Jump to content

சொல்லடை ( சொலவடை )

Recommended Posts

திண்ணையில இருந்தவனுக்கு திடீர் என்று வந்ததாம் கலியாணம் .

விளக்கம் :

ஒருவருடைய வாழ்வில் முயற்சிகள் இல்லாமல் வரும் அதிர்ஸ்டங்களைச் சொல்லக் சொல்லப்படும்

நரி குசு விட்டதாம் கடல் கடலங்கிப்போச்சுதாம் .

விளக்கம் :

ஒருசிறியவிடையத்தை பாரதூரமாக பெரிதாக்கிகாட்டுவதை சொல்ல சொல்லப்படும் .

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சொலவடைகளும் ரசிக்கும்படியாகவே இருக்கு. ஏதாவது .Pdf இணைப்பு இருந்தால் தாருங்கள், பின்னாளில் அத்தனை சொலவடைகளையும் பிரதியெடுத்து வரிசையாக படித்து ரசிக்க இயலும்.

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தென்னை மரத்தில ஏன்ரா ஏறினாய் என்றால் ,கண்டுக்குட்டிக்கு புல்லு புடுங்க எண்டானாம் . தென்ன மரத்திலை எங்கை புல்லு எண்டால் ,j அதுதான் கீழை இறங்கிறன் எண்டானாம் .

விளக்கம் :

அத்தியாவசிமான விடையங்களில் தேவையற்ற நேரவிரையங்களிச் செய்வதைக்குறிக்கும் .

தொடாத தொழிலை தொட்டவனும் கெட்டானாம் தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டானாம் .

விளக்கம் :

எதுவித அனுபவமும் இல்லாத வேலையும் , முயற்சியும் இல்லாமல் பேருக்கு செய்கின்ற வேலையும் , தோல்வியிலேயே முடிவதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

  • 1 year later...

" சொலவடையை " இன்றைய தேர்வாக தெரிவு செய்த நியானிக்கு மிக்க நன்றிகள் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

அம்பாந்தோட்டையிலிருந்த புங்குடு தீவுச் சுருட்டுக் கடைக்கு ஒருவர் புகையிலை சப்ளை பண்ணினார்.  ஆனால் நிலுவையைக் கலெக்ட் பண்ண முடியவில்லை. அலையாய் அலைந்தார்.  கடைசியில் அலுத்துப்போய் ஒரு தடவை பக்கத்தில் உள்ள கதிர்காமக்கந்தனிடம் சென்று வணங்கிவிட்டு வரப் போனார். மாணிக்க கங்கையில் நீராடிவிட்டுக் கரையேறியபோது போட்டிருந்த உடுப்பைக் காணவில்லை.  கோவணத்தோடு கோவிலுக்குச் சென்றவர் அங்கே கோவணத்தோடு நிற்கும் முருகனின் சிலையைக் கண்டார்.  பரவசப்பட்டவர் "முருகா முருகா நீயும் புங்குடு தீவாருக்குப் போயிலை வித்தாயா?" என்று கேட்டுச் சலித்துக் கொண்டாராம்.  அதுதான் புங்குடு தீவாருக்குப் போயிலை விற்ற கதை.

இவருக்கு

கோவணமும் இல்லாது போகப்போகுது.................. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலிக்கே  அல்வாவா , புங்குடுதீவில் இல்லாத பொயிலையா ...!  லொஜிக் எங்கோ முட்டுதே...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.