வந்து தங்களது முன்னேற்றத்தைத் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். இங்குள்ள ஞானாலயமானது மிக வலுவாக ஆத்மீக உணர்வுகளைத் ஊக்குவிக்கக்கூடியதும், ஆத்மீக முன்னேற்றத்தில் எங்களை வித்தியாசமான முறையில் யோசிக்க வைப்பதுமானதாகும். அதனால்தான் பௌதீக உலகில் நாம் கற்றவையொன்றும் இங்குள்ள கல்வியினாலேற்படும் உணர்வெழுச்சிகளுக்கு ஈடாகாது."

ஜனாதிபதி ஐசன்ஹவர் (Eisenhower) ஐப்பற்றி அறிவதற்குக் கென்னடி சகோதரர்களாகிய ஜாக், பாபி ஆகியோரைப் பற்றியறிந்தமை வழிவகுத்தது. ஜனாதிபதி ஐசன்ஹவர் எப்படி அந்தப்பக்கத்தில் இருக்கிறாரென்று கேட்டதற்கு போர்ட் உடனடியாகப் பின்வருமாறு எழுதினர்: "அவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மிகத்துன்பகரமாகப் பாதிக்கப்பட்ட உலகில் அவர் சமாதானத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் கொஞ்சக்காலத்துக்கு முன்னர், அதாவது குழப்பம் குறைவாக இருந்த நேரத்தில் அவர் ஜனாதிபதியாக வந்திருந்தால், மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவியிருப்பார். போரின்போது அவர் வழிநடத்தியவர்கள் அவர் இந்தப்பக்கத்துக்குக் கடந்து வந்ததும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு தந்தையைப்போலவிருந்தார். அவரின் நல்ல இதயத்தை அவர்கள் மதித்தார்கள். அவர்களில் பலபேரை அவர் இன்னும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் தாங்கள் காலம் முடியுமுன்னே தங்கள் இளவயதில் உடலை நீத்து இங்கே வரவேண்டியிருந்ததை நினைத்து ஆத்திரம் கொண்டு பெரியவர்களை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஐக் (Ike) அவர்களின் கருத்தை மாற்றி, மனிதஇதயத்துள்ளே இறையவனின் ஒரு பகுதியும் அடித்துக்கொண்டுள்ளதென்றும், எம்மால் விளங்கிக்கொள்ள முடியாத விடயங்கெல்லாம் கூட எம்மைப் படைத்த இறைவனுக்கு விளங்குமென்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அத்துடன் ஒரு சிறந்த மரணத்தை விட மோசமான பல அழிவுகள் இங்கேயுள்ளன என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தினார்."

நாஸிசத்தை வெற்றியுடன் எதிர்த்த ஜெனரல் ஐஸனாவரின் மிகப்பெரிய வெற்றியானது இயற்கையாக அடல்ப் ஹிட்லரைப் பற்றிய கேள்விக்கு வித்திட்டது. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஹிட்லரின் விஷயத்தை எடுத்துக்கொண்டால், ஒரு பிறவியிலேயே இவ்வளவு தீவினைகளைச் செய்தமையினால் தன்னைத் தூய்மைப்படுத்த இயலாமலிருக்ககூடும். பூவுலகில் பலரின் வாழ்க்கைகளை, நம்பிக்கைகளை, இலட்சியங்களை நாசம் செய்துவிட்டு இங்கே வந்தார். அத்துடன் தன்னளவிலும் ஒரு அருவருத்து ஒதுக்கப்படக்கூடிய பேர்வழியாக இருந்தமையால் அவரின் இறப்பிற்காக ஒருவரும் வருந்தவில்லை. இங்கேயும் அவர் தனது மடத்தனமான செய்கைகளையும் ஆமிக்கொமாண்டோ போன்ற நடைகளையும் அதிகாரத்திலிருப்பது போன்ற அர்த்தமில்லாத பேச்சுகளையும் தொடரமுற்பட்டார். ஆனால் அவரைக் கவனிக்கவோ அன்றி அவருக்கு மரியாதை செலுத்தவோ ஒருவருமில்லை இங்கே. அந்த ஆத்மா இங்கே முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் ஒரு ஆளரவமில்லாத இருண்ட தீவில் தனியே விடப்பட்டிருப்பது போல இருந்தார். அவர் கத்திக்குழறியும் ஒரு பிரயோசனமுமில்லை. இங்கே அப்படிப்பட்ட இழிநிலையான ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளக்கொடிய அளவுக்குக் கீழ்நிலையில் ஒருவருமில்லை. அதிகாரதோரணையில் நடப்பதாலும் கத்திக்குழறுவதாலும் எதுவும் சாதிக்க முடியாது. கடைசியில் அவர் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதான ஆழமான பள்ளத்தில் விழத்தொடங்கிவிட்டார். கடைசியில் எட்கர் கேசியால் (Edgar Cayce) சொல்லப்பட்ட சனிக்கிரக வாழ்க்கைபோல முழு இருட்டினுள் விழுந்து கொண்டே போவார், அங்கே அவர் தன்வழியே அவர் மனிதகுலத்துக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளின் தீவிரத்துக்கேற்ப பல நூறு வருடங்களோ அல்லது ஆயிரம் வருடங்களோ விடப்படுவார். அவர் மீண்டும் எப்போதாவது விழித்தெழுந்தாலும் அவரது விதி மகிழ்ச்சியாக இருக்கவிடாது. அவர் மற்றையவர்களுக்குத் தானிழைத்த கொடுமைகளில் சிலவற்றுக்கேனும் மாற்றுச் செய்யுமுகமாக இங்கே மிகநீண்ட கடினமான பயிற்சிகளை இந்த நிலையிலே பயின்றாலொழிய அவருக்குக் - குறுகிய காலத்திலேயே முன்னேற்றத்தைத் தரக்கூடியதான - பூவுலகில் பிறப்பதற்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது. காலகாலத்துக்கும் தன்னைத்தானே தனிமைப்படுத்தும் தலையெழுத்தைத் தானே எழுதிக்கொண்டார். இப்போ பூவுலகில் வாழும் ஒருவருக்கும் ஹிட்லரின் விதி தெரியவராது. ஏனெனில் அவரின் தனிமை வாழ்வானது (அவர் தனக்குத்தானே விதித்துக்கொண்ட என்றும் சொல்லலாம்) சந்தேகமின்றி இப்போ பூவுலகிலிருப்பவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய காலத்திலும் பார்க்கக் கூடிய காலம் எடுக்கும்."

அடுத்ததாக போர்ட் அல்பேர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றிப் பின்வருமாறு எழுதினர்: ஒரு மிகப்பெரிய விஞ்ஞானியான அவர் பூவுலகை விட்டு இங்கு வருகையில் மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் வரவேற்கப்பட்டார். அவர் தனது திறமைகளைத் தூய விஞ்ஞான வளர்ச்சிக்கும், மனித இனத்தின் நன்மைக்குமாகத் திறம்பட உபயோகித்தார். தனது திறமைகளை அழிவுக்குப் பயன்படுத்தாமல் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திய ஒருவரைப் பற்றி நாமிங்கே கதைக்கிறோம். பௌதீக உலகில் மஹா மேதையாகப் போற்றப்பட்ட இவர் உண்மையில் விசேஷ அறிவுகளைப் பயின்று அவற்றைப் பிரயோசனப் படுத்துபவர். அவர் இப்பக்கத்திலே இருக்கும் விஞ்ஞான அறிவுள்ள ஏனைய ஆத்மாக்களின் உதவியுடன் விஞ்ஞான முன்னேற்றத்தில் மெய்நிகர் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியதாக உள்ளார். தொலைபேசி, மின்சாரம், நீராவி இயந்திரம் இவைபோன்ற பருத்தி இயந்திரம் உட்பட அனைத்துமே, (பூவுலகில் சில நல்ல வகையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான) பௌதீக உலகிலும் மேலுலகிலும் இருக்கும் திறமைவாய்ந்தவர்களின் கூட்டு முயற்சியேயாகும். ஐன்ஸ்டைன் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் சிற்சில நிமிடங்களுக்குச் சிறுதூக்கம் கொள்வதனால், இங்கேயுள்ள சில சக்திகளுடன் இசைவாக்கம் கொள்ள இயலுமாக இருந்ததனால், அவரது நோக்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவரது பரிசோதனைகளின் அடுத்த கட்டங்களை அறியக்கூடியதாக இருந்தது. சிறிய தூக்கங்களின் போது பௌதீக உலகிலிருக்கும் நீங்கள் இங்கேயுள்ள ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்கையில் உங்கள் சக்திகள், நோக்கங்கள், இலட்சியங்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன."

எல்ஸி செக்ரிஸ்ட் (Elsie Sechrist) பாதிரிமார்கள், விஞ்ஞானிகள், பழமைக்கோட்பாடுகளைச் சார்ந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள், காட்டுமிராண்டித்தனமானவர்கள் போன்ற பல்வேறு வகையானவர்களைப் பற்றிக் கேட்டார். மார்ச் மாதம் இருபத்தியாறாம் திகதி ஆர்தர் பின்வருமாறு எழுதினார். "இன்று நாம் ஒரு பாதிரியாரைப் பற்றிப் பார்ப்போம். இவர் பிலி சண்டே (Billy Sunday) போன்றவர். அதாவது பைபிளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நம்பியவர். நரகத்திலிருக்கும் நெருப்பு, கந்தகக்குளம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் உபதேசிப்பவர். அவர் இங்கே வருகையில், கடவுள் பெரிய அரியாசனத்தில் தேவதேவதைகள் சூழ அமர்ந்திருக்கவில்லை என்பதைக் கண்டதும் அது அவருக்கு முதலாவது அதிர்ச்சி. அதன்பின்னர் அவர் எங்களை மேலும் தாமதிக்காமல் எங்கள் பிழைகளுக்காக வருந்தச்சொல்லி வலியுறுத்தினார். தான் இந்தப் புதிய சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும்வரையும் தற்காலிகமாகத் தான் அங்கே மிகக்குறுகிய இடைவேளைக்குத் தங்கியிருப்பதாகவும், நாமெல்லோரும் கடவுளின் அன்புக்கரங்களை அடைய இயலாத பாவிகளாயிருக்க வேண்டுமெனவும் தீர்மானித்தார். அவரது பிரசங்கங்கள் உண்மையிலேயே சில ஆத்மாக்களை, அதாவது தாம் தமது சிற்றறிவில் உருவாக்கிக்கொண்ட சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருந்த ஆத்மாக்களை ஈர்த்தது உண்மை. அவர்கள் இந்தப்பெரியவர் தங்களை சொர்க்கபூமிக்கு வழிநடத்திச் செல்லப்போகிறாரென நினைத்தார்கள். அவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரது பிரசங்கங்களைச் செவிமடுத்தார்கள். அத்துடன் அவர் மிகக்குறுகிய நேரத்தில் எல்லோரும் யாழ்மீட்டிக்கொண்டிருக்கும் தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் சொர்க்கபுரிக்கு முன்னேறிச்செல்வோமென சொன்னபோது 'ஆமென்' எனக் கூச்சலிட்டார்கள். கடைசியில் தங்களுக்குரிய ஒருவர் ஆலயக்கதவுகளைத் திறந்துவிட வந்துவிட்டதை நன்றியுடன் நினைத்து மீண்டும் 'ஆமென்' எனக்கூச்சலிட்டனர். இந்தப்போதகர் (இப்போதைக்கு அவரை 'பில்லி' என்றே அழைப்போம்) ஆரம்பத்தில் உரத்தகுரலில் இங்கேயுள்ள பழைய ஆத்மாக்களிடம் கடவுளின் அரியாசனத்துக்குப் போகும் வழியைக் காட்டும்படி வலியுறுத்திக் கேட்டார். நாம் அவ்வழியை மாயமாக மறைத்து வைத்திருப்பதாக அவர் உண்மையில் நம்பினார். கடைசியில் பழைய ஆத்மாக்கள் ஒன்றுகூடி பில்லிக்கு, அவர் உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்வதாகவும், சொர்க்கமென்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பதெனவும், அதேபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர் பிரத்தியேக நரகமிருப்பதாகவும், அவருக்கு ஒன்றையும் மறைக்கவில்லையெனவும் விளங்கப்படுத்தினார். அவருக்குரிய ஆத்மீகமுன்னேற்றத்தில் செல்லத்தொடங்குவது அவரில் தான் தங்கியுள்ளதெனவும், சத்தியபூமியென்ற பொய்யான நம்பிக்கையை மற்றையவர்களுக்குக் கொடுத்து அவர்களைப் பிழையாக வழிகாட்டுவதன்மூலம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறார் எனவும் சொன்னார்கள். உண்மையில் இது தான் சத்தியபூமி. நாம் எமது சிந்தனைகளினாலும், முயற்சிகளினாலும் தான் அதனை உருவாக்குகின்றோம். ஞானவான்கள் பில்லியைப் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். உண்மையில் பில்லி ஒரு நல்ல ஆத்மா. ஆனால் பிழையாக வழிகாட்டப்பட்டவர். அவர்கள் அவரை ஞானாலயத்துக்குச் சென்று பயின்று முழுமுதல் உண்மையை அறியும்படி ஆலோசனை கூறினார்கள். அதாவது நாமனைவருமே கடவுள். இவ்வுண்மையை நாமனைவரும் உணரும்வரை மனிதனுடைய அடிப்படை நிலையிலிருந்து மேலே முன்னேறமுடியாது என்பதுதான் அவ்வுண்மை.

"எம்மைப்போலவே ஏனையோரும் கடவுளின் ஒரு பகுதியே என்பதனை நாம் கிரகித்துக்கொள்கையில் கடவுளின் அந்த ஏனைய பகுதிகளுக்கு உதவுவதன்மூலம் நாம் அனைவரும் ஒன்றாக உயரிய விழிப்பு நிலைகளுக்கு முன்னேறலாமென்ற அரிய செய்திதனை உலகுக்கு எடுத்துரைக்கலாம். அப்போது எமது கண்களை இவ்வளவு காலமும் மறைத்துக்கொண்டிருந்த மாயத்திரை விலகும். அத்துடன் நாம் இங்கே எதற்காக வந்தோமென்பது சரியாகப் புலப்படத் தொடங்கும். ஏனையவர்களுக்கு உதவுவது தான் மந்திரச்சொல்லாகும். இந்தப் பிரபஞ்சரகசியத்தின் சிறிய ஒளிக்கீற்று பில்லிக்குத் துலங்கிடத் தொடங்கியது. கொஞ்சநாளிலேயே அவர் எவ்வாறு நரகத்திலெரியும் நெருப்பையும், கந்தகக்குளத்தையும் பற்றி உபதேசித்தாரோ அதேயளவு உற்சாகத்துடன் இவ்வுண்மையையும் ஏனையவர்களுக்கு உபதேசிக்கத்தொடங்கினார். உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. பிழையான கொள்கைகளினால் அவர் பிழையான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தவர். இப்போ அதேயளவு நாவன்மையுடன் உண்மையைப் பரப்பி வருகிறார். கூடிய சீக்கிரத்தில் அவர் தனது முந்தைய பிறவியினைப் பற்றி ஆராயத்தொடங்குவார். தனது பழமையான இறுக்கமான சமயக்கோட்பாடுகளிலும் பார்க்கக் குறைவான நம்பிக்கை கொண்டோரின் நம்பக்கூடியதான வாதங்களுக்குச் செவிசாய்த்துத் தன் கண்களைத் திறக்காததன் மூலம் எங்கே எப்படி மற்றையவர்களுக்குப் பிழையான முறையில் வழிகாட்டினார் என்பதனைக் கண்டு கொள்வார். அவர் தனது பிழைகளைத் திருத்தவிரும்பினார். அதேபோல நம்பிக்கை கொண்ட பூவுலகில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் சமயவாதிகளின் மனதில் நன்கு பண்பட்ட மண்ணில் போடப்படும் விதைபோல ஞானத்தைப் பயிர்செய்வதன் மூலம் இறுக்கமான நம்பிக்கை கொண்டோரிடம் உண்மையைப் பரப்ப முயல்கிறார். அடிப்படையில் அவர் ஒரு நல்ல ஆத்மாவானதால், பூவுலகில் இருக்கையிலேயே இவ்வுண்மைகளை அறிந்திருந்தும் ஒரு முயற்சியுமின்றி இவரைப்போல ஏனையோருக்கு உதவி அவர்களையும் முன்னேற்ற முயலாமலிருப்பவர்களிலும் பார்க்க இங்கே அவர் வெகு விரைவாக முன்னேறுவார்."

மறுநாட்காலை போர்ட் பின்வருமாறு எழுதினார்: இன்று ஒரு கைக்குழந்தையின் கதைக்கு வருவோம். அக்குழந்தை பிறந்து கொஞ்சநேரம் உயிர்வாழ்வதற்காகப் போராடியபின்னர் அது பின்வாங்கி ஆத்மநிலைக்கே மீண்டும் வந்தது. நிச்சயமாக அக்குழந்தை உயிர்வாழ விரும்பியிருக்கும். தனது பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவாவது உதவியிருக்கும். பின் இந்த மாறுதலுக்குக் காரணம் தானென்ன? சிலவேளைகளில் அக்குழந்தையின் உடல் குறைபாடுகளால் பலவீனமுற்று உயிர்வாழ்வற்குரிய தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் கூடுதலாக இப்படியான சந்தர்ப்பங்களில் ஆத்மாவானது பின்வாங்குதல் தான் சரியான காரணியாயிருக்கும். உதாரணத்துக்கு ஒரு நல்ல குடும்பத்தில் தவமிருந்து பெற்ற குழந்தையாகப் பிறந்த ஒரு குழந்தை சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ வாழ்ந்து பின் உயிர் நீத்தது என எடுத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட நிச்சயமாகப் பின்வாங்குகின்ற இந்த முடிவில் அந்தக்குழந்தையின் பங்கும் ஏதோ இருந்திருக்க வேண்டும். சிலவேளைகளில் உடலுக்குள் செல்லுவதற்கு ஆத்மா தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது தனது ஆத்மீகவளர்ச்சியைத் தடைசெய்து கொண்டிருக்கும் கர்மவினையைப் போக்குவதற்குரிய சரியான ஊடகம் அதுவல்லவென அந்த ஆத்மா தீர்மானித்திருக்கலாம். எது எப்படியென்றாலும் அப்பூவுலகக் குழந்தையின் உயிர் அது சற்றுமுன்னே எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்திற்கே உடனே வந்துவிட்டது. சிலவேளைகளில் சிறிது நேரம் உறங்கவேண்டிவரும். ஆனால் சாதாரணமாக ஆத்மவுலகை விட்டு இவ்வளவு குறுகிய நேரத்திற்கு மட்டுமே வெளியேறியிருந்தால் மீண்டும் வருகையில் சிறிதளவே அனுசரிக்கவேண்டிவரும். மீண்டுமொருமுறை அந்த ஆத்மாவானது நடந்தவைகளைச் சீர்தூக்கிப்பார்த்து என்ன நடந்தது சற்றுமுன் என்பதனை ஆராய்ந்து தனது கர்மவினைகளைக் களைவதற்காகப் பிறவியெடுத்த அந்தச் சந்தர்ப்பத்தைத் தான் ஏன் நழுவவிட்டேன் என ஆராய்ந்துணரும்.

"அக்குழந்தையானது உண்மையில் குழந்தையல்ல, அதாவது ஆத்மவுலகைப் பொறுத்தவரையிலாவது அது குழந்தையல்ல. ஏனென்றால் எல்லா ஆத்மாக்களும் ஆரம்பத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கின்றன. சில ஆத்மாக்கள் இங்கேயும் பூவுலகிலும் அவர்கள் பெற்ற அனுபவங்களினால் பரிணாமவளர்ச்சியடைந்து, ஞானவான்களாகவும், அவர்களின் இருப்புக் கூடுதலாக அர்த்தமுள்ளதாகவும் இருந்தாலும், இங்கே ஒருவரும் குழந்தையல்ல. இன்று உதாரணமாகச் சொல்லப்பட்ட கைக்குழந்தையானது சற்றே போராடிப்பார்த்தபின் மீண்டும் எம்மிடம் வந்துசேர்ந்தது. அக்குழந்தையின் பௌதீக உடலின் இருதயமானது பாதிக்கப்பட்டிருந்ததனால் அதனால் உயிர்பிழைக்க முடியவில்லை. இங்கு மீண்டும் வந்தபோது முதலில் அந்த ஆத்மாவானது ஏமாற்றமடைந்த நிலையிற் காணப்பட்டது. குழந்தைப்பருவமானது அவ்வளவு சிறப்பான நிலையல்லவென்றாலும், தனது பெற்றாரை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், தனது சூழலானது தனது சில கர்மவினைகளைப் போக்குவதற்கு உகந்தசூழலென அவ்வாத்மா நினைத்ததாலும் அது சற்று ஏமாற்றமடைந்தது. பௌதீக உடற்கோளாறினால் இந்தச் சந்தர்ப்பமானது அவ்வாத்மாவுக்கு மறுக்கப்பட்டது கூட உண்மையில் ஒரு கர்மவினைப்பயனாகும். அவ்வாத்மா தனது முந்தைய ஒரு பிறவிதனில் ஒரு பிறந்தகுழந்தையின் தேவைகளைப் புறக்கணித்ததன் மூலம் அக்குழந்தையின் இறப்புக்குத் தான் காரணமாயிருந்ததை உணர்ந்து கொண்டது. எனவே நிறைவாகத் தோன்றிய இப்பிறவியை முழுதாக வாழ்ந்து முடிப்பதற்கு அவ்வாத்மா மிகவிரும்பியிருந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து பின் வாங்கியதன்மூலம் தனது கர்மவினைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. அக்குறிப்பிட்ட குழந்தையானது இங்கே வந்தபின் சற்றே தன்னை மாற்றியமைத்துக்கொண்டு மீண்டும் ஞானாலயத்தில் இணைந்து இறைவனுடன் இரண்டறக் கலத்தலாகிய இலட்சியத்தையடையும் பாதையில் செல்வதைப்பற்றிப் பயில ஆயத்தமாகிறது. அவர் சற்று நேரத்துக்கே இங்கிருந்து போயிருந்ததால், சிறிது மீள்வழிகாட்டலே போதுமானது. இதுவே அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பூவுலகில் குழந்தையாய் இருந்திருந்தால் இங்கே அவருக்கு உளவியல் ரீதியாக உதவுவதற்கு ஆத்மாக்களிருக்கின்றன. அவர்கள் இவரைக் குழந்தைப்பருவத்து வியாதியிலிருந்து விடுவித்து வயது வந்தவராய் மாற்றிவிடுவார்கள்.

அடுத்ததாக ஆர்தர் போர்ட் அவர்கள் சற்றே வளர்ந்த குழந்தையொன்றை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதினார்: "காக்கை வலிப்பு நோயுள்ள ஒரு குழந்தையின் விஷயத்துக்கு வருவோம். அக்குழந்தையைச் சூழ்ந்துள்ள அவனில் அன்பானவர்களெல்லாம் அக்குழந்தைக்கு வலிப்பு வரும்போது வேதனைப்படுவார்கள். அவனுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவு வலிப்பு வரும். அந்த நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களில் அவன் சாதாரண குழந்தையாகவே இருப்பான். வலிப்பு வருகையில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வானென்ற பயத்தின் காரணமாக ஏனையவர் போல சாதாரண வாழ்க்கையை வாழ அனுமத்திக்கப்படாதவனாக இருந்தான். வாழ்க்கை அவனுக்குப் பெரும் பாரமாக இருந்ததனால், வாழவேண்டிய வயதுவரை வாழாமல் அந்த உடலை விட்டுவிட்டுப் பின்வாங்கி வந்துவிட்டான். அவன் இங்கே கண்விழிக்கையில் முன்பின் தெரியாதவர்களிடையே தனக்கு மீண்டும் வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துவிட்டான். எனவே தனது தாய், தந்தையார், பாட்டி இவர்களைத் தேடியழுதான். இவர்கள்தான் அவனைப் பூவுலகில் அன்பாகப் பார்த்துவிட்டவர்கள். அன்னியர்கள் தன்னைப் பிடித்தாலும் என்ற பயத்தில் அவன் தனது ஆத்மாவின் கண்களைத் திறக்க அஞ்சினான். அவனது மனவேதனை எல்லா விதத்திலும் உண்மையாகவேயிருந்தன.

"இறுதியில் ஒரு பிரபல வைத்தியருக்கு அவனது பரிதாபநிலை எட்டியது. அவர் அந்தப் பையனுக்கு முழுமையான ஆதரவுடன் தான் அவனுடைய வியாதிக்கு மிகச்சிறந்த வைத்தியம் பார்ப்பதாக உறுதியளித்தார். அவர் பூவுலகில் எவ்வாறு அவனுடைய உடலைப் பேணிப்பாதுகாப்பாரோ அதேயளவு மென்மையான லாவகத்துடன் அவனது மனத்தை மாற்றத்தொடங்கினார். கொஞ்சம்கொஞ்சமாக அவனுடைய மனதில் நம்பிக்கையை வளர்த்து அவனுடைய அச்சத்தைப் போக்கினார். பின்னர் அந்த டாக்டர் மற்ற மென்மையான ஆத்மாக்களை அறிமுகம் செய்து வைத்தார். அவ்வாத்மாக்கள் கைவிடப்பட்ட உடலினில் ஏற்படும் தொல்லைகள் பற்றி அவன் இனிமேல் கவலைப்படத் தேவையில்லையென அச்சிறுவனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். அச்சிறுவன் சுற்றும்முற்றும் பார்த்தான். ஒருவர்கூடத் தனக்குப் பரிச்சயமான, பாரமான உடலைச் சூடிக்கொண்டிருக்கவில்லை என்பதனைக் கண்டுகொண்டான். அவர்களனைவரும் பூவுடல்களிலும் பார்க்க மிக அழகான, ஆன்மீகவடிவிலான உடைகளைச் சூடிக்கொண்டிருந்தனர். அத்துடன் உடலுபாதைகள், வருத்தங்கள் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் இருந்தனர். அவன் தன்னுடைய வீட்டைச் சென்று பார்வையிட்டான். அவனுடைய பெற்றார் கவலையுற்றவர்களாகக் காணப்பட்டாலும், அவனை நினைத்து வேதனைப்படவில்லை என்பதனைத் தெரிந்து கொண்டான். அவர்கள் மிக முன்னேறிய ஆத்மாக்களானதால் தங்கள் மகன் இப்போ கடவுளின் அன்பில் முழுவதும் ஆழ்ந்திருப்பானென்பதனால் அவனுக்கு உடலுபாதைகளொன்றும் இருக்காது என உணர்ந்துகொண்டவர்களாகக் காணப்பட்டார்கள்.

"அவன் தனது பெற்றோரைத் தனது அன்பினால் ஆசீர்வதித்தான். அதன்பின்னர் அவன் மிக வேகமாக இங்கிருக்கும் ஆசிரியர்களின் உதவியுடன் வளர்ச்சியடையத் தொடங்கினான். அவர்கள் அவனும் ஏனையோரைப்போல வளர்ந்தவனே என்பதனை உணர்த்தினார்கள். அவன் தன்னுடைய கடந்த வாழ்க்கையைப் பற்றி மதிப்பிடுகையில், தானே தான் அந்த வலிப்புகளை முன்வந்து ஏற்றுக்கொண்டதாகவும், முந்தைய ஒரு பிறவிதனில் வேறு சிலரின் உடலுபாதைகளை உணராமல் இருந்ததனால், அவர்களின் வேதனையின் தன்மையை விளங்கிக்கொள்ளுமுகமாகத் தானே அக்கஷ்டங்களை அனுபவிக்க விரும்பியதாகவும் உணர்ந்தான். அவன் கூடிய சீக்கிரத்திலேயே மிக முன்னேறிய ஆத்மாவாக மாறினான். இப்போ அவன் தனது கர்மவினைப்பயனை அனுபவித்துப் பெரும் பாரத்தைத் தலையிலிருந்து இறக்கி வைத்ததனால், அப்பாரமில்லாமல் தனது அடுத்த பிறவியானது எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்க வல்லவனாக இருந்தான். அவன் பணிவு என்பதைப் பற்றி அறிய விரும்பினான். தற்போது கடந்துபோன பிறவியில் அவனுடைய பெற்றோர் வசதி படைத்தவர்களாகவும், நன்கு கற்றவர்களாகவும் இருந்தார்கள். அதனால் அவனுக்குப் பெருமையிருந்தது. அத்துடன் எந்தநேரமும் அவர்கள் தன்னைக் கவனிக்கவேண்டுமென எதிர்பார்த்தான். இதனால் தனது அடுத்த பிறவியில் அவன் எளிமையான, அன்புள்ள, ஆனால் அதே நேரம் ஏனையோருக்கு உதவுவதற்கென்று தம்மை முழுமையாக ஒப்படைத்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமெனத் தெரிவு செய்வான். சேவை செய்யும் மதபோதகர்களின் மகனாகப் பிறந்து பின்தங்கிய நாடுகளின் பலபகுதிகளைச் சேர்ந்தவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றியறிவான். இவ்வாறு எளிமையாகத் தொடங்கி முழுமை பெற்ற ஆத்மாவாவான். இப்படித்தான் இந்தச்சுழற்சியானது எமது முன்னேற்றத்துக்கு உதவுகிறது. பிறவிகளினிடையே ஆத்ம உலகிலெடுக்கும் சரியான மாற்றுவழிகளின் மூலம் நம் உணர்வுகள் வளர்ந்து படிப்படியாக முன்னேறி இறைவனுக்கு இனியவர்களாக மாற முயற்சிப்போம். எல்ஸி நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளைப் பற்றியும் கேட்டிருந்தார். ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஒரு ஆதிவாசியின் கதையைப் பார்ப்போம். நாகரீகத்தின் சுவடுகள் சற்றும் புகாத பின்தங்கிய பகுதியில் தனது முழுவாழ்வையும் களித்த ஒருவன் ஆத்மஉலகுக்கு வந்தான். கலாச்சாரப் பகுதிகளில் வாழ்ந்து கிறிஸ்தவமதத்தைத் தழுவியிருந்த எம்மைப்போன்றவர்களிலும் பார்க்க அவனுக்கு இங்கே குறைந்த அளவு அதிர்ச்சியே காணப்பட்டது. அவன் மூடநம்பிக்கைகளுக்குப் பழக்கமாகியிருந்தான். அவனுடைய ஊரில் ஆவிகள் எங்கும் நிரம்பியிருப்பதாக எண்ணுவார்கள். இறைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து கொண்டு சூரிய, சந்திரர்கள், மற்றும் ஆகாயத்தில் அனைத்தையும் ஒழுங்காக வழிநடத்திக்கொண்டிருப்பான் என நம்புவார்கள். முதலில் அவன் தன்னைப் போன்றவர்களையே சந்தித்தான். ஆவிகளில் நல்ல விடயங்களுக்காக இருக்கும் நல்ல ஆவிகளில் அன்பு செலுத்தியும், தீயனவற்றுக்கு அஞ்சியும் வந்தவர்கள் அவனைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களையே அவன் முதலில் சந்தித்தான். அவர்கள் தங்களது ஊரைப்பற்றி விளக்கமாக முதலில் பார்த்தார்கள். பெற்றாரின் கண்டிப்பான வழிகாட்டலாலும், புத்தகங்களின் மூலமும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமில்லையென நம்பும் எம்மைப் போன்றவர்களிலும் பார்க்க, அவர்களால் கூடிய விரைவில் பூவுலகிலிருக்கும் தங்களது சொந்தங்களுடன் தொடர்புகொள்ள இயலுமாக இருந்தது. அவன் தனது பழைய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டான். அவர்களுக்கு மழை வேண்டுமென்று தெரியவந்தபோது மற்றைய ஆத்மாக்களுடன் சேர்ந்து வழிமண்டலத்தின் சுழற்சியில் மாற்றங்களையுண்டாக்கி அவர்களுடைய இடத்திலே மழை பொழியச்செய்தான். நாகரீகத்தில் முன்னேற்றமடைந்துள்ள சமூகத்தில் பிறப்பவர்களிலும் பார்க்க இந்த ஆதிவாசிகள் மிகக்குறைந்த அளவு பிறவிகளே எடுப்பார்கள். சிலநேரங்களில் அவர்கள் பிறவிகளினிடையே பல ஆயிரம் வருடங்கள் துயில் கொள்வதனால், அந்த நேரத்தில் பூவுலகிலேற்பட்டிருக்கும் முன்னேற்றங்களைப் பற்றிக் கொஞ்சமும் அறியாமலிருப்பார்கள். இதனால் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் அந்த நேரத்திற் பிறப்பவர்களிலும் பார்க்கப் பின்தங்கியவர்களாய் இருந்தாலும் இறைவனும், மனிதனும் கைகோத்துக்கொண்டு உலகில் ஒன்றாக நடந்த அந்தக் காலத்தை அவர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பதனால் ஆத்மீகத்தில் முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.

"ஏன் முன்னைய பிறவிகளோ அல்லது ஆத்மஉலகமோ அவை உண்மையாக இருந்தும் மனிதருக்கு நினைவில் நிற்பதில்லை? குழந்தைப் பருவத்திலிருந்து உண்மையில்லா விஷயங்களைப் பற்றிப் பிதற்ற வேண்டாமெனக் கண்டித்து வளர்த்தது தான் காரணமாகும். பின்னர் விரைவில் 'நாகரீகக்கூண்டில்' அடைக்கப்படுகிறோம். சிறியவயதில், கிரேக்க, ரோமானியர்களின் தொன்மைக்காலப் புராணவரலாறுகளில் உலகிலேயிருந்த விசித்திரமான உயிரினங்களைப் பற்றிப் படித்தாலும், தமக்கும் அதேபோல நடந்த மாதிரி மங்கிய நினைவுகளிருக்கின்றன என அவர்கள் சொல்லுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த மறக்கடிக்கும் தன்மையானது வலிந்து புகுத்தப்படும் ஒன்றென்றாலும், சிலநேரங்களில் தேவையானதும் கூடத்தான். முந்தைய எமது பிறவிகளில் நடந்த திகிலூட்டக்கூடிய விஷயங்கள் எமது வெளிமனத்துக்கு ஞாபகத்திற்கு வந்தால் அவை இப்பிறவியில் தேவையற்ற மனவேதனைகளை உண்டாக்கலாம். அவர்கள் பிறருக்குச் செய்த சில தீயசெயல்களின் பலன்களைக் களைவதற்காகத் தாங்களாகவே முன்வந்து இப்பிறவிதனை எடுத்திருக்கலாம். ஆனால் தாங்கள் இப்பிறவியிலனுபவிக்கும் துன்பங்களுக்கான காரணங்களை மிகத்தெளிவாக நினைவு கொள்வதென்பது தாங்கமுடியாத சுமையாக இருக்கும்."

அடுத்தநாள் ஆர்தர் போர்ட் இன்னொரு வகையான காட்டுமிராண்டித்தனமானவனைப் பற்றிச் சொன்னார்: அவன் காட்டுத்தர்பாரைத் தவிர கிறிஸ்தவ மதத்தையோ அல்லது வேறு எந்த வகையான ஒழுங்குமுறையான வழிபாடுகளையோ அறியாதவன். நாகம் தீண்டியதனால் தான் அவன் இறந்திருந்தான். அவன் இறப்பைக் கடந்து இங்கே வருகையில் அவனுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. எந்தவிதமான சுகாதாரமோ, நாகரீகமோ தெரியாத ஒரு முழுமையான காட்டுமிராண்டியாக அவன் இருந்தான். அவனது இதற்கு முந்திய பிறவிக்கும் இந்தப் பிறவிக்குமிடையில் பல ஆயிரம் வருட இடைவெளியிருந்ததும், தனது முன்னேற்றத்துக்கு ஆத்மஉலகில் அவன் ஒரு முயற்சியுமெடுக்காததும் காரணங்களாக இருக்கலாம். பலநூறு வருடங்கள் துயில் கொண்டதனாலும், இங்கிருக்கும் ஏனைய ஆத்மாக்களைப் பற்றிச் சற்றும் அக்கறைப்படாமல் இருந்ததனாலும், அவன் கடைசியில் பூவுலகில் மீண்டும் பிறப்பதாகத் தீர்மானித்தபொழுது அவன் தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்துப் போட்ட மீனைப்போல இருந்தான். அவன் உண்பதற்காகவும், உறங்குவதற்காகவுமே உயிர் வாழ்ந்தான். அவன் பூவுலகில் செய்த ஒரேயொரு வேலை என்னவென்றால் அடிவாங்குதலையும், பேச்சுவாங்குதலையும் தவிர்த்ததுதான். அவன் அறியாமையில் வாழ்ந்திருந்தான். அதேமுறையில் இறந்தான். அதனால் அப்பிறவியில் சற்றும்கூட முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் பூவுலக வாழ்க்கைத் தொடருவதில் ஒரு அர்த்தமுமில்லை. இங்கே அன்பான ஆத்மாக்கள் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சித்தாலும் அவன் தொடர்ந்து தூங்கினான். விழிப்பான நேரங்களில் தன்னைப்பற்றியும் தனது சந்தோஷங்களைப் பற்றியும் மட்டுமே நினைத்தான். அவனுக்கு சந்தோஷமான விஷயங்கள் மிகச்சிலவே (மிருங்கங்களைச் சித்திரவதை செய்வதைத் தவிர). அரவம் தீண்டி இறந்ததும் கூட அவனுடைய கர்மவினைப்பயனே. மனிதரிலும் பரிணாம வளர்ச்சி குறைந்த மிருகங்களுக்கு அவன் செய்தவற்றுக்கான பயனே.

"இப்படிப்பட்ட ஆத்மாவானது பூவுலகிலிருப்பதிலும் பார்க்க இங்கே மிகச்சோர்வடைந்து காணப்படும். ஏனென்றால் அவர்களை ஆத்மீகவளர்ச்சிக்குரிய பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர்களைத் தூண்டுவதற்கு மிகச்சிறிய சந்தர்ப்பங்களே உள்ளன. ஆனால் இன்று நாகரிக உலகில் உண்ணுதற்கு ஏராளமான உணவும், நிறைவற்றுவதற்குரிய கடமைகள் ஏராளமாக இருந்தும், அதை விடுத்துக் கலவரங்களை உண்டாக்கிப் பேரழிவுப்பாதையில் செல்வதையே தேர்ந்தெடுத்தவர்களிலும் பார்க்க இந்தப் பையனின் நிலைமை ஒன்றும் மோசமானதல்ல எனலாம். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் அடுத்த பிறவிகளில் சிலவேளைகளில் இப்பையன் பிறந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிறக்க வாய்ப்புகள் இருக்கலாம். இப்பையனும் சிலவேளைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதேபோல அழிவுப்பாதையில் போயிருந்து, இப்போ தனது கர்மவினைகளைக் களைவதற்குப் பிறவியெடுக்க விரும்பாமலிருக்கலாம். வளர்ச்சி, முன்னேற்றம், அன்பு, ஆக்கபூர்வமான நடவடிக்கை, அத்துடன் மற்றையோரைப் பற்றி நினைத்தல் இவைதான் சொர்க்க வாசலுக்குரிய திறவுகோலாகும். அன்பைக் கட்டியெழுப்பாமல், ஏனையோரைக் கட்டாயப்படுத்தல், ஆத்திரமுற்று அழிவுக்கு வழிகோலல் இவையெல்லாம் ஆத்மா உலகிலும், பின்வரும் பிறவிகளிலும் கடுமையான எதிர்விளைவுகளையுண்டாக்கும்".

ஏழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது.

Posted by
at
icon18_email.gif

Older PostsHome

Subscribe to: Posts (Atom)

OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY

- From: Friendship with God

எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்

-தமிழாக்கம்

புத்தகத்தின் முகவுரை

Automatic Writing என்பது நிரூபணம்செய்ய இயலாத ஒன்று (பிறப்பு இறப்புச் சுழற்சி போல). ஒருகுழந்தையைப் பார்த்து அது ஒருதாயின் வயிற்றிலிருந்துவெளிவந்ததென்று தெரிந்துகொள்கிறோம் . அதேபோல ஒருஇறப்பின்போது உயிர்ச்சக்திபோய்விட்டது என்பதைத்தெரிந்து கொள்கிறோம். அதேபோல தன்னிச்சையானஎழுத்தென்பதைப் பார்க்கவும்வாசிக்கவும் இயலும். ஆனால்அதை எழுதவோ டைப்பண்ணவோ இயக்கும் அந்தவிசை எமது எந்தஐம்புலன்களாலும் அறியமுடியாத ஒன்று. பல புத்தகங்கள்இந்த மாதிரிஎழுதப்படிருக்கின்றன. அவற்றுள்ஒன்று Patience Worth Series Received by a Midwestern Housewife என்பதும்இன்னொன்று The Fascinating New Testament Stories Dictated through Geraldine Cummins என்பதுவும்அடங்கும்.

பொதுவாக இப்படிப்பட்டஉந்துசக்தி நம்மைப்போலப்பிறந்து வாழ்ந்து இறந்து போனஒருவரிடமிருந்து வருவதாகச்சொல்லப்படுகிறது. இந்தவிஷயங்களை மறுப்பவர்கள்பொதுவாக இது எமதுஅடிமனத்திலிருந்துதான்வருவதாகச் சொல்வார்கள்.அடிமனத்தில் தான் எல்லாநினைவுகளும் தேக்கிவைக்கப்பட்டிருப்பதாகச்சொல்வார்கள். இப்படியாகக்கருத்து வேறுபாடுகள் பலவிதமாக உள்ளன.

என்னால் இவற்றுக்கெல்லாம்பதில் சொல்லமுடியுமென்றுசொல்லவரவில்லை. என்னால்ஒன்று மட்டுமே சொல்லஇயலும். அதாவதுஇப்புத்தகத்தில் வரும்மறுவாழ்வைப் பற்றியவிளக்கங்களெல்லாம் எனதுகற்பனையோ இயற்றியதோஇல்லை. அவை எனதுடைப்ரைட்டரில் டைப்பண்ணமுன் எனக்குத் தெரியாதவை.

உதாரணத்துக்குஇந்தியாவிலிருக்கும்ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த உதய்பூர் என்றகிராமத்தைச் சேர்ந்த டாக்டர்ஐ.சி.சர்மா என்பவர் எனக்கு ஒருகடிதம் எழுதியிருந்தார். அவர்உதய்பூர் பல்கலைக்கழகத்தின்தத்துவவியற் பீடத்துக்குத்தலைவராவார் (head of the department). அக்கடிதத்தில் அவர்தனது மாமியார் இறந்ததைமுன்னிட்டு உடனடியாக'ஹிஸார்' என்ற இடத்துக்குச்செல்ல வேண்டியிருந்ததாகவும்,உதய்பூர் வந்ததன் பிற்பாடுஎனக்குத் தன்னிச்சை எழுதுகை(automatic writing)வருவதையறிந்ததாகவும் தனதுமனைவி பாக் (Bhag) க்கு ஆறுதல்தரும் விதமாக ஏதாவது செய்யஇயலுமா ஏனெனில் அவரதுமாமியார் 'சீதா தேவி மனுஜா'அகால மரணமடைந்ததாகவும்எழுதியிருந்தார்.

அடுத்த நாள் காலை ஆர்தர்போர்ட் (Arthur Ford) இடம் இறந்த'சீதா தேவி'யைப் பற்றி ஏதாவதுதெரியுமாவெனக் கேட்டதற்குஆர்தர் சொன்ன (எழுத்துமூலமான) பதில் "நாம் அவரைச்சந்தித்தோம். அவர்சந்தோஷமான ஆத்மா. இங்குவந்ததில் அவர் வெகுசந்தோஷமாகவும் சக்தியுடனும்இருப்பதாகவும் அவரதுபூவுலகத்திலிருக்கும்குடும்பத்தினரைப் பிரியவில்லைஎன்றும் கூடிய நேரம்அவர்களுடன் தான்இருப்பதாகவும், அவர்கள்மனத்தைத் தேற்றுமளவும் தான்அப்படியிருப்பேன் என்றுசொன்னதாகவும் அதனுடன்வேறு பல பிரத்தியேகச்சமாச்சாரங்கள் எழுதப்பட்டதுடன்ஒரு குறிப்பிட்ட நீலமலரொன்றைச் சொல்லித்தனக்கு விருப்பமான அந்தமலரைப் பார்க்கும் போதுதன்னை நினைக்கும் படியும்அந்த நேரத்தில் அங்கு தானும்இருப்பேனென்றுசொன்னதாகவும் எழுதப்பட்டது.

இந்த சீதா என்பவரைப் பற்றிஎனக்கு ஒரு நாளும் தெரியாது.அவர் இருக்கும் இடத்தில் அந்தநீலப்பூப் பூப்பது பற்றியும்எனக்குத் தெரியாது. எனவேஇதை டாக்டர் சர்மாக்குஎழுதுவதற்குத் தயக்கமாகஇருந்தது. இருந்தாலும் எதற்கும்எழுதுவோமெனத் தீர்மானித்துஎழுதினேன். ஏப்பிரல் 20 ஆம்திகதி 1971 ஆம் ஆண்டு டாக்டர்சர்மா ஜோட்பூரிலிருந்து அதற்குப்பதில் எழுதினார். ஆர்தருடையஒவ்வொரு சொல்லும்உண்மையென்றும் அந்தநீலப்பூவைப் பற்றித் தனக்குஎதுவும் தெரிந்திருக்கவில்லைஎன்றும் ஆனால் மாமனார்சொன்னதாக ஒரு விஷயம்அதில் எழுதியிருந்தார். கடந்தஆறு மாதங்களாக சீதா பூக்களில்அதிகம் விருப்பமடையவராகஇருந்ததாகவும் அதிலும்குறிப்பாக அந்த நீலப்பூவை அவர்உண்டாக்கி அதை வீட்டைஅழகுபடுத்த அவர்உபயோகித்ததாகவும் மாமனார்சொன்னதாக எழுதியிருந்தார்.

சர்மாவுக்கோ அவரதுமனைவிக்கோ கூட சீதாவின்இந்தக் கடந்த ஆறுமாதமாகநீலப்பூவிலிருந்த ஈடுபாடுதெரிந்திருக்கவில்லை. எனக்கோதிருமதி சர்மாவின் பெற்றார்உயிருடனிருக்கிறார்களாஎன்பதே அவரது (மாமியாரின்இறப்பைப் பற்றிய) கடிதம்வருமளவும் தெரியாது. எனவேஇந்த விஷயம் சாதாரணமானவழிகளில் எனக்குத் தெரிந்திருக்கநியாயமே இல்லை. நிச்சயமாகஇது ஆர்தர் சீதாவை மேலுலகில்சந்தித்தை உறுதிப்படுத்துகிறது.

இப்புத்தகம் மேலுலகைப் பற்றியசந்தேகங்களை ஆர்தரின் சொந்தஅனுபவங்களின் மூலமாகநிவர்த்திக்கும்

yogaswami.jpg

எப்பவோ
முடிந்த காரியம்
.
-யோகர் சுவாமிகள்

felt-sooo-peaceful.jpg

புனரபி ஜனனம்,புனரபி மரணம்,புனரபி தாயின்வயிறே ஜனனம்.

38.jpg

"நாம் ஆத்மாஎன்பதே உண்மை.அவ்வுண்மையைமறந்து விட்டதேஅறியாமை" - யோகர்சுவாமிகள்

jesus-4.jpg

மனிதன்மரணத்துக்கப்பாற்பட்டவன் - யோகர்சுவாமிகள்

m_0b8d5768e8354b24e1610f2072543e2b.jpg

உலகின் பெரிய நூதனம்கடவுள். சண்டையும்,சமாதானமும், கூடலும்,பிரிதலும், இன்பமும்,துன்பமும், ஆணும்,பெண்ணும், அன்பும்,வன்பும், யாவும் அதுவே -யோகர்சுவாமிகள்

நாம் என்றுமுள்ளோம் -யோகர்சுவாமிகள்

Last3SmileMySpace.jpg

நான், நீ, ஐயா, அம்மா,அண்ணன்மார், அக்காமார்,அத்தை, அப்பாச்சி,பெரியையா, சீனியையா,சின்னையா, கந்தசாமி,கணபதி, வைரவர்,வீரபத்திரர், காளி,கிருஷ்ணன், கிறிஸ்து,புத்தன், முகமது,இராசரெத்தினமாமா,சோமாமாமா,செல்லத்துரைமாமா,இடபம், மிதுனம்,கர்க்கடகம், சிங்கம், கன்னி,துலாம், விருச்சிகம், தனு,மகரம், கும்பம், மீனம்,ஊர்வன, பறப்பன, கிடப்பன,நடப்பன, மலை, கடல்,வாவி, குளம், கொடி, செடிஎன்று அளவிடக்கூடாமல்விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள் -யோகர்சுவாமிகள்

children+play.jpg

முழுவதும் உண்மை. - யோகர்சுவாமிகள்

bittersweet.jpg

சும்மா இரு. - யோகர் சுவாமிகள்

FEET-OF-VISHNU-RAA.jpg

உனது கால்கள்திருவடி. திருவடியைஅபிடேகமாட்டுவதுபோல் கால்களைக்கழுவுதல் வேண்டும்.நீர் வார்த்துக்கைகளால் கால்விரல்களுக்கிடையேயும் கவனமாகக்கழுவுதல் வேண்டும்(அன்னைகுழந்தையைக்குளிப்பாட்டுவதுபோல்). -யோகர்சுவாமிகள்

ABOUT ME

BLOG ARCHIVE

Simple template. Powered by
.

</p>

<p>

<p>

<p>

ஆனந்தகீதம்

அப்பால்...ஒரு உலகம்

இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத்மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள்வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும்ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம்உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomeryக்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது.

<p>

<p>

<p>

<p><p><p><p>

THURSDAY, DECEMBER 29, 2011

எட்டாம் அத்தியாயம்: கதைசொல்வதில் வல்லுநர் (Storyteller Extraordinary)

two+colors_4b71e0850f748.jpg

Posted by
at
icon18_email.gif

MONDAY, DECEMBER 26, 2011

தான் புனிதத்தொண்டர் அந்தஸ்துக்குப் பொருத்தமானவரெனத் தன்னைப்பற்றிக் கருதிய ஒருவரைப்பற்றி மார்ச் முப்பதாம்திகதி எழுதுகையில் ஆர்தர் போர்ட் தனது கதைசொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டுநாள் நடந்த அந்த உரையாடல் மிகச்சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் இங்கே வந்ததும் கடவுளின் அரியாசனத்துக்கு செயின்ட் காப்ரியால் (Saint Gabriel) தன்னை அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:

"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லையென அனைவருக்கும் சொன்னார். களவெடுத்தலோ, கொள்ளையடித்தலோ, அடுத்தவரை ஏமாற்றுதலோ, அல்லது கற்பழித்தலோ போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லையாதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லையெனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும், சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை பார்த்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்குமுன் இந்தப்பிறவிதான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். அவருக்குக் கடைசியில் ஒரு குணப்படுத்தமுடியாத ஆனால் குறுகிய வருத்தம் வந்ததால், தனது உறவுகளுக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்துவிட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பணஉதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்தபின் சிலருக்கு ஆத்மஉலகில் திடீரென்று விழிக்கையில் ஏற்படும் மிகநீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்புநிறைந்த பூமியைக்கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலையலையான வெள்ளையாடையில் நிற்பதைக்கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப்பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லையென நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்றார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களையழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்கள்.

"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டார்கள். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லையென வியந்தார். எவ்வளவுக்கெவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ, அவ்வளுவுக்கவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதியவைப்பதுதான் தான் செய்யவேண்டிய ஒன்று என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பதுபோல் மகிழ்ச்சியாரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் செயின்ட் கேப்ரியால் (Saint Gabriel) எங்கேயெனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லையென்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்கள் எனக்கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போலிருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேனென்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு நேரமில்லை என்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுப் போவதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக்கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாழியின் குடிலைக்கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக்கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதியபருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.

"ஆத்மஉலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக்கொள்வதால், புதிதாக வந்தவர் அச்செருப்புத்தைப்பவரைப் பார்த்து, அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லையென்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை, அவை தேய்ந்து பழுதாகாமலிருக்க என்ன செய்யவேண்டுமென்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். புதிதாக வந்தவர் செயின்ட் பீட்டர் அல்லது செயின்ட் கேப்ரியால் இடம் போவதற்குரிய வழி எப்படி என்று கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத்தான் அவர் கருதுகிறார் என இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத்தேடுவதற்குமுன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள் அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித்தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும்முற்றும் பார்த்தார். ஆனால் அந்த வயதானவரைத் தவிர வேறெவரும் தென்படவில்லை. சிறுவர்கள் போய்விட்டிருந்தார்கள்.

"அவர் வயதானவரை விழித்து 'வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத்தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்டநேரம் எடுத்ததனால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்குச் சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது, அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.

"அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உள்ளே பார்' என்றார். அவர் செருப்புத்தைப்பவரின் குடிலைச் சுற்றிப்பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். "எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப்படைத்தவனுடன் இணைவதற்குமுன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, 'நானொரு பிழையும் செய்யவில்லையே. எனது வாழ்வு ஒரு மாசுமறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்.' என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லமுன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், 'நண்பனே, உனது கர்வத்தைப்பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றார். புதியவர் குழம்பினார். 'ஆனால் நிச்சயமாக, நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்றவாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்' என்றார்.

"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்' என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், 'பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான், இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது அப்பிறவியில் நான் ஒரு மதபோதகராயிருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவிவந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழுநிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன்தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும், புனிதநாட்களிலும் நான் மாமிசம் அருந்தியதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து, மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்தபோது, தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனிதமும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்குநேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலகநேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின்தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன்.

"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருக்கும். நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயென்றாலும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழைத்தோம்?' என்றார் அவர். "

"அச்செருப்புத்தைக்கும் முதியவர், தனது கருவிகளைக் கீழேவைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். 'மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?' என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், 'நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப்பற்றி சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினாவிடைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்குபோட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக்கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப்பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உன் கைகளிலே எடுத்துக்கொண்டு 'வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்' என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடனிருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் நினைத்ததனால், நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்' என்றார்.

"செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய, இப்போ அவர் கலிபோர்ணியாவிலிருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதைக் கண்டார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப்படுத்திருக்க, அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித்தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டுவிட்டு 'நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்' எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, 'ஆம், ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்' என்றாள். அம்மனிதர், 'அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?' என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள், பெருமூச்சுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். மேலும் தொடர்ந்து, 'அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் முழுக்கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறதென்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் நினைக்கவில்லை' என்றாள். 'அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நினைக்கிறாயா?' என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே நேரத்தில் அவர் இவ்வளவும் கடவுளைத் திருத்தத் தொடங்கியிருக்க மாட்டாரென நினைக்கிறேன். ஒரு புனிதத்தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத்தானே சுயநியமனம் செய்துகொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.

அத்துடன் அவ்வெழுத்து முடிவடைந்தமையினால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடருவார்" என எழுதினார். உடனே போர்ட் (Ford) தொடங்கினார். "காலைவந்தனம் ரூத், தான் கண்ணைப்போல பாதுகாத்துவந்த தனது மனையாள் ஏன் தன்னைப்பற்றி இவ்வாறு கதைக்கிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டுணரட்டுமென அச்செருப்புத்தைக்கும் முதியவர் இவரிடமே விட்டுவிட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடிவாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி ஆட்சேபித்துக் கொண்டிருக்கையில், தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனையுணர்ந்தார். அவர்கள் தாங்களாகவே விளங்கிக்கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்லபெயர் வரவேண்டுமென்பதற்காகவும், வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும், பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.

"இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து, தான் கடவுளுக்கும், ஏனையோருக்கும் சேவை செய்ததையும் பார்க்கக் கூடிய அளவு தன்னையொரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டுமென்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதனையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும், புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டுவரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும், உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வதுதான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளையடவதற்குரிய வழியென அவர் உணரத்தொடங்கினார். திருத்தொண்டர்போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுலகில் செறிவூட்டியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப்பணிகளானவை வெறுமனே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.

"அச்செருப்புத்தைக்கும் முதியவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச் சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்மமுன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது மிகச்சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது மிகமகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்தபோதிலும் பார்க்க இப்போதான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என அவர்களுக்குத் தெரியும். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தார்கள். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள முழுமுயற்சியெடுப்பது என முடிவு செய்தார்கள். எனவே இருவரும், அம்மதபோதகர் தான் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தங்கியிருந்த அச்செருப்புத்தைக்கும் குடிலை விட்டு விட்டு ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அவர்களிருவரும் இப்போ இங்கே கற்கிறார்கள். எங்களது இரட்சிப்பின் இரகசியமானது பூவுலகில் நாமிருக்கையில் எங்களது முகங்களிலிருந்த மூக்குகளைப்போல மிகவும் வெளிப்படையானது என இப்போ கிரகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.

நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கான முதன்மைக்காரணம் இங்கிருக்கையில் நாம் அறிந்துகொண்ட பிரபஞ்சத்தின் அந்தப் பிரதான விதியைப் பூவுலகில் செயல்படுத்துகிறோமா என்பதனை அறிவதேயாகும். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும், எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப்போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கிடையிலும், நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாதநிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காதவகையிலும், எரிச்சலூட்டாத வகையிலும், அவர்களுக்கும் எமக்கும் ஒத்துவரக்கூடியதான ஒரு வாழ்க்கைமுறையைக் கைக்கொண்டோ வாழப்பழகவேண்டும். எமது சிருஷ்டிகர்த்தாவின் இராச்சியத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீகமுன்னேற்றம் அடைகிறோம்.

"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்றபிற்பாடு, தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்குகந்த ஒரு ஆத்மாவைக் கண்டுபிடித்ததையெண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்தவழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். சாசுவதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"

ஒரு சில நாட்களின் பின் போர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இருதயத்தையும், மனத்தையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். பிரதிநிதித்துவ அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்புவழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவரநினைத்தார். அவர் இந்தப்பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற்கதவைத் தேடித் தன்னைச்சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால்நீட்டிப்படுத்துக்கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென நினைத்துக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, 'சேர், இங்கே பாருங்கள் நான் மேரி ப்ளங் (Mary Blunk) என்னைக் கடவுளிடம் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்றாள்.

"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்றுநேரத்துக்கு ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால், தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால், அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச்சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற்கதவருகில் வந்தார். ஆனால் அப்படலை அவர் எதிர்பார்த்தது போல ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற்காவலனோ ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து தோட்டவழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளைகொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் இறைவனின் இருக்கையை எவ்வளவு விரைவில் அடையமுடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பினார். போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக்கொண்டோ இருந்தார்கள். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக்கொண்டே விரைந்து சென்றுகொண்டிருந்தார். அவருக்கு மேலே கஷ்டப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்த சிலரைத் தாண்டிச்செல்லும் நோக்கத்துடன் அவர் விரைந்தார். இறங்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்களெனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறார்களெனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.

"அவருக்கு முன்னே போய்க்கொண்டிருந்தவர்களை விலத்திக்கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக நினைத்தாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரிசெய்து கொண்டாள். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதிசெய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக்கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார். அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக்கொண்டு, அவனிடம் இனிமையாக, "தயைகூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத்தாழ்த்தி வணங்கல்வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்: "ஆனால் அம்மணி, நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருக்கிறார்கள்' என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி, நெருங்கிக்கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்கவைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டுவரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக்கொண்டு பின்வருமாறு பதிலிறுத்தான்: 'ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் எப்படி நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்?' என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.

இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதன் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமான மாதிரி இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக்கோப்பையை ஏந்திக்கொண்டு தான் அவனைக் கடந்து போகையில் நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டுகொண்டாள். 'நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என அதிகாரத்தொனியில் கேட்டாள். அதற்கு அவன், தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும், தான் இப்போ தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலிறுத்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறுபடிகளிருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆத்மீகமுன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும்முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக்கொண்டு, அவரிடம் தன்னை நேரடியாக இறைவனின்பால் இட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். அதற்கு அம்மனிதர், 'அம்மணி!, நாமெல்லோரும் கடவுளே' எனப் பதிலிறுத்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக்காட்டுகையில் அப்பிச்சைக்காரக்கிழவனையும் சேர்த்துத்தான் காட்டுகிறான் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்தமாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. 'பகிடிவிடுவதை நிறுத்திவிட்டு என்னைப்படைத்தவனிடம் என்னையழைத்துச் செல்லுங்கள்' என்றாள் அவள்.

அவ்வழகிய வாலிபன், 'ஆனால் அம்மணி, அவர் உங்களை மட்டுமல்ல எம்மேல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப்பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையையடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும்வரையும், இடைப்பட்ட இக்காலகட்டத்தில், அங்கே நின்றுகொண்டிருக்கும், நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுனராக இருப்பார்' என்று பதிலிறுத்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள்! அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டுனராக ஏற்கவியலாதென்றும், வேறெவரையும்கூட அந்தவிதத்தில் ஏற்கவியலாதென்றும், தனக்குக் கடவுளுடன் மட்டும்தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்துவிட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் கடவுளெங்கே என்று கேட்டனர். அவர்களெல்லோரும் கடவுள் எங்கே இருக்கிறாரென அறியவிரும்பினர். வேறுபலரும் மேலே வந்து சேர்ந்துவிட்டிருந்ததால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.

"கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிகவினிமையான குரலில், 'கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்புவடிவிலானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்புசெலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும் கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலைசெய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றமடைந்துள்ளீர்களா என்று கவனித்துப்பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, 'எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?' என வற்புறுத்தினாள். 'நீங்கள் அதில் இருந்துகொண்டிருக்கிறீர்கள் அம்மணி' என அவ்விளைஞன் பதிலிறுத்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்தவிதமான ஆசனமுமில்லையென்பதனைக் கண்டுகொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்லவருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளோ இல்லையோ என்பதை வேறெவரும் சொல்லமாட்டார்கள். அவளே அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்றவாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றிய அதிக அக்கறையில், தனது தகுதிக்குக் கீழ்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்துகொள்ள மறந்துவிட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளையாடையில் கறைபடிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழேயிருந்தவர்களினால் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்குள்ளேயே இருந்தன. இறைவனால்கூடத் தீர்ப்பு வழங்குகையில், இப்படி நேரே நின்று பார்த்ததுபோல அவள் தன்னைத்தானே அலசி ஆராய்ந்தவாறு கதைத்திருக்க இயலாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனக்கருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசியாராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த, செய்யாத பிழைகளைக் கண்டுபிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும்தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.

மறுநாட்காலை, போர்ட், புதிதாக வருகை தந்திருந்த, பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை நினைத்து வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச்சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின்போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும், குழந்தைகளையும் பிரிந்ததை எண்ணி மனங்கலங்குவதால், ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார்செய்ய ,மறுக்கின்றாள். ஆர்ட் நேரே சொல்லட்டும்:

அவள் தனது கணவரையும், பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவைப்படுகிறதென அவள் நினைத்தாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொருவிதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேதவாக்காக இருந்தது. இந்தப்பக்கத்தில் இருக்கும், இப்படிப்பட்டவர்களுடன் பணிபுரிந்து பழக்கப்பட்டவர்கள், அதற்குரிய சாதனங்களுள்ள ஆத்மாக்கள் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு, பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை யாற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும், இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத்தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமுமிருக்கலாகாது என்று கற்பித்தனர். அவளது சொந்த முன்னேற்றம் மெதுவாகத்தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாய்ப்போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி, அவள் நம்பிக்கையும், பொலிவுமிழந்து பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.

"கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழமான நித்திரையில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ அன்றி வருடக்கணக்கிலோ நீளலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப்பழகிக்கொண்டார்கள். தான் நினைத்ததுபோல ஒன்றும் தான் அத்தியாவசியமாக அவர்களுக்கு இல்லையென்பதையும் கண்டுகொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதேபோன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில்வர வழிகாட்டக்கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீகவிழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்கபூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவுபூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்தபின் அவற்றுக்கு ஈடு செய்யவிரும்பினாள். மீண்டுமொருமுறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால், தான் தாயன்பு என்ற பெயரில் பிள்ளைகளில் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்கமுழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல், அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென அவள் உறுதிமொழிபூண்டாள். சுயநலத்துடன்கூடிய அன்புக்கும், சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.

"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பௌதீக உலகில் காணுகையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப்பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப்போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட வேண்டிவருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால், (அவர்கள் இதைப்பற்றி நினைப்பதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை நினைத்து வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி, ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொருநாள் பூவுலகிற் பிறப்பாள்.

ஆர்தர் போர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ, அவர் மதபோதகர்களைப் (அவர் அவர்களைப்பற்றிச் சொல்கையில் எப்போதும் preachers என்று தான் சொல்வார்) பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். Elsie Sechrist அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப்பார்க்கச் சொல்லிக் கூறிச் சிலநாட்களின்பின் அவர் ஒரு கிறிஸ்தவமார்க்க போதகரைப்பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின்போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும், இறப்பின்பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.

"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்களெல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழும்புவார்கள் என்பவைபோன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஒத்துப்போய்க்கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவர். தந்தையையடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியானமுறையில் வாழ்ந்தால் கடவுளின் அரியாசனத்துக்கருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப்படுவேனென நினைத்தார்.

"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து, அவர் இறுதியில் பூவுடலை நீத்தபின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்டபின், ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும்கொண்ட அழகிய ஒரு இடத்திற்குமுன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பதுபோல உணர்ந்தார். ஏனென்றால் அவர் போதனை செய்த இடமும் இதைப்போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்கமேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கியபின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக்கவனிக்கையில் சிலமுகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப்பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப்போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் 'நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்' என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும், அது இந்த முன்பின்தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளத்து எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், 'தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மேல்லோருக்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்' என்றார்.

"சபையோர்களனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர்விளைவு அவரை ஆச்சரியப்படவைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்களனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டுகளித்ததாகவும், அவரின் நிலையைச் சரிசெய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும், கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச்சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும், பிறந்த திகதியும், இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. 'இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத்தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும், உங்களுக்குப் போதனை செய்யவேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கயுள்ளோம். அதேநேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்' என்றனர் அவர்கள்.

ஆர்தர் போர்ட்டிடம் Elsie Sechrist இன் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால், திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், 'ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப்பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்துவிட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதாரவிரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்வைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடியகாலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் ஒருசிலமாத இடைவேளையில் உடலைநீக்கி இங்கே வந்தபோது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்துகொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய சந்தோஷத்துக்காகவும், ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால், அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில்கூடக் கருதவியலாத அளவு மிகச்சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் ஸ்தாபனமில்லாவிடினும், ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதொரு உன்னதநிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச்சமீபத்திய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென்று இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நடந்துவிட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப்பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்துவிட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்தபின்தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால்தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதில்லை. அவர்களிருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லையாயினும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் அப்படியானது.

"அவர்களிருவரும் இப்போ ஒன்றாகவிருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலேயன்றி எந்தவொரு சக்தியும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரியவிரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும். ஆனால் அதேநேரத்தில் கைவிரல்களோ, கால்விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ, சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே, சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை, சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம்முடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சிலபாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன".

ஆவிநிலையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை, ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம் - மேலும் விளக்கமாகச் சொன்னால், நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத்தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னதுபோல பால்பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணையமுடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.

நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "பாலியல் குழப்பத்துடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்கள் இங்கே தான் ஆணாகப் பிறப்பதா, பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்களாகும். அதனால் இந்தவிதமாகவோ அந்தவிதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது மாறுபட்ட எண்ணவடிவங்களாகும். இப்படிப்பட்ட ஏறக்குறைய பிரத்தியேகமான சூழ்நிலைகளில் சிலநேரங்களில் இப்படிப்பட்ட உடல்களை, தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் எடுக்கின்றன" என்றார்.

எட்டாம் அத்தியாயம் நிறைவுபெற்றது.

Posted by
at
icon18_email.gif

<p>

SUNDAY, JUNE 26, 2011

<p>

ஏழாம் அத்தியாயம் - சில குறிப்பிட்ட நபர்கள் (Spicific Cases)

child+going+to+light.jpg

Posted by
at
icon18_email.gif

<p><p>

<p>

ஆர்தர் போர்ட் காலைவேளைகளில் சிறிது நேரம் எனது டைப்ரைட்டரை ஆக்கிரமிக்கத் தொடங்கியதிலிருந்து பத்துக் கிழமைகளின் பின் ஒருநாள் டெக்ஸாஸ், ஹூஸ்டனிலிருக்கும் (Houston, Texas) திரு, திருமதி வில்பிரட். ஏ. செக்றிஸ்ட் (Wilfred A. Sechrist) எமது மெக்சிகோ, குவேர்ணவகாவிலிருக்கும் வீட்டிற்கு வந்தார்கள். எல்ஸி, கனவுகளின் அர்த்தங்கள் பற்றியும் மற்றும் எம் அறிவுக்கப்பாற்பட்ட சூக்குமமான விடயங்கள் பற்றியும் வலு ஸ்திரமான சார்பான முடிவுகளைக் கொண்டவர். அவர் ஆர்தர் எழுதியுள்ளவற்றை ஆவலுடன் வாசித்துவிட்டு, சில குறிப்பிட்ட நபர்களைப் பற்றி அவர்கள் இறப்பு என்ற வாயிலினூடாக மறு உலகத்துள் புகுந்த பிற்பாடு அவர்களின் நிலைகளைப்பற்றி ஆர்தரிடம் கேட்டுப்பார்க்கலாமா எனக்கேட்டார். ஆர்தர் சந்தோஷத்துடன் சம்மதித்தார். மறுநாள் காலை அவர் பின் வருமாறு ஆரம்பித்தார்.<p><p>இன்று நானுனக்குக் கென்னடி சகோதரர்கள் பற்றிச் சொல்லப்போகிறேன். ஜாக் நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் பற்றி வேலை செய்துகொண்டிருக்கிறார். மிக முக்கியமாக அவர் இஸ்ரேலியர்களுக்கும், அராபியர்களுக்குமிடையே ஒரு உடன்பாட்டைக் கொண்டுவருவதற்கு முயல்கிறார். பாபி தங்களது சிவில் உரிமைகளுக்காகப் பொறுமையையிழந்து போராடுபவர்களை நிலைமையைச் சுமூகமாக்குவதன் மூலம் சாந்தப்படுத்த முயல்கிறார். 'ப்ளக் பாந்தேஸ்' (Black Panthers) போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தீவிரமான சில தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இயலுமாக இருக்கிறது என்று அவர் சொல்கிறார். அவர்களின் மனநிலையில் தன்னால் சிறிது மாற்றங்களை உண்டு பண்ண முடியுமென்கிறார். அப்படிப்பட்ட இயக்கங்கள் தலைவர்களைக் கடத்துவது, பழிக்குப்பழி வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவனவாகும். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களது இளமை நிறைந்த அழகான பூதவுடலை இளமையில் விட்டுவிட்டு ஆத்மவடிவில் இந்த மேலுலகுக்கு வரும் போது அங்கே அவர்களின் அந்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே பேசலாம்.

"ஜாக் இறந்தவுடன் உடனடியாக மேலுலகில் விழித்துக்கொண்டார். சிலர் போல அவர் மயக்கநிலையில் இருக்கவில்லை. தான் தலைமை தாங்கிய நாட்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் லிண்டனுக்கு (Lyndon) நிலைமைகளைச் சுமூகமாக்குவதற்கும், சட்டங்கள் சிலவற்றைப் பிரச்சினையில்லாமற் கொண்டுவருவதற்கும் உதவுகிறார். அவர் பூதவுடலுடன் இருக்கையில் பல விடயங்களைச் சரிவர நிறைவேற்றாமல் இருந்தாலும், அவற்றை இப்போதாகிலும் வெற்றிகரமாக நிறைவேற்ற விரும்பினார். வியட்நாம் போரில் எல் பி ஜே (LBJ) யின் கூடுதலான தலையீடானது ஒரு மாபெரும் பிழையென அவர் உணர்ந்தாலும் தான் லிண்டனுக்கு உதவாவிட்டால் அரசியலில் பெரும் குழப்பங்கள் வரப்பார்க்குமென அஞ்சினார். அவர் தலைவராயிருக்கையில் இவ்வாறான தலையீட்டைச் செய்திருந்தாலும், இப்படிப் பெரிய அளவிலான பங்களிப்பைச் செய்வதற்கு அவர் ஒருநாளும் நினைத்ததில்லை. அந்தப் போர்பூமியில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு அவர் விரும்பினார். அத்துடன் அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே சமாதானத்தையுண்டாக்குவதில் தனது முயற்சிகளை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். ஏனென்றால் அந்த ஆதிகாலத்து எதிரிகளின் இருதயங்களில் சகோதர பாசங்களை உண்டுபண்ண முடியாவிடின் அப்புண்ணிய பூமியில் விபரீதமாக ஏதாவது நடக்கக்கூடிய சாத்தியக்கூறு எதிர்காலத்திலிருப்பதாக உணர்கிறார். வியட்நாம் போரில் சண்டையிட்டு மடிபவர்களைக் காண அவர் இதயம் புண்ணாகினாலும் அப்போர் கூடிய காலத்துக்கு நீடிக்காது என்பதை உணர்கிறார். பாலஸ்தீனத்தில் இருக்கும் வெறுப்புணர்வானது ஆதிகாலத்திலிருந்து இருந்து வருவதால் இஸ்ரேலியர்களுக்கும் அயல்நாடுகளுக்குமிடையே ஒரு புரிந்துணர்வுக்கு இப்போ வராவிட்டால் அங்கு ஒரு மிகப்பெரிய பேரழிவு நடக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக அஞ்சுகிறார்.

"பாபி, சிவிலுரிமைகளுக்காகப் போராடும் இயக்கத்தில் தனது இதயத்தை விட்டுச் சென்றார். மிக வலிமை வாய்ந்த ஸ்தானத்திலிருக்கும் ஒருவர் ஆத்திரமுற்றிருப்பவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அவர்களின் ஆத்திரத்தைத் தணியவைத்து, ஒரு நடுநிலைமை மாநாட்டு மேசையில் உட்காரவைத்து ஒற்றுமையையும் அதேநேரம் அவர்களின் உரிமையையும் பற்றிப் பேசவைத்தாலன்றி இந்தப் பிரச்சினை தீராதென்று அவர் உணர்கிறார். அவருக்குத் திடீரென்று ஆத்மஉலகில் கண்விழித்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதனால் சகோதரர் ஜாக் அவருக்கு ஆரம்பத்தில் உதவுவதற்கு இருந்தபோதிலும் அவர் வலிமையிழந்து காணப்பட்டார். அந்தச் சகோதரர்களிடையே கூடுதலான முன்வினைத் தொடர்புகள் காணப்படுகின்றன. பற்பல முற்பிறவிகளில் அவர்களிடையே நெருக்கமான பந்தமிருந்து கொண்டு வந்ததால் ஒருவரின்றி மற்றவர் முழுமையாக உணரமாட்டார். பிறப்பதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படிதான் அவர்கள் அவ்வளவு நெருங்கிய உறவுமுறையுள்ள குடும்பத்தில் பிறந்தனர். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை மீண்டும் மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். அவர்களனைவரும் ஆரம்பகாலத்து இங்கிலாந்தில் ஒரு மிகமகிழ்ச்சியான சூழலில் ஒரு குடும்பமாகவிருந்தனர். அதனால் இனிமேல் பிரிவதில்லையென ஒரு உறுதியான முடிவெடுத்தார்கள். இப்படியாக எடுக்கப்படும் முடிவுகளெல்லாம் ஒரே நிறைவேறுவதில்லை. ஆனால் இம்முறை பூமி நேரப்படி இருபதாம் நூற்றாண்டில் மீண்டுமொரு முறை சரியான ஊடகம் மூலமாக எல்லோரும் மறுமுறை ஒரே இரத்தசம்பத்தமுள்ள குடும்பமாக வரக்கூடியதாக இருந்தது. ஏதெல்(Ethel) கென்னடியும் அந்த ஆரம்பத்தைய குடும்பத்தில் ஒருத்தியாக இருந்திருக்கிறார். ஆனால் இம்முறை ஒரே தாயின் வயிற்றில் பிறக்கமுடியாமற் போனாலும் பூவுலகில் பாபியும்(Bobby) அவளும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திப்பதென்பது கேள்விக்கிடமேயில்லாத ஒரு விடயம். காலகாலத்துக்கும் அவர்களிருவரும் நெருக்கமாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஈருடலும் ஓருயிரும் போல. ஜாக்கி கென்னடி ஒனாசிஸ்(Jackie Kennedy Onassis) முற்பிறவிகளில் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல-அவர் இங்கிலாந்தில் இவர்களறிந்த ஒரு அரசியாவிருந்தார். எனவே ராஜமரியாதை செலுத்துமுகமாகவும், அதே நேரத்தில் அவரைத் தங்களிலொருவராக ஏற்றுக்கொள்ள இயலாமலுமிருந்தது."

சிலநாட்களின்பின் போர்ட் மீண்டும் கென்னடி குடும்பத்தைப் பற்றி ஆரம்பித்தார். அதற்கு முன் அவர் பின்வருமாறு எழுதினார்: நாம் குறிப்பிட்டது போல் பிரார்த்தனையின் சக்தியானது எங்கள் பக்கத்திலும் அதேபோல மனிதனால் இறப்பு என அழைக்கப்படும் திரையின் மறுபக்கமாகிய உங்கள் பக்கத்திலும் முக்கியமானது. எமது அன்புக்குப் பாத்திரமான ஒருவர் அந்தத் திரையை விலத்திக் கொண்டு பூதவுடலை நீத்துவிட்டு வரும்போது, கூடுதலாக ஒன்றுமே புரியாதநிலையில், ஏதோ தொலைந்து போனமாதிரியும், கைவிடப்பட்ட நிலையிலும் தான் காணப்படுவர். அவரது கடந்து போன வாழ்க்கையில் அவர் சந்தித்த இடையூறுகளிலும் பார்க்க மேலுலக வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதென்பது சில சமயங்களில் கூடுதலான கஷ்டமாக அவருக்கு இருக்கக்கூடும். சொர்க்கமென்ற இடத்தைப்பற்றி நாமிங்கே சந்திக்குமிடத்தைவிட முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்பைப் பலர் கொண்டிருப்பதால், அவர்களின் அந்தரித்த நிலையைக் கடவுள் நிச்சயமாக அறிந்திருப்பாரோவென அவதிப்பட்டு அறியத்தலைப்படுவார்கள். பூவுலகில் அவரின் உறவினர்களால் அவரின் ஆத்மசாந்திக்காகச் செய்யப்படும் அன்பான பிரார்த்தனைகள் அவரைச் சாந்தப்படுத்தி, அவரின் ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சந்தேகமின்றிக் கடவுளுக்கு எல்லாப் பிரார்த்தனையும் கேட்கும். இப்போ நானிருக்கும் நிலையிலும் கற்றறிதல் வளர்ச்சியுறல், போன்ற முன்னேற்றங்கள் உண்டு. நாமும் உங்களைப்போலவே முன்னேற்றப்பாதையில் மேல் நோக்கி எம்மைப் படைத்தவனுடன் இரண்டறக்கலக்கும் நாளை எதிர்பார்த்து முன்னேறிக்கொண்டிருப்போம். எனவே பிரார்த்தனைகளானது மிகவும் முக்கியமானது. கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காகப் பிரார்த்திப்பதென்பது மிகவும் சரியான வழி. ஏனைய சமயத்தவர்களும் வேறு நம்பிக்கையுள்ளவர்களும் முடிவற்ற வாழ்வின் அடுத்த கட்டத்தையடைந்த ஆத்மாக்களின் மேல் இன்னும் அன்பு செலுத்தும் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாகும். பௌதீக நிலையில் இருந்ததிலும் பார்க்கக் கூடுதல் அக்கறையெடுத்து இங்கு நாம் பிரார்த்தனைகள் செய்வோம். அதனால் கிட்டத்தட்ட எம்மைப் படைத்தவனின் நிலைக்கேற்ப மாறக்கூடியதாக இருப்பதனால் பூவுலகில் இருந்தபோதிலும் பார்க்கக் கூடுதல் விரைவில் அதனது விளைவுகளை இங்கே நாம் உணரக்கூடியதாக உள்ளது. சில வேளைகளில் இங்கு வரும் ஆத்மாவானது பௌதீக உலகிலிருப்பவர்களின் பிரார்த்தனைகளின் நிமித்தமே விழிக்கக்கூடியதாகவுள்ளது.

<p>கென்னடி சகோதரர்கள் பிரார்த்தனையின் சக்திக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். ஜனாதிபதி கொல்லப்பட்ட போது உடனடியாக எழுந்த பிரம்மாண்டமான பிரார்த்தனைகளின் காரணமாக அவர் இங்கே வந்தவுடன் தன்னிலையை மறக்கவேயில்லை. கிட்டத்தட்ட உடனடியாகவே அவர் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகள் அவரை முன்னோக்கியும், மேல்நோக்கியும் தள்ளியதால் பேர்க்கேட்டரி (purgatory) என்று அவரது சர்ச்சைச் சேர்ந்த பாதிரிமார் குறிப்பிடும் நிலையை அவர் கடுகளவு நேரம் கூட அனுபவிக்கவில்லை. 'பேர்கேட்டரி' என்னும் நிலையானது ஆத்மாக்கள் தொலைந்துபோனவர்கள் போல ஒரு இலக்குமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரியும் நிலையாகும். இந்த நிலையானது அவர்களுக்கு அவர்களின் உண்மையான நிலையையும் அதனது புதிய தன்மைகளையும் ஏதாவது ஒரு விஷயமானது உணர்த்தும் வரையும் தொடரும். பாபியின் விஷயத்திலும் கூடப் பிரார்த்தனைகள் பலித்தன. அத்துடன் மூத்தசகோதரருடனும், மற்றும் மனிதஉரிமைகளுக்காக இவர்கள் முழுவதுமாக போராடியதனைப் போற்றியவர்களுடனும் இங்கே அவருக்காகக் காத்திருந்த அவரது சகோதரரின் அன்பும் அவருக்கு வலுவாக உதவியது எனலாம். நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. ஆனால் ஏனையவர்கள் எனக்கு இந்த விடயங்களைச் சொன்னார்கள். அந்த இரு ஆத்மாக்களும் மனித குலத்தின் மாட்சிமையைக் காப்பாற்றப் பாடுபட்டதனாலும் அவர்கள் நீண்ட நெடுநாட்கள் சம்சாரசாகரத்தில் கிடந்தது உழலவேண்டிய தேவையில்லாததாலும் இங்கே அவர்கள் வரும்போது கோலாகலமாக வரவேற்கப்பட்டார்கள். உனக்கு நல்லவர்களெல்லாம் இளமையிலேயே இறந்துவிடுவார்களென்ற பழைய பழமொழியொன்று நினைவிருக்கிறதா? அநேகமாக எல்லா ஆத்மாக்களும் நல்லனவே. ஆனால் எல்லோரும் இளமையில் இறப்பதில்லை. ஆனால் ஒரு ஆத்மா குறிப்பிட்ட பிறவியில் நிறைவேற்ற எண்ணி வந்தவைகளைக் குறைவான காலகட்டத்தில் நிறைவேற்ற முடிந்து, அதனுடன் வயதான காலத்தில் வரும் தளர்வுகளைத் தவிர்த்தால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார். சில பெருமைவாய்ந்த ஆத்மாக்கள் தங்களது பழம்பெரும் வயதுவரையும் வாழ்ந்து இவ்வுலகுக்குப் பெருமை சேர்க்கிறார்கள். ஆனால் சில ஆத்மாக்களோ அதிர்ஷ்டவசமாகத் தங்களது வாழ்வின் உச்சக்கட்டத்தில் தாங்கள் எண்ணிவந்த கடமைகளை நிறைவேற்றியவுடன் பூதவுடலை விட்டுவிட்டு இந்த உலகுக்கு வந்து தங்களது முன்னேற்றத்தைத் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். இங்குள்ள ஞானாலயமானது மிக வலுவாக ஆத்மீக உணர்வுகளைத் ஊக்குவிக்கக்கூடியதும், ஆத்மீக முன்னேற்றத்தில் எங்களை வித்தியாசமான முறையில் யோசிக்க வைப்பதுமானதாகும். அதனால்தான் பௌதீக உலகில் நாம் கற்றவையொன்றும் இங்குள்ள கல்வியினாலேற்படும் உணர்வெழுச்சிகளுக்கு ஈடாகாது."

ஜனாதிபதி ஐசன்ஹவர் (Eisenhower) ஐப்பற்றி அறிவதற்குக் கென்னடி சகோதரர்களாகிய ஜாக், பாபி ஆகியோரைப் பற்றியறிந்தமை வழிவகுத்தது. ஜனாதிபதி ஐசன்ஹவர் எப்படி அந்தப்பக்கத்தில் இருக்கிறாரென்று கேட்டதற்கு போர்ட் உடனடியாகப் பின்வருமாறு எழுதினர்: "அவர் ஒரு ஜாலியான நல்ல மனிதர். மிகத்துன்பகரமாகப் பாதிக்கப்பட்ட உலகில் அவர் சமாதானத்தைக் கொண்டு வந்ததன் மூலம் தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் கொஞ்சக்காலத்துக்கு முன்னர், அதாவது குழப்பம் குறைவாக இருந்த நேரத்தில் அவர் ஜனாதிபதியாக வந்திருந்தால், மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவியிருப்பார். போரின்போது அவர் வழிநடத்தியவர்கள் அவர் இந்தப்பக்கத்துக்குக் கடந்து வந்ததும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு தந்தையைப்போலவிருந்தார். அவரின் நல்ல இதயத்தை அவர்கள் மதித்தார்கள். அவர்களில் பலபேரை அவர் இன்னும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர்கள் தாங்கள் காலம் முடியுமுன்னே தங்கள் இளவயதில் உடலை நீத்து இங்கே வரவேண்டியிருந்ததை நினைத்து ஆத்திரம் கொண்டு பெரியவர்களை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஐக் (Ike) அவர்களின் கருத்தை மாற்றி, மனிதஇதயத்துள்ளே இறையவனின் ஒரு பகுதியும் அடித்துக்கொண்டுள்ளதென்றும், எம்மால் விளங்கிக்கொள்ள முடியாத விடயங்கெல்லாம் கூட எம்மைப் படைத்த இறைவனுக்கு விளங்குமென்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அத்துடன் ஒரு சிறந்த மரணத்தை விட மோசமான பல அழிவுகள் இங்கேயுள்ளன என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தினார்."

<p> நாஸிசத்தை வெற்றியுடன் எதிர்த்த ஜெனரல் ஐஸனாவரின் மிகப்பெரிய வெற்றியானது இயற்கையாக அடல்ப் ஹிட்லரைப் பற்றிய கேள்விக்கு வித்திட்டது. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: ஹிட்லரின் விஷயத்தை எடுத்துக்கொண்டால், ஒரு பிறவியிலேயே இவ்வளவு தீவினைகளைச் செய்தமையினால் தன்னைத் தூய்மைப்படுத்த இயலாமலிருக்ககூடும். பூவுலகில் பலரின் வாழ்க்கைகளை, நம்பிக்கைகளை, இலட்சியங்களை நாசம் செய்துவிட்டு இங்கே வந்தார். அத்துடன் தன்னளவிலும் ஒரு அருவருத்து ஒதுக்கப்படக்கூடிய பேர்வழியாக இருந்தமையால் அவரின் இறப்பிற்காக ஒருவரும் வருந்தவில்லை. இங்கேயும் அவர் தனது மடத்தனமான செய்கைகளையும் ஆமிக்கொமாண்டோ போன்ற நடைகளையும் அதிகாரத்திலிருப்பது போன்ற அர்த்தமில்லாத பேச்சுகளையும் தொடரமுற்பட்டார். ஆனால் அவரைக் கவனிக்கவோ அன்றி அவருக்கு மரியாதை செலுத்தவோ ஒருவருமில்லை இங்கே. அந்த ஆத்மா இங்கே முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் ஒரு ஆளரவமில்லாத இருண்ட தீவில் தனியே விடப்பட்டிருப்பது போல இருந்தார். அவர் கத்திக்குழறியும் ஒரு பிரயோசனமுமில்லை. இங்கே அப்படிப்பட்ட இழிநிலையான ஆத்மாவுடன் தொடர்பு கொள்ளக்கொடிய அளவுக்குக் கீழ்நிலையில் ஒருவருமில்லை. அதிகாரதோரணையில் நடப்பதாலும் கத்திக்குழறுவதாலும் எதுவும் சாதிக்க முடியாது. கடைசியில் அவர் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதான ஆழமான பள்ளத்தில் விழத்தொடங்கிவிட்டார். கடைசியில் எட்கர் கேசியால் (Edgar Cayce) சொல்லப்பட்ட சனிக்கிரக வாழ்க்கைபோல முழு இருட்டினுள் விழுந்து கொண்டே போவார், அங்கே அவர் தன்வழியே அவர் மனிதகுலத்துக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளின் தீவிரத்துக்கேற்ப பல நூறு வருடங்களோ அல்லது ஆயிரம் வருடங்களோ விடப்படுவார். அவர் மீண்டும் எப்போதாவது விழித்தெழுந்தாலும் அவரது விதி மகிழ்ச்சியாக இருக்கவிடாது. அவர் மற்றையவர்களுக்குத் தானிழைத்த கொடுமைகளில் சிலவற்றுக்கேனும் மாற்றுச் செய்யுமுகமாக இங்கே மிகநீண்ட கடினமான பயிற்சிகளை இந்த நிலையிலே பயின்றாலொழிய அவருக்குக் - குறுகிய காலத்திலேயே முன்னேற்றத்தைத் தரக்கூடியதான - பூவுலகில் பிறப்பதற்கு சந்தர்ப்பம் தரப்படமாட்டாது. காலகாலத்துக்கும் தன்னைத்தானே தனிமைப்படுத்தும் தலையெழுத்தைத் தானே எழுதிக்கொண்டார். இப்போ பூவுலகில் வாழும் ஒருவருக்கும் ஹிட்லரின் விதி தெரியவராது. ஏனெனில் அவரின் தனிமை வாழ்வானது (அவர் தனக்குத்தானே விதித்துக்கொண்ட என்றும் சொல்லலாம்) சந்தேகமின்றி இப்போ பூவுலகிலிருப்பவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய காலத்திலும் பார்க்கக் கூடிய காலம் எடுக்கும்."

அடுத்ததாக போர்ட் அல்பேர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றிப் பின்வருமாறு எழுதினர்: ஒரு மிகப்பெரிய விஞ்ஞானியான அவர் பூவுலகை விட்டு இங்கு வருகையில் மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் வரவேற்கப்பட்டார். அவர் தனது திறமைகளைத் தூய விஞ்ஞான வளர்ச்சிக்கும், மனித இனத்தின் நன்மைக்குமாகத் திறம்பட உபயோகித்தார். தனது திறமைகளை அழிவுக்குப் பயன்படுத்தாமல் நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திய ஒருவரைப் பற்றி நாமிங்கே கதைக்கிறோம். பௌதீக உலகில் மஹா மேதையாகப் போற்றப்பட்ட இவர் உண்மையில் விசேஷ அறிவுகளைப் பயின்று அவற்றைப் பிரயோசனப் படுத்துபவர். அவர் இப்பக்கத்திலே இருக்கும் விஞ்ஞான அறிவுள்ள ஏனைய ஆத்மாக்களின் உதவியுடன் விஞ்ஞான முன்னேற்றத்தில் மெய்நிகர் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியதாக உள்ளார். தொலைபேசி, மின்சாரம், நீராவி இயந்திரம் இவைபோன்ற பருத்தி இயந்திரம் உட்பட அனைத்துமே, (பூவுலகில் சில நல்ல வகையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான) பௌதீக உலகிலும் மேலுலகிலும் இருக்கும் திறமைவாய்ந்தவர்களின் கூட்டு முயற்சியேயாகும். ஐன்ஸ்டைன் ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் சிற்சில நிமிடங்களுக்குச் சிறுதூக்கம் கொள்வதனால், இங்கேயுள்ள சில சக்திகளுடன் இசைவாக்கம் கொள்ள இயலுமாக இருந்ததனால், அவரது நோக்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவரது பரிசோதனைகளின் அடுத்த கட்டங்களை அறியக்கூடியதாக இருந்தது. சிறிய தூக்கங்களின் போது பௌதீக உலகிலிருக்கும் நீங்கள் இங்கேயுள்ள ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்கையில் உங்கள் சக்திகள், நோக்கங்கள், இலட்சியங்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன."

<p><p><p>எல்ஸி செக்ரிஸ்ட் (Elsie Sechrist) பாதிரிமார்கள், விஞ்ஞானிகள், பழமைக்கோட்பாடுகளைச் சார்ந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள், காட்டுமிராண்டித்தனமானவர்கள் போன்ற பல்வேறு வகையானவர்களைப் பற்றிக் கேட்டார். மார்ச் மாதம் இருபத்தியாறாம் திகதி ஆர்தர் பின்வருமாறு எழுதினார். "இன்று நாம் ஒரு பாதிரியாரைப் பற்றிப் பார்ப்போம். இவர் பிலி சண்டே (Billy Sunday) போன்றவர். அதாவது பைபிளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நம்பியவர். நரகத்திலிருக்கும் நெருப்பு, கந்தகக்குளம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் உபதேசிப்பவர். அவர் இங்கே வருகையில், கடவுள் பெரிய அரியாசனத்தில் தேவதேவதைகள் சூழ அமர்ந்திருக்கவில்லை என்பதைக் கண்டதும் அது அவருக்கு முதலாவது அதிர்ச்சி. அதன்பின்னர் அவர் எங்களை மேலும் தாமதிக்காமல் எங்கள் பிழைகளுக்காக வருந்தச்சொல்லி வலியுறுத்தினார். தான் இந்தப் புதிய சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும்வரையும் தற்காலிகமாகத் தான் அங்கே மிகக்குறுகிய இடைவேளைக்குத் தங்கியிருப்பதாகவும், நாமெல்லோரும் கடவுளின் அன்புக்கரங்களை அடைய இயலாத பாவிகளாயிருக்க வேண்டுமெனவும் தீர்மானித்தார். அவரது பிரசங்கங்கள் உண்மையிலேயே சில ஆத்மாக்களை, அதாவது தாம் தமது சிற்றறிவில் உருவாக்கிக்கொண்ட சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருந்த ஆத்மாக்களை ஈர்த்தது உண்மை. அவர்கள் இந்தப்பெரியவர் தங்களை சொர்க்கபூமிக்கு வழிநடத்திச் செல்லப்போகிறாரென நினைத்தார்கள். அவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரது பிரசங்கங்களைச் செவிமடுத்தார்கள். அத்துடன் அவர் மிகக்குறுகிய நேரத்தில் எல்லோரும் யாழ்மீட்டிக்கொண்டிருக்கும் தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் சொர்க்கபுரிக்கு முன்னேறிச்செல்வோமென சொன்னபோது 'ஆமென்' எனக் கூச்சலிட்டார்கள். கடைசியில் தங்களுக்குரிய ஒருவர் ஆலயக்கதவுகளைத் திறந்துவிட வந்துவிட்டதை நன்றியுடன் நினைத்து மீண்டும் 'ஆமென்' எனக்கூச்சலிட்டனர். இந்தப்போதகர் (இப்போதைக்கு அவரை 'பில்லி' என்றே அழைப்போம்) ஆரம்பத்தில் உரத்தகுரலில் இங்கேயுள்ள பழைய ஆத்மாக்களிடம் கடவுளின் அரியாசனத்துக்குப் போகும் வழியைக் காட்டும்படி வலியுறுத்திக் கேட்டார். நாம் அவ்வழியை மாயமாக மறைத்து வைத்திருப்பதாக அவர் உண்மையில் நம்பினார். கடைசியில் பழைய ஆத்மாக்கள் ஒன்றுகூடி பில்லிக்கு, அவர் உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்வதாகவும், சொர்க்கமென்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பதெனவும், அதேபோல ஒவ்வொருவருக்குள்ளும் அவரவர் பிரத்தியேக நரகமிருப்பதாகவும், அவருக்கு ஒன்றையும் மறைக்கவில்லையெனவும் விளங்கப்படுத்தினார். அவருக்குரிய ஆத்மீகமுன்னேற்றத்தில் செல்லத்தொடங்குவது அவரில் தான் தங்கியுள்ளதெனவும், சத்தியபூமியென்ற பொய்யான நம்பிக்கையை மற்றையவர்களுக்குக் கொடுத்து அவர்களைப் பிழையாக வழிகாட்டுவதன்மூலம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறார் எனவும் சொன்னார்கள். உண்மையில் இது தான் சத்தியபூமி. நாம் எமது சிந்தனைகளினாலும், முயற்சிகளினாலும் தான் அதனை உருவாக்குகின்றோம். ஞானவான்கள் பில்லியைப் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். உண்மையில் பில்லி ஒரு நல்ல ஆத்மா. ஆனால் பிழையாக வழிகாட்டப்பட்டவர். அவர்கள் அவரை ஞானாலயத்துக்குச் சென்று பயின்று முழுமுதல் உண்மையை அறியும்படி ஆலோசனை கூறினார்கள். அதாவது நாமனைவருமே கடவுள். இவ்வுண்மையை நாமனைவரும் உணரும்வரை மனிதனுடைய அடிப்படை நிலையிலிருந்து மேலே முன்னேறமுடியாது என்பதுதான் அவ்வுண்மை.

"எம்மைப்போலவே ஏனையோரும் கடவுளின் ஒரு பகுதியே என்பதனை நாம் கிரகித்துக்கொள்கையில் கடவுளின் அந்த ஏனைய பகுதிகளுக்கு உதவுவதன்மூலம் நாம் அனைவரும் ஒன்றாக உயரிய விழிப்பு நிலைகளுக்கு முன்னேறலாமென்ற அரிய செய்திதனை உலகுக்கு எடுத்துரைக்கலாம். அப்போது எமது கண்களை இவ்வளவு காலமும் மறைத்துக்கொண்டிருந்த மாயத்திரை விலகும். அத்துடன் நாம் இங்கே எதற்காக வந்தோமென்பது சரியாகப் புலப்படத் தொடங்கும். ஏனையவர்களுக்கு உதவுவது தான் மந்திரச்சொல்லாகும். இந்தப் பிரபஞ்சரகசியத்தின் சிறிய ஒளிக்கீற்று பில்லிக்குத் துலங்கிடத் தொடங்கியது. கொஞ்சநாளிலேயே அவர் எவ்வாறு நரகத்திலெரியும் நெருப்பையும், கந்தகக்குளத்தையும் பற்றி உபதேசித்தாரோ அதேயளவு உற்சாகத்துடன் இவ்வுண்மையையும் ஏனையவர்களுக்கு உபதேசிக்கத்தொடங்கினார். உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. பிழையான கொள்கைகளினால் அவர் பிழையான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தவர். இப்போ அதேயளவு நாவன்மையுடன் உண்மையைப் பரப்பி வருகிறார். கூடிய சீக்கிரத்தில் அவர் தனது முந்தைய பிறவியினைப் பற்றி ஆராயத்தொடங்குவார். தனது பழமையான இறுக்கமான சமயக்கோட்பாடுகளிலும் பார்க்கக் குறைவான நம்பிக்கை கொண்டோரின் நம்பக்கூடியதான வாதங்களுக்குச் செவிசாய்த்துத் தன் கண்களைத் திறக்காததன் மூலம் எங்கே எப்படி மற்றையவர்களுக்குப் பிழையான முறையில் வழிகாட்டினார் என்பதனைக் கண்டு கொள்வார். அவர் தனது பிழைகளைத் திருத்தவிரும்பினார். அதேபோல நம்பிக்கை கொண்ட பூவுலகில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் சமயவாதிகளின் மனதில் நன்கு பண்பட்ட மண்ணில் போடப்படும் விதைபோல ஞானத்தைப் பயிர்செய்வதன் மூலம் இறுக்கமான நம்பிக்கை கொண்டோரிடம் உண்மையைப் பரப்ப முயல்கிறார். அடிப்படையில் அவர் ஒரு நல்ல ஆத்மாவானதால், பூவுலகில் இருக்கையிலேயே இவ்வுண்மைகளை அறிந்திருந்தும் ஒரு முயற்சியுமின்றி இவரைப்போல ஏனையோருக்கு உதவி அவர்களையும் முன்னேற்ற முயலாமலிருப்பவர்களிலும் பார்க்க இங்கே அவர் வெகு விரைவாக முன்னேறுவார்."

மறுநாட்காலை போர்ட் பின்வருமாறு எழுதினார்: இன்று ஒரு கைக்குழந்தையின் கதைக்கு வருவோம். அக்குழந்தை பிறந்து கொஞ்சநேரம் உயிர்வாழ்வதற்காகப் போராடியபின்னர் அது பின்வாங்கி ஆத்மநிலைக்கே மீண்டும் வந்தது. நிச்சயமாக அக்குழந்தை உயிர்வாழ விரும்பியிருக்கும். தனது பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவாவது உதவியிருக்கும். பின் இந்த மாறுதலுக்குக் காரணம் தானென்ன? சிலவேளைகளில் அக்குழந்தையின் உடல் குறைபாடுகளால் பலவீனமுற்று உயிர்வாழ்வற்குரிய தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் கூடுதலாக இப்படியான சந்தர்ப்பங்களில் ஆத்மாவானது பின்வாங்குதல் தான் சரியான காரணியாயிருக்கும். உதாரணத்துக்கு ஒரு நல்ல குடும்பத்தில் தவமிருந்து பெற்ற குழந்தையாகப் பிறந்த ஒரு குழந்தை சில நாட்களோ, வாரங்களோ, மாதங்களோ வாழ்ந்து பின் உயிர் நீத்தது என எடுத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட நிச்சயமாகப் பின்வாங்குகின்ற இந்த முடிவில் அந்தக்குழந்தையின் பங்கும் ஏதோ இருந்திருக்க வேண்டும். சிலவேளைகளில் உடலுக்குள் செல்லுவதற்கு ஆத்மா தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது தனது ஆத்மீகவளர்ச்சியைத் தடைசெய்து கொண்டிருக்கும் கர்மவினையைப் போக்குவதற்குரிய சரியான ஊடகம் அதுவல்லவென அந்த ஆத்மா தீர்மானித்திருக்கலாம். எது எப்படியென்றாலும் அப்பூவுலகக் குழந்தையின் உயிர் அது சற்றுமுன்னே எங்கிருந்து புறப்பட்டதோ அந்த இடத்திற்கே உடனே வந்துவிட்டது. சிலவேளைகளில் சிறிது நேரம் உறங்கவேண்டிவரும். ஆனால் சாதாரணமாக ஆத்மவுலகை விட்டு இவ்வளவு குறுகிய நேரத்திற்கு மட்டுமே வெளியேறியிருந்தால் மீண்டும் வருகையில் சிறிதளவே அனுசரிக்கவேண்டிவரும். மீண்டுமொருமுறை அந்த ஆத்மாவானது நடந்தவைகளைச் சீர்தூக்கிப்பார்த்து என்ன நடந்தது சற்றுமுன் என்பதனை ஆராய்ந்து தனது கர்மவினைகளைக் களைவதற்காகப் பிறவியெடுத்த அந்தச் சந்தர்ப்பத்தைத் தான் ஏன் நழுவவிட்டேன் என ஆராய்ந்துணரும்.

"அக்குழந்தையானது உண்மையில் குழந்தையல்ல, அதாவது ஆத்மவுலகைப் பொறுத்தவரையிலாவது அது குழந்தையல்ல. ஏனென்றால் எல்லா ஆத்மாக்களும் ஆரம்பத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கின்றன. சில ஆத்மாக்கள் இங்கேயும் பூவுலகிலும் அவர்கள் பெற்ற அனுபவங்களினால் பரிணாமவளர்ச்சியடைந்து, ஞானவான்களாகவும், அவர்களின் இருப்புக் கூடுதலாக அர்த்தமுள்ளதாகவும் இருந்தாலும், இங்கே ஒருவரும் குழந்தையல்ல. இன்று உதாரணமாகச் சொல்லப்பட்ட கைக்குழந்தையானது சற்றே போராடிப்பார்த்தபின் மீண்டும் எம்மிடம் வந்துசேர்ந்தது. அக்குழந்தையின் பௌதீக உடலின் இருதயமானது பாதிக்கப்பட்டிருந்ததனால் அதனால் உயிர்பிழைக்க முடியவில்லை. இங்கு மீண்டும் வந்தபோது முதலில் அந்த ஆத்மாவானது ஏமாற்றமடைந்த நிலையிற் காணப்பட்டது. குழந்தைப்பருவமானது அவ்வளவு சிறப்பான நிலையல்லவென்றாலும், தனது பெற்றாரை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக் கொண்டதனாலும், தனது சூழலானது தனது சில கர்மவினைகளைப் போக்குவதற்கு உகந்தசூழலென அவ்வாத்மா நினைத்ததாலும் அது சற்று ஏமாற்றமடைந்தது. பௌதீக உடற்கோளாறினால் இந்தச் சந்தர்ப்பமானது அவ்வாத்மாவுக்கு மறுக்கப்பட்டது கூட உண்மையில் ஒரு கர்மவினைப்பயனாகும். அவ்வாத்மா தனது முந்தைய ஒரு பிறவிதனில் ஒரு பிறந்தகுழந்தையின் தேவைகளைப் புறக்கணித்ததன் மூலம் அக்குழந்தையின் இறப்புக்குத் தான் காரணமாயிருந்ததை உணர்ந்து கொண்டது. எனவே நிறைவாகத் தோன்றிய இப்பிறவியை முழுதாக வாழ்ந்து முடிப்பதற்கு அவ்வாத்மா மிகவிரும்பியிருந்தாலும், அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து பின் வாங்கியதன்மூலம் தனது கர்மவினைக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. அக்குறிப்பிட்ட குழந்தையானது இங்கே வந்தபின் சற்றே தன்னை மாற்றியமைத்துக்கொண்டு மீண்டும் ஞானாலயத்தில் இணைந்து இறைவனுடன் இரண்டறக் கலத்தலாகிய இலட்சியத்தையடையும் பாதையில் செல்வதைப்பற்றிப் பயில ஆயத்தமாகிறது. அவர் சற்று நேரத்துக்கே இங்கிருந்து போயிருந்ததால், சிறிது மீள்வழிகாட்டலே போதுமானது. இதுவே அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பூவுலகில் குழந்தையாய் இருந்திருந்தால் இங்கே அவருக்கு உளவியல் ரீதியாக உதவுவதற்கு ஆத்மாக்களிருக்கின்றன. அவர்கள் இவரைக் குழந்தைப்பருவத்து வியாதியிலிருந்து விடுவித்து வயது வந்தவராய் மாற்றிவிடுவார்கள்.

அடுத்ததாக ஆர்தர் போர்ட் அவர்கள் சற்றே வளர்ந்த குழந்தையொன்றை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதினார்: "காக்கை வலிப்பு நோயுள்ள ஒரு குழந்தையின் விஷயத்துக்கு வருவோம். அக்குழந்தையைச் சூழ்ந்துள்ள அவனில் அன்பானவர்களெல்லாம் அக்குழந்தைக்கு வலிப்பு வரும்போது வேதனைப்படுவார்கள். அவனுக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவு வலிப்பு வரும். அந்த நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களில் அவன் சாதாரண குழந்தையாகவே இருப்பான். வலிப்பு

Link to comment
Share on other sites