Jump to content

ஏன் ஆண்கள் மனைவிமாருக்கு அஞ்சுகிறார்கள்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்கி... கலியாணம் கட்டினால், மனைவிக்கு மட்டுமல்ல...

மாமாவுக்கும், மச்சான்மாருக்கும் பயப்பிட்டே... ஆகணும் :D .

(இது, சொந்த அனுபவம் அல்ல. பொதுவாய்ச் சொன்னேன்) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி வினவலுக்கு வலைப்பூவில் பதிவான பதில் ஒன்று.... அது குறிப்பிடத்தக்க அளவு உண்மையினைப் பிரதிபலிக்கவும் செய்கிறது.. என்று நினைக்கிறேன். :)

ஆண்கள் மனைவிமாருக்கு பயப்படுவதற்குக் காரணம், அவர்கள் (பெண்கள்) கொடுக்கும் mental torture தான்..!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி வினவலுக்கு வலைப்பூவில் பதிவான பதில் ஒன்று.... அது குறிப்பிடத்தக்க அளவு உண்மையினைப் பிரதிபலிக்கவும் செய்கிறது.. என்று நினைக்கிறேன்.

நீங்கள் நினைக்கிறதை, முடிவாக.... ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம், இங்கு யாருக்கும் இல்லை.

கலியாணாம் கட்டி விட்டு, சொந்த அனுபவத்தை கூறுங்கள். ஏற்றுக் கொள்கிறோம்.

உங்கள் கதையை... பார்த்தால், கண் இல்லாதவன் யானையை... தடவிப் பார்த்த மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைக்கிறதை, முடிவாக.... ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம், இங்கு யாருக்கும் இல்லை.

கலியாணாம் கட்டி விட்டு, சொந்த அனுபவத்தை கூறுங்கள். ஏற்றுக் கொள்கிறோம்.

உங்கள் கதையை... பார்த்தால், கண் இல்லாதவன் யானையை... தடவிப் பார்த்த மாதிரி இருக்கு.

அந்த கருத்துக்கு என் நிலைப்பாட்டை தான் எழுதி இருக்கிறேன். யாரிடமும் அதனையே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. எனக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்றே தெரிகிறது. அதைத்தான் சிறீ அண்ணா குறிப்பிட்டிருக்கிறேன்.

குற்றவாளிகள் என்று ஒப்புவிக்க.. பெளதீக.. மற்றும்.. மன ரீதியான அழுத்தங்கள் வழங்கப்படுவது போன்று.. வீட்டுக்குள்.. எதிர்கொள்ளப்படும் மன ரீதியான சித்திரவதைகளில் இருந்து விடுபட.. மனைவி சொல்வதற்கு தலையாட்டும் நிலைக்கு ஆண்கள் தள்ளுப்படக் கூடும். அதற்கு.. விட்டுக்கொடுப்பு என்ற நாமம் இட்டு ஆண்கள் தங்கள் கெளரவத்தை அல்லது நிலையை.. வெளியில் காக்க முனையக் கூடும்.

நாம் இந்த விடயத்தை மனதத்துவ ரீதியிலும் அணுகிப் பார்ப்பது அவசியம். எமக்கு பிடிக்கிறதோ இல்லையோ.. சில விடயங்களை ஆழ்ந்து அலச வேண்டியது அவசியமும் கூட..!

Psychology of Men & Masculinity 2001, Vol. 2, No. 2, p. 75-85

Psychological Effects of Partner Abuse Against Men: A Neglected Research Area

Denise A. Hines and Kathleen Malley-Morrison

Boston University

Pakistani Lawmaker Jam Tamachi Unar: Women 'Mentally Torture' Men

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

இதனை மீறி... சிலர் செய்யும், தவறுகளை.... எல்லாரும் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடாது நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

இதனை மீறி... சிலர் செய்யும், தவறுகளை.... எல்லாரும் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடாது நெடுக்ஸ்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்லிச் சொல்லியே.. பெண்களின் சித்திரவதைகளை தாங்கிக் கொள்ள ஆண்களும்.. ஆண்களின் சித்திரவதைகளைப் பெண்களும் தாங்கிக் கொள்ள தூண்டப்படுகின்றனர். நல்லதொரு பல்கலைக்கழகம் என்பது.. இயல்பான புரிந்துணர்வோடு வரும் குடும்ப உறவின் பாலானதாக இருக்க வேண்டுமே தவிர.. பெளதீக.. மனவியல் அழுத்தங்கள் மூலமல்ல..!

பல பெண்கள்.. கண்ணீரையும்.. கோபத்தையும்.. உணவையும்.. ஆண் - பெண் உடல் சார்ந்த உறவையும்.. பிரிவையும்.. வார்த்தைகளையும்... குழந்தைகளையும்.. சொத்துக்களையும்.. ஆயுதமாக்கி ஆண்களை மனதளவில் சித்திரவதை செய்து.. அவர்களை தங்களுக்கு ஏற்ற வகைக்கு மாற்றி நடந்து கொள்ளச் செய்கின்றனர். இதன் மூலம் ஈட்டப்படுவது.. அல்லது நடத்தப்படுவது அல்ல.. நல்லதொரு குடும்பம்..!

உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.. மேற்குறிப்பிட்ட எதனையும் நீங்கள் உங்கள் இல்லத்தில் எப்போதுமே சந்திக்கவில்லை என்று. அப்போது நான் ஏற்றுக் கொள்கிறேன்.. இது ஓரிருவர் சம்பந்தட்டதுதான் என்று..! :):icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

பெண் வெட்டுக்கிளி ஆணின் தலையையே புடுங்கிப் போடும்..! :icon_mrgreen: இதுக்கு எங்கட பெண்டுகள் பரவாயில்லை..! :wub::lol:

Link to comment
Share on other sites

கொள்கையளவில் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றுசேர்வது, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாவது கடினம். ஏனெனில் ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே இருவேறு படைப்புக்கள்.

அதேவேளை விட்டுக்கொடுப்புடன் வாழுவது, குறிப்பாக பிள்ளைகள் நல்வாழ்வுக்காக, நடைமுறையில் சாத்தியமாகின்றது. அதுவும் மேற்குலக வாழ்க்கையில் கடினமாகின்றது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு தேவையானது. இதில் அவர் பயப்படுகின்றார் இவர் பயப்படுகின்றார் என்பதல்ல முக்கியம்.

akootha உங்கள் கொள்கையோடு ஒத்துவரவில்லைய? திருமனம் அகிவிட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்தி: சக்தியில்லையேல், சிவனில்லை!

சிவன்: சிவனில்லையேல், சக்தியில்லை!

சக்தி: சக்தி தான் பெரிது{

சிவன்: சிவன்தான் பெரிது!

சிவன் கோபத்தில் சக்தியை எரிக்கிறார்!

விளைவு 'உருத்திர தாண்டவம்!

சில நாட்கள், சிவன் காய்கிறார்!

முடிவு: சக்தியை மீண்டும், உயிர்த்தெழ வைக்கின்றார்!

படிப்பினை: சக்தி, உனது முக்கியத்தை உலகுக்கு (குறிப்பாக, நெடுக்குக்கு) உணர்த்தவே, நாம் இந்த நாடகம் ஆடினோம்! :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புக் கோளம் (black holes) முதல் குவாண்டம் இயந்திரவியல்/பெளதீகவியல் (quantum mechanics/physics) போன்ற எல்லாவற்றையும் நன்கு அறிந்த புகழ் பூத்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விஞ்ஞானி Stephen Hawking கூட பெண்கள் ஒரு புரியாத புதிர் ("Women. They are a complete mystery.") என்று சொல்லியுள்ளார். தெரியாத கடவுளுக்கும், பிசாசுகளுக்கும் அஞ்சும் மனிதன் புரியாத புதிரான பெண்களுக்கும் அஞ்சத்தானே வேண்டும்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எதனையும் கையாளும் முறையிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

தாக்கத்திற்கு மறு தாக்கமுண்டு.

Link to comment
Share on other sites

இந்த பெண்களே இப்படித்தான்...!!!

பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே செய்யும்...!

* உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய் என்று.

* சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.

* அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.

=> இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய்விடுகிறாள்...!!

இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்

ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது.

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாக போய் சேரும்.

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.

சூப்பர் பவர்

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !!

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள்.

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!

படங்கள்- நன்றி கூகுள்

http://www.yarl.com/...showtopic=93879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இல்லாத திவொன்று வேனும்.அங்கு உன்னோடு நான் மட்டும் வேனும்.என்று ஒரு பாடல் உள்ளது.அப்படி வாழக்கிடைத்தால் வாழ்வில் வசந்தம் மட்டுமே :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இல்லாத திவொன்று வேனும்.அங்கு உன்னோடு நான் மட்டும் வேனும்.என்று ஒரு பாடல் உள்ளது.அப்படி வாழக்கிடைத்தால் வாழ்வில் வசந்தம் மட்டுமே :lol: :lol:

அடி, கிடி, விழுகிற நேரத்தில் பக்கத்தில ஆக்கள் இருக்கிறது நல்லது!

அல்லது ஓடி ஒழிக்க, ஒரு இடமாவது வேண்டும்! :D

Link to comment
Share on other sites

இதில ஒரு பெண் சகோதரங்களும் பதில் சொல்லவில்லையே?

மேலதிகமா ஒரு தொடுப்பு,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.