• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nedukkalapoovan

விடுதலைப்புலிகள் கதை : பாலிவுட்டில் படமாகிறது

Recommended Posts

john%20abraham%20-%20eelam.jpg

விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன.

இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.

போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய ‘ஜப்னா’ படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்று தெரிவித்துள்ளார் அவர்.

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

தமிழரின் உரிமைப்பிரச்சனை பற்றி குரல் கொடுக்க யாருக்கும் வக்கில்லை. நம்முடைய போராட்டவிய+கங்களை வைத்து பணம் புரட்டுகின்றார்கள். அல்லது இதனால் வரும் வருமானத்தில் ஒரு பங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்போம் என்று சொன்னால் கூடப்பரவாயில்லை. எங்கே மக்களின் ஆதங்கம் இருக்கோ அதை மாயையில் காட்டடிப்பணம் சம்பாதிக்கும் இன்னொரு கூட்டம். ஆப்பாடா என்னெ உலகம்? இப்படியான உலகத்தில் வாழுவதற்கே வெட்கமாயிருக்கு. இருந்தாலும் என்னத்தைக் கொடுத்தாலும்; என் இலட்சியத்தையும் என்னையும் எங்களிடம் அடகு வைக்கமாட்டேன் என்று உலகை வென்ற மறைத்தமிழன் பிரபாகரன் காலத்தில் வாழ்ந்ததில் ஒரு சந்தோஷம் தான்.

Edited by Raj Logan
  • Like 2

என்ன தான் பணம் சம்பாதித்தாலும் இதுவும் நல்லதுக்கே..

எமது போராட்டம் வட இந்தியர்களுக்கும்,தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு சந்தர்ப்பாமாகிறது..

ஆயிரம் பேர் கூடி நின்று ஆர்ப்பாட்டம்,போராட்டம் மூலம் தெரியவைக்க முடியாத விடயத்தை லட்சக்கணக்கான பேரிடம் ஒரு படம் மூலம் கொண்டு போய்ச்சேர்க்க முடியும்..

ஹிந்தி படங்களுக்கு மேற்கு நாடுகளில் ஒரு சில வெள்ளைகளும்,பாகிஸ்தானியர்,பங்களாதேஸ் நாட்டில் இருப்பவர்களும் பார்ப்பதால் அனேகருக்கு எமது போராட்டம் தெரிய வாய்ப்பாக அமையும் இப்படியான சந்தர்ப்பங்கள் வரவேற்க்கப்படவேண்டியவையே . :icon_idea:

சேகுவேராவின் போட்டோ தொப்பி,ரீ-சேட் என்பவற்றில் இப்போதும் இருப்பதால் தான் அநேக இளையதலைமுறையினருக்கு சேகுவேரா பற்றி தெரிய முடிகிறது அங்கும் வியாபாரநோக்கம் இருந்தாலும் இன்றுவரை சேகுவேரா பலரின் உள்ளங்களில் வாழ்ந்த்துகொண்டு தான் இருக்கிறார்..

அது நல்ல ஒரு விடையம் தான். :icon_idea:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ராஜபக்சே ஆதரவு படத்தில் இந்தி நடிகர்

தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்கு இந்தி நடிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஐஃபா விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்த போது தாங்கிப் பிடித்தவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். தமிழர்களின் கண்டனத்தை மீறி இவர்கள் இலங்கையில் ஐஃபா விழாவை முன்னின்று நடத்தினர்.

பழங்கதையை மறப்போம். புதிதாக படம் எடுக்க இலங்கை செல்கிறார் ஜான் ஆபிரஹாம். ஈழப் போராளிகளுக்கு‌ம் ‌சி‌ங்கள‌ப் பே‌ரினவாத அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரை இவர் திரைப்படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டமும் பதிவு செய்யப்பட உள்ளதாம். ஜாஃப்னா என பெய‌ரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தயா‌ரித்து இந்திய புலனாய்வு அதிகா‌ரியாக நடிக்கயிருக்கிறார் ஜான் ஆபிரஹாம்.

இந்தப் படத்தை யாழ்ப்பாணத்திலும், போர் நடந்த இடங்களிலும் எடுக்கயிருக்கின்றனர். இதற்கு ராஜபக்சே அரசு முழு ஒத்துழைப்பு தந்துள்ளது. இதனால் படம் ஈழப் போராளிகளுக்கு எதிரானதாக இருக்கும் என தமிழுணர்வாளர்கள் கவலை தெ‌ரிவித்துள்ளனர். மேலும் ஈழப் பிரச்சனையில் இலங்கை ராணுவத்தைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தியது இந்தியாவின் அமைதிப்படை. தேசப்பற்று என்ற அழுக்கு போர்வைக்குள் படமெடுப்பவர்கள் நிச்சயம் அமைதிப்படையின் அட்டூழியத்தை சொல்லப் போவதில்லை. அத்துடன் அவர்களை தேவதூதர்களைப் போல்தான் காட்டப் போகிறார்கள்.

இந்த தாக்குதலை தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1202/27/1120227013_1.htm

Share this post

Link to post
Share on other sites

சார் ..... சோனியா மாமியையும் ராகுல் மச்சானையும் மகிழ்ச்சிப்படுத்த புலிகளை வச்சு காமடி பண்ணிடதிங்க சார். :lol:

ஏனென்னா ...... சில தமிழ் படங்கள் கடந்த காலங்களில் அப்படித்தான் வந்தது :rolleyes:

Edited by தமிழரசு
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகளாக தான் இப்படத்தில் சித்தரிப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகளாக தான் இப்படத்தில் சித்தரிப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

"இதுதான் முடிந்த முடிவு"

இத்தனை கண்ணியம் காத்தும் புலிகளை பயங்கர வாதிகளாகத்தான் உலகு அறியும். இத்தனை மக்களையும் குண்டுபோட்டு கொன்ற கயவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லோரும் வாழ்த்தியதுதான் வரலாறு.

இனி ஒரு தமிழன் போராட என்று வந்தால் பார்த்து பாராது சிங்களவனை போட்டுதள்ளவேண்டும்.

மக்கள் நாயகம் மனிதநேயம் இவை எல்லாம் பேசவும் கேட்கவும் நன்றாக இருக்கும். கொடிய மிருகங்கள் அதிகாரம் செலுத்தும் இந்த உலகில் அவை வெட்டி பேச்சில் மட்டும் வேண்டுமானால் உயிர்வாழமுடியும்.

சிங்களவனை புலிகள் போட்டு தள்ளியிருந்தால் விடிவோ முடிவோ எப்போதோ வந்திருக்கும். அவன் குட்ட குட்ட குனிந்துகொண்டு மாறி மாறி பேசியதுதான் மிச்சம்.

தமிழனுக்குள் இருந்து ஒரு சிறிய பொறுக்கி எழுந்தாலும் நடுரோட்டில் வைத்து கல்லால் எறிந்து கொல்லவேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

இத்தனை கண்ணியம் காத்தும் புலிகளை பயங்கர வாதிகளாகத்தான் உலகு அறியும்.

மக்கள் நாயகம் மனிதநேயம் இவை எல்லாம் பேசவும் கேட்கவும் நன்றாக இருக்கும். கொடிய மிருகங்கள் அதிகாரம் செலுத்தும் இந்த உலகில் அவை வெட்டி பேச்சில் மட்டும் வேண்டுமானால் உயிர்வாழமுடியும்.

சிங்களவனை புலிகள் போட்டு தள்ளியிருந்தால் விடிவோ முடிவோ எப்போதோ வந்திருக்கும்.

போர்நிறுத்த காலத்திலிருந்து விடுதலைப்புலிகள் "சர்வதேசம் தமது பிரச்சினையில் தலையிடும்" என்ற நினைப்பில், தம்மால் நேர்மையாக வாழ முடியும் என்று காட்டினார்கள். ஆனால் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக சிங்களவர்களை போட்டு தள்ளியிருப்பார்கள்.

ஆனாலும் சர்வதேசம் அங்கீகரிக்காமல் எமக்கு தனி நாடு அப்பவும் கிடைத்திருக்காது

Share this post

Link to post
Share on other sites

சார் ..... சோனியா மாமியையும் ராகுல் மச்சானையும் மகிழ்ச்சிப்படுத்த புலிகளை வச்சு காமடி பண்ணிடதிங்க சார். :lol:

ஏனென்னா ...... சில தமிழ் படங்கள் கடந்த காலங்களில் அப்படித்தான் வந்தது :rolleyes:

கடைசி வரை போரடியவனால் தான் உண்மையான வலியுடன் படம் எடுக்க முடியும். மற்றவர்கள், அதிலும் இந்தியர்கள், பத்தாததற்கு ஹிந்தி காரர் படமெடுத்தால் கடைசியில் காமெடியா தான் போகும்.

Share this post

Link to post
Share on other sites

போர்நிறுத்த காலத்திலிருந்து விடுதலைப்புலிகள் "சர்வதேசம் தமது பிரச்சினையில் தலையிடும்" என்ற நினைப்பில், தம்மால் நேர்மையாக வாழ முடியும் என்று காட்டினார்கள். ஆனால் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக சிங்களவர்களை போட்டு தள்ளியிருப்பார்கள்.

ஆனாலும் சர்வதேசம் அங்கீகரிக்காமல் எமக்கு தனி நாடு அப்பவும் கிடைத்திருக்காது

உண்மைதான்..... அமைதி காத்தும், நல்லது செய்தும்......நாலுபக்கமும் கெட்டபெயர் விடுதலைப்புலிகளுக்கே!

அவர்கள் கெட்டது செய்ய நினைத்திருந்தால் சிங்களவனின் ஒருபகுதி பாலைவனமாக மாறியிருக்கும்.இது சகலதும் அறிந்த சிங்களவர்களுக்கும் தெரியும்.

Share this post

Link to post
Share on other sites

உண்மைதான்..... அமைதி காத்தும், நல்லது செய்தும்......நாலுபக்கமும் கெட்டபெயர் விடுதலைப்புலிகளுக்கே!

அவர்கள் கெட்டது செய்ய நினைத்திருந்தால் சிங்களவனின் ஒருபகுதி பாலைவனமாக மாறியிருக்கும்.இது சகலதும் அறிந்த சிங்களவர்களுக்கும் தெரியும்.

அடுத்தடுத்த தலைமுறையால் இனியொரு போராட்டம் ஆரம்பமானால் அப்பொழுதும் சர்வதேசம் கைகொடுக்காவிட்டால் சிங்களத்தின் ஒரு பகுதி பாலைவனமாகும் நிலை வரலாம்.

channel 4 srilankan killing fields ஈழதிலுள்ளவர்கள் பார்த்தால் நாட்டுக்காக போராடவேணுமென்று நினைக்காவிட்டாலும் நிச்சயம் பழிவாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

ஜோன் ஆபிரகாம் வட் ஏ ஹான்சம்[handsom],செக்சி[sexy],ஹொட்[hot] ஹீரோ...இவரது தமிழ் சினிமா வருகை தமிழ் பெட்டையளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்...தமிழருக்கு எதிராக படம் எடுத்து தன்ட நிரந்தர வருமானத்தை குறைக்கும் வழியில் ஜோன் ஈடுபட மாட்டார்...படம் கொஞ்சம் நடு நிலையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கொசுறு தகவல் இவர் ஹாப் மலையாளி

Share this post

Link to post
Share on other sites

கடைசி வரை போரடியவனால் தான் உண்மையான வலியுடன் படம் எடுக்க முடியும். மற்றவர்கள், அதிலும் இந்தியர்கள், பத்தாததற்கு ஹிந்தி காரர் படமெடுத்தால் கடைசியில் காமெடியா தான் போகும்.

அதென்றால் உண்மைதான் காதல் :(

Share this post

Link to post
Share on other sites

ஜோன் ஆபிரகாம் வட் ஏ ஹான்சம்[handsom],செக்சி[sexy],ஹொட்[hot] ஹீரோ...இவரது தமிழ் சினிமா வருகை தமிழ் பெட்டையளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்...

தமிழருக்கு எதிராக படம் எடுத்து தன்ட நிரந்தர வருமானத்தை குறைக்கும் வழியில் ஜோன் ஈடுபட மாட்டார்...படம் கொஞ்சம் நடு நிலையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கொசுறு தகவல் இவர் ஹாப் மலையாளி

முதல் ரசிகை நீங்கள் தான் போலிருக்கு.

ரதி அக்கா, இவர்கள் தமிழர்களுக்கெதிராக படமெடுத்தால் இவர்களின் வருமானம் குறையும் என்று யார் சொன்னது? மாறாக இந்தியன் ஆமிக்கு சார்பாக படம் எடுத்த என்று மன்மோகன் சிங் பிரதமர் விருந்துக்கு அழைத்தாலும் அழைப்பார். இப்ப அப்படியெல்லாம் தானே நடக்குது.

தமிழர்களுக்கெதிரா படம் எடுத்தால் 1 கிழமை அவர்களுக்கெதிரா தமிழ் நாட்டில் கோஷமெழுப்புவார்கள். பிறகு மறந்து விடுவார்கள். இது தமிழ் நாட்டு நிலைமை.

Share this post

Link to post
Share on other sites

ஈழத்துப் போரில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக... கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் போது...

பஞ்சாப் மாநிலத்திலிருந்தாவது எமக்கு ஆதரவாக... சீக்கியர்களின் குரல்கள் ஒலித்தன.

பாலிவூட் ஹிந்திக்காரன் வாயே... திறக்கவில்லை. இப்போ... மட்டும் பணம் சம்பாதிப்பதற்காக, படம் எடுப்பதற்கு... யோக்கியதை அற்றவர்கள்.

Share this post

Link to post
Share on other sites

தமிழ்நாட்டுக்காரனே ஈழத் தமிழனுக்கெதிராக படம் எடுக்கும்போது வட நாட்டவன் எப்படி எடுப்பானென்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், புன்னகை மன்னன், கன்னத்தில் முத்தமிட்டால், குற்றப்பத்திரிக்கை....என்றெல்லாம் பார்த்தாயிற்று. இனி என்னத்தை வித்தியாசமாகச் சொல்லப்போகிறார்கள்??

Share this post

Link to post
Share on other sites

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், புன்னகை மன்னன், கன்னத்தில் முத்தமிட்டால், குற்றப்பத்திரிக்கை....என்றெல்லாம் பார்த்தாயிற்று. இனி என்னத்தை வித்தியாசமாகச் சொல்லப்போகிறார்கள்??

யோவ் ரகு...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எம்மைப் பற்றி ஒன்றும் இல்லையே....!! வர வர என்னைப் போல உங்களுக்கும் ஞாபக மறதி கூடிக்கொண்டு வருகுது போல

எம் போராட்டத்தை, எம் காலத்தை நாம் விமர்சிக்க தயங்கும் ஒவ்வொரு வினாடியிலும், மற்றவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கின்றோம். அத்துடன் ஒரு படைப்பை பார்க்க முன், அது பற்றி என்ன என்று அறிய முன்னே ஒரு முன் முடிவுடன் எதிர்க்க முற்படுகின்றோம்...

எம்மிடம் எம் போராட்டம் பற்றி நல்ல படம் எடுக்கவோ அல்லது ஒரு கலை வெளியீட்டின் மூலம் வெளிக்கொண்டு வரவோ வளம் இல்லையா...? இருக்குத் தானே...ஆனால் இவற்றைக் கொண்டு ஒன்றையும் உருப்படியா செய்யாமல் மற்றவர்களை விமர்சிக்க எமக்கு என்ன தகுதி இருக்கு?

Share this post

Link to post
Share on other sites

யோவ் ரகு...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எம்மைப் பற்றி ஒன்றும் இல்லையே....!! வர வர என்னைப் போல உங்களுக்கும் ஞாபக மறதி கூடிக்கொண்டு வருகுது போல

இதில் ஆரம்ப காட்சியை பாருங்கோ.

இதில் 9வது நிமிடத்திலிருந்து பாருங்கோ.

Share this post

Link to post
Share on other sites

யோவ் ரகு...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எம்மைப் பற்றி ஒன்றும் இல்லையே....!!

கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் திரும்ப பாருங்க நேரம் கிடைத்தால் நிழலி அண்ணா (எம்மை பற்றி ஒன்றும் இல்லையே..???)

இருக்கு...... மம்முட்டிக்கு கால் போன இடம் விசுவமடு.... பள்ளி சிறுவர்கள் தான் துப்பாக்கி வைச்சு தங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்ல படுகிறது திரும்பி இந்தியா வரும் போது தங்களை வரவேற்க தமிழக மக்கள் யாரும் வரவில்லை எண்டு கவலை படுகிறார் மம்முட்டி ..இப்படம் இயக்கியவர் ராஜீவ் மேனன் மலையாளி

from

http://ta.wikipedia.org/wiki

இலங்கையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காக போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாட்சியைக் விரும்புகின்றார் ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது

Share this post

Link to post
Share on other sites

இதில் ஆரம்ப காட்சியை பாருங்கோ.

இதில் 9வது நிமிடத்திலிருந்து பாருங்கோ.

அடப்பாவிகளா....கிடைத்த சந்தில் நஞ்சு பரப்பி உள்ளார்கள்...

நன்றி மறுத்தான்..... இப்படியான பல விடயங்களை இணைக்கவும்...

ரகு: ஹி ஹி....

Share this post

Link to post
Share on other sites

யோவ் ரகு...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எம்மைப் பற்றி ஒன்றும் இல்லையே....!! வர வர என்னைப் போல உங்களுக்கும் ஞாபக மறதி கூடிக்கொண்டு வருகுது போல

எம் போராட்டத்தை, எம் காலத்தை நாம் விமர்சிக்க தயங்கும் ஒவ்வொரு வினாடியிலும், மற்றவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கின்றோம். அத்துடன் ஒரு படைப்பை பார்க்க முன், அது பற்றி என்ன என்று அறிய முன்னே ஒரு முன் முடிவுடன் எதிர்க்க முற்படுகின்றோம்...

எம்மிடம் எம் போராட்டம் பற்றி நல்ல படம் எடுக்கவோ அல்லது ஒரு கலை வெளியீட்டின் மூலம் வெளிக்கொண்டு வரவோ வளம் இல்லையா...? இருக்குத் தானே...ஆனால் இவற்றைக் கொண்டு ஒன்றையும் உருப்படியா செய்யாமல் மற்றவர்களை விமர்சிக்க எமக்கு என்ன தகுதி இருக்கு?

இல்லை, இருக்கிறதே நிழலி. படத்தின் ஆரம்பத்தில் இந்திய அமைதிகாக்கும் படையின் மேஜராக வரும் மம்முட்டின் சண்டைக்காட்சியைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் போல இருக்கிறது. அதில் தாம் ஏதோ தமிழர்களைக் காக்க வந்ததாகவும் பாவம் பள்ளிச் சிறார்கள் என்று இரக்கப்படும் கணத்தில் அவர்கள் போராளிகளாக மாறி அவர்களைச் சுட்டுத் தள்ளுவதாகவும் கதை சொல்லப்படுகிறது. மீண்டுமொருமுறை பாருங்கள் புரியும். :)

அடப்பாவிகளா....கிடைத்த சந்தில் நஞ்சு பரப்பி உள்ளார்கள்...

நன்றி மறுத்தான்..... இப்படியான பல விடயங்களை இணைக்கவும்...

ரகு: ஹி ஹி....

நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். அதுக்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது. இதுக்கெல்லாம் போய் ஹி...ஹி....... :D .

Edited by ragunathan

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this