Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

 • Replies 231
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம். :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

Link to comment
Share on other sites

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

உண்மை தமிழ் சிறி . இலகுவாக விளக்கியதிற்கு மிக்க நன்றிகள் :) .

"கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்."

இது சரியா கோமகன்?

மிகவும் சரி . தம்பி உடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கு ஒப்பானது . மேலும் , ஒன்றுடன் நில்லாது மேலும் தொடர வாழ்த்துக்கள் கல்கி :) .

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம்.

அதே ................. :lol: .

யங்கி போடாத, சீலைக்காரி... கட்டினாளாம் பாவாடை.

இதுக்கு அர்த்தம் சொன்னால் நாங்களும் அறியலாம் தானே தமிழ் சிறி :lol: .

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!!

எண்டாலும் என்ரை கூட்டாளியை இப்புடி கடுப்பேத்திறது எனக்குத் துண்டாய்ப் பிடிக்கேல :lol: .

Link to comment
Share on other sites

இந்த சொல்லடைகள் தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம் .

ஆனான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ , சொத்தியாடு ஒண்டு *********** க்கு அழுதீச்சுதாம் .

அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரம் ஓமக்குண்டத்தில . ( முன்னைய காலத்தில் வேதவிற்பனர்களது அறிவு , திறமை யாவும் மக்களுக்கு நன்மை பயக்காது , அரசர்களது நன்மை கருதி யாகசாலையில் சிலவழிந்ததைக் குறிக்கின்றது ) .

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

தமிழின் பால் கொண்ட அன்பால் திரிவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையிலும் ஓரு தொகுப்பை அல்லது வடிவத்தை எழுதும்போது அல்லது வாசிக்கும்போது அது பற்றிய தெளிவும் அதை மற்ற சந்ததிக்கு கடத்தும்போது கலப்பில்லாமலும் இருக்கணும் என்கின்ற ஆதங்கத்திலுமே

மீண்டும் மீண்டும் இங்கு கேள்வி எழுப்பினேன்.

இங்கு பதியப்பட்ட பல கருத்துக்களும் எல்லோரும் குழம்பிப்போயுள்ளதையே குறித்து நிற்கின்றன.

பள்ளியில் (மகாவித்தியாலயம்) படித்ததைவிட கூட வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டோம். எனவே எது எது என பிரித்துப்பார்க்கும் சக்தி குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்தக்கேள்வி எழுகிறது.

Link to comment
Share on other sites

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :( :o :lol: :lol: :lol:)

Link to comment
Share on other sites

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :lol:)

ஏன் ராசா................... :o இளனி குடிச்சது ஆரோ கோம்பை சூப்பினது ஆரோ :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

:lol::D:icon_idea: .

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம். :lol::D:icon_idea: .

மிக்க நன்றிகள் சாத்திரி :) .

Link to comment
Share on other sites

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

அருமை . புதுமையான பார்வை . பதிவை நேராக்கிய சாத்திரிக்கு மிக்க நன்றிகள் :):) .

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

அருமை சஜீவன் . கல்லடி வேலரைப்பற்ரி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன் :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

வந்த புதிசில வண்ணான் வேட்டியை கரைகட்டி வெளுப்பானாம் .

இவை எனது புலத்து அனுபவங்களால் வந்த சொல்லடைகள் :

கபே குடிக்கிறவனுக்கு ஒரு யூறோ . கபே போட்டவனுக்கு முதலாளி குடுத்தது ஐம்பது யூறோவாம் .

இறைச்சி வாட்டினவன் வெக்கையில வேக , அதை ருசி பாத்தவன் பேர் செப் ஆம் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

Link to comment
Share on other sites

நான் அடிச்சாத் தாங்க மாட்டாய் நாலு மாசம் தூங்க மாட்டாய்..

இது சொலவடையோ சினிமாவடையோ தெரியேல்ல...நம்ம விசய் அண்ணண் ஒரு படத்தில சொன்னாங்ணா... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

உண்ணாச்சொத்து மண்ணாகும். உடாப்புடவை வண்டூதும்.

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

Link to comment
Share on other sites

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

ஆ ..........................வந்திட்டுது தொடருங்கோ :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

வருத்தம் சுகம் ஆனால் ஆள் தப்பாது? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி துரிதமாக நகர வேண்டும். அணிசேரா என்றபோதும் தீர்க்கமான பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதுபோன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம். உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (a)   https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-விடுத்துள்ள-சுதந்திர-தின-செய்தி/175-311834  
  • Chinese Spy Balloon in US: அமெரிக்க வானில் தென்பட்ட வெள்ளை பலூன் சீனா அனுப்பியதா?  
  • அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி! அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது இறையாண்மையை மீறும் செயல் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். நீண்ட திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக இவ்வாறு நடந்துக்கொள்வது இன்னமும் பொறுப்பற்றது என அவர் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனாவுக்கான பயணத்தை உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி திடீரென ரத்து செய்துள்ளார். இது பல ஆண்டுகளாக அங்கு நடைபெறும் முதல் உயர்மட்ட அமெரிக்க-சீனா சந்திப்பாக இருந்திருக்கும். ஆனால், இது அமெரிக்க வான்வெளியில் தவறாக வீசப்பட்ட வானிலை விமானம் என்று சீனா முன்னதாக வருத்தம் தெரிவித்தது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) பென்டகன் இரண்டாவது சீன உளவு பலூன் தென்பட்டதனை உறுதிசெய்தது. இந்த முறை இது லத்தீன் அமெரிக்கா வானில் பறந்ததாக அது கூறியது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இதுகுறித்து கூறுகையில், ‘லத்தீன் அமெரிக்காவைக் கடக்கும் பலூன் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இது மற்றொரு சீன கண்காணிப்பு பலூன் என்று நாங்கள் இப்போது மதிப்பிடுகிறோம்’ என கூறினார். பலூன் இருக்கும் இடம் பற்றிய கூடுதல் விபரங்களை அவர் வழங்கவில்லை. வர்த்தக போர், பாதுகாப்பு, தாய்வான் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் பெப்ரவரி 5 முதல் 6 வரை பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்தார். ஆனால், அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூனை அவதானித்த பிறகு இந்த பயணம் இரத்துசெய்யப்பட்டது.   https://athavannews.com/2023/1323022  
  • உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி! உக்ரைனுக்கு தாக்குதல் வரம்பை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் சமீபத்திய 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ தொகுப்பில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 பெப்ரவரி முதல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியின் மொத்தத் தொகையை 29.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் கொண்டுவருகிறது 150 கிமீ (93 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இந்த தொகுப்பில் அடங்கும். ஆனால், இணைக்கப்பட்ட கிரிமியாவின் சில பகுதிகளைத் தாக்குவதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்ற ஊகத்தின் பேரில் அதிகாரிகள் பெற மறுத்துவிட்டனர். ‘நடவடிக்கைகள் குறித்த உக்ரைனிய திட்டங்களைப் பொறுத்தவரை, அது அவர்களின் முடிவு’ என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பாட் ரைடர் ஊடகங்களிடம் கூறினார். ‘இது மீண்டும், தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் இறையாண்மை பிரதேசம், ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறவும் உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் பலமுறை உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதை நிராகரித்துள்ளன.போர் விமானங்கள் போன்றவையை கொண்டு உக்ரைன் ரஷ்யாவையே தாக்கும் என்ற அச்சத்தால் இது தவிர்க்கப்பட்டது.   https://athavannews.com/2023/1323019
  • வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார்.   https://athavannews.com/2023/1322954  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.