Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2012 - 18:01 ஜிஎம்டி

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி

"ஜெனீவா புறக்கணிப்பு ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு":சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தை த.தே.கூ புறக்கணிக்கும் என்பது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவென்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120226_tnaongenevaboycott.shtml

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

யூதர்கள் மத்தியில் இல்லாத கருத்துப் பிளவா? அவர்களது பாராளுமன்றத்தைப் பார்த்தால், தமிழக சட்ட சபை எவ்வளவோ மேல், ஆனால் தமது நாடு இனம் என்று வரும் போது ஒன்றையும் விட்டுக் கொடுக்க மாட்டர்கள், சம்பந்தன், பிரேமச்சந்திரனுக்கிடைலான பிரச்சனை எவ்வாறு இலக்கை அடையலாம் என்று இருக்கும் வரை அது நல்ல விடயம் தான்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

மிகவும் சரியான கருத்துக்கள்.

இங்கே வெல்லவேண்டியது ஒட்டு மொத்த தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள். அதற்கு வரும் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி இலக்கை நோக்கி நகரும் பக்குவமும் பொறுமையும் தேவை.

Link to post
Share on other sites

இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. விரைந்து ஒருசிலர் அங்கு சென்று நிலைமைகளை அவதானிக்கலாம். அதே நேரம் சர்வதேச பிரதிநிதிகளை, சர்வதேச ஊடகவியலாளர்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பதும், சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணங்களை கையளிப்பதும் மிக முக்கியமான நடவடிக்கைகள்.

அதேவேளை, ந. க. தா. ஈ. அரச பிரதிநிதிகளும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சியினரும் தமக்குள்ள பெரும் கடமைகளை உணர்ந்து நேரடியாக சர்வதேச பிரதிநிதிகளை, சர்வதேச ஊடகவியலாளர்களை முறையில் சந்திப்பதும், சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணங்களை கையளிப்பதும் மிக முக்கியமான நடவடிக்கைகள்.

தமிழினப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலி போல செயற்படும் சுமந்திரனும், இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைக்கூலி போல செயற்படும் சம்பந்தனும் நீண்ட காலமாக எதேச்சாதிகாரமாக செயற்படுவதை கட்டுப்படுத்த ஏனைய உறுப்பினர்கள் தவறியிருந்தனர். அவர்களும் இந்தியப் பயங்கரவாதிகளை மட்டும் நம்பியவர்களாகவும் இருந்திருந்தனர். அதன் பலன் இன்று அனுபவிக்கப்படுகிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மற்றும் சுமந்திரனை உடனடியாக தமிழீழ மக்கள் தூக்கி கடாச வேண்டும்... கிந்தியா கிந்தாயா .. தொடர்ந்து இஞ்சிமரபாதான் கொடுப்பார்கள்... என்னை மறுபடி இதை கூறுவதால் ரோ உளவாளி அது இது என்றால் செருப்பால் அடிப்பேன்.... :icon_idea: :icon_idea:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.