Jump to content

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பியர்!உந்த வசனத்துக்கு ஒழுங்கான பொழிப்புரை தந்து எனக்கு விளங்கப்படுத்தோணும்.. :(

வெட்டுவிழாது என்பதற்கு நீங்கள் கரண்டியோ???

இல்லை சும்மா எதுக்கு சிறி நேரத்தை செலவளிப்பான். அதுக்கு பதிலா எங்காவது இறைக்கலாமே என்ற ஆதங்கம்தான்.... :lol::icon_idea:

உது சிறியற்றை ஆஸ்த்தான வசனம் :lol: :lol:

இதுகளை ரொம்ப உன்னிப்பாத்தான் கவனிக்கிறீர்கள் போல....

:lol::D :D

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகல்லை பார்த்துகதை இரவிலை அதுவும் கதையாதை. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கமே என்றாலும் - அது

என் ஊரைப்போலவருமா? :wub:

Link to comment
Share on other sites

இருந்த இடத்து வேலையென்றால்

எங்க வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு போ...

மழைக்கால இருட்டென்றாலும்

மந்தி கொப்பிழக்கப் பாயாது

உடையார் வீட்டுக்குப்

பொல்லுப் போன மாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மேய்ச்சல் என்றாலும் கோர்னமேந்து (government ) வேலை பார்க்கவேணும் :D

Link to comment
Share on other sites

சிறித்தம்பியர்!உந்த வசனத்துக்கு ஒழுங்கான பொழிப்புரை தந்து எனக்கு விளங்கப்படுத்தோணும்.. :(

சிலநேரம் கிணறு பாசிபிடிச்சுப் போயிடும் எண்டு சொல்லியிருப்பார் குசா .

பகல்லை பார்த்துகதை இரவிலை அதுவும் கதையாதை. :icon_idea:

இரவிலை கதைக்கமல் என்ன செய்யிறது குசா :lol::lol: .

அல்லாவுக்கு

பகிடியும் தெரியல

வெற்றியு ம் தெரியல

தனக்கெடாச்சிங்களம்

தன் பிரடிக்குச்சேதம்

தனக்கடாச் சிங்களம்

தன் பிரடிக்குச்சேதம்

Link to comment
Share on other sites

இருந்த இடத்து வேலையென்றால்

எங்க வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு போ...

மழைக்கால இருட்டென்றாலும்

மந்தி கொப்பிழக்கப் பாயாது :icon_idea:

உடையார் வீட்டுக்குப்

பொல்லுப் போன மாதிரி :lol:

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் சொல்லடைக்கு :):):)

Link to comment
Share on other sites

தெமியும் ( பியர் ) பெட்டையும் முதல் திறமாயிருக்குமாம் , சத்தி எடுத்தால் மூக்கை சுழிப்பினமாம்

Link to comment
Share on other sites

காக்காய்க்குப் - - க்குண்டானால்

பறக்கேக்கை தெரியுமாம்.

மாடு சாகுதாம். கன்றுக்குப்

புல்லுத் தேடிவைச்சிட்டா சாகுது.

சங்குப் பூச்சிபோல உலாவிறன்.

Link to comment
Share on other sites

பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை

குறையச் சொல்லி , நிறைய அள.

Link to comment
Share on other sites

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்குமாம் .

அரைக்காசை ஆயிரம் பொன்னாக்கிறவளும் பெண்சாதிதான் , ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்கிறவளும் பெண்சாதிதான் .

Link to comment
Share on other sites

ஒரு நாளும் சிரிக்காதவன் நல்ல நாளில சிரிச்சானாம் , நல்ல நாளும் வேறு நாளா போட்டுதாம் .

ஒரு நாளுமில்லாமல் நல்ல நாளுக்குப் போனால் ,நல்ல நாளும் வேறை நாளாச்சுதாம் .

Link to comment
Share on other sites

பூ மலர்ந்து கெட்டுதாம், வாய் விரிஞ்சு கெட்டடுதாம் .

எரியிற விட்டிலே பிடுங்கினது லாபம் .

Link to comment
Share on other sites

என்னபா கோ சொல்லவாறீர்???

கருத்துக்கள விதி இல 4 / விதி 2 க்கு அமைய கேள்விகளைக் கேட்டால் விளக்கம் தரப்படும் . நன்றி வணக்கம் .

http://www.yarl.com/...showtopic=22182

Link to comment
Share on other sites

கல்லிருக்கிற நேரம் நாயைக் கணாலை , நாய் இருக்கிற நேரம் கல்லைக் காணேலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

Link to comment
Share on other sites

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

இந்துசமுத்திரத்தின்ரை முத்து எண்டு எல்லாரும் எங்கடை மாங்காய் தீவைச் சொன்னவை :icon_mrgreen: . அதுக்குள்ளை இப்பிடியும் எங்கடையாக்கள் சொல்லியிருக்கினம் குமாரசாமியர் :(^_^ . நன்றி சொல்லுறன் . எதுக்கும் இப்போதைக்கு கள்ளுக்கொட்டில் பக்கம் போடாதையுங்கோ :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற் கோணல் முற்றும் கோணல் .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அட்டட்டாரே,மட்டக்களப்பாரே" என்று சொல்லுவார்கள் ஆனால் என்னத்திற்காக சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது...எதுவும் பிழையான வார்த்தைப் பிர‌யோகமாக இருந்தால் மன்னிக்கவும்.

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது[இது பழமொழி இல்லைத் தானே!

Link to comment
Share on other sites

கால்காசுப் பூனை

முக்கால் காசுத் தயிரைக் குடிச்சுதாம்.

மடியில பூனையைக் கட்டிக்கொண்டு

சகுனம் பார்த்தானாம்..

காணாதவன் பெண்டாட்டியை

காடுமேடெல்லாம் கொண்டு திரிஞ்சானாம்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை

நேற்று வந்தவன் கொண்டுபோனானாம்.

போக்கத்தவன் பெண்டாட்டி

ஊருக்கெல்லம் வைப்பாட்டி

Link to comment
Share on other sites

முதற் கோணல் முற்றும் கோணல் .............

மிக்க நன்றிகள் அக்கா :) .

"அட்டட்டாரே,மட்டக்களப்பாரே" என்று சொல்லுவார்கள் ஆனால் என்னத்திற்காக சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது...எதுவும் பிழையான வார்த்தைப் பிர‌யோகமாக இருந்தால் மன்னிக்கவும்.

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது[இது பழமொழி இல்லைத் தானே! ( சொலவடை ரதியக்கா ) .

ரதியக்காவுக்கு ஒரு ஓ........ , சொல்லடை சொன்னதிற்கு :):):) .

பொம்பிளை சிரிச்சால் போச்சு பொயிலை விரிச்சால் போச்சு.

மிக்க நன்றிகள் நுணாவிலான் உங்கள் சொல்லடைக்கு :) .

கடும் சிரிப்பு கண்ணை கெடுக்கும்

மிக்க நன்றிகள் வாதவூரான் உங்கள் சொல்லடைக்கு :) .

கால்காசுப் பூனை

முக்கால் காசுத் தயிரைக் குடிச்சுதாம்.

மடியில பூனையைக் கட்டிக்கொண்டு

சகுனம் பார்த்தானாம்..

காணாதவன் பெண்டாட்டியை

காடுமேடெல்லாம் கொண்டு திரிஞ்சானாம்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை

நேற்று வந்தவன் கொண்டுபோனானாம்.

போக்கத்தவன் பெண்டாட்டி

ஊருக்கெல்லம் வைப்பாட்டி

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் சொல்லடைகளுக்கு :) .

Link to comment
Share on other sites

காட்டுப் பூனைகுச் சிவராத்ரி விரதமா ?

கனக்க மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.